Friday, March 13, 2009

ஒரு கிராமத்து மது விருந்து..

அம்பாசமுத்திரம் அருகே ஒரு கிராமம். அந்தந்த சீசன்களில் வாழை, பருத்தி, கடலை, மிளகாய் என வளம் செழித்துக்கிடக்கும் ஊர். மேலும் மா, தென்னை என ஆற்றோரத் தோப்புகள் வேறு. எனது பள்ளி நாட்களின் விடுமுறைக்காலங்கள் பெரும்பாலும் இந்த பிரமதேசம் அல்லது சேரன்மகாதேவியிலேயே கழிந்தன.

அப்போது நான் பிளஸ் டூ படித்துக்கொண்டிருந்தேன். பிரமதேசத்தில் எனது பெரியத்தை மகனுக்குத் திருமணம். அதற்காகச் சென்றிருந்தேன். மாப்பிள்ளை என் அத்தான் எனினும் இரண்டு வயதே மூத்த ஒரு நல்ல தோழனும் கூட.. நிறைய கெட்ட பழக்கங்களைப் பழக்கித் தந்தவனை வேறெப்படி சொல்வது? நல்ல படிப்பாளியும் கூட.. நான்காம் வகுப்பில் நான்கு வருடம் படித்த திறன் மிக்கவன். நான் பிளஸ் டூ. என்னைவிட இரண்டு வயதே மூத்தவன் எனில் 20 வயதுதான் இருக்கும் பிறகெப்படி திருமணம்? இதெல்லாம் ரொம்ப சாதாரணம் இங்கே.. இதுவே லேட்டு என ஆச்சி அடம்பிடித்தமையால்தான் இந்த திருமண ஏற்பாடே நடந்தது. மணப்பெண்ணும் இன்னொரு வழியில் எனக்கு நெருங்கிய சொந்தமே. என்னை விட இரண்டு வயது இளையவள். அவளும் மூன்றாம் வகுப்பில் மூன்று வருடம் படித்த திறமைசாலி.

படிப்பைப்பற்றி சொல்லும் போது இன்னொன்று ஞாபகம் வருகிறது. கொசுவத்திக்குள்ளே கொசுவத்தி. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே நன்றாக எழுத்துக்கூட்டி தமிழ் வாசிக்கும் அளவு தேறியிருந்தேன். அந்த சமயத்தில் ஒருமுறை பிரமதேசம் சென்றிருந்த போது அத்தான் பள்ளிக்குச் சென்றுவரவேண்டிய சூழல். பள்ளி விடும் நேரம், சிறிது காத்திருக்க நேரிட்டது. மாமாவுக்கு தெரிந்த ஆசிரியர் என்பதால் என்னை யாரென்று கேட்டு அறிமுகமாக வகுப்புக்குள்ளே அழைத்து பேசிக்கொண்டிருந்தார். ஐந்தாம் வகுப்பு.. மாணவர்களெல்லாம் சீரியஸாக ஆனா, ஆவன்னா எழுதிக்கொண்டிருக்க.. திடீரென ஆசிரியர் என்னிடம் தமிழ் புத்தகத்தை கொடுத்து வாசிக்கச்சொல்ல நான் கடகடவென வாசிக்கத்துவங்கினேன். மாணவர்கள் வாய்பிளக்க ஆசிரியர் என்னை பாராட்டிவிட்டு அனைவரிடமும்,

'யேய் இங்கப்பாருங்கடா.. இவன் மூணாப்புதான் படிக்கான், எப்பிடி படிக்கான் பாத்தீங்களாடா.. இவன மாதி படிக்குணும் எல்லாரும், என்னா..?' என்றார்.

நான் உற்சாகத்தில் கைகட்டிக்கொண்டு பாராமலேயே ஏ பி சி டி யெல்லாம் சொல்லி அவர்களை மேலும் மலைக்கவைத்தேன். சில மாணவர்கள் என்னை கடுப்பாக பார்த்தனர். சரி..பழைய கதையை விட்டு விஷயத்துக்கு வருவோம்.

