Wednesday, March 4, 2009

நடிகர்கள் Vs பதிவர்கள்

  

 இது சும்மா ஒரு ஜாலி ஒப்பீடு.! இதில் நடிகர்கள் என்பவர்கள் தமிழ் சினிமா ஹீரோக்கள் எனக்கொள்க..

1. அங்கே பெரும்பாலானவர்கள் பாட்டு, ஃபைட்டு, டூயட் என கமர்ஷியல் மொக்கை போடுபவர்களே.! இங்கேயும் பெரும்பாலானவர்கள் மொக்கைப்பதிவர்களே.!

2. அவர்கள், வேறொருவரின் ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதைப்போலவே (சமயங்களில் அதையே) படம் பண்ணுபவர்கள். இவர்கள் வேறொருவரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அதையே தொடர்பதிவு, எதிர்பதிவு என போட்டுத் தாக்குபவர்கள்.

3. இருவருமே கற்பனை வறட்சியில் என்ன பண்ணுவது எனத் தெரியாமல்  முழித்துக்கொண்டிருப்பவர்கள். எந்த ஆங்கிலப்படத்தில் இருந்து, நாவல்களில் இருந்து, பத்திரிகைச்செய்திகளிலிருந்து படத்தை, பதிவை உருவாக்கலாம் என சிந்தித்துக்கொண்டேயிருப்பார்கள். ஹிட் ஃபார்முலா இருவருக்குமே இன்னும் தெரிந்தபாடில்லை.

4. விரும்பியோ, விரும்பாம‌லோ இர‌ண்டு ப‌க்க‌முமே சூப்ப‌ர்ஸ்டார்க‌ள் உண்டு. சமயங்களில் இரண்டு ஸ்டார்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வமுதுண்டு.. இரண்டு பக்கமுமே.!

5. தொட‌ர்ந்து ஃபிளாப்க‌‌ள் கொடுத்தாலும் ப‌ழைய‌ ஹிட்டைப்ப‌ற்றி பேசிப்பேசியே முடிந்த‌ வ‌ரை ஒப்பேற்றுவார்க‌ள்.. இருவ‌ருமே.!

6. அங்கே எஸ்டாபிளிஷ் ஆன‌வ‌ர்க‌ளுக்கு ஓப‌னிங் மாஸ் இருக்கும். ர‌சிக‌ர் கூட்ட‌ம் ஒருவார‌ம் வ‌ரை ப‌ட‌த்தைத் தாங்கிப்பிடிப்பார்கள், இறுதி வெற்றி பப்ளிக் கையில் இருக்கிறது. இங்கே ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்ஸ் 200 ஹிட்ஸ் வ‌ரை தாங்கிப்பிடிப்பார்க‌ள், இறுதி வெற்றி வாச‌க‌ர்க‌ள் கையில் இருக்கிற‌து.

7. அங்கே எக்குத்த‌ப்பாக‌ விள‌ம்ப‌ர‌ம் செய்து ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒப்பேற்றிவிடுவார்க‌ள். இங்கேயும் கேட்சியான‌ த‌லைப்பால் திர‌ட்டிக‌ளில் ரீச்சாகி ஹிட்டாகும் வாய்ப்புள்ள‌து.

8. அங்கே வாரிசுக‌ள் ஆட்சி உண்டு. இங்கேயும் சீனிய‌ர்க‌ளின் முழு ஆசிபெற்ற‌வ‌ர்க‌ள் உண்டு. அங்கேயும் ரிட்டையர்ட் ஆகாமல் படுத்தும் பெருசுகள் உண்டு. இங்கேயும் வயதான சில பெருசுகள் உண்டு

9. அங்கே கதைன்னா என்னா, இயக்கம்னா என்னா, சினிமான்னா என்னான்னு தெரியாமலே காலந்தள்ளுபவர்கள் நிறைய.. இங்கேயும் எழுத்துன்னா என்னா, அதன் வீரியம் என்னான்னே தெரியாதவர்கள் நிறைய.. (அப்பிடின்னா என்னா?)

10. அவ‌ர்க‌ள் இவர்கள் ப‌திவுக‌ளை விம‌ர்சிப்ப‌தேயில்லை.. இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் ப‌ட‌ங்க‌ளை விம‌ர்சித்துக்கொண்டேயிருக்கிறார்க‌ள்.!

