Monday, March 16, 2009

பிரபல பதிவர்கள் (நிஜ) பேட்டி

நட்சத்திரவார சிறப்பு பதிவுக்காக பிரபல பதிவர்களில் சிலரை நேரில் திரட்டி சந்திப்பு நிகழ்த்தி கலந்துரையாடலை வெளியிட வேண்டுமென்பது திட்டம்.. அதான் உங்களுக்குத் தெரியுமே உள்ளுவது மட்டும்தான் உயர்வுள்ளல்.. இறுதியாக நேரில் சிக்கியவர்களிடம் நேரிலும், தப்பியவர்களை போனிலும், மெயிலிலும் பிடித்து வலுக்கட்டாயப் பேட்டி எடுக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே கேள்வித்தாள் தரப்பட்டு சுருக்கமான பதில் தர கேட்டுக்கொள்ளப்பட்டது. பதிவின் நீளம் கருதி மூன்று கேள்விகளுக்கு மட்டும் அவர்கள் தந்த பதில் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது..

கேள்வி 1 :

உங்கள் முதல் காதலியை இப்போது சந்தித்தால் என்ன செய்வீர்கள் அல்லது எப்படி ஃபீல் பண்ணுவீர்கள்?

செல்வேந்திரன் : முதல் காதலியை இப்போது சந்தித்தால், பால்யத்தில் நான் கொண்டிருந்த ஒருதலைக் காதலைச் சொல்லிச் சிரிப்பேன்.

முரளிகண்ணன் : கோபப்படுவேன். பின் சொல்வேன்.. “ மதியம் கட்டி கொடுத்த சாப்பாட்டில உப்பு கம்மி” என்று.

வடகரை வேலன் : ஒன்னும் பண்ணமுடியாது ஏன்னா அவளுக்கும் கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் உண்டு. நல்ல வேளை இவளைக் கல்யாணம் பண்ணலன்னு நெனைப்பேன்; திருவாரூர்த் தேர் மாதிரி இருக்கா இப்ப.

அனுஜன்யா : 'வணக்கம் டீச்சர்' என்று கைகூப்பி வணங்குவேன். ஆம், மல்லிகா டீச்சர்தான் என் முதல் காதலி

கேபிள்சங்கர் : நான் பார்க்கும் போது அழகாய் இருந்தவள் இப்போது விடுதலைபுலிகளின் ஆளுயர குண்டு போலிருக்க, மனசுக்குள் “ ஐ.. எஸ்கேப்”
நேரில் ”என்ன இளைச்சு போயிட்ட..”

வெயிலான் : சினிமா நடிகைகள் தவிர வேறு எனக்கு காதலியே இல்லை. சீரியசா.

ச்சின்னப்பையன் : அப்போவே நான் ஜொள்ளு விட்டுக்கிட்டு 'ஐ அவ்வ் வூ'ன்னு சொன்னேன். நீதான் சரியா கேக்காமே 'ப்பூபூப்பூ'ன்னு சிரிச்சிட்டு போயிட்டே.. இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது. எங்கிருந்தாலும் வாழ்க!!! (ஏம்பா.. குஷி விஜய் மட்டும்தான் குழந்தையா இருக்கும்போதே லவ் பண்ண முடியுமா என்ன?)

மகேஷ் : இப்பவும் சந்திச்சுகிட்டோ / பேசிக்கிட்டோதான் இருக்கேன். அவங்களும் அவங்க கணவரும் என்னுடைய பிரதான நண்பர்களா இருக்காங்க. நட்பு இன்னமும் ஆழமாகியிருக்கு. நல்ல புரிதல் இருக்கு.

குசும்பன் : என் முதல் காதலியை தினம் மாலை சந்திக்கிறேன், சில சமயம் ஆபிஸ் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் சீக்கிரம் சந்திக்கப்போய்விடுவேன். ஆமாண்ணே என்னா முழிக்கிறீங்க செஞ்சதே ஒரு காதல் எழுதிய எல்லா பரிட்சையையும் இரு முறை சில சமயம் அதுக்கு மேலே எழுதும் படி ஆன எனக்கு காதல் எனும் தேர்வில் மட்டும் முதல் அட்டெம்டிலேயே பாஸ் ஆகிட்டேன் பாஸ்! என்ன செய்ய விதி வலியது! ஆகையால் முதல் காதலிதான் என் மனைவி! எப்படி பீல் பண்ணுவீர்கள்? துபாயில் இதுக்காக ரூம்போட்டா அழமுடியும், அப்படியே கிடைக்கிற இடத்தில் அழுதுக்கவேண்டியதுதான்:)

கேள்வி 2 :

பதிவெழுத வராவிட்டால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள்? (இப்ப செய்துகொண்டிருக்கிற அதே..ஆணியைத்தான் பிடுங்கிக்கொண்டிருப்பீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் கேட்பது உங்கள் எழுத்தார்வத்துக்காக..)

செல்வேந்திரன் : பதிவெழுத வழியற்று இருந்தால் இயன்றவரை பத்திரிகைகளுக்கு எழுதிப்பார்த்துவிட்டு... எதுவும் இடம்பெறாமல் இந்தப் பழம் புளிக்குமென வாசித்தலோடு ஆர்வத்தைத் தணித்திருப்பேன். தமிழ் பிழைத்திருக்கும்.

முரளிகண்ணன் : பதிவுலகுக்கு வரும் முன் பெரியதாக எதுவும் எழுதியதில்லை. (இப்போதும் தான்) . இது எனக்கு மிகப்பரிய வாய்ப்பு கொடுத்தது என்பதில் இரண்டாம் கருத்து இல்லை.

வடகரை வேலன் : அச்சகம் இருப்பதால் ஒரு மாத இதழ் தொடங்கலாமா என்ற யோசனையில் இருந்தேன். அப்புறம் எப்படித்தான் என்னை வெளிப்படுத்துவது?

அனுஜன்யா : பின்னூட்டங்களில் தன்நிகரில்லா நாயகனாகி இருப்பேன். ஒரு ஆயிரம் பேரைத் 'தொடரும்' பேர்வழி ஆகியிருப்பேன்.

கேபிள்சங்கர் : ஏற்கனவே செய்து கொண்டிருந்த திரைக்கதை/வசனம் மட்டும் எழுதும் ஆணியை பிடிங்கி கொண்டிருந்திருப்பேன். பதிவெழுதுவதால் என்னை போன்ற சோம்பேறிகளுக்கு ஒரு நல்ல எழுத்து பயிற்சியாகிறது என்பதை மறுக்க முடியாது.

வெயிலான் : நிறைய வலைப்பதிவுகளை படித்து பார்க்கும் போது மிக மோசமாக இருக்கும். அதற்கும் நல்ல பதிவு, சூப்பர்னு பின்னூட்டங்கள் இருக்கும். அட! இதை விட நாம நன்றாக எழுதலாமே என்ற எண்ணத்தில் தான் எழுத வந்தேன். அந்த பின்னூட்டங்களெல்லாம், பரிசல் மாதிரி ஆட்கள் படிக்காமல் போட்ட பின்னூட்டங்கள் என்று பின்னர் தான் தெரிந்தது. எழுத வராவிட்டால், இன்னும் நிறைய புத்தகங்கள், வலைப்பதிவுகள் படித்துக் கொண்டிருப்பேன். அப்படி படித்திருந்தால், உங்க அளவுக்கு பெரிய எழுத்தாளரா ஆயிருப்பேனோ என்னவோ?

ச்சின்னப்பையன் : ஹிஹி.. வேறென்ன.. வேலையில் அனுப்பும் மின்னஞ்சல்களில் கூடவே ஒரு ஜோக், கவிதை(!) எழுதி அனுப்புவேன். வாரா வாரம் நடக்கும் 'status' மீட்டிங்கை 'நொறுக்ஸ்'னு பேர் மாத்தியிருப்பேன். பதிவுலே எழுதுற மொக்கையை பக்கத்துலே வேலை பாக்கறவங்களுக்கு போட்டு, அவங்களை 'விட்டாப் போறுண்டா சாமி'ன்னு ஓடுமாறு செய்திருப்பேன்.

மகேஷ் : இல்லாட்டாலுமே "லெட்டர்ஸ் டு தி எடிட்டர்" நிறைய (மாசம் ஒண்ணுங்கறது 'நிறைய' இல்லையா? ) எழுதுவேன். 99% வெளிவராது. ஒண்ணு ரெண்டு வந்தாலும் நிறைய எடிட் பன்ணி வரும். புக் ரிவ்யூக்கள் எழுதணும்னு ரொம்ப நாள் ஆசை. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து ஒரு புத்தகம் எழுதணும்னு ஆசை. காத்து கவிதை படிச்சீங்க இல்ல? அதே மாதிரி இன்னும் நிறைய கவிதைக எழுதி உங்களையெல்லாம் ஃபுல்லரிக்க வெக்கணும்னு ஆசை.

