Friday, April 17, 2009

ஊடல் காலம்..

20080829_LonelyBoy

உனது கிசுகிசுப்புகள் இல்லாத
இரவுகள்
வலி மிகுந்ததாய் இருக்கின்றன
உனது துப்பட்டாவை
துணைக்கழைத்துக் கொள்கிறேன்
உன்னை நீங்கி
ஒரு விநாடியும்
தனித்து இருந்துவிட முடியாது இங்கே
வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் நீ நிரம்பியிருக்கிறாய்
கண்ணாடியில்
நீ ஒட்டிவைத்துப் போயிருக்கும்
உனது சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு
நாள் தவறாது என்னை ஏளனம் செய்கிறது
உனது தடயங்களாலோ
இந்தக் கவிதைகளாலோ
இந்நேரத்துக்கான ஆறுதலை
எப்போதுமே தரமுடிவதில்லை.!

(யூத்ஃபுல்விகடனில் வெளியானது)

.

32 comments:

Truth said...

ரொம்ப ஃபீங்கஸோட எழுதியிருக்கீங்க.
நல்லா இருக்கு ஆதி.

Truth said...

ஓ, நான் தான் மீ தி பஷ்டா? :-)

Cable Sankar said...

suuper kavithai.. aadhi..

வித்யா said...

ரமா படிப்பாங்களா இதை:)

ஸ்ரீமதி said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணா கவிதை :))))

வால்பையன் said...

இது கவிதை தானே!

Joe said...

பிரமாதமான கவிதை.

உங்க அளவுக்கு இல்லைன்னாலும், ஏதோ ஓரளவுக்கு நானும் முயற்சி பண்ணியிருக்கேன்.
http://joeanand.blogspot.com/2009/04/blog-post_17.html

உங்கள் கருத்துகளை சொல்லவும்.

அ.மு.செய்யது said...

எழுதியது நீங்க தானா...???

நல்லா இருக்குங்க..

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
இது கவிதை தானே!
//

வாலை வன்மையாக கண்டிக்கிறேன்.

பாபு said...

eppadi irukkenga?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ட்ரூத்.!
நன்றி கேபிள்.!
நன்றி வித்யா.! (மூச்.!)

நன்றி ஸ்ரீமதி.!
நன்றி வால்.!
நன்றி ஜோ.!
நன்றி செய்யது.! (தொடர்பதிவு அழைப்பு பார்த்தீங்கதானே..)

நன்றி பாபு.! (ஏதோ இருக்கோம் பாஸ்.! எங்கே போயிட்டீங்க நீங்க‌?)

sayrabala said...

mmmmmmmmmmmmm

feelings rompa athiga maayiducho

மங்களூர் சிவா said...

நெக்ஸ்ட் பதிவு என்ன டாஸ்மாக்கை தேடி மறு ஒளிபரப்பா?????

:))))))))))))

டக்ளஸ்....... said...

\\இந்நேரத்துக்கான ஆறுதலை
எப்போதுமே தரமுடிவதில்லை.!\\

இதுக்குத்தானே தமிழக அரசு கண்டுபிடித்துள்ள ஒரு சொர்க்க பூமி இருக்கு...!
டாஸ்மாக்...ஹி..ஹி..ச்சும்மா தமாசுக்கு

மத்தபடி கவிதை சூப்பர்..(ஆமா இது கவிதைதான..?!?!?)

கார்க்கி said...

என்னமொ போங்கப்பா.

ஸ்ரீதர் said...

ஒன்னும் கவலைப்படாதீங்க கார்க்கி.கூடிய சீக்கிரம் இதே மாதிரி நீங்களும் (நாமும்..ஹிஹி ) பதிவு போடலாம்.

ஸ்ரீதர் said...

நல்ல கவிதை.ஆனா இதுல மேட்டர் என்னன்னா! எனக்கு இந்த மாதிரி பீலிங்க்ஸ் எல்லாம் புரிய மாட்டேங்குது.

Saravana Kumar MSK said...

வாவ்.. செம கலக்கலுங்க்னா.. அழகான கவிதை..

Saravana Kumar MSK said...

வாழ்த்துக்களும் கூட..

தாரணி பிரியா said...

super kavithainga. Rama mela ethanai pasam vachu irukkinga :)

yathra said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

புதியவன் said...

//உனது தடயங்களாலோ
இந்தக் கவிதைகளாலோ
இந்நேரத்துக்கான ஆறுதலை
எப்போதுமே தரமுடிவதில்லை.!//

ஊடல் காலத்தை ரொம்ப அழகா சொல்லுது கவிதை...

//(யூத்ஃபுல்விகடனில் வெளியானது).//

வாழ்த்துக்கள்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பாலா.!
நன்றி சிவா.!
நன்றி டக்ளஸ்.!
நன்றி கார்க்கி.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி சரவணா.!
நன்றி தாரணி.!
நன்றி யாத்ரா.!
நன்றி புதியவன்.!

தராசு said...

ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் தி இண்டியாவாக்குது,

கலக்குற நைனா, சும்மா எய்திகினே இரு.

வெயிலான் said...

நல்லாருக்கு ஆதி! வாழ்த்துக்கள்!

dharshini said...

கவலை படாதீங்கண்ணா கூடியசீக்கிர‌த்தில் வந்திடுவாங்க!
(எல்லாருக்கும் அவங்க அவ்ங்க ஒய்ஃப் ஊருக்கு போனா ஜாலியா இருப்பாங்க நீங்க?!............... தாங்க முடியலண்ணா..... நான் ஃபோன் போட்டு வரசொல்லிறேன்.)

கவிதை நன்று.
:)

அத்திரி said...

//நீ ஒட்டிவைத்துப் போயிருக்கும்
உனது சிவப்பு ஸ்டிக்கர் பொட்டு
நாள் தவறாது என்னை ஏளனம் செய்கிறது//

அருமை அண்ணே

அத்திரி said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்........ கட பக்கம் எட்டி பாருங்க

கும்க்கி said...

போட்டு தாக்கறீங்களே பாஸ்...

தமிழன்-கறுப்பி... said...

அழகு வரிகள்...

ஆ.முத்துராமலிங்கம் said...

கவிதை நல்லா இருக்குங்க.
வாழ்த்துகள்

பாஸ்கர் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு