Wednesday, May 13, 2009

மிக்ஸ்டு ஊறுகாய் (13.05.09)

பதிவுக்கு ரெண்டு மூணு நாளு லீவு விட்டாலே அதாவது பிஸியாக இருந்தாலே எழுதுவதற்கு விஷயங்கள் சேர்ந்து போகுது, எழுதாத நாட்களிலும் வந்து எட்டிப்பார்த்துச் செல்லும் நூற்றுக்கணக்கான (இன்னும் பத்து வருஷத்துக்குள்ள ஆயிரக்கணக்கான அப்படின்னு சொல்லக்கூடிய நிலை வரும்னு நம்புறேன் மகேஷ்) உங்கள் மீது ஒரு தனி பாசமும், கொஞ்சம் கோபமும் வந்துவிடுகிறது. கோபம் எதுக்கா? பதிவு போட்டா மட்டும் நூற்றுக்கணக்கு என்பதை பத்துக்கணக்காக்கி விடுவதால்தான்.

()()()()()()()()

நண்பர்களின் படைப்புகள் பிரபல பத்திரிகைகளில் வரத்துவங்கியுள்ளதால் உள்ளூர எனக்கும் கொஞ்சம் கொலைவெறி எண்ணம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது இப்போது. ம்ஹூம்.. யாரைப்பற்றியும், எதற்காகவும் கவலைப்படத் தயாராகயில்லை நான். சரவணா அன்பைத் தொலைத்ததைப்போல நாம் இரக்கக்குணத்தைத் தொலைத்தால்தான் இது போல சிறுகதை முயற்சிகளில் இறங்கமுடியும் என்று தெரிகிறது. சிறுகதை எழுதுகிறேனோ இல்லையோ கூடிய சீக்கிரம் ‘குறும்படம் எடுப்பது எப்படி?’ என்ற பதிவைப்போல ஒரு ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற பதிவு வெளியாகும் என்பது மட்டும் நிச்சயம்.

()()()()()()()()

இன்றுதான் தேர்தல் நடந்து முடிந்திருந்தாலும் இந்தத் தேர்தலில் விஜயகாந்த் அணி படுதோல்வியைச் சந்திக்கும் என்பதில் எனக்கு எள்முனையளவும் சந்தேகமில்லை. இதில் நிச்சயம் எதிரணியினரின் கூட்டுச் சதியிருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. திமுகவும், அதிமுகவும் கூட்டாகத் திட்டமிட்டு பல மாதங்களுக்கு முன்பே விக்ரமனை தயார் செய்து மிகச்சரியாக தேர்தலுக்கு முன்பாக படம் ரிலீஸாகும் படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பது கண்கூடு. இதையும் மீறி இன்று வாக்களித்துவந்த நண்பனைக்கேட்ட போது தேமுதிகவுக்கு வாக்களித்ததாய் சொன்னான். அதிர்ச்சியில் ஏன் என்று கேட்ட போது கண்ணீர் தளும்பச் சொன்னான், ‘அப்படியாவது விஜயகாந்தை சினிமாவை விட்டு துரத்திவிடமுடியாதா?’ நேற்று நானும் அவனும்தான் மரியாதை படம் பார்த்துவிட்டு வந்திருந்தோம்.

()()()()()()()()

குறுகிய காலத்திலேயே பதிவுலகில் மிக உயரம் சென்றவர், ஏற்கனவே பத்திரிகைகளில் பல்வேறு வடிவங்களில் படைப்புகள் வெளியாகியிருந்தாலும் மீண்டும் மும்முரமாக சிறுகதைப் பணிகளில் இறங்கியிருக்கிறார் இவர். வரும் விகடன் இதழில் இவரது கதை ஒன்று வெளியாக இருப்பதாக ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கும் இவ்வேளையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத்தோழர் ‘பரிசல்காரனு’க்கு மனமுவந்த வாழ்த்துகளை நாம் இங்கே பதிவு செய்கிறோம். (வயது பிரச்சினையில் இங்கே ஒரு பனிப்போரே நிகழ்ந்துகொண்டிருப்பதால் நிஜ வயதை எழுதிவிடவேண்டாம் என்பது அவரது தனிப்பட்ட வேண்டுகோள். வேண்டுமானால் க்ளூ தருகிறேன். நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, பரிசல் தன் முதல் மகள் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் குறிப்பிடத்தகுந்த ரேங்க் வாங்கிய செய்தியைக்கூற போன் செய்தார். வயதை நீங்களே கெஸ் செய்துகொள்ளுங்கள்)

()()()()()()()()

இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கதவு தட்டப்படுகிறது. 8 வயதில் பக்கத்து வீட்டு பெண்குழந்தைகள் இரண்டு பேர். ‘அங்கிள், ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் விளையாட வர்றீங்கன்னு சொன்னீங்கள்ல, வர்றீங்களா இப்போ?’ வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள்.

