Tuesday, March 17, 2009

தேர்த்திருவிழா

அது விஸ்வரூபமான திருவாரூர்த்தேரோ.. நெல்லையப்பரின் ஆழித்தேரோ அல்ல.. திருக்கடுக்கை முன்றீஸ்வரரின் குட்டித்தேர்தான். நெல்லை மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்களில் இது போன்ற தேர்கள் தேர்நிலையிலேயே தங்கி விட்ட அவலத்தை இன்றும் காணலாம். இன்னும் சில காலங்களில் அவற்றில் பெரும்பாலானவை மரத்துண்டுகளாக சித‌றி மண்ணோடு மறைந்து போகலாம். ஒரு பெரியார்ப் பிரிய‌னுக்கு ஏன் இந்த தேர்களைப்பற்றிய கவலை?

திருவிழாக்கள்.

கொண்டாட்ட‌ங்க‌ள் ம‌க்க‌ளை உயிர்ப்போடும் ஒற்றுமையோடும் வைத்திருப்ப‌த‌ற்கான‌ கருவிக‌ள். கோயில் திருவிழாக்க‌ள் அவ‌ற்றில் மிக‌ முக்கிய‌மானவை. ஒவ்வொரு கிராமங்க‌ளிலும் ஒவ்வொரு கார‌ண‌ காரிய‌த்துக்காக‌, ப‌ல்வேறு திருவிழாக்க‌ளின் போதும், ப‌ல்வேறு கால‌ இடைவெளிக‌ளில் தேர்வ‌ல‌ம் கொண்டாட‌ப்ப‌டுகிற‌து. வ‌ருட‌ம் ஒருமுறை.. அல்லது நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை என அது இடத்துக்கு இடம் வேறுப‌ட‌லாம். மேற்குறித்த‌ முன்றீஸ்வ‌ர‌ரின் தேர் நான் மேலே சொன்னதைப்போல தேர்நிலையிலேயே தங்கிவிடவில்லை. இன்ற‌ள‌வும் வ‌ருட‌ம் ஒருமுறை கோலாக‌ல‌மாக‌ ஊர்வ‌ல‌ம் வ‌ந்துகொண்டுதான் இருக்கிற‌து.

ஒவ்வொரு விழா நிறைவுறும் போதும் அடுத்த கொண்டாட்டத்தை எதிர்பார்த்துக் கிடக்கும் வயது. தீபாவளியில் பட்டாசுக் கொண்டாட்டம். தொடரும் கார்த்திகையில் சொக்கப்பனை எனும் சுவாரசியம். தமிழர் பெருமையோடு கையில் காசும் புரளும் பொங்கல். ஆவேசம் மிகுந்த கருப்பன் கொடைவிழா. புரட்டாசி சனிக்கிழமை தோறும் சுண்டலும், சர்க்கரைப் பொங்கலுமாக பெருமாள் கோவில் திருவிழா. பயணம் செய்து வருடந்தவறாது பங்குனி உத்திரத்தில் பார்க்கவேண்டிய ஆனைமலை அய்யனார்.. இப்படி வருடம் முழுதும் விழாக்கள் நிறைந்திருக்கின்றன இன்னும் இன்றும் கிராமங்களில்..

இவ்வாறான விழாக்களில் ஒன்றுதான் 11 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படும் மாசித்திருவிழா. ஊரில் நிறைந்திருந்த 11 வகை சாதியாருக்கும் ஒவ்வொரு நாள். இதைப்போன்ற விழாக்கள் சாதிகளை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவிக்கொண்டிருக்கின்றனவா என்பதைப் பற்றிப் பேச  இப்போது நாம் விரும்பவில்லை. இதிலும் ஒரு சுவாரசியம்.. சாதிக்கட்டு 10 நாட்களுக்கே. 11வது நாள் தொழில் முனைவோருக்கு. இருப்பது 10 நாட்கள் ஆனால் சாதிகள் 11. எட்டாவது நாளை எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இரண்டு சாதியினர் பங்கிட்டுக்கொள்கின்றனர் காலங்காலமாக. அன்று மட்டும் இறைவனுக்கு இரண்டு வேளை பூசனைகள். ஒவ்வொரு நாளும் அந்தந்த சாதியினரின் ஆர்வத்துக்கேற்றபடி கரகம், பாட்டுக்கச்சேரி, கோவில் வாசலில் திரை கட்டி சினிமா திரையிடுதல் என்று கொண்டாட்டங்கள் களைகட்டும். ஒரு காலகட்டத்தில் சினிமா மோகத்தில் அத்தனை நாட்களிலுமே சினிமா பார்க்க நேரிட்டது.. பெரும்பாலும் ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’ அதுவும் வருடாவருடம் அதே படங்கள். சாமியின் சப்பரம் கோவில் திரும்பிய பின்னரே இரவு 11 மணிக்கு துவங்கும் படங்களையும் பொறுமையோடு காத்திருந்து பார்த்தனர் மக்கள். 11 வது நாள் தொழிமுனைவோராதலால் இரண்டு புதிய படங்களையும், அரைமணிநேரம் தாங்குமளவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் காணலாம்.

குறிப்பிடத்தகுந்த 9ம் நாள் தேரோட்டம். அது அந்நாளுக்குரிய சாதியினருக்கு என்று மட்டுமல்லாமல் அனைவரும் பங்கு பெற கோலாகலமாக அரை கிமீ பயணம் செய்து மீண்டும் நிலை வந்து சேரும் தேர்.

june14c

பல வருடங்களுக்கு முந்தைய அந்த ஒரு நாளில் வழுவும் அரைக்கால் சட்டையை ஒரு கையால் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் தேரை மிக வலுவுடன் இழுத்துக் கொண்டிருந்தேன்.. நான் இழுப்பதாலேயே தேர் நகர்வதாய் ஒரு எண்ணம். அனைவரும் கயிற்றை கீழே வைத்துவிட்டால் அந்தக்கயிற்றைக்கூட நகர்த்த முடியாது தனியொருவரால்..

இன்றும்  அங்கே அந்த தேர்பவனி நிகழ்கிறது. இங்கே நான் 10 மணிக்கு விழித்தெழுந்து எனது ஞாயிற்றுக்கிழமைக்கு யாரும் உலை வைத்துவிடக்கூடாதே என்ற பயத்துடன் செல்போனைக் கவனித்தபடியே டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

.

29 comments:

Anonymous said...

me the first

புதுகைத் தென்றல் said...

me the second

ராஜ நடராஜன் said...

ரதம் மாதிரி படம் தூள் கிளப்புது.

(நான் மூணாங்கிளாஸ்?)

செந்தழல் ரவி said...

தாமிரா என்னோட ஐடி தெரியுமில்ல...

செந்தழல் ரவி said...

ravi.antone@gmail.com

Anonymous said...

எல்லோருக்கும் விரும்பும் இளமை கால நினைவில் கோவில் திருவிழா கட்டாயம் இருக்கும். குட்.

செந்தழல் ரவி said...

ஸ்டார் ஆனதுக்கு வாழ்த்துக்கள்..

கொஞ்சநாளா பதிவு பக்கம் வரமுடியல்ல. அதான் தாமத வாழ்த்து...

ஸ்ரீமதி said...

Super.. :))

அறிவிலி said...

//நான் இழுப்பதாலேயே தேர் நகர்வதாய் ஒரு எண்ணம். அனைவரும் கயிற்றை கீழே வைத்துவிட்டால் அந்தக்கயிற்றைக்கூட நகர்த்த முடியாது தனியொருவரால்//

துறை சார்ந்த பதிவு போட்டாலும் போட்டீங்க.. எனக்கு எல்லாமே அதுவாவே தெரியுது..

டீம் வொர்க் பத்தி சொல்லியிருக்கீங்களோ?

அ.மு.செய்யது said...

//ஒவ்வொரு விழா நிறைவுறும் போதும் அடுத்த கொண்டாட்டத்தை எதிர்பார்த்துக் கிடக்கும் வயது. தீபாவளியில் பட்டாசுக் கொண்டாட்டம். தொடரும் கார்த்திகையில் சொக்கப்பனை எனும் சுவாரசியம். தமிழர் பெருமையோடு கையில் காசும் புரளும் பொங்கல். ஆவேசம் மிகுந்த கருப்பன் கொடைவிழா. புரட்டாசி சனிக்கிழமை தோறும் சுண்டலும், சர்க்கரைப் பொங்கலுமாக பெருமாள் கோவில் திருவிழா. பயணம் செய்து வருடந்தவறாது பங்குனி உத்திரத்தில் பார்க்கவேண்டிய ஆனைமலை அய்யனார்..//


நேர்த்தியான வார்த்தைச் செறிவு..

அ.மு.செய்யது said...

