Wednesday, April 8, 2009

'உண்மையில் CAPA என்ற ஒன்று இருக்கிறதா?‘

முன்குறிப்பு 1 : தலைப்பைப் பார்த்து இது கும்மிப்பதிவென ஒரு நல்ல முடிவுக்கு வந்துவிடவேண்டாம்.. இது ஒரு துறைசார்ந்த டெக்னிகல் பதிவு (லேபிளை கவனிக்கவும்).

முன்குறிப்பு 2 : துறை சார்ந்த பதிவுகளில் பிராக்கெட்டுகளில் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டுமென்பது எழுதப்படாத விதி(Rule). அது இதிலும் பின்பற்றப்பட்டுள்ளது.

முன்குறிப்பு 3 : பயன்படுத்தப்பட்டுள்ள தமிழாக்கங்கள் தமிழை வளர்க்கும் முயற்சியில் செய்யப்பட்டவை அல்ல. சரியானவற்றை ஏற்றுக்கொள்ளவும், கொஞ்சம் ஓவராக இருப்பனவற்றுக்கு சிரித்துக் கொள்ளவும் உங்களுக்கு உரிமை உண்டு. தமிழாக்கத்துக்கு புத்தக உதவிகள் நாடப்படவில்லை. சொந்த அறிவே(?) பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்குறிப்பு 4 : துறைசார்ந்த பதிவுகள் வெறும் அறிவுரையாக அல்லது புலம்பல்களாக மட்டுமே வழங்கப்படுவதல்ல.. ஆகவே தவறுகளையும், மேல்தகவல்களையும் பின்னூட்டங்களில் தரலாம்.

முன்குறிப்பு 5 : முதலில் இந்தப்பதிவு ‘ஆடிட்டிங்குக்கு அல்வா கொடுப்பது எப்படி?’, ‘இவ்விடம் தரமான பிரியாணி கிடைக்கும்.’ என்ற இரு வேறு பதிவுகளாக எழுதப்பட திட்டமிட்டு பின்னர் உங்கள் மேல் கொஞ்சம் இரக்க உணர்வு தோன்றி சுருக்கமாக ஒரே பதிவாக போட முடிவு செய்யப்பட்டது.

முன்குறிப்பு 6 : எனது முந்தைய துறைசார்ந்த.. என்ன.. முன்குறிப்புகள் போதுமா? ஊஹூம்.. முடியாது.! இன்னும் ஒரு மிக முக்கியமான முன்குறிப்பு உள்ளது. அதாவது இந்தப்பதிவு மற்ற ஆடிட்டிங்குகளில் சிக்கிக்கொள்பவர்களுக்கும் ஓரளவு பொருந்தும் எனினும் குறிப்பாக ISO சிஸ்டத்துக்கு ஆட்பட்டுக்கிடக்கும் எண்ணற்ற பரிதாப ஜீவன்களுக்காகவே எழுதப்படுகிறது. என்ன.? ISO என்றாலே என்னவா? உங்களைப் போன்ற அதிர்ஷ்டப்பேர்வழிகள் இதை தொடர்ந்து வாசிக்க வேண்டியதில்லை.

இனி..

சரி செய்தலும், தொடரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்.. (CAPA)

அப்படி என்றால் என்ன? ISO சிஸ்டம் என்ன சொல்கிறது? முதலில் ஒவ்வொரு நிறுவனத்திலும் இந்த குவாலிடி பிரிவு என்று ஒன்று ஏன் இருக்கிறது? அவர்கள் ஏன் பிற பிரிவுகளில் உள்ளோரை நோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்? பதில் மிக எளிதானது. இங்கு எந்தச்செயலுமே கச்சிதமாக (Perfection) நிகழ்வதில்லை, யாருமே தவறு செய்யாதவண்ணம் கச்சிதமாக செயல்படுவதில்லை, எந்த எந்திரமுமே கச்சிதமாக நீடித்து இயங்குவதில்லை. ஆகவேதான் குவாலிடி என்ற ஓர் பிரிவு. அவர்களின் கச்சிதத்தை அல்லது கழுத்தைப்பிடிக்கத்தான் ISO சிஸ்டம், ஆடிட்டிங் இதெல்லாம். அவர்களின் கச்சிதத்தை சோதிக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள். ரொம்ப ஓவராக போக வேண்டாம். ஆனானப்பட்ட நல்லெண்ணையையே ‘டபுள் ரீஃபைண்ட்’தானே செய்கிறோம்.. இப்போதைக்கு இது போதும் நமக்கு.

சரி.. இந்த ஆடிட்டிங்கில்.. ம்ஹூம். இது சரிப்படாது. இங்கே ஆரம்பிச்சா முடிக்கிறதுக்குள்ள விடிஞ்சிரும். அதோடு நமது இப்போதைய பிரதான எண்ணம் ஆடிட்டிங் பற்றி தெரிந்துகொள்வதல்ல. ஆடிட்டர் தரும் NCR என்ற வஸ்துவை CAPA என்ற வஸ்து மூலமாக எப்படி அட்டாக் செய்வது என்பதைப்பற்றி மட்டும்தான். ஆகவே அதை மட்டும் பார்க்கலாம்.

ஆடிட்டர் என்பவர் லங்கேஸ்வரன் மாதிரி ஆடிட்டிங் என்ற ஆரம்பக்கட்ட போரையெல்லாம் முடித்துவிட்டு இறுதியாக உங்கள் மீது NCR என்ற பாணங்களை தொடுப்பார். அதை நீங்கள் ராமன் மாதிரி சாமர்த்தியமாக CAPA என்ற எதிர்பாணங்கள் கொண்டு தடுத்துவிடவேண்டும். இல்லாவிட்டால் ஆடிட்டிங்குக்கு மறுநாள் உங்கள் மானேஜர் அறையில் காது புளிக்க புளிக்க உங்களுக்கு அறிவுரைகள் கிடைக்கும், சிலருக்கு அல்வாவும் கிடைக்கலாம்.

‘பிழை அறிக்கை’ (NCR - Non Conformity Report) என்றால் என்ன? அதற்கு முன்னால் சிஸ்டம் என்றால் என்ன? என்ற கேள்வியைப் பார்த்துவிடலாம். நீங்கள் ஒரு செயலை எப்படிச் செய்யப்போகிறீர்கள் என்று நீங்களே முன்னரே கச்சிதமாக எழுதிவைத்திருப்பதுதான் சிஸ்டம். நாம் எழுதியத அதைப் வைத்துக்கொண்டு நம்மையே அதைச் சரியாக செய்தாயா? இதைச் சரியாக செய்தாயா? என்று கேட்பதுதான் ஆடிட்டிங்.

உதாரணம் பார்க்காவிட்டால் சரியாக வராது. ஞாயிறு மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு விருந்தினர் (Customer) வரவிருக்கிறார்கள். நீங்கள் பிரியாணி பண்ணித்தரலாம் என்று காலையில் முடிவு செய்கிறீர்கள். இப்போது நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை ஒரு செயல்திட்டமாக (Operating procedure) எழுதச்சொன்னால் என்ன பண்ணுவீர்கள்?

நானென்றால் என்ன பண்ணுவேன்? 11 மணி வாக்கில் ரமாவைக் கூப்பிட்டு ‘ரெண்டு பேர் வர்றாங்கம்மா.. பிரியாணி பண்ணிடு இன்னிக்கு’ என்று சிம்பிளாக சொல்லிவிடுவேன். காரியம் நடந்துவிடும். ஆனால் இது வெண்பூவினால் முடியுமா? அவர் இவ்வாறு எழுதுகிறார்...

முதலில் அடுக்களையில், ஃபிரிட்ஜில் தேவையான பொருட்கள் இருக்கின்றனவா? (Source, Raw materials etc.,) அவை தரமானவையா? இல்லாவிட்டால் என்ன செய்வது? (Quality) மனைவியின் உதவி (Production capacity) கிடைக்குமா? கிடைக்காவிட்டால் என்ன செய்வது? உதவியில்லாவிட்டாலும் இரண்டு மணிநேரத்தில் (Lead time) முடித்துவிடலாமா? இல்லாவிட்டால்..? பாத்திரங்கள், அடுப்பு, கருவிகள் தயாராக இருக்கின்றனவா? இல்லாவிட்டால்.? என எல்லாவற்றையும் பார்த்துவிட்டபிறகே விருந்தினர்களை நான் அழைப்பேன் என்கிறார்.

