Thursday, April 30, 2009

மிக்ஸ்டு ஊறுகாய்

ஊரோடு ஒத்துவாழ்.! கிட்டத்தட்ட எல்லா பதிவர்களுமே அவியல், துவையல், இட்லி, சாம்பார்னு தொகுப்பு பதிவுகளைப் போட்டுத் தாக்கிக்கொண்டிருக்க நான் மட்டும் பண்ணலைன்னா நல்லா இருக்காது. நானும் ‘த்ரீ இன் ஒன்’ அப்படின்னு எழுதிக்கிட்டுதான் இருந்தேன். தலைப்பைப் பார்த்து ஏதும் டெக்னிகல் பதிவுன்னு நினைக்கிறாங்களோ தெரியலை, ஒரு நாதியும் வர்றதில்லை. ஆகவே பெயர் மாற்றிவிடலாம் (பெயர் மாத்துறது நமக்கு புதுசா என்ன?).

‘மிக்ஸ்டு ஊறுகாய்’ .. எப்பிடி? நாங்களும் திங்க் பண்ணுவோமில்ல..

()()()()()()()()

முதல் பதிவை ஹிட்டாக்கணும்னா வேற வழி.? குசுகுசுதான்.. சே.. கிசுகிசுதான்.

ஏற்கனவே பதிவுலகை பிரபல பத்திரிகைகள் இப்போது கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பதை அறிவீர்கள். பலரது படைப்புகளையும் ஏற்கனவே பிரிண்டில் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். இனி இது மேலும் அதிகரிக்கும் என்று பச்சிகள் (கரெக்டா? இல்ல பஜ்ஜியா?) சொல்கின்றன. விரைவில் நம்ம செட்டு (அதான் பெரிய சேவிங் செட்டு ஒண்ணு இருக்கோம்ல) பதிவர்களை பிரபல வார இதழ்களில் பார்க்கலாம். தயாரா இருங்கப்போவ்..

()()()()()()()()

‘சொல்லச் சொல்ல இனிக்கும்’ படத்தில் ஒரு செம்ம்ம்ம குத்துப் பாடலைப் பாடி பிரிண்ட் என்ன சினிமாவையும் உட்டு வைக்கமாட்டோம் என்று கேட்கக்கேட்க இனிக்கவைத்து ஒரு நல்ல துவக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கும் அண்ணன் எம்.எம்.அப்துல்லாவை வாழ்த்துவதில் அகமிக மகிழ்கிறோம். இதைத்தொடர்ந்து ஒரு சீனியர் பதிவர் முதலில் வெளிநாட்டுமாப்பிள்ளை, அடுத்து வில்லன், அடுத்து ஹீரோ, அடுத்து சிஎம் என கனவில் புலம்பிக்கொண்டிருப்பதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

()()()()()()()()

ஏற்கனவே பல தோழிகள் பதிவுலகில் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், மேலும் ஆண் பதிவர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ‘ரமா’ தலைமையில் பிரபல பதிவர்களின் தங்கமணிகளும் பதிவுலகம் நோக்கி படையெடுப்பதாய் தகவல்கள் வருகின்றன. இந்த செய்தி ஒரு அழகான வீடு கட்டி குடிபுகுந்திருக்கும் அண்ணாச்சி வடகரை வேலனுக்கு வாழ்த்துச்சொல்ல அழைத்த போது அவர் பயந்துகொண்டே தெரிவித்த தகவல் அல்ல. ஏற்கனவே என் தலைமையில் சொம்பைத்தனமாக இயங்கிக்கொண்டிருக்கும் ‘ஆண்கள் பாதுகாப்பு சங்கம்’ தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்படவேண்டும் எனவும், மாற்று தலைவருக்கான நேரம் வந்துகொண்டிருக்கிறது எனவும் சங்கத்தில் பேச்சு அடிபடுகிறது. ‘திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கைப்பதிவுகள்’ முன் போல வீரியமாக எழுதப்படுவதில்லை என என் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை 24 பதிவுகள் எழுதிய நிலையில் விரைவில் 25வது பதிவு வெளியாகும் என்றாலும் யாராவது வீரமான தலைவர்கள் கிடைத்தால் நானும் பதவியை ராஜினாமா செய்ய காத்திருக்கிறேன்.

