Monday, April 27, 2009

பேசித்தீராத ஒன்று.!

காதல் வெள்ளை வெளேரென்றிருக்கிறது.. காமம் அதிலிருந்து வண்ணங்களை விசிறியடிக்கிறது..

இந்தக்கவிதையை படித்துவிட்டு என்னை அழைக்கிறாய். ‘எத்தனை ரசனையானவன் நீ..?’ தொடர உன்னிடம் வார்த்தைகளில்லை. என்னிடமும் பதிலாகத் தர ஏதுமில்லை. நாம் பேசி எத்தனை மாதங்களிருக்கும்.. ஸாரி, வருடங்களிருக்கும்? இல்லை. யுகங்களாகிவிட்டன தோழி. அது வேறு உலகம், வேறு காலம். அங்கிருந்தது நீயல்ல.. அவள் இறந்து போய்விட்டாள்.

காமம் வேறு. நான் நேர்கொண்ட பார்வை கொண்டவன் என நிரூபிக்க பேசும் பெண்களிடத்தெல்லாம் கண்களை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளே கள்ளம் கைகொட்டிச்சிரிக்கிறது. காமம் தீராத பசி. யாரையும் உண்ண அது எப்போதும் தயாராகவே இருக்கிறது. ஆனால் என்னுள் தோன்றிய நாள் முதல் உன்னைத்தின்று வளர்ந்த காதல்.. வேறு உணவின்றி பசியோடு அலறித்துடித்தே ஓர் நாள் இறந்துபட்டது. அது ஆயிற்று எத்தனையோ வருடங்கள். உறவிருப்பதாய் எண்ணினால் அதன் கல்லறையின் மேல் ஒரு ரோஜா மலரை வேண்டுமானால் இப்போது நீ வைத்துப் போகலாம்.

Love_by_LadybirdM

காரணங்களா? அதன் தேவையென்ன இப்போது? விந்தையானது இந்த வாழ்க்கை.! அற்புதங்களையெல்லாம் அற்பங்களே அடித்துச் சிதறச்செய்கின்றன.

இந்தக்கவிதை எப்படி உன்னில் என்னை நினைவூட்டியது? உன்னுடன் காதலைச் செய்துகொண்டிருந்த போது காமம் ஓர் தளிராகத்தான் இருந்தது. முத்தங்கள் இரண்டு வகைப்படலாம். காதலின் பனித்துளியாகவும் அது இருக்கிறது, காமத்தின் துளிதணலாகவும் அது இருக்கிறது. அப்போது பனித்துளியை மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். காதல் காமத்தை வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் உன்னால் காதல் கொல்லப்பட்டபோது நான் உன்னைக்கொன்றேன். காமம் தனித்துவிடப்பட்டது. உடலில் வேர் பிடித்து காமம் தனித்தே திரண்டு வளர்ந்திருக்கும் இப்போது உனது அழைப்பு.. கண்ணியமா? அப்படியென்றால்.?

நான் உன் கண் பார்த்தே பேசுவேன்..

“ஆகாஷ், நடக்க ஆரம்பிச்சுட்டானா.?”

(Photo courtesy : Deviantart).

48 comments:

RAMYA said...

காதல் நினைவுகள் ??

RAMYA said...

//
ஆனால் என்னுள் தோன்றிய நாள் முதல் உன்னைத்தின்று வளர்ந்த காதல்.. வேறு உணவின்றி பசியோடு அலறித்துடித்தே ஓர் நாள் இறந்துபட்டது. அது ஆயிற்று எத்தனையோ வருடங்கள். உறவிருப்பதாய் எண்ணினால் அதன் கல்லறையின் மேல் ஒரு ரோஜா மலரை வேண்டுமானால் இப்போது நீ வைத்துப் போகலாம்.
//

அருமையான வெளிப்பாடு, வருடங்கள் பல ஆனாலும் அந்த நினைவுகளின் வேதனை, ரத்தத்தில் மூழ்கி ரோஜா மலரில் இருந்து சிதறிய ரத்தத் துளிகள் வேதனையை உணர்த்துகின்றது (யாருடைய வேதனையானாலும்). :((

மங்களூர் சிவா said...

/
நான் நேர்கொண்ட பார்வை கொண்டவன் என நிரூபிக்க பேசும் பெண்களிடத்தெல்லாம் கண்களை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளே கள்ளம் கைகொட்டிச்சிரிக்கிறது.
/

உண்மை

மங்களூர் சிவா said...

பதிவு ரொம்ப நல்லா இருக்கு.

ஊர் சுற்றி said...

கிருஷ்ணா......

என்னது இது? வார்த்தைகள் ஒரு உணர்ச்சிப் பிரளயத்திற்குள் தள்ளி விடுகின்றனவே! உங்களுடைய இம்மாதிரியான இடுகைகளை தனியாக அமைதியில் உட்கார்ந்து வாசிக்க வேண்டும் என நினைக்கிறேன். இல்லையேல் இதன் முழு உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

வனம் said...

வணக்கம் ஆதி

\\என்னுள் தோன்றிய நாள் முதல் உன்னைத்தின்று வளர்ந்த காதல்.. வேறு உணவின்றி பசியோடு அலறித்துடித்தே ஓர் நாள் இறந்துபட்டது.\\

\\உன்னால் காதல் கொல்லப்பட்டபோது நான் உன்னைக்கொன்றேன். \\

முடியல ஆதி உணர்வுகளை உங்கள் எழுத்துக்கள் படங்களாய் வரைகின்றன,

\\காமம் தனித்துவிடப்பட்டது. உடலில் வேர் பிடித்து காமம் தனித்தே திரண்டு வளர்ந்திருக்கு\\

இதுதான் காதலின் பின்பான பலரின் வாழ்வோ....?

நன்றி
இராஜராஜன்

sayrabala said...

காதலின் பனித்துளியாகவும் அது இருக்கிறது, காமத்தின் துளிதணலாகவும் அது இருக்கிறது.


sarithaan pola

sayrabala said...
This comment has been removed by the author.
Anonymous said...

அது வேறு உலகம், வேறு காலம். அங்கிருந்தது நீயல்ல.. அவள் இறந்து போய்விட்டாள்.

இந்த கால கட்டத்தை எல்லோரும் ஒரு முறை கடந்துதான் வருகிறோம் போல....

Mahesh said...

//காமம் வேறு. நான் நேர்கொண்ட பார்வை கொண்டவன் என நிரூபிக்க பேசும் பெண்களிடத்தெல்லாம் கண்களை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளே கள்ளம் கைகொட்டிச்சிரிக்கிறது. காமம் தீராத பசி. யாரையும் உண்ண அது எப்போதும் தயாராகவே இருக்கிறது.//

சுளீர் !!!

தமிழ்ப்பறவை said...

உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள்...
நல்ல பதிவு....

அத்திரி said...

அருமை அண்ணே

dharshini said...

நீங்கள் எழுதியிருக்கும் வரிகள் அனைத்தும் கவிதையைபோலவே உள்ளது.
:)

dharshini said...
This comment has been removed by the author.
dharshini said...

இதுல இருக்கற படம் நீங்களே graphics பண்ணினதா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ரம்யா.!
நன்றி மங்களூர் சிவா.!
நன்றி ஊர்சுற்றி.! (வெகுசில பதிவுகள்தான், படித்து பின்னூட்டமிடுங்கள்)

நன்றி சாய்ராபாலா.!
நன்றி மயில்.!
நன்றி மகேஷ்.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி அத்திரி.!
நன்றி தர்ஷினி.! (நன்றியறிவிப்பு செய்துள்ளேனே, கவனிக்கலையா?)

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன யாவாரம் டல்லடிக்குது? கொஞ்சம் சீரியஸா எழுதினா போதுமே.. ஓடிடுவீங்களே.!

அன்புடன் அருணா said...

நல்ல நினைவலைகள்....மலரும் நினைவலைகளா??? நல்லாருக்குப்பா!!!
அன்புடன் அருணா

kailash,hyderabad said...

It's not serious.you have brought out our subtle feelings very correctly .its good .I think may be every male feel like this if we admit
with within us with honestly.

ஊர் சுற்றி said...

கவிதையா கவிதை....
எப்படி இப்படி...

//நான் நேர்கொண்ட பார்வை கொண்டவன் என நிரூபிக்க பேசும் பெண்களிடத்தெல்லாம் கண்களை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளே கள்ளம் கைகொட்டிச்சிரிக்கிறது.//

இந்த இடுகையை நான் ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சிட்டிருக்கேன். அலுவலகத்தில அவசர கதியில் ஒழுங்கா படிக்க முடியல. இப்போ நின்னு நிதானமா வாசிச்சா....
திணறடிக்கின்றன உம் வார்த்தை கோர்ப்புகள்.

ஆதிமூலகிருஷ்ணன் அவர்களே,
வாழ்த்துக்கள். கலக்குங்கள்.

அ.மு.செய்யது said...

//காதலின் பனித்துளியாகவும் அது இருக்கிறது, காமத்தின் துளிதணலாகவும் அது இருக்கிறது. அப்போது பனித்துளியை மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். காதல் காமத்தை வளர்த்தெடுத்திருக்கவேண்டும்//

வெகு சிர‌த்தையோடு க‌வ‌ன‌மாக‌ எடுத்தாள‌ப் ப‌ட்ட‌ ப‌குதி.

சொற்சிக்கன‌த்தை ப‌ற்றி க‌வ‌லைப் ப‌டாம‌ல் ம‌டை திற‌ந்த‌ வெள்ள‌மாய் எழுத்து.

செதுக்கியிருக்கீங்க‌...!!!!! அட‌ போங்க‌ !!!

ஊர் சுற்றி said...

//வெகு சிர‌த்தையோடு க‌வ‌ன‌மாக‌ எடுத்தாள‌ப் ப‌ட்ட‌ ப‌குதி.

சொற்சிக்கன‌த்தை ப‌ற்றி க‌வ‌லைப் ப‌டாம‌ல் ம‌டை திற‌ந்த‌ வெள்ள‌மாய் எழுத்து.

செதுக்கியிருக்கீங்க‌...!!!!! அட‌ போங்க‌ !!!//

கன்னா பின்னான்னு வழிமொழிகிறேன்.

அது சரி said...

நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது...சொல்ல விருப்பமில்லை...சொல்லாமலும் இருக்க முடியவில்லை...நல்லா இருக்கு, ஆனால் ஏதோ ஒன்று குறைகிறது ஆதி...இது உள் மன புலம்பலும் இல்லை, வெளிப்படையான உரையாடலும் இல்லை...இரண்டுக்கும் நடுவே...எங்கோ ஒரு இடத்தில் தடம் மாறிவிட்டது...
(விமர்சனத்திற்கு மன்னிக்க!)

Joe said...

அட்டகாசம்!

கார்க்கி said...

தலைப்ப பார்த்த்வுடனே நான் கூட அரசியலா இருக்குமோன்னு நினைச்சேன். இனிமேல 90 அடிச்சிட்டு பதிவு போடாதீங்க சகா..

அமிர்தவர்ஷினி அம்மா said...

class

//நான் நேர்கொண்ட பார்வை கொண்டவன் என நிரூபிக்க பேசும் பெண்களிடத்தெல்லாம் கண்களை நோக்கிப் பேசிக்கொண்டிருந்தாலும் உள்ளே கள்ளம் கைகொட்டிச்சிரிக்கிறது.//

:))

காதலின் பனித்துளியாகவும் அது இருக்கிறது, காமத்தின் துளிதணலாகவும் அது இருக்கிறது.//

இதெல்லாம் ரசித்த வரிகள், பதிவு மொத்தமே ரசிக்கும் படியாக..
ஆதின்னு பேர் மாற்றம் நடந்தவுடனே ஏதோ கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுது போல...............


(இதெல்லாம் சேமித்து வைத்து அப்ப அப்ப படித்து வைத்துக் கொள்ள வேண்டிய பதிவு)

அனுஜன்யா said...

ஆதி,

முதலில் பரிசல்/கார்க்கி மாற்றி எழுதியது போல நீங்களும் சரவணக்குமாரும் ஏதாவது சைடு பிஸிநஸ்ஸொ என்று சந்தேகம் வந்தது. இப்பவும் கொஞ்சம் இலேசா இருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்?

அட்டகாசமா இருக்கு ஆதி. இது மாதிரியும் எழுதுங்க அவ்வப்போது. மக்கள் சகிப்புத் தன்மை வளர்த்துக்கொண்டு கொஞ்ச கொஞ்சமா பின்னூட்டங்களை அதிகரிப்பார்கள். இப்ப என் கவிதைக்கெல்லாம் பின்னூட்டங்கள் (என்னப் பத்தி தெரியாதவங்க) வருது. அதனால மனசத் தளர விடாமல் இது மாதிரியும் எழுதுங்க.

Jokes apart, really a super duper post.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

முத்தக்குறியீடுகள் ( பனித்துளி, துளிதணல்) அபாரம் ஆதி.

ஸ்ரீமதி said...

அண்ணா கலக்கறீங்க‌... One of ur best post.. :))))

ஸ்ரீமதி said...

me the 30 :))

குசும்பன் said...

//முத்தங்கள் இரண்டு வகைப்படலாம். காதலின் பனித்துளியாகவும் அது இருக்கிறது, காமத்தின் துளிதணலாகவும் அது இருக்கிறது. அப்போது பனித்துளியை மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். //

இங்க இங்கதான் ஆதி நீங்க நிக்கிறீங்க:)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

என்ன.. என்ன.. என்ன நடக்குது இங்க? :)))

எழுத்துக்கள் ரொம்ப மெறுகேறிட்டே போதுகு ஆதி. :)


.. என்ன ஃபாண்ட் யூஸ் பன்றிங்க?

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//காதல் வெள்ளை வெளேரென்றிருக்கிறது.. காமம் அதிலிருந்து வண்ணங்களை விசிறியடிக்கிறது..//

எதோ சொல்லனும் போல இருக்கு.. ஆனா கொஞ்சம் பயமா இருக்கு.. :)))

கும்க்கி said...

:-)

கும்க்கி said...

நேக்கு கொஞ்சம் பயமாய்த்தானிருக்கிறது.
ரிவர்ஸ் கியரில் போகாதீங்கோன்னா.+

dharshini said...

இப்பதான் பார்த்தேன்..
:)

வசந்த் ஆதிமூலம் said...

ரசனையான பதிவு. வாழ்த்துகள்.

Saravana Kumar MSK said...

‘எத்தனை ரசனையானவன் நீ..?’

ஆமாங்க்ணா.. கலக்கலா ரசனையா எழுதி இருக்கீங்க..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அருணா.!

நன்றி கைலாஷ்.!

நன்றி செய்யது.! (ரெண்டு பாராவுல முடிச்சிருக்கேன், சொற்சிக்கனம் பாக்கலைன்னு சொல்றீங்களே பாஸ்..)

மீண்டுமீண்டும் வந்து பாராட்டும் அன்புக்கு மீண்டுமீண்டும் நன்றி ஊர்சுற்றி.!

நன்றி அதுசரி.! (விமர்சிக்கவே இல்லையே.. அப்புறம் எதுக்கு மன்னிக்க? உள்மன புலம்பலுக்கும், வெளிப்படையான உரையாடலுக்கும் நடுவாக என்பதே எனக்கு பாராட்டாகப் படுகிறது.!)

நன்றி ஜோ.!

நன்றி கார்க்கி.! (அது மட்டும் கரெக்டா தெரிஞ்சிடுமே)

நன்றி அமித்து அம்மா.! (பெண்கள் பக்கமிருந்து மகிழவைக்கும் ஒரு கமெண்ட்..)

நன்றி அனுஜன்.! (சரவணாவின் கவிதை பக்கத்திலேயே போக முடியமா பாஸ்.. அது என்ன டாப்பு.?)

நன்றி பரிசல்.!

நன்றி ஸ்ரீமதி.!

நன்றி குசும்பன்.! (காமெடி கீமடி பண்ணலியே..)

நன்றி சஞ்சய்.! (ஏன் இப்படி?)

நன்றி கும்க்கி.!
நன்றி தர்ஷினி.!
நன்றி வசந்த்.!
நன்றி சரவணா.!

தமிழ்நதி said...

"காதலின் பனித்துளியாகவும் அது இருக்கிறது, காமத்தின் துளிதணலாகவும் அது இருக்கிறது."

என்ற வரிகள் பிடித்திருந்தன. ஒரு சிறிய கவிதைபோல..

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் தல..

இந்த பதிவு இளமை விகடன் குட் பிளாக்ஸ்ல வந்துருக்கு..

ஊர் சுற்றி said...

//இந்த பதிவு இளமை விகடன் குட் பிளாக்ஸ்ல வந்துருக்கு.//

வாழ்த்துக்கள் கிருஷ்ணா.
ஒவ்வொருமுறை படிக்கும் போதும் இது ஒரு கணக்கிடமுடியாத விதத்தில் புல்லரிக்க வைக்கிறது.

என் நண்பர்களுக்கும் பரிந்துரைத்துள்ளேன்.
:)

தமிழன்-கறுப்பி... said...

நீங்க இன்னும் எழுதலாம் அண்ணன் ரசனையோடிருக்கிறது...!

எழுதுய்யா நீ...!

தமிழன்-கறுப்பி... said...

44

தமிழன்-கறுப்பி... said...

45!

வெங்கிராஜா said...

சாலச்சிறந்த பதிவு. எழுத்தில் அனுபவச் செழுமையும், தமிழறிவுப் புலமையும் வெளிப்படுகிறது. வாழ்த்த வயதில்லை, ஆனாலும் வாழ்த்துகிறேன். தொடர்ந்து இம்மாதிரி பதிவுகளை முன்னிறுத்தி வலைப்பூ உலகில் வளம் சேர்க்கவும். நன்றி!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தமிழ்நதி.!
நன்றி செய்யது.!
நன்றி ஊர்சுற்றி.!
நன்றி தமிழன்கறுப்பி.!
நன்றி வெங்கிராஜா.!

இரசிகை said...

yeppadi ippadiyoru padam......!!

iyo....athu yennavo pannuthunga:(