Wednesday, April 1, 2009

டாஸ்மாக்கைத் தேடி..

முன்குறிப்பு : ஒரு வாரமாக கடையைச் சாத்திவிட்டு போய்விட்டதால் ரெகுலர் கஸ்டமர்கள் சரக்கு கிடைக்காமல் அவதிப்பட்டதாக தெரிகிறது. விரைவில் வந்து ஜோதியில் ஐக்கியமாவேன். இருப்பினும் இடைக்கால நிவாரணமாய் இந்தப் பழைய கள்ளை புதிய மொந்தையில் (தலைப்பு மட்டும் புதிதுங்க..) தருகிறேன்.  அ(ப)டித்து மகிழவும்.

தண்ணியடிப்பதை விட்டுவிட்டேன்

பத்து நாட்களுக்கு முன்னர் ரமா வீட்டிலில்லாத ஓர் நாள். அவள் வீட்டிலில்லை என்றாலே இன்று நைன்டிதான் எனக் காலையிலிருந்தே கற்பனைக்குதிரைகள் பறக்கத்துவங்கிவிடும். யாரைக் கூப்பிடலாம்? தனிமையிலேயே இனிமையை கண்டுவிட‌லாமா? கண்ணனை மட்டும் கூப்பிடலாம் என்றால் கோவை போயிருக்கிறான், வர ரெண்டு நாளாகும். ச‌ங்குவைக்கூப்பிட்டு ரொம்ப நாளாகுது. கூப்பிடலாமா? ம்ஹும் வேண்டாம். நாம 90 அடிக்கிறதுக்குள்ள 900 அடிச்சுட்டு இன்னும் வேணும் கிளம்புன்னுவான், 'நடு ராத்திரி டாஸ்மாக்கைத்தேடி' அப்பிடின்னு பதிவு போட வேண்டியதாகிவிடும்.

கிருஷ்ணாவை வரச்சொல்லிவிட்டு 'மான்ஹாட்டன்' போகலாமா என்று யோசனை வந்தவுடனே அதை தவிர்த்தேன். சரிப்படாது. அங்கே பர்ஸ் பழுத்துவிடுவது மட்டுமல்ல, அலைச்சல், ஆட்டோ என பல பிரச்சினைகள். அப்ப வேற வழியில்லை. தனி ஆவர்த்தனம்தான்.

whisk

ஆ.:பீஸிலிருந்து சீக்கிரம் கிளம்பலாம்னு பார்த்தா அன்னிக்குன்னு பார்த்து ஒரு கம்ப்ளைன்ட். கிளம்ப எட்டு மணிக்கு மேல ஆயிட்டுது.

ஒரு வழியா கிளம்பி வீட்டுக்கு போற வழியில இருக்குற டாஸ்மாக்குல நின்னேன். சோதனை ஆரம்பமாச்சு. கூட்டம் கடையை நெருங்கவிடாமல் தேனீக்கள் போல அப்பிக்கொண்டிருந்தது. ஐந்து நிமிடமாயிற்று. கூட்டம் குறைவதைப்போலவோ, யாராவது வாங்கிவிட்டு வெளியேறுவதைப்போலவோ தெரியவில்லை. ஷூக்கள், டக் இன் செய்யப்பட்ட எனது வெள்ளை சட்டை என என் தோற்றத்தையும், அங்கு நின்று கொண்டிருந்த கூட்டத்தையும் பார்த்துக்கொண்டேன். யோசித்துக்கொண்டிருந்தால் ச‌ரிப்ப‌டாது என‌ க‌ள‌த்தில் இற‌ங்கினேன். ஒருவ‌ழியாக‌ @#/%$# போன்ற‌ ப‌ல‌ வார்த்தைக‌ளையும், வாச‌னைக‌ளையும் க‌ட‌ந்து க‌டைக்கார‌ரை நெருங்கினேன். ப‌ண‌த்தை கையில் வைத்துக்கொண்டு கோட்ட‌ர், கோட்ட‌ர் என‌ கூவிக்கொண்டிருந்தேன். என்னைப்போல‌வே ப‌ல‌ரும் கூவிக்கொண்டிருந்தனர். ஆனால் விற்ப‌னைப்பிர‌திநிதியோ யாருடைய‌ குர‌லையும் கேட்ட‌து போல‌வே தெரிய‌வில்லை. அவர் மிக‌வும் நிதான‌மாக‌ பின்புற‌மாக‌ திரும்பி இன்னொரு ஊழிய‌ரோடு பேசிக்கொண்டிருந்தார். கூட்ட‌மும் க‌த்துவ‌தை விடுவ‌தாக‌ தெரிய‌வில்லை, நானும்தான்.

கூட்ட‌த்திலிருந்து ஒருவ‌ர் 'ஏய் #$%/@!, எம்மா நேர‌மா கூவிக்கினுறோம், ஒரு கோட்ட‌ர் குடுறா' என்றார். இந்தக்குரலுக்கு அவர் திரும்பினார். நானும் ம‌கிழ்ந்தேன். ஆனால் அவ‌ரோ ப‌திலுக்கு, 'அடிங் # &&*%$#, பீரு ம‌ட்டும்தான் இருக்குனு எத்தினா த‌பா சொல்ற‌து, க‌ம்முனாட்டி' என்றார். என‌க்கு அதிர்ச்சியாகிவிட்ட‌து. ஐய‌ய்யோ, இவ்ளோ நேர‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டுவிட்டு ஒண்ணும் வாங்காம‌ல் திரும்புவ‌தா, பிய‌ர் ந‌ம‌க்கு ஒத்துக்காதே! என்று அங்கேயே குழ‌ம்பிய‌வாறு யோசித்துக்கொண்டிருந்தேன். அத‌ற்குள், 'வாங்காத‌வ‌ன்லாம், தூர‌ப்போடா @#$%$#^&$' என்ற‌தும் வெளியே வ‌ந்தேன். வேறு க‌டைக்கு போலாம்னா இன்னும் அஞ்சு கிலோமீட்ட‌ர் போணுமே என்று யோசித்துவிட்டு திட்ட‌த்தை அரைம‌ன‌தோடு கைவிட்டேன். நாளைக்கு பாத்துக்க‌லாம் என்று முடிவு செய்துவிட்டு வ‌ண்டியை நோக்கி போனேன், அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.. ஹெல்மெட்டை காண‌வில்லை.சுற்றுமுற்றும் பார்க்கிறேன், ஏராள‌மான‌ வ‌ண்டிக‌ள். உட‌னேயே புரிந்துவிட்ட‌து சான்ஸேயில்லை. முன்னர் எப்போதும் கையிலேதான் வைத்துக்கொண்டிருப்பேன். இப்போதுதான் முன்னைமாதிரி போலீஸ் ஹெல்மெட்டுக்கெல்லாம் பிடிப்ப‌தில்லையே, திருடுபோக‌ சான்ஸ் இல்லை என்று கொஞ்ச‌நாளாக‌வே வ‌ண்டியிலேயே வைத்துவிடுகிறேன். போச்சுது, மூட் அவுட்! எப்பிடியும் இன்னிக்கு அடிச்சே ஆக‌ணும், விடு வ‌ண்டியை கார‌ப்பாக்க‌த்துக்கு.

அங்கேயும் இத‌ற்கு ச‌ற்றும் குறைவில்லாத‌ அனுப‌வ‌த்திற்குப் பின்ன‌ர், ஏதோ முக‌ம்தெரியாத‌ ஒரு கோட்ட‌ரை வாங்கிவ‌ந்தேன். கேட்ட‌து எப்போதுமே கிடைக்காது எனினும் இன்று ரொம்ப‌ சோத‌னையாக‌ விஸ்கிகூட‌ கிடைக்காத‌து என்னை ரொம்ப‌வும் விர‌க்திய‌டைய‌ வைத்த‌து. ட‌ச்ச‌ராவ‌து ம‌ன‌துக்கு திருப்தியாக‌ வாங்கிக்கொள்வோம் என‌ 'க‌.:பே செட்டிநாட்டில்' நின்றேன். வ‌ழ‌க்க‌த்தைவிட‌ கூட்ட‌ம் அதிக‌மாக‌ இருந்த‌து. ஒரு 'பிங்க‌ர்பிஷ்' பார்ச‌ல் சொல்லிவிட்டு காத்திருந்தேன். 20 நிமிட‌ங்க‌ள். பின்ன‌ர் கூலாக‌ வ‌ந்த‌ ச‌ர்வ‌ர் 'ஸாரி ச‌ர், பிஷ் ஐட்ட‌ம் எதுவுமே இல்லை, வேறென்ன‌ வேண்டும்' என்றார். 'டாய்.. யாரைப்பார்த்து இல்லைன்னே, முதல்லேயே சொல்லவேண்டியதுதானே..' என்று குதிக்க‌ ஆர‌ம்பித்தேன். டாஸ்மாக்கில் காண்பிக்க‌ முடியாத‌ கோப‌த்தையெல்லாம் இங்கேதானே காண்பிக்க‌ முடியும். க‌டைசியில் மானேஜ‌ர் போன்ற‌ தோற்ற‌முடைய‌வ‌ர் வ‌ந்து ச‌மாதான‌ம் செய்த‌வுட‌ன் ச‌மாதான‌மானேன். பின்ன‌ர் 'சிக்க‌ன்65' சொன்னேன். ந‌ம்ப‌ மாட்டீர்க‌ள், 35 நிமிட‌ங்க‌ள். வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்ட‌து. பின்ன‌ர் பில்லிங்கிலும் சோத‌னை. 'ஸாரி ச‌ர், 150 ரூபாய்க்கெல்லாம் கார்டு அக்செப்ட் ப‌ண்ண‌மாட்டோம்'. திரும்ப‌வும் ர‌க‌ளை.