அப்போதெல்லாம் விருந்தினர் பலரும் இரண்டு மூன்று நாட்கள் தங்கி இருந்து விழாவினை சிறப்பித்துச் சொல்வார்கள். திருமணம் முடிந்த மறுநாள். என் பெற்றோர் ஊர்திரும்பிவிட நான் அங்கேயே தங்கியிருந்தேன். மதிய உணவுக்கு கிடா வெட்டப்பட்டு சமையல் நடந்துகொண்டிருந்தது. வீட்டுப்பெண்கள் வேலைகளில் மும்முரமாக இருக்க புதுப்பெண்ணும் கால் கொலுசு கலகலக்க தரையதிர சுவாதீனமாக பழகிய இடம் போல தங் திங்கென வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்தாள். பெரியவர்கள் சிலர் பேசிக்கொண்டிருக்க சிலர் வெளியே சென்றிருந்தனர். நான் என்ன பண்ணுவது என தெரியாமல் போரடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

'யண்ணே.. காப்பி யேணுமாண்ணே?' என்றாள் தங்கையாகிய புதுமணப்பெண்.

'வேணாம்மா'

'சோடாவது குடிக்கியா.. நேத்திக்குள்ளது. எம்புட்டுகானு சும்மா கெடக்குது பாரு'

'வேணாம்மா'

'என்னண்ணே சித்தி இன்னிக்கே ஊருக்குப் பேயிட்டா? இருன்னா கேக்கமாட்டேண்டா.. நீயாது ரெண்டு நா இருப்பேல்லண்ணே' வாயாடி. அதிகாரம் தூள் பறந்தாலும் அதனுள்ளிருக்கும் அன்பு அற்புதமானது.

'எனக்கு ஸ்கூல் லீவுதானம்மா.. இருப்பேன். அதுக்குள்ள அத்தான் எங்க போனான்? ஆளயே காங்கல.. வயலுக்கு கியலுக்கு பெய்ட்டானா?'

இதற்கு பக்கத்தில் வந்து கிசுகிசுப்பாக பதில் சொன்னாள், 'அவ்வொ, பாண்டி, சித்தப்பா எல்லாரும் மச்சு ஊட்டுக்குள்ளதான் இருக்காவொ.. நீ அங்க போவாதண்ணே..' என்று சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க போய்விட்டாள்.

இப்போதுதான் கவனிக்கிறேன், மச்சு வீட்டிற்குள்ளிருந்து அத்தானின் நண்பர் ஒருவர் இறங்கி போய்க்கொண்டிருந்தார். உடனே மேலே ஏறினேன். என்னைக்கண்டதும் அத்தானும், பாண்டியும் கெக்கேபிக்கே வென சிரித்தார்கள். முறுக்கு, மிக்சர் சகிதம் ஒரு ஃபுல் பாட்டில் உட்கார்ந்திருக்க பீடி பற்றவைத்துக் கொண்டு ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார்கள்.

'நா கீழ யாரயும் காங்கலயேனு தேடிட்டிருக்கேன். இங்கன ஒங்க்காந்து என்ன பண்ணிட்டிருக்கிய எல்லாரும்? என்ன சித்தப்பா காலைலேயேவா.?' என்றேன்.

'வா வா வந்து ஒக்காரு..' என்று என்னையும் கையைப்பிடித்து உட்காரவைத்தார்கள். எனக்கும் ஒரு கிளாஸில் ஊற்றினார்கள்.

'ஏ வேணாம்பா.. எல்லாரும் இருக்காங்க.. மாமாக்கு தெரிஞ்சிடப்போது..' என்றேன்.

'யாரு..? மாமாக்கு? போய் குச்சில்ல பாரு.. எங்களுக்கு மின்னாடியே போட்டுட்டு போய் சாஞ்சாச்சி.. எல்லாரும் அடிச்சிருக்கான்.. ஒருத்தனுக்கும் தெரியாது.. சும்மா அடி.. பொம்பளைய பக்கத்துல மட்டும் போவாத'

எனக்கும் ஆசை வர, 'பாட்டில்ல கொஞ்சமாத்தான இருக்கு ஒங்களுக்கு?' என்றேன்.

'அந்தக் குதிலுக்குள்ள பாரு..'

