Thursday, April 2, 2009

ரத்தம்

நேற்று காலை அலுவலகத்தில் இருந்த போது சக ஊழியர் ஒருவரின் தந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்காக O பாஸிடிவ் வகை ரத்தவகையினரைத் தேடிக்கொண்டிருந்த HR தோழி அவசரமாக என்னைப்பிடித்து காரில் அடைத்து அனுப்பி வைத்தார்.. என்னுடன் இன்னும் சிலரும்.

எத்தனையோ நாட்களாக ரத்ததானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும் தன்முயற்சியில் ஈடுபட்டதில்லை. நேற்று அந்த வாய்ப்பு கிடைத்த போது மிக மகிழ்ந்தேன். அந்த பிரபல மருத்துவமனையில் நாங்கள் ரத்தம் தந்துவிட்டு மீண்டும் அலுவலகம் திரும்ப எத்தனித்துக் கொண்டிருந்த போது அந்த சக ஊழியர் எங்களைத்தேடி வந்து கைகொடுத்து வழியனுப்பி வைத்தபோது அவர் கண்களில் தெரிந்த நன்றியுணர்வை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். என்னாலும் உருப்படியான காரியம் ஒன்றைச் செய்யமுடியும் என்ற எண்ணம் பெருமை கொள்ளச்செய்தது.

இது மிகவும் சாதாரண ஒரு நிகழ்ச்சியேயாயினும், உணர்வுப்பூர்வமான இதை ஒரு விழிப்புணர்வு நோக்கத்துக்காக பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

blood2

தயக்கங்களை விட்டொழிப்போம். இது போல இயன்ற காரியங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். உங்களை ஒரு டோனராக பதிவு செய்துகொள்ளுங்கள். அவசியம் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தகுந்த கால இடைவெளிகளில் தன்முனைப்பாக தானம் செய்ய முன்வருவோம். பிறந்தநாள் போன்ற கொண்டாட்ட நாட்களில் டொனேட் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வோம். நம்மிடம் இருக்கும் ஒரு உயிர்காக்கும் மருந்தை பயனுள்ளதாக்குவோம்.

சில செய்திகள் :

  1. நல்ல உடல்நிலையில் இருப்போர் குறைந்தபட்சம் மூன்று மாத இடைவெளிகளில் ரத்ததானம் செய்யலாம்.
  2. தானம் தருவதற்கு முந்தைய குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் மதுவருந்தியோர் ரத்ததான தகுதியை இழக்கின்றனர். பிந்தைய 24 மணி நேரத்திலும் மதுவருந்துவதை தவிர்க்கலாம்.
  3. தானத்துக்கு முந்தைய ஒரு நாள், பிந்தைய குறைந்த பட்சம் ஆறு மணி நேரங்கள் புகைபிடிப்பதை தவிர்க்கலாம்.
  4. சுமார் மூன்று மணி நேரத்துக்கு முன்னர் நல்ல உணவை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கவேண்டும். தானத்திற்குப் பின்னரும் நல்லதொரு உணவை எடுத்துக்கொள்ளவேண்டும்.
  5. ரத்ததானத்தினால் வலியோ, சோர்வோ ஏற்படுவதில்லை. அரைமணி நேரத்திலேயே உங்கள் வழக்கமான வேலையை கவனிக்கத்துவங்கலாம்.

எனது ரத்தவகை O+ve. மிகப்பரவலான ஒரு ரத்த வகை. அரிய வகை அல்ல. அதனால் நாமெல்லாம் தானம் செய்யவேண்டிய அவசியமில்லை என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த மருத்துவமனையில் ஒரு பேனரைக் கண்டேன். எவ்வளவு சிம்பிள் லாஜிக். எனது மதியீனத்தை நினைத்து வெட்கினேன். அது..

"My blood is common. I don't think there will be demand for it" - That is why the demand for your type is greater than for rare types.

இரவு படுக்கையில் விழுந்த போது வலது கையில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்த இடத்தில் மிச்சமிருந்த பசை உறுத்தியது. இடது கையினால் அதை தேய்த்து விட்டுக்கொண்டபோது சொல்லவொண்ணாத ஒரு மகிழ்ச்சியும், பெருமையும் என் மனதில் பரவியது.

.

32 comments:

கார்க்கி said...

சூப்பர் சகா..

நான் ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ஆம் தேதி ரத்ததானம் செய்து வருகிறேன். மாரடைப்பால் இறந்த என் தந்தையின் நினைவாக..

கார்க்கி said...

ஆனா உங்க க்ரூப் ஒ பாஸிட்டிவ்தானா?

நான் ஓல்ட் மன்க் பாஸீட்டிவாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன் :)))

Bhuvanesh said...

நல்ல விழிப்புணர்வு பதிவுங்க!!

பாலராஜன்கீதா said...

நானும் பலவருடங்களாக இரத்ததானம் செய்துகொண்டு இருக்கிறேன். இதுபற்றிய விழிப்புணர்வு இன்னும் பலரைச் சென்றடைய வேண்டும்.

வித்யா said...

நல்ல விஷயம் ஆதி. நான் எமர்ஜென்ஸிக்காக 2 முறை குடுத்துள்ளேன்.

தமிழ் பிரியன் said...

நல்ல முயற்சி ! நல்ல பதிவு!
நானும் பல முறை இரத்தம் கொடுத்துள்ளேன். ஷார்ஜாவில் இரத்த தான முகாமை ஒருங்கிணைத்து நடத்திய அனுபவமும் இருக்கு.. :)

ஸ்ரீமதி said...

ரத்த தானம் பண்ணனும்ன்னு ஆசை இருக்கு.. பட் கொஞ்சம் பயமாவும் இருக்கு...

Thamizhmaangani said...

//சொல்லவொண்ணாத ஒரு மகிழ்ச்சியும், பெருமையும் என் மனதில் பரவியது.//

உங்களது பதிவை படிக்கும்போதும்!

Truth said...

//இரவு படுக்கையில் விழுந்த போது வலது கையில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்த இடத்தில் மிச்சமிருந்த பசை உறுத்தியது. இடது கையினால் அதை தேய்த்து விட்டுக்கொண்டபோது சொல்லவொண்ணாத ஒரு மகிழ்ச்சியும், பெருமையும் என் மனதில் பரவியது.

புரிகிறது ஆதி
உங்களுடை பதிவுகள் அனைத்தும் சூப்பர். நேரம் இருந்தா http://memynotepad.blogspot.com/2009/03/blog-post.html படிக்கவும்.

அ.மு.செய்யது said...

பயனுள்ள பதிவு தல..

இன்னும் சென்னை எழும்பூர் ரத்த வங்கியில் 3 மாதத்திற்கு ஒரு முறை நாமே வாலண்டியராக சென்று ரத்த தானம் செய்து கொள்ளலாம்.

( ஒரு ப்ரூட்டியும் பிஸ்கட் பாக்கெட்டும் தருவார்கள்.)

மற்றுமொரு உபரி தகவல்:

இரத்த தானம் செய்வதற்கு ஒரு வாரம் முன்பு வரை எந்த விதமான மருந்துகளும் உட்கொண்டிருக்க கூடாது.தலைவலி மாத்திரை உட்பட..காரணம் ரத்தம் பெறுபவருக்கு
வலிப்பு வர வாய்ப்புகள் அதிகமாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல உதவி.

அந்த ஆங்கில வாசகங்களும், கடைசி வரிகளும் மனதில் பதிந்தன.

தராசு said...

வாழ்த்துக்கள் தல,

நானும் இந்த பழக்கம் வைத்திருந்தேன், இரண்டு வருடங்களாக தானம் செய்யவில்லை. உங்கள் பதிவை படித்த பின் கண்டிப்பாக செய்ய வேண்டும் என தோன்றுகிறது.

நன்றி.

தராசு said...

//கார்க்கி said...
ஆனா உங்க க்ரூப் ஒ பாஸிட்டிவ்தானா?

நான் ஓல்ட் மன்க் பாஸீட்டிவாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டேன் :)))//

அடங்கவே மாட்டீங்களா!!!!!!!

அமுதா said...

நல்ல விஷயம்

புதுகைத் தென்றல் said...

உயிர் காக்கும் ரத்ததானம் பற்றி அருமையான தகவல்கள். நன்றி ஃப்ரெண்ட்.

Mahesh said...

நல்ல பதிவு.... நானும் ஓ+ தான்... நாலைந்து முறை தானம் செய்திருக்கேன்... வாலண்டியராத்தான். சில ப்ளட் பேங்குகள்ல பதிவும் பண்ணி வெச்சுருக்கேன்... ஆனா இதுவரை அழைப்பு வந்ததில்லை...

ச்சின்னப் பையன் said...

சூப்பர் சகா..

கார்க்கி said...

/ ச்சின்னப் பையன் said...
சூப்பர் சகா..//

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தாரணி பிரியா said...

நல்லதொரு பதிவுங்க ஆதி. இது சாதாரண பதிவு எல்லாம் இல்லை. இன்னும் நிறைய பேருக்கு ரத்த தானம் குறித்த பயம் இருக்கு. இது போன்ற பதிவுகள்தான் அவங்களோட பயத்தை குறைக்கும்

எம்.எம்.அப்துல்லா said...

என் இரத்தத்தின் இரத்தமே நீ வாழ்க!

மங்களூர் சிவா said...

ரைட்னா அப்பப்ப செய்யறது உண்டுதான்.

மகிழ்சி.

பரிசல்காரன் said...