சரி. ஆடிட்டர் வருகிறார். எங்கே எல்லாவற்றையும் காண்பியுங்கள் என்கிறார். காண்பிக்கிறீர்கள். ‘கருவிகள் பிரிவில் மொத்தம் மிக்ஸி, கத்தி, அரிவாள்மனை, தேங்காய் துருவி போன்ற 7 ஐட்டங்கள் இருக்கவேண்டுமே? எங்கே தேங்காய் துருவியைக் காணவில்லையே.?’ என்கிறார்.

போச்சா.. மாட்டிக்கொண்டீர்களா? முதல் NCR. ‘உங்கள் கணக்குப்படி நான்கு விருந்தினர் வருகிறார்களே.. இருப்பது ஒரு கிலோ அரிசிதான் யாரை டபாய்க்கிறாய்?’ இரண்டாவது NCR.

நீங்கள் புத்திசாலித்தனமாக ‘இதுபோல சூழலில் பக்கத்து கடையில் அரிசி வாங்கிக்குவோம் சார்.. இதோ இருக்குது பாருங்க இத்தனாம் பக்கத்துல ப்ரொசிஜர்ல எழுதியிருக்கோம்’ என்பீர்கள். அவர் பதிலுக்கு, ‘கடை அடைச்சிருந்துதுன்னா என்ன பண்ணுவே?’ என்று உங்களை மடக்கிவிட்டு கொலைவெறியாய் சிரிப்பார். பிறகு ‘பிரியாணியும், ரெய்தாவும் ஓகே.. ஆனால் குருமாவை வாயில் வைக்கமுடியவில்லையே.. நண்பர்கள் என்ன கஷ்டப்படுவார்கள்?’ போச்சு, அடுத்த NCR.

சரி ஒருவழியாக இரண்டு NCR களையும், இரண்டு AFI (Area for Improvements - அதாவது அறிவுரை) களையும் வாங்கியிருப்பீர்கள். அப்படியே விட்டுவிட்டால் ஆடிட் முடியாது. நீங்கள் அந்த NCR களை நீக்கும் முயற்சியாக ‘சரி செய்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அறிக்கை’ (CAPA - Corrective Action and Preventive Actions) யை தாக்கல் செய்யவேண்டும். அதெல்லாம் முடியாது, எனக்கு ஆடிட்டிங்கே தேவையில்லை என்றால் அது உங்க இஷ்டம்.. என்ன ஒன்று.. ‘இவ்விடம் தரமான பிரியாணி கிடைக்கும், நண்பர்கள் நம்பி வரலாம்.. நாங்கள் கேரண்டி.!’ என்ற (ISO9001 : 2000 Certification) போர்டை தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள், அவ்வளவுதான்.

CAPA வை விட்டுவிட்டு எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்கிறோம். எப்படி ஓர் CAPA அறிக்கையை தயார் செய்வது? என பார்க்கலாம்.. ‘சொல்லுக சொல்லை பிறிதோர் சொல்..’ ரேஞ்சுக்கு தயார் செய்ய வேண்டும். உதாரணமாக ‘தேங்காய் துருவி’ NCR ஐ பார்ப்போம். அது ஏன் வந்தது.? நேற்றுதான் மேடையிலிருந்து கீழே விழுந்து உடைந்திருக்கும். நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள். அதைச்சொல்லியிருந்தாலும் சிக்கல்தான். எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தது? இந்த உயரத்திலிருந்து விழுந்தால் பொதுவாக தேங்காய் துருவி உடையாதே. அப்படியென்றால் மட்டமான துருவியை வாங்கிவைத்திருந்தீர்களா? அது தேனிரும்பா? வார்ப்பிரும்பா? தேங்காயை சுழற்றுவது போன்ற மாடலா? அல்லது துருவியை சுழற்றுவது போன்ற மாடலா? என்று ஆயிரம் கேள்விகள் வந்திருக்கும். இதற்கு எப்படி CAPA எழுதுவது?

