Friday, March 20, 2009

பெரியாரைப் பிழையாமை

சமீபத்தில் இணையத்தில் அலைந்துகொண்டிருந்த போது தற்செயலாக பிரபல மனநல மருத்துவர் ஷாலினியின் ஒரு பதிவை பார்க்க நேரிட்டது.. அந்தப்பதிவில் மிக நேர்மையாக அவரின் கருத்து பதியப்பட்டிருந்தாலும் தொடரும் பெரியாரைப் பற்றிய அவரின் புரிந்துகொள்ளலுக்கான முயற்சியையும் அது தெளிவாக கூறியிருந்தது. இப்போதைய நமது பதிவு அதைப்பற்றியதல்ல..

எப்படி ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்பது போல பெரியாரைப் பற்றிய ஒவ்வொருவரின் கருத்தும் அவர்கள் எங்கு அவரை தெரியத்துவங்குகிறார்களோ அதைத் தாண்டிச் செல்ல முடியாத அளவில் அவரது பிரமாண்டம் அவர்களை விழுங்கிவிடுகிறது என்பதே நாம் அதிசயிக்கும் இன்றைய செய்தி.

உலகமெங்கும், தேவைப்படும் தருணங்களில் புரட்சியாளர்கள் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றனர். இங்கே அப்படித்தோன்றிய ஒரு அற்புதம்தான் ஈவேரா. வாழும்முறைகளால், எண்ணங்களால், உணர்வுகளால் நோய் பீடிக்கப்பட்டிருந்த தன்மையை அறிந்த சிந்தனாவாதி அவன். ஒரு சமூகத்தையே தளையிலிருந்து மீட்டெடுக்கும் சக்தி தனியொருவனுக்கு வாய்த்திருக்கிறதென்றால் அது தெய்வ சங்கல்பமில்லையா...

ஹாஹாஹாஹ்ஹ்ஹாஹா.. .. ..

இப்போது அவன் இதைக்கேட்டு மேற்கூறிய வார்த்தைகளுக்காக என்னை அவன் அணிந்திருந்த செருப்பாலேயே அடித்திருந்தால் நான் எவ்வளவு பாக்கியசாலி. ஆரியம் செய்த சமூக விழுங்குதலை அவன் மூலம் அறிந்தவர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவே வாழ்நாளை செலவழிக்க வேண்டியதாயிற்று. அவர்களைப் பொறுத்தவரை அவன் அதைமட்டுமே சொன்னவன். பிரம்மாண்டமான தடயங்கள் உருவாக்கப்பட்டு கட்டுக்கதைகளுக்கிடையே சிக்க வைக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்தை கடவுள் மறுப்பு என்ற பெயராலே உடைக்கும் வல்லமை யாருக்கு வாய்த்தது? அதை அவன் மூலமாக உணர்ந்தவர்கள் அவனிடம் அதை மட்டுமே பார்த்தனர். உலகெங்கும் பெண்கள் அடிமைப்பட்டுக்கிடக்க இங்கே அதை உரத்துச் சொன்னவன் அவன். அதோடு மட்டுமில்லாது அவர்களின் விடுதலைக்கான முதல் தளையை உடைத்தவன் அவன். அப்படி அவனைக் கண்டால் அப்படியேதான் காணமுடியும். விஸ்வரூபம் அவன். புரட்சிவீரன் அவன். அவன் சிந்தனையின் கால் சுண்டுவிரலையே பார்த்துக் கொண்டிருப்பவன் நான்..

அடுப்பை ஊதிக் கொண்டிருந்தீர்கள்.

பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டிருந்தீர்கள்.

நான்காவதாய், எட்டாவதாய் வாழ்க்கைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்.

கட்டிக்கொண்டவனின் வயது ஒன்பதா, அறுபத்தொன்பதா என்பதை கல்யாணம் முடிந்த பிறகே தெரிந்துகொண்டீர்கள். அப்போதும் அவன் முகம் பார்க்க மூன்று நாட்களாயிற்று உங்களுக்கு.

பருவமடையும் முன்பே விதவையாக ஒதுக்கிவைக்கப்பட்டீர்கள்.

தமிழையும் வாசிக்கத்தெரியாத ஊனம் கொண்டிருந்தீர்கள்.

உங்களை மீட்டெடுத்தவன் இன்று உங்கள் முன்னாலிருக்கும் தகப்பனல்ல.. சகோதரனல்ல.. கணவனல்ல.. அவர்களை இவ்வாறு திருந்தச்செய்தவன் யார்? அவன் பெண்விடுதலைக்காக என்ன செய்தான் என்பதை பெண்களே நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். ‘பதவிக்காக..’ அவனது தம்பிமார்கள் இன்று திசைமாறி போயிருக்கலாம்.. அவர்கள் அவன் கொண்ட நெருப்பை நீங்கிச்சென்றவர்கள். அந்த நெருப்பு காலமெலாம் உறங்காத ஒன்று. அதை நீங்கள் கைப்பற்றுங்கள். விடுதலையை இன்னும் தீவிரப்படுத்துங்கள். செயற்கரிய செய்த வனை கூத்தாடிக் கொண்டாடுங்கள்.. உண்மையில் அவன் உங்களை மீட்க வந்த தேவதூதன்.!

periyar

த்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இவை தமிழ்ச் சொற்களும் அல்ல!

-பெரியார் (451973, விடுதலை)

.

34 comments:

முரளிகண்ணன் said...

நட்சத்திர வாரத்தின் நட்சத்திர பதிவு

அ.மு.செய்யது said...

First pochae !!!!!!

அ.மு.செய்யது said...

பெரியாரின் இறைமறுப்பில் எனக்கு உடன்பாடில்லை எனினும் பல விஷயங்களில் பெரியார் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.

வைக்கம் பிரச்சனையை தீர்த்து வைத்தமை..
தன் வீட்டு தென்னை மரங்களை அழித்த போது..
இஸ்லாத்தில் உள்ள மூட நம்பிக்கைகளான உரூஸ்,அல்லாசாமி பண்டிகை,சந்தன கூடு இவைகளை எதிர்த்த போது...

Mahesh said...

நட்கத்திர வாரம் வந்த உடனே அருமையான் பதிவுகளா வந்து விழுது. (அப்ப போன பதிவெல்லாம் அப்பிடி இல்லையான்னு கேக்கப்படாது. அழுதுருவேன்.....:)

//அ.மு.செய்யது said...
பெரியாரின் இறைமறுப்பில் எனக்கு உடன்பாடில்லை எனினும் பல விஷயங்களில் பெரியார் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.
//

அதேதான் என் நிலையும்.

தராசு said...

//பெரியாரைப் பற்றிய ஒவ்வொருவரின் கருத்தும் அவர்கள் எங்கு அவரை தெரியத்துவங்குகிறார்களோ அதைத் தாண்டிச் செல்ல முடியாத அளவில் அவரது பிரமாண்டம் அவர்களை விழுங்கிவிடுகிறது என்பதே நாம் அதிசயிக்கும் இன்றைய செய்தி.//

வழிமொழிகிறேன்.

நட்சத்திரங்களுக்குள் ஜொலிக்கும் நட்சத்திரமாய் இருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள் தல.

Anonymous said...

டவுள் பற்றிய அவரது கருத்துக்கள் ஏற்பது ஏற்காததும் அவரவர் விருப்பு வெறுப்பு எனினும், தேவையற்ற மூடப்பழக்கவழக்கங்களில் மூழ்கிக் கிடந்த ஒரு சமூகத்தை மீட்டெடுத்து நல்வழிப்படுத்தியவர் அவர்.

பரிசல்காரன் said...

அதெப்படீங்க நட்சத்திரம்னதும் இவ்ளோ சீரியஸ் மேட்டரெல்லாம் அருமையா, சுவாரஸ்யமா கலக்கறீங்க..??

அப்பாவி முரு said...

பெரியானின் பெயரை மட்டும் வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருக்கும் தலைமுறையில்,

பெரியாருக்கு சரியான மரியாதை கொடுத்துள்ளீர்,

பெரியாரின் ஆன்மா உங்களை ஆசிர்வதிக்கும்.

இரா.சிவக்குமரன் said...

வழிமொழிகிறேன்.

narsim said...

ஆதி,

நட்சத்திரப் பதிவு..

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு மனிதராய் சுவாசித்து,தமிழ்மக்களை சுயமாய் சுவாசிக்கக்கற்றுக்கொடுத்து,திராவிடத்தின் ஆரம்பப் புள்ளியாய்,ஆதார மையமாய் விளங்கிய/கும் பெரியார் என்ற மாமனிதரைப் பற்றிய நட்சத்திரப்பதிவு.

Anonymous said...

//தோள் கண்டார் தோளே கண்டார்’ என்பது போல பெரியாரைப் பற்றிய ஒவ்வொருவரின் கருத்தும் அவர்கள் எங்கு அவரை தெரியத்துவங்குகிறார்களோ அதைத் தாண்டிச் செல்ல முடியாத அளவில் அவரது பிரமாண்டம் அவர்களை விழுங்கிவிடுகிறது//உண்மை.எந்த பொருள்பற்றி தேடினாலும்,பெரியார் கிடைப்பார்.அவர் சொல்லாத பொருள் இல்லை.

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முரளி.!
நன்றி செய்யது.!
நன்றி மகேஷ்.! (உங்கள் பின்னூட்டங்களில் கேலி, எள்ள‌ல் விளையாடுகிறது.. மிக மிக ரசிக்கிறேன் மகேஷ்.. அதுவும் நீங்கள் கவுன்டர் தரும் அழகு பிரமாதம்..)

நன்றி தராசு.!
நன்றி வேலன்.!
நன்றி ப‌ரிச‌ல்.! (அப்டிங்க‌றீங்க‌..)

நன்றி முரு.!
நன்றி சிவா.!
நன்றி ந‌ர்சிம்.!
ந‌ன்றி இனிய‌ன்.!

வால்பையன் said...

//பெரியாரைப் பற்றிய ஒவ்வொருவரின் கருத்தும் அவர்கள் எங்கு அவரை தெரியத்துவங்குகிறார்களோ அதைத் தாண்டிச் செல்ல முடியாத அளவில் அவரது பிரமாண்டம் அவர்களை விழுங்கிவிடுகிறது என்பதே நாம் அதிசயிக்கும் இன்றைய செய்தி.//


ரொம்ப சரி தல!

வால்பையன் said...

//ஒரு சமூகத்தையே தளையிலிருந்து மீட்டெடுக்கும் சக்தி தனியொருவனுக்கு வாய்த்திருக்கிறதென்றால் அது தெய்வ சங்கல்பமில்லையா...//

இதையெல்லாம் கேட்க கூடாதுன்னு தான் பெரியார் அப்பவே போயிட்டாரு போல!

வால்பையன் said...

//பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். //

பத்தினி, பதிவிரதையை தமிழ்லில் சேர்க்கவேண்டும் என்றால்
பத்தினன், பதிவிரதன் என்ற சொல்லையும் தமிழில் சேர்த்தாக வேண்டுமே இல்லையா!

அது என்ன ஆணுக்கு ஒரு நீதி
பெண்ணுக்கு ஒண்ணு!

கோவி.கண்ணன் said...

அட்டகாசம் !

புன்னகை said...

//பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும்.//
இதை ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவம் எப்போது வரப் போகிறது நம் மக்களுக்கு???

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

எத்தினி வாட்டிப்பா திறந்து பாக்குறது.. யாராவது பின்னூட்டம் போடுங்க.. நல்லாருக்கு, நல்லால்லைன்னு சொன்னாத்தானே தெரியும்..

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வால்பையன்.!
நன்றி கோவிஜி.!
நன்றி புன்னகை.!

sakthi said...

நல்லாருக்கு, நல்லால்லைன்னு சொன்னாத்தானே தெரியும்..
really superb

அப்பாவி முரு said...

// தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
எத்தினி வாட்டிப்பா திறந்து பாக்குறது.. யாராவது பின்னூட்டம் போடுங்க.. நல்லாருக்கு, நல்லால்லைன்னு சொன்னாத்தானே தெரியும்..//

அடப்பாவி, நல்ல பதிவு, நல்ல எழுத்து அத்னால டீசண்டான கமெண்ட் போட்டோம்.

உங்களுக்கு நிறைய பின்னூட்டம் வேணுமா?

அப்பாவி முரு said...

அதுமட்டுமில்லை, பெரியாரைபற்றி எழுதினால், சந்தோசப்பட்டல் ராயல்டி கேக்குற கூட்டமும் இருக்கு.

ஏன்னா இன்னும் ஈவேரா- வோட எழுத்துகளை நாட்டுடமை ஆக்கவில்லை.

நாங்க உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது பேசிருவோம், அவிங்க வந்து ராயல்டி கேக்குறதுக்கா?

Rajaraman said...

ஈ.வே.ரா. வை பற்றி ஓவர் பில்ட் அப்பா இருக்கு. ரொம்ப உணர்ச்சிவயப்பட்டு விட்டீர்களா அல்லது வேற மாதிரி சமயத்தில் பதிவு எழுதினீர்களா.

கும்க்கி said...

:-))

கும்க்கி said...

*****”

சுரேகா.. said...

ஒரு மேடை உரைக்கான வீச்சு இருக்கிறது சார் !

மிக அருமை!

தமிழன்-கறுப்பி... said...

26th

தமிழன்-கறுப்பி... said...

மொக்கை மட்டும்தான் போடுவிங்கன்னு சொன்னிங்க... :)

Anonymous said...

//பெரியாரைப் பற்றிய ஒவ்வொருவரின் கருத்தும் அவர்கள் எங்கு அவரை தெரியத்துவங்குகிறார்களோ அதைத் தாண்டிச் செல்ல முடியாத அளவில் அவரது பிரமாண்டம் அவர்களை விழுங்கிவிடுகிறது என்பதே நாம் அதிசயிக்கும் இன்றைய செய்தி//

நட்சத்திர வாழ்த்துகள் ஆதி!!
இப்போதுதான் உங்கள் பதிவுகளை வாசிக்கத் துவங்கியிருக்கிறேன். தவற் விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வோடு.

மீண்டும் வாழ்த்துகள்! இனி அடிக்கடி சந்திப்போமென்ற நம்பிக்கையுடன்

வனம் said...

வணக்கம் ஆதி

ம்ம்ம்ம் கலக்குறீங்க

அட ரொம்ப நல்லா இருக்கு விஷயங்களும், பதிவின் அமைப்பும்

ஆமா அதென்ன
\\பெரியாரின் இறைமறுப்பில் எனக்கு உடன்பாடில்லை எனினும் பல விஷயங்களில் பெரியார் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.\\

அவர் சொன்ன அத்தனை விஷயங்களும் இறைமறுப்பை அடிப்படையாக வைத்துதானே.

இது பெரியாரின் சிந்தனைகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை நீர்த்துபோகச் செய்யும் என அய்யுருகின்றேன்

நன்றி
இராஜராஜன்

ramachandranusha(உஷா) said...

பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை ஒன்பதாம் வகுப்பு பிள்ளைகளுக்கு பாடமாய் வைக்க வேண்டும். நான் அந்த
வயதில் தான் படித்தேன்.

காந்தி, பெரியார் பெயர்கள் இன்னும் நாளும் நம் கண்ணில் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். யானையை தடவிய குருடர்கள் போல அவர்களின் கருத்துக்களை நாம் உள்வாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

கெக்கே பிக்குணி said...

தமிழ்நாட்டில் பால்/சாதியைத் தாண்டி இன்று பலரும் முன்னேற‌ முடிந்தததற்கு பெரியார் காரணம் (இதன் நீட்சியாக, பெரியாரைப் போன்று ஒரு குறிப்பிட்ட புரட்சியாளர் அல்லாத மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட பரவலான பொருளாதார முன்னேற்றம் ஏன் என்றும் ஒரு கேள்வி). இன்றைய அளவில் "எத்தனை மனைவியர்" / "எத்தனை உ.பி.ச." என்ற போலிகளின் அரசியல் தவிர்த்து, புரட்சிகரமான சிந்தனைகளை தமிழ்நாடு மாகாணத்தில் பரவலாக எடுத்துச் சொன்னவர் என்னும் அளவில் என் மிகுந்த மரியாதைக்குரியவர். ஒரு பெண்ணாய்க் கட்டாயம் அப்படித் தான் உணர்கிறேன் (உங்க பை‍பை பதிவுல பெண்கள் பின்னூட்டம் போடலைன்னு சொன்னதால, இப்போ).

பெரியாரின் அரசியல் இறை மறுப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இல்லை, புரட்சி / புரட்சிகரமான சிந்தனைகளை (revolutionary) அடிப்படையாகக் கொண்டது என்பது எ.தா.க. இறை மறுப்பையும் சாதிக் கட்டமைப்பு எதிர்ப்பையும் அவர் பரவலாக எடுத்துச் சென்றது அறிவியல் பூர்வமாகவோ, அகிம்சை மூலமாகவோ அல்ல, அதிரடி மூலமாக. (எனவே, காந்தியாரோடு இவரை இணைக்க முடியாது). நேரமிருந்தால் அப்புறம் விரிவாக எழுத விரும்புகிறேன், பார்க்கலாம்.

நன்றி & வாழ்த்துகள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சக்தி.!
நன்றி ராஜாராமன்.!

நன்றி கும்க்கி.!
நன்றி சுரேகா.!

நன்றி தமிழன்.!
நன்றி ஆசிப்மீரான்.!

நன்றி ராஜராஜன்.! (கொஞ்சம் விளக்கமா சொல்றதில்லையா.. யாராவது தப்பா எடுத்துக்கிட்டாங்கன்னா? அப்படி நான் சொல்லலை.. நண்பர் செய்யதுவின் கருத்து அது.)
நன்றி உஷா.!

நன்றி கெக்கேபிக்குணி.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

//தோள் கண்டார் தோளே கண்டார்’ என்பது போல பெரியாரைப் பற்றிய ஒவ்வொருவரின் கருத்தும் அவர்கள் எங்கு அவரை தெரியத்துவங்குகிறார்களோ அதைத் தாண்டிச் செல்ல முடியாத அளவில் அவரது பிரமாண்டம் அவர்களை விழுங்கிவிடுகிறது//

மிகச்சரி...

எங்க பகுதியில் தி.க கட்சிக்காரர்கள் அதிகம். அவர்கள் ஆதிக்கத்தால், பெரியாரின் கடவுள் மறுப்பும், பார்ப்பன எதிர்ப்பும் மட்டுமே அதிகமாய் தெரிகிறது. அவர் சொன்ன பெண்ணுரிமை பற்றிய கருத்துக்கள் வெளிவருவது மிகக் குறைவே.