Thursday, May 21, 2009

மிக்ஸ்டு ஊறுகாய் (21.05.09)

சில நாட்களாக இல்லறப் பிரச்சினைகளால் (இல்லறம் என்றாலே பிரச்சினைதானே என்கிறீர்களா?) கொஞ்சம் இறுக்கமாக உணர்ந்ததால் இணையம் பக்கம் வரவில்லை. வேலையிலும் கொஞ்சம் பிடுங்கல் ஜாஸ்திதான். ஆனால் பாருங்கள், சமீபத்தில் போன் செய்த ஒரு பிரபல பதிவர் ‘நீங்க மட்டுமில்ல தாமிரா, உங்க டீமே இப்படித்தான் கொஞ்ச நாளாவே டல்லாக இருக்குதே, என்னாச்சு?’ என்றார். அவரது அன்புக்கு நன்றி. டீமுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் ஃபார்முக்குத் திரும்புவோம். அதற்கு நல்லதொரு துவக்கமாய் விரைவில் மான்ஹாட்டனில் ஒரு மாலைப்பொழுதுக்கு ஸ்பான்சர் செய்ய அப்துல் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற நல்ல செய்தியை டீமுக்கு அறிவிக்கிறேன்.

øøøøøøøøøø

சென்ற வாரங்களில் ஆனந்தவிகடனில் நமது நண்பர்களின் படைப்புகளைப் பார்த்த உத்வேகத்தில் நானும் முயற்சித்திருந்தேன். பழம். விகடன் ஒரு கனவு. வலையுலகம் தந்த பரிசாகவே இதை நான் கருதுகிறேன். பயிற்சிக்கான இடமாக வலை இருக்கிறது. தவறுகளைத்திருத்த, உற்சாகம் தர நீங்கள் இருக்கிறீர்கள். இதுவே வெற்றிக்கான காரணம் என்பதை அறிகிறேன். முதல் படைப்பை விகடனில் பார்த்த மகிழ்ச்சி என்பது ஒப்பற்றது. தொடர்ந்து நன்முறையில் பயணிக்க எத்தனை உழைப்பு வேண்டும் என்ற நினைப்பே பயத்தைத் தருகிறது. நேற்று மாலையே ரெகுலராக விகடன் வாங்கும் பெட்டிக்கடைக்கு சென்று கேட்டபோது 'என்ன சார்? நாளைக்குதானே வரும்' என்றார். அது தெரியாதா எனக்கு? ஆனாலும் 'அதெப்படி வெளியூரிலெல்லாம் இன்னிக்கே கிடைக்கும் விகடன் இங்கே மட்டும் நாளைக்கா.? இதெல்லாம் நீங்க கேட்கறதில்லையா?' என்று சத்தம் போட்டு விட்டு வந்தேன். இன்று விகடன் வாங்கிப் பார்த்துவிட்டு 'இன்னும் நாலு புக்கு குடுங்க..' என்றபோது ஒரு மாதிரியாக பார்த்தார். அவர் கேட்காமலேயே 'எங்கதை வந்திருக்குது..அதான்' என்றேன் அசட்டு சிரிப்புடன். அவர் முறைத்ததில் இதுக்குதான் நேத்து அந்த அலம்பல் பண்ணினயா என்ற அர்த்தம் தெரிந்தது.

øøøøøøøøøø

நண்பர் பைத்தியக்காரன் ‘உரையாடல் : சமூக கலையிலக்கிய அமைப்பு’ சார்பில் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்திருக்கிறார், வலைஞர்களுக்காகவே.. மொத்தப்பரிசாக Rs.30000 மும், தேர்ந்தெடுக்கப்படும் 20 சிறுகதைகளுக்கு கிழக்குப் பதிப்பக புத்தகமாகும் பெருமையும் காத்திருக்கிறது. அனைவரும் கலந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் ‘உரையாடல்’ சார்பில் வாழ்த்துகள்.! (போட்டி டஃப்பாக இருக்கும் என்று தெரிகிறது. அதனால் இப்போதே கை உதறுகிறது. ஒனக்கெல்லாம் இது தேவையாடா ஆதி.! இருப்பினும் போட்டியில் கலக்குவது.. சே, கலங்குவது.. சே, கலப்பதுதான் முக்கியம் என்பதால்.. வேணாங்க பயத்துல வாய் ரொம்ப குழறுது).

øøøøøøøøøø

சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் ‘அன்பே சிவம்’ படத்தை எத்தனையாவதோ தடவையாக காண நேர்ந்தது. வழக்கம் போல ஏதோ ஒரு காட்சியில் துவங்கி பின்னர் சானல் மாற்ற இயலாமல் இறுதி வரை பார்த்தேன். இந்த தடவை நான் இது வரை உணராத இன்னொரு விஷயம் புலப்பட்டது படத்தில். அது பிசிறில்லாத, பட்டுக்கத்தரித்ததைப்போன்ற, ஆழமான, ரசனையான வசனங்கள். கொஞ்சம் பிரமிப்பாய் இருந்தது.

øøøøøøøøøø

சமீபத்திய ஒரு SMSன் தமிழாக்கம்.

காதல் என்பது வெறும் வார்த்தைதான், அதை சுமக்கமுடியாமல் சுமந்து ஒருத்தி உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் வரை.

.

36 comments:

Anonymous said...

i'm first

Anonymous said...

வேக கதை மன்னன் ஆதி வாழ்க!!! ( சும்மா ஒரு இதுக்கு தான்... முன்னாடி ஒரு வார்த்தை விட்டுபோச்சு.. அது சின்ன பசங்க )

நானும் கதை எழுதறதா தீர்மானம் பண்ணி நல்ல எழுதற ஒருத்தர தேடிட்டு இருக்கேன்..

தமிழ் பிரியன் said...

கதை பரபரப்பாப் போய் டக்குன்னு ட்விஸ்ட்டோட முடிஞ்சது ஆதி! வாழ்த்துக்கள்!

SK said...

அண்ணே ஒரே நாள்ல ரெண்டு பதிவு .. ஏதோ பாத்து பண்ணுங்க.. :)

வால்பையன் said...

//டீமுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. //

நான் டுவெல்த் மேனாக்கூடா ஆட்டைக்கு இல்லையா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

உங்க கதைக்கு முதல் விமர்சனம் எழுதியது நான் தான்!

Saravana Kumar MSK said...

விகடனில் வந்ததற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. தொடர்ந்து கலக்குங்கள்.. :)

//இருப்பினும் போட்டியில் கலக்குவது.. சே, கலங்குவது.. சே, கலப்பதுதான் முக்கியம் என்பதால்.. வேணாங்க பயத்துல வாய் ரொம்ப குழறுது//
மிக ரசித்தேன்.. :)

SMS-ம் அருமை..

Saravana Kumar MSK said...

//மயில் said...
வேக கதை மன்னன் ஆதி வாழ்க!!! ( சும்மா ஒரு இதுக்கு தான்... முன்னாடி ஒரு வார்த்தை விட்டுபோச்சு.. அது சின்ன பசங்க )//

ரிப்பீட்டு.. :)

pappu said...
This comment has been removed by the author.
வித்யா said...

வாழ்த்துகள் ஆதி. அன்பே சிவம் படம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் கொஞ்சம் திராபையான சில சீக்வென்ஸ்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்.

அது சரி வாழ்த்துகள் வாழ்த்துகள்ன்னு கூவறோமே ஒரு டீயாவது வாங்கித் தரக்கூடாதா? நன்றின்னுட்டு போயிட வேண்டியது. என்னமோ போங்க.

Anonymous said...

//சில நாட்களாக இல்லறப் பிரச்சினைகளால் (இல்லறம் என்றாலே பிரச்சினைதானே என்கிறீர்களா?) கொஞ்சம் இறுக்கமாக உணர்ந்ததால்//

சமாதான பேச்சு வார்த்தை ட்ரை பண்ணுங்க. அரசியல்ல இதெல்லாம் சகஜம்... இருந்தாலும் சீக்கிரம் சரியாகணும்..

Anonymous said...

ஆதி,

அன்பே சிவம் படத்துக்கு வசனம் நம்ம மதன் (விகடன்). அதுல சுனாமி பத்தியும் ஒரு வசனம் வரும்.

டூ டு டூ டு டூடூ காமெடி எனக்குப் பிடித்த ஒன்று.

