Wednesday, March 18, 2009

ரமா எனும் சுனாமி

‘மனுஷி ஒரு அஞ்சி நிமிசம் நிம்மதியா இருக்கமுடியுதா இந்த வீட்ல.. எங்கியாவது போய் ஒழியலாமான்னு இருக்குது..’ என்று ஆரம்பித்திருந்தது புலம்பல்கள்.. எந்த நேரமும் அர்ச்சனையாக நம்மை நோக்கித் திரும்பிவிடும் ஆபத்திருப்பதை ஊகித்தேன்.

என்ன காரணமாக இருக்கும் என யோசித்தேன்.. பிடிபடவில்லை. ஏதாவது வாங்கிவரச் சொல்லியிருந்தாளா? மறந்துவிட்டோமா? இல்லையே.. வழக்கத்தைவிட சீக்கிரமாகவே அலுவலகத்திலிருந்தும் திரும்பிவிட்டோமே.. எங்காவது போவது போல பிளான் எதுவும் இருக்கவில்லை. இந்த மாத கோட்டாவான ஐநாக்ஸுக்கும் போன வாரமே போய் வந்தாச்சு. ஏதாவது வீட்டு வேலை பெண்டிங்கில் வைத்திருக்கிறோமா?

பின்புற சாக்கடை அடைப்பை நேற்றே குத்திவிட்டு கிளீன் பண்ணியாச்சு. அவளுடைய பிஞ்சுபோன செருப்பை போன வாரமே தச்சு கொண்டு வந்தாச்சு. எலி பிஸ்கெட்டும் வாங்கித் தந்தாச்சு. கொசுவலைக்கு ஆணியடித்தல், ஷெல்ஃபை கிளீன் செய்தல், டூப்ளிகேட் சாவி, டாய்லெட் பல்பை மாற்றுதல், கிரைண்டர் குளவிக்கு கைப்பிடி மாற்றுதல் என எல்லாவற்றையுமே பண்ணி முடிச்சாச்சே.. ஏதாவது மறந்துட்டோமோ?

‘குடிக்க ஏதாவது தர்றியாம்மா?’

‘ஹார்லிக்ஸ் தீந்து போச்சுன்னு நேத்தே சொன்னேனா இல்லியா?’

‘இப்ப வாங்கிட்டு வந்திடவா? நாளைக்கு வாங்கிக்கலாமா.? என்னமா டென்ஷனா இருக்கே? காபியாது தர்றியா?’ என்று தைரியமாக பக்கத்தில் சென்றேன்.

‘என்னது நொன்னமா? காபி தர்றேன்.. போய் டிவி முன்னால போய் உக்காந்து உங்க வேலைய பாருங்க..’

அமைதியாக இருப்பது புத்திசாலித்தனமா? சமாதானப் படுத்த முயலலாமா? குழப்பமாக இருந்தது.. சரியாக முடிவெடுக்கமுடியாவிட்டால் சிக்கலாகிவிடக்கூடும். எத்தனை முறை அனுபவப்பட்டிருக்கிறோம்.. நைசாக ஹாலுக்குப் போய் டிவி முன்னால் உட்கார்ந்து ‘சிரிப்பொலி’யை தேடினேன்.

‘போங்கன்னா என்னமோ ஒழின்னு போயிடுவீங்களே..’ என்றவாறே அருகே டக்கென்று காபியை வைத்தாள். அமைதிகாத்தேன். ம்ஹூம்.. இது நேரமல்ல.. என் காதில் விழும்படியும் அதேநேரம் சண்டையாகவும் இல்லாமல் பிற வேலைகளை பார்த்தவாறே புலம்பல் தொடர்ந்தது..