நானெப்போதுமே பி பாஸிடிவ்.

வருடம் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு முறை நிறுவனம் சார்பாக நடைபெறும் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்து மறக்காமல் பிஸ்கெட், ஜூஸ் சாப்பிடுவது வழக்கம்!

ஹாலிவுட் பாலா said...

ஃப்ளோரிடாவில் (மே பி அமெரிக்கா முழுக்க) ஒவ்வொரு தியேட்டர், வால்மார்ட், மால் போன்ற இடங்களில் ரத்ததானம் செய்ய AC பஸ் நிக்கும்.

நாங்க இங்க க்யூல நின்னு, 30-40 நிமிடம் வெயிட் பண்ணியெல்லாம் ரத்தம் கொடுக்கறோம்.

நம்ம இளைஞர்கள் திருந்தனும். ஆனா இங்கன்னா அந்த ப்ளட் எங்க போகுதுன்னு தெரியும். நம்ம ஊர்ல அதையும் வித்து காசாக்கிடுவானுங்களே!

இந்த ப்ளட் கொடுக்கற விசயத்தில், ப்ளாஸ்மாவை மட்டும் பிரிக்கிற மாதிரி இன்னொரு டைப் டொனேஷன் இருக்கு. ரொம்ப நேரம் எடுக்கும். ஆனா அதுக்கு, சினிமா டிக்கெட் (2-3-4) எல்லாம் ஃப்ரியா கொடுப்பாங்க.

sayrabala said...

super

yaro said...

பாலராஜன் கீதா பல வருடமாக செய்தால் கவலையில்லை. அதுவெல்லாம ஒரு மேட்டரே இல்லை.

ஒரே தடவை ரத்த தானம் செய்தால் சுடசுட பதிவிட்டு விடவேண்டும்.

அப்போதுதான் தமிலிஷ்ல ஒட்டு குவியும்.


நல்ல எண்ணம். வாழ்த்துக்கள்.

Joe said...

நல்ல பதிவு!
உங்களது அறிவுரையைப் படித்து பல பேர் ரத்த தானம் செய்ய முன்வருவார்களாக.

வருடத்துக்கு ஒரு முறை என்பதை விட, மூன்று மாதத்துக்கு ஒரு முறை என்பதே சிறந்தது. Blood donation once in a year, may be a good start!

வால்பையன் said...

//தானம் தருவதற்கு முந்தைய குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் மதுவருந்தியோர் ரத்ததான தகுதியை இழக்கின்றனர். பிந்தைய 24 மணி நேரத்திலும் மதுவருந்துவதை தவிர்க்கலாம்.//

மதுரையில் கஞ்சா அடிப்பதற்காக ரத்தம் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்!
அரியவகை ரத்தம் என்றால் ஏக கிராக்கி.

நானும் சிக்க தெரிந்தேன்!
கஞ்சா பிடிக்காததால் பிடிபடாமல் தப்பித்தேன்!

சந்தனமுல்லை said...

கலக்கல்!

கும்க்கி said...

ரொம்ப நல்ல விஷயம் தோஸ்த்.ஆனா பயம் காரணமா ஒருதடவகூட ரத்ததானம் செய்ததில்லை நான்.
முகாம் மட்டும் நடத்துவோம் கொஞ்சம் கூச்சத்துடனே.

வெண்பூ said...

ஆதி, பெயர் மாற்றத்துக்கு அப்புறம் ஒரே விழிப்புணர்வுப் பதிவா போட்டு தாக்குறீங்க... என்ன மேட்டரு?

சென்ஷி said...

நல்ல பதிவு தலைவரே.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கார்க்கி.!
நன்றி புவனேஷ்.!
நன்றி பாலராஜன்கீதா.!
நன்றி வித்யா.!

நன்றி தமிழ்.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி தமிழ்மாங்கனி.!
நன்றி ட்ரூத்.!

நன்றி செய்யது.!
நன்றி அமித்து.!
நன்றி தராசு.!
நன்றி அமுதா.!
நன்றி ஃபிரெண்ட்.!
நன்றி மகேஷ்.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி தாரணி.!
நன்றி தல.!

நன்றி மங்களூர்.!
நன்றி பரிசல்.!
நன்றி பாலா.!
நன்றி சாய்ராபாலா.!
நன்றி யாரோ.!

நன்றி ஜோ.!
நன்றி வால்பையன்.!
நன்றி சந்தனா.!
நன்றி கும்க்கி.!

நன்றி வெண்பூ.! (அருந்ததீ விமர்சனமெல்லாம் நல்லதொரு விழிப்புணர்வு பதிவுதானாம்.. ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க..)

நன்றி சென்ஷி.! (அத்திப்பூ பன்னிரண்டு பதிவுகளுக்கு ஒருதடவைதான் பின்னூட்டம் போடுமாம்..)