Tuesday, April 14, 2009

மனதைத்தொட்ட பாடல்கள்

பாடல்களுக்கென்று தனியாக நூற்றியெட்டு தமிழ் சானல்கள் இருந்தாலும் பகல் நேரங்களில் போட்டி போட்டுக்கொண்டு குத்துப்பாடல்கள் போட்டு நம்மை டிவி பார்ப்பதில் இருந்து எப்படியாவது விரட்டிவிடுகிறார்கள்.. முதலில் அதற்காக நாம் அவர்களுக்கு நன்றிதான் சொல்லவேண்டும். எப்படியாவது அசந்து மறந்தாவது கேட்கிறமாதிரி போட்டுவிடுவார்களா என்றால் ம்ஹூம்.. சான்ஸே இல்லை.

பேய்களும், கோட்டான்களும் கூட உறங்கிவிடும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அவர்களை அறியாமல் ஒவ்வொருவராய் மெலடி, காதல், சென்டிமென்ட் என மெதுவாக போட ஆரம்பிப்பார்கள். நானும் நேற்றிரவு சில சொந்த சோகங்கள் மிகுதியாகவிட (நிஜமாப்பா..) அதை தணிக்கவேண்டி தனியாவர்த்தனமாய் வாங்கி வந்திருந்த நைண்டியை ஆரம்பித்திருந்தேன்.

சும்மாவே காதல் கவிதைகள்னா கொஞ்சம் புல்லரிச்சுக்குவேன், அதிலும் 90 உள்ளே போய்விட்டால் வரிக்கு வரி புல்லரிக்க ரெடியாகிவிடுவேன். நேற்று சன் ம்யூசிக்கிலேயும், இசையருவியிலும் மாறி மாறி காதல் மற்றும் அழகழகான பாடல்களாக போட்டு தாளித்துவிட்டார்கள்.

நினைவிலிருக்கும்  சில பாடல்களிலிருந்து சில சாம்பிள் வரிகள் மட்டும்..

டிஷ்யூம் : பூ மீது யானை.. பூ வலியைத்தாங்குமோ..

தீபாவளி : சிரித்தாய்.. இசை அறிந்தேன், நடந்தாய்.. திசை அறிந்தேன்..

12102006-THN14image1

மாயாவி : கடவுள் தந்த அழகிய வாழ்வு.. உலகம் முழுதும் அவனது வீடு..

மொழி : காதல் பேசும்போது மொழிகள் கிடையாது..

காதலர்தினம் : நூலாடை கொடிமலர் இடையினை உறுத்தும்..

ஆயுதஎழுத்து : யாக்கைத் திரி.. காதல் சுடர்..

யாரடிநீ.. : ஆண் மனதை அழிக்க வந்த சாபம், அறிவை மயக்கும் மாய தாகம்..

சினிமாவே டுபாகூர், அதிலும் பாடல்கள் இன்னும் டுபாகூர்.. இருப்பினும் ரசிக்கிறோம். அழகிய ஒரு கிராமத்து ஃபோக் ‘எம்டன்மகன்’ படத்தில் ‘கோலிக்குண்டு கண்ணு, கோவப்பழ உதடு..’ பாடல் எடுக்கப்பட்ட விதமும், பரத், கோபிகாவின் நடிப்பும் பிரமாதப்பட.. ரசிக்கமுடிந்தது. இடையிடையே இது போல பாடல்களும் வருகின்றன.

எதற்கும் சனிக்கிழமை இரவுகளில் ட்ரை பண்ணலாம். மற்ற நாட்களென்றால்  மறுநாள் ஆப்பிஸில் மதிய மீட்டிங்கில் வழக்கமாக கொட்டாவி விடுபவர்கள், குறட்டைவிட நேரிடும்.. ஏற்கனவே சிச்சுவேஷன் சரியில்லை, அப்புறம் சீட்டுக்கு வேட்டு வரக்கூடும்.!

.

27 comments:

Mahesh said...

நல்ல பாடல்கள்... காற்றின் மொழி பாட்டு என் மகளின் ஃபேவரிட் !!

பிரேம்குமார் said...

எம்புட்டு சரக்கடிச்சாலும் கேட்ட பாடல்கள மறக்காம காலையில நினைவுப்படுத்தி சொல்றீங்களே... ஆகா!! ஆகா !!

கார்க்கி said...