()()()()()()()()

சமீபத்தில் எழுதப்பட்ட ஒரு பதிவைக்கண்டு ஒரு பத்திரிகைப்பிரபலம், வெளியான அடுத்த 5 நிமிடத்திலேயே தொலைபேசியில் அழைத்துப்பாராட்டியதால் ஒரு ‘முக்கிய’ பதிவர் புளகாங்கிதம் (காகிதம் இல்லைப்பா..) அடைந்து தலைகால் புரியாமல் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது உபரிச்செய்தி.

()()()()()()()()

ரொம்ப நாளாக எனக்கு இன்னொரு விஷயத்தில் சந்தேகம்.! அதேதான்.. விஷயத்தில்தான் சந்தேகமே.. அனுஜன்யா முதலானோர் விஷயத்தை ‘விதயம்’ என்கிறார்கள். அதிஷா போன்றோர் அதை ‘விடயம்’ என்கிறார்கள். ஏராளமான ஆங்கிலச்சொற்களும், பிறமொழிச்சொற்களும் வழக்கத்தில் உள்ள நிலையில், அவற்றை எந்த தயக்கமும் இல்லாமல் நாம் (மேற்குறித்த அதே பதிவர்கள் உட்பட) பயன் படுத்திவரும் சூழலில், இந்த ‘விஷயம்’ மட்டும் என்ன பாவம் செய்தது? தமிழ் வளர்த்தல் என்றால் ‘செய்தி’ என்ற சொல்லை பயன்படுத்தலாம். மாறாக ஒலிதான் பிரச்சினையென்றால் ‘ஷ’ வின் மிக நெருங்கிய தமிழ் ஒலி வடிவான ‘ச’ வை பயன்படுத்தலாம். அதை விடுத்து ஏன் இப்படி? புரியவில்லை.. விளக்குங்கள்.

அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?

()()()()()()()()

இது மாதிரி தொகுப்புப்பதிவில் இறுதியில் ஒரு கவிதையோ, ஜோக்கோ போடணுமாமே.. யாருபா இந்த ரூல்ஸெல்லாம் கொண்டுவந்தது.?

இதோ ஒரு விஐபி பதிவர் எழுதிய கவிதை..

நான் உனக்கு
SMS அனுப்பினேன்
வானம் இருட்டிக்கொண்டிருந்தது
நீ பதில் அனுப்பியிருந்தாய்
மழை பெய்துகொண்டிருந்தது.

.

46 comments:

Cable Sankar said...

மிக்ஸ்டு ஊறுகாயை தயிர் சாதத்தோடு தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி.. டேஸ்ட் குட்..

RAMYA said...

உள்ளேன் போட்டுக்கறேன் ஐயா!!

அறிவிலி said...

இந்த விடய.. சே.. விதய.. சே.. விஷயத்தில் நான் உங்களுக்கு என் முழு ஆதரவை அளிக்கிறேன்.

Anonymous said...

அந்த வெளிநாட்டு மாப்ள, வில்லன், நடிகர், அடுத்த சி.எம் கார்க்கி வாழ்க

அப்பறம் ஒன்னும் புரியல

Truth said...

ஆதி, ரொம்ப நல்லா இருந்திச்சு. உங்களோட ஹுமர் நல்லா இருக்கு. ஷங்கர் - டங்கராவதும், ஷூ டூ ஆவதும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

தொடரட்டும் உங்கள் சேவை.

nathas said...

//பச்சிகள் (கரெக்டா? இல்ல பஜ்ஜியா?) //

பட்சிகள் :)

தராசு said...

தல,

ஊறுகாய்னு பேர் வெச்சிட்டு, சரக்கையும் கூட ஊத்தி தந்திருக்கீங்க, கலக்குங்க.