குசும்பன் : பதிவெழுத வராவிட்டால் ரெட் இஃப் போலில் சென்னை சாட் ரூமில் சோனியா, சந்தியா என்ற பெயரில் உலாவி எவனையாவது தலை கிறு கிறுக்க விட்டுக்கிட்டு இருப்பேன்! ஆனா ஒன்னு பாஸ் சொந்த பெயரில் போய் பாருங்க ஒரு நாதாரியும் திரும்பாது, ஏதாவது பொண்ணு பெயரில் போய் பாருங்க! ASL plz? வானா செக்ஸ் சாட்? ஹாய் ஸ்வீட்டி! (வீட்டுல பொண்டாட்டிய கூட அப்படி கொஞ்சி இருக்க மாட்டானுங்க) என்று எம்புட்டு வித விதமான அழைப்புகள்! செம ஜாலியா இருக்கும் இதுக்கு முன்பு அதுதான் பொழப்பு! பொழுது போகனுமுல்ல:)

கேள்வி 3 :

நிஜத்தில் உங்களுக்கு நன்கு பழக்கமான அல்லது உறவினர்களில் விஐபி யாராவது உண்டா? அவரைப்பற்றி கூறுங்கள்.. (பெயர் சொல்ல விருப்பமில்லாவிட்டால் க்ளூ தரலாம்)

செல்வேந்திரன் : அப்படி யாரும் இல்லை.

முரளிகண்ணன் : முன் இல்லை. இப்பொழுது விரைவில் வி ஐ பி ஆகப்போகும் சிலருடன் நெருக்கமாக பழகிக் கொண்டு இருக்கிறேன்

வடகரை வேலன் : இந்தப் பேட்டி எடுக்கும் ஆதிமூலகிருஷ்ணனைத் தெரியும். அவரு எதிர்கால வி ஐ பி.

அனுஜன்யா : பலபேர். முதலாவதாக அனில் கும்ப்ளே. பெங்களூரில் கிரிக்கெட் விளையாடியதில். அப்புறம், VIP என்பதால் அவர் பெயரைச் சொல்ல முடியாது. ஆயினும், என் பதிவில் சில பதிவுகளில் அவர் பெயர் தென்படும். நிச்சயம் 'நெருக்கமான' உறவுதான். ஹி ஹி.. மூன்றாவதாக ஒரு பிரபலம். பெயர் சொல்ல முடியாத நிலை. ஏனெனில் அவருக்குப் பெயர் மாற்றிக்கொள்வது ஒரு ஹாபி. அதற்காக நண்பர்களை கலாய்ப்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். சில சமயம் பின் நவீனப் பதிவுகளும், கவிதைகளும் எழுதுவார். போதுமா?

கேபிள்சங்கர் : என்னுடய் உறவு முறையில் நிறைய வி.ஐ.பிக்கள் இருக்கிறார்கள். என்னையும் சேர்த்து..
1. பிரமிட் நடராஜன் (பிரமிட் சாய்மீரா நிறுவனர்)
2. மோகன் நடராஜன்.( கல்யாணமாலை)
3. மீரா கிருஷ்ணன் ( செய்தி வாசிப்பாளர், தொகுப்பாளர், நடிகர்)
இவர்களை பற்றி விளக்கம் வேண்டாமென நினைக்கிறேன்.

வெயிலான் : உறவினர்களில் விஐபி யாரும் இல்லை. நண்பர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் இங்கு வாங்க. படங்கள் இருக்கின்றன.

ச்சின்னப்பையன் : எனக்கு நன்கு பழக்கமான நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனைவருமே எனக்கு விஐபிதான். அவர்கள் அனைவரிடமும் விஐபி சூட்கேஸ் இருக்குன்றது கூடுதல் தகவல். இன்னொரு விஷயம். அவங்க எல்லோருக்கும் தெரிஞ்ச விஐபி ஒருத்தர் இருக்காரு. ஒரு க்ளூ தர்றேன்... அவரோட முதல் எழுத்து 'ச்'.. கடைசி எழுத்து 'ன்'...

