Tuesday, March 17, 2009

சவால்கள் நிறைந்த பதிவுலகம் (+ஒரு முக்கிய பின்குறிப்பு)

எழுதுவது மிகக் கடினமான விஷயம்.. வாசிப்பது அதனினும் கடினமான விஷயமாக இருக்கிறது.. இன்றைய வேகமான சூழலில்.! தமிழக காங்கிரஸின் தொண்டர்கள் தலைவர்கள் விகிதம் போல பதிவுலகில் படிப்பவர்களை விட எழுதுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். நாம் மட்டும் எழுதி மற்றெல்லோரும் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

பத்திரிகை, இதழ்களில் எழுதும் வாய்ப்பு என்பது நன்றாக எழுதும் திறன் மிக்கவர்களுக்கோ அல்லது செல்வாக்குப் படைத்தவர்களுக்கோ கிடைக்கும் ஒன்றாக இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டாலே அவர் கவிஞர் அல்லது எழுத்தாளர் என்ற அடைமொழிக்குரியவர்களாகிவிடுகின்றனர். ஆயிரமாயிரம் பிரதிகளில் படைப்புகள் அச்சாகி, அதை விலை கொடுத்து வாங்கும் வாசகர் கரங்களை அவர்களின் படைப்புகள் சென்றடைந்துவிடுகின்றன. மறுகேள்விக்கு இடமில்லாமல் அந்த படைப்பு வாசகர்களால் பெரும்பாலும் வாசிக்கப்பட்டுவிடுகிறது. பின்விளைவுகளையும், நீடித்த வெற்றியையும் பற்றி நாம் இப்போது பேச வரவில்லை. முதலில் படைப்புகளை வாசகர்களை படிக்க வைத்தால்தானே பின்னர் வெற்றியைப் பற்றி பேசமுடியும்.?

முதலில் எழுத்தாளர்களுக்கான, பத்திரிகைக்களுக்கான வாசகர் வட்டம் மிகப்பெரிது இன்றைய சூழலில். ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில் வலையுலகத்தின் வாசகர் எண்ணிக்கை மிகக்குறைவானதாகவே இருக்கிறது. பத்திரிகைகளைப் போல எந்த சிரமமும் இல்லாமல் யாரது படைப்புகளும் களம்காண எந்தத் தடையுமில்லை. நூலகத்தில் குவிந்துகிடக்கும் புத்தகங்களைப் போல ஒவ்வொரு வலைப்பூவும் ஒரு குட்டிப்புத்தகமாய் வலையுலகில் குவிந்துகிடக்கிறது. பத்திரிக்கை உலகத்தோடு ஒப்பிடுகையில் நினைத்தும் பார்க்க இயலாத போட்டி இங்கே. ஒவ்வொரு மனிதனிடமும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த குறைந்த வாசகர் கூட்டத்தில், மிகுந்த போட்டிக்கிடையே எப்படி படைப்புகளை வாசகர்களை படிக்கச்செய்வது.?

செய்தி, சிந்தனை, சம்பவங்கள், நகைச்சுவை என விஷயம் எதுவாக இருப்பினும் உள்ளடக்கம், படைப்பின் அளவு, தலைப்பின் வசீகரம், வாசகரை தொடர்ந்து வாசிக்கச்செய்யும் நடை, புதுமை என எழுத்தாளர்களுக்குக்கூட இல்லாத அளவு ஒவ்வொரு விஷயமும் பதிவர்களுக்கு மிகுந்த சவால் நிறைந்த்தாக உள்ளது..

நல்ல தரமான உள்ளடக்கம், வசீகரமான நடை, அழகான தலைப்பு அத்தனை இருந்தும் படைப்பின் நீளம் மலைக்கவைப்பதாய் இருந்தால் (ஒரு பத்திரிகைச் சிறுகதையின் நான்கில் ஒருபங்கு) பதிவு பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. பிறவற்றில் சிறப்பாக இருந்து ஒரு நல்ல வசீகரமான தலைப்பு இல்லாமல் போனாலும் படைப்பு தோல்வியைத் தழுவுகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பானதாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படி ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்துச் செயலாற்றி கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கும் நிலையிலேயே பதிவர்கள் இருக்கின்றார்கள்.. பத்திரிகையுலகத்தை விடவும் மிகுந்த சவால்கள் நிறைந்த இந்த பதிவுலகத்தில்.!