//சொல்லச் சொல்ல இனிக்கும்’ படத்தில் ஒரு செம்ம்ம்ம குத்துப் பாடலைப் பாடி பிரிண்ட் என்ன சினிமாவையும் உட்டு வைக்கமாட்டோம் என்று கேட்கக்கேட்க இனிக்கவைத்து ஒரு நல்ல துவக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கும் அண்ணன் எம்.எம்.அப்துல்லாவை வாழ்த்துவதில் அகமிக மகிழ்கிறோம்.//

இதப் பத்தி சொல்லவே இல்லயே

கடைக்குட்டி said...

செமங்க.. எப்பிடி இப்பிடி சிரிக்க சிரிக்க எழுதுறீங்க ?? சிரிச்சுக்கிட்டே எழுதுவீங்களோ ????

உங்க பேர பாத்துட்டே நான் போய்டுவேங்க.. இப்போதான் முத முறயா உங்க பதிவ படிச்சேன்...

சும்மா பேருக்கு சொல்லல.. உண்மைலேயே சூப்பர்ங்க :-)

வித்யா said...

கேப்டன், சூப்ரிம் ஸ்டார், டி.ஆர், வீரத்தளபதி வரிசையில கார்க்கியா? ம்ம் நடக்கட்டும்.

ஆயில்யன் said...

ஊரோடு ஒத்துவாழ்.!

கிட்டத்தட்ட எல்லா அவியல், துவையல், இட்லி, சாம்பார்னு தொகுப்பு பதிவுகளின் பின்னூட்டங்களிலுமே சூப்பரேய்ய்ய்ய்ய்ன்னு போட்டுத் தாக்கிக்கொண்டிருக்க, இங்க மட்டும் போடலைன்னா நல்லா இருக்காது - ஏன்னா நல்லா இருக்கு காரமெல்லாம் இல்லாம...!

:))

அ.மு.செய்யது said...

//விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?
//

அப்படியானால் அதிஷா அவர் பெயரை அதிதா அல்லது அதிடா என்று மாற்றி கொள்ளலாமே !!!

ஊறுகாய் ஆரம்பமே சும்மா சுர்ரென்று இருக்கிறது.

வால்பையன் said...

தோழர் லக்கி லுக்கின் சிறுகதை இந்த வார ஆனந்த விகடனில் வந்திருக்கிறது!

nathas said...

//மாறாக ஒலிதான் பிரச்சினையென்றால் ‘ஷ’ வின் மிக நெருங்கிய தமிழ் ஒலி வடிவான ‘ச’ வை பயன்படுத்தலாம். அதை விடுத்து ஏன் இப்படி? புரியவில்லை.. விளக்குங்கள்.//

"பூ"வ "புய்ப்பம்"ன்னு சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் :P

கார்க்கி said...

//வித்யா said...
கேப்டன், சூப்ரிம் ஸ்டார், டி.ஆர், வீரத்தளபதி வரிசையில கார்க்கியா? ம்ம் நடக்கட்டும்.
//

என்னதிது???????????????? சந்தோஷமா கொ.ப.செ?

Mahesh said...

நம்ம கிச்சடிக்கு தொட்டுக்க ஊறுகாய் கிடைச்சாச்சு !!!

ஷங்கரை "தங்கர்"னு (பச்சான் இல்லை) ஷூவை "தூ"ன்னும் சொல்லலாம் (நன்றி: அனுஜன்யா)

KaveriGanesh said...

கிட்டத்தட்ட எல்லா பதிவர்களுமே அவியல், துவையல், இட்லி, சாம்பார்னு

கொத்து புரோட்டா சங்கர்னு ஒருத்தர் இருக்கார், அவர மறந்திடிங்களே.

ஒரு ‘முக்கிய’ பதிவர் புளகாங்கிதம்

யாருப்பா அது?

அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?

வேணாம் விட்ரு அழுதுருவேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

super side dish :))

செல்வேந்திரன் said...

தாமிராண்ணே, நான் கவனிச்சதைச் சொல்றேன்.

நிறைய்ய எழுத்தாள நண்பர்களோடு பழகுறேன். அவர்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்காது. கிட்டத்தட்ட ஒரே நடையில் இருக்கும். ஆனா, நீங்க இந்தப் பூனையும் பால் குடிக்குமா?! ரேஞ்சுல பேசறீங்க ஆனா, எழுதும்போது சும்மா புகுந்து புறப்படுறீங்க... எழுத்து சுவாரஸ்யம்கிற விஷயம், விடயம், விதயம் அல்லது விசயம் இருக்கே அதுதான் ரொம்ப விசேஷம். சூப்பர்!

ஸ்ரீமதி said...

//அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?//

அண்ணா சூப்பர்... கலக்கிட்டீங்க.. :))) படிச்சிகிட்டே வந்து இந்த இடத்துல சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்.. :)))))))))))

ஸ்ரீமதி said...

ம்ம் மறந்தே போயிட்டேன்... அப்துல்லா அண்ணாவுக்கு எனது வாழ்த்துகள் :)))))))

SK said...

ஆதி அருமையான ஆரம்பம்.

த, ட, ஷா மேட்டர் அருமை :)

அடுத்த ஊறுகாய் இன்னும் நிறைய மேட்டர் (எவ்வளவு அழகான தமிழ்ச்சொல் இருக்கு) எதிர் பார்க்கறோம் :)

☼ வெயிலான் said...

ஆதியின் அனுபவங்கள் நல்லாருக்கு.

Joe said...

கடைசியா நாலு வரில ஒரு ஜோக் போட்டிருக்கீங்களே, நல்லாருக்கு! ;-)

விஜய் ஆனந்த் said...

// Joe said...
கடைசியா நாலு வரில ஒரு ஜோக் போட்டிருக்கீங்களே, நல்லாருக்கு! :-) //

:-)))...

RAMYA said...

//
‘மிக்ஸ்டு ஊறுகாய்’ .. எப்பிடி? நாங்களும் திங்க் பண்ணுவோமில்ல..
//

சரி இப்போ என்னா திங்க் பன்னறீங்கன்னு சொல்லுங்க :-)

RAMYA said...

//
ஏற்கனவே பல தோழிகள் பதிவுலகில் தீவிரமாக இயங்கி வரும் நிலையில், மேலும் ஆண் பதிவர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ‘ரமா’ தலைமையில் பிரபல பதிவர்களின் தங்கமணிகளும் பதிவுலகம் நோக்கி படையெடுப்பதாய் தகவல்கள் வருகின்றன. இந்த செய்தி ஒரு அழகான வீடு கட்டி குடிபுகுந்திருக்கும் அண்ணாச்சி வடகரை வேலனுக்கு வாழ்த்துச்சொல்ல அழைத்த போது அவர் பயந்துகொண்டே தெரிவித்த தகவல் அல்ல.
//

ஹா ஹா இது சூப்பரு :))

RAMYA said...

//
இது மாதிரி தொகுப்புப்பதிவில் இறுதியில் ஒரு கவிதையோ, ஜோக்கோ போடணுமாமே.. யாருபா இந்த ரூல்ஸெல்லாம் கொண்டுவந்தது.?
//

இந்த கேள்விக்கு யாருக்குமே பதில் தெரியலையாமாம்.

அதனாலே எல்லாரையும் fail பண்ணிடுவீங்களா :))

RAMYA said...

உங்களுக்கு அருமையா நகைச்சுவை வருது.

சிரிச்சு சிரிச்சு ஒன்னும் முடியலை :-)

பரிசல்காரன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

செம்ம டேஸ்ட் ஆதி.

ஸ்டார்ட்டிங் தூள்!

தீப்பெட்டி said...

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு...

வெங்கிராஜா said...

வாவ்! சூப்பரப்பு! இந்த அவியல், குவியல், பரோட்டா ஊறுகாய்களை தொடர்ந்து சப்ளை செய்யவும். அதே மாதிரி சின்ன சந்தேகம்ணே தமிழர்களின் பெயர்கள் கோப்பெருந்தேவி, தமிழ்செல்வன் மாதிரி இருந்தாலும் ஏங்க இனிஷியல் மட்டும் எஸ், ஆர், கே.வி மாதிரி எல்லாம் ஆங்கிலத்துல வச்சுக்குறாய்ங்க? பல நாளா இந்த டவுட்டு இருக்குது...

ச்சின்னப் பையன் said...

ஆரம்பமே அமர்க்களமா இருக்கு...

:-)))))))))

வெட்டிப்பயல் said...

Thala,
muzhuka muzhuka Bloggers pathiye ezhuthirukeenga. blog illama padikaravangaluku ithula ethuvume puriyathu :-(

அத்திரி said...

அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.........

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹையா.. ஊறுகாய் நல்லா யாவாரம் ஆகியிருக்கே.! சூப்பர், எதிர்பார்க்கலை.!

தேங்ஸ் கேபிள்.!

தேங்ஸ் ரம்யா.!

தேங்ஸ் அறிவிலி.!

தேங்ஸ் மயில்.! (பூரா பதிவர் பற்றியதென்பதால் புரியலைன்னு நினைக்கிறேன். கொஞ்சநாளானா சரியாயிடும்.!)

தேங்ஸ் ட்ரூத்.!

தேங்ஸ் நாதாஸ்.! (அட தெரியும்ங்க.. சும்மனாச்சுக்கும் கேட்டேன். அதுக்கும் பதில் சொல்லியிருக்கீங்க.. நீங்க ரொம்ப நல்லவரு.!)

தேங்ஸ் தராசு.! (நாங்க இப்பிடித்தான் சர்ப்ரைஸ்லாம் குடுப்போம்)

தேங்ஸ் கடைக்குட்டி.! (பேரைப்பார்த்துட்டு போயிடுவீங்களா? அவ்வ்வ்வ்.. இந்தப்பேரையெல்லாம் மாத்த முடியாது, போங்க.!)

தேங்ஸ் வித்யா.!

தேங்ஸ் ஆயில்யன்.! (ரொம்ப குறைச்சலாத்தான் வர்றீங்க.. நீ அதுகூட வர்றதில்லையேடாங்குறீங்களா? ஹிஹி..)

தேங்ஸ் செய்யது.! (அடடா, இது நல்லாருக்கே.!)

தேங்ஸ் வால்.!(அதான் ஊருக்கே தெரியுமே.. பெரிய எழுத்தாளர்னா இதெல்லாம் சகஜம்தான், இதப்போயி சொல்லிக்கிட்டு..)

தேங்ஸ் கார்க்கி.! (வரவர பதிவைப்பத்தி ஒண்ணுமே சொல்றதில்லை.. வர்றவங்களிடம் வம்பிழுக்கிறதே வேலையாப்போச்சுது)

தேங்ஸ் மகேஷ்.! (உங்க பின்னூட்டம் பேட் பேட், ரொம்ப நல்லாயிருந்தது.. அது 'பேஷ்'ங்க..)

தேங்ஸ் காவேரி.! (இதுக்கெல்லாம் அழக்கூடாது தல..)

தேங்ஸ் அமித்து.!

தேங்ஸ் செல்வா.! (அடடா, இப்பிடில்லாம் கூட பாராட்டுவீங்களா?)

தேங்ஸ் ஸ்ரீமதி.! (அந்த பயம் இருக்கட்டும்.. வெறும் ஸ்மைலியோடு எஸ்கேப்பாகாம பதில் போட்டீங்களே, அதச்சொல்றேன்)

தேங்ஸ் எஸ்கே.!

தேங்ஸ் வெயில்.!

தேங்ஸ் ஜோ.! (நல்லாருங்கையா..)

தேங்ஸ் ஆனந்த்.!

தேங்ஸ் ரம்யா.! (முதல்ல படிக்காமத்தான் பதில் போட்டீங்களா?)

தேங்ஸ் பரிசல்.!

தேங்ஸ் தீப்பெட்டி.!

தேங்ஸ் வெங்கி.! (இப்ப ஏன் சம்பந்தமில்லாம இந்த சந்தேகம்? மேலும் இதுமாதிரி அரிய சந்தேகங்கள் இருந்தா அதை பதிவாகவே போட்டுருங்க.. ஹிஹி)

தேங்ஸ் ச்சின்னவர்.!

தேங்ஸ் வெட்டி.! (நியாயமாச்சொன்னீங்க.. இது பதிவர் ஸ்பெஷல்னு வெச்சுக்கங்களேன்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

தேங்ஸ் அத்திரி.!

அன்புடன் அருணா said...

//அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?//

hahahahaha....அப்புறம் ஆதிமூலகிருஷ்ணனை "ஆதிமூலகிருத்ணன்" என்பீர்களா? அல்லது
"ஆதிமூலகிருட்ணன்" என்பீர்களா??? ஒரே கன்ஃப்யூடன் போங்க!!!
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

//அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?//

hahahahaha....அப்புறம் ஆதிமூலகிருஷ்ணனை "ஆதிமூலகிருத்ணன்" என்பீர்களா? அல்லது
"ஆதிமூலகிருட்ணன்" என்பீர்களா??? ஒரே கன்ஃப்யூடன் போங்க!!!
அன்புடன் அருணா

எம்.எம்.அப்துல்லா said...

//இதைத்தொடர்ந்து ஒரு சீனியர் பதிவர் முதலில் வெளிநாட்டுமாப்பிள்ளை, அடுத்து வில்லன், அடுத்து ஹீரோ, அடுத்து சிஎம் என கனவில் புலம்பிக்கொண்டிருப்பதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

//

ஹையா...அது யாருன்னு எனக்குத் தெரிஞ்சுருச்சே :)))

ஊர் சுற்றி said...

ஷூ மேட்டரு... ரொம்ப நல்லா இருந்துச்சு.... நான் கூட ரொம்ப நாளா யோசிச்சு.... யோசிச்சு..... யோசிச்சு...

:)

மங்களூர் சிவா said...

/
அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?
/

haa haa
:))))

தமிழ்ப்பறவை said...

நீங்களும் ஆரம்...பிச்சாச்சா...?!
நல்லா இருக்கு...
‘மிக்ஸ்ட் ஊறுகாய்’--(இன்னும் போதை தெளியலையா..?!)
//()()()()()()()()//

அருமையா இருந்ததுங்க....வார்த்தைகளில் சொல்வதை விடச் சுருக்கமா வடிவங்கள்ல சொல்லிடீங்க...(அதெல்லாம் ஊறுகாய் ஜாடியா..?!)

"அகநாழிகை" said...

நண்பா,
வணக்கம். பேச வேண்டுமென்று நினைத்தேன். உங்கள் தொலைபேசி எண் என்னிடம் இல்லை. மிக்ஸ்டு ஊறுகாய் வாசித்தேன். இது தொடர்பான எனது கருத்துக்களை எனது வலைப்பதிவில் பதிந்துள்ளேன். நேரமிருப்பின் வாசியுங்கள்.

அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அருணா.! (அதானே.!)

நன்றி அப்துல்லா.! (வெளிய சொல்லிடாதீங்க..)

நன்றி ஊர்சுற்றி.!
நன்றி சிவா.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி அகநாழிகை.! (நம்பர் வாங்கியவுடன் டெலிட் பண்ணிடுவீங்களா? ஹிஹி.. சும்மனாச்சுக்கும்..)

புருனோ Bruno said...

//அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?//

சங்கர்

காலணி

விடம்

விடம் கொண்ட மீனைப்போல், வெந்தழல் மெழுகு போல்
படம் கொண்ட பாந்தள் வாய்.... என்று பிரபல பாடல் ஒன்று இருக்குது தலைவரே (அந்த பாடலின் கடைசி வரி கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும்)

Deepa said...

அறுசுவையுள்ள ஊறுகாயை இப்போது தான் பார்க்கிறேன்!

”விஷயம்” பற்றிய விஷயம் மிக மிக அவசியமான ஒன்று.