//இதைப்போன்ற விழாக்கள் சாதிகளை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவிக்கொண்டிருக்கின்றனவா என்பதைப் பற்றிப் பேச இப்போது நாம் விரும்பவில்லை. //

இப்ப‌டி எஸ்கேப் ஆனிங்க‌னா எப்ப‌டிங்க ச‌ர்ச்சைக்குரிய‌ ப‌திவர் லிஸ்ட்ல‌ எட‌ம் பிடிக்க‌ற‌து ???

அட‌ போங்க‌ங்க..

ச்சின்னப் பையன் said...

//இங்கே நான் 10 மணிக்கு விழித்தெழுந்து எனது ஞாயிற்றுக்கிழமைக்கு யாரும் உலை வைத்துவிடக்கூடாதே என்ற பயத்துடன் செல்போனைக் கவனித்தபடியே டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.//

காலச்சக்கரம் வேகமா சுற்றுகிறது...

எம்.எம்.அப்துல்லா said...

//கொண்டாட்ட‌ங்க‌ள் ம‌க்க‌ளை உயிர்ப்போடும் ஒற்றுமையோடும் வைத்திருப்ப‌த‌ற்கான‌ கருவிக‌ள். //

உண்மை!உண்மை!உண்மை!

மாசற்ற கொடி said...

அருமையான பதிவு. ஊர்களின் தனித்தன்மைக்கு இந்த மாதிரி விழாக்களும் ஒரு காரணம்.

ஆமா இந்த வாரம் ஆபீஸ்க்கு லீவா ?

அன்புடன்
மாசற்ற கொடி

அத்திரி said...

//ஒவ்வொரு விழா நிறைவுறும் போதும் அடுத்த கொண்டாட்டத்தை எதிர்பார்த்துக் கிடக்கும் வயது. தீபாவளியில் பட்டாசுக் கொண்டாட்டம். தொடரும் கார்த்திகையில் சொக்கப்பனை எனும் சுவாரசியம். தமிழர் பெருமையோடு கையில் காசும் புரளும் பொங்கல். ஆவேசம் மிகுந்த கருப்பன் கொடைவிழா.//

அழகான மலரும் நினைவுகள் அண்ணே............. லீவு அன்னைக்கு செல் போன பாத்துக்கிட்டே டிவி பாக்குறது கொடுமையான விசயம்...

வெயிலான் said...

Blogger எம்.எம்.அப்துல்லா said...

//கொண்டாட்ட‌ங்க‌ள் ம‌க்க‌ளை உயிர்ப்போடும் ஒற்றுமையோடும் வைத்திருப்ப‌த‌ற்கான‌ கருவிக‌ள். //

உண்மை!உண்மை!உண்மை!

அப்துல்லா அண்ணே! மொத வரி மட்டும் படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடீட்டீங்க போல! :)

வால்பையன் said...

//இங்கே நான் 10 மணிக்கு விழித்தெழுந்து எனது ஞாயிற்றுக்கிழமைக்கு யாரும் உலை வைத்துவிடக்கூடாதே என்ற பயத்துடன் செல்போனைக் கவனித்தபடியே டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.//

எல்லாபக்கமும் இதே கதை தான் போலிருக்கு!

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆனந்த்.!
நன்றி தென்றல்.! (மாமா நலமாக உள்ளாரா?)

நன்றி நடராஜன்.!
நன்றி மயில்.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி அறிவிலி.! (எந்நேரமும் ஆபிஸ் நினைவாகவே இருக்கக்கூடாது)

நன்றி செய்யது.! (‘பிரபல’, ‘மூத்த’.. இந்த பிரச்சினையே பெருசா இருக்குது.. இதுல ‘சர்ச்சைக்குரிய’ வேறயா? தேவைதான்..)
நன்றி ச்சின்னவர்.!
நன்றி அப்துல்.!
நன்றி மாசற்றகொடி.! (எப்படியோ படுக்க லேட்டாகுது.. டிவி கட்.. அவ்வளவுதான், சமாளிக்கிறேன்)

நன்றி அத்திரி.!
நன்றி வெயில்.! (பாம்பின் கால் பாம்பு அறிகிறதா?)

நன்றி வால்பையன்.!

Mahesh said...

நல்ல நினைவோடை....

அடுத்த மாசம் உடுமைலைல மாரியம்மன் தேர்.... போன வருஷம் நண்பரை வீடிய்யோ எடுத்து குடுக்க சொல்லிப் பாத்தேன்.

ஸ்ரீதர் said...

எனக்கெல்லாம் திருவிழான்னா புல்லா சரக்கைப் போட்டுட்டு பிகர் பாக்கறதும் ,ஒரண்ட இழுத்ததும்தான் ,ஞாபகத்துக்கு வருது.நீங்க ரொம்ப நல்லவர் பாசு.

அருமையான பதிவு,வழக்கம் போல.

Dominic RajaSeelan said...

அருமையான பதிவு, அருமையான எழுத்து நடை,

நானும் திருநெல்வேலி காரன்தன்.

நேரம் இருந்த என்னோட பதிவையும் படித்து பாருங்க.
http://makkalai-thedi.blogspot.com/

தமிழன்-கறுப்பி... said...

ஞாபகங்களை கிளறுவதில் ஒரு வகை சுகம் உங்களுக்கு... :)

தேவகோட்டை ஹக்கீம் said...

உங்களுக்கு தேவகோட்டை அருகிலுள்ள கண்டதேவி தெரியுமா? அங்கும் வருடா வருடம் தேர் திருவிழா நடக்கிறது. அச்சமயங்களில் அங்கும்,அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள மக்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அனைத்து ஊர்களும் உங்களது ஊர்போல இருந்திட்டா பிரச்சினையே இல்லை.

சுரேகா.. said...

தமிழ்மண நட்சத்திரமே..!

வாழ்த்துக்கள்!

ஆமாம்.
திருவிழாக்களே ஒரு சுவாரஸ்யம்தான்!

பாபு said...

//இங்கே நான் 10 மணிக்கு விழித்தெழுந்து எனது ஞாயிற்றுக்கிழமைக்கு யாரும் உலை வைத்துவிடக்கூடாதே என்ற பயத்துடன் செல்போனைக் கவனித்தபடியே டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.//

நம்ம எல்லோருடைய நிலைமையும் இதேதான்

தேர் பிடிக்காதவங்க யாராவது இருக்க முடியுமா என்ன?

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்படி வருடம் முழுதும் விழாக்கள் நிறைந்திருக்கின்றன இன்னும் இன்றும் கிராமங்களில்.. இவ்வாறான விழாக்களில் ஒன்றுதான் 11 நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படும் மாசித்திருவிழா.//

இந்த மாசித் திருவிழா சென்னையில் கூட நிறைய கோவில்களில் கொண்டாடப்படுகிறது. நான் கவனித்தது சைதாப்பேட்டையில். நேரமின்மையாலும், அவசரத்தாலும் நாம் அதன் சுவாரசியத்தை நாம் உணரமுடியாமல் கடக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பெரியார்ப் பிரிய‌னுக்கு ஏன் இந்த தேர்களைப்பற்றிய கவலை?
:)-

நான் இழுப்பதாலேயே தேர் நகர்வதாய் ஒரு எண்ணம். அனைவரும் கயிற்றை கீழே வைத்துவிட்டால் அந்தக்கயிற்றைக்கூட நகர்த்த முடியாது தனியொருவரால்.. இன்றும் அங்கே அந்த தேர்பவனி நிகழ்கிறது. இங்கே நான் 10 மணிக்கு விழித்தெழுந்து எனது ஞாயிற்றுக்கிழமைக்கு யாரும் உலை வைத்துவிடக்கூடாதே என்ற பயத்துடன்//
இது போன்ற பயம்தான் நிறைய பேருக்கு...

நா. கணேசன் said...

அன்பின் தாமிரா,

உங்கள் தேர்த்திருவிழா பதிவு என்னை ஈர்த்தது.
1969, 2005 ஆண்டுகளில் எழுதப்பெற்ற இரண்டு
தேர்த்திருவிழாக் கவிதைகள் இங்கே:
http://nganesan.blogspot.com/2009/03/therottam.html

தமிழ்மண விண்மீன் ஆனமைக்கு வாழ்த்து!
நா. கணேசன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எங்கள் ஈழத்துக் கோவில் தேர்த்திருவிழா ஞாபகம் வந்தது. உண்மையில் ஊர் கூடி ஒற்றுமையாக ஒருகாலத்தில் தேர் இழுத்து மகிழ்ந்தது உண்மை. இனிமேல் அப்படி ஒரு காலம் எல்லோருக்கும்
அமையாது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ்.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி ராஜசீலன்.!
நன்றி தமிழன்.!
நன்றி ஹக்கீம்.!
நன்றி சுரேகா.!
நன்றி பாபு.!
நன்றி அமித்துஅம்மா.!
நன்றி கணேசன்.!
நன்றி யோகன்.!