‘காலையில எட்டு மணிக்கு போனா ராத்திரி எட்டு மணிக்கு வர்றது.. வாரத்துக்கு ரெண்டு நாளு ஆபிஸ்ல பார்ட்டி, பிரெண்ட பாக்க போறேம்னு எங்கியாவது போய் ஒழிஞ்சிட்டு பதினோரு மணிக்கு வர்றது..வந்து டிவிய கட்டிக்கிட்டு மாரடிக்கவேண்டியது.. மாசத்துக்கு ரெண்டு நாள் ஹைத்ராபாத்துக்கு போயிர வேண்டியது. இங்க நா ஒருத்தி எதுக்கு இருக்கேன்னே தெரியல.. துணி தொவைக்க வேண்டியது, சமையல் பண்ண வேண்டியது, பாத்திரம் தேய்க்க வேண்டியதுன்னு இதே வேல.. இருவத்துநாலு மணிநேரமும்.. என்ன மிஷினா நா.? அஷ்டலச்சுமி கோயிலுக்கு கூட்டிட்டு போங்கன்னு எத்தன தடவை சொல்லிட்டிருக்கேன். மேட்சிங் இல்லாம யாரு சேலை எடுக்கச்சொன்னது? நா கேட்டேனா.. அந்த ப்ளு கலர் ஸாரிக்கு பிளவுஸ் எடுக்கணும். என்னிக்கு நடக்குப் போவதோ? ராத்திரிக்கு என்ன வேணும்?’

‘என்ன புதுசா கேள்வி.. தோசை இருக்கும்ல..’

‘மாவெல்லாம் இல்ல.. மதியம் பண்ணின சோறுதான் இருக்கு..’ அப்புறம் என்ன கேள்வின்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டு ‘சரிம்மா..’ என்றேன்.

அப்புறமும் நிற்காமல் அர்ச்சனை தொடர்ந்தது.. கொஞ்சம் நேரம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு அருகில் சென்றேன்.. ‘என்ன பிரச்சினை சொல்லும்மா..’ என்று கையைப் பிடித்து இழுத்தேன். பலத்த பீடிகைக்குப்பின்னே மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்..

‘எங்க கல்லூ சித்தப்பாவோட அண்ணன் இருக்காங்கல்ல.. அவுங்க பொண்ணோட நாத்தனாரோட வீட்டுக்காரர் இருக்கார்ல.. அவுங்க வீடு எங்க வீட்டுக்கு அடுத்த தெருவுலதான் இருக்கு.. நாம ரெண்டு பேரும் கூட அங்க ஒரு நாள் போயிருக்கோமே.. அவுரு தங்கச்சிக்கு அடுத்த மாசம் கல்யாணமாம்.. நா ஊருக்கு போணும்ங்க.. நீங்க கல்யாணத்தன்னிக்கு வாங்க, ரெண்டு பேரும் ஒண்ணா வந்துடலாம்.. போறது.. நா இப்பவே போயிடுதேன்.’

ஆஹா.. இதுக்குதான் இவ்வளவு பீடிகையா.. கடுப்பானேன். ‘அப்படி வா வழிக்கு, இதுக்குதான் இந்த வரத்து வந்தியா? போன மாசம்தானே ஒரு வாரம் ஊர்ல இருந்திட்டு வந்தே.. அதுக்குள்ள இன்னொரு வாட்டியா.. அதுவும் ஒரு மாசத்துக்கு முன்னாடியே போய் என்னடி பண்ணப்போறே.? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..#$%^&*(&^%$!#%’

‘(*&^%)(#$(^%&*  #$%#$)(^%  !$%^&^^*(..’

அதன் பின் வந்த புயல் வேக வசனங்களும், சண்டைக்காட்சிகளும் நாகரீகம் கருதி சென்ஸார் செய்யப்படுகிறது. பின்னர் ஊருக்கு டிக்கெட் புக் பண்ணிய பிறகுதான் அந்த சுனாமி ஓரளவு அடங்கியது என்பதை உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.

.

48 comments:

MayVee said...

me th 1st

MayVee said...

ha ha ha
kalayana valkkaila ivvalavu problem irukka....

ungalai partha pAVAMaga than irukku aana enn seiya....

padivai padicha oru 10 comedy scene partha effect varuthu.....

MayVee said...

:-))

அ.மு.செய்யது said...

கொஞ்சஞ் சிரமந்தேன் போல...

க‌ல‌ க‌ல‌ன்னு இருக்கு ப‌திவு !!!!!


அர‌ங்கு நிறைந்த‌ ச‌ண்டைக் காட்சிக‌ளுட‌ன்..

முரளிகண்ணன் said...

பேக் டூ பார்ம்

வால்பையன் said...

ஃப்ரியா விடு ஃபிரியா விடு ஃபிரியா விடு மாமே
சுதந்திரத்துக்கு இல்ல கேரண்டி!

Anonymous said...

எங்களப் பார்த்துக் கத்துகிடனம்ல.