முக்கியமான டிஸ்கி : இப்படிப் பலமாக சிந்தித்ததன் விளைவுகளை நமது மூத்த பதிவர்களான ஜ்யோவ்ராம் சுந்தர், முரளிகண்ணன், சஞ்சய்காந்தி, மாதவராஜ், அனுஜன்யா, அதிஷா போன்றோரின் தலைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

.

44 comments:

RAD MADHAV said...

Me the First !!! :-)

RAD MADHAV said...

//எழுதுவது மிகக் கடினமான விஷயம்.. வாசிப்பது அதனினும் கடினமான விஷயமாக இருக்கிறது.//


இலவசமாக கிடைக்கும்போது எதுவாக இருந்தாலும், உண்மை தரம் எடை தூக்கி பார்க்கப்படுவதில்லை.

RAD MADHAV said...

//முதலில் எழுத்தாளர்களுக்கான, பத்திரிகைக்களுக்கான வாசகர் வட்டம் மிகப்பெரிது இன்றைய சூழலில். ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில் வலையுலகத்தின் வாசகர் எண்ணிக்கை மிகக்குறைவானதாகவே இருக்கிறது.//


இன்னம் பத்து வருசத்துல பாருங்க. நீங்க சொன்னது, தலைகீழா மாறியிருக்கும்.

எத சொன்னாலும் நச்சுனு நாலு வரியில் சொல்ல தெரிஞ்சா போதும். அதுவே வெற்றி தான் தல.

சந்தனமுல்லை said...

நீங்களும் "ரொம்ப சிந்திச்சா" அந்த லிஸ்ட்டில் சேர வாய்ப்பு உள்ளது!! :-))

RAD MADHAV said...

//தமிழக காங்கிரஸின் தொண்டர்கள் தலைவர்கள் விகிதம் போல பதிவுலகில் படிப்பவர்களை விட எழுதுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.//


தேர்தலில் குதிக்க இது ஒரு முன்னோட்டமோ?
(ஆமா நீங்க அரசியலுக்கு எப்ப வரப்போறீங்க?)

கோவி.கண்ணன் said...

//இப்படி ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்துச் செயலாற்றி கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கும் நிலையிலேயே பதிவர்கள் இருக்கின்றார்கள்.. பத்திரிகையுலகத்தை விடவும் மிகுந்த சவால்கள் நிறைந்த இந்த பதிவுலகத்தில்.!//

அதென்னமோ சரிதான், நாள் தோறும் ஒரு மொக்கையாவது போட்டால் தான் தொடர்ந்து இயங்க தூண்டுகோளாக இருக்கிறது

RAD MADHAV said...

//சந்தனமுல்லை said...

நீங்களும் "ரொம்ப சிந்திச்சா" அந்த லிஸ்ட்டில் சேர வாய்ப்பு உள்ளது!! :-))//


அப்பா 'ஆ மூ கி ' இது வர 'ரொம்ப சிந்திக்கவேயில்லேன்னு' சொல்ல வரீங்க?
தைரியமா சொல்றீங்க? :-))

RAD MADHAV said...

//கோவி.கண்ணன் said...

//இப்படி ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்துச் செயலாற்றி கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கும் நிலையிலேயே பதிவர்கள் இருக்கின்றார்கள்.. பத்திரிகையுலகத்தை விடவும் மிகுந்த சவால்கள் நிறைந்த இந்த பதிவுலகத்தில்.!//

அதென்னமோ சரிதான், நாள் தோறும் ஒரு மொக்கையாவது போட்டால் தான் தொடர்ந்து இயங்க தூண்டுகோளாக இருக்கிறது//

*** Same Blood ****

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஆதிமூல கிருஷ்ணரே.. அடுத்தவாட்டி மாட்டாலமா போடுவீங்க.. மைண்ட்ல வச்சிக்கிறேன்.. :)

நான் எப்போ சாமி மூத்த பதிவரானேன்.. ஒன்னும் எழுதத் தெரியாம பிறந்தநாள் வாழ்த்துக்களை போட்டு ஒப்பேத்திட்டு இருக்கேன். :(

கார்க்கி said...

சகா,

முதல்ல 100 ஃபால்லியர்ஸுக்கு வாழ்த்துகள்..

அப்புறம் டிஸ்கியில் என் பெயர் சேர்க்காததற்கு நன்றி

narsim said...

100க்கு வாழ்த்துக்கள்..

அந்த காங்கிரஸ் உதாரணம் அருமை தல

ஸ்ரீமதி said...

பதிவு சூப்பர்.. :)) அத விட லேபில் சூஊஊஊஉப்ப்ப்ப்ப்ப்ப்பர்... ;)))))

//நானே சிந்திச்சேன்// :))))))))))

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ஆதிமூல கிருஷ்ணரே.. அடுத்தவாட்டி மாட்டாலமா போடுவீங்க.. மைண்ட்ல வச்சிக்கிறேன்.. :)

நான் எப்போ சாமி மூத்த பதிவரானேன்.. ஒன்னும் எழுதத் தெரியாம பிறந்தநாள் வாழ்த்துக்களை போட்டு ஒப்பேத்திட்டு இருக்கேன். :(//

இப்போவேவா வந்து வாக்குமூலம் தருவாங்க?? எல்லாரும் வந்து படிச்சி முடிச்சிட்டு போகும் போது, நீ வந்து அப்படி இல்லீங்கோன்னு சொல்லணும் புரிஞ்சதா?? ;)))

100 followers-கு வாழ்த்துகள் அண்ணா :)))

Namakkal Shibi said...

:)

இரா.சிவக்குமரன் said...

///இலவசமாக கிடைக்கும்போது எதுவாக இருந்தாலும், உண்மை தரம் எடை தூக்கி பார்க்கப்படுவதில்லை.///
கலைஞர் டி வி மாதிரின்னு சொல்லுங்களேன்?!!

அ.மு.செய்யது said...

பத்திரிக்கைகளில் நம் படைப்புகள் வரவில்லையே என்று ஏங்கி கிடக்கும் எழுத்தார்வலர்களுக்கு வலையுலகம் ஒரு வரம்.

என்னைப் போன்ற சிறுவ‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் ப‌டிக்க‌ வேண்டிய‌ ப‌திவு இது ஆதி !!!

குசும்பன் said...

எக்ஸ்கூயுஸ் மீ நல்ல வழுக்கையா ஒரு இளநீர் கிடைக்குமா?

குசும்பன் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர், முரளிகண்ணன், சஞ்சய்காந்தி, மாதவராஜ், அனுஜன்யா, அதிஷா போன்றோரின் தலைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.//

சுந்தர் அண்ணாச்சி,
முரளிகண்ணன்,
சஞ்சய்,
அதிஷா, ஆகிய “பெரும்” தலைகளை பார்த்து இருக்கிறேன்.

இந்த அனுஜன்யாவை மட்டும் தான் பார்க்கவில்லை அவரின் தலை எப்படி இருக்கும் என்று யோசிக்கும் எனக்காகவும் மற்ற புதிய பதிவர்களுக்காகவும் கேமிராவில் பிளாஸ் இல்லாமல் ஒரு போட்டோ எடுத்து போடுங்களேன்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழக காங்கிரஸின் தொண்டர்கள் தலைவர்கள் விகிதம் போல பதிவுலகில் படிப்பவர்களை விட எழுதுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
:)-

நாம் மட்டும் எழுதி மற்றெல்லோரும் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
அதாவது ஆ.மு.கி யான நீங்கள் மட்டுமே எழுதி நாங்கள் அனைவரும் பின்னூட்டவாதிகளாக..

அடடா

என்னா.......... வில்லத்தனம்...

ஒவ்வொரு மனிதனிடமும் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன:
மிகச் சரி...

Mahesh said...

//இப்படி ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்துச் செயலாற்றி கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கும் நிலையிலேயே பதிவர்கள் இருக்கின்றார்கள்.. பத்திரிகையுலகத்தை விடவும் மிகுந்த சவால்கள் நிறைந்த இந்த பதிவுலகத்தில்.!//

அதே அதே சபாபதே :(

எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம் யோசிச்சு 100வது பதிவு போடுறீங்க?

வாழ்த்துகள் தாமிரா (அ) ஆதிமூலகிருஷ்ணன் !!

எம்.எம்.அப்துல்லா said...

//என்னைப் போன்ற சிறுவ‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் ப‌டிக்க‌ வேண்டிய‌ ப‌திவு இது ஆதி !!!