70 comments:

கார்க்கி said...

சூப்பர்..

கலக்கல்

அட்டகாசம்

அழகு

அம்சம்

நான் அந்த ரெண்டு ஃபோட்டொவ சொன்னேன்

புதுகைத் தென்றல் said...

எங்கயோ போயிட்டீங்க ஃப்ரெண்ட்.

ஒண்ணும் சொல்ல முடியலை.

ஆனா அதுக்காக விஜய் படமும் கார்க்கி தம்பியின் படமும் போட்டது ஏனோ?

இது மட்டும் தாங்க புரியலை

:( :)))

Mahesh said...

என்னமோ போங்க... இப்பல்லாம் ரொம்ப யோசிக்கிறீங்க :(

நையாண்டி நைனா said...

பத்துக்கு நெத்தியிலே "பத்து" போட்டாதான் போவும் போலே இருக்கே?

கோவி.கண்ணன் said...

ஆகா......10 மோகம் இன்னும் முடியலையா ? விதவிதமாக சிந்திக்கிறிங்களேப்பு !

தாமிரா said...

நன்றி கார்க்கி.!

நன்றி தென்றல்.! (ரெண்டு பக்கத்துக்கும் மொக்கை ரெப்ஸ் வேண்டாமா? அதுக்குதான்)

நன்றி மகேஷ்.! (இப்பிடில்லாம் யோசிச்சாதான் பதிவு ஹிட் ஆவுது. பாருங்க.. நேத்து ஒரு உருப்பிடியான பதிவு போட்டேன். ஒரு நாதியைக்காங்கலை)

நன்றி நைனா.! (இதெல்லாம் அரசியல்ல சாதாரணங்க‌..)

தாமிரா said...

வாங்க கோவிஜி.!

சந்தனமுல்லை said...

//அவ‌ர்க‌ள் இவர்கள் ப‌திவுக‌ளை விம‌ர்சிப்ப‌தேயில்லை.. இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் ப‌ட‌ங்க‌ளை விம‌ர்சித்துக்கொண்டேயிருக்கிறார்க‌ள்.!//

LOL!

தாமிரா said...

எட்டாவது பாயிண்டை அனுஜன்யாவையும், வடகரை வேலனையும் மனதில் வைத்துதான் எழுதினீர்களா என்று போனில் கேட்ட பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன்.

வெட்டிப்பயல் said...

பதிவு சூப்பர்...

தாமிரா said...

வாங்க முல்லை மேடம்.!

வெட்டிப்பயல் said...

//8. அங்கே வாரிசுக‌ள் ஆட்சி உண்டு. இங்கேயும் சீனிய‌ர்க‌ளின் முழு ஆசிபெற்ற‌வ‌ர்க‌ள் உண்டு. அங்கேயும் ரிட்டையர்ட் ஆகாமல் படுத்தும் பெருசுகள் உண்டு. இங்கேயும் வயதான சில பெருசுகள் உண்டு//

வயசானாலும் யூத்தாக காட்டி கொள்ளும் பெருசுகள் உண்டுனு வந்திருக்கனுமோ? ;)

தாமிரா said...

எல்லோருக்கும் இன்னிக்கு மின்னல் வேகத்துல நன்றி சொல்றதுன்னு முடிவுபண்ணியிருக்கேன்.. நன்றி வெட்டிசார்.!

தாமிரா said...

வயசானாலும் யூத்தாக காட்டி கொள்ளும் பெருசுகள் உண்டுனு வந்திருக்கனுமோ?// கரெக்டா சொன்னீங்க..

வெட்டிப்பயல் said...

//நன்றி வெட்டிசார்.!//

ஓ.. நோ...

வெட்டி சார் எல்லாம் இல்லை... வெட்டினு மட்டும் சொன்னா போதும் :)

ஜீவா said...

நல்லா இருக்கு :)

RAD MADHAV said...

மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு கிளையை வெட்டும் துணிவு. கலக்கல்.
எல்லாம் ஒ கே. உங்களையும் சேத்துத்தானே?????

தாமிரா said...

நன்றி ஜீவா.!

தாமிரா said...

நன்றி மாதவ்.! அதான் 9தாவது பாயிண்ட சொல்லிருக்கேனே..

புன்னகை said...

நான்காவது பாய்ண்ட் நல்லா இருக்கே!!! இப்படி இங்கயும் நடக்குதா என்ன??? ;-)

எம்.எம்.அப்துல்லா said...