அருகே இருந்த நெற்குதிருக்குள் பார்த்தேன்.  நெருக்கிக்கொண்டு நான்கைந்து ஃபுல் பாட்டில்க‌ள் ப‌டுத்திருந்த‌ன‌. துவ‌ங்கினேன். அப்போதெல்லாம் ப‌ழ‌க்க‌மே இல்லாத‌தால், ஒன்ற‌ரை ர‌வுண்டிலேயே த‌லை சுற்றிக்கொண்டு வ‌ந்த‌து. பின்ன‌ர் ப‌ல‌ரும் அந்த‌ அறைக்குள் வ‌ந்து போவ‌தையும், அனைவ‌ருக்கும் இந்த‌ மூவ‌ரும் க‌ம்பெனி கொடுத்துக் கொண்டிருப்ப‌தையும் லேசாக‌ க‌ன‌வு போல‌ உண‌ர்ந்தேன்.

பின்ன‌ர் ம‌திய‌ உண‌வுக்கு கீழே இற‌ங்கிய‌ போது நான் அடித்த‌து தெரிய‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ அத்தான் ம‌ற்றும் பாண்டியின் ந‌டுவாக‌வே வ‌ந்தேன். தேவையே இல்லாம‌ல் கேஷுவ‌லாக‌ இருக்கிறேன் என்று நிரூபிக்க‌ ப‌ல‌ரையும் பார்த்து இளித்து வைத்தேன். அப்ப‌டியும் சாப்பாடு போடும் போது புதுப்பெண் க‌ண்டுபிடித்துவிட்டாள்.

அருகிருப்போர் கேட்காதவாறு கிசுகிசுப்பாக 'ஒன்னிய‌ மேல‌ போவாத‌ன்னு சொன்ன‌ம்லாண்ணே.. நீயும் அவுங்க‌ளோட‌ சேந்து கூத்த‌டிச்சிருக்கியோ.. இரு ஒன‌க்கு வெச்சிக்கிடுதேன்.. நாள‌க்கி சித்தி வார‌ம்னுருக்கால்ல..' என்று க‌றியை அள்ளி வைத்த‌ க‌ர‌ண்டியை முக‌த்துக்கு நேரே காட்டிய‌ போது, க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து.

.

53 comments:

இராகவன் நைஜிரியா said...

மிஸ்டர் ஆதி

மீ த பர்ஸ்டு..

ராம்.CM said...

நான் தான் ப்பர்ஸ்ட்!...

இராகவன் நைஜிரியா said...

// 'ஒன்னிய‌ மேல‌ போவாத‌ன்னு சொன்ன‌ம்லாண்ணே.. நீயும் அவுங்க‌ளோட‌ சேந்து கூத்த‌டிச்சிருக்கியோ.. இரு ஒன‌க்கு வெச்சிக்கிடுதேன்.. நாள‌க்கி சித்தி வார‌ம்னுருக்கால்ல..//

அதானே.. யார் நல்லது சொன்னாலும் கேட்டுகிடணும். இப்படி அனாவசியமா போய் மாட்டிகிட்டீங்களெ அப்பு...

இராகவன் நைஜிரியா said...

// ராம்.CM said...

நான் தான் ப்பர்ஸ்ட்!... //

சாரி யு ஆர் லேட் பை ஒன் மினிட்

narsim said...

நான் உற்சாகத்தில் கைகட்டிக்கொண்டு பாராமலேயே ஏ பி சி டி யெல்லாம் சொல்லி அவர்களை மேலும் மலைக்கவைத்தேன்//

ரசித்தேன் தல

Udhayakumar said...

அதுதான் ஃபர்ஸ்ட்டா???

தமிழ் பிரியன் said...

:)))

Rajaraman said...

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இந்த நான்தான் பர்ஷ்டு, Me the first ன்னு போடறதுல உள்ள அர்த்தம். லூசுத்தனமாக இல்ல?

பதிவை படிச்சிட்டு கருத்தை சொல்றாங்களோ இல்லியோ இது மாதிரி கிறுக்குத்தனமாக போடறதால பதிவர ஊக்குவிக்கிறதா நெனப்பா?

இந்த கிருக்குதனத்தில் டச்டரடே வாங்கிய ஒரு பெண்மணியா இப்ப ரொம்ப நாளா காணல. ஒரு வேலை திருந்திருச்சோ.

