Wednesday, March 25, 2009

நீரின்றி அமையாது உலகு..

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

(குறள் :16)

மேற்குறித்த குறளுக்கு விளக்கமே தேவையில்லை. ஆழமாக சிந்தித்தால் இதன் தாக்கம் பிரமிப்பையும், பயத்தையும் தரும். இன்று உலகம் நோக்கிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய சவாலும் அதுதான். குடிநீரின் தேவை. 72 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ள இந்த பூமியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே பயன்படுத்தத்தக்க நீர் உள்ளது. அதிலும் நம்மால் அடையமுடிவது 1 சதவீதம் மட்டுமே.

தரமான குடிநீர் இல்லாததால் உலகெங்கும் இறந்துபோகும் குழந்தைகள் ஒரு நாளைக்கு எத்தனை பேர் தெரியுமா? 4500.! மலைக்க வேண்டாம், இன்னும் சில பத்தாண்டுகளில் உலகின் மிக அரிதான பொருளாய் மாறப்போவது தண்ணீர். பொருளாதரம், வாழ்வியல் குறித்த விஞ்ஞானிகளின் சில ஊகங்கள் நம்மை மிகவும் பயமுறுத்துவதாய் இருக்கின்றன. சிறுதுளிப் பெருவெள்ளம் என்பதை நம்புவோம். நம்மால் ஒரு துளி நீர்கூட வீணாகாமல் இருக்க இன்று உறுதியேற்போம்.

தனியொரு மனிதன் தவறாமல் செய்ய இயலக்கூடிய விஷயங்களை நினைவில் கொள்வோம் :

  • ஒரு விநாடிக்கு ஒரு துளி நீரென்றால் ஒரு வருடத்தில் வீணாகும் நீர் 10000 லிட்டர். ஒழுகும் குழாய்களை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
  • தனிமனித தேவைக்கான குளியல், பல்துலக்குதல், காலைக்கடன்களின் போது நீரை மிகச்சரியாக பயன்படுத்துங்கள்.
  • தோட்டம், செடிகளுக்கு சரியான அளவு நீரை அதிகாலையில் அல்லது மாலை நேரத்தில் ஊற்றுங்கள். அப்போது தோட்டமல்லாத தரைப்பரப்புகளில் நீரை சிந்தாமலிருங்கள்.
  • நடைப்பாதை, மற்றும் பிற துடைப்பத்தால் சுத்தம் செய்ய இயலும் இடங்களில் நீரை பயன்படுத்தாதீர்கள்.
  • இன்னும் பல இடங்களிலும் எதிர்காலச் சந்ததியினரை மனதில் கொண்டு சிந்தித்துச் செயல்படுங்கள்.

Water

இன்று உலக தண்ணீர் தினம்.

.

25 comments:

Cable Sankar said...

சரியான நாளில் சரியான பதிவு..
இப்படிக்கு
உலக தண்ணீர் நாளில் கடைசி சொட்டு “தண்ணியை” வேஸ்ட் செய்யாத இந்தியன்.

புதுகைத் தென்றல் said...

தண்ணீரின் அவசியத்தை கூறும் அழகான பதிவு.

அதே சமயம் அச்சத்தையும் தருகிறது. நீரை சேமிப்போம், எதிர்காலத்தை வளமாக்குவோம்.

அ.மு.செய்யது said...

சாலமன் பாப்பையா.

சுகிசிவம்.

வலம்புரி ஜான்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஆதிமூல கிருஷ்ணன். ?!?!?!?!?!?!?!

பரிசல்காரன் said...

ஆதி... ஒரு பிரபலத்தோட வீட்ல உட்கர்ந்துகிட்டிருக்கறப்போ ஒரு விளமபரம் பார்த்தேன். நீரைச் சேமியுங்கள் என்ற கேப்ஷன்.

குடையின் படம்.. மேல்பகுதி அப்படியே ரிவர்ஸில் (காற்றடித்தால் திரும்பிக் கொள்ளுமே .. அதுபோல)

நன்றாக இருந்தது.

தராசு said...

//தனியொரு மனிதன் தவறாமல் செய்ய இயலக்கூடிய விஷயங்களை நினைவில் கொள்வோம்//

கொள்கிறேன்.

Anonymous said...

நல்ல, சமுதாய நோக்குள்ள பதிவு.

வெண்பூ said...

நல்ல எச்சரிக்கை பதிவு, சரியான நாளில்..

MayVee said...

need of the hour post

மோனி said...

வழக்கம் போல

சீரிய சிந்தனை...
முறையான பதிவு...
சமுதாயா நோக்கு...

நன்றிகள்
வாழ்த்துகள்

தொடருங்கள் ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

இங்க தாமிரா ந்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்கங்க ?அவர்தான் ஆ.மு.கி யாகி இப்படி நல்ல பதிவெல்லாம் போட்டுகிட்டிருக்காரே.:))))))))))

நல்ல பகிர்வு, மற்றும் பதிவு

அத்திரி said...

பெயரில் தான் மாற்றம் அப்படினு நினைச்சேன்... ஒவ்வொரு பதிவும் அதிரடி மாற்றங்கள்.இன்றைக்கு எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு

அத்திரி said...

அப்புறம் என்ன அண்ணே நம்ம கட பக்கம் ஆளையே காணோம்... அடுத்த வாட்டி இப்படியெல்லாம் கூப்பிடமாட்டேன்..ஆங்........ஜாக்க்க்க்க்க்க்க்க்கிரதை

ஜீவன் said...

நல்ல தேவையான பதிவு!

(நமக்கு தண்ணின்னா ''தண்ணிதான்'' நினைவுக்கு வருது!)

ச்சின்னப் பையன் said...

நல்ல தேவையான பதிவு!

வால்பையன் said...

அண்ணே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியவா மாறி விட்டேன்!

எல்லா பைப்பையும் சரி பார்த்த பின் தான் வந்து பின்னூட்டம் போடுறேன்!

sundarrajan said...

நல்ல, சமுதாய நோக்குள்ள பதிவு

thamizh said...
This comment has been removed by the author.
அதிலை said...

"உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள்" எங்கேயோ படித்தது
உங்கள் பதிவை படித்ததும் அதுதான் ஞாபகம் வருகிறது. நானும் தண்ணீரை பற்றி பதிவிட்டிருக்கிறேன். முடிந்தால் படியுங்கள்.

ஸ்ரீதர் said...

நல்ல பதிவு .கண்டிப்பாக என்னால் முடிந்தவரை கடைபிடிக்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கொஞ்சம் பிஸி என்பதால் யாருடைய பதிவுக்கும் வர நேரமில்லை.. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.. தொடரும் ஆதரவுக்கு நன்றி.!

நன்றி கேபிள்.!
நன்றி தென்றல்.!
நன்றி செய்யது.!
நன்றி பரிசல்.!
நன்றி தராசு.!
நன்றி வேலன்.!
நன்றி வெண்பூ.!
நன்றி மேவீ.!
நன்றி மோனி.!
நன்றி அமித்துஅம்மா.! (பிறரைப்போல அழகாக ஆதி என்றழைக்கலாமே தோழி)
நன்றி அத்திரி.!
நன்றி ஜீவன்.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி வால்.! (உண்மையில் மகிழ்கிறேன் தோழர்)
நன்றி சுந்தர்.!
நன்றி அதிலை.!
நன்றி ஸ்ரீதர்.!

கும்க்கி said...

:-))
வாழ்க வளமுடன்.
நாம் எந்த தண்ணியவும் வேஸ்ட்டே பன்றதில்லை.

தர்ஷன் said...

விஷயமுள்ள பதிவு
சர்வதேச குடிநீர் தினம் கொண்டாடப்பட்ட பொருத்தமான வேளையில்

மங்களூர் சிவா said...

Excellent post

அமிர்தவர்ஷினி அம்மா said...

சரிங்க ஆதி

ராமலக்ஷ்மி said...

தலைப்பும் குறளும் சொல்லியிருக்கும் கருத்துக்களும் வெகு சிறப்பு.

கடந்த வருட இடுகையாயினும் இதன் சுட்டியையும் வின்சென்ட் அவர்கள் பதிவில் சேர்ப்பித்து விடுகிறேன்.

தண்ணீருக்கென ஒரு தினம் இருப்பதே எனக்கு முத்துலெட்சுமி இடுகை மூலமாக இப்போதுதான் தெரியவந்தது.