Thursday, April 9, 2009

டவுசர் கிழியும் விஷயங்கள் : டாப் 10

10. நமது ஞாயிற்றுக்கிழமைக்கும் சேர்த்து வேட்டு வைக்கிறமாதிரி ஆபீஸில் ஃபீல்டு விசிட்டுக்கு தேதி குறிக்கும்போது.

9. பலராலும் கொண்டாடப்பட்டு நாம் ரொம்ப நாளாக படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளரின் ஆகச்சிறந்த(?) ஒரு படைப்பு நம் கையில் முதல்முறையாக கிடைக்க, விபரம் தெரியாமல் அதைப் படித்து டரியலாகும் போது.

8. பலவித தடங்கல்களுக்குப் பிறகும் ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி சென்று உட்கார்ந்ததும், நாயகன் அறிமுகமாகும் போதோ, அறிமுகமாகி ஐந்து நிமிடத்திலோ அது எப்பேர்ப்பட்ட கதையாக இருந்தாலும் அந்த நாயகன் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தெருவில் ஆண், பெண் கூட்டத்தோடு கும்மாங்குத்து போடும்போது.

7. சரியாக டியூ நாளில் அமவுண்டை கட்டிய பிறகும், ஆட்டோ டெபிட்டில் அதே அமவுண்டை பிடித்து கிரெடிட்கார்ட் கடங்காரன் நம்ப பட்ஜெட்டில் குழப்பம் விழைவிக்கும் போது.

6. ரிப்போர்ட் தர ரெண்டு மணி நேரம் தாமதமானதால் மானேஜர் தரும் மூன்று மணி நேர அறிவுரைகளை கேட்க நேரும் போது.

5. பெட்ரோல் போட மறந்து பாதிவழியில் வண்டி நின்று அவஸ்தைக்குள்ளாகி, பிரம்மப்பிரயத்தனம் செய்து பெட்ரோலுடன் ஆள் வரவைத்தபின்னர், கிளம்பிய ஒரே கிலோமீட்டரில் பஞ்சரும் ஆகித்தொலைக்கும் போது.

4. நேற்றைய சண்டையை சமாதானப்படுத்தும் பொருட்டு இன்று மார்னிங் ஷோ போய்விட்டு, மதியம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு முகத்தில் சிறிது புன்னகை வரத்துவங்கியிருக்கும் நேரத்தில் ரமாவின் கண்களில் நல்லி சில்க்ஸ் பட்டுத்தொலைக்கும் போது.

3. ஒருவாரம் கழித்து பதிவெழுதி அது நல்லா(?) வந்திருப்பதை கண்டு மகிழ்ந்துவிட்டு ஏற்றப்போகையில் கரண்ட் போய் தொலைக்கும்போது.. அல்லது அது செம ஹிட்டாகி 50 ஹிட்ஸும், ரெண்டு பின்னூட்டமும் வாங்கி சாதனை படைக்கும் போது.

2. இந்த ரயில் பயணத்திலாவது இந்த புத்தகத்தை முடித்துவிடவேண்டும் என்று நாம் மறக்காமல் எடுத்துச்செல்லும் அந்த நாளில்தான் நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.

1. தவறாமல் ஒவ்வொரு அப்ரைஸலின் போதும்..

.

38 comments:

இய‌ற்கை said...

:-))

புதுகைத் தென்றல் said...

:))))ரமா இந்தப் பதிவை படிக்காம பாத்துக்கோங்க ஃப்ரெண்ட்.

மாதவராஜ் said...

அடேயப்பா!இதில் பல அவஸ்தைகள் என்னுடைய அனுபவங்கள். அருகில் வந்து நின்று கொண்டிருக்கிற மாதிரி இருக்கிறது.

Cable Sankar said...

//இந்த ரயில் பயணத்திலாவது இந்த புத்தகத்தை முடித்துவிடவேண்டும் என்று நாம் மறக்காமல் எடுத்துச்செல்லும் அந்த நாளில்தான் நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.
//

நிஜமாவே இதுதாஙக் அடிக்கடி நடக்குது.. ஆனா நல்லாருக்கு.

தமிழ் பிரியன் said...

இரண்டாவது எங்களை மாதிரி இளைஞர்களுக்கு தானே நடக்கும்? உங்களுக்கு எப்படி?.. ;-)

Thamizhmaangani said...

//சிறிது புன்னகை வரத்துவங்கியிருக்கும் நேரத்தில் ரமாவின் கண்களில் நல்லி சில்க்ஸ் பட்டுத்தொலைக்கும் போது//

பொறுங்க பொறுங்க... அண்ணிகிட்ட சொல்லி வைக்குறேன்:)

//நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது//

சரி ரைட்டு, கண்டிப்பா சொல்லியே ஆகனுமே!:)

பரிசல்காரன் said...

அடச்சே.. இந்த பத்து மேட்டருக்கு ச்சின்னப்பையன்தான் காபிரைட் வாங்கல. நானாவது வாங்கலாம்ன்னா.. அதுக்குள்ள நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா???

