Monday, April 20, 2009

கார்க்கி நடித்த ‘நீ எங்கே.?’ -குறும்படம்

அன்பு நண்பர்களே, ஏற்கனவே குறும்படம் பற்றி எழுதிய முந்தைய மூன்று பதிவுகளையும்  ( பதிவு:1, பதிவு:2, பதிவு:3 ) இமாலய ஹிட் ஆக்கினீர்கள். அதன் இறுதிப்பகுதி பாக்கி இருந்ததையும் அறிவீர்கள். அதில் நாம் ஒரு குறும்படம் ஒன்றையும் இணைக்கத்திட்டமிட்டதால், அதன் பிற்தயாரிப்புப் பணிகள் நிறைவடைய காலதாமதமாகிவிட்டது.

கதை, மற்றும் இயக்குனர் தயாராக இருந்தபோதும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கொஞ்சம் தாமதம் செய்துவிட்டார்கள். அனைத்துப்பணிகளும் முடிந்து இதோ உங்கள் பார்வைக்கு ‘நீ எங்கே?’..

முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் :

1. இது காமெடி படமல்ல, ஆகவே சிரிக்கத்தயாராக உள்ளே வரக்கூடாது.

2. படத்தைவிட பிற்சேர்க்கைகள் அதிகமாக இருப்பதால் பொறுமையாக காணவும்.

3. பிற்சேர்க்கையில் இருக்கும் வசனங்கள் நடிகர் பொறுப்பு என்பதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல..

4. எதற்கும் பெண்கள், இதயபலவீனமானவர்கள் படத்தைத் தவிர்க்கலாம்.

டிஸ்கி :  தமிழ் ஃபான்ட் பிரச்சினையால் படத்தில் டைட்டில் ஆங்கிலத்தில் உள்ளது. மன்னிக்கவும்.  பிற்சேர்க்கைகளை விமர்சிக்க குசும்பன் வாலண்டியராக அழைக்கப்படுகிறார். படத்தைக்காண்பதில் டெக்னிகல் சிக்கல்கள் இருப்போர் நிர்வாகத்தைத் தொடர்புகொள்ளலாம். கூரியரில் டிவிடி அனுப்பிவைக்கப்படும். (தமிழ்நாடு : 99/ மட்டும், வெளிமாநிலம் : 199/ மட்டும், வெளிநாடு : 499/ மட்டும். )

நடிகர், இயக்குனர் 2011 வரை பிஸியாக இருப்பதால்  தயாரிப்பாளர்கள்  யாரும்  கால்ஷீட்டுக்கு  தற்போது  முயற்சிக்கவேண்டாம் என  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   நன்றி.

.

85 comments:

MayVee said...

வாழ்த்துக்கள்.....
ஏதோ சொல்ல வரிங்கன்னு தெரியுது அனா என்னன்னு தான் தெரியல .....
கார்கி எல்லோருக்கும் கடலை பார்த்தால் அமைதி தான் தோணும்.

காலை 5 மணிக்கு நம்பி வந்த என்னை இப்படி பண்ணிடிங்கள .......
நீங்க நல்லாவே இருங்க .....

MayVee said...

me th first ah

MayVee said...

karki yai vaichu comedy kemedy pannavillaiye neenga???

MayVee said...

antha lime scene thaan super aa irukku....

MayVee said...

ஒரு முத்தத்திற்கு இவ்வளவு கஷடமா?????
எனக்கு ரொம்ப பீலிங்க்ஸ் அஹ இருக்கு

பிரேம்குமார் said...

கார்க்கியின் சொன்ன அந்த காட்சி ஒரு கவிதை போல இருந்தது.

பிரேம்குமார் said...

கார்க்கியோட தொப்பை தான் படத்துல ஹைலைட் ;)

பிரேம்குமார் said...

இதற்கு கார்க்கியின் அனுமதி பெறப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் :)

உங்க குருப்பே ஒரு டெரரானது தான்னு நினைக்கிறேன்

பிரேம்குமார் said...

:)

பிரேம்குமார் said...

திரும்ப ஒரு முறை பார்த்தேன்.. என்ன சொல்ல வரீங்கன்னு புரியுது ஆனா புரியல :(

Sridharan said...

என்ன கொடுமை சார் இது?

ச்சின்னப் பையன் said...

நல்ல முயற்சி ஆதி... வாழ்த்துகள்...

இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

அ.மு.செய்யது said...

காணொளியை அலுவலகத்தில் காண முடியவில்லை.

மேலும் உங்கள் வலைப்பூ லோட் ஆக வெகு நேரம் பிடிக்கிறது. ( ரெம்ப நாளா )

nathas said...

:)

தராசு said...

கார்க்கி,

தொப்பைய குறை, இப்ப கல்யாண ஆசை வேற வந்திருக்கு, பாத்து சூதனமா இருந்துக்க.

