Monday, April 27, 2009

சென்னை பதிவர் சந்திப்பு (25.04.09)

இந்த முறை பதிவர் சந்திப்பு மிகுந்த ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. உள்ளூர் மட்டுமில்லாமல் சில முக்கிய வெளியூர் பதிவர்களும் வருவதான திட்டத்தால் வழக்கத்தை விட அதிகபட்ச கூட்டம் கூடலாம் என எதிர்பார்த்தோம். எதிர்பார்த்தது நடந்தது. அலைகடலென திரண்டுவிட்டனர்.

நான் வழக்கம் போல தாமதமாகவே (ஆப்பிஸ்ல லேட்டாயிருச்சு.. ஆப்பிஸுக்கு லேட்டானா வீட்டுல லேட்டயிருச்சுன்னு சொல்றதில்லையா, அதுமாதிரி..) சென்றேன். பலரையும் ஒரு ‘ஹாய்’ கூட சொல்லாமல் மிஸ் பண்ணுமளவுக்குக் கூட்டம். ஒரு 50 பேர் இருக்கமாட்டாங்களா டோண்டு சார்.?

வழக்கம் போல உள்ளூர் தலை(வர்)களான யெஸ்.பாலபாரதி, லக்கிலுக், நர்சிம், சுந்தர்ஜி, பைத்தியக்காரன், ரமேஷ்வைத்யா, அதிஷா, புதுகை அப்துல்லா, டாக்டர் புரூனோ, கேபிள்சங்கர் போன்றோர் கூடியிருக்க சீனியர்(வயசுல மட்டுமில்லைங்க) பதிவர்கள் டோண்டு ராகவன், சிவஞானம்ஜி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய விருந்தினரான மூத்த(நிஜமாகவே மூத்த) பதிவர் அனைவரின் அன்பு அண்ணாச்சி ஆசிஃப்மீரான் விழா நாயகராக இருந்தார். அதுமட்டுமில்லாமல் சிறப்பு விருந்தினராக வெளியூர்களில் இருந்து செல்வேந்திரன், கார்க்கி (ஹிஹி..), வெயிலான், வால்பையன் ஆகியோர் வந்து கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

முன்னாள் முக்கிய பதிவரான இளவஞ்சியுடன் பேச வாய்ப்புக்கிடைத்தது. தண்டோரா வலிய வந்து அறிமுகம் செய்துகொண்டார் (நம்மையும் ஊர் நம்புது பாருங்களேன்). தாமிரா என்ற பெயரின் வீச்சிலிருந்து மீள இன்னும் சிறிது காலமாகலாம் என எண்ணுகிறேன். கட்டியணைத்துப் பகிரும் பைத்தியக்காரனின் அன்பே அன்பு. மேலும் பலரையும் அறிமுகம் செய்துகொண்டேன்.

காவேரிகணேஷ், ஹசன், அக்னிபார்வை, தமிழ்குரல், ஜாக்கிசேகர், ரௌத்ரன், ஊர்சுற்றி, ஸ்ரீவத்சன் இன்னும் பலரையும் கண்டேன். மேலும் பலரையும் அறிமுகம் செய்துகொள்ள இயலாமல் மிஸ் செய்தேன். வழக்கம் போல குழுக்களாக பேசி மகிழ்ந்திருந்தோம். தொடர்ந்த தேனீர் விருந்தும் அமர்க்களப்பட்டது. ரெகுலராக சந்திப்புக்கு வந்துவிடும் வெண்பூ, மற்றும் முரளிகண்ணன் இல்லாதது ஒரு சிறிய குறை. புகைப்படங்கள் எடுத்தேன். காமிராவில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாற்றுவதில் சிக்கல். ஆகவே அவை பின்னர்..

அதிஷாவும் நானும் குசுகுசுவென என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதையோ, சந்திப்பு முடிந்து தொடர்ந்து வேறெங்கோ நிகழ்ந்த தேனீர் விருந்தைப்பற்றியோ, செல்வேந்திரன் சொன்ன A ஜோக்கையோ, வெயிலான் தந்த கிஃப்டைப்பற்றியோ, இந்தமுறையும் பின்நவீனம் குறித்து ஆராய்ச்சி நிகழ்ந்தது பற்றியோ நான் மூச்சு விடமாட்டேன்பா..

டிஸ்கி : என்னோட பதிவெழுதவந்தவர்கள், பின்னர் வந்தவர்கள் என எல்லோரும் எக்கச்சக்க ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் என பின்னிப்போய்க் கொண்டிருக்க.. ஹிட்ஸை விடுங்க, ஃபாலோயர்ஸ் லிஸ்டை மட்டும் பாருங்க.. வயித்தெரிச்சல்.! மீட்டர் ரிப்பேராகிவிட்டதென நினைக்கிறேன். 120லிருந்து 123 வருவதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. ஆகவே சில சிறப்பு பரிசுத்திட்டம் அறிவிக்கலாம் என உள்ளேன். பம்பர் பரிசு : 150வது ஃபாலோயருக்கு தங்க மோதிரம். ஸ்பான்ஸர் : புதுகை அப்துல்லா. 200வது நபருக்கு சூப்பர் பம்பர் காத்திருக்கிறது. இப்போதைக்கு சஸ்பென்ஸ்.!

.

41 comments:

Cable Sankar said...

உடனடியாய் 27 ஐடி கிரியேட் செய்து உங்களுடய 150வது பாலோயர் ஆகி.. மோதிரத்தை அடிக்கிறேன்..

Cable Sankar said...

பின்னால் நடந்த தேநீர் விருந்து நல்லாருந்திச்சா.?

அறிவிலி said...

//பம்பர் பரிசு : 150வது ஃபாலோயருக்கு தங்க மோதிரம். ஸ்பான்ஸர் : புதுகை அப்துல்லா. 200வது நபருக்கு சூப்பர் பம்பர் காத்திருக்கிறது. //

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆப்பு.

நான் இப்ப டிஸ் கண்டின்யூ ஆயிட்டு 150 அல்லது 200ல போட்டி களத்துல குதிக்கிறேன்.

Anonymous said...

ரெகுலரா கடை திறக்காம ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா வந்தா இப்படித்தான் ஆகும்.

பாபு said...

அப்துல்லா பதிவை தொடர்ந்து படித்து வரும் எங்களுக்கு எதுவும் gift தர மாட்டேன்றார்,உங்க பதிவுக்கு வரவங்களுக்கு அவரு gift தறாரா?முதல்ல எங்களை கவனிக்க சொல்லுங்க

குசும்பன் said...

இப்ப உங்கள் பாலோயரில் இருந்து விலகிக்கிறேன் பின் திரும்ப வந்து 150வதில் சேருகிறேன்.

டீல் ஓக்கேவா!

எங்கே எல்லோரும் இதுபோல் செய்யுங்க பார்க்கலாம்:)

தங்க மோதிரம் யாரு வாங்குவது என்னுடன் போட்டி போட போவது யார்?

கார்க்கி said...

சகா வலையுலகமே கடந்த இரு வாரமா(ரமா இல்லைங்க) இப்படித்தான் இருக்கு.. எனக்கும் 206 லே முடங்கி போச்சு.. அப்புறம் சில பேர்கிட்ட கேட்டா அவங்களுக்கும் அபப்டித்தான்.. மீட்டரில் சூடு வைத்திருக்கும் பரிசல் மட்டும் யூசுஃப் போல நிற்காமால் போய் கொண்டிருக்கிறார். இப்ப கொஞ்சம் சரியாயிடுச்சு

ஊர் சுற்றி said...

உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
அடுத்த முறை வரும்போது என்னை ஒரு புகைப்படம் எடுத்துத் தரச்சொல்லி கேட்க போகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

//பம்பர் பரிசு : 150வது ஃபாலோயருக்கு தங்க மோதிரம். ஸ்பான்ஸர் : புதுகை அப்துல்லா. //

வாடி...வா

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கேபிள்.! (ம்.. சரிதான்.!)

நன்றி அறிவிலி & குசும்பன்.! (அய்யய்யோ.. பரிசுப்போட்டி கேன்சல்.! இதுல இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு தெரியாம போச்சே.. அட பேக்கு.!)

நன்றி மயில்.! (நீங்க சொன்னதுக்காக இன்னிக்கே இன்னொண்ணு போட்டுறலாம்ங்க..)

நன்றி பாபு.! (இந்த சின்டு முடியுற வேலையெல்லாம் வேண்டாம்)

நன்றி கார்க்கி.! (அதானே பார்த்தேன்.. ஆமா, இல்லைன்னாலும் வந்து குமிஞ்சிகிட்டுதான் இருந்தாங்க..)

நன்றி ஊர்சுற்றி.! (இந்த முறையே கூட எடுத்திருக்கலாமே தோழர்.! இருட்டுக்குள்ள கரேல்னு..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அப்துல்.! (என்ன தல, நீங்க சொன்னபிறகுதானே போட்டேன்..)

அனுஜன்யா said...

எல்லாஞ் சரிதேன். அது என்ன ஃபாலோயர்ஸ்? சீ சீ எனக்கு இந்தப் பழம் புளிக்கும் :)

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தேனீர் விருந்துக்குப் பிறகு நடந்த தேனீர் விருந்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை? கொஞ்சம் தொண்டையை நனைத்துக் கொண்டிருந்திருப்பேனே ...

ஊர் சுற்றி said...

அடுத்த முறை நீங்க கொஞ்சம் சீக்கிரமா வாங்க....உங்க கையால புகைப்படம் எடுத்து நானும் பிரபலமாக்கிறேன். :)))

அப்புறம், 'பதிவர் பட்டறை' பற்றி உங்களது கருத்தையும் ஆதரவையும், எனது பதிவிற்கு தாராளமாக வந்து தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ரோஜா காதலன் said...

சனிக்கிழமையும் இரவு 10 மணி வரை அலுவலகத்தில் வேலை இருந்ததால் என்னால் இந்த சந்திப்பிற்கு வர இயலவில்லை :(

வெயிலான் said...

உங்களை திரும்பவும் சந்தித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி!

கிப்ட்.....ம்.....நானும் யார்ட்டயும் சொல்ல மாட்டேன்.

RAMYA said...

150 நான்தான், விரைவில் தங்க மோதிரம் எனக்கு வரவேண்டும்
ஆமா சொல்லிபிட்டேன்.

எப்படின்னு கேக்கறீங்களா, மறுபடியும் அழிச்சிட்டு மறுபடியும் follow பண்ணுவேனாக்கும் :)

RAMYA said...

//
குசும்பன் said...
இப்ப உங்கள் பாலோயரில் இருந்து விலகிக்கிறேன் பின் திரும்ப வந்து 150வதில் சேருகிறேன்.

டீல் ஓக்கேவா!

எங்கே எல்லோரும் இதுபோல் செய்யுங்க பார்க்கலாம்:)

தங்க மோதிரம் யாரு வாங்குவது என்னுடன் போட்டி போட போவது யார்?
//


போட்டிக்கு நானு நானு தயார் :))

செல்வேந்திரன் said...

யோவ் நான் எப்பய்யா 'ஏ' ஜோக் சொன்னேன்....?!

sakthi said...

பம்பர் பரிசு : 150வது ஃபாலோயருக்கு தங்க மோதிரம். ஸ்பான்ஸர் : புதுகை அப்துல்லா. 200வது நபருக்கு சூப்பர் பம்பர் காத்திருக்கிறது. இப்போதைக்கு சஸ்பென்ஸ்.!.

appo 149 vantha mail pannunga annachi
athu varai kathu erupom sakthi
kathu erupom
hahahahh
4 grama illai 8 grama annachi
sollitu poanga

sakthi said...

RAMYA said...

150 நான்தான், விரைவில் தங்க மோதிரம் எனக்கு வரவேண்டும்
ஆமா சொல்லிபிட்டேன்.

எப்படின்னு கேக்கறீங்களா, மறுபடியும் அழிச்சிட்டு மறுபடியும் follow பண்ணுவேனாக்கும் :)

aha aha enna nalla ennam pa

sakthi said...

mayil said...

ரெகுலரா கடை திறக்காம ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா வந்தா இப்படித்தான் ஆகும்.

thathuvum pa thathuvum note seyunga

இராகவன் நைஜிரியா said...

நான் போட்டிக்கு எல்லாம் வரவில்லைங்க.

150 ஃபாலோயர் ஆகி, தங்க மோதிரம் வாங்குபவருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// Cable Sankar said...

உடனடியாய் 27 ஐடி கிரியேட் செய்து உங்களுடய 150வது பாலோயர் ஆகி.. மோதிரத்தை அடிக்கிறேன்..//

உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்குங்களா...

இராகவன் நைஜிரியா said...

முதல் தடவையாக

ஆதியின் பதிவில் 25 வது பின்னூட்டம் என்னுடையது...

அப்பாடா ஜன்ம சாபல்யம் அடைந்துவிட்டேன்

ஸ்ரீமதி said...

:)))))))))

பரிசல்காரன் said...

ஆதி..

இந்த மாதிரி 150க்கு பரிசு, 200க்கு பரிசுன்னு அறிவிக்கறதுல பெரிய ரிஸ்க் இருக்கு.

இப்போ ஃபாலோ பண்ற நெறைய பேர் நாம 150ஆ வந்தா பரிசு கிடைக்கும்னு, 25 பேருக்கு அப்பறமா சேரலாம் கழண்டுக்க வாய்ப்பிருக்கு. பார்த்து..!!!

பரிசல்காரன் said...

ஏற்கனவே இத குசும்பன் சொல்லியாச்சா.. சரி விடுங்க..

செல்வேந்திரன் ஏ ஜோக்குகள் மிகப் பிரபலம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சொல்றது...?