சந்தனமுல்லை said...

:-) உங்க ஊர் பாஷை நல்லாருக்கு..(ஒரு கதை மாதிரி முயற்சித்திருக்கலாம்)..உங்க கொசுவத்திக்குள் கொசுவத்திதான் செம சூப்பர்!

கதிர் said...

//க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து//
மக்கா...... பட்டம்பூச்சியாவா தெரிஞ்சுது..... தீ பந்தம் மாதிரி தெரியலியோ.....

அத்திரி said...

//அப்போதெல்லாம் ப‌ழ‌க்க‌மே இல்லாத‌தால், ஒன்ற‌ரை ர‌வுண்டிலேயே த‌லை சுற்றிக்கொண்டு வ‌ந்த‌து. //

இப்பவும் அதே அளவுதானே... ஒரு முன்னேற்றமும் இல்லையே..

அத்திரி said...

//க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து.//


ஹாஹாஹாஹாஹா................நம்ம ஊர் பேச்சு பேச்சுதாம்ணே........... நடக்கட்டும்... பிளஸ்2 விலிருந்து டிப்ளமாவுக்கு வந்தா நல்லாயிருக்கும்
.

ஸ்ரீமதி said...

:)))))))

இராகவன் நைஜிரியா said...

// இந்த கிருக்குதனத்தில் டச்டரடே வாங்கிய ஒரு பெண்மணியா இப்ப ரொம்ப நாளா காணல. ஒரு வேலை திருந்திருச்சோ. //

கிருக்குத்தனத்தில் இல்லை...

கிறுக்குத்தனத்தில் (று போடணும் .. ரு இல்ல)

பாபு said...

//நான் உற்சாகத்தில் கைகட்டிக்கொண்டு பாராமலேயே ஏ பி சி டி யெல்லாம் சொல்லி அவர்களை மேலும் மலைக்கவைத்தேன்//

ரசித்தேன்

முரளிகண்ணன் said...

நல்லா இருக்குங்க

SanJai Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ காந்தி said...

//என்று க‌றியை அள்ளி வைத்த‌ க‌ர‌ண்டியை முக‌த்துக்கு நேரே காட்டிய‌ போது, க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து.//

இந்த துக்கத்துலையும் மனுஷனுக்கு என்னாமா கற்பனை ஊத்தெடுக்குது பாரேன்.. :))

Anonymous said...

நான் என்னமோ புது பெயர் சூடியதுக்கு கறி விருந்துன்னு நெனச்சேன்.

Kathir said...

//நான் பிளஸ் டூ.//

பிள்ஸ் டூ படிக்கும்போதே இதெல்லாம் ஆரம்பிச்சுட்டீங்களா??

:))

வெயிலான் said...

ரொம்ப நல்லாருந்தது கொசுவத்தி.

மண் மணம் வீச, வட்டார நடையில் கொஞ்சம் முயற்சித்துப் பாருங்கள் ஆதி.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இராகவன்.!
ந‌ன்றி ராம்.!

நன்றி ந‌ர்சிம்.!
ந‌ன்றி உத‌ய்குமார்.! (ப‌ழ‌க்க‌ம் இல்லை என்று சொல்லியுள்ளேன். அப்ப‌டியானால் அனுப‌வ‌ம் உண்டு என்று அர்த்த‌ம்.. இதெல்லாம் பின்ன‌வீன‌த்துவ‌ம் தெரிந்தால்தான் புரியும்.. ஹிஹி..)

நன்றி த‌மிழ்பிரிய‌ன்.!
ந‌ன்றி ராஜாராம‌ன்.! (அன்பு ந‌ண்ப‌ரே.. ப‌திவுக‌ள் வெறும் இல‌க்கிய‌ச்சேவைக்காக‌ ம‌ட்டுமே எழுத‌ப்ப‌டுவ‌தில்லை. மிக‌ச்சாதார‌ண‌ ம‌க்க‌ளும் பிற ம‌ன‌ அழுத்த‌த்திலிருந்து விடுத‌லை பெற‌வும்தான் எண்ண‌ங்க‌ளை எழுத்தாக்கி வ‌ருகிறார்க‌ள்.. இங்கே எழுத்துப்பிழைக‌ள், இல‌க்க‌ண‌ப்பிழைக‌ள், விளையாட்டுக‌ள் ம‌லிந்திருக்க‌லாம். மீ த‌ ஃப‌ர்ஸ்ட், மீ த 50, மீ த‌ 100 போடுவ‌து ஒரு ஃப‌ன்.. இதை நானும் செய்கிறேன். இருப்பினும் பின்னூட்ட‌ எண்ணிக்கைக்காக‌ ஓர‌ள‌வு ந‌ல்ல‌ ப‌திவுக‌ளில் தேவையில்லாம‌ல் ப‌திவுக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் எழுதுவ‌தை குறிப்பாக‌ ந‌ம்ப‌ர்க‌ள் போடுவ‌தையெல்லாம் நான் ஆத‌ரிக்க‌வில்லை.. இவ்வ‌ள‌வு நீண்ட‌ விள‌க்க‌ம் ஏனெனில், த‌னிம‌னித‌ தாக்குத‌ல் எக்கார‌ண‌ம் கொண்டும் த‌வ‌றே.. அதை நீங்க‌ள் செய்த‌தால்தான். நீங்க‌ள் குறிப்பிட்ட‌வ‌ர் மீ த‌ ஃப‌ர்ஸ்ட் போடுப‌வ‌ர் ம‌ட்டும‌ல்ல‌, ஒரு ந‌ல்ல திறன்மிக்க ப‌திவ‌ர் கூட‌..)


நன்றி முல்லை.!
ந‌ன்றி க‌திர்.!

நன்றி அத்திரி.!
ந‌ன்றி ஸ்ரீம‌தி.!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பாபு.!
ந‌ன்றி முர‌ளி.!

நன்றி ச‌ஞ்ச‌ய்.!
ந‌ன்றி மயில்.!
நன்றி க‌திர்.!
ந‌ன்றி வெயிலான்.! (ட்ரை ப‌ண்ண‌னும் தோழ‌ர்..)

பைத்தியக்காரன் said...

Me the 23?

பைத்தியக்காரன் said...

Me the 24?

பைத்தியக்காரன் said...

Me the 25?

:)

புதுகைத் தென்றல் said...

ப்ரெசண்ட் போட்டுக்கோங்க ஃப்ரெண்ட் ஆதி.(ஹை நான் வெச்ச பேருதான் நல்லா இருக்கு.

புதுகைத் தென்றல் said...

ந‌ன்றி ராஜாராம‌ன்.! (அன்பு ந‌ண்ப‌ரே.. ப‌திவுக‌ள் வெறும் இல‌க்கிய‌ச்சேவைக்காக‌ ம‌ட்டுமே எழுத‌ப்ப‌டுவ‌தில்லை. மிக‌ச்சாதார‌ண‌ ம‌க்க‌ளும் பிற ம‌ன‌ அழுத்த‌த்திலிருந்து விடுத‌லை பெற‌வும்தான் எண்ண‌ங்க‌ளை எழுத்தாக்கி வ‌ருகிறார்க‌ள்.. இங்கே எழுத்துப்பிழைக‌ள், இல‌க்க‌ண‌ப்பிழைக‌ள், விளையாட்டுக‌ள் ம‌லிந்திருக்க‌லாம். மீ த‌ ஃப‌ர்ஸ்ட், மீ த 50, மீ த‌ 100 போடுவ‌து ஒரு ஃப‌ன்.. இதை நானும் செய்கிறேன். இருப்பினும் பின்னூட்ட‌ எண்ணிக்கைக்காக‌ ஓர‌ள‌வு ந‌ல்ல‌ ப‌திவுக‌ளில் தேவையில்லாம‌ல் ப‌திவுக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் எழுதுவ‌தை குறிப்பாக‌ ந‌ம்ப‌ர்க‌ள் போடுவ‌தையெல்லாம் நான் ஆத‌ரிக்க‌வில்லை.. இவ்வ‌ள‌வு நீண்ட‌ விள‌க்க‌ம் ஏனெனில், த‌னிம‌னித‌ தாக்குத‌ல் எக்கார‌ண‌ம் கொண்டும் த‌வ‌றே.. அதை நீங்க‌ள் செய்த‌தால்தான். நீங்க‌ள் குறிப்பிட்ட‌வ‌ர் மீ த‌ ஃப‌ர்ஸ்ட் போடுப‌வ‌ர் ம‌ட்டும‌ல்ல‌, ஒரு ந‌ல்ல திறன்மிக்க ப‌திவ‌ர் கூட‌..)//

இந்த பின்னூட்டத்திற்காக என் மனமார்ந்த பாராட்டுக்கள் ஃப்ரெண்ட்.