சோடா வகையறாக்களை வாங்க வீட்டினருகே வழக்கமாக நூடுல்ஸ் வாங்கும் கடையில் நின்றேன். ம‌ணி 10.15. 'சோடா இல்ல‌ சார், வேறென்ன‌ வேணும்?'. வ‌ண்டியைத்திருப்பினேன். மேலும் சில கடைகள் அடைத்திருக்க ரெண்டு கிலோமீட்டரில் இன்னொரு கடை. 'கூலிங் இல்ல, ப‌ர‌வால்லையா.?' வாங்கிக்கொண்டேன்.

வீட்டுக்கு வ‌ந்த‌ போது ம‌ணி 10.30. ப‌சித்த‌தில் வாங்கிவ‌ந்த‌ சிக்க‌னை கொஞ்ச‌ம் சாப்பிட‌லாம் என‌ பார்ச‌லைத்திற‌ந்தேன். ஆனிய‌ன், லெம‌ன் ஏதுமில்லாம‌ல் சில‌ க‌ருகிய‌ சிக்க‌ன் துண்டுக‌ள் முழித்துக்கொண்டிருந்த‌ன‌, ப‌ழிவாங்கிவிட்டான்க‌ள். ஒரு துண்டை எடுத்து தின்று பார்த்தேன். ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌ துப்பிவிட்டு ஏதாவ‌து ஊறுகாயாவ‌து தேறுமா என‌ அடுக்க‌ளைக்குள் புகுந்தேன். ஊறுகாயைத்தேடிக் க‌ளைத்தேன்.

முக‌ம், கைகால் அல‌ம்பி ரெடியாகிவிட்டு .:பிரிட்ஜைத் திற‌‌ந்தேன். .:ப்ரீஸ‌ர் காலியாக‌ இருந்த‌து. பின்ன‌ர்தான் க‌வ‌னித்தேன் ஐஸ்டிரேக்க‌ள் கழுவி காய‌வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன .:பிரிட்ஜின் மீதே. அட்லீஸ்ட் த‌ண்ணீர்? ம்ஹும். ப‌ர‌வாயில்லை ப‌த்து நிமிஷ‌ம் வெயிட் ப‌ண்ண‌லாம். த‌ண்ணீரை பாட்டில்க‌ளில் பிடித்து .:பிரீஸ‌ருக்குள்ளேயே போட்டேன், சோடா பாட்டிலையும் உள்ளே போட்டு .:பிரிட்ஜின் க‌த‌வைச்சாத்தினேன்.

க‌ர‌ண்ட் க‌ட் ஆன‌து, இருள் சூழ்ந்த‌து.

.

24 comments:

தமிழ் பிரியன் said...

பழசா இருந்தாலும் கள்ளு ருசியாத் தான் இருக்குமாமே.. ;-)

MayVee said...

present sir

பைத்தியக்காரன் said...

:) :) :)

பரிசல்காரன் said...

சரக்கு என்பதால் பழசைக் குடுக்கறீங்களோன்னு கேட்க வந்தேன். ஏற்கனவே த.பி.கேட்டுட்டாரு!

கார்க்கி said...

உங்க சரக்கு ஒய்ன் மாதிரிண்ணா.. பழசானாதான் நல்லாயிருக்கு :)))

Joe said...

இதுக்கு தான் "எதையும் பண்றதுக்கு முன்னாலே புராப்பர்-ஆ ப்ளான்னிங் பண்ணி பண்ணனும் "-ன்னு சொல்றது.

Suresh said...

:-)பழசானாதான் நல்லாயிருக்கு :)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//க‌ர‌ண்ட் க‌ட் ஆன‌து, இருள் சூழ்ந்த‌து.//

:)

வால்பையன் said...

இது மீள்பதிவு தானே!

எனகெல்லாம் இந்த பிரச்சனையே இல்லை!
ஃபாரின் ஸ்காட்சுருந்து
லோக்கல் பட்டை சாராயம் வரைக்கும் எது கிடைத்தாலும் ஒகே தான்!
தொட்டுக்க பெரிதாக எதுவும் தேவையில்லை!
ஆனால் கண்டிப்பாக சிகரெட்டோ பீடியோ வேண்டும்.

சாதா தண்ணீரே போதுமானது!

இவையேல்லாம் எதுவும் கிடைக்காத பட்சத்தில், கிடைத்தால் ராஜவாழ்க்கை தான்!

அ.மு.செய்யது said...

காரப்பாக்கம் வந்தீங்களா...???