()()()()()()()()

சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.!

.

48 comments:

MayVee said...

:-))

MayVee said...

"மிக்ஸ்டு ஊறுகாய் (13.05.09)"

செம போதையா அங்கிள் ????

MayVee said...

"நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, "

நம்பிட்டோம் .....

அத்திரி said...

//அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.!//

வர வர உங்கள் கவிதை போதையூட்டும் விதமாக இருக்கும் ரகசியம் என்ன அண்ணே

.

அத்திரி said...

//வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள். //

கண்டிப்பாக அண்ணே

அத்திரி said...

//நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது//

தொலைதூரக்கல்வி தானே....அவ்வ்வ்வ்

வித்யா said...

\\நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது\\

முதியோர் காலேஜா அங்கிள்??

கடைசி கவிதை நல்லாருந்தது:)

குசும்பன் said...

ஆதி தினம் தினம் நோ வந்து பார்த்துவிட்டு போய் இருக்கிறார்:))

அவர் உங்க பதிவுக்கு மட்டும் வந்தால்தான் ஜாலியா இருக்கு:)))

குசும்பன் said...

// இன்றுதான் தேர்தல் //

தகவலுக்கு மிக்க நன்றி!


//இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத்தோழர் ‘பரிசல்காரனு’க்கு //
வாழ்த்துக்கள் பரிசல்//2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது//

தாங்கள் தான் அந்த காலேஜ் ஆல்தோட்ட பூபதியாமே:)


//இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கதவு தட்டப்படுகிறது. //

கொஞ்சம் முன்னாடியே தட்டி இருக்க கூடாதா?:(
குழந்தைகள் தெய்வத்துக்கு சமம் என்பது இப்பொழுது புரிகிறது எப்பொழுது எல்லாம் அக்கிரமம் நடக்கிறதோ அங்கு தெய்வம் தோன்றுகிறது:)

இய‌ற்கை said...

//நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது//

ஓ..உங‌க‌ காலேஜ் ஸ்கூல் மாதிரியா? பாஸ் ப‌ண்ற‌ வ‌ரை அதே கிளாஸ்ல‌ தான் ப‌டிக்க‌ணுமா?:-))))

இய‌ற்கை said...

kavithai super

Mahesh said...

முதல்ல நீங்க சிறுகதைல ஆரம்பிங்க... அப்பறம் நான் நாவல் எழுதுவது எப்படி எழுதறேன்.. .ச்சின்னப்பையன் சத்யா மேடை நாடகம் எழுதுவது எப்படி..... அட அட பதிவுலகம் பாக்கியம் செஞ்சுருக்கு :)

மங்களூர் சிவா said...

குசும்பன் அனைத்து கமெண்டுக்கும் ஒரு ரிப்பீட்டு

பரிசலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

முரளிகண்ணன் said...

ஊறுகாய் காரம் கம்மி. ஓ மிக்ஸட் ஊறுகாய் என்பதாலா?

சஞ்சய் காந்தி கமெண்டுக்கு நான் ரிப்பீட்டு

ஆயில்யன் said...

//வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள்///

எஜ்சாட்டிலி அனுபவிச்சு சொல்ற வார்த்தைகள் - அனுபவிக்க சொல்ற வார்த்தைகள் ஒவ்வொரு தருணங்களையும் எந்தவொரு செயலிலும் .....! :))

ஆ.முத்துராமலிங்கம் said...

கவிதை நல்லா இருக்கு.
வாழ்க்கை ரசனை இன்னும் அழகுப் பதிவு.

தமிழ்ப்பறவை said...

இன்னைக்கு ஊறுகாய் நல்ல சுவை.
//பதிவு போட்டா மட்டும் நூற்றுக்கணக்கு என்பதை பத்துக்கணக்காக்கி விடுவதால்தான். //
கவிதை நல்லாருக்கு.

T.V.Radhakrishnan said...

ஊறுகாய் செம போதை

RAMYA said...

//
"மிக்ஸ்டு ஊறுகாய் (13.05.09)"

செம போதையா அங்கிள் ????

//


ha ha ha ha super

RAMYA said...