//ஆனா அதுக்காக விஜய் படமும் கார்க்கி தம்பியின் படமும் போட்டது ஏனோ?

இது மட்டும் தாங்க புரியலை

//

வெளக்கமா சொல்லலாம்னு நினைக்கிறேன். வேணாம்.....

எம்.எம்.அப்துல்லா said...

நேரம் திரும்ப நிறையாக் கெடைக்குதோ???

:)))))

வால்பையன் said...

அட அப்படியே பொருந்துதே!
நம்ம சகா கார்க்கி டாக்டர் விஜய்க்கு போட்டியா?

எம்.எம்.அப்துல்லா said...

//இப்பிடில்லாம் யோசிச்சாதான் பதிவு ஹிட் ஆவுது. பாருங்க.. நேத்து ஒரு உருப்பிடியான பதிவு போட்டேன். ஒரு நாதியைக்காங்கலை)
//

இப்பிடி அழகா எழுதுனோமா...500 ஹிட்ஸ் பார்த்தோமான்னு இல்லாம சயின்ஸ் எழுதுறாராமா...ஐன்ஸ்டீனு.

தாமிரா said...

நன்றி புன்னகை.! (நடக்குது..நடக்குது..)

நன்றி அப்துல்.! (ஒரேடியாவும் வேல பாத்தா.. பொயல் வந்துடப்போவுது)

நன்றி வால்.! (எ..ப்..பி..டி?)

இப்பிடி அழகா எழுதுனோமா...500 ஹிட்ஸ் பார்த்தோமான்னு இல்லாம சயின்ஸ் எழுதுறாராமா...ஐன்ஸ்டீனு// (சோகமா..) ஆமா அப்துல்..

தாமிரா said...

ஸாரிபா.. நானே 25 அடிச்சிட்டேன்.!

LOSHAN said...

wow. சூபர்.. எப்படியெல்லாம் சிந்திக்கிரீங்கப்பூ..

பத்தும் முத்து..

1,3,6,7,9,10 கலக்கல் ரகங்கள்..

இதை நீங்க போட்டாலும் போட்டீங்க.. இனி ஆளாளுக்கு யார் இங்கே பதிவுலக ரஜினி,பதிவுலக கமல்,பதிவுலக ரித்தீஷ்,விஜய்,அஜித் என்று கிளம்பப்போறாங்க.. ;)

ஆனால் திரையுலகில் யாரும் நடிப்புலக அதிஷா,நடிப்புலக தாமிரா,நடிப்புலக நர்சிம் என்று போடுவதில்லையே.. (11ஆவது ஹீ ஹீ)

கார்க்கி said...

// வால்பையன் said...
அட அப்படியே பொருந்துதே!
நம்ம சகா கார்க்கி டாக்டர் விஜய்க்கு போட்டியா//

என் தலைவன் டாக்டர் விஜயை கெளரவிப்படுத்தியதற்கு நன்றி வால்..

இதில் பல உள் அர்த்தம் இருப்பதால் இது கவித்தையாகுமான்னு சுந்தர்ஜியோ அனுஜன்யாவோ சொன்னால் நலம்..

தாமிரா said...

நன்றி லோஷன்.! உங்க 11வது பாயிண்டும் கலக்கல்.

அ.மு.செய்யது said...

//அங்கே எக்குத்த‌ப்பாக‌ விள‌ம்ப‌ர‌ம் செய்து ச‌ம‌ய‌ங்க‌ளில் ஒப்பேற்றிவிடுவார்க‌ள். இங்கேயும் கேட்சியான‌ த‌லைப்பால் திர‌ட்டிக‌ளில் ரீச்சாகி ஹிட்டாகும் வாய்ப்புள்ள‌து.//


இது பாயிண்ட்...

அ.மு.செய்யது said...

//
ரிட்டையர்ட் ஆகாமல் படுத்தும் பெருசுகள் உண்டு. இங்கேயும் வயதான சில பெருசுகள் உண்டு //

அட ஆமாங்க...என்ன மாதிரி சின்ன பசங்களையும் டேக் பண்ணலாம்ல..

முரளிகண்ணன் said...

அசத்தல் தாமிரா. வியந்து சிரித்தேன்

வாழவந்தான் said...