MayVee said...

கார்க்கியோட தொப்பை தான் நல்ல நடிச்சு இருக்கு

டக்ளஸ்....... said...

ஏய்..என்னாப்பா..எல்லாரும் கார்க்கிய வச்சு காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டீங்க!
கார்க்கி அண்ணே..பொறுத்தது போதும்...!மீண்டும் ஒரு "சோதனை பதிவு" போடுங்க!
கவலப்படாதீங்க! நானும் கும்க்கியும் இருக்கோம்..!
ஆதி அண்ணனுக்கு நீங்க யாருன்னு காட்டுங்க!
(டிஸ்கி: இது படத்த பாக்காம போட்ட பின்னூட்டம்)

அனுஜன்யா said...

சமீபத்தில் வெளியான 'நீ எங்கே' எல்லா விருதுகளையும் 'நான் கடவுள்' படத்தை முந்திக்கொண்டு தட்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வசனம் அட்டகாசம். அன்னாருக்கு வாழ்த்துகள்.

கார்க்கி/ஆதி - எப்பிடி இதெல்லாம்? கலக்கல்.

அனுஜன்யா

Joe said...

இந்த படத்துக்கு "மூக்கில வாங்கின முத்தம் & கடலலைகளின் சத்தம்"-ன்னு பேர் வைச்சிருக்கலாம். குறும்படம்னு சொல்றதுக்கு பதிலா கொடும்படம்னு சொல்லலாம்.

என்னைக்காவது ஒரு நாள் கையில சிக்குவீங்கல்லே? ;-)

Truth said...

யூ ட்யூப் ஆபீஸ் ல பிளாக் செய்யப்பட்டுள்ளது. அட்டாச் பண்ணி மெயில் பண்ண எவ்ளோ செலவாகும்னு சொல்லுங்க. அப்படியே உங்க பேங்க் டிடைல்சும் தாங்க. படம் பாத்தே ஆகணும். :-)

எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆஹா..மணிரத்னம் படங்களோட ஒளிப்பதிவு போல ஒரே இருட்டுக்குள்ள கார்க்கியைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. சேரனை மாதிரி ஒரு ஆட்டோகிராப் தரமுயற்சித்திருக்கிறார்.நல்லாருக்கு !

ஹீரோ சார், சூர்யாவைப் பார்த்து நீங்களும் தொப்பையைக் குறைக்கணும்..அப்பதான் ஒரு ரவுண்டு வரலாம் :)

வெட்டிப்பயல் said...

வசனம் கலக்கல். பின் சேர்க்கையில் இருக்கும் வசனம் கூட கலக்கலா இருக்கு பாஸ்...

கார்க்கி,
விஜயை விட நல்லா நடிக்கறப்பா :-)

வெட்டிப்பயல் said...

மூக்குல கொடுத்தா முத்தமானு சொல்ற இடத்துல கார்க்கி நடிப்பு சூப்பர் :-)

அப்பறம் மறுபடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்கறதுக்கு பதிலா சாப்பிட ஆரம்பிச்சிட்டானு இருந்திருக்கலாம் :-)

டக்ளஸ்....... said...

இருங்க... Download பண்ணிட்டு இருக்கேன்..
திரும்ப வர்ரேன்...!

பரிசல்காரன் said...

ஆதி..

இந்தக் குறும்படத்திற்காக உங்களை கிண்டல் செய்கிறவர்கள் மூக்கின் மேல் (இருங்க அவசரப்படாதீங்க.. சொல்றேன்) விரல் வைக்கத்தான் போகிறார்கள் பின்னாளில்...

பிற்சேர்க்கைதான் எனக்கு மிகப் பிடித்தது. அதுவும் செடி, ரொஜா - கார்க்கியின் சொந்த வசனமாக இருக்கும் என்று கணிக்கிறேன். அதில் அவர் எக்ஸ்பர்ட்.

(மெய்ன் படத்தின் வசனங்களைக் கூர்ந்து கவனித்து இன்னொரு பின்னூட்டம் போடுகிறேன். இப்போது அலுவலகத்தில் அதிக ஒலிவைத்து கேட்க முடியவில்லை)


கடைசியில் தேங்க்யூ கார்ட் போடப்பட்ட இடத்தில் காமிரா நிறுத்தப்பட்ட இடம் அருமை.

கார்க்கி பல இடங்களில் வெட்கப்பட்டது நல்ல நடிப்பு. அது நடிப்பல்ல என்றாலும்!!!

ஆதி...

உங்ககிட்ட நெறைய பேசணும். ஒரு நல்ல ஸ்கிர்ப்ட் இருக்கு. சீரியஸா உட்கார்ந்து பேசி நல்ல குறும்படமா எடுப்போம். டைரக்‌ஷன் நாந்தான் -ன்னு உறுதியா இருந்தேன். ஆனா உங்க திறமை மேல நம்பிக்கை வெச்சு அதயும் விட்டுக் கொடுக்க தயாரா இருக்கேன்!

இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் ஆதி!

டக்ளஸ்....... said...

தல..உனக்கு "என் இனிய பொன் நிலாவே" சூட்டாகலம்மா...
"நெஞ்சுக்குள் பெய்திடும் பூமழை" தான் சூட்டாகும்..!
அத ட்ரை பண்ணியிருக்கலாம் தாமிரா சாரி..ஆதி..

டக்ளஸ்....... said...

யோவ்...யார்யா இங்க எங்க அண்ணனுக்கு தொப்பைனு கிண்டல் பண்ணுனது...!
யார்க்குங்க தொப்பை இல்ல..!
நம்ம் "தல"க்கி கூட...
கார்க்கி அண்னனுக்கு தல மேல அம்புட்டு பாசம்..இல்லண்னே...!

டக்ளஸ்....... said...

ரைட்டு..! ஒரு முடிவுக்கு வந்தாச்சு..!
"மதுரையில்,அண்ணன் கார்க்கிக்கு ரசிகர் மன்றம்."
தலைவர்..வேற யாரு நாந்தான்...!

டக்ளஸ்....... said...

\\தயாரிப்பாளர்கள் யாரும் கால்ஷீட்டுக்கு தற்போது முயற்சிக்கவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\\

எனக்கு மட்டும் ஒரே..ஒரு படம் பண்ணிக் கொடுங்கப்பா..
டைரக்டர், ரைட்டர் கூடத் தேவையில்லை...
அந்த பையன் பேரு..என்னாது..?
ஆங்..கார்க்கி..கார்க்கி..
அவரு மட்டும் போதும்.

வித்யா said...

உங்கள் மெயில் ஐ.டி கிடைக்குமா ஆதி?

ஸ்ரீமதி said...

Padam theriyala oppice-la... :))))))))))))))))))))))))))) Thappichennu ninaikkiren.. ;)))))))))

வெயிலான் said...

மிகச்சிறந்த தொகுப்பு ஆதி! ரொம்ப நல்லாருந்தது.

பகலிலும் குறும்படம் இயக்க வாழ்த்துக்கள்.

உங்ககிட்ட கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும் போல! :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அய்யய்யோ.. எச்சரிக்கை.!

பின்னூட்டங்கள் வந்திருந்தாலும் ஹிட்ஸோ, ஓட்டுகளோ விழவில்லை. இது கண்டிப்பாக ஹிட்டாகவேண்டும். மருவாதியாக தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் ஓட்டுப்போடுங்கள்.. அப்போதுதான் பலரையும் சென்றடையும்.

வட போயிரக்கூடாது..! அப்புறம் அழுதுடுவேன்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மேவீ.!
(ஒரு முத்தத்திற்கு இவ்வளவு கஷ்டமா?// உனக்குன்னு வரும் போது தெரியும்டியேய்..)

நன்றி பிரேம்.!(உங்க குருப்பே ஒரு டெரரானது தான்னு நினைக்கிறேன்// ப‌க்க‌த்துல‌ வ‌ந்தாலே டெர‌ர் ஃபேஸ் காமிப்போம்ல‌..)

நன்றி ஸ்ரீதரன்.!(அதான் முன்னெச்ச‌ரிக்கைல்லாம் போட்டிருந்தோம்ல‌..)

நன்றி ச்சின்னவர்.! (ஏமாந்தீங்க‌ளா த‌ல‌.. ப‌ங்கு பெற்ற‌வ‌ர்க‌ள் ரெண்டே பேர்தான்)

நன்றி செய்யது.! (காணொளியை அலுவலகத்தில் காண முடியவில்லை.// த‌ப்பிச்சுட்டார்பா..)

நன்றி நாதாஸ்.!
நன்றி தராசு.!

நன்றி டக்ளஸ்.! (எனக்கு மட்டும் ஒரே..ஒரு படம் பண்ணிக் கொடுங்கப்பா..
// ஊஹூம்.. அதெல்லாம் முடியாது, நாங்க ரெம்ப பிஸி.!)

நன்றி அனுஜன்யா.! (வ‌ச‌ன‌த்துக்கு ஆஸ்க‌ரே கிடைக்குமாமே.. ஊருக்குள்ள‌ பேசிக்கிறாய்ங்க‌..)

நன்றி ஜோ.! (என்னைக்காவது ஒரு நாள் கையில சிக்குவீங்கல்லே? ;-)// நீங்க‌ எந்த‌ ஊருன்னு கொஞ்ச‌ம் சொன்னா தேவ‌ல‌.. அந்த‌ திசை ப‌க்க‌மே த‌லை வெக்காம‌ இருக்க‌லாம்)

நன்றி ட்ரூத்.! (நீங்க‌ளும் எஸ்கேப்பா.? வீட்ல‌ போய் பார்த்துட்டாவ‌து பின்னூட்ட‌ம் போடுங்க‌..)

நன்றி ரிஷான்.! (ந‌டிக‌ரை பாராட்டுற‌ ஒல‌க‌ம் டைர‌க்ட‌ர‌ பாக்க‌ மாட்டேங்குதே.. ஐய‌கோ..)

நன்றி வெட்டிப்பயல்.! (கார்க்கி,
விஜயை விட நல்லா நடிக்கறப்பா :-)// அதென்ன‌வோ நெச‌ம்தான் பாஸ்.!)

நன்றி பரிசல்.! (ஏன் இந்த‌ கொல‌வெறி.. ப‌ரிச‌ல்.?)

நன்றி வித்யா.! (ஊஹூம்.. த‌ர‌முடியாது.! எதுன்னாலும் பேசித் தீத்துக்குவோம்)

நன்றி ஸ்ரீமதி.! (கிரேட் எஸ்கேப்.!)

நன்றி வெயிலான்.! (யோவ் இன்னா.. ந‌க்க‌லா.?)

குசும்பன் said...

என்ன அனத்தவிடுங்கடா என்ற பாய்ஸ் டயலாக் தான் நினைவுக்கு வருகிறது!!!

தலைவா இதுல வரிக்கு வரி விமர்சனம் எழுதவேண்டி இருப்பதால் தனி பதிவாக போட்டுவிடுகிறேன்:)))

இன்னைக்கு சிக்கிட்டான் டா ஒரு அடிமை!!!

குசும்பன் said...

//இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் ஆதி//

வீட்டுக்கு மேல இருக்கும் பரன், பக்கத்து வீட்டு ஆண்டனா இப்படி பல உயரங்களை தொட நானும் வாழ்த்துக்கிறேன்!

வெயிலான் said...

// வீட்டுக்கு மேல இருக்கும் பரன், பக்கத்து வீட்டு ஆண்டனா இப்படி பல உயரங்களை தொட நானும் வாழ்த்துக்கிறேன்! //

:)))))))

RAMYA said...

ஆதி நான் உள்ளேன் மற்றும் ஓட்டும் போட்டுட்டேன்.

அப்புறமா படம் பார்க்கிறேன்.

ஆணி கொஞ்சம் ஓவரா இருக்கு

அப்புறம் ஒரு சின்ன விஷயம்,
நடுவிலே, காபி, பாப்கார்ன் இதெல்லாம் வேணும் :-)

இதெல்லாம் டைரக்டர் அல்லது Producer தான் supply பண்ணனும்.

இங்கே ரெண்டுமே நீங்கதான்னு கேள்விப் பட்டேன்.

அதற்கும் ஏற்பாடு செய்யவும்.

நான் லேட்நைட் ஷோ தான் பார்ப்பேன்.

அதுக்குன்னு என்னை பழிவாங்கறதா நினைச்சு நான் அனுப்பிய பேயை எனக்கு திருப்பி விட்டறாதீங்க

எனக்கு பயந்து வரும் :))

Cable Sankar said...

ஆதி உங்கள் மூக்கின் மேல் ஒரு ‘சப்பக்”

Anonymous said...

//4. எதற்கும் பெண்கள், இதயபலவீனமானவர்கள் படத்தைத் தவிர்க்கலாம்//

நான் பாக்கலை
(கார்க்கி , பொலீஸுக்கு போலாம், நல்லா தொப்பை போட்டிருக்கு ):)

Truth said...

ஆதி,
தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் வோட்டு போட்டாச்சு. நீங்க நினைக்கிற மாதிரி என்னால வீட்டுல கூட பாக்க முடியாது. நான் சிந்துபாத்தா இருக்கேன். முடிஞ்சா எனக்கு மெயில் பண்ணுங்க :-). நான் உங்களுக்கு ஒரு மெயில் பண்ணியிருக்கேன். கண்டிப்பா பாத்தே ஆகனும் :-)

narsim said...

இந்தப் படத்தப் பத்தி தனிப்பதிவாவே விமர்சனம் பண்ணனும்.ஆங்கிள் அப்பிடி..

திரைக்கதை சூப்பர். திரை ல வந்த கதை சூப்பர்ன்னு சொன்னேன்

புன்னகை said...

ஆதி chance eh இல்ல போங்க! கலக்கிபுட்டீங்க! கார்கி சொல்ற அந்த பூ, செடி தத்துவம், முடியலப்பா!!! Statutory warning பாத்த பிறகும் கூட, வீடியோ பாக்காம இருக்க முடியல! :-)

Suresh said...

ha haa haa கார்க்கியோட தொப்பை தான் படத்துல ஹைலைட் ;)

MayVee said...

naama kadaikku vanga

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.! (தலைவா இதுல வரிக்கு வரி விமர்சனம் எழுதவேண்டி இருப்பதால் தனி பதிவாக போட்டுவிடுகிறேன்:)// சூப்பர் தல..)

நன்றி ரம்யா.! (படத்தைப் பாக்காம பின்னூட்டம் போட்டா இப்பிடித்தான். ப்ரொட்யூசர் அப்துல்லா அண்ணந்தான்.. அவ‌ர்கிட்ட‌தான் முறுக்கு பாப்கார்னெல்லாம் நீங்க‌ கேட்க‌ணும்)

நன்றி கேபிள்.! (ஏன் இப்பிடிக்குத்துறீங்க‌ பாஸ்..)

நன்றி அம்மிணி.! (ப‌ட‌ம் பார்க்காம‌ எப்ப்டி தொப்பை விஷ‌ய‌ம் தெரிஞ்சுது?)

நன்றி நர்சிம்.! (கார்க்கி இமேஜை இப்பிடி டேமேஜ் ப‌ண்ணுனும்னு நான் நினைக்க‌வே இல்ல‌.. அவ்வ்வ்வ்.. எங்க அப்பா குதிருக்குள்ள‌ இல்ல‌..)

நன்றி புன்னகை.! (க‌ட‌ல் த‌த்துவ‌ம் எப்ப்டி இருந்த‌துன்னு சொல்ல‌வேயில்லையே..)

நன்றி சுரேஷ்.! (அதெல்லாம் வெளிய‌ச்சொல்ல‌க்கூடாது)

அறிவிலி said...

கார்க்கியின் பின்னூட்டம் காணலியே.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

RAMYA said...

//
4. எதற்கும் பெண்கள், இதயபலவீனமானவர்கள் படத்தைத் தவிர்க்கலாம்.
//

இதெல்லாம் படிச்சும் தைரியமா படம் பார்த்தா :))

ஆதி vs கார்க்கி என்ன நடக்குது
=============================

நானே ஐயன் படம் பாத்து ஒரு வாரம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தேன்.

பூ, மரம் காத்து அடிச்சு பூ பறந்து போச்சு, ஆனா மரம் பறக்கலை அது சரி :)

கார்க்கி நான் அப்பவே சொன்னேன், ஆந்திரா புல் மீல்ஸ் சாப்பிடாதீங்கன்னு :)

இப்போ பாருங்க, கதாநாயகனா நடிக்கச் சான்ஸ் கிடைச்சு இருக்கு
இந்த நேரத்துலே போயி..... என்னாதிது :))

ஆதி
====
நல்ல முயற்சி, தொடர்ந்து பல நல்ல வெற்றிப் படங்களை கொடுங்கள்.

டிஸ்கி போட மறந்து விடாதீர்கள் :-)

செலவே இல்லாமல் ஒரே ஒரு ஆளை வச்சி படம் எடுத்து ஆஸ்கர் ரேஞ்சுக்கு வந்துட்டீங்க. சரி சரி..

வெள்ளிவிழா, பொன்விழா எல்லா விழாவிற்கும் சொல்லி அனுப்பவும்.

இந்த குறும் படம் எடுக்க முயற்சி பண்ணிய எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள் !!

வாழ்த்துக்கள் ஆதி!!

Anonymous said...

ஆதி உன் முதல் முயற்சி வெற்றிக்கு வாழ்த்துகள்.

ஆனா எடிட்டிங் இன்னும் சிறப்பா இருக்கணும். ஒரு முறை மாதவரஜுடன் பேசு. அவரது இரு குறும்படங்களை வாங்கிப் பார்க்கவும்.

தமிழ்ப்பறவை said...

அய்யா ஆதீ... இது சீரியஸா, காமெடியான்னா தெரியலையே...
இது சீரியஸ்னா... குட்.. நல்ல முயற்சி...இன்னும் நல்ல கதையோட தொடரவும்..ஹீரோவை மாற்ற வேண்டாம்..ஹீரோயின் தமன்னா போதும்...
கார்க்கி நடிப்பில் மட்டுமல்ல தொப்பையிலும் முந்துகிறார்.(கேங் ’ஃபுல்லா’ இப்படித்தான் இருக்கும் போல.)
இதுல இன்னொரு கேரக்டர் நடிப்பைக் கசக்கிப் பிழிஞ்சிருக்காரு எலுமிச்சம் பழம் பிழிந்து கார்க்கியின் போதையைத் தணிக்கும் காட்சியில்.
வசனம் அனுஜன்யாவா...?! ஜெ.மோ வுக்குச் சரியான சவால்.
மொத்தத்தில் ‘எங்கே நீ’...ஒரு பின்நவீனத்துவத் திரைப்படம்..

