Thursday, April 16, 2009

உச்சத்தைத் தொட்ட தினம்.!

மாலை 4 மணிக்குரிய வெளிச்சமில்லை அது. கருமேகங்கள் வேக வேகமாக திரண்டுகொண்டிருந்தன. எந்நேரமும் மனதை நிறைக்கும் அந்த மழை வந்துவிடலாம். இரண்டு புறமும் ஒரு கூண்டைப்போல சாலையை மறைக்க முயலும் அடர்ந்த மரங்கள். கொஞ்சம் பலத்த காற்றும் கூட. காற்றிலே கிளம்ப இங்கே புழுதியே இல்லையா? இலைகளே சுற்றிச்சுற்றி பறந்தன.. இலைகளே முகம் வந்து மோதின. என்ன விந்தையிது இன்று? காற்றும், மழையும், மரங்களும்.. என்ன அற்புதம்.!

ஜீவா அந்த சாலையின் ஓரம் நடந்துகொண்டிருந்தான், பேருந்து நிறுத்தம் நோக்கி. நடந்தானா? மிதந்தானா? முதல் முறையாக காற்றுடன் பேசிக்கொண்டே வந்தான். யாரும் கவனித்தாலென்ன? பேசிக்கொண்டா.. இல்லையில்லை, ஒரு நண்பனோடு கலகலப்பதைப்போன்று காற்றோடு சத்தமாக சிரித்துப்பேசிக்கொண்டு என்பதுதான் சரி. கொண்டாட்டங்களின் தருணத்தைப்போல ஆர்வமான தலையசைப்புகள், சைகைகள். துள்ளல் மிகுந்த கால்கள் செல்வது பேருந்து நிறுத்தத்தை நோக்கி மட்டுமா.. வாழ்க்கையின் தொடக்கத்தை நோக்கியா?

மழைக்காக ஒதுங்கும் மனதோ, அதில் பேருந்தைப் பிடிக்கும் எண்ணமோ இன்றில்லை. திசைகளற்ற பயணம் இன்றைக்கானது.

என்னவாயிற்று.?

எப்போது விழுந்த விதை? அவஸ்தைகள் நிரம்பிய வருடங்கள்.. நெஞ்சுக்குள் அடைகாத்து வளர்த்த காதல். காதலைச்சொல்வதை விடவுமா பிரசவித்தல் வேதனை பெரிது.? ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்வதற்கா இத்தனை வெட்கம்? ஒவ்வொரு எழுத்தாக வெளியாகி வார்த்தைகளாக கோர்த்து ப்ரியாவிடம் சொல்லிமுடித்திருந்த அந்த நிமிடங்கள் வாழ்வெங்கும் இனி இந்த நெஞ்சோடு உறைந்து கிடக்கப்போகின்றன. சொல்லச் சொல்லவே இதயத்துடிப்பு அதிகமாகி காத்திருந்த அந்நாள் இதுவென்ற அதிர்வில் வார்த்தைகளில்லாத வெளுத்துப்போன உதடுகளுடன் அவன் கைகளை இறுக்கப்பற்றினாள் ப்ரியா.  இப்போது நடுங்கிக் கொண்டிருக்கும் கைகள் யாருடையது? கனவா இது?

Redemption_by_zemotion

இந்த ஏற்பு இத்தனை சாதாரணமானதாகவா நிகழ்கிறது.? அவனால் நம்பவே முடியவில்லை. இல்லை.. நான் கத்திக்கூப்பாடு போடவேண்டும். நான் கிளம்புறேன் ப்ரியா.. இந்த அற்புத நாளை வெறும் வார்த்தைகளோடு முடித்துக்கொள்ள வேண்டாம். இழுத்துக்கட்டப்பட்ட வீணையின் நரம்புகளை தெறித்துத் துண்டாகும் விநாடிக்கு முந்தைய விநாடியில் நிறுத்தும் வண்ணம் இன்னும் இறுக்கு. கிளம்பும் இந்த தருணத்தில் இந்தப் பட்டுக்கன்னத்தில் முத்தமிட்டுவிடு. எதிர்பாராத இறுதி விநாடிகளில் ஜீவாவின் நோக்கமறிந்த ப்ரியா விலக அந்த முதல் முத்தம் அவளது பாதிக்கண்ணிலும் இமையிலுமாக பதிகிறது.

பின்வந்த பெருமழையின் முதல் துளி, பேருந்து நிறுத்தம் தவிர்த்து பக்கத்து மரக்கிளையுடன் பேசிக்கொண்டிருந்த ஜீவாவின் முகத்தில் விழுந்தது.

(Photo courtesy : Deviantart)

**************

பின்குறிப்பு :

வாழ்க்கையில் எத்தனையெத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் நம் மனதில் கிடக்கின்றன. அதில் மிக உச்சமானதாக எது இருக்கக்கூடும் என யாரோ (ஹிஹி..) யோசித்ததில் எழுதப்பட்டதே மேற்கண்ட நிகழ்ச்சி. பெயர்கள் கற்பனையே. இதே போல உங்களின் மகிழ்வுகளையும் தெரிந்து கொள்ளும் ஆவலில்   இதை தொடர்பதிவாக்குகிறேன். நிகழ்வு காதல் சார்ந்துதான் இருக்க வேண்டுமென்பதில்லை, உங்கள் வாழ்வின் உச்சமானதாக இருக்கவேண்டும்.

புதியவர்கள் பக்கமிருந்து நான் அழைப்பது அ.மு.செய்யது.

எங்கள் (அங்கிள்ஸ் அல்ல) பக்கமிருந்து வேறொருவரை அழைக்க முதலில் முடிவு செய்திருந்தாலும் தொடர்பதிவுகள் என்றால் கொள்ளைப்பிரியம் காட்டும் காரணத்தால் பரிசல்காரன்.

.

37 comments:

Mahesh said...

கற்பனையோ உண்மையோ... அது முக்கியமில்லை... அற்புதமா எழுதறீங்க ஆதி !!

உங்க கிட்ட கத்துக்க நிறைய இருக்கு.

வித்யா said...

:)

Cable Sankar said...

அசத்துறீங்க ஆதி..

தராசு said...

அசத்தலான நடை, அருமையான் கருத்து. மீண்டும் மீண்டும் படித்தேன்.

//காதலைச்சொல்வதை விடவுமா பிரசவித்தல் வேதனை பெரிது.?//

இதுக்கு பதில் தெரிஞ்சா நாங்க ஏன் இப்டி இக்கறோம். எங்கியோ போயிருக்க மாட்டோம்.

பைத்தியக்காரன் said...

ஆதி,

நடை நல்லா இருக்கு.

தலைப்புல 'உச்சத்தை' படிச்சதும் வேற ஏதோனு நினைச்சேன் :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

MayVee said...

kalakkals of india

Truth said...

அற்புதம் ஆதி

ஸ்ரீமதி said...

ரொம்பவே அழகு அண்ணா :)))

வால்பையன் said...

நல்லவேளை பரிசலை முதலிலே தொடருக்கு அழைத்தீர்கள்!

வர்ணனை அருமை!
இனிவரும் பதிவுகளையும் பார்க்கும் ஆவலில்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ்.! (ஃபீஸ் குடுப்பீங்கதானே.?)

நன்றி வித்யா.!
நன்றி கேபிள்.!
நன்றி தராசு.!
நன்றி பைத்தியக்காரன்.! (உங்களை வரவைக்க எப்பிடியெல்லாம் தலைப்பு வைக்கவேண்டியிருக்குது..ஹிஹி)

நன்றி மேவீ.!
நன்றி ட்ரூத்.!
நன்றி ஸ்ரீ.!
நன்றி வால்.!

கும்க்கி said...

:-))

பரிசல்காரன் said...

அருமையான களம். புகுந்து விளையாட முடியுமான்னு தெரியல.. ஏன்னா... எனக்கு பல தருணங்கள் அபப்டி வாய்ச்சிருக்கு.

ஞாபகமிருக்கா ஆதி.. அன்னைக்கு காஃபி கப் வாங்கினப்போ சொன்னது??

கும்க்கி said...

கண்கள் பனிக்கிறது..இதயம் இனிக்கின்றது.

சந்தனமுல்லை said...

கலக்கல் ஆதி!

புன்னகை said...

அழகான பதிவு. அற்புதமான நடை. கலக்கிட்டீங்க போங்க! :-)

narsim said...

// இலைகளே சுற்றிச்சுற்றி பறந்தன.. இலைகளே முகம் வந்து மோதின. என்ன விந்தையிது இன்று? காற்றும், மழையும், மரங்களும்.. என்ன அற்புதம்.!//

அற்புதம் ஆதி

kamatchi said...

Good article.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் மிகவும் ரசித்த பதிவுகளில் இதுவும் ஒன்று...

kamatchi said...

REALLY SUPERB.

ச்சின்னப் பையன் said...

:-))))))))))))))))))))

புதுகைத் தென்றல் said...

வாழ்க்கையில் எத்தனையெத்தனையோ மகிழ்ச்சியான தருணங்கள் நம் மனதில் கிடக்கின்றன.//

ம்ம் நட்சத்திரத்துக்கப்புறம் பதிவுகள் ஜொலிக்குது ஃப்ரெண்ட். சின்னச்சின்ன சந்தோஷங்கள் கொட்டி கிடக்குங்கற பாட்டுத்தான் ஞாபகம் வருது.

மிக மிக அருமையான பதிவு.

vinoth gowtham said...

வர்ணனைகள் அபாரம் ஆதி..

அத்திரி said...

காதலை ரசிப்பவரிடமிருந்து வரும் எதிர்பார்த்த வரிகள்தான்...............

ராம்.CM said...

அழகு..

sayrabala said...

இழுத்துக்கட்டப்பட்ட வீணையின் நரம்புகளை தெறித்துத் துண்டாகும் விநாடிக்கு முந்தைய விநாடியில் நிறுத்தும் வண்ணம்இன்னும் இறுக்கு

appaa arputham

rasithen

sayrabala said...

இழுத்துக்கட்டப்பட்ட வீணையின் நரம்புகளை தெறித்துத் துண்டாகும் விநாடிக்கு முந்தைய விநாடியில் நிறுத்தும் வண்ணம்இன்னும் இறுக்கு

appaa arputham

rasithen

sayrabala said...

காதலைச்சொல்வதை விடவுமா பிரசவித்தல் வேதனை பெரிது.?

mmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmm
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

ஆதிமூலகிருஷ்ணன் said...

இனித்தலும், பனித்தலும்.. லவ் ஃபீலுக்கும் செட்டாகும் இல்ல..
கும்க்கி?

ஞாபகமா? அப்பிடின்னா என்ன பரிசல்?

நன்றி முல்லை,புன்னகை.!

நொம்ப பிஸியா நர்சிம்.?

நன்றி காமாட்சி, அமித்து, ச்சின்னவர்.!

நான் சொன்னது ரொம்ப பெரிய சந்தோஷம் தென்றல்.!

நன்றி வினோத், அத்திரி, ராம்.!

ரொம்ப ரசிச்சிருக்கீங்க சாய்ரா? அனுபவமோ?

தாரணி பிரியா said...

வர்ணனைகள் அள்ளுது ஆதி.

pappu said...

யாரோ (ஹிஹி..) //////

இந்த டகால்டிதான வேணாங்கிறது!

ஜகதீஸ்வரன் said...

வார்த்தைகளின் கோர்வை மிக அற்புதமாக இருந்தது.

அ.மு.செய்யது said...

//இழுத்துக்கட்டப்பட்ட வீணையின் நரம்புகளை தெறித்துத் துண்டாகும் விநாடிக்கு முந்தைய விநாடியில் நிறுத்தும் வண்ணம் இன்னும் இறுக்கு.//

இந்த வாக்கியங்களை குறிப்பிட்டே சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறேன்.

விரைவில் பதிவிடுகிறேன்.

( தாமத வருகைக்கு மன்னிக்கவும். தொடர்பதிவை ஏற்கிறேன்.நன்றி !!! )

அ.மு.செய்யது said...

உங்கள் எழுத்து நடையில் ஏதோ ஒரு ஈர்ப்பு !!!!

சுண்டியிழுக்கிறது.

தமிழ்ப்பறவை said...

பரவசத்தின் வார்த்தை வடிவம் மிக அழகு ஆதி... வாழ்த்துக்கள்...

ஸ்ரீதர் said...

பிரிச்சு மேஞ்சுட்டீங்க.நல்ல பதிவு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தாரணி.!
நன்றி பப்பு.!
நன்றி ஜகதீஷ்.!
நன்றி செய்யது.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி ஸ்ரீதர்.!

ஊர் சுற்றி said...

ஆதி அண்ணே...
இது அப்படியே நடந்தது போல இருக்குதே!!! :)

உண்மையிலேயே இது உச்சம்தான். வார்த்தைகளின் வருணிப்பும் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன.