Friday, March 20, 2009

யேய்.. பேசிட்டிருக்கேன்ல.. சைலன்ஸ்.!

என்னை தொடர்ந்து நீங்கள் வாசிப்பவராக இருந்தால் எனது கோபம் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஆக்ரோஷமாக ரமாவுடனும், கண்ணனுடனும் மோதிய எனது வீரசாகசங்களையும் கோப‌தாபங்களையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ரமா ஒருநாள் என் ஷர்ட்டை அயர்ன் பண்ணித்தராத கோபத்தில் அவள் சேலை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அயர்ன் பண்ணிவைத்துவிட்டேன். இன்னொருநாள் நான் வாங்கிவந்த கத்தரிக்காயில் சொத்தையிருந்ததால் திட்டிய ரமாவிடம் கோபப்பட்டு கடைகடையாக ஏறி இறங்கி ரெண்டு கிலோ சொத்தையில்லாத கத்தரிக்காய் வாங்கிவந்தேன். மற்றொருநாள் பூரி செய்ய நேரமில்லை என்று அவள் சொன்னதால் கோவத்தில் நானே மாவு பிசைந்து இருபத்துமூன்று பூரிகள் சுட்டு சாதனை செய்தேன். இப்படி என் கோப, வீரச்செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இவ்வாறாக‌ வீட்டில் மட்டுமல்ல ஆபிஸ்லயும் நான் ஒரு பயங்கரக் கோவக்காரன்தான். 'ஏன் இன்னிக்கு அஞ்சி நிமிஷம் லேட்டு?'ன்னு எங்க மானேஜர் கேட்டுட்டாருன்னா பயங்கரமா கோவப்பட்டு மறுநாள் அரைமணி நேரம் முன்னாடியே வந்துடுவேன். 'ஏன் பிப்ரவரி ரிப்போர்ட்டை இன்னும் அவருக்கு அனுப்பலை.?' என்று கேட்டால் கோவப்பட்டு பிப்ரவரி 2008 லிருந்து ரிப்போர்ட் பிரிப்பேர் பண்ணி உடனே மூணுவாட்டி மெயில் பண்ணிவிடுவேன். அதுமாதிரி வெளியூர் போயிருக்கும்போது ட்ரெயின் டிக்கெட் கன்பர்ம் ஆகலைன்னா பிளைட்ல வரமுடியாதுன்னு கோவப்பட்டு பஸ்லயே வந்து மறுநாள் டைமுக்கு ஆபிஸுக்கும் போயிடுவேன். ஒருநாள் காபி மிஷின் ரிப்பேர் ஆனபோது கோவத்தில் அன்னிக்கு பூரா காபியே குடிக்கலைன்னா பாத்துக்கங்களேன்..

இதெல்லாம் தவிர்த்து சக ஊழியர்களிடம் மட்டும் கொஞ்சம் அன்போடு நடந்துகொள்வேன். இப்படித்தான் நேற்று எனது அறையில் லஞ்சுக்கு அழைக்கவந்த சக ஊழியர் படை அரட்டையில் ஈடுபட்டிருந்தது. அலுவலகமா? சந்தைக்கடையா என்பது போல இரைச்சல். ஒரு முக்கிய போன்கால் வந்ததால் அதை நான் அட்டெண்ட் பண்ணிக்கொண்டிருக்க எனக்காக வெயிட் பண்ணும் நேரத்தில்தான் இந்தக்கூச்சல்.. ஏற்கனவே செல்போன் பேசிப்பேசி இடதுபக்க காதே ஓட்டையாகிவிட்டதோ என்று சந்தேகமாக உள்ளது. இந்த லட்சணத்தில் எனது அறையிலிருந்த போனில் ஏதோ பாதாள உலகத்தை தொடர்பு கொள்வது போல எதிராளியின் குரல் அடியாளத்தில் இருந்து கேட்கும். காதுக்குள்ளேயே திணித்துவிடுவதைப்போல போனை அழுத்திப்பிடித்து பேசிக்கொண்டிருந்தேன். இந்தச்சூழலில்தான் இந்த மகா இரைச்சல்.. வந்த கடும் கோபத்தில்..

"யேய்.. பேசிட்டிருக்கேன்ல.. சைலன்ஸ்.!" என்று கத்தினேன்..

வழக்கமாக சட்டென அமைதியாகிவிடும் சூழல்.. இன்று கெக்கேபிக்கேவென சிரிக்கத்துவங்கியது.. நான் முழித்துக்கொண்டிருந்தேன்.

.

55 comments:

அமர பாரதி said...

பதிவு அருமை தாமிரா. முக்கியமாக உங்கள் கோப, வீராவேசங்கள் தான் உங்களை நீங்களாக வைத்திருக்கிறது. அதை விட்டு விடாதீர்கள். ;-)

மோனி said...

சைலென்ஸ் தொந்தரவு ஆரம்பிச்சுடுச்சா ?
அவ்வ்வ்வ் .

அன்புடன் அருணா said...

ஏனப்பா மனுஷனுக்கு கோவம் வரக் கூடாதா? இப்படிப் போட்டுக் காய்ச்சு எடுக்கறீங்களே????
அன்புடன் அருணா

மோனி said...

இவ்வளவு கோவக்கார ஆளாப்பா நீ ?
பயமா இருக்கு ...
அவ்வவ்
- மோனி

தமிழ் பிரியன் said...

ஆதியின் கோபம் என்று பதிவுகள் பறந்தாலும் பறக்கலாம் போல இருக்கு... :)))

மணிகண்டன் said...

Point made thamira.

இராகவன் நைஜிரியா said...

நமெக்கெல்லாம் கோபம் எதுக்கு..

சமத்தா இருக்க வேண்டாமோ..

கோபத்தால் நாம் தான் கஷ்டப்படணும்.. இப்போ சிரிப்பாயிடுச்சுப் பாருங்க.. கேலி பொருளாயிட்டீங்க பாருங்க..

Anonymous said...

ஆ”தீ”?

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))

அத்திரி said...

உங்க கோபம் எப்படினு எனக்கு தெரியும்ணே!!!!!!!

மனோ said...

ஆ”தீ”மூலகிருஷ்ணன் அண்ணா நமெக்கெல்லாம் கோபம் எதுக்கு.. ஹி ஹி ஹி ..

Kathir said...

:))

எம்.எம்.அப்துல்லா said...

"யேய்.. படிச்சுக்கிட்டு இருக்கேன்ல.. சைலன்ஸ்.!"

:))

Mahesh said...

அடியாத்'தீ'... இம்புட்டு கோவக்கார ஆளா நீரு? இனிமே கவிதை எழுதமாட்டேம்வெ... பொழச்சுப் போம்!

MayVee said...

"மோனி said...
சைலென்ஸ் தொந்தரவு ஆரம்பிச்சுடுச்சா ?
அவ்வ்வ்வ் ."

periya repeat.......

MayVee said...

neenga nallavara illai migavum nallavara?????

மாசற்ற கொடி said...

you too ஆதி !!!!

கார்க்கி இல்லாத நேரத்துல தைரியமா போடுங்க. வந்ததும் இருக்கு ............


அன்புடன்
மாசற்ற கொடி

நான் ஆதவன் said...

பின்னூட்டம் போடும் போது எவன்டா அது "சைலன்ஸ்....."

தராசு said...

இந்தப் பூவுக்குள்ளா இப்படி ஒரு எரிமலை...., பயந்து போயிட்டேன்

சரி, சரி நடத்துங்க, நடத்துங்க எல்லாம் கார்க்கி வர்ற வரைக்கும்தானே!!!!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

// மாசற்ற கொடி said...
you too ஆதி !!!!

கார்க்கி இல்லாத நேரத்துல தைரியமா போடுங்க. வந்ததும் இருக்கு ............