Mahesh said...

கலக்கலா லோக்கல் நடைல ...

பேர் மாத்துனதும் ஜிவ்வுன்னு ஏறுது க்ராஃப்.... :)

அ.மு.செய்யது said...

வட்டார மொழியில் அசத்தியிருக்கிறீர்கள் ஆதி !!!!

வெகுவாக ரசித்தேன்...

தஞ்சாவூரான் said...

'சித்தி' யோட 'வெண்சாமர' வீச்சு இல்லையா? இல்ல, பாகம் ரெண்டில் வருமா?

இதுக்கெல்லாம் பயந்தா பொழப்பு நடத்த முடியுமா? :)

pappu said...

///////////க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து. ////////////இந்த உவமை எனக்கும் ரொம்ப புதுசா படுது. உக்காந்து யோசிப்பீங்களோ!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹிஹி..நன்றி பைத்தியக்காரன்.!

நன்றி தென்றல்.! (புதுசா ட்ரை பண்ணியிருக்கேன்.. பதிவப்பத்தி ஒண்ணும் சொல்லலியே..)

நன்றி மகேஷ்.!
நன்றி செய்யது.!
நன்றி தஞ்சாவூரான்.!
நன்றி பப்பு.!

அமர பாரதி said...

பதிவு நன்றாக இருந்தது தாமிரா. நடை அருமை.

மங்களூர் சிவா said...

/
க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து
/

இதுக்கெல்லாம் பயந்தா பொழப்பு நடத்த முடியுமா? :)

பதிவு மிக அருமை!

கார்த்திகைப் பாண்டியன் said...

//மாணவர்கள் வாய்பிளக்க ஆசிரியர் என்னை பாராட்டிவிட்டு அனைவரிடமும், 'யேய் இங்கப்பாருங்கடா.. இவன் மூணாப்புதான் படிக்கான், எப்பிடி படிக்கான் பாத்தீங்களாடா.. இவன மாதி படிக்குணும் எல்லாரும், என்னா..?' என்றார். நான் உற்சாகத்தில் கைகட்டிக்கொண்டு பாராமலேயே ஏ பி சி டி யெல்லாம் சொல்லி அவர்களை மேலும் மலைக்கவைத்தேன்//

வட்டார வழக்கு ரொம்ப நல்லா இருக்கு நண்பா.. சரியான ராவடி

Vee said...

//யேய் இங்கப்பாருங்கடா.. இவன் மூணாப்புதான் படிக்கான்.

யே மக்கா, நீ இன்னிக்கு வரை மூணாப்பு மட்டும்தானே படிச்சிருக்கே. ஹி ஹி சும்மா டமாஷ்.

வால்பையன் said...

விசேசவீடு என்றாலே குடியும் கும்மாளமும் தானே!

நல்ல கொசுவத்தி

நசரேயன் said...

அருமை. ரெம்ப நல்லா இருக்கு

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமரபாரதி.!
நன்றி மங்களூர்.! (தல.. சென்னை பக்கமெல்லாம் வர்றதில்லையா? போனாவது பண்ணக்கூடாதா?)
நன்றி பாண்டியன்.!
நன்றி வீ.!
நன்றி வால்.!
நன்றி நசரேயன்.!

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த கிருக்குதனத்தில் டச்டரடே வாங்கிய ஒரு பெண்மணியா இப்ப ரொம்ப நாளா காணல. ஒரு வேலை திருந்திருச்சோ.//

அந்த டாக்டரோட எல்லாப் பதிவையும் படிச்சு இருக்கீங்களா ராமராஜன் சார்???

ஆதி சொன்னதுபோல இதெல்லாம் வேலைக்கு இடையே மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் சிறு வழி. தயவு செய்து எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் தோழரே.

மாதவராஜ் said...

சுவையான அனுபவம்.

//அப்போதெல்லாம் ப‌ழ‌க்க‌மே இல்லாத‌தால், ஒன்ற‌ரை ர‌வுண்டிலேயே த‌லை சுற்றிக்கொண்டு வ‌ந்த‌து. //

இப்ப?

தராசு said...

//அம்பாசமுத்திரம் அருகே ஒரு கிராமம். //

ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரிங்கற மாதிரி தொடங்கற கொசுவர்த்தில உங்க ஊர் பேச்சுவழக்கும், ஆதிமூல கிருஷ்ணனின் டச்சும், கலக்கல் தல.

ஆமா, அம்பாசமுத்திரம் ஏழுமலை நீங்கதானா??? சொல்லவேயில்ல

அறிவிலி said...

///மாதவராஜ் said...
சுவையான அனுபவம்.

//அப்போதெல்லாம் ப‌ழ‌க்க‌மே இல்லாத‌தால், ஒன்ற‌ரை ர‌வுண்டிலேயே த‌லை சுற்றிக்கொண்டு வ‌ந்த‌து. //

இப்ப?
///

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்.

gayathri said...

க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து.

neega thani adichatha nerupechitenga

அனுஜன்யா said...

வட்டார நடையில் ஒரு அட்டகாசம். அப்பவே பழக்கமா சாரி அனுபவமா :)

அனுஜன்யா

Anonymous said...

எலேய், உன்ன நல்ல புள்ளன்னுல்லா நெனச்சுக்கிட்டிருக்கேன். இம்புட்டூண்டு இருக்கையில வச்சே பழகீட்டியாலே.

பிஞ்சில வெம்புன பயலா நீயி?

அது சரி said...

//
க‌றியை அள்ளி வைத்த‌ க‌ர‌ண்டியை முக‌த்துக்கு நேரே காட்டிய‌ போது, க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து.
//

தெரியும்வே..ஏன் தெரியாது...அந்த கரண்டியால மொத்துன்னு ஒண்ணு வச்சிருந்தா பட்டாம்பூச்சி கண்ணுலேயே பறந்திருக்கும்...தங்கச்சி தப்பு பண்ணிட்டாங்க :0))

அது சரி said...

//
வடகரை வேலன் said...
எலேய், உன்ன நல்ல புள்ளன்னுல்லா நெனச்சுக்கிட்டிருக்கேன். இம்புட்டூண்டு இருக்கையில வச்சே பழகீட்டியாலே.

பிஞ்சில வெம்புன பயலா நீயி?
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!

நல்லவன்னு நம்பி படிச்சிட்டு இருந்தேன்....சின்ன பயல கெடுத்துட்டியளே...

Thennavan Ramalingam said...

ரொம்ப நல்ல இருக்கு

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா எழுதியிருக்கீங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவளும் மூன்றாம் வகுப்பில் மூன்று வருடம் படித்த திறமைசாலி.

சிரிப்பை அடக்க வெகுநேரம் பிடித்தது.

சூப்பர் கொசுவத்தி.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அப்துல்.! (சரியா சொன்னீங்க..)
நன்றி மாதவராஜ்.! (இப்பவும் அதேதான்..)
நன்றி தராசு.!
நன்றி அறிவிலி.!
நன்றி காயத்ரி.!
நன்றி அனுஜன்யா.!
நன்றி வேலன்.!
நன்றி அதுசரி.! (தொடரும் ஆதரவுக்கு நன்றி தோழர்..)
நன்றி ராமலிங்கம்.!
நன்றி ஜ்யோவ்ராம்.!
நன்றி அமித்துஅம்மா.!

Joe said...

//க‌ர‌ண்டி ஒரு ப‌ட்டாம்பூச்சியைப்போல‌ என் முக‌த்தை சுற்றி வ‌ந்த‌தைப்போல‌ இருந்த‌து//

அந்த நேரத்தில கடப்பாறைய காட்டி மெரட்டினாலும், நமக்கு தெரியவா போகுது?