Monday, April 6, 2009

த்ரீ இன் ஒன் (06.04.09)

பதிவர் சந்திப்பு

நாலு நாள்னு சொல்லிட்டு பத்து நாளைக்கும் மேலாக கடையை கவனிக்காம விட்டதுல கடை காத்தாடிவிட்டது. கூட்டத்தையும் காங்கலை, பின்னூட்டத்தையும் காங்கலை. மற்ற கடைகளுக்கும் போய் படித்து பின்னூட்டம் போட்டால் அல்லவா நம்ம கடைக்கும் நாலு பேரு வருவாங்க.. நம்ம கடையை தொறந்து வைக்கவே நேரமில்லையாம், இதுல மற்ற கடைகளுக்கு போக எங்க நேரமிருக்குது? இதச்சொன்னா யாரு நம்புறா.? இந்த லட்சணத்துல கடை சும்மாதானே கெடக்குது.. நமக்கு வேணா லீஸுக்கு தந்துடறீங்களான்னு நேத்து பதிவர் சந்திப்புல என்னை ஒரு பிரபல பதிவர் கேட்டபோது அவரை முறைத்தேன். வழக்கம் போல கடைசியாக சென்றதால் எதிர்பார்த்தபடி புதிய பதிவர்கள் வந்தார்களா என தெரியவில்லை.. ஆனால் சந்திப்பு களைகட்டவில்லை என்பது நிஜம். இருப்பினும் இதுவரை பார்த்திராத டி.வி.ஆர், பாலராஜன்கீதா போன்ற இளம்(?)பதிவர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்தேன். பிற விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இருக்கவே இருக்கிறார் நம்ப டோண்டு சார்.! என்னைப்போய் ‘நம்ப’ கணேஷ் என்று கூட்டத்தில் புரளி கிளப்பிக் கொண்டிருந்த தல.பாலபாரதியை நேரில் கண்டித்தால், மூக்கிலேயே குத்துவார் போல தோன்றியதால் இங்கே வன்மையாக கண்டித்துக் கொள்கிறேன்.

********

ரயில் புறத்தில்..

அடிக்கடி ரயிலில் செல்லும் சூழல் ஏற்படுவதால் சில பல காட்சிகளை காணநேர்கிறது. நேற்று ஹைதராபாத்திலிருந்து சார்மினார் கிளம்பும் நிமிடங்களில் நடக்க இயலாமலிருந்த மிக வயதான ஒரு பெண்மணி, உறவினர் ஒருவரின் உதவியுடன் மிகவும் சிரமப்பட்டு வண்டிக்குள் வந்தார். பழுத்த பழமாக இருந்த வரை அலேக்காக தூக்காத குறையாக தோளில் தாங்கி உள்ளே அழைத்து வந்தது ஒரு இருபது வயது கூட நெருங்கியிருக்காத அல்ட்ராமாடர்ன் ‘ஸ்ட்ராங்’ இளம்பெண். அவரை இருக்கையில் அமரவைத்துவிட்டு படபடவென ‘வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்கோ, மாத்திரையை மறக்காதேங்கோ.. நா இன்னும் பத்து நாள்ளே வருவேன் அங்க..’ என்று பொரிந்துவிட்டு அவரின் கால்களை தொட்டு வணங்கியபோது வண்டி கிளம்பியிருந்தது. இவருக்கு துணையாக வந்த இன்னொரு நடுத்தரவயது பெண்ணை நோக்கி ‘அம்மா.. நன்னா பாத்துக்கோ.. போன் பண்ணுவேன்’ என்று கூறியவாறே ஓடிப்போய் மூவிங்கில் ஸ்டைலாக இறங்கி கையசைத்தார். அவர் அந்த வயதான பெண்மணியின் பேத்தியாக இருக்கவேண்டும். இந்த சின்னவயதில் இவ்வளவு பொறுப்போடும், வாஞ்சையோடும் அவர் நடந்துகொண்டது மனதுக்கு மிக மகிழ்வாய் இருந்தது. நம்புங்கள்.. இப்படியும்கூட பெரியவர்கள் மீது அன்பு கொண்டுள்ள அதுவும் அழகான இளம்பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

********

ஐமாக்ஸ் 3D

சென்னை ஐனாக்ஸ் அல்ல இது ஹைதை ஐமாக்ஸ். ஏற்கனவே அனிமேஷன் ‘டாம் ஹாங்க்ஸ்’ நடித்த, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸில் பின்னி எடுக்கப்பட்ட ‘போலார் எக்ஸ்ப்ரஸ்’ என்ற படத்தை இந்த அரங்கில் கண்டிருந்தாலும் இந்த முறை பார்த்த ‘ஸ்பேஸ் ஸ்டேஷன்’ ஒரு பிரம்மாண்டமான, அற்புதமான அனுபவத்தைக் கொடுத்தது. ஏற்கனவே பலதடவைகள் 3D படங்களை நாம் கண்டிருந்தாலும்.. இது இன்னும் துல்லியமான உருவாக்கத்தில் நம்மை பிரமிக்கவைக்கிறது. இது போன்ற படங்களின் தரம் குறையாமல் தரப்பட திரையரங்கில் பயன்படுத்தப்படும்  தொழில்நுட்பமும், அவற்றின் பராமரிப்பும் முக்கிய காரணிகள் என்பதை உணர்ந்தேன். 50 நிமிடங்களே ஓடும் சிறிய படமென்றாலும் ஹைதராபாத் செல்பவர்களும், முக்கியமாக குழந்தைகளும் தவறவிடக்கூடாத படமாக இதை நான் கருதுகிறேன்.

.

23 comments:

தராசு said...

//ஆனால் சந்திப்பு களைகட்டவில்லை என்பது நிஜம்.//

நீங்க கலந்து கொண்டும் கூடவா களைகட்டவில்லை!!!!!!?????

//சின்னவயதில் இவ்வளவு பொறுப்போடும், வாஞ்சையோடும் அவர் நடந்துகொண்டது மனதுக்கு மிக மகிழ்வாய் இருந்தது.//

வாசித்ததில் மனதுக்கு மிக மகிழ்வாய் இருந்தது.

Cable Sankar said...

நான் ரெண்டு முறை சென்றும் ஜமாக்ஸை மிஸ் செய்துவிட்டேன். ஆதி

Anonymous said...

பொம்பள பசங்க எப்பவும் பொருப்பதான் இருப்பாங்க... இதுல என்ன அதிசயம்.

அதிஷா said...

ஏன்டா அனுப்பலை?

நீங்க கேக்க சொன்னீங்க கேட்டுட்டேன்?

அதிஷா said...

ஏன்டா அனுப்பலை?

நீங்க கேக்க சொன்னீங்க கேட்டுட்டேன்?

T.V.Radhakrishnan said...

///இருப்பினும் இதுவரை பார்த்திராத டி.வி.ஆர், பாலராஜன்கீதா போன்ற இளம்(?)பதிவர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.///

மூத்த(!!) பதிவரான உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி

அனுஜன்யா said...

வெல்கம் பாக். இதே ரயிலில் இன்னொரு முதியவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்த இளைஞனை உங்கள் கண்கள் பார்த்திருக்க நியாயமில்லை.

(கார்க்கி சொல்லச் சொன்னான். சொல்லிவிட்டேன்)

அனுஜன்யா

Suresh said...

அழகான இளம்பெண்கள்

ஹ ஹா :-) அதான் பார்த்து ஒரு பதிவும் வந்துடுச்சு

//ஆனால் சந்திப்பு களைகட்டவில்லை என்பது நிஜம்.//

ஏன் .. என்ன ஆச்சு ..

//சின்னவயதில் இவ்வளவு பொறுப்போடும், வாஞ்சையோடும் அவர் நடந்துகொண்டது மனதுக்கு மிக மகிழ்வாய் இருந்தது.//

அருமை .. நல்லவங்க இருக்க தானே செய்ராங்க

கார்க்கி said...

//இப்படியும்கூட பெரியவர்கள் மீது அன்பு கொண்டுள்ள அதுவும் அழகான இளம்பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.//

ரைட்டு...

கார்க்கி said...

/நான் ரெண்டு முறை சென்றும் ஜமாக்ஸை மிஸ் செய்துவிட்டேன். ஆதி/

ஹைதையில் அதை விட முக்கியமானதையே நீங்க மிஸ் பண்றீங்க

அறிவன்#11802717200764379909 said...

\\வெல்கம் பாக். இதே ரயிலில் இன்னொரு முதியவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்த இளைஞனை உங்கள் கண்கள் பார்த்திருக்க நியாயமில்லை.

(கார்க்கி சொல்லச் சொன்னான். சொல்லிவிட்டேன்)

அனுஜன்யா\\

அதே...அதே....

Venkatesh subramanian said...

//சின்னவயதில் இவ்வளவு பொறுப்போடும், வாஞ்சையோடும் அவர் நடந்துகொண்டது மனதுக்கு மிக மகிழ்வாய் இருந்தது.//
கண்டிப்பக இது சந்தோச படவேண்டிய விசயம் தான்.மற்றபடி ஒரு முறை தான் ஜமாக்ஸ் சென்றேன் ஆனால் காட்சி நேரம் சொதப்பியதால் படம் பார்க்கமுடியாமல் போய் விட்டது. அடுத்த முறை கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டும்.

கும்க்கி said...

:-))

வனம் said...

வணக்கம் ஆதி

ம்ம்ம் என்னடா இது கொஞ்ச நாளா ஆள காணும்னு பாத்தேன்

சரி முதல் முறையா பதிவு போட்டிருக்கேன் கொஞ்சம் பாக்கவும்

வரும் 12-ம் தேதி துபாயிலிருந்து சென்னை வருகின்றேன்

நன்றி
இராஜராஜன்

Mahesh said...

ஐமாக்ஸ் ஐமாக்ஸ்தான்.... தனி அனுபவம் !!!

உங்க கடை காத்தாடுனது பத்தி எழுதிருக்கீங்க... நம்ம கடையும் ஒரு வாரமா திறக்கலயா... கதவுல "....K reserved"ன்னு எழுதிட்டுப் போயிருக்காங்க... அவ்வ்வ்வ்வ்...

அ.மு.செய்யது said...

//நம்புங்கள்.. இப்படியும்கூட பெரியவர்கள் மீது அன்பு கொண்டுள்ள அதுவும் அழகான இளம்பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
//

உண்மை தாங்க..அது போன்ற நல்ல உள்ளங்களை தாங்க இன்னி வரைக்கும் தேடிட்ருக்கேன்.கிடைக்க மாட்டேங்குறாங்க !!!!!

அத்திரி said...

நீங்க பீரீ ஆகிட்டீங்க நான் நம்புறேன்...............

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தராசு.!
நன்றி கேபிள்.! (அடுத்த முறையாவது மிஸ் பண்ணாதீங்க..)

நன்றி மயில்.! (ஓஹோ..)
நன்றி அதிஷா.! (ஹிஹி.. நா எல்லாத்திலேயுமே கொஞ்சம் ஸ்பீடு.!)

நன்றி டிவிஆர்.!
நன்றி அனுஜன்யா.!
நன்றி சுரேஷ்.!
நன்றி கார்க்கி.!

நன்றி அறிவன்.!
நன்றி வெங்கி.!
நன்றி கும்க்கி.!
நன்றி இராஜராஜன்.!

நன்றி மகேஷ்.! (விட்டா மூஞ்சியிலேயே சின்னம் வரஞ்சுடுவாங்க.. ஜாக்கிரதயா இருக்குணம்ங்க.. அதுவும் நம்ப மாதிரி ஆளுங்க..)
நன்றி அத்திரி.!
நன்றி செய்யது.! (இங்கப்பாருங்கப்பா.. ஒரு பிள்ளைய.. பதிவுல எழுதுறதெல்லாம் உண்மைன்னு நம்பிக்கினு..ஹிஹி..)

அது சரி said...

//
இந்த லட்சணத்துல கடை சும்மாதானே கெடக்குது.. நமக்கு வேணா லீஸுக்கு தந்துடறீங்களான்னு நேத்து பதிவர் சந்திப்புல என்னை ஒரு பிரபல பதிவர் கேட்டபோது அவரை முறைத்தேன்.
//

ஆமா அண்ணாச்சி...கடை இப்பிடி காலியா கெடக்குதே...எந்த பயலாவது ஆக்கிரமிப்பு பண்ணி மலையாளப் படம் ஓட்டிரப் போறானுவ..பரங்கிமலை ஜோதி தியேட்டர் வேற மூடிட்டானுவளாம்...

:0))

அது சரி said...

அதெல்லாம் சரி அண்ணாச்சி....எங்க ஒங்க தங்கமணி பொலம்பல்களை ரொம்ப நாளா காணோம்?? இனிமே பொலம்புன அவ்வளவுதான்னு தடை உத்தரவு போட்டுட்டாங்களா???

ம்ம்ம்ம்....இந்த மனுஷன் பொலம்புறத பாத்து எம்புட்டு நாளாச்சி...(இது என் பொலம்பலுங்கோ)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அதுசரி.. சீகிரம் போட்டுறலாம்.

குசும்பன் said...

//நமக்கு வேணா லீஸுக்கு தந்துடறீங்களான்னு நேத்து பதிவர் சந்திப்புல என்னை ஒரு பிரபல பதிவர் கேட்டபோது அவரை முறைத்தேன்//

நான் தர ரெடி கொஞ்சம் வாங்கிக்கிறாரான்னு கேட்டு சொல்லுங்க:)

வால்பையன் said...

//கடை சும்மாதானே கெடக்குது.. நமக்கு வேணா லீஸுக்கு தந்துடறீங்களான்னு நேத்து பதிவர் சந்திப்புல என்னை ஒரு பிரபல பதிவர் கேட்டபோது அவரை முறைத்தேன்.//

ஏங்க அவர விட்டிங்க! எனக்கு அவரோட நம்பர் கொடுங்க!
என் கடைய லீஷுக்கு விடலாம்!
குவாட்டரோ, ஆஃபோ கிடைச்சாலும் போதும்!

அதுக்காச்சும் ஆகுமா?