//

எச்சூஸ்மி...அட்துல என்னையும் சேத்துக்குங்க :)

பரிசல்காரன் said...

ஏங்க.. கொஞ்சம் முடியத் தூக்கி முன்னாடி விட்டுகிட்டா இந்த லிஸ்ட்ல வராம போயிடுவீங்களா? இது போங்கு ஆட்டம்!

(ஒரு முக்கியக் குறிப்பு: இந்தத் தலைப்புல எவ்வளவோ எழுதலாமே.. இப்படி ச்சுர்க்’ன்னு முடிச்சுட்டீங்களே?!?)

இய‌ற்கை said...

டிஸ்கி super:-)))))

இய‌ற்கை said...

// Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ஆதிமூல கிருஷ்ணரே.. அடுத்தவாட்டி மாட்டாலமா போடுவீங்க.. மைண்ட்ல வச்சிக்கிறேன்.. :)

நான் எப்போ சாமி மூத்த பதிவரானேன்.. ஒன்னும் எழுதத் தெரியாம பிறந்தநாள் வாழ்த்துக்களை போட்டு ஒப்பேத்திட்டு இருக்கேன். :(//

vayasanathaala mootha pathuvarla sethu irukkanga sanjai ungala...
:-)))

ஆண்ட்ரு சுபாசு said...

சவால்கள் நிறைந்த பதிவுலகம்..//

ஆமாம் அண்ணா ..நீங்கள் இடும் தலைப்பிலும் ..உங்கள் கற்பனை வளம் தனிலுமே தெரிகிறது ...ஆமா நீங்க திருநெல்வேலியா?

அ.மு.செய்யது said...

மீத லெக் செஞ்சுரி !!

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
//என்னைப் போன்ற சிறுவ‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் ப‌டிக்க‌ வேண்டிய‌ ப‌திவு இது ஆதி !!!

//

எச்சூஸ்மி...அட்துல என்னையும் சேத்துக்குங்க :)
//

"வ‌ய‌சு ப‌ச‌ங்க‌" லிஸ்ட்ல‌லாம் சேக்க‌ முடியாது.

வேணும்னா "வ‌ய‌சான‌ ப‌ச‌ங்க‌" லிஸ்ட்ல சேக்க‌லாம்..டீல் ஓகேவா ?

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மாதவ்.! (இன்னம் பத்து வருசத்துல பாருங்க. நீங்க சொன்னது, தலைகீழா மாறியிருக்கும்// ஹிஹி.. நம்புவோம்..)

நன்றி முல்லை.! (ஏன் இந்த கொலவெறி)
நன்றி கோவிஜி.! (அதுவும் சர்தான் தல..)
நன்றி சஞ்சய்.! (அவ்வ்வ்வ்..)

நன்றி கார்க்கி.! (இதுதான் தானே வந்து வலியில விழறதுங்கிரது..)
நன்றி தல‌.!
நன்றி ஸ்ரீமதி.! (லேபில் சூப்பரா.. அல்லது டிஸ்கி சூப்பரா?)

நன்றி சிபி சார்.!
நன்றி சிவா.!
நன்றி செய்யது.!
நன்றி குசும்பர்.! (எக்ஸ்கூயுஸ் மீ நல்ல வழுக்கையா ஒரு இளநீர் கிடைக்குமா?// சஞ்சய்யை அணுகவும்..)

நன்றி அமித்துஅம்மா.!
நன்றி மகேஷ்.! (100வது பதிவா? ஏன் குழப்புறீங்க?)
நன்றி அப்துல்லா.! (பிள்ளையில்லாத டீம்ல கிழவன் துள்ளி விளையாண்டானாம்..)

நன்றி பரிசல்.! (கரெக்டா நெனச்சத புடிச்சுடுவீங்களே.. சந்திரமுகி ரஜினி மாதிரி..)
நன்றி இயற்கை.! (சரியா சொன்னீங்க..)
நன்றி சுபாசு.! (ஆமாம் பாஸ்)

MayVee said...

yen intha sudden thoughts????

nalla irukku

புதுகைத் தென்றல் said...

நட்சத்திரமாக மின்னும் பொழுது உங்கள் எழுத்துக்களுக்கும் கூடுதலாக லைட் போட்டோப்போல மின்னுதே ஃப்ரெண்ட்.