(மொத்தப் படமே 3 நிமிஷம்தான் அதுக்கு பிற்சேர்க்கை 3 நிமிஷமா..?)

RAMYA said...

//
நன்றி ரம்யா.! (படத்தைப் பாக்காம பின்னூட்டம் போட்டா இப்பிடித்தான். ப்ரொட்யூசர் அப்துல்லா அண்ணந்தான்.. அவ‌ர்கிட்ட‌தான் முறுக்கு பாப்கார்னெல்லாம் நீங்க‌ கேட்க‌ணும்)
//

அப்துல்லா அண்ணனை எல்லாம் பிடிக்க முடியாது, அதுனாலே நீங்கதான் எல்லாத்துக்கும் பொறுப்பு ஏத்துக்கணும்.

உங்கபடத்தை வெற்றி படமாக்குவது என்றால் சும்மாவா :-) ஹி ஹி ஹி !!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அறிவிலி.! (நீங்க படத்தைப்பற்றி ஒண்ணும் சொல்லலையே.! ஹீரோ பெங்களூருக்கு அடுத்த படம் லொக்கேஷன் பார்க்க போயிருக்கார். நாலைக்கு வந்து பின்னூட்டம் போடுவார்..)

நன்றி ரம்யா.! (காத்து அடிச்சு பூ பறந்து போச்சு, ஆனா மரம் பறக்கலை அது சரி :)// ஏற்கனவே சிரித்துக்கொண்டிருந்தேன், நீங்கள் எடுத்துச்சொன்னப்புறம் இன்னும் சிரிப்பு வருது.. செம்ம டயலாக் இல்ல.? தனியா மாட்டுன என் நிலைமையை நினைச்சுப்பாருங்க..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வேலன்.! (என்னண்ணே நீங்க வேற குறும்படம், பெரும்படம்னு காமெடி பண்றீங்க.. அட போங்க..)

நன்றி தமிழ்பறவை.! (அலோ என்னது சின்னப்புள்ளத்தனமா இருக்குது. மத்த சரக்குக்குதான் எலுமிச்சம் இறக்கப் பயன்படும். அது வோட்கா.. நாங்க யூஸ் பண்ணினது ஏத்துறதுக்கு.. அண்ணன் கவுந்தடிச்சிருப்பது வோட்காவினால் அல்ல, காதல் நினைவுகளால்..)

dharshini said...
This comment has been removed by the author.
dharshini said...

கார்கி அண்ணா வெச்சு காமெடி எதுவும் பன்னலியே?!
கார்கி அண்ணனுக்கு தண்ணிகொடுத்து flashbackலாம் வீடியோ எடுத்துட்டு முடித்த பிறகு லெமன் பிழிந்துகொடுக்கறீங்களா?:)
தாமி...ஸாரி... ஆதி அண்ணா, விண்டோஸ் மூவிமேக்கரில் இன்னும் கொஞ்சம் ஸ்டில்ஸ் add செய்து graphics அதிகமாக வரும்படி செய்திருக்கலாம்...எனிவே வாழ்த்துக்கள்.
18 வயதுமுடியாதவங்க ஓட்டு போடறது சட்டபடி குற்றம் இருந்த்தாலும் படம் நல்லா எடுத்ததற்காக ஓட்டு போட்டுட்டேன்..

விஜய் ஆனந்த் said...

:-)))...

SK said...

ஒ பதிவு எல்லாம் முடிஞ்சு.. இப்போ குறும்படமா ஆரம்பிச்சாச்சா ... நல்ல இருங்க :)

கவிதா | Kavitha said...

ஆதி...

கார்க்கி யின் அனுமதியோடு எடுத்திருக்கும் படம் என்று நம்புகிறேன்..

:)))) என்னவோ அவரை பார்த்தா ரொம்ப பாவமா இருக்குங்க.. :)))))

டைட்டில், மியூசிக், பேக் சீன்ஸ் எல்ல்லாம் செம செம செம சூப்பர்..

ஆல் தி வெரி பெஸ்ட் !! :))

எம்.எம்.அப்துல்லா said...

அடப்பாவிகளா, நானும் ரெண்டு நாளா வெயிட் பண்ண,வெயிட் பண்ணி பாக்குறேன்!!!! ஆக்டரைப் பற்றி சொல்லுறாங்க,டைரக்டரப் பற்றி சொல்லுறாங்க....படத்த எடுத்த புரடியூசர் மூணு பேரைப் பற்றி ஒரு பயபுள்ளயும் கருத்து சொல்லலியே....

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//கூரியரில் டிவிடி அனுப்பிவைக்கப்படும். //

sontha selavil sooniyam anuppi vaikapadumnu maathungka :))

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

mudinja intha short film parunga.

http://zephyrfriends.blogspot.com/2009/04/take-care-all-of-you.html

அறிவிலி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
நன்றி அறிவிலி.! (நீங்க படத்தைப்பற்றி ஒண்ணும் சொல்லலையே.! ஹீரோ பெங்களூருக்கு அடுத்த படம் லொக்கேஷன் பார்க்க போயிருக்கார். நாலைக்கு வந்து பின்னூட்டம் போடுவார்..)//

குறும்படம் அப்படின்னா, உண்மையில் சூப்பர் முயற்சி.
கேண்டிட் கேமரா இல்லியே???
(ஏற்கெனவே அங்க பரிசலும் கார்க்கியும் ஒரு குழப்பம் பண்ணிக்கிட்ருக்காங்க)

Poornima Saravana kumar said...

ஹா ஹா ஹா

Saravana Kumar MSK said...

இன்னாப்பா இது.. ஒரு மனுசன், தன் காதலை நெனச்சி ஃபீலிங்கா புலம்பினு இருக்காரு. அவரை போய் கலாய்க்கறீங்களே..

Saravana Kumar MSK said...

போகாதே மியூசிக் செம மேட்சிங்கா இருக்கு...

கும்க்கி said...

பதிவு படிச்சிட்டேன்..அப்புறம் விடியோவ பார்த்தேன்..அப்புறம் பின்னூட்டம்லாம் படிச்சேன்..அப்புறம் மறுபடி விடியோவ பார்த்தேன்..அப்புறம்...வேணா விடுங்க.
(கார்க்கி எங்க கல்யாணம் பன்னிடுவாரோங்கிற கவலையில இப்படி ஒரு அக்மார்க் உள்குத்து குத்திட்டிங்களே எசமான்...அவங்க கேர்ள் ப்ரண்ஸ்லாம் என்ன நெனப்பாங்க...ம்ஹூம்..உங்கள அஞ்சாநெஞ்சன் மாநகருக்கு மாத்தம் செய்ய சொல்லிற வேண்டியதுதான்)

கும்க்கி said...

எம்.எம்.அப்துல்லா said...

அடப்பாவிகளா, நானும் ரெண்டு நாளா வெயிட் பண்ண,வெயிட் பண்ணி பாக்குறேன்!!!! ஆக்டரைப் பற்றி சொல்லுறாங்க,டைரக்டரப் பற்றி சொல்லுறாங்க....படத்த எடுத்த புரடியூசர் மூணு பேரைப் பற்றி ஒரு பயபுள்ளயும் கருத்து சொல்லலியே....

இரண்டு மினி ஸ்ப்ரைட் பாட்டில்கள்,ஒரு வோட்கா,ஒரு எலுமிச்சம் பழம்....ஸ்பான்சர்...அய்ய்யய்யோ...பைனான்ஸ் செய்து இந்த குறும்படத்தை தயாரித்தளித்த மூன்று தயாரிப்பாளர்களுக்கும் வலையுலகம் சார்பாக நன்றி.

Suresh said...

thalaiva

sathiyama solran i laughed very loud during that lemon squeeze ha haa

enna direction thaniya uthi vittu mattera vangitom nu symbolikkaa pulinchitinga ha haha

athula intha pu mathiri kai maram nu avaru pesura dialogue ora comedy than

behind scences than super

apprum nadvula konjam sensor panitinga avaru mukiyama etho sonnaaru ha ha

karkiya ithu photo summa gummunu iukaru ethula nalla beer thoppai theriyuthu

parthupa avaruku ponu paratha avanga mamanar intha padatha partha thanga mattanga ha haa

aathi here after i am ur great follower valga ungal thondu

Suresh said...

@ கும்க்கி

//இரண்டு மினி ஸ்ப்ரைட் பாட்டில்கள்,ஒரு வோட்கா,ஒரு எலுமிச்சம் பழம்....ஸ்பான்சர்...//

கரெக்ட்டா நேட் பண்ணிடிங்க ஹ ஹா

ஆனாலும் வோட்கா மெட்டரும் அந்த எலும்பிச்சை மெட்டரும் தான் சூப்பர்

தருமி said...

கண்ணு கலங்கிடுச்சி.........

விக்னேஷ்வரி said...

ஒண்ணுமே புரியலைங்க. இது கார்க்கியின் கதையா, இல்ல கார்க்கி ஸ்கிரிப்ட் பார்த்து ஒப்பிக்கிறாரா..... :O

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தர்ஷினி.! (ஆமா, அவுரு சின்னப்புள்ளை, நாந்தான் தண்ணி ஊத்திக்குடுத்தேன்.. அட போங்கம்மா..)

நன்றி ஆனந்த்.!
நன்றி SK.!
நன்றி க‌விதா.! (காமிராவை உத்து உத்து பாக்குறாரே, எப்ப்டி அவுருக்குத் தெரியாம எடுக்கமுடியும்)

நன்றி அப்துல்.! (அதானே.. ஆமா, இன்னும் பேமென்ட் பாக்கியிருக்குது தல..)

நன்றி ச‌ஞ்ச‌ய்.!
நன்றி அறிவிலி.!
நன்றி பூர்ணிமா.!
நன்றி ச‌ர‌வ‌ணா.!

நன்றி கும்க்கி.!
நன்றி சுரேஷ்.! (here after i am ur great follower// சொல்றதோட நிற்காம கொஞ்சம் பாலோ பண்ணினாலும் நல்லாருக்கும் 120 லயே ஸ்ட்ரக்காகி நிக்கிது பாலோயர் லிஸ்ட்.!)

நன்றி த‌ருமி.!
நன்றி விக்னேஷ்வ‌ரி.!

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

ஆமா ஹிரோக்கு எத்தனை வயது...?

:)

வெண்பூ said...

முதல் குறும்பட முயற்சிக்கு வாழ்த்துகள் ஆதி...

ஆனால் இது ஒரு தனி மனுஷனோட ரகசியங்களை வெளிய கொண்டு வந்துட்ட மாதிரி இருக்கு..

மணிகண்டன் said...

தாமிரா,

ரொம்ப நல்லா இருக்கு. தொடர்ந்து நல்ல ஐடியா கிடைச்சா குறும்படம் எடுங்க. இந்த படத்தோட ஹைலைட் கார்க்கியோட இயற்கையான நடிப்பும், அவர் பேசிய வசனமும் தான்.

இனிமே குறும்படம் போட்டா, உடனே தெரியவைக்க குறும்பட குழுவுல உள்ள எல்லாரும் லிங்க் கொடுங்க. எனக்கு இவ்வளவு நாள் கழிச்சி தான் தெரிய வந்தது.

பட்டாம்பூச்சி said...
This comment has been removed by the author.
பட்டாம்பூச்சி said...

//நடிகர், இயக்குனர் 2011 வரை பிஸியாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் யாரும் கால்ஷீட்டுக்கு தற்போது முயற்சிக்கவேண்டாம் என //

நல்ல வேளை..டிஸ்கில இதை சொல்லிட்டீங்க.
இல்லேன்னா ஹீரோ,டைரக்டரு வீடு இருக்கற தெருவே ஹாலிவுட்,கோலிவுட்,பாலிவுட் ஆளுங்களால திமிலோகப்பட்டிருக்கும் போங்க.
ஏற்கனவே இந்த படத்தோட ட்ரைலரே சக்கைபோடு போடுதாமே??!!???
திருட்டு சிடி விற்பனை கூட வரலாறு காணாத அளவுல பிச்சிகிட்டு போகுதுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன :)))))

பட்டாம்பூச்சி said...

முதல் முயற்சி வெற்றிக்கு வாழ்த்துகள் :)!!!!

Karthik said...

நல்லாருக்குங்க. :)

கார்க்கி, விஜய் மாதிரி ஃபிட்டா இருப்பீங்கன்னு பார்த்தா 'தல' மாதிரி ட்ரை பண்ணுவீங்க போல?! ;)

குசும்பன் said...

//Karthik said...
நல்லாருக்குங்க. :)

கார்க்கி, விஜய் மாதிரி ஃபிட்டா இருப்பீங்கன்னு பார்த்தா 'தல' மாதிரி ட்ரை பண்ணுவீங்க போல?! ;)//

அவரு செம டைட்டா இருக்கிறார் இப்பொழுது இந்த கேள்விய கேட்பது நல்லதுக்கு இல்லை:)

அ.மு.செய்யது said...

படத்த இப்ப தாங்க பாக்க முடிஞ்சது ( மணி இப்ப நள்ளிரவு 1.23 ).

பின்னூட்டம் போடாம இருக்க முடியல...செம பீலிங்க்ஸா போச்சுங்க..

Karthik said...

//குசும்பன் said...
அவரு செம டைட்டா இருக்கிறார் இப்பொழுது இந்த கேள்விய கேட்பது நல்லதுக்கு இல்லை:)

ஓ, அப்ப மத்த நேரங்களில் எல்லாம் கார்க்கி லூஸா??? ;)

இன்பர்மேஷனுக்கு நன்றி தல! :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தமிழன்.! (தொப்பையைப் பார்த்து நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளவும்)

நன்றி வெண்பூ.! (யாருங்க நீங்க.. புது பதிவரா.?)

நன்றி மணிகண்டன்.! (குறும்படக்குழுவா.? அது எங்கிட்டு இருக்குது அண்ணாத்த.?)

நன்றி பட்டாம்பூச்சி.!
நன்றி கார்த்திக்.!
நன்றி குசும்பன்.!
நன்றி செய்யது.!

ஸ்ரீதர் said...

good effort.vaazhththukal.