என்னதான் சண்டை போட்டாலும் அவங்க சொன்னதுதான் நடக்கும். அதுக்கு முதல்லயே தலை ஆட்டி அந்தக் காரியத்தச் செஞ்சிட்டா நல்ல பேரும் கிடைக்கும், நம்ம மானமும் காக்கப் படுமும். சில சமயம் போனசும் கிடைக்கும்.

கவலைப்படாத, தானா வரும். கொஞ்ச நாள் ஆகும் பழகறதுக்கு.

கார்க்கி said...

/ வடகரை வேலன் said...
எங்களப் பார்த்துக் கத்துகிடனம்ல.

என்னதான் சண்டை போட்டாலும் அவங்க சொன்னதுதான் நடக்கும். அதுக்கு முதல்லயே தலை ஆட்டி அந்தக் காரியத்தச் செஞ்சிட்டா நல்ல பேரும் கிடைக்கும், நம்ம மானமும் காக்கப் படுமும். சில சமயம் போனசும் கிடைக்கும்.

கவலைப்படாத, தானா வரும். கொஞ்ச நாள் ஆகும் பழகறதுக்//

இப்படியே பயமுறுத்துங்க.. போன வாரம் தான் அம்மாகிட்ட பொண்ணு பார்க்க சொன்னேன்..இருங்க.. ஃபோன் செஞ்சிட்டு வரேன்

குசும்பன் said...

ஊருக்கு ரமா சுனாமிக்கு டிக்கெட் புக் செஞ்சுட்டு, பாமான்னு ஒரு பினாமிய செட் செஞ்ச ரகசியத்தை யாரிடமும் சொல்லமாட்டேன் தல!!!

குசும்பன் said...

துபாயில் வேலை பார்ப்பதில் இவ்வளோ நன்மைகள் இருக்கா! அப்ப ஊருக்கு வரலாம் என்ற ஐடியாவை தள்ளிப்போடவேண்டியதுதான்?


//போன மாசம்தானே ஒரு வாரம் ஊர்ல இருந்திட்டு வந்தே..//

இது சரியா இல்லை போனமாசம் ஒரு வாரம்தானே வீட்டில் இருந்த இது சரியா தல?

வந்ததும் படிச்ச முதல் பதிவு, ரொம்ப ஹேப்பியா இருக்கு!:)

ஸ்ரீமதி said...

அச்சோ பாவம்... ஊருக்கு போறேன்னு சொன்னதுக்கு போயி இவ்ளோ சண்ட போடுவாங்களா?? ;))

புதுகைத் தென்றல் said...

அடிக்கடி ஊருக்கு போவதுஎன்பது எனக்கு
பிடிக்காது என்பதால் இந்தப் பதிவுல உங்களுக்கு எதிரா என் கமெண்ட் இல்ல ப்ரெண்ட்.

:((

புதுகைத் தென்றல் said...

ஆமாம் இப்படி தலைப்பை வெச்சது ரமாவுக்கு தெரியுமா?

உடம்பு டேமேஜாகம இருக்க பிராத்திக்கிறேன் ஃப்ரெண்ட்.

அனுஜன்யா said...

Same blood :)

அகநாழிகை said...

நண்பரே, உங்க பதிவு அருமை. சரளமான நடை. ‘மி.கி.மா.‘ படும் சிரமங்களை இயல்பான மொழி நடையில் கூறும் வரம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. நீங்கள் சிறுகதைகள் எழுதினால் நன்றாக இருக்கும். இந்த பதிவை படிக்கும் போதே ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா‘ ஜனகராஜ் போல நீங்கள் கொண்டாடும் காட்சி கண் முன் தெரிகிறது. (அது சரி, ‘மனைவியை சமாதானம் செய்து, சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி‘ என்ற புத்தகத்தை நீங்கள் படித்ததில்லையா...?)

- பொன். வாசுதேவன்

Mahesh said...

//வடகரை வேலன் said...
எங்களப் பார்த்துக் கத்துகிடனம்ல.

என்னதான் சண்டை போட்டாலும் அவங்க சொன்னதுதான் நடக்கும். அதுக்கு முதல்லயே தலை ஆட்டி அந்தக் காரியத்தச் செஞ்சிட்டா நல்ல பேரும் கிடைக்கும், நம்ம மானமும் காக்கப் படுமும். சில சமயம் போனசும் கிடைக்கும். //

ம்க்கும்... அப்பறம் "ரமா என்னும் சுனாமி"ன்னு பதிவு எப்பிடி வரும்?

ஹி ஹி ஹி ... ஊட்க்கூடு வாசப்படி!!

என்ன நீங்க தெகிரியமா பதிவு போடுறீங்க !!

Anonymous said...

கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு? நேர கால்ல விழுந்து டிக்கெட் எடுத்து குடுத்து நல்ல பையன்னு பேர் எடுத்து, அம்மிணியை ஊருக்கு அனுபிடு, திரும்பவம் ஜாலியா இருக்கம்மா!!! என்னமோபோ.
(இதுக்குதான் நான் ஊருக்கு போறதே இல்லை, நாங்க மட்டும் குழந்தைகளோட மல்லுகட்டனும் , நீங்க ஜாலியா இருக்கணுமா.... ஆசை)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மேவீ.!
நன்றி செய்யது.!
நன்றி முரளி.!
நன்றி வால்.!
நன்றி வேலன்.!
நன்றி கார்க்கி.!
நன்றி குசும்பன்.!
நன்றி ஸ்ரீமதி.! (எங்களால மனைவியப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருக்கமுடியாதுங்கிறத ஏன் புரிஞ்சுக்கமாட்றீங்க..)

நன்றி தென்றல்.!
நன்றி அனுஜன்யா.!
நன்றி அகநாழிகை.! (அந்த புக்குக்கு மாற்றா நான் ஒண்ணு எழுதி வெச்சிருக்கேன்.. யாராவது பிரின்ட் பண்ணுவாங்களா.. பாஸ்.!)

புதுகைத் தென்றல் said...

எங்களால மனைவியப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருக்கமுடியாதுங்கிறத ஏன் புரிஞ்சுக்கமாட்றீங்க//

மிக அருமையா சொல்லியிருக்கீங்க ப்ரெண்ட். பாராட்டுக்கள்.

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2007/12/blog-post_08.html

neram kidaikumbothu ennoda intha pathivai padinga friend

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

படிச்சாச்சு தென்றல்.. மிக நல்ல பதிவு.. அதுபோன்ற பெண்களுக்கு உறைத்தால் சரிதான்.!

வெயிலான் said...

இயல்பான நடையில் அருமை.
கரைக்கு வந்தாச்சுல்ல?

மீள்பதிவை ஏன் எடுத்திட்டீங்க? இப்பவும் ஒரு முறை படித்து மீண்டும் நெகிழ்ந்தேன்.

ஸ்ரீமதி said...

//எங்களால மனைவியப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருக்கமுடியாதுங்கிறத ஏன் புரிஞ்சுக்கமாட்றீங்க..//

எதுக்கு?? அப்ப தான் அவங்கள தினமும் திட்டி பதிவு போடலாம்னா?? ;))

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

வித்யா said...

\\பின்புற சாக்கடை அடைப்பை நேற்றே குத்திவிட்டு கிளீன் பண்ணியாச்சு. அவளுடைய பிஞ்சுபோன செருப்பை போன வாரமே தச்சு கொண்டு வந்தாச்சு. எலி பிஸ்கெட்டும் வாங்கித் தந்தாச்சு. கொசுவலைக்கு ஆணியடித்தல், ஷெல்ஃபை கிளீன் செய்தல், டூப்ளிகேட் சாவி, டாய்லெட் பல்பை மாற்றுதல், கிரைண்டர் குளவிக்கு கைப்பிடி மாற்றுதல் என எல்லாவற்றையுமே பண்ணி முடிச்சாச்சே.\\

இத்தனை ஆணிகளுக்கு மத்தில பதிவா:)

பரிசல்காரன் said...

ஐயா.. அப்ப வீக் எண்டுக்கு ரெடியாஆஆஆஆஆஆஆஆஆ?

பரிசல்காரன் said...

இந்தப் பதிவுல ஒரு முக்கியமான ப்ளஸ் பாய்ண்டை சொல்லியே ஆகணும். அதாவது உரையாடல்களுக்கும், இடையே மன ஓட்டங்களை வர்ணிப்பதற்கும் வேறு வேறு நடையைப் பயன்படுத்தியுள்ளீர்கள்.

(நான் சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லியிருக்கிறேனாவெனத் தெரியவில்லை.)

நல்ல முறையில் வந்திருக்கிறது அது!

இதுக்கு சொல்லியே ஆகணும்..

சூப்பர் ஆதி!

கூட்ஸ் வண்டி said...

இங்கே இருக்கிறவ, இந்த இடத்தை விட்டு அசைய மாட்டுக்கா. உங்கள என்னோட இந்த பதிவுக்கு எதிர் பார்த்தேன்.

http://goodswandi.blogspot.com/2009/03/blog-post.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தப் பதிவ படிச்சபின்னாடி ரமா நெஜமாவே சுனாமி ஆகாம இருந்தா சரி...

காபியாது தர்றியா?’ என்று தைரியமாக பக்கத்தில் சென்றேன்//

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் பாஸ்.

அறிவிலி said...

ஹ்ம்ம்... குடுத்து வெச்சவரு.

எங்க வூட்ல, ஒரு பத்து நாள் போயிட்டு வாயேன்னு சொன்னாத்தான் வெட்டு குத்து.

இரா.சிவக்குமரன் said...

கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு? நேர கால்ல விழுந்து டிக்கெட் எடுத்து குடுத்து நல்ல பையன்னு பேர் எடுத்து, அம்மிணியை ஊருக்கு அனுபிடு, திரும்பவம் ஜாலியா இருக்கம்மா!!! என்னமோபோ.
(இதுக்குதான் நான் ஊருக்கு போறதே இல்லை, நாங்க மட்டும் குழந்தைகளோட மல்லுகட்டனும் , நீங்க ஜாலியா இருக்கணுமா.... ஆசை)

ஆமோதிக்கிறேன் அய்யா!!!

பாபு said...

//ஹ்ம்ம்... குடுத்து வெச்சவரு

எங்க வூட்ல, ஒரு பத்து நாள் போயிட்டு வாயேன்னு சொன்னாத்தான் வெட்டு குத்து//

repeattu

புதுகைத் தென்றல் said...

எங்க வூட்ல, ஒரு பத்து நாள் போயிட்டு வாயேன்னு சொன்னாத்தான் வெட்டு குத்து//

ஹை! ஸ்ரீராமுக்கு நிறைய தோஸ்த்கள் இங்கே இருக்காங்கன்னு சொல்லணும்.
:))))

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வெயிலான்.! ((மாலையில் போடுவதாக பிளான். சேவ் பண்றதுக்கு பதிலா போஸ்ட் பண்ணிட்டேன்.. ஒரே நிமிஷந்தான்.. அதுக்குள்ள பிடிச்சுட்டீங்களே..)

நன்றி ஸ்ரீமதி.! (ரகசியத்தெல்லாம் வெளியச் சொல்லப்படாது)
நன்றி விஜி.!
நன்றி வித்யா.!

நன்றி பரிசல்.! (இப்பிடி புதுசுபுதுசா கண்டு பிடிச்சு பாராட்டுனா எவ்வள்ளவு சந்தோஷமா இருக்குது.. அது விட்டுப்புட்டு.. ஹிஹி..)
நன்றி கூட்ஸ்.!

நன்றி அமித்து.!
நன்றி அறிவிலி.!

நன்றி சிவா.!
நன்றி பாபு.!

நன்றி தென்றல்.. (ஸ்ரீராமுக்கும் ஒரு வாரம் ரெஸ்ட் குடுத்துதான் பாருங்களேன்.. ஐயோ பாவம்.!)

அத்திரி said...

சீனியர் உங்களுக்கே இந்த நிலைமைனா ஜூனியர் நானெல்லாம்.................((((

ச்சின்னப் பையன் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி தல!!!

அன்புடன் அருணா said...

இதெல்லாம் இல்லைன்னா எப்பிடிங்க்ணா வாழ்க்கை ஜாலியா இருக்கும்????
அன்புடன் அருணா

தமிழ் பிரியன் said...

:)))
இதெல்லாம் எல்லா வீட்டிலும் இருப்பது தானே.. ;))

மங்களூர் சிவா said...

/
அமைதியாக இருப்பது புத்திசாலித்தனமா? சமாதானப் படுத்த முயலலாமா? குழப்பமாக இருந்தது.. சரியாக முடிவெடுக்கமுடியாவிட்டால் சிக்கலாகிவிடக்கூடும். எத்தனை முறை அனுபவப்பட்டிருக்கிறோம்..
/
avvvvvvvvv
same blood
கண்ணுல தண்ணி அண்ணே :(((((((

மங்களூர் சிவா said...