//
"நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, "
//


உண்மை உண்மை தலை விரிச்சு ஆடுதாம் இந்த விஷயத்துலே :-)

Saravana Kumar MSK said...

//நண்பர்களின் படைப்புகள் பிரபல பத்திரிகைகளில் வரத்துவங்கியுள்ளதால் உள்ளூர எனக்கும் கொஞ்சம் கொலைவெறி எண்ணம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. சரவணா அன்பைத் தொலைத்ததைப்போல நாம் இரக்கக்குணத்தைத் தொலைத்தால்தான் இது போல சிறுகதை முயற்சிகளில் இறங்கமுடியும் என்று தெரிகிறது. //

உங்க போதைக்கு நான் ஊறுகாயா..

Saravana Kumar MSK said...

//நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது,//

அண்ணே.. இந்த 2004-2005 academic year-ல நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துகொண்டிருந்தேன்.. நம்ம ரெண்டு பேரும் பேட்ச் மேட்டா!!!!

இதெல்லாம் ஓவரு..

Saravana Kumar MSK said...

பதிவும் கவிதையும் கலக்கல்..

Kathir said...

//நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது//

டுடோரியல் காலேஜா அங்கிள்?????

;))))

சென்ஷி said...

//சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.!//

சூப்பர் :))

எட்வின் said...

//அப்படியாவது விஜயகாந்தை சினிமாவை விட்டு துரத்திவிடமுடியாதா?’ //

ஆஹா இது நல்லா இருக்கே!! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க :)

Cable Sankar said...

ஊறுகாய் கொஞ்சம் காரம் கம்மிதான் ஆதி..

ச்சின்னப் பையன் said...

:-))

pappu said...

நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது, பரிசல் தன் முதல் மகள் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் குறிப்பிடத்தகுந்த ரேங்க் வாங்கிய செய்தியைக்கூற போன் செய்தார். வயதை நீங்களே கெஸ் செய்துகொள்ளுங்கள//////

இப்ப என்ன சொல்லுறீங்க? நீங்க யூத்துங்குறீங்களா? இல்ல அவர கிழம்னு சொல்லுறீங்களா?

அ.மு.செய்யது said...

//எனக்கும் கொஞ்சம் கொலைவெறி எண்ணம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது //

எனக்கும் தாங்க..ஆனா அனுப்பி திரும்பி வந்துடுச்சுன்னா அத அப்படியே "பத்திரிக்கைகளால் திருப்பி அனுப்பப் பட்ட சிறுகதைகள்" அப்படின்னு லேபிள் போட்டு வலையில போட்றலாம்னு இருக்கேன்.

மாதவராஜ் said...

அனைத்தையும் ரசித்தேன். சின்னதாய் நகைச்சுவை மிளிர, மிக மென்மையாக விஷயங்களை முன்வைக்கிறீர்கள்.
//வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள்.//
அடேயப்பா.... கிறங்க வைக்கும் வரிகள்.

கார்க்கி said...

//ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் //

ஓ அதை snacksனு நினைச்சிட்டிங்களா? சைடு டிஷ் எப்படியெல்லாம் ரெடியாவுது பாருங்க...

jothi said...

// வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள். //

வார்த்தைகளில் கொட்டி கிடக்கிறது அழகு. தாராளமாய் ரசிக்கக்கூடிய அழகு வரிகள்.

வெங்கிராஜா said...

கவிதையும் அந்த குழந்தைகள் - ரசனை சார்ந்த குறிப்பின் கடைசி வரியும் அருமை...!
விஜயகாந்து மேட்டரு பழைய எஸ்.எம்.எஸ் ஆச்சே பாஸ்?

Truth said...

கடைசி கவிதை சூப்பர்.
2004 ல காலேஜா? கி.மு வா இல்ல கி.பி ஆ? :-)

Thamizhmaangani said...

தலைப்பு, செம்ம தூள் மச்சி:)

சந்தனமுல்லை said...

//வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள்.//

ரசித்தேன்!

ஸ்ரீமதி said...

பதிவு சூப்பர் :)))

// நான் 2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது,//

இது ஓவர் :))))))

தராசு said...

//சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு//

கலக்கல் தல.

பரிசல் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்

அனுஜன்யா said...

ஒ, ஒரு வருஷம் நீங்க எனக்கு சீனியரா! பரவாயில்ல, யூத் உலகில் இது எல்லாம் சகஜமப்பா !

வாழ்வின் ரசனையும், கவிதையும் உங்க திறமையை எவ்வளவு மொக்கைகளில் செலவழிக்கிறீர்கள் என்று தெரியப் படுத்துகிறது. 'No' அவர்களை இங்கு விசிட் செய்யச் சொல்ல வேண்டும் :)

எனக்குப் பிடிச்சிருக்கு.

அனுஜன்யா

தீப்பெட்டி said...

மிக்ஸ்டு ஊறுகாய் டேஸ்ட்டாத்தான் இருக்கு....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மேவீ.! (செம போதையா அங்கிள் ?// ஹூம்.. லைட்டா..)

நன்றி அத்திரி.! (தொலைதூரக்கல்வி தானே..// அவ்வ்வ்வ்வ்..)

நன்றி வித்யா.! (முதியோர் காலேஜா அங்கிள்?// ஆம் அக்கா..)
நன்றி குசும்பன்.! (குழந்தைகள் தெய்வத்துக்கு சமம் என்பது இப்
பொழுது புரிகிறது// ஹிஹி..)

நன்றி இயற்கை.!

நன்றி மகேஷ்.! (நாவ‌லா.. ட‌மால்.!)

நன்றி சிவா.!
நன்றி முரளி.!
நன்றி ஆயில்.!
நன்றி முத்துராமலிங்கம்.!

நன்றி தமிழ்பறவை.! (யோவ்.. க‌வுஜ‌ க‌டைசியில் இருக்குது..)

நன்றி டிவிஆர்.!
நன்றி ரம்யா.!

நன்றி சரவணா.! (உங்க‌ளுக்கு என் வ‌ய‌சா.. ந‌ம்ப‌வே முடிய‌ல‌..)

நன்றி கதிர்.! (டுடோரியல் காலேஜா?// அவ்வ்வ்வ்.. எப்பிடி க‌ண்டுபிடிச்சீங்க‌..)

நன்றி சென்ஷி.! (க‌வித‌ ப‌டிக்க‌ ஒரு ஆளாவ‌து இருக்கீங்க‌ளே.. ம‌ழைக்க‌விதைக‌ள் அருமை த‌ல‌..)

நன்றி எட்வின்.!
நன்றி கேபிள்.!
நன்றி சின்னவர்.!

நன்றி பப்பு.! (ரெண்டும்தான்..)

நன்றி செய்யது.! (நீங்க‌ளுமா? நடத்துங்க.. நம்ப ஆளுங்க ரொம்ப நல்லவங்க..)

நன்றி மாதவ்ராஜ்.! (வ‌ர்றீங்க‌ளா ந‌ம்ப‌ க‌டைக்கும்?)

நன்றி கார்க்கி.!
நன்றி ஜோதி.!

நன்றி வெங்கி.! (எஸ்எம்எஸ்ஸா? அட‌டே.. நான் நிஜ‌மாக‌வே யோசிச்சேங்க‌...)

நன்றி ட்ரூத்.!
நன்றி மாங்கனி.!
நன்றி முல்லை.!
நன்றி ஸ்ரீமதி.!
நன்றி தராசு.!

நன்றி அனுஜன்யா.! (ஒ, ஒரு வருஷம் நீங்க எனக்கு சீனியரா!// அட‌ப்பாவிக‌ளா? இப்ப‌டிக்க‌வுன்ட‌ர் ப‌ண்ணினா என்ன‌ ப‌ண்ற‌து?)

நன்றி தீப்பெட்டி.!

புதியவன் said...

//சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.!//

அருமையான கவிதை...

புன்னகை said...

2004-ல மூன்றாம் ஆண்டா??? நீங்க அப்போ தான் முதல் ஆண்டு சேர்ந்து இருப்பீங்கன்னு நெனச்சேன்! ஆனாலும் நீங்க இவ்ளோ நல்லவரா இருக்கக் கூடாதுங்க ஆதி! ;-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

//2004ல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த போது//

வலையுலக மார்த்தாண்டரா நீங்க.

பெரிய தம்பி, விசயகாந்த் சான்ஸே இல்ல....
:)-

அமிர்தவர்ஷினி அம்மா said...

//வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள்///

ஊறுகாய் ருசிக்கத்தான் என்றாலும், ரசிக்க ஒரு மேட்டர் வெச்சிருக்கீங்களே,

வால்பையன் said...

செம ஹாட்டு மச்சி!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி புதியவன்.!
நன்றி புன்னகை.!
நன்றி அமித்துஅம்மா.!
நன்றி வால்பையன்.!