Monday, May 4, 2009

கல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கை - பாகம் 25

இனிய நண்பர்களே, முதலில் இந்தப் பதிவுக்கு வேறு தலைப்பு முடிவு செய்திருந்தாலும் இது இந்தப் பொருளில் எழுதப்படும் 25வது கட்டுரையாக சிறப்புப் பெறுவதால் மலரும் நினைவாக முதல் பதிவுக்கு வைக்கப்பட்ட அதே தலைப்பே வைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வேளையில் முதல் பதிவையும், அதற்கான வரவேற்பையும் நினைத்துப்பார்க்கிறேன். இன்றிலிருந்து சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர்.. சரி சொல்லலை, இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டா எப்படி?

இன்றைய விஷயத்துக்குப் போகலாம். இது ஒரு கொசுவத்திப்பதிவு என்பதை அறிக..

எல்லா ஆண்களைப்போலவும் எனக்கும் கல்யாணத்துக்கு முன்னர் வரப்போகும் மனைவி குறித்த எந்தக் கனவும் இருக்கவில்லை. எப்படியும் சொதப்பத்தான் போகிறது, இதிலென்ன முன்னாடியே கனவு என்பதை அப்போதே ஓரளவு அறிந்திருந்தேன். ஆனாலும் சமையல் மட்டும் நன்கு தெரிந்திருக்க வேண்டும் என விரும்பி இந்த ஒரு கண்டிஷனை மட்டும் வீட்டில் பெண்பார்க்கத் துவங்கியிருந்த போது ஸ்ட்ரிக்டாக சொல்லியிருந்தேன். (அந்த அளவு பாச்சிலர் வாழ்க்கையில் காய்ந்து போய் கிடந்திருந்தேன்) யார்தான் நாம் சொல்வதை காதில் வாங்கிக் கொள்கிறார்கள்? கல்யாணத்துக்கு மறுநாளே அந்தக்கனவு தகர்ந்தது.

சாப்பிடும் நேரத்தில், ‘என்னம்மா ரசம் மட்டும் வெச்சிருக்கீங்க.?’ என்று நான் கேட்க, அம்மா அமைதியாக விலகிப்போய்விட ரமாவைப் பரிதாபமாக பார்த்தேன்.

‘இதான்ங்க சாம்பார்..  நான் வச்சேன்.’ என்றாள் அமைதியாக.

பின் வந்த நாட்களில் பல அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்தன.

*வாங்கி வந்த புதிய விகடனின் நடுப்பக்கத்தில் பஜ்ஜியை வைத்து நசுக்கினாள். (முன்பொருநாள் அட்டையில் கிறுக்கியதற்காக ஒரு நண்பனை செவிட்டிலேயே அடித்தது நினைவுக்கு வந்து தொலைத்தது)

*பீரோவில் நான் வைத்திருந்த சுஜாதா நாவல்களும், வைரமுத்து கவிதைகளும் சணலால் கட்டப்பட்டு பரணுக்கு இடம்மாற்றப்பட்டன. (அங்கே அவளது புதிய பட்டுப்புடவைகள் இடம்பிடித்தன என்பதை சொல்ல வேண்டுமா?)

*’வெயில்’ படம் பார்க்கலாம் என்று அழைத்த போது, ‘போக்கிரி’ படத்திற்கு டிக்கெட் எடுக்க வைத்தாள். (அதுக்கப்புறம் தியேட்டர் பக்கம் தலைவச்சும் நான் படுத்திருப்பேன்?)

*தோட்டத்திலிருந்த கொய்யா மரத்திலிருந்து பழுப்பதற்காக விட்டுவைக்கப்பட்டிருந்த காய்களை யாரையும் கேட்காமலே தட்டிப்பறித்து வந்தாள். (கேட்டால் பொறுப்பாக வீட்டு வேலைகள் செய்கிறேன் என்றாள்)

*ஏன் இத்தனை புத்தகங்கள் பரணை அடைச்சுக்கிட்டு இருக்குது? பழைய புக்குகாரன்கிட்ட போட்டுடவா? (நல்ல வேளையாக ஒருவார்த்தை கேட்டதால் உடனே அவளது கண்களில் படாத இடத்திற்கு புத்தகங்கள் மாற்றப்பட்டன)

*ஓர் நாளிரவில் ‘புக்கெல்லாம் படிக்கமாட்டியா ரமா?’ என்றேன். ‘படிச்சி என்ன கெடைக்கப் போவுது?’ என்றாள். (கரெக்ட்தான் என்று தலையாட்டி வைத்தேன்)

ஓர் நாள் என் சித்தி மீன் குழம்பு வைப்பதற்காக கிணற்றடியில் சுத்தம் செய்துகொண்டிருந்