ILA said...

//முன்னாள் முக்கிய பதிவரான இளவஞ்சி//
இப்பவும் கொஞ்சம் முக்கச் சொல்லுங்க. இந்த மாதிரி நல்லா எழுதறவங்க எல்லாம் மண்டை சொறிஞ்சிகிட்டே சும்மானாச்சும் இருக்கிறது கடுப்பா இருக்கு

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அனுஜன்யா.! (இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்)

நன்றி சுந்தர்ஜி.! (அதை ஏற்று நடத்தியவர் யார் என மெயிலில் போட்டுக் கொடுத்துவிடுகிறேன். நீங்களே ஒரு கை பார்த்துக்கங்க..)

நன்றி ஊர்சுற்றி.! (உங்க கையால புகைப்படம் எடுத்து நானும் பிரபலமாக்கிறேன்.// அதுக்கெல்லாம் நிறைய செலவாகும், பரவால்லையா.?)

நன்றி ரோஜா.! (முதல்ல பதிவுக்கு வாங்க.. அப்புறமா பதிவர் சந்திப்புக்கு வர்றதைப்பற்றி கவலைப்படலாம்.. ஹிஹி.. சும்மனாச்சுக்கும்.!)

நன்றி வெயிலான்.! (நீங்கள் ஒருநாள் கூட தங்கிச்செல்லாதது வருத்தமே.. முன்னாடியே பரிசலிடம் விசாரிச்சுட்டிங்களா?)

நன்றி ரம்யா.! (ஏன் இந்த கொலவெறி.?)

நன்றி செல்வா.! (கேண்டி மேடம், நான் சும்மாதான் சொன்னேன். செல்வா அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்லலை..)

நன்றி சக்தி.!

நன்றி இராகவன்.! (25க்கெல்லாம் ஜென்ம சாபல்யமா? சரிதான்..)

நன்றி ஸ்ரீமதி.!

நன்றி பரிசல்.! (ஹிஹி.. ஏ ஜோக்கா? நானா? டாடீ..)

dharshini said...

படிச்சிட்டு followers-ல sign in பண்ணலாம்னு இருந்தேன்.. யாராவது என்ன கிண்டல்பண்ணாங்கண்ணா உங்களுக்கே பாஸ் பண்ணிடறேன்.
:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இளா.! (பெரியவங்க நீங்கதான் கூப்பிட்டுட்டு வரணும். ஆசிஃபும் வற்புறுத்தினார். சரி என்று சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தர்ஷினி.! (ஃபாலோ பண்ணினா எதுக்கு கிண்டல் பண்றாங்க.? யாராவது பண்ணினா சொல்லுங்க.. உதைச்சுடலாம்..)

வால்பையன் said...

அண்ணே இரவு எடுத்த போட்டோவை எனக்கு மெயிலில் அனுப்பி வைக்கமுடியுமா?

இதை கேட்கதான் நேற்று போன் செய்தேன். நீங்கள் டிரைவ் பண்ணிகிட்டு இருந்திங்க!

ப்ளீஸ் மறக்காம அனுப்பிருங்க!

வசந்த் ஆதிமூலம் said...

உங்க அன்புக்கும் கருத்து பதிவிற்கும் நிரம்ப நன்றி அண்ணா. ஃபாலோயர்ஸ் 125 ஆனதுக்கு ஒரு பொறை , டீ வாங்கி தரமாட்டியா..?

புருனோ Bruno said...

// 150வது ஃபாலோயருக்கு தங்க மோதிரம். ஸ்பான்ஸர் : புதுகை அப்துல்லா. //

அது சரி !!

மங்களூர் சிவா said...

ம். கலக்குங்க!!

மங்களூர் சிவா said...

/
ஃபாலோயர்ஸ் லிஸ்டை மட்டும் பாருங்க.. வயித்தெரிச்சல்.! மீட்டர் ரிப்பேராகிவிட்டதென நினைக்கிறேன். 120லிருந்து 123 வருவதற்குள் ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது. ஆகவே சில சிறப்பு பரிசுத்திட்டம் அறிவிக்கலாம் என உள்ளேன். பம்பர் பரிசு : 150வது ஃபாலோயருக்கு தங்க மோதிரம். ஸ்பான்ஸர் : புதுகை அப்துல்லா. 200வது நபருக்கு சூப்பர் பம்பர் காத்திருக்கிறது.
/

ஆஹா!

தமிழன்-கறுப்பி... said...

:))))))))

தமிழன்-கறுப்பி... said...

:)))

தமிழன்-கறுப்பி... said...

அனுபவிக்கிறிங்கய்யா...!