வேர்க்காரணம் (Rout cause) : ‘காணாமல் போய்விட்டது’

சரிசெய்தல் (Corrective Action) : ‘புதுசு வாங்கிவிடுகிறோம்’

முன்னெச்சரிக்கை (Preventive Action) : ‘இனி கவனமாக இருக்கிறோம்’

ம்ஹூம்.. இதில் பிரச்சினை இருக்கிறது. ‘காணாமல் போய்விட்டது’ எனில் உங்கள் நிறுவனத்தின் அடிப்படை விஷயத்திலேயே கோளாறு இருக்கிறது என்று அர்த்தமாகிறது. இதைப்போலவே ஒவ்வொன்றும் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. ‘புதுசு வாங்கிவிடுகிறோம்’ இந்தக்கேஸைப் பொறுத்தவரை ஓரளவுக்கே ஏற்புடையதாகிறது. ‘இனி கவனமாக இருக்கிறோம்’ என்பதை நிச்சயம் ஏற்கமுடியாது. அப்படியாயின் எல்லா பிரச்சினைகளுக்குமே இதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சொல்லமுடியும். இப்படிப் பொத்தாம் பொதுவாக கூறாமல் ‘எப்படி? எப்போதிலிருந்து? யாரால்?’ என்று தெள்ளத்தெளிவாக கூறவேண்டும். மேலும் அது, இது போல சிஸ்டத்தில் வேறு எங்கெல்லாம் தவறுகள் இருக்கிறதோ அவற்றையும் சேர்த்துக் களைவதாக இருக்கவேண்டும், மீண்டும் குறிப்பிட்ட வேர்க்காரணம் ஏற்படாதவாறு அறவே தவிர்ப்பதாக இருக்கவேண்டும்.

அப்படின்னா மேற்கண்ட உதாரணத்துக்கு எப்படி CAPA எழுதலாம்? ம்ஹூம் முதலில் இதை திருத்திக்கோங்க.. எப்படி CAPA எழுதலாம் இல்லை., எப்படி CAPA எடுக்கலாம்.? இவ்வளவு மூச்சுவாங்க பாடம் நடத்தியிருக்கேன்ல.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.!

.

41 comments:

அ.மு.செய்யது said...

மீத ஃபர்ஸ்ட்டா ?

MayVee said...

me th 1st

MayVee said...

இந்த இன்ஜினியரிங், quality control க்கு எல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ; அதனால் தான் நான் brand பக்கம் ஓடி வந்துட்டேன் ......

Anonymous said...

வெரி குட். இப்படியே 5S, SIX SIGMA, LEAN MANAGEMENT, HONEY BEE MARKETING, ERP, ETC….எல்லாம் சொல்லுங்க, உபயோகமா இருக்கும்.

அ.மு.செய்யது said...

என்ன பொறுத்த வரைக்கும் ஆடிட்டிங் வராங்கனா டெஸ்க் மேல பரப்பி வச்சிருக்கிற பிரிண்ட் அவுட்டுகள கிழிச்சி குப்ப தொட்டியில போட்டு பதுக்கி வைக்கணும்.

இல்லனா டி டிரைவ்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கிற அசின்,நமீதா போட்டோக்கள ஷிப்ட் டெலிட் பண்ணனும்.

இதுல‌ இவ்ளோ மேட்டரு இருக்கானு இப்ப‌ தான் புரிஞ்ச‌து !!!!!!

இய‌ற்கை said...

NCR...CAPA...

aiyo...officela than intha thollai thanga mudiyalainna..ingaiyuma...

MOMMMYYYYYY:-((((((

MayVee said...

" இய‌ற்கை said...
NCR...CAPA...

aiyo...officela than intha thollai thanga mudiyalainna..ingaiyuma...

MOMMMYYYYYY:-(((((("


periya periya repeatu........

T.V.Radhakrishnan said...

:-))))

தராசு said...

தல,

நான் ஆணி புடுங்கற இடத்துல இந்த RCA (Root cause Analysis) வர போனேன். அதுக்கு மேல தாகு பிடிக்க முடியாம CAPA வையெல்லாம் இன்னொருத்தன் தலையில தள்ளிவிட்டுட்டேன்.

ஆனால் construction site ல வேலை செய்யறது எவ்வளவோ சுலபம்டா சாமி.

Very Educative Post, ரொம்ப நாளா துறை சார்ந்த பதிவை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்த்தேன்.

கார்க்கி said...

முன்குறிப்பை படித்து டய்ர்டாகி விட்டேன்.. பிறகு வருகிறேன்

தமிழ் பிரியன் said...

நல்ல பதிவு ஆதி! எங்கள் நிறுவனமும் ISO வாங்கியுள்ளது. எல்லா procedure ம் follow செய்கிறொம். ஆனால் நிறைய விடயங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றது என்பது ஒரு சோகம்.

இனியவன் said...

மிக மிக நல்ல பதிவு.

நாங்கள் ISO 9002, ISO 14000 and ISO 18000 வாங்கியுள்ளோம். அதனால் அதன் கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். சில பல சமயங்களில் எனக்கு இந்த சிஸ்டம்கள் உதவி இருக்கிஎறன.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அடப்பாவி மக்கா..

பிரியாணி கிடைக்கும்னு தலைப்புல போட்டு அழைச்சுப்புட்டு இது ஆபீஸ் வேலைய பத்தின பதிவுன்னு கூலா சொல்ற இந்த ஆதிமூலகிருஷ்ணனை என்ன செய்றது..?

பிரியாணின்னு ஆசையா ஓடி வந்தேன்..!

Mahesh said...

ஆத்தீ.... பிரியாணி கூட இம்புட்டு டேஸ்டா இருக்காது... உங்க இடுகை அம்புட்டு டேஸ்டு... !!!!

Vetri said...

சமீபத்திய மிக சிறந்த பதிவு. இதே போன்று மேலும் எதிர்பார்கின்றேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செய்யது.!
நன்றி மேவீ.!
நன்றி மயில்.! (அநியாய‌ம் ப‌ண்ணாதீங்க‌.. 5S, Six sigma, Lean எல்லாம் எழுதியாச்சு, லேபிளை கிளிக் ப‌ண்ணுங்க‌..)

நன்றி இயற்கை.!
நன்றி டிவிஆர்.!
நன்றி தராசு.!
நன்றி கார்க்கி.! (எஸ்கேப்பா.. வேற‌ என்னதாம்ப்பா ப‌ண்ண‌ச் சொல்றீங்க‌..)

நன்றி தமிழ்.!
நன்றி இனியவன்.! (9001 க்கே நாக்கு வெளியில‌ வ‌ருது, இந்த‌ ல‌ட்ச‌ண‌த்துல‌ 18000னா.? ட‌மால்..)

நன்றி உண்மைத்தமிழன்.!
நன்றி மகேஷ்.!
நன்றி வெற்றி.!

வித்யா said...

உங்கள் சிக்ஸ் சிக்மா பதிவை படிச்சிருக்கேன். ஆனா இந்த பதிவு புரியுது ஆனா புரியல. ஒருவேளை என் அறிவு லெவலுக்கு இது ஜாஸ்தியோன்னு தோணுது.

Joe said...

அதென்ன rout cause? அது root cause நண்பா!

நல்ல பதிவு! ஆனா படிச்சு முடிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குது!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வித்யா.!
நன்றி ஜோ.! (இது மாதிரி விஷயத்தை மெயிலில் சொல்லக்கூடாதா? பின்னூட்டம் போட்டு மானத்த வாங்குங்க.. இப்ப முடியாது, சாந்திரம் வீட்டுக்குப்போனதும் சரி பண்ணிடுறேன்)

senthilkumar said...

இப்படி CAPA எடுக்கலாம் ,இது ஓரளவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...சரியான CAPA கொடுத்தால் நன்றாக இருக்கும்...வாழ்த்துக்கள்


வேர்க்காரணம் (Rout cause) : "மாதாந்திர பராமரிப்பிற்கு சென்று உள்ளது"

சரிசெய்தல் (Corrective Action) : ‘பராமரிப்பு முடிந்து நாளை வந்துவிடும் ’

முன்னெச்சரிக்கை (Preventive Action) : ‘பராமரிப்பு காலத்தில் உபயோகிக்க மாற்று (spare) வாங்கப்பட்டு விட்டது )

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா புரியும்படி இருக்கு...

இட்லிக்கு அப்புறமா இப்ப பிரியாணியா
உதாரணத்துக்கு...

வெண்பூ said...

ஆதி, வழக்கம் போல ஒரு கஷ்டமான சப்ஜக்ட்டை அழகா விளக்கி இருக்கீங்க (அதுவும் என் பெயரோட எனக்கு புரியற மாதிரி உதாரணத்தோட..ஹி..ஹி..)

கும்க்கி said...

நல்ல பதிவு தோஸ்த்.
ஆனா ஒரு சந்தேகம்.அந்த ஆடிட்டர்கள் உங்கள் நிறுவனத்தால் நியமிக்கப்படுபவர்களா..இல்லை சான்று தரும் நிறுவனத்தால் அனுப்பிவைக்கப்படுபவர்களா..?
இது எத்தனை நாளைக்கொருமுறை நிகழும்?

கும்க்கி said...

துறை சார்ந்த பதிவாக இருந்தாலும் மிக எளிமையாக புரிந்துகொள்ளும்படி அல்லவா எழுதப்பட்டிருக்கிறது.இதற்கு ஏன் இவ்வளவு முன்குறிப்புகள்...?

வாழவந்தான் said...

உங்கள் துறைசார்ந்த பதிவுகள் எல்லாமே எளிய வார்த்தைகளில் புரியும்படி தந்திருக்கீங்க, நன்றி!

அறிவிலி said...

வேர் காரணம் - தேங்காய் துருவி கெட்டு போனதால் பராமரிப்புக்கு அனுப்பியிருக்கிறோம்.

சரி செய்தல் - 2 நாட்களில் வந்து விடும்

முன்னெச்சரிக்கை - துருவிய தேங்காய் பாக்கெட்டில் அடைத்து, அருகில் இருக்கும் 24 மணி நேர சூப்பர் மார்க்கெட்டில் விற்கிறார்கள்.
44ம் பக்கம் செக்ஷன் 5.34 இல் இந்த மாற்று ஏற்பாடு எழுதப்பட்டுள்ளது.

ராஜ நடராஜன் said...

நான் வெஜிடேரியன்! ன்னு பின்னூட்டம் போட வந்தா துறை சம்பந்தப் பட்டதா இருக்கே!இங்கேயெல்லாம் கையில காசு!வாய்ல தோசைதான்.CAPA கஞ்சியெல்லாம் கிடைக்காது.

தமிழ்ப்பறவை said...

அகேயின் பேக் டூ ஃபார்மா...?!
நல்லா இருக்குது பதிவும், புரியவைத்த முயற்சியும்....
எல்லாம் நல்லாத்தானிருக்கு.ஆனா எல்லாமே பேப்பர் ஒர்க் மட்டும்தான்.முதல்ல இந்த ஐ.எஸ்.ஓ வையே தூக்கணும். ஆஃபீஸ்ல பாதி இடத்தை இந்த டாகுமெண்ட்ஸே அடைச்சுக்கிடுது.
ரூட் காஸ் அனாலிசிஸ் ஒழுங்கா இருந்தா பரவாயில்லை. அதுவும் ஏதோ சப்பைக் கட்டு கட்டுற மாதிரி இருக்கும். அடுத்து திரும்பவும் அதே பிரச்சினை வரும்போது(வராதுன்னு உறுதி சொல்ல முடியாதில்லையா) பழைய ரூட் காஸே பென்ச் மார்க்காயிடும்.
ஆனா இன்னொரு முக்கியமான விஷயம் இந்த குவாலிட்டி துறை சரியா களப் பணில இறங்கினா, மாசத்துக்கு பத்து போல்ட் கூடத் தயாரிக்க முடியாது.
க்வாலிட்டி துறையே இல்லைன்னா, பத்து லட்சம் போல்ட் தயாரிச்சாலும் ஃபேக்டரிய விட்டு வெளியேத்த முடியாது.
ஆகக்கூடி சுருக்கமா சொன்னா, க்வாலிட்டி துறைன்றது, ‘ஜனாதிபதி பதவி’ன்னு சொல்லலாம்.(என்னோட கருத்து மட்டுமே)

ஆயில்யன் said...

கலக்கலுங்க!


நானும் ஐ எஸ் ஒ ப நடைமுறைகள்ன்னு ஒரு புக்கை வைச்சுக்கிட்டு படிக்க படாதபாடு பட்டுக்கிட்டிருக்கேன்!

மொத்த பதிவுகளையும் படிச்சு அப்பாலிக்கா அதை நோட்டம் வுட்டுக்கிறேன்

கண்டினியூ பண்ணுங்க :)

தமிழ் பிரியன் said...

///தமிழ்ப்பறவை said...

அகேயின் பேக் டூ ஃபார்மா...?!
நல்லா இருக்குது பதிவும், புரியவைத்த முயற்சியும்....
எல்லாம் நல்லாத்தானிருக்கு.ஆனா எல்லாமே பேப்பர் ஒர்க் மட்டும்தான்.முதல்ல இந்த ஐ.எஸ்.ஓ வையே தூக்கணும். ஆஃபீஸ்ல பாதி இடத்தை இந்த டாகுமெண்ட்ஸே அடைச்சுக்கிடுது.
ரூட் காஸ் அனாலிசிஸ் ஒழுங்கா இருந்தா பரவாயில்லை. அதுவும் ஏதோ சப்பைக் கட்டு கட்டுற மாதிரி இருக்கும். அடுத்து திரும்பவும் அதே பிரச்சினை வரும்போது(வராதுன்னு உறுதி சொல்ல முடியாதில்லையா) பழைய ரூட் காஸே பென்ச் மார்க்காயிடும்.
ஆனா இன்னொரு முக்கியமான விஷயம் இந்த குவாலிட்டி துறை சரியா களப் பணில இறங்கினா, மாசத்துக்கு பத்து போல்ட் கூடத் தயாரிக்க முடியாது.
க்வாலிட்டி துறையே இல்லைன்னா, பத்து லட்சம் போல்ட் தயாரிச்சாலும் ஃபேக்டரிய விட்டு வெளியேத்த முடியாது.
ஆகக்கூடி சுருக்கமா சொன்னா, க்வாலிட்டி துறைன்றது, ‘ஜனாதிபதி பதவி’ன்னு சொல்லலாம்.(என்னோட கருத்து மட்டுமே)///

அப்படியே என் எண்ணத்துடன் ஒத்துப் போகின்றது.. ;-)

அ.மு.செய்யது said...

//நல்ல பதிவு தோஸ்த்.
ஆனா ஒரு சந்தேகம்.அந்த ஆடிட்டர்கள் உங்கள் நிறுவனத்தால் நியமிக்கப்படுபவர்களா..இல்லை சான்று தரும் நிறுவனத்தால் அனுப்பிவைக்கப்படுபவர்களா..?
இது எத்தனை நாளைக்கொருமுறை நிகழும்?//

க‌ம்பெனியால் ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌து இண்ட‌ர்ன‌ல் ஆடிட்டிங்.

தர சான்று தரும் நிறுவனங்களால் நடத்தப்படும் ஆடிட் எக்ஸ்டர்னல் ஆடிட்டிங்.

உள்ள‌ இருக்க‌வ‌ங்க‌ள‌ ஈஸியா ச‌மாளிச்சுட‌லாம்.எக்ஸ்ட‌ர்ன‌ல் ஆடிட்டிங் கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ம்.

Joe said...

மன்னிக்கவும் தாமிரா,
1. உங்களை புண்படுத்தும் வகையில் இருந்திருந்தால் பின்னூட்டத்தை நீக்கியிருக்கலாமே?
2. உங்கள் மின்னஞ்சல் முகவரி எனக்கு தெரியாது.

இதில ஒரு நல்ல விஷயம் என்னன்னா, இனிமே யாரும் என்னை "மானம், ரோஷம் இல்லாத சல்லிப்பய"-ன்னு சொல்ல முடியாது. தாமிரா கிட்ட கொஞ்சம் மானத்த வாங்கி வைச்சுருக்கேன்-ன்னு சொல்லிடுவேன்ல? ஹீ ஹீ!

ஆதிமூலகிருஷ்ணன் said...

சும்மா ஜாலியா சொன்ன விஷயத்துக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம்? மெயில் ஐடி ப்ரொபைலில் உள்ளது.

(அப்புறம் இதெல்லாம் அடிக்கடி நடக்குறதுதான். நமக்கு வேற கொஞ்சம் மானம் ஜாஸ்தியா? எல்லாரும் இப்படித்தான் வாங்கிட்டுப்போவாங்க.. குறிப்பா ஊட்டுக்காரி அடிக்கடி வாங்குவா..)

வால்பையன் said...

//இவ்விடம் தரமான பிரியாணி கிடைக்கும்..'//

வெண்பூவுக்கு ஸ்பெஷல் பதிவா?

வால்பையன் said...

//இரு வேறு பதிவுகளாக எழுதப்பட திட்டமிட்டு பின்னர் உங்கள் மேல் கொஞ்சம் இரக்க உணர்வு தோன்றி சுருக்கமாக ஒரே பதிவாக போட முடிவு செய்யப்பட்டது.//

நாலு பதிவு சைஷுக்கு 6 டிஸ்கி கொடுத்ததுக்கு ரெண்டு பதிவாவே போட்டிருக்கலாம்!

வால்பையன் said...

//ISO என்றாலே என்னவா? உங்களைப் போன்ற அதிர்ஷ்டப்பேர்வழிகள் இதை தொடர்ந்து வாசிக்க வேண்டியதில்லை.//

அப்ப நான் ஜூட்டுங்கோ!

மங்களூர் சிவா said...

முடியலை ISO ம் வேணாம் ஒரு புண்ணாக்கும் வேண்டாம்

மங்களூர் சிவா said...

/
நானென்றால் என்ன பண்ணுவேன்? 11 மணி வாக்கில் ரமாவைக் கூப்பிட்டு ‘ரெண்டு பேர் வர்றாங்கம்மா.. பிரியாணி பண்ணிடு இன்னிக்கு’ என்று சிம்பிளாக சொல்லிவிடுவேன். காரியம் நடந்துவிடும். ஆனால் இது வெண்பூவினால் முடியுமா? அவர் இவ்வாறு எழுதுகிறார்...

முதலில் அடுக்களையில், ஃபிரிட்ஜில் தேவையான பொருட்கள் இருக்கின்றனவா? (Source, Raw materials etc.,) அவை தரமானவையா? இல்லாவிட்டால் என்ன செய்வது? (Quality) மனைவியின் உதவி (Production capacity) கிடைக்குமா? கிடைக்காவிட்டால் என்ன செய்வது? உதவியில்லாவிட்டாலும் இரண்டு மணிநேரத்தில் (Lead time) முடித்துவிடலாமா? இல்லாவிட்டால்..? பாத்திரங்கள், அடுப்பு, கருவிகள் தயாராக இருக்கின்றனவா? இல்லாவிட்டால்.? என எல்லாவற்றையும் பார்த்துவிட்டபிறகே விருந்தினர்களை நான் அழைப்பேன் என்கிறார்.
/

அவரு காப்பி மட்டும்தானே ஆத்துவாரு பிரியாணியெல்லாம் செஞ்சு கலக்குவாரா????

:)))))

மங்களூர் சிவா said...

/
கார்க்கி said...

முன்குறிப்பை படித்து டய்ர்டாகி விட்டேன்..
/

ஓ , அதெல்லாம் படிக்கணுமா???

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

//ISO என்றாலே என்னவா? உங்களைப் போன்ற அதிர்ஷ்டப்பேர்வழிகள் இதை தொடர்ந்து வாசிக்க வேண்டியதில்லை.//

அப்ப நான் ஜூட்டுங்கோ!
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

/
தமிழ்ப்பறவை said...

அகேயின் பேக் டூ ஃபார்மா...?!
நல்லா இருக்குது பதிவும், புரியவைத்த முயற்சியும்....
எல்லாம் நல்லாத்தானிருக்கு.ஆனா எல்லாமே பேப்பர் ஒர்க் மட்டும்தான்.முதல்ல இந்த ஐ.எஸ்.ஓ வையே தூக்கணும். ஆஃபீஸ்ல பாதி இடத்தை இந்த டாகுமெண்ட்ஸே அடைச்சுக்கிடுது.
ரூட் காஸ் அனாலிசிஸ் ஒழுங்கா இருந்தா பரவாயில்லை. அதுவும் ஏதோ சப்பைக் கட்டு கட்டுற மாதிரி இருக்கும். அடுத்து திரும்பவும் அதே பிரச்சினை வரும்போது(வராதுன்னு உறுதி சொல்ல முடியாதில்லையா) பழைய ரூட் காஸே பென்ச் மார்க்காயிடும்.
ஆனா இன்னொரு முக்கியமான விஷயம் இந்த குவாலிட்டி துறை சரியா களப் பணில இறங்கினா, மாசத்துக்கு பத்து போல்ட் கூடத் தயாரிக்க முடியாது.
க்வாலிட்டி துறையே இல்லைன்னா, பத்து லட்சம் போல்ட் தயாரிச்சாலும் ஃபேக்டரிய விட்டு வெளியேத்த முடியாது.
ஆகக்கூடி சுருக்கமா சொன்னா, க்வாலிட்டி துறைன்றது, ‘ஜனாதிபதி பதவி’ன்னு சொல்லலாம்.(என்னோட கருத்து மட்டுமே)
/


ஆஹா ISO 90000001 னா இப்பிடித்தானா???

ரைட்டு