Wednesday, April 22, 2009

எனக்குப்பிடித்த ஹீரோக்கள் : நிஜ டாப் 10

முந்தைய ‘போங்கு டாப் 10’ போட்டதிலிருந்தே எனக்கு உண்மையிலேயே மிகவும் பிடித்தமான டாப் 10 தமிழ் ஹீரோக்கள் பற்றி பதிவு போட வேண்டும் என ஆசையிருந்தது. இப்போதுதான் அதற்கு நேரம் கிடைத்து, எழுதத்துவங்கிய பின்னர்தான் தெரிகிறது அப்படிப் பிடித்தமானவர்கள் 10 பேர் கூட இல்லையென்று. என்ன செய்ய.? குறைந்தபட்சம் கொஞ்சூண்டாவது எதிர்கால நம்பிக்கையை தருபவர்களையும் லிஸ்ட்டில் சேர்த்து 10 பேரை ஒப்பேற்றிவிட்டேன்.

இதில் காலத்தையெல்லாம் கணக்கில் கொள்ளவில்லை. 80க்குப் பிந்தைய அத்தனை பேரையும் போட்டு கலக்கி ஒரு முடிவுக்கு வந்தேன். மூத்த கலைஞர்கள் லிஸ்ட்டில் இருந்தாலும் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்ட கார்த்திக், பிரபு போன்றவர்களை கணக்கில் கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன், இது எனது தனிப்பட்ட விருப்பம் மட்டுமே.!

10. விக்ரம்

டெடிகேஷன், உழைப்பு மற்றும் நடிப்பில் கவர்கிறார். நானும் விஷால் போல கைகளை முறுக்கிக் கொண்டு எதிரிகளை சுட்டு வீழ்த்தத்தான் செய்வேன் என்று இன்னும் பிடிவாதம் பிடித்தால் ஸாரி.. விக்ரம்.! இன்னும் வெரைட்டி நிறைய செய்யவேண்டியுள்ளது நீங்கள், கொஞ்சம் வேகம் பிளீஸ்.!

bheemaa170108_6

09. தனுஷ்

தனிப்பட்ட குரல், இளமைத்துள்ளல்.. கமர்ஷியல் பண்ணினாலும் ‘பொல்லாதவன்’ போல லாஜிக்கோடு முடிந்தவரை இயல்பாக இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். அந்தரத்தில் பல்லி சண்டையெல்லாம் வேண்டாமே.!

polladhavan291007_23

08. ஜீவா

ஈ’ என்ற ஒரு படத்தினால் உங்களுக்கு இந்த இடம். கமர்ஷியல் பண்ண பரத், சிம்பு என நிறையபேர் இருக்காங்க.. நீங்க கொஞ்சம் இந்தப்பக்கம் வரலாமே.!

jee031006_2

07. ஜெயம்ரவி

உங்களுக்கு ஏன் இந்த இடம்னு எனக்கே தெரியலை. குமரன், தாம்தூம், சந்தோஷ் என விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இருக்கிறீர்கள். இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.

dhaamdhoom140408_41

06. ஆர்யா

நான் கடவுளுக்கு முன்பே உங்களிடம் ஒரு ஈர்ப்பைக்காண முடிந்தது. அது நான் கடவுளிலும் முழுமையடையவில்லை. ஏதாவது பண்ணுங்க..

lrg-26345-naan-kadavul-stills-061

05. மாதவன்

என்ன மாதிரி ஒரு அறிமுகம்ங்க உங்களுக்கு, யாருக்காவது அமைஞ்சிருக்கா அந்தமாதிரி? ரன்’ னில் என்ன ஒரு வேகம். ‘அன்பே சிவம்’ல என்ன ஒரு சான்ஸ்.. எவ்ளோ லக்கி நீங்க.. ஆனா இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்னு ஆசைதான், வேற படம்தான் இல்லை.

Madhavan3

04. கார்த்தி

ஒரு படத்துக்காகவெல்லாம் இந்த இடம் உண்மையிலேயே கொஞ்சம் ஓவர்னுதான் தோணுது. பரவாயில்லை, நான் சமாளிச்சுக்கிடுறேன். அதக் காப்பாற்றுகிற மாதிரி அடுத்தடுத்து பண்ணிடுவீங்கதானே.?

paiya261208_13 03. சூர்யா

தவறுகளை திருத்திக்கொண்டு எழுந்துவந்தவர்ங்கிற மரியாதை உண்டு. பில்டிங்குக்கு பில்டிங் தவ்வுறது, அரிவாள் வெச்சுக்கிட்டு மெரட்டுறது, பஞ்ச் டயலாக் உடுறது, பத்து பேர பொரட்டி பொரட்டி எடுக்குறது, எந்த எண்ணை எப்படி எரியும்னு கிளாஸ் எடுக்குறது இதுக்கெல்லாம் நாங்க தனியா ரெண்டு பேர வெச்சிருக்கோம்.. பிளீஸ், உங்களைத்தான் மலை போல நம்பியிருக்கோம். ஏதோ பாத்துப் போட்டுக்குடுங்க சாமி.!

ayan_05

02. ரஜினிகாந்த்

தலைவா.. உனக்கெதுக்கு கமெண்ட்ஸ்? உனக்கெதுக்கு ஓய்வு.? நீ என்ன பண்ணினாலும் கிரேஸ்தான். நினைச்சதெல்லாம் பண்ணு, பார்க்க நாங்க இருக்கோம். எண்ணை கொட்டிக் கிடப்பதைக்கண்டு எச்சரிக்கும் வேலையாளை ‘நீ.. ப்ப்பாத்துப்போடா..’ என்று அள்ளும் காமெடி உன்னைத்தவிர வேறு யாருக்குப்பொருந்தும்? காமெடிக்கு இன்னும் கொஞ்சம் இடம் வேண்டும் என்பது சிறிய வேண்டுகோள்.

sivajii020407_21

01. கமல்ஹாசன்

ஒன்றா இரண்டா மொக்கைகள் எடுத்துச்சொல்ல உங்கள் படங்களில்? அப்படித்தான் பூதக்கண்ணாடி வெச்சுத்தான் பார்ப்போம்.. வேறு யாரு இருக்கா எங்களுக்கு? உங்களுக்கு பொருத்தமான வேடங்களை நீங்கள் பண்ணுவது ஒருபுறமிருக்க, மேற்கூறிய இளைஞர் படையை வைத்து நீங்கள் வெரைட்டியான படங்களை இயக்கவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்காதா? எனது விருமாண்டி, கமல்ஹாசனைப்போல சிவப்பான நிறம் கொண்டவனல்ல என்று பேட்டிகளில் சொன்னால் மட்டும் போதுமா? டெக்னிகல் எக்ஸெலன்ஸை மட்டுமே அறிமுகப்படுத்தினால் போதுமா? சின்னச்சின்ன பட்ஜெட்டுகளில் விதவிதமான களம், திரைக்கதை உத்திகளையும் செய்துபார்க்கக்கூடாதா?.. ஹும்.!

anbe-sivam-kamal-hassan

.

53 comments:

இராகவன் நைஜிரியா said...

உங்கள் சாய்ஸ் எல்லாம் பிடித்து இருக்கின்றது.

என்ன சூர்யாவை முதலில் போட்டு இருப்பேன் நானாக இருந்தால் அவ்வளவுதான் வித்யாசம்.

வருங்காலத்தில் நல்லப் படங்களைத் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது

Kumaran said...

ஏற்கனவே நீங்களே சொன்ன மாதிரி கார்த்தி தான் கொஞ்சம் ஓவர். மத்த எல்லா ராங்கிங் பெர்ஃபெக்ட்...

Karthikeyan G said...

Where is the Chimbu ?

பரிசல்காரன் said...

கமலுக்கு நீங்கள் வெளியிட்ட படம் அருமை.

நல்ல பகிர்வு.

BTW,

கார்க்கி... ப்ளீஸ் கம்!

பரிசல்காரன் said...

கேட்டாரு பாருங்க கார்த்திகேயன் ஒரு கேள்வி..

ராமராஜனைக் குறிப்பிடாததற்கு நானும் என் கண்டங்களை தெரிவிச்சுக்கறேன்.

பரிசல்காரன் said...

கேட்டாரு பாருங்க கார்த்திகேயன் ஒரு கேள்வி..

ராமராஜனைக் குறிப்பிடாததற்கு நானும் என் கண்டங்களை தெரிவிச்சுக்கறேன்.

SUREஷ் said...

M.P. சீட் கொடுக்கலேங்கற வயித்தெரிச்சல் நல்லாத்தெரியுது தல...

SUREஷ் said...

கவலைப் பட வேண்டாம் தல...

பிரச்சாரத்திற்கு யாராவது கூப்பிடுவாங்க...

அப்படியும் யாரும் கூப்பிடவில்லையென்றால் ஆதரவு யாருக்கும் கிடையாது என்று சொல்லிவிடுங்கள்

அது சரி said...

எட்டாவது வள்ளல், காரில் செல்லும் பாரி, ராமநாதபுரம் ரகளை எங்கள் அண்ணன் ஜேகேஆருக்கு வேண்டுமென்றே சீட்டு கொடுக்காத உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்...

இந்த நிலை தொடருமானால், உங்களுக்கு எதிராக ஜேகேஆர் முன்னேற்ற கழகம் கொதித்து எழும்...இறுதி எச்சரிக்கை!

:0))

அது சரி said...

//
சின்னச்சின்ன பட்ஜெட்டுகளில் விதவிதமான களம், திரைக்கதை உத்திகளையும் செய்துபார்க்கக்கூடாதா?.. ஹும்.!
//

அவரு ரெடி...படத்தை (ச்சின்ன பட்ஜெட்டு தான், பயப்படாதீங்க) தயாரிக்க நீங்க ரெடியா??

:0)))

அப்பாவி முரு said...

// கமல்ஹாசன்

சின்ன பட்ஜெட்டுகளில் விதவிதமான களம், திரைக்கதை உத்திகளையும் செய்துபார்க்கக்கூடாதா?.. ஹும்.!//

ஞாயமான, என்னோட கோரிக்கையும் இதுதான். ஆனால் கமலோட புரோஜெக்ட் எல்லாம்...

அப்பாவி முரு said...

// கமல்ஹாசன்

சின்ன பட்ஜெட்டுகளில் விதவிதமான களம், திரைக்கதை உத்திகளையும் செய்துபார்க்கக்கூடாதா?.. ஹும்.!//

ஞாயமான, என்னோட கோரிக்கையும் இதுதான். ஆனால் கமலோட புரோஜெக்ட் எல்லாம்...

செல்வேந்திரன் said...

மட்டமான பட்டியல்; மொக்கையான எழுத்து.

Thamizhmaangani said...

ஜே.கே ரீத்திஷ், சாம் ஆண்டர்சன், விஜயகாந்த், கார்த்திக், பிரபு, மன்சூர் அலிகான் ஆகியோரின் பட்டியல் இல்லாமல் ஒரு பட்டியலா?

வன்மையாக கண்டிக்கிறோம்:)

Mahesh said...

நல்ல அலசல்... எனக்கு ஜீவாவோட நடிப்பு பிடிச்சது "ராம்"லயும் "கற்றது தமிழ்"லயும்...

சென்ஷி said...

ஹேய்.. அழகான போட்டோஸ் வித் கமெண்ட்ஸ்... :-)

ரஜினி, கமல், மாதவன் கமெண்ட்ஸ் கலக்கல்!!!

Anonymous said...

தங்கத் தலைவர்(வலி) j.கே. ரித்திஷ், சீரும் சிங்கம் (ஆஅவ்வ்வ்வ்) சிம்பு, வீறு கொண்ட வேங்கை விஷால் ( ரொம்ப ஓவரா இருக்கோ) இவங்கலாம் இல்லாத டாப் 10 எல்லாம் ஒரு டாப் 10??? நான் வெளிநடப்பு செய்யறேன்.

Anonymous said...

ஐயயோ முக்கியமான ஒருதர விட்டுடேங்க, வருங்கால முதல்வர் வீரன்( முடியலே) விஜய், சிக்ஸ் பேக் (லஞ்ச் பேக்) தல அஜித், அப்பறம் இளம் புயல் ( என்ன ஒரு கொல வெறி) கார்க்கி (எல்லாம் அந்த youtube பார்த்த பிறகு முடிவுதான்).

Cable Sankar said...

நல்ல தொகுப்பு ஆதி.. இருந்தாலும்ரஜினியை கொஞ்சம் ஜாக்கிரதையாவே எழுதியிருக்கீங்க போலருக்கு..

narsim said...

kalakkal..

Ajith?????

Truth said...

சரியான தேர்வு ஆதி. கமெண்ட்ஸ் சூப்பர் :-)

☼ வெயிலான் said...

இருப்பவர்களில் இருந்தவரை வரிசைப் படுத்தியது சரி!

படங்கள் பதிவில் ஏற்றுவதற்குள் நடுநிசியாயிருக்குமென நினைக்கிறேன் :)

வால்பையன் said...

விக்ரம் பத்தாவது இடத்திற்கு போனதை தவிர மற்றதெல்லாம் சரியாக தான் படுகிறது!

புன்னகை said...

அருமையான பட்டியல்! மாதவன், ரஜினி, கமல் மூவருக்கும் எழுதப்பட்டுள்ள கமெண்ட்ஸ் டாப்! :-)

UNGALODU NAAN said...

ajithin samiba kala padathervu

vendumanal tavaraga irukkalam

aanal unmayileye ajith oru siranda nadigar

தராசு said...

"தல" யையும், "தளபதி" யையும் தவிர்த்ததற்காக கன்னா பின்னாவென்று கண்டிக்கப் படுகிறீர்கள் ஆதி.

Bhuvanesh said...

வரிசை 8 to 10 அருமை.. என்ன தலைவர் ரெண்டாவது இடம் மட்டும் ஒதுக்க முடியல!! சூர்யாக்கு கொடுத்த கமெண்ட் சூப்பர்..

முரளிகண்ணன் said...

என் வரிசையில் சில மாற்றங்கள் உண்டு.

ஒப்பினியன் டிப்பர்ஸ்

அ.மு.செய்யது said...

மற்ற வரிசைகளை பற்றி தெரியாது.

கமலுக்கு முதலிடம் கொடுத்தது முற்றிலும் நியாயமே.

நீங்கள் சொல்ற மாதிரி இன்னும் லோ பட்ஜெட்ல நிறைய குவாலிட்டி பண்ணலாம்.

தசாவாதாரங்களை தேர்ந்தெடுப்பதை விட கமலுக்கு மகாநதியும்,அன்பே சிவமும் இன்னும் நிறைய பதினாறு வயதினிலேக்களும் நன்றாக வரும்.

அ.மு.செய்யது said...

ஆமா..இதுல இளைய தளபதி எங்க ?

அ.மு.செய்யது said...

கமல் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு,நிழல் நிஜமாகிறது இந்த இரண்டு படங்களுக்குமே முதலிடம் கொடுக்கலாம்.

இப்படிக்கு,

கமல் விசிறி.

அறிவிலி said...

கமல் மற்றும் ரஜினிக்கு அளித்த இடங்கள் மிகவும் சரி. மற்றவர்கள் எல்லாம் அவ்வப்போது வரும் படங்களை பொறுத்தே.

உங்கள் பதிவில் இருக்கும்
))')) said... (பெயர் தெரியாத)
பிரச்னைக்கு இங்கு !கோவியார் தீர்வு சொல்லியிருக்ககறாரே.

Anonymous said...

//என்ன சூர்யாவை முதலில் போட்டு இருப்பேன் நானாக இருந்தால் அவ்வளவுதான் வித்யாசம்.//

நானும் தான்

Anonymous said...

தல மற்றும் விஜயை காணும்? எங்க போயிட்டாங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராகவன்.!
நன்றி குமரன்.!
நன்றி கார்த்திகேயன்.!
நன்றி பரிசல்.!
நன்றி சுரேஷ்.!
நன்றி அதுசரி.!
நன்றி முரு.!

நன்றி செல்வா.! (லேபிள் போட மறந்துட்டேன், இதெல்லாம் கிளீனா கண்டுபிடிச்சு சொல்லிடுவீங்களே.. ஆமா, மொக்கை ஓகே, நீங்க சொல்லலாம். எனது தனிப்பட்ட விருப்பம்னு சொன்னதுக்கப்புறமும் என்னை மட்டம்'னு சொன்னா அது தனிநபர் தாக்குதலில் வருமா.. ஹிஹி.. யாருகிட்டயாவது கம்ளைன்ட் பண்ணமுடியுமா.?)

நன்றி மாங்கனி.!
நன்றி மகேஷ்.!
நன்றி சென்ஷி.!
நன்றி மயில்.! (லஞ்ச் பேக்.? ஹஹா..)

நன்றி கேபிள்.! (அப்படில்லாம் இல்ல தல, தோணுனத எழுதுனேன்.. அவ்வளவுதான்)

நன்றி நர்சிம்.! (அப்ப விஜய்??)
நன்றி ட்ரூத்.!
நன்றி வெயிலான்.! (கரெக்டா?)

நன்றி வால்.! (முதல்ல வெளிய தள்ளிடலாமான்னு யோசிச்சேன்.)
நன்றி புன்னகை.!
நன்றி நான்.!
நன்றி தராசு.!
நன்றி புவனேஷ்.!
நன்றி முரளி.! (நலமா? பாஸ்..)

நன்றி செய்யது.!
நன்றி அறிவிலி.!
நன்றி அம்மிணி.!
நன்றி ஆனந்த்.!

ஸ்ரீமதி said...

என் கமெண்ட் காணோம்... :((((((( போட்டேனா?? ;))))))

கார்க்கி said...

// narsim said...
kalakkal..

Ajith?????
//

இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் சகா..

அத்திரி said...

உங்களுக்கும் எனக்கும் பிடித்த நடிகர் இந்த பட்டியல்ல இல்லையே என்ன ஆச்சிண்ணே

தர்ஷன் said...

முதல் ஐந்து இடங்களில் நான்காம் இடம் நெருடல். இறுதிப் பத்து இடங்களில் தனுஷ், விக்ரம் ஆகியோர் ஜீவா, ஜெயம் ரவிக்கு முன்னால் வரலாம். 80 க்கு பின் என்று சொன்னீர்கள் என்னைக் கேட்டால் அதிலிருந்துதான் பார்க்க முடியும். ஆம் சிவாஜி,எம்ஜியார்,ஜெய் ஷங்கர் எல்லோரையுமா போட முடியும். சிவகுமார் மட்டும் தேறுவார். (அதுவும் 80 களுக்கு பின் வந்த படங்களில்)
ஹரி, பேரரசு படங்களில் நடிக்காமலிருந்தால் பரத் கூட இதில் வரலாம்.
மாதவன் கன்னத்தில் முத்தமிட்டாலில் அவ்வப்போது வரும் கோபம், மின்னலே, நள தமயந்தியில் இயல்பாய் வரும் நகைச்சுவை, ஆயுத எழுத்தில் அண்ணனை சுட்டுக் கொள்ளும் காட்சி, எவனோ ஒருவன் எப்படி மறந்தீர்கள்
ரஜினியை வெறும் commercial ஹீரோவை பார்ப்போர் ஆட்சேபம் கிளப்பலாம் என்னை கேட்டால் அவர் இவ்வாறான ஒப்பீடுகளுக்கும் அப்பாற்பட்டவர். இதில் அவருக்கான இடம் மிகப் பொருத்தமானது.

dharshini said...

விஜய் அஜித் இல்லாம பட்டியலா?! நானும் வெளிநடப்பு செய்கிறேன்...(great escape)
:)

மங்களூர் சிவா said...

where is JKR??????

grrrrrrrrr

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீமதி.!
நன்றி கார்க்கி.! (அதுன்னா சிரிப்பு பொத்துக்கிட்டு வருமே..)

நன்றி அத்திரி.! (அப்பிடி யாருங்க அது?)

நன்றி தர்ஷன்.! (உங்கள் கருத்துகளை ஏற்கிறேன். வில்லன் வேடம் ஏற்றதற்காக ஸ்பெஷல் பாராட்டுகள் மாதவனுக்கு தெரிவிக்க தவறிவிட்டேன். நான் குறித்த படங்களைவிட மாதவனோட பெஸ்ட் ஆயுதஎழுத்துதான்)

நன்றி தர்ஷினி.!
நன்றி சிவா.!

வீணாபோனவன் said...

//
மங்களூர் சிவா said...
where is JKR??????
grrrrrrrrr //

yeah! Where is Sam Anderson???

-Veenaponavan

pappu said...

கமல ஃப்ர்ஸ்ட்டா போட்டதுல ரொம்ப சாடிஸ்ஃபேக்ஷன். அவர் தி பெஸ்டுல்ல.

என்னங்க, சைலன்ஸ் விஜய விட்டுடீங்க!

பூக்காதலன் said...

வழக்கம் போல் குறும்பு கொப்பளிக்கிறது.

என்ன இதையெல்லாம் அந்த நடிகர்கள் படித்தால் நன்றாக இருக்கும்.

(யாருப்பா அங்கே, உடனே இந்த பதிவை அவர்களுக்கு அர்ஜெண்டா பார்சல் பண்ணு..)

ஜி said...

// சின்னச்சின்ன பட்ஜெட்டுகளில் விதவிதமான களம், திரைக்கதை உத்திகளையும் செய்துபார்க்கக்கூடாதா?.. ஹும்.!
//

Neenga sonnatha avaru ketuttaaru pola... etho screenwriters workshop nadaththa poraaraam May 29 to June 3rd in IITM.

Karthik said...

விக்ரம் 10 ஆ? லிஸ்ட் ஓகேங்க. ரேங்கி்ங் தான்.. :)

//கார்க்கி said...
இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் சகா..

நீங்க இதே வேலையாத்தான் கிளம்பியிருக்கீங்களா கார்க்கி? ;)

Raju said...

Sathyaraj is missing.

Chill-Peer said...

புலம்பல்களில் ஒரு புதுவரவு, என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொல்லுங்கள்.

(எழுத்துப்பிழை ஏதுமில்லை)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வீணா.!
நன்றி பப்பு.!
நன்றி பூக்காதலன்.!
நன்றி ஜி.! (சினிமாவில் துவக்கநிலையில் இருப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புவோம்)
நன்றி கார்த்திக்.!
நன்றி ராஜு.!
நன்றி சில்‍‍பீர்.! (கண்டிப்பா சேத்துக்கலாம், அப்டின்னா சில் பியர் வாங்கித்தருவீங்கதானே..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹைய்யா.. ரொம்ப நாள் கழிச்சு 50 பின்னூட்டம்.! அதுவும் நானே மீ த 50.!

Chill-Peer said...

52. தாங்கள் அனுப்பிய வெத்திலை பாக்கு, கல்கண்டு இன்னும் வந்து சேரவில்லை...

ஜோசப் பால்ராஜ் said...

உங்க சொந்தப் பட ஹீரோ கார்க்கிய விட்டுட்டீங்க?