ஆமா உங்க வீடு எங்க கீது ?

Truth said...

ஹ ஹ ஹ. வாங்கி வந்த முகம் தெரியாத கோட்டர என்ன பண்ணீரு? அத சொல்லலியே!

எம்.எம்.அப்துல்லா said...

அந்த பதிவுல நான் போட்ட பின்னூட்டத்தையே எடுத்து இங்க மீள் பின்னூட்டமா போட்டுக்கங்க :)

pappu said...

உங்களுக்கு பின்னூட்டம் அனுப்பினவங்க பேரெல்லாம், ஏன் ))))., அப்படின்னே தெரியுது?

கடைசி வரில ஒரு டச் இருந்தது!

Its Me The Monk said...

மசாலா படம் மாதிரி ஆரம்பிச்சு, உலக சினிமா மாதிரி கடைசி வரில ரொம்ப போயடிக்கா முடிச்சிட்டீங்க ... :)

ராம்.CM said...

பின்னூட்டம் போட்ட எல்லோருமே புதிய‌வர்களாக தெரிகிறது....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தமிழ்.!
நன்றி மேவீ.!
நன்றி பைத்தியக்காரன்.!
நன்றி பரிசல்கரன்.!
நன்றி கார்க்கிக்காரன்.! (சரி வுடு.. ஒரு ஃபுளோவுல வந்துடுச்சு)

நன்றி ஜோ.!
நன்றி சுரேஷ்.!
நன்றி சஞ்சய்.!
நன்றி வால்.!
நன்றி செய்யது.!(மேட்டுக்குப்பம். நீங்கள் பக்கத்தில்தான் இருக்கிறீர்கள் என்றால் மெயிலுக்கு வரவும். அடுத்த பீராபி தெரபியில் கலந்துக்கலாம்)

நன்றி ட்ரூத்.! (காக்கா தூக்கிட்டு போயிருச்சு)

நன்றி அப்துல்லா.!
நன்றி பப்பு.!(நானும் நொம்ப நாளா டிரை பண்ணுறேன், யாரும் எப்பிடி சரி பண்றதுன்னு சொல்லமாட்டிக்கிறாங்கோ..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மாங்க்.!
நன்றி ராம்.!

rathnapeters said...
This comment has been removed by the author.
அத்திரி said...

பழைய கள் எப்பவுமே கிக் தான்

ஊர் சுற்றி said...

நல்லாத்தான் இருக்குங்க... ஆனாலும் ஒத்தை ராத்திரியில இத்தன தடைக்கற்களா? ஏதோ தடை ஒட்டப்பந்தயம் பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங்க்...:))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வீட்ல ரங்கமணி இல்லைன்னா அப்படியே ஏதாவது சினிமாவுக்குப் போங்க.. இல்லாட்டி கோவிலுக்குப் போங்க.. அதுவும் இல்லாட்டி வீட்டுக்கு வந்து இஷ்டத்துக்கு சேனல், சேனலா மாத்தி மாத்திப் பாருங்க..

எதுக்குங்க டாஸ்மாக் கடை..?

மங்களூர் சிவா said...

பழசா இருந்தாலும் கள்ளு ருசியாத் தான் இருக்கு.
:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

மகிழவைக்கும் பாராட்டுக்கு நன்றி ரத்னா மேடம்.!

நன்றி அத்திரி.!
நன்றி ஊர்சுற்றி.!
நன்றி உண்மையார்.!
நன்றி தல..

வாழவந்தான் said...

//நாம 90 அடிக்கிறதுக்குள்ள 900 அடிச்சுட்டு இன்னும் வேணும் கிளம்புன்னுவான்//
//ஏதோ முக‌ம்தெரியாத‌ ஒரு கோட்ட‌ரை வாங்கிவ‌ந்தேன்//
// டாஸ்மாக்கில் காண்பிக்க‌ முடியாத‌ கோப‌த்தையெல்லாம் இங்கேதானே காண்பிக்க‌ முடியும். //
// சில‌ க‌ருகிய‌ சிக்க‌ன் துண்டுக‌ள் முழித்துக்கொண்டிருந்த‌ன‌, //
மிகவும் ரசித்த இடங்கள்!!
ஆனால் தாமிரா(a)ஆதிமூலகிருஷ்ணன் சார், இவளோ போராட்டங்களுக்கு பின் அந்த கோட்டர ராவாவே அடிச்சிருக்கலாமே.
அப்பறம் முகம் தெரியாத கோட்டர்களுக்கு வாட்டர், ஊர்காய் இவையே நல்ல மிக்சின், டச்சர்சாகும்.. அறிமுக கோட்டர் பின்விளைவுகளை ஏற்படுத்தினாலும், சைடு டிஷ் சரியைல்லைனு பழியபோட்டு நாம் சிறந்த குடிமகன்(?) பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளலாம்