Sunday, March 22, 2009

கவிதைகள் ஜாக்கிரதை.!

டிஸ்கி : தவிர்க்கவேயியலாத ஒரு காரணத்தால் நேற்று இணையம் பக்கம் வர இயலவில்லை. அதனால் நட்சத்திர நாள் ஒன்று காலியாகிவிட்டது. இன்றும் பிஸி என்பதாலும் வேறு பதிவு ஸ்டாக் இல்லாததாலும் முதல்முத்தம் கவிதைப்பக்கத்துக்காக வைக்கப்பட்டுள்ள சில கவிதைகளைத் தந்து எஸ்கேப்பாகிறேன். ஒழுங்காக பாராட்டி பின்னூட்டமிட்டுச் செல்லவும். ஓட்டு கூட போடலாம், தப்பில்லை.

கவிதைகள் ஜாக்கிரதை.!

flower 1

காதல் மழையாக
பொழிவதால்தான்
பூக்கள் இதழ்விரிகின்றன
காதல் இங்கிருந்து வெளியேறும் போது
அதனுடனேயே
பூக்களும் வெளியேறிவிடும்.

********

ladies finger

காதலைச் சமன்செய்யும்
பொறாமையும் உன் மீது உண்டு
பச்சைப்பெட்டியில் வெள்ளைமுத்துக்கள் என்றபடியே
குழந்தைகளின் உலகில்
எளிதில் நுழைந்துவிடுகிறாய்
அது எப்போதுமே முடிவதில்லை என்னால்.!

********

Girl 2

காலங்களைக் கடந்தும் பயணிக்கிறாய் நீ..
எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு
மீண்டும்
உன்னிலிருந்து தொடங்க
ஒரே ஆவலாயிருக்கிறது.!

********

love make

கண்ணில்லாதவன் போலத்தான்
கற்பனை செய்து வைத்திருந்தேன்
அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..
பிரமித்துப் போய்விட்டேன்.!

.

33 comments:

அத்திரி said...

//தவிர்க்கவேயியலாத ஒரு காரணத்தால் நேற்று இணையம் பக்கம் வர இயலவில்லை.//

ம்ஹும்.... அப்படியா சொல்லவேயில்லை

அத்திரி said...

//பச்சைப்பெட்டியில் வெள்ளைமுத்துக்கள் என்றபடியே//

அருமையான வரிகள் அண்ணே

அத்திரி said...

//தவிர்க்கவேயியலாத ஒரு காரணத்தால் நேற்று இணையம் பக்கம் வர இயலவில்லை. //

நேத்து எங்க அண்ணே போயிருந்தீங்க...............சும்மா கேட்டேன் அண்ணா

அத்திரி said...

//கண்ணில்லாதவன் போலத்தான்
கற்பனை செய்து வைத்திருந்தேன்
அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..
பிரமித்துப் போய்விட்டேன்.!//


இவ்ளோ நாளும் எங்க அண்ணே இந்த வரிகளை ஒளிச்சி வச்சிருந்தீங்க

தமிழ் பிரியன் said...

எதிர் பார்த்தது! நல்லா இருக்கு!

தமிழ் பிரியன் said...

///கண்ணில்லாதவன் போலத்தான்
கற்பனை செய்து வைத்திருந்தேன்
அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..
பிரமித்துப் போய்விட்டேன்.!.///
;-)

MayVee said...

nalla irukku boss

pappu said...

கடைசி கவிதை.... பிச்சுட்டீங்க!

மங்களூர் சிவா said...

/
ஒழுங்காக பாராட்டி பின்னூட்டமிட்டுச் செல்லவும்.
/
சரிங்

மங்களூர் சிவா said...

அத்திரி said...

//கண்ணில்லாதவன் போலத்தான்
கற்பனை செய்து வைத்திருந்தேன்
அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..
பிரமித்துப் போய்விட்டேன்.!//


இவ்ளோ நாளும் எங்க அண்ணே இந்த வரிகளை ஒளிச்சி வச்சிருந்தீங்க

மங்களூர் சிவா said...

rippeetu

Mahesh said...

மங்களூர் சிவாவின் பின்னூட்டங்கள்....

ரிப்பீட்ட்டேய்....

அண்ணே... கவிதைகள் ஜாக்கிரதைன்னதும் கொஞ்சம் பயந்துதான் போயிட்டேன் !!! எனக்குதானே தெரியும் எம்பயம் ... ஹி ஹி ஹி ஹி :)))))))

அகநாழிகை said...

//கண்ணில்லாதவன் போலத்தான்
கற்பனை செய்து வைத்திருந்தேன்
அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..
பிரமித்துப் போய்விட்டேன்.!//

என்ன ஒரு கற்பனை. அனுபவித்துப் படித்தேன்.
அருமையான கவிதை ஆதி.

- பொன்.வாசுதேவன்

தராசு said...

படித்தேன், ரசித்தேன்

ஸ்ரீ said...

//காதலைச் சமன்செய்யும்
பொறாமையும் உன் மீது உண்டு//

Attagaasamaana kavidhai aadhi na:)

தமிழன்-கறுப்பி... said...

தாமிராவோ ஆதிமுலகிருஷ்ணனோ எனக்கு இந்தப்பதிவு நிறையப் பிடித்திருக்கிறது...

தமிழன்-கறுப்பி... said...

இன்றைக்கு நான் எழுதிய முதல் பின்னூட்டமும் இதுதான்..

தமிழன்-கறுப்பி... said...

அந்த தளத்துக்கு நான் வருவதேயில்லை அதனால் அடிக்கடி இங்கேயும் எழுதுங்க...

அ.மு.செய்யது said...

//காலங்களைக் கடந்தும் பயணிக்கிறாய் நீ..
எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு
மீண்டும்
உன்னிலிருந்து தொடங்க
ஒரே ஆவலாயிருக்கிறது.!//


இது நல்லா இருந்துச்சுங்க..ரசித்தேன்.

அ.மு.செய்யது said...

//கண்ணில்லாதவன் போலத்தான்
கற்பனை செய்து வைத்திருந்தேன்
அந்த முதல் இரவில் கற்றுத்தந்தாயே நீ..
பிரமித்துப் போய்விட்டேன்.!//

இது எனக்கு பிரியலீங்க..

சந்தனமுல்லை said...

அருமையான கவிதைகள்!

எட்வின் said...

சூப்பர்

karishna said...

கலக்கிடீங்க...தல..சூப்பர்..நச்சுனு இருக்கு

மோனி said...

காதலைப்பற்றி
தாமிரா வோட பார்வை
அழகான கேமராவா இருக்கு ...

ஸ்ரீமதி said...

//காதலைச் சமன்செய்யும்
பொறாமையும் உன் மீது உண்டு
பச்சைப்பெட்டியில் வெள்ளைமுத்துக்கள் என்றபடியே
குழந்தைகளின் உலகில்
எளிதில் நுழைந்துவிடுகிறாய்
அது எப்போதுமே முடிவதில்லை என்னால்.!//

:)))))))

செல்வேந்திரன் said...

சாரி தாமிராண்ணே...

ஸ்ரீதர் said...

super..super..superooo super.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அத்திரி.! (இவ்ளோ நாளும் எங்க அண்ணே இந்த வரிகளை ஒளிச்சி வச்சிருந்தீங்க/// டைரியை பீரோவிலதான் வெச்சிருந்தேன்)
நன்றி தமிழ்.!

நன்றி மேவீ.!
நன்றி பப்பு.!

நன்றி சிவா.!
நன்றி அகநாழிகை.!

நன்றி தராசு.!
நன்றி ஸ்ரீ.!

நன்றி தமிழன்.! (அந்த தளத்துக்கு நான் வருவதேயில்லை அதனால் அடிக்கடி இங்கேயும் எழுதுங்க...// மற்றவங்க வராம ஓடிரப்போறாங்க..)
நன்றி செய்யது.! (இது எனக்கு பிரியலீங்க..// கல்யாணம் ஆயிருச்சா.? இதுக்கெல்லாம் வெளக்கம் கேட்பீங்களே நல்லா..)

நன்றி சந்தனமுல்லை.!
நன்றி எட்வின்.!

நன்றி கிருஷ்ணா.!
நன்றி மோனி.!

நன்றி ஸ்ரீமதி.!
நன்றி செல்வா.! (எதுக்கு ஜாரி.. இவ்ளோ நாளு வராததற்கா? அல்லது இந்த கவிதைகளுக்கான விமர்சனமா?)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீதர்.!

வால்பையன் said...

தலைப்பில் எச்சரிக்கைக்கு நன்றி

ச்சின்னப் பையன் said...

பதிவுலே படங்கள் கொள்ளை அழகு!!!

அவ்வ்வ்வ்

spriyabharathi said...

காலங்களைக் கடந்தும் பயணிக்கிறாய் நீ..
எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு
மீண்டும்
உன்னிலிருந்து தொடங்க
ஒரே ஆவலாயிருக்கிறது.!

nalla iruku.... sollakoodadhu..
anbin uchamnu vena sollalampa

sudhagar said...

arumai...