அன்புடன்
மாசற்ற கொடி
//

அவருதான் ‘இப்படிப் போடுங்க.. அப்பத்தான் நான் வந்தபிறகு எழுத நாலஞ்சு மேடர் கிடைக்கும் சொன்னாருங்க!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

//அவருதான் ‘இப்படிப் போடுங்க.. அப்பத்தான் நான் வந்தபிறகு எழுத நாலஞ்சு மேடர் கிடைக்கும் சொன்னாருங்க!//

மேலே உள்ள கமெண்ட் நான் போட்டதல்ல!

-ஆதி!

பட்டாம்பூச்சி said...

//ஆக்ரோஷமாக ரமாவுடனும், கண்ணனுடனும் மோதிய எனது வீரசாகசங்களையும் கோப‌தாபங்களையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்//
ஆமா ஆமா...எங்களுக்கு தெரியும்னு நெனச்சு முடிக்கறதுக்குள்ள கீழேயே பல உதாரணங்கள் :).

//அடியாளத்தில்//
"அடியாழத்தில்" ?

டக்ளஸ்....... said...

\\ரமா ஒருநாள் என் ஷர்ட்டை அயர்ன் பண்ணித்தராத கோபத்தில் அவள் சேலை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அயர்ன் பண்ணிவைத்துவிட்டேன். இன்னொருநாள் நான் வாங்கிவந்த கத்தரிக்காயில் சொத்தையிருந்ததால் திட்டிய ரமாவிடம் கோபப்பட்டு கடைகடையாக ஏறி இறங்கி ரெண்டு கிலோ சொத்தையில்லாத கத்தரிக்காய் வாங்கிவந்தேன். மற்றொருநாள் பூரி செய்ய நேரமில்லை என்று அவள் சொன்னதால் கோவத்தில் நானே மாவு பிசைந்து இருபத்துமூன்று பூரிகள் சுட்டு சாதனை செய்தேன்.\\

வள்ளுவன் சொன்ன தமிழனய்யா நீர்.....
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண‌
நண்ணயம் செய்து விடல்"
இந்த குரலுக்கு சாரி..குறளுக்கு நீங்கதான் இலக்கணமா...?

குசும்பன் said...
This comment has been removed by the author.
Sathik Ali said...

ஃபோனில் மறுமுனையில் இருந்தவர் நிலை என்ன? அவரும் அதுக்கப்பறம் வாய் திறந்திருக்க மாட்டாரே.

KS said...

superb writing .
how come you guys are enjoying his anger in screen but not in an interview.

இராம்/Raam said...

சூப்பரு... :)

gayathri said...

ரமா ஒருநாள் என் ஷர்ட்டை அயர்ன் பண்ணித்தராத கோபத்தில் அவள் சேலை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அயர்ன் பண்ணிவைத்துவிட்டேன்

ithu super

இராம்/Raam said...

அட பின்னூட்டமிட்டவரின் பெயர்கள் தெரியலை போலே.....

இந்த பதிவை படிச்சி சரி பண்ணுங்க பாஸ்.. :)

குசும்பன் said...

:)

நிலாரசிகன் said...

:)

narsim said...

டைமிங்ங்ங்ங்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா கோபப்படறாங்கய்யா நாட்டுல :)

அசோசியேட் said...

சரியான நேரம் சரியான பதிவு.

வெயிலான் said...

சும்மா இருக்கிற கார்க்கிய சீண்டிப் பார்க்கிறீங்க. இது நல்லதுக்கில்லை.

மஞ்சூர் ராசா said...

நானும் அடிக்கடி இந்த மாதிரிக்கோபப்படுவேன்.
பாத்திரம் எல்லாம் கழுவாமல் வைத்திருந்தால் எனக்கு ரொம்ப கோவம் வரும். அப்புறம் நானே கழுவிவைத்து என் கோபத்தை தீர்த்துக்கொள்ளுவேன். துணிகள் மடக்காமல் இருந்தாலும், பாத்ரூம் கழுவப்படாமல் இருந்தாலும் இம்மாதிரி மகாக்கோபம் வரும்.

ஜெகதீசன் said...

:)

நவநீதன் said...

//'ஏன் பிப்ரவரி ரிப்போர்ட்டை இன்னும் அவருக்கு அனுப்பலை.?' என்று கேட்டால் கோவப்பட்டு பிப்ரவரி 2008 லிருந்து ரிப்போர்ட் பிரிப்பேர் பண்ணி உடனே மூணுவாட்டி மெயில் பண்ணிவிடுவேன்.//

ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் கோபம்.

ரொம்ப நல்லாயிருக்கு.

மங்களூர் சிவா said...

/
என்னை தொடர்ந்து நீங்கள் வாசிப்பவராக இருந்தால் எனது கோபம் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஆக்ரோஷமாக ரமாவுடனும், கண்ணனுடனும் மோதிய எனது வீரசாகசங்களையும் கோப‌தாபங்களையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
/

அண்ணே 'விழுப்புண்களை' விட்டுட்டீங்களே!?!?!?

:)))))))))))))))))))))

மங்களூர் சிவா said...

/
டக்ளஸ்....... said...

\\ரமா ஒருநாள் என் ஷர்ட்டை அயர்ன் பண்ணித்தராத கோபத்தில் அவள் சேலை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அயர்ன் பண்ணிவைத்துவிட்டேன். இன்னொருநாள் நான் வாங்கிவந்த கத்தரிக்காயில் சொத்தையிருந்ததால் திட்டிய ரமாவிடம் கோபப்பட்டு கடைகடையாக ஏறி இறங்கி ரெண்டு கிலோ சொத்தையில்லாத கத்தரிக்காய் வாங்கிவந்தேன். மற்றொருநாள் பூரி செய்ய நேரமில்லை என்று அவள் சொன்னதால் கோவத்தில் நானே மாவு பிசைந்து இருபத்துமூன்று பூரிகள் சுட்டு சாதனை செய்தேன்.\\

வள்ளுவன் சொன்ன தமிழனய்யா நீர்.....
"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண‌
நண்ணயம் செய்து விடல்"
இந்த குரலுக்கு சாரி..குறளுக்கு நீங்கதான் இலக்கணமா...?
/

ரிப்பீட்டு

கீழை ராஸா said...

//ரமா ஒருநாள் என் ஷர்ட்டை அயர்ன் பண்ணித்தராத கோபத்தில் அவள் சேலை எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் அயர்ன் பண்ணிவைத்துவிட்டேன். இன்னொருநாள் நான் வாங்கிவந்த கத்தரிக்காயில் சொத்தையிருந்ததால் திட்டிய ரமாவிடம் கோபப்பட்டு கடைகடையாக ஏறி இறங்கி ரெண்டு கிலோ சொத்தையில்லாத கத்தரிக்காய் வாங்கிவந்தேன். மற்றொருநாள் பூரி செய்ய நேரமில்லை என்று அவள் சொன்னதால் கோவத்தில் நானே மாவு பிசைந்து இருபத்துமூன்று பூரிகள் சுட்டு சாதனை செய்தேன். இப்படி என் கோப, வீரச்செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம். //

அவ்வ்வ்வுள்ள்ள்ளவு நல்லவராய்யா நீங்க...பின்னே ஏன் இந்த கொலைவெறி....

எம்.ரிஷான் ஷெரீப் said...

தமிழ்மண நட்சத்திரத்துக்கு அன்பான வாழ்த்துக்கள் !

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:)))

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

உங்களுக்கு வருகிற கோபம் நல்லாத்தான் இருக்கு...

சூர்யா said...

சரியான கோபக்காரரய்யா...!!

”நான் முழித்துக்கொண்டிருந்தேன்” என்பதை விட..

”நான் பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தேன்” - ன்னு சொன்னா இன்னும் நல்லாருக்கும்ம்னு தோணுது..

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

வீரத்திலும் உண்மையான வீரம், வாய்மையான வீரம்னு ரெண்டு இருக்கு.... நீங்க சொல்லி இருக்குறதுதான் அடியேனும் பின்பற்றுவது!
இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் சகஜமப்பா!!! :-)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இவ்ளோ கோவம் இருக்கக் கூடாதுண்ணே. கொஞ்சம் குறைச்சிக்கோங்க. :))

//"யேய்.. பேசிட்டிருக்கேன்ல.. சைலன்ஸ்.!" என்று கத்தினேன்..

வழக்கமாக சட்டென அமைதியாகிவிடும் சூழல்.. இன்று கெக்கேபிக்கேவென சிரிக்கத்துவங்கியது.. நான் முழித்துக்கொண்டிருந்தேன். //

இந்த டயலாக் உங்களையும் காமெடியன் ஆக்கிடிச்சா? :))

Kasilingam said...

கோவத்தையும், பாசிட்டிவாக மாற்றிக் காட்டியிருக்கீங்க. இனி இப்படியே செய்வோம்.

Anonymous said...

அடடே!!
உங்க கோபமும் என் கோபம்மாதிரியே இருக்கே

Anonymous said...

கிகிகிகி

ஸ்ரீமதி said...

:))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நட்சத்திர வாரத்துக்கு அமோக ஆதரவு தந்து வெற்றிகரமாக்கித்தந்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..


நன்றி அமரபாரதி.!
நன்றி மோனி.!

நன்றி அருணா.!
நன்றி பப்பு.!

நன்றி தமிழ்பிரியன்.!
நன்றி மணிகண்டன்.!

நன்றி இராகவன்.!
நன்றி வேலன்.!

நன்றி ச்சின்னவர்.!
நன்றி அத்திரி.!

நன்றி மனோ.!
நன்றி கதிர்.!

நன்றி அப்துல்லா.!
நன்றி மகேஷ்.!

நன்றி மேவீ.!
நன்றி மாசற்றகொடி.!

நன்றி ஆதவன்.!
நன்றி தராசு.!

நன்றி பட்டாம்பூச்சி.! (எவ்வளவு கவனமாக இருந்தாலும் இப்படி ஏதாவது நிகழ்ந்துவிடுகிறது. திருத்திவிடுகிறேன். பிழைகளைக் களைய தொடர்ந்து முயல்வேன். மிகுந்த நன்றி.)
நன்றி டக்ளஸ்.!

நன்றி சாதிக் அலி.!
நன்றி கேஎஸ்.!

நன்றி இராம்.! (சுட்டிக்கு ஸ்பெஷல் நன்றி)
நன்றி காயத்ரி.!

நன்றி குசும்பன்.!
நன்றி நிலாரசிகன்.!

நன்றி நர்சிம்.!
நன்றி சுந்தர்ஜி.!

நன்றி அஸோசியேட்.!
நன்றி வெயிலான்.!

நன்றி மஞ்சூர்.!
நன்றி ஜெகதீசன்.!

நன்றி நவநீதன்.!
நன்றி சிவா.!

நன்றி கீழைராஸா.!
நன்றி ரிஷான்.!

நன்றி முத்துலட்சுமி.!
நன்றி தமிழன்.!

நன்றி சூர்யா.!
நன்றி கவுதமன்.!

நன்றி சஞ்சய்.!
நன்றி காசிலிங்கம்.!

நன்றி ஆசிப்மீரான்.!
நன்றி தூயா.!

நன்றி ஸ்ரீமதி.!

வால்பையன் said...

ஹா ஹா ஹா

கரைக்டா வந்து முடிச்சிருக்கிங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்படி என் கோப, வீரச்செயல்களை சொல்லிக்கொண்டே போகலாம்

அட அட

கோபம் வந்தாலும் இப்படியில்ல வரணும். இத விட்டுப்புட்டு மொறைச்சிகிட்டு போறது நல்லாவா இருக்கு.

நீங்க கோபப்பட்டுகிட்டே இருங்க தா...
சாரி ஆ.மு.கி.

நாங்க சிரிச்சிகிட்டே இருக்கோம்.