சகா,

ஹைதை ஹோட்ட்ல அறையில் இரவு ஒரு மணிக்கு மேல தொடர்ந்து ஒரு மணி நேரம் அட்டகாசம் செய்தார்களே சன் டிவியில். நினைவிருக்கிறதா?

எனக்கு ஏனோ வீடியோவு பாடல்கள் கேட்பதில் பெரிய ஆர்வமில்லை, விஜய் பாடல்கள் தவிர (ஸ்டர்ட் கலாய்ப்ஸ்)

உள்ளத்தில் இருந்து.. said...

தீபாவளி படத்தில் 'காதல் வைத்து' மற்றும் 'போகாதே' பாடல்களின் வரிகள் ரொம்ப நல்லா இருக்கும் .

அதே மாதிரி தான் 'மலைகோட்டை' படத்தில் வரும் 'தேவதையே வா' பாடலும்.

ஸ்ரீதர் said...

பிரேம்குமாரை வழிமொழிகிறேன்.

Joe said...

//
பூ மீது யானை.. பூ வலியைத்தாங்குமோ..
//
கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம பசங்க காட்டுத் தீனி தின்னு யானை மாதிரி ஆகிடுரதுனால, நம்ம ஊரு பொண்ணுங்க இந்த பாட்டை "symbolic"-ஆ பாடுறதா கேள்விபட்டேன்?

டிஷும் படத்தில "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்" அதை விட அற்புதமான பாடல்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

Joe said... டிஷும் படத்தில "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்" அதை விட அற்புதமான பாடல்.

வழிமொழிகிறேன்

அதில் ஒரு வரி வரும்

// பந்தி வெச்ச வீட்டுக்காரி, பாத்திரத்த கழுவிட்டு பட்டினியாக் கெடப்பாளே அது போலே //
என்று

எப்போதும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ஒற்றை வரி.

நமக்கு ஆல் டைம் ஃபேவரிட் பழைய பாடல்களும், மிடில் 80 / 90 தான்.

மாதவராஜ் said...

நல்ல பாடல்களை விட போதை உண்டா என்ன?

சென்ஷி said...

டிஷ்யும் படப்பாடலில் எனக்கும் பிடித்தமான வரிகள் அது!!!

பூ மீது யானை
பூ வலியைத் தாங்குமா...

கலக்கலா இருக்கும்..

ஆனா இப்போ அதிகமா கேக்குறது யாரடி நீ மோகினி படப்பாட்டுதான்.. :-))

தராசு said...

//சும்மாவே காதல் கவிதைகள்னா கொஞ்சம் புல்லரிச்சுக்குவேன், அதிலும் 90 உள்ளே போய்விட்டால் வரிக்கு வரி புல்லரிக்க ரெடியாகிவிடுவேன்.//

அப்படியா, ரைட்டு.

Anonymous said...

பேய்களும், கோட்டான்களும் கூட உறங்கிவிடும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அவர்களை அறியாமல் ஒவ்வொருவராய் மெலடி, காதல், சென்டிமென்ட் என மெதுவாக போட ஆரம்பிப்பார்கள்.
//

சரியாய் சொன்னீங்க தல. ஆனா பாருங்க அந்த நேரத்தில மனதுக்கு பிடித்த மிலோடி சாங்ஸ் கேட்பது மனதுக்கு அமைதி தரக்கூடியதாக இருக்கும்.

Anonymous said...

//சிரித்தாய்.. இசை அறிந்தேன், நடந்தாய்.. திசை அறிந்தேன்..//

இது என் ஆல் டைம் பேவரைட்.

தேவதைக் கதை கேட்டபோதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை.
நேரில் உன்னையே கண்ட பின்பு நான் நம்பிவிட்டேன் மறுக்கவில்லை.
அதிகாலை உதிப்பதெல்லாம் உன்னைப் பார்க்கும் மயக்கதில்தான். ஆந்திமாலை மறைவதெல்லாம் உன்னைப்பார்த்த கிறக்கத்தில்தான்.

it is a real treat aathi.

ச்சின்னப் பையன் said...

புது பாட்டுல்லாம் எனக்கு தெரியாது!!!

மின்னலை பிடித்து, மின்னலை பிடித்து - இந்த பாட்டு முழுவதும் வரிகள் சும்மா அருமையா இருக்கும்....

அத்திரி said...

என்ன அண்ணே திடீர்னு ரொமான்ஸ் மூடு.................................

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

pappu said...

அப்போ மோகனுக்கு இளைய ராஜா போட்ட மீஜிக்க ரொம்ப பிடிக்குமோ.

ஜீவன் நதி காதல் கடல், இதயம் கல் காதல் சிற்பம், பிறவி பிழை காதல் திருத்தம், செம ஃபீலுல்ல...

SK said...

முடிஞ்சா உங்களுக்கு பிடிச்ச வரிகளையும் எழுதுங்க ஆதி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ்.! (நானும் கொஞ்ச நாள் கழிச்சு இப்பிடி சொல்வேன்னு நினைக்கிறேன்)
நன்றி பிரேம்.! (அதான் நம்ப டேலண்டு.!)

நன்றி கார்க்கி.! (நெனப்பிருக்கு.. அப்படியே நீங்க ஆம்லெட் போட்டதும்..)
நன்றி உள்ளத்தில்.! (என்னாங்க சார்.. பேரு வெக்கிறீங்க.. டேஸ்டுதான்)

நன்றி ஸ்ரீதர்.! (அப்ப அதே பதில்தான் உமக்கும்)
நன்றி ஜோ.! (ரொம்ப நேரம் நின்னா நெஞ்சாங்கூடு ரொம்ப வலிக்கப்போவுது பாத்துக்கங்க..)

நன்றி அமித்து.! (நம்மளும் அதே கேஸுதான்)
நன்றி மாதவ்.! (சரிதான் தல..)

நன்றி சென்ஷி.! (சேம் பிளட்டு)
நன்றி தராசு.! (ரைட்டு விடு..)

நன்றி ஆனந்த்.! (அதுவுஞ்சரிதான்)
நன்றி வேலன்.! (எல்லாரும் பாத்துக்கங்கப்பா.. நா பொறுப்பில்ல..)

நன்றி ச்சின்னவர்.! (வம்புல வந்து ஒப்புக்கறீங்களே தல.. நா பெருசுன்னு..)
நன்றி அத்திரி.! (அது அப்பப்ப கிளம்பும் தன்னால..)

நன்றி பப்ஸ்.! (நீயும் நானும் ஒண்ணு..)
நன்றி SK.! (ஏன் இப்பிடி.?)

Joe said...

//
நன்றி ஜோ.! (ரொம்ப நேரம் நின்னா நெஞ்சாங்கூடு ரொம்ப வலிக்கப்போவுது பாத்துக்கங்க..)
//

நம்மகிட்டேயேவா? நாங்கல்லாம் மலையவே தூக்கி வைச்சாலும் தாங்குவோம்யா!

டேய் யார்ரா அவன், குஷ்பூ, நமீதா எல்லாம் கூட்டிட்டு வந்து டெஸ்டு பண்ணுவேன்னு சொல்றவன்? ;-)

Mahesh said...

//நன்றி மகேஷ்.! (நானும் கொஞ்ச நாள் கழிச்சு இப்பிடி சொல்வேன்னு நினைக்கிறேன்)
//

அப்பிடியா விஷயம்? வாழ்த்துகள் சொல்லிக்கறேன்.

முரளிகண்ணன் said...

நல்ல வரிகள் தாமிரா

Suresh said...

அருமையான பதிவு உங்க பாலோவர் ஆயாச்சு

வித்யா said...

உங்கள் லிஸ்டில் எனக்குப் பிடித்தது தீபாவளி படப்பாடல் தான். நானும் ஒரு லிஸ்ட் போடறேன்:)

ஸ்ரீமதி said...

:))))))))

மங்களூர் சிவா said...

/
ஆயுதஎழுத்து : யாக்கைத் திரி.. காதல் சுடர்..
/

இதுல வர்ற பீட்ஸ் எவ்ளோ சவுண்ட் வெச்சு கேட்டாலும் பத்தாது.

தமிழ்நெஞ்சம் said...

I expected more songs of your choice

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முரளி.!
நன்றி சுரேஷ்.!
நன்றி வித்யா.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி மங்களூர்.!
நன்றி தமிழ்நெஞ்சம்.!

dharshini said...

பூ மீது யானை சான்ஸே இல்லை சார்.... அப்படி ஒரு சோகம் மால்குடி சுபா பாடினார்கள் என்று நினைக்கிறேன்... ஆய்த எழுத்தை தவிர‌ அத்தனையும்sadsongs (folder) லிஸ்டில் உள்ள பாடல்கள்.