//
அவ‌ர்க‌ள் இவர்கள் ப‌திவுக‌ளை விம‌ர்சிப்ப‌தேயில்லை.. இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் ப‌ட‌ங்க‌ளை விம‌ர்சித்துக்கொண்டேயிருக்கிறார்க‌ள்.!
//
சும்மா ஒரு விளம்பரம்!
நல்ல ஒப்பீடு

தாமிரா said...

நன்றி செய்யது.!(என்ன மாதிரி சின்ன பசங்களையும் டேக் பண்ணலாம்ல..// இந்த வார்த்தையை வாலண்டியரா யூஸ் பண்ணினாலே அப்பன் குதிருக்குள்ள இல்லன்னுதான் அர்த்தம்.)

வாங்க முரளி.!

தாமிரா said...

வாங்க வாழவந்தான்.! (எங்கிருந்து வந்திருக்கீங்க?.. இல்ல வாழவந்திருக்கீங்களேன்னு கேக்குறேன்)

Thamizhmaangani said...

கலக்கிட்டீங்க போங்க...சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...

அ.மு.செய்யது said...

மெய்யாலுமே நான் சி பு.. தாங்கோ..( பெரிசுகளே இதே சொல்லி சொல்லி சின்ன பசங்க சொன்னா நம்ப மாட்டிறாக பாருங்க..)

துண்டு வேணாலும் போட்டு தாண்டுறேன்.

ஆண்ட்ரு சுபாசு said...

என்ன ஒரு கற்பனை வளம்...மிக அருமை ...

ராஜ நடராஜன் said...

no font so peter :)))))

வித்யா said...

அசத்தல். ஆனா அந்த போட்டோ. வேணாம். அப்புறம் கார்க்கி என் கடை பக்கம் வராம் போய்ட்டான்னா??

அனுஜன்யா said...

இரண்டு போட்டோவும் யூத்தா இருக்கேன்னு உள்ள நுழைந்தேன். உள்ள ஏதோ பெருசுங்க சமாச்சாரமாக அறிவுபூர்வமான அலசல் நடக்கிறது. யூத்துக்கு என்ன வேல இங்க அப்பிடீன்னு மீ த எஸ்ஸ்.

ஒரு போட்டோ அப்சல்யூட் யூத். இன்னொன்னு ஏதாவது பிரபல நடிகரா?

அனுஜன்யா

தாமிரா said...

நன்றி மாங்கனி.!
நன்றி சுபாசு.!
நன்றி நடராஜன்.!
நன்றி வித்யா.!
நன்றி அனுஜன்யா.!

Anonymous said...

//தாமிரா said...

எட்டாவது பாயிண்டை அனுஜன்யாவையும், வடகரை வேலனையும் மனதில் வைத்துதான் எழுதினீர்களா என்று போனில் கேட்ட பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன்.//

எழுதிய உன்னையும் கேட்ட பரிசலையும் ஆட்டோவில் வந்த யூத் சார்பாகக் கண்டிக்கிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

10க்கு பத்தில் 10 நச்

என்னவோ போங்க, (அப்பிடின்னா என்னா?)..// கேட்டுக்கிட்டே
எழுதித்தள்ளிக்கிட்டேயிருக்கீங்க.

ஆமா, கார்க்கிக்கு விஜய் புடிக்கும் என்ற எண்ணத்தில் தானே அந்த ஃபோட்டோ.

அறிவிலி said...

உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். உங்களுடைய பதிவுகளுக்கு கீழே வரும் பின்னூட்டங்களில் பெயர் தெரிவதில்லை.ஆனால் "post a comment" அமுத்தியபின் வரும் பக்கத்தில் பெயர்கள் தெரிகின்றன.

பரிசல்காரன் said...

Super Thamira..

Antha Photo Karki upload panninaana?

ngoyyaala!!

narsim said...

எம்.எம்.அப்துல்லா said...
//இப்பிடில்லாம் யோசிச்சாதான் பதிவு ஹிட் ஆவுது. பாருங்க.. நேத்து ஒரு உருப்பிடியான பதிவு போட்டேன். ஒரு நாதியைக்காங்கலை)
//

இப்பிடி அழகா எழுதுனோமா...500 ஹிட்ஸ் பார்த்தோமான்னு இல்லாம சயின்ஸ் எழுதுறாராமா...ஐன்ஸ்டீனு.
//

இவர நாடு கடத்துங்கப்பா..