குசும்பன் said...

வீட்டில் அடி வாங்கும் பொழுது????

குசும்பன் said...

//அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் //

?????? ????? ??????:))

கார்க்கி said...

/ஆட்டோ டெபிட்டில் அதே அமவுண்டை பிடித்து கிரெடிட்கார்ட் கடங்காரன் நம்ப பட்ஜெட்டில் குழப்பம் விழைவிக்கும் போது. //

அப்பன்னா டவுசர் கிழியத்தான் வேணும்.. அதான் ஆட்டோ டெபிட் இருக்கில்ல.. அப்புறம் ஏன் கட்டணும்?

அனுஜன்யா said...

எல்லாமே நல்லா இருக்கு ஆதி.

Point No.8 - உங்களுக்கு தைரியம் அதிகம் தான் :)

அனுஜன்யா

தராசு said...

//பலவித தடங்கல்களுக்குப் பிறகும் ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி சென்று உட்கார்ந்ததும், நாயகன் அறிமுகமாகும் போதோ, அறிமுகமாகி ஐந்து நிமிடத்திலோ அது எப்பேர்ப்பட்ட கதையாக இருந்தாலும் அந்த நாயகன் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தெருவில் ஆண், பெண் கூட்டத்தோடு கும்மாங்குத்து போடும்போது//

இது யாரைக் குறி(வை)த்து சொன்னீங்கன்னு புரியுது.

//நேற்றைய சண்டையை சமாதானப்படுத்தும் பொருட்டு இன்று மார்னிங் ஷோ போய்விட்டு, மதியம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு முகத்தில் சிறிது புன்னகை வரத்துவங்கியிருக்கும் நேரத்தில் ரமாவின் கண்களில் நல்லி சில்க்ஸ் பட்டுத்தொலைக்கும் போது.//

ஆரம்பிச்சுட்டாங்கய்யாயாயா, ஆரம்பிச்சுட்டாங்கய்யா

Senthil said...

u r simply superb

அறிவன்#11802717200764379909 said...

அழகா இருக்கு...நெறைய முறை டவுசர் கிழிஞ்சிருக்கும் போல!!!

\\9. பலராலும் கொண்டாடப்பட்டு நாம் ரொம்ப நாளாக படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளரின் ஆகச்சிறந்த(?) ஒரு படைப்பு நம் கையில் முதல்முறையாக கிடைக்க, விபரம் தெரியாமல் அதைப் படித்து டரியலாகும் போது.\\

எனக்கு ஸீரோ டிகிரி அனுபவம்...

சென்ஷி said...

8, 5, 2...

இதுமாத்திரம் நமக்கு எப்பவாச்சும் நடந்து தொலைச்சுடுது..

சந்தனமுல்லை said...

:-)) நல்ல பட்டியல்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இயற்கை.!
நன்றி ஃபிரெண்ட்.! (எதையுமே அவுங்க படிக்குறதில்லை.. அந்த தெகிரியத்துலதானே இப்பிடில்லாம்..)

நன்றி அண்ணே.!
நன்றி கேபிள்.! (ஆனா நல்லாருக்குதா? வேண்டியதுதான் அம்பது வயசுல..)

நன்றி தமிழ்.!(என்ன மகிழ்ச்சியா? என்னை பெர்சுனு சொல்றதிலதான் உங்களுக்கு என்னா சந்தோஷம்யா..)
நன்றி மாங்கனி.!

நன்றி பரிசல்.! (அலோ ஆரம்பத்துல நாங்களும் பல பத்துகள் போட்டிருக்கோம்.. நாவகம் வெச்சிக்கோங்க..)

நன்றி குசும்பன்.!
நன்றி கார்க்கி.! (மினிமம் விட கொஞ்சம் அதிகமா போடலாம்னு பிளான் பண்ணினேன் அன்னிக்கு.. புட்டுக்கிச்சு..)

நன்றி அனுஜன்யா.!
நன்றி தராசு.!
நன்றி செந்தில்.!
நன்றி அறிவன்.!
நன்றி சென்ஷி.!
நன்றி முல்லை.!

ராம்.CM said...

நம்பர் 1 மட்டும் புரியல?... நல்ல அனுபவம்...

வித்யா said...

மறுபடியும் பத்தா??
டரியலாகவைக்கும் விஷயங்கள்:)

டவுசர் பாண்டி. said...

//"டவுசர் கிழியும் விஷயங்கள் : டாப் 10"//

இந்த பத்து மேட்டரும் ரொம்ப நல்லாத்தான் கீது,

அதுக்கு என் டவுசர ஏம்பா கீக்கரீங்கோ??

( வேற டவுசர் தான் வாங்கனும் போல கீது )

எம்.எம்.அப்துல்லா said...

இத விட்டீங்களே...

“என்னைக்கெல்லாம் ரிலாக்ஸா நைன்டிய கரெக்ட் பண்ணலாம்னு நினைக்குறோமோ அன்றைக்கு ஆபிஸ்ல் இருந்து 10 மணிக்கு மேல் கிளம்புவது”

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட

ஆதியோட பதிவு தாமிரா டச்சோட.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ் பிரியன் said...
இரண்டாவது எங்களை மாதிரி இளைஞர்களுக்கு தானே நடக்கும்? உங்களுக்கு எப்படி?.. ;-)

:))))))))

Bhuvanesh said...

//அது எப்பேர்ப்பட்ட கதையாக இருந்தாலும் அந்த நாயகன் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தெருவில் ஆண், பெண் கூட்டத்தோடு கும்மாங்குத்து போடும்போது//


கரெக்ட் தல.. ஆடும்போது பாத்து ஆடனும் இல்லைனா டவுசர் கிழியும்.. அதுவும் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு ஆடும் பொது டவுசர் கிழுஞ்சா ரொம்ப கஷ்டம்!!

வால்பையன் said...

//இந்த ரயில் பயணத்திலாவது இந்த புத்தகத்தை முடித்துவிடவேண்டும் என்று நாம் மறக்காமல் எடுத்துச்செல்லும் அந்த நாளில்தான் நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.//

இது ரொம்ப கஷ்டம் தலைவா!
சரின்னு புக்க மூடி வச்சு கடலை போடலாம்னு நினைச்சா தான் ஞாபகம் வருது கூடவே தங்கமணியும் வந்துருக்கான்னு!

நிறைய தடவை டவுசர் கிழிஞ்ச அனுபவம் உண்டு!

வால்பையன் said...

நான் தான் குவாட்டரா?

Boston Bala said...

கலக்கல்... அப்படியே என்னப் பத்தி எழுதுன மாதிரி இருக்கு!

அத்திரி said...

அண்ணிய குறை சொல்லாம உங்களால் பதிவு எழுத முடியுமா?

இளமாயா said...

அனுபவம் பேசுதோ?????

அருமை :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி Raam.!
நன்றி Vidya.!
நன்றி Tavusar.!
நன்றி Abdul.!
நன்றி Amiththu.!
நன்றி Bhuvan.!
நன்றி Vaal.!
நன்றி Bostanbala.!
நன்றி Aththiri.!
நன்றி Maya.!

தமிழ்ப்பறவை said...

1 மற்றும் 6 முதல் 10.. எனக்கும்தான்... ஒய் பிளட்.... சேம் பிளட்....
அதிலும் அந்த 10ம் நம்பர் மேட்டர்லதான் வாரவாரம் மாட்டிக்கிறேன்...

மணிகண்டன் said...

எல்லாமே சூப்பர் ஆதி.

தாரணி பிரியா said...

எனக்கு பத்தாவதில் ஆடிட்டர் வருவார். நாளைக்கு கூட எல்லாருக்கும் லீவு. அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் தவிர :(

அ.மு.செய்யது said...

என்னோட சாய்ஸ் எப்பவுமே டாப் ஒன் தான்..

ஆப்புரைசல்.

JP said...

உங்க வலைபூவ கொஞ்ச நாலா தான் படிக்கிறேன். நல்ல எழுதுறீங்க. அதுவும் இந்த டாப் 10 ல , டாப் 1 இப்போ உள்ள பொருளாதார நெலமைல ரொம்ப உண்மை. நாம எவ்வளவு செஞ்சாலும் செல்லாது செல்லாதுன்னு தான் சொல்லுவாங்க.

வாழவந்தான் said...

//
1. தவறாமல் ஒவ்வொரு அப்ரைஸலின் போதும்..
//

இது ரொம்ப நல்லாவே வருஷத்துக்கு ஒருதரம் நடக்குது

//
2. இந்த ரயில் பயணத்திலாவது இந்த புத்தகத்தை முடித்துவிடவேண்டும் என்று நாம் மறக்காமல் எடுத்துச்செல்லும் அந்த நாளில்தான் நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.
//
இன்னிக்கு இந்த மாதிரி கிழிக்கப்பட்டால், திங்களன்று சென்னை திரும்பிவந்தவுடன் ஒரு பதிவு போடா வேண்டியிருக்கும். பார்ப்போம் என்ன ஆகுதுன்னு

மங்களூர் சிவா said...

ஹா ஹா

எம்புட்டு அடிச்சாலும் தாங்கணும் ஆதி ஏன்னா நம்பல்லாம் ரொம்ப நல்லவிங்க இல்லியா

:)))

வில்லங்கம் விக்னேஷ் said...

எதுக்குங்க இதை எல்லாம்ம் எழுதி எங்களை வம்பிலே மாட்டி விடறீங்க?

இதை வாசித்துவிட்டு என் தோழி ஒருத்தி முறைத்துக் கொண்டாள்.


"டவுசர் கிழிக்காத விஷயங்கள் : டாப்லெஸ் 10"