/
#$%^&*(&^%$!#%’

‘(*&^%)(#$(^%&* #$%#$)(^% !$%^&^^*(..’
/

no no no bad words மாமா பாவம் அப்படின்னு வடிவேல் ஸ்டைல்ல நீங்க கெஞ்சியிருக்கணும். கல்யாணம் ஆகி இவ்ளோ நாள் ஆகுது இன்னுமா தெரியலை!?!?!?

:))))))))))

மங்களூர் சிவா said...

/
இங்க நா ஒருத்தி எதுக்கு இருக்கேன்னே தெரியல.. துணி தொவைக்க வேண்டியது, சமையல் பண்ண வேண்டியது, பாத்திரம் தேய்க்க வேண்டியதுன்னு இதே வேல.. இருவத்துநாலு மணிநேரமும்
/

வீட்டு வேலைக்கு ஒரு 'சின்ன பொண்ணை' வெச்சிக்கலாமா அப்படின்னு கேளுங்க அதுக்கப்புறம் இந்த டயலாக் வராது!

(பின்விளைவுகளுக்கு பொறுப்பல்ல)

மங்களூர் சிவா said...

/
பின்புற சாக்கடை அடைப்பை நேற்றே குத்திவிட்டு கிளீன் பண்ணியாச்சு. அவளுடைய பிஞ்சுபோன செருப்பை போன வாரமே தச்சு கொண்டு வந்தாச்சு. எலி பிஸ்கெட்டும் வாங்கித் தந்தாச்சு. கொசுவலைக்கு ஆணியடித்தல், ஷெல்ஃபை கிளீன் செய்தல், டூப்ளிகேட் சாவி, டாய்லெட் பல்பை மாற்றுதல், கிரைண்டர் குளவிக்கு கைப்பிடி மாற்றுதல் என எல்லாவற்றையுமே பண்ணி முடிச்சாச்சே..
/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
திரும்ப கண்ணுல தண்ணி
:((((((((((

Anonymous said...

அண்ணியின் பக்கம் இருக்கும் நியாயத்தை மறைத்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ரமா அண்ணி ரசிகர் மன்றம்
தலைமை செயலகம்
ஒஸ்திரேலியா

புதுகைத் தென்றல் said...

ஸ்ரீராமுக்கும் ஒரு வாரம் ரெஸ்ட் குடுத்துதான் பாருங்களேன்.. ஐயோ பாவம்.!)

அவ்வ்வ்வ்வ்வ்வ்

எங்களால மனைவியப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருக்கமுடியாதுங்கிறத ஏன் புரிஞ்சுக்கமாட்றீங்க- எங்களால மட்டும் ஒரு வாரம் பிரிஞ்சிருக்க முடியுமா ஃப்ரெண்ட்!!

புதுகைத் தென்றல் said...

ஆஷிஷ் சின்னதா இருந்தப்போ 15 நாள் (இவர் டூர் போயிட்டு வருவதற்குள்0 அம்மாவீட்டுக்கு போவதாக டிக்கெட் புக் செய்யச் சொன்னேன். 15நாளான்னு சிரிச்சுகிட்டே புக் செஞ்சு கொடுத்தாரு.

இந்த சிரிப்புக்கு அர்த்தம் என்னன்னு யோசிச்சுகிட்டே கிளம்பினேன். ஒருவாரத்துலேயே கிளம்பிவந்துவிட்டேன்.

ஐயாவுக்கு ஒரே சிரிப்பு. உன்னால அம்புட்டு நாளெல்லாம் இருக்க முடியாதுன்னு தெரியும் அதான் அப்ப சிரிச்சேன்னு சொன்னார்.

அதுக்கப்புறம் நான் எங்கயும் தனியே போனதே இல்லை.
:)))))))))

Syam said...

முதலில் நட்சத்திர வாழ்துகள்!!!

Syam said...

ஊருக்கு போறதுக்கு இவ்வளவு சண்டையா குடுத்து வெச்சவரு நீங்க...நானும் தங்கமணிய பேக் பண்ணிட்டு ஒரு வாரம் ஜாலியா பார்ட்டி பண்ணலாம்னு பார்கறேன் நம்ம பார்ட்டி நகர்ற மாதிரி தெரியல... :-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அத்திரி.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி அருணா.!
நன்றி தமிழ்.!
நன்றி சிவா.!
நன்றி தூயா.!
நன்றி தென்றல்.!
நன்றி ஷ்யாம்.!