கமல் படங்களில் இருக்கும் sub-text எனக்கு மிகவும் பிர்யமான் ஒன்று. இந்தப் படமே ஒரு sub-text. ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதாவது புரியும்.

விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள். அடுத்து விகடன் டாக்கீஸுக்கு வர வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

// சில நாட்களாக இல்லறப் பிரச்சினைகளால் (இல்லறம் என்றாலே பிரச்சினைதானே என்கிறீர்களா?)//

வீட்டுக்கு வீடு வாசப்படிங்க. எந்த வீட்டில்தான் இல்ல பிரச்சனை.

சரணம்... சரணம் இதுதான் சரியான தாரக மந்திரம்.

இராகவன் நைஜிரியா said...

// அதற்கு நல்லதொரு துவக்கமாய் விரைவில் மான்ஹாட்டனில் ஒரு மாலைப்பொழுதுக்கு ஸ்பான்சர் செய்ய அப்துல் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற நல்ல செய்தியை டீமுக்கு அறிவிக்கிறேன்.//

அப்படிங்களா.. அப்துல்லா அண்ணே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு நல்லவரா அண்ணே...

மெட்ராஸ் வரும் போது நமக்கு ஒரு நாள் அப்பாயின்மெண்ட் கொடுங்கண்ணே...

இராகவன் நைஜிரியா said...

// நானும் முயற்சித்திருந்தேன். பழம்.//

வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா said...

//போட்டி டஃப்பாக இருக்கும் என்று தெரிகிறது. அதனால் இப்போதே கை உதறுகிறது //

இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபிங்க..

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

இராகவன் நைஜிரியா said...

ஓட்டு போட்டாச்சுங்க...

வெங்கிராஜா said...

//சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் ‘அன்பே சிவம்’ படத்தை எத்தனையாவதோ தடவையாக காண நேர்ந்தது. வழக்கம் போல ஏதோ ஒரு காட்சியில் துவங்கி பின்னர் சானல் மாற்ற இயலாமல் இறுதி வரை பார்த்தேன். இந்த தடவை நான் இது வரை உணராத இன்னொரு விஷயம் புலப்பட்டது படத்தில். அது பிசிறில்லாத, பட்டுக்கத்தரித்ததைப்போன்ற, ஆழமான, ரசனையான வசனங்கள். கொஞ்சம் பிரமிப்பாய் இருந்தது.//

படத்தைப் பற்றி எங்கனயாச்சும் எழுதியிருக்கீங்களா பாசு? சுட்டி குடுங்க.. விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள்..

அறிவிலி said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

//அப்படிங்களா.. அப்துல்லா அண்ணே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு நல்லவரா அண்ணே//

repeattu....

அ.மு.செய்யது said...

இங்கே ஆவி கிடைக்காது.

உங்க கதை,நர்சிம்,அதிஷா,லக்கிலுக் எல்லாத்தையும் ஒருநாள் ஸ்கேன் பண்ணி பதிவிடுங்களேன்...ப்ளீஸ்...

Truth said...

ஆதி,
அந்த கதைப் போட்டியில கலந்துக்க ஆசையா இருக்கு. ஆனா டைட்டில் கூட எனக்கு சரியா புரியலே :(
விளக்குறீங்களா ப்ளீஸ்

எம்.எம்.அப்துல்லா said...

//மான்ஹாட்டனில் ஒரு மாலைப்பொழுதுக்கு ஸ்பான்சர் செய்ய அப்துல் ஒப்புக்கொண்டுள்ளார் //

க்கும்..எதா இருந்தாலும் என்னைய தொட்டுக்காட்டி சரியா வராதே உங்களுக்கு!!!! உண்மையிலேயே ஊறுகாய் நாந்தான் போல, இந்த பதிவு இல்ல.

:)

jothi said...

shhhhhhhhhhh,.. ரொம்ப காரம்

கார்க்கி said...

வசனம் மதன்..

க்ரிஸ்ப் அண்ட் ஷார்ப்பா இருக்கும்..

அந்த குறுஞ்செய்திய வச்சு நான் கதையே எழுதி இருக்கேன்

பரிசல்காரன் said...

//விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள். அடுத்து விகடன் டாக்கீஸுக்கு வர வாழ்த்துகள்.//

வ.மொ!

நர்சிம் said...

// பரிசல்காரன் said...
//விகடனில் வந்ததற்கு வாழ்த்துகள். அடுத்து விகடன் டாக்கீஸுக்கு வர வாழ்த்துகள்.//

வ.மொ!
//

உ.ப.

லக்கிலுக் said...

ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்!

‘அன்பே சிவம்’ படத்தின் வசனகர்த்தா கார்ட்டூனிஸ்ட் மதன். துரதிருஷ்டவசமாக படம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டதால் அந்த நல்ல வசனகர்த்தாவுக்கு தொடர்வாய்ப்புகள் கிடைக்கவில்லை :-(

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்

ஊறுகாய்ல கொஞ்சம் காரம் கம்மி..

Nagendra Bharathi said...

very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மயில், தமிழ், எஸ்கே, வால் (நீங்க இல்லாமலா? இதெல்லாம் சும்மா டுபாகூரு, கீழ அப்துல் பின்னூட்டம் பாத்திங்கல்ல, ரெண்டு நாளா உங்க பதிவுக்கு வரமுடியல, நிறைய பேருக்கு எரர் காமிக்குது.. என் சிஸ்டம்ல பிராப்ளமானு தெரியல‌), வித்யா (பண்ணிடலாம், ஸ்பான்சர் யாராவது சிக்குறாங்களானு பாத்துக்கிட்டிருக்கேன்), வேலன் (விகடன் டாக்கீஸில் வரணுமா? நீங்க அங்கயா வெயிட் பண்றீங்க? வழி சொன்னா வந்துடுவேன்.. இந்த லட்சணத்துல இத ரெண்டு பேரு வழி மொழிஞ்சிருக்காங்க..), ராகவன் (கண்டிப்பா உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் உண்டு நா கேரன்டி), வெங்கி (இல்ல பாஸ்), பப்பு, அறிவிலி, செய்யது (வெயிட் பிளீஸ்..), ட்ரூத், அப்துல், ஜோதி, கார்க்கி, பரிசல், நர்சிம், லக்கிலுக், அமித்துஅம்மா, பாரதி.!

தமிழ்ப்பறவை said...

அடடா இதுக்கு முந்தின பதிவிலேயே வாழ்த்திட்டேனே...பரவாயில்லை... வாழ்த்துக்கள் ரிப்பீட்டு...

Indian said...

//விகடன் ஒரு கனவு. வலையுலகம் தந்த பரிசாகவே இதை நான் கருதுகிறேன். //

வாழ்த்துகள் அண்ணே.

பஜ்ஜி சூப்பர் டேஸ்ட்!

இனியவன் said...

நண்பர் ஆதிக்கு,

என் வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தமிழ்பறவை.!

நன்றி இண்டியன்.! (ஏன் இப்படி? உண்மையில் உங்கள் பின்னூட்டம் மகிழச்செய்கிறது. அரசியல்வாதி, விஐபிக்களைத்தான் இந்தமாதிரி முன் சொன்னதை வைத்து மடக்குவார்கள். அந்த அளவுக்கு நானும் பெரிய ரவுடியாகிட்டேன்னு நினைக்கும் போது கண்ணு கலங்குது.. அப்புறம் அந்தக்கருத்து எனது சொந்தக்கருத்து. இப்பவும் அதில் மாற்றமில்லை. இருப்பினும் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் அதற்காக தமிழகத்தின் பாரம்பரியமிக்க, வெற்றிகரமான இதழில் என் படைப்பு வந்ததற்கு நான் மகிழக்கூடாது என்ற அவசியமுமில்லை.)

நன்றி இனியவன்.!

Indian said...

//அந்தக்கருத்து எனது சொந்தக்கருத்து. இப்பவும் அதில் மாற்றமில்லை. இருப்பினும் அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் அதற்காக தமிழகத்தின் பாரம்பரியமிக்க, வெற்றிகரமான இதழில் என் படைப்பு வந்ததற்கு நான் மகிழக்கூடாது என்ற அவசியமுமில்லை.)//

மறப்போம் மன்னிப்போம்! :))))