பாராட்டாம இருக்க முடியலை.

ஸ்ரீமதி said...

லேபில் தான் :))

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))

அத்திரி said...

//முக்கியமான டிஸ்கி : இப்படிப் பலமாக சிந்தித்ததன் விளைவுகளை நமது மூத்த பதிவர்களான ஜ்யோவ்ராம் சுந்தர், முரளிகண்ணன், சஞ்சய்காந்தி, மாதவராஜ், அனுஜன்யா, அதிஷா போன்றோரின் தலைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.//

__ ))))))))))))))))))))

pappu said...

அது சரிதான். நூற்றுக்கு மேற்ப்பட்ட பி தொடர்பவர்கள் வந்த பிறகு எப்படி ப்டிக்க முடியும். கொஞ்சம் கஷ்டம்தான். எல்லாத்துக்கும் பின்னூட்டம் போடுறதும் கஷ்டம்.எல்லாத்தையும் படிக்கிறதே கஷ்டம்.
பரிசல் பதிவு பாத்திருப்பீங்க!

Anonymous said...

பதிவின் நீளம் குறைவெனினும் நச் என்று சொல்வதற்கு சந்தனமுல்லையின் பதிவுகள் உதாரணம்.

வால்பையன் said...

//முக்கியமான டிஸ்கி : இப்படிப் பலமாக சிந்தித்ததன் விளைவுகளை நமது மூத்த பதிவர்களான ஜ்யோவ்ராம் சுந்தர், முரளிகண்ணன், சஞ்சய்காந்தி, மாதவராஜ், அனுஜன்யா, அதிஷா போன்றோரின் தலைகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.//

இத்தனை பேரும் ரொம்ப யோசிக்கிறாங்களா?
நம்மதுல்லாம் பயங்கர ஃப்ரெஷ்

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மேவீ.!
நன்றி தென்றல்.! (அப்படியா சொல்றீங்க.. ஃபிரெண்ட்? தேங்க்ஸு..ஹிஹி)

நன்றி ஸ்ரீமதி.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி அத்திரி.!
நன்றி பப்பு.!
நன்றி சதானந்த்.! (அப்ப என்னது உதாரணம் இல்லையா.? அவ்வ்வ்..)

நன்றி வால்பையன்.!

ராஜ நடராஜன் said...

//எழுதுவது மிகக் கடினமான விஷயம்.. வாசிப்பது அதனினும் கடினமான விஷயமாக இருக்கிறது..//

முதல் விசயம் சரிங்கறது எனது எழுத்து லட்சணம் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.இரண்டாவது உடன்பாடில்லை.எழுதியதை விட படித்த பதிவுகள் மிக அதிகம்.

ராஜ நடராஜன் said...

//தமிழக காங்கிரஸின் தொண்டர்கள் தலைவர்கள் விகிதம் போல பதிவுலகில் படிப்பவர்களை விட எழுதுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். //

நான் படிக்கிற கட்சிங்க.

ராஜ நடராஜன் said...

//இப்படி ஒவ்வொரு கூறுகளையும் சிந்தித்துச் செயலாற்றி கிடைத்த வெற்றியைத் தக்கவைக்கும் நிலையிலேயே பதிவர்கள் இருக்கின்றார்கள்..//

தமிழ்மணம் பக்கம் வந்தமா கண்ணைச் சுழட்டுனோமா நாலு பின்னூட்டம் போட்டமா எப்பவாவது தலை குறுகுறுத்தால் ஒரு பதிவு போட்டமா இதுதான் எனது நிலைப்பாடு.

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு டிஸ்கி ரொம்ப புடிச்சிருக்கு...

கீழை ராஸா said...

அருமையான பதிவு...நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

Anonymous said...

கிகிகிகி பி.கு தான் பிடிச்சிருக்கு ஆதிண்ணா :P

சுரேகா.. said...

ஜூப்பரு!

:))

ஊர் சுற்றி said...

உண்மையிலேயே சவால்தானுங்க.
உங்கவீட்டு சவாலா எங்கவீட்டு சவாலா.... !!!

இருந்தாலும் விடுறதா இல்லீங்க்.
ஒரு கை பாத்துடலாங்க். என்ன நாஞ்சொல்றது?!