மகேஷ் : எங்க அப்பாவே ஒரு விஐபிதான். 1977 - 1980 தமிழ்நாடு அக்வாடிக்ஸ் சேம்பியன்ஷிப் (டைவிங்) தங்கப்பதக்கம் வாங்கினவரு. வேற விஐபி யாரும் சொந்தமோ நட்போ இல்ல :(

குசும்பன் : என் அம்மா இந்திராகாந்தியுடன் நல்ல பழக்கம், ஆமாங்க அம்மா அவுங்களை இரு முறை சந்தித்து பேசி இருக்கிறார்கள் குடும்ப நண்பர் எஸ்.டி.எஸ் மூலம் அவர்களை சந்தித்து இருக்கிறார்கள் போட்டோ வீட்டில் இருக்கு.. சின்னபுள்ளயா இருக்கிறப்ப அம்மா சொல்லுவாங்க நீயும் இந்திரா காந்தி கூட போட்டோ எடுத்து இருக்கிற பாரு என்று சொல்லிட்டு அவுங்க வயிற்றை காட்டி நீ இங்கதான் இருக்க என்பார்கள்:) அந்த அளவுக்கு ரொம்ப பழக்கமுங்க! எழுத்தாளர் பாலபாரதி, எழுத்தாளர் யுவகிருஷ்ணா, ஆசிப்மீரான், இவர்கள் கூட ரொம்ப பழக்கமுங்க!:) அவ்வளோ ஏன் ஆதிமூலகிருஷ்ணன் கூட எனக்கு ரொம்ப பழக்கம் என்றால் பார்த்துக்குங்களேன்!

அன்புடன் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.!

45 comments:

அ.மு.செய்யது said...

ME the first ??

அ.மு.செய்யது said...

////முரளிகண்ணன் : கோபப்படுவேன். பின் சொல்வேன்.. “ மதியம் கட்டி கொடுத்த சாப்பாட்டில உப்பு கம்மி” என்று.//

டாப்பு..

மங்களூர் சிவா said...

/
குசும்பன் : பதிவெழுத வராவிட்டால் ரெட் இஃப் போலில் சென்னை சாட் ரூமில் சோனியா, சந்தியா என்ற பெயரில் உலாவி எவனையாவது தலை கிறு கிறுக்க விட்டுக்கிட்டு இருப்பேன்! ஆனா ஒன்னு பாஸ் சொந்த பெயரில் போய் பாருங்க ஒரு நாதாரியும் திரும்பாது, ஏதாவது பொண்ணு பெயரில் போய் பாருங்க! ASL plz? வானா செக்ஸ் சாட்? ஹாய் ஸ்வீட்டி! (வீட்டுல பொண்டாட்டிய கூட அப்படி கொஞ்சி இருக்க மாட்டானுங்க) என்று எம்புட்டு வித விதமான அழைப்புகள்! செம ஜாலியா இருக்கும் இதுக்கு முன்பு அதுதான் பொழப்பு! பொழுது போகனுமுல்ல:)
/

:))))))
ROTFL

மங்களூர் சிவா said...

//
துபாயில் இதுக்காக ரூம்போட்டா அழமுடியும், அப்படியே கிடைக்கிற இடத்தில் அழுதுக்கவேண்டியதுதான்:)
//
no escape maamu. அழுதுதான் ஆகணும்.

:)))))

மங்களூர் சிவா said...

//
வெயிலான் : நிறைய வலைப்பதிவுகளை படித்து பார்க்கும் போது மிக மோசமாக இருக்கும். அதற்கும் நல்ல பதிவு, சூப்பர்னு பின்னூட்டங்கள் இருக்கும். அட! இதை விட நாம நன்றாக எழுதலாமே என்ற எண்ணத்தில் தான் எழுத வந்தேன். அந்த பின்னூட்டங்களெல்லாம், பரிசல் மாதிரி ஆட்கள் படிக்காமல் போட்ட பின்னூட்டங்கள் என்று பின்னர் தான் தெரிந்தது
//

:))))))))))))))

முரளிகண்ணன் said...

நன்றாக வந்துள்ளது பேட்டி

ஆண்ட்ரு சுபாசு said...

நல்லா இருக்கு

ஸ்ரீமதி said...

Super.. :))))

குசும்பன் said...

ம்ம்கும் இந்த பதில் கொடுப்பதிலும் நான் கடைசியா? அவ்வ்வ்வ்

என்னது வடகரை வேலன் அண்ணாச்சிக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா? விளம்பரத்தில் காட்டுவது போல் அப்பா என்று யாரும் கூப்பிட்டு ஓடி வந்தால் தான் நம்பமுடியும் போல இருக்கு!

குசும்பன் said...

//வடகரை வேலன் : அச்சகம் இருப்பதால் ஒரு மாத இதழ் தொடங்கலாமா என்ற யோசனையில் இருந்தேன். அப்புறம் எப்படித்தான் என்னை வெளிப்படுத்துவது?//

அதைவிட செம ஐடியா ஒன்னு இருக்கு, கட்டிலை வெளியே எடுத்துவந்து வெளியே போட்டு படுத்தால் அதுதான் வெளிப்படுத்தல்!

நல்ல மெயின் ரோடாக இருந்தால் ரொம்ப நன்று:)

குசும்பன் said...

//அன்புடன் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.!//

என்னையும் ஆளா மதிச்சு, அதுவும் பிரபல பதிவரா நினைச்சு பேட்டி எடுத்து போட்ட உங்களுக்குதான் ரொம்ப நன்றி!

குசும்பன் said...

//முரளிகண்ணன் : முன் இல்லை. இப்பொழுது விரைவில் வி ஐ பி ஆகப்போகும் சிலருடன் நெருக்கமாக பழகிக் கொண்டு இருக்கிறேன்//

என்னது கமாலினி கூட நெருக்கமா பழகுறீங்களா? அவுங்கதானே அடுத்த கமல் படத்தின் ஹீரோயின், அதன் பிறகு அவுங்க வி.ஜ.பி தான்!

உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கு:))

Anonymous said...

//
வெயிலான் : நிறைய வலைப்பதிவுகளை படித்து பார்க்கும் போது மிக மோசமாக இருக்கும். அதற்கும் நல்ல பதிவு, சூப்பர்னு பின்னூட்டங்கள் இருக்கும். அட! இதை விட நாம நன்றாக எழுதலாமே என்ற எண்ணத்தில் தான் எழுத வந்தேன். அந்த பின்னூட்டங்களெல்லாம், பரிசல் மாதிரி ஆட்கள் படிக்காமல் போட்ட பின்னூட்டங்கள் என்று பின்னர் தான் தெரிந்தது
//

:):):)

பரிசல்காரன் said...

பேட்டி எடுப்பதும், பேட்டிக்கு பதில் சொல்வதும் ஒரு கலை. இந்தக் கேள்விகளிலும், பதில்களுமிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால்.. முரளிகண்ணனுக்கு அந்த உப்புமா பதிலுக்குக் கொடுப்பேன்.

அதே மேட்டரைத்தான் குசும்பனும் சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் குசும்புதான் தெரிகிறது. ஆனால் மு.க-னின் பதிலில் அவர் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பது தெரிகிறது.

இன்னும் நிறைய கேட்டு போட்டிருக்கலாம். வெரி இண்ட்ரஸ்டிங் ஆதி..

தமிழன்-கறுப்பி... said...

:))

வெயிலான் said...

கருத்து கேட்கிறேன்.........
கருத்து கேட்கிறேன்.........னு சொல்லிட்டு இப்படி நோட்டீஸ் மாதிரி போட்டுட்டியேப்பு!

நான் வேற இந்த வெவரம் தெரியாம உண்மையெல்லாம் வேற சொல்லிப்புட்டேனேப்பு!

பரிசல் என்னை கும்மப் போவது உறுதி.

பரிசல்காரன் said...

சாப்பாட்டில் உப்பு’ என்பது உப்புமாவாக வந்துவிட்டது.. (ஐயோ.. ஏற்கனவே வெயிலான் படிக்காம பின்னூட்டறேன்னு திட்டறாரு.. இதுல இது வேற,,,)

தமிழன்-கறுப்பி... said...

//
துபாயில் இதுக்காக ரூம்போட்டா அழமுடியும், அப்படியே கிடைக்கிற இடத்தில் அழுதுக்கவேண்டியதுதான்:)
//


:))) :)))

Cable Sankar said...

உங்கள் பேட்டிக்கு நன்றி ஆதி..

மஞ்சூர் ராசா said...

நட்சத்திரவாரத்தில் உண்மையிலேயே வித்தியாசமான பதிவு.

வாழ்த்துகள் நண்பரே.

கும்க்கி said...

இன்னமும் சில கேள்விகள் மூலம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்..தோஸ்த்.
ஆனா வித்யாசமா யோசிக்கிறீங்க.
ஒரு வட்டத்துக்குள் மட்டுமே இதை ரசிக்கமுடியும்.
என்ன ஆச்சரியம் பாருங்கள்.குறைந்த காலத்திற்க்குள் ஒரு நட்பு வட்டம் உருவாகி ஒவ்வொருவரும் எளிதாக அடுத்தவரின் ரசனை மற்றும் விருப்பங்கள் குறித்து அறிந்து கொண்டு பழகுவது ஆச்சரியமாக இருக்கின்றது பால்ய கால சினேகிதர்களை போல..

Mahesh said...

அண்ணே... நான் எதோ வெளாட்டுக்கு கேக்கறீங்க... எதோ திரிசமன் வேலை இருக்குன்னு நினைச்சேன்... பாத்தா அப்பிடியே போட்டுருக்கீங்க :)

முரளி பதில் சூப்பர் !! ச்சின்னப்பையன் வழக்கம் போல கலாய்த்தல்... வெயிலான் அடக்கம்...

அதெல்லாம் போகட்டும்... நான் எப்ப "பிரபல" பதிவர் ஆனேன்? :(
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

பார்சா குமார‌ன் said...

நல்லா இருக்கு

கும்க்கி said...

ஒரே ஒரு கேள்வி.யாரேனும் முன்னெடுத்து சென்றால் நல்லது.
இந்த நாட்டின் முழு அதிகாரமும் (அரசியல் கட்சிகள் அதிகார வர்கம் அத்தனையும் விடுத்து)உங்கள் வசம் வந்தால்... எத்தனை ஆண்டுகளுக்குள் என்னென்ன விதமான மாற்றங்களை உங்களால் உருவாக்கமுடியும்...?

ச்சின்னப் பையன் said...

// குசும்பன் said...
//அன்புடன் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.!//

என்னையும் ஆளா மதிச்சு, அதுவும் பிரபல பதிவரா நினைச்சு பேட்டி எடுத்து போட்ட உங்களுக்குதான் ரொம்ப நன்றி!
//

repeatteee...

gayathri said...

குசும்பன் : பதிவெழுத வராவிட்டால் ரெட் இஃப் போலில் சென்னை சாட் ரூமில் சோனியா, சந்தியா என்ற பெயரில் உலாவி எவனையாவது தலை கிறு கிறுக்க விட்டுக்கிட்டு இருப்பேன்!


eaan intha kolaveri

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செய்யது.!
நன்றி மங்களூர்.! (உங்க பொழுது போக்கும் அதேதான் போல.. அதான் குசும்பன் கமெண்ட் ரொம்ப பிடிச்சுப் போச்சு..)

நன்றி முரளி.! (அடுத்து ஒரு டேமேஜ் பதிவு காத்திருக்குது..)
நன்றி சுபாசு.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி குசும்பர்.! (விஐபி பேச்சாளர்கள் கடைசியில் என்பது போல நீங்கள் கடைசியில் தள்ளப்பட்டுள்ளீர்கள் தல..) (அதுவும் பிரபல பதிவரா நினைச்சு பேட்டி எடுத்து போட்ட உங்களுக்குதான் ரொம்ப நன்றி!// மாமா.. பிஸ்கோத்து..)

நன்றி சதானந்தன்.!
நன்றி பரிசல்.!
நன்றி தமிழன்கறுப்பி.!
நன்றி வெயிலான்.!
நன்றி கேபிள்.!
நன்றி மஞ்சூர்.!

நன்றி கும்க்கி.! (கேள்விகள் மூலம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்// ஆமால்ல.. ஐடியா கிடைச்சதும் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ?)
நன்றி மகேஷ்.! (நான் எப்ப "பிரபல" பதிவர் ஆனேன்?// நா ஆகுறதுக்கு கொஞ்சம் மின்னாடிதான்..)
நன்றி பார்சா குமாரன்.!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ச்சின்னவர்.!
நன்றி காயத்ரி.!

வெட்டிப்பயல் said...

Natchara vaazhthukal Krish :)

வெட்டிப்பயல் said...

muthal kelvi super... rendavathu kelvi Cinema nadigarkalai kekkara maathiri iruku... moonavathu kelvi, romba sumaar :(

புருனோ Bruno said...

//முரளிகண்ணன் : கோபப்படுவேன். பின் சொல்வேன்.. “ மதியம் கட்டி கொடுத்த சாப்பாட்டில உப்பு கம்மி” என்று.//

நச்

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒருத்தரும் பண்ணலை.. ஃபாலோயர்ஸ் 100ஐத் தாண்டியதற்கு வாழ்த்த மறந்துட்டீங்க.. ஹிஹி.. சும்மா ஒரு விளம்பரத்துக்கு..! (ஊக்கம் தரும் இன்னொரு விஷயம். உண்மையில் அனைவருக்கும் மனமுவந்த நன்றி தோழர்களே..)

நன்றி வெட்டிப்பயல்.! (கரெக்டா சொன்னீங்க.. அவசரத்தில் பண்ணிட்டேன். வெளிப்படையான கருத்துக்கு நன்றி.!)

நன்றி டாக்டர்.!

தமிழ் பிரியன் said...

எல்லோரும் மனந்திறந்து சொல்லி இருக்கின்றார்கள்... நல்ல பதிவு!

பரிசல்காரன் said...

ஒரு உண்மையச் சொல்றேன். சமீபத்துல விஜய் அம்பதாவது படம் நடிக்கப்போறார் என்று படித்தபோது.. ‘என்னது இப்பத்தான் 50வது படமா?' என்று நினைத்தேன். இவ்ளோ ஃபேமஸாய்ட்டு இப்பத்தான் 50ஆ என்கிற பிரமிப்பு அது.

அதேதான் தோன்றிற்று உங்கள் 100 ஃபாலோயர் பற்றிய உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததும்.

இது அக்மார்க் உண்மை ஆதி!

மைல்ஸ் ட்

பரிசல்காரன் said...

மைல்ஸ் டு கோ.. ஆல் த பெஸ்ட்! (இது மிஸ்ஸாகி விட்டது போன பின்னூட்டத்தில்)

எம்.எம்.அப்துல்லா said...

Mahesh said...
அதெல்லாம் போகட்டும்... நான் எப்ப "பிரபல" பதிவர் ஆனேன்? :(
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
//

அண்ணே நம்புண்ணே...நீயும் ரவுடிதாண்ணே :)

அது சரி said...

என்ன அக்கிரமமா இருக்கு...எல்லாரையும் கேள்வி கேட்டீங்க...ஆதிமூலம் கிருஷ்ணன் (எ) தாமிரா, அவரோட முதல் காதலிய பார்த்தா என்ன செய்வாருன்னு கேக்காம விட்டுட்டீங்களே!

இது வேணும்னே பண்ணது தான?

மோகன் கந்தசாமி said...

வித்தியாசமான முயற்சி. நன்றாக இருக்கின்றது தாமிரா!

Anonymous said...

//முரளிகண்ணன் : கோபப்படுவேன். பின் சொல்வேன்.. “ மதியம் கட்டி கொடுத்த சாப்பாட்டில உப்பு கம்மி” என்று//

கவிதை :)

இரா.சிவக்குமரன் said...

///பரிசல் மாதிரி ஆட்கள் படிக்காமல் போட்ட பின்னூட்டங்கள் என்று பின்னர் தான் தெரிந்தது///
அப்பிடியா சங்கதி???!!!!

narsim said...

முதல் கேள்விக்கு முரளி கண்ணன்

இரண்டாம் கேள்விக்கு குசும்பன்

மூன்றாம் கேள்விக்கு அனுஜன்யா

நல்ல வித்தியாசமான சிந்தனை ஆதி.. கலக்கல் கேள்விகள்..கலக்கல் பதில்கள்..

கார்க்கி said...

என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்காத்தால் நோ பின்னூட்டம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு வித்யாசமான நல்ல முயற்சி, முயற்சியில் நல்ல வெற்றி.

வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:)

வால்பையன் said...

எனக்கும் வந்தது!
பேரு தெரியாம விட்டுடெனே!

வட போச்சே!