....

தாமிரா.. கலக்கல் பதிவு.. 1,2,3,4,5,8,9,6,10,7 பாயிண்டுகள் அட்டகாசம்..

narsim said...

//ஆனால் திரையுலகில் யாரும் நடிப்புலக அதிஷா,நடிப்புலக தாமிரா,நடிப்புலக நர்சிம் என்று போடுவதில்லையே.. (11ஆவது ஹீ ஹீ)//

வாங்க லோஷன் தலைவா..வாழ்க

narsim said...

புதுகைத் தென்றல் said...
எங்கயோ போயிட்டீங்க ஃப்ரெண்ட்.

ஒண்ணும் சொல்ல முடியலை.

ஆனா அதுக்காக விஜய் படமும் கார்க்கி தம்பியின் படமும் போட்டது ஏனோ?
//

கார்க்கியோட தம்பியும் கார்க்கி மாதிரியே இருக்காப்லயே..

Truth said...

10. அவ‌ர்க‌ள் இவர்கள் ப‌திவுக‌ளை விம‌ர்சிப்ப‌தேயில்லை.. இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் ப‌ட‌ங்க‌ளை விம‌ர்சித்துக்கொண்டேயிருக்கிறார்க‌ள்.!

நல்லாச் சொன்னீங்க போங்க.

MayVee said...

he he he he
ha ha ha ha

nalla irukku

ச்சின்னப் பையன் said...

:-))))))))

தாமிரா said...

வாங்க யூத் நம்பர் 1..!
வாங்க அமித்து அம்மா.!

வாங்க அறிவிலி.! (எப்பிடி சரிபண்றதுன்னு புர்ல ஃப்ரென்ட்.!)

வாங்க பரிசல்.!
வாங்க நர்சிம்.!

வாங்க ட்ரூத்.!
வாங்க மேவீ.!

வாங்க ச்சின்னவர்.!

குசும்பன் said...

பதிவு அட்டகாசம், கார்க்கி போட்டோவும் ஓக்கே! ஏன் அந்த வி....போட்டோவ போட்டு எனக்கு வாமிட் வரவெச்சீங்க?:(((

கும்க்கி said...

:-))
ஹூம்...வெய்யகாலம் இஸ்டார்ட் ஆகிப்போச்சு மாமே.

Anonymous said...

இப்படியே போட்டு பதிவை ஹீட் ஆக்கிட்டீங்க. பின்னிட்டீங்க போங்க. அசத்தல் பதிவு. தொடர்ந்து போட்டு தாக்குங்க.

dharshini said...

//ஆனா அதுக்காக விஜய் படமும் கார்க்கி தம்பியின்(sorry karki annan) படமும் போட்டது ஏனோ?

இது மட்டும் தாங்க புரியலை

//
repeat...

ஷாஜி said...

வயசானாலும் யூத்தாக காட்டி கொள்ளும் பெருசுகள் உண்டுனு வந்திருக்கனுமோ?

ஸ்ரீமதி said...

:)))Kalakkal... :))

ஸ்ரீமதி said...

me the 60 :)

பட்டாம்பூச்சி said...

:))))

அத்திரி said...

கலக்கல்

Karthik said...

கலக்கல்ஸ்..! :)))

மங்களூர் சிவா said...

எங்கயோ போயிட்டீங்க ஃப்ரெண்ட்.

மங்களூர் சிவா said...

ஒண்ணும் சொல்ல முடியலை.

மங்களூர் சிவா said...

ஆனா அதுக்காக விஜய் படமும் கார்க்கி தம்பியின் படமும் போட்டது ஏனோ?

மங்களூர் சிவா said...

இது மட்டும் தாங்க புரியலை

மங்களூர் சிவா said...

:( :)))

மங்களூர் சிவா said...

என்னமோ போங்க... இப்பல்லாம் ரொம்ப யோசிக்கிறீங்க :(

பிரியமுடன்.........வசந்த் said...

//4. விரும்பியோ, விரும்பாம‌லோ இர‌ண்டு ப‌க்க‌முமே சூப்ப‌ர்ஸ்டார்க‌ள் உண்டு. சமயங்களில் இரண்டு ஸ்டார்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வமுதுண்டு.. இரண்டு பக்கமுமே.!//

யார் அந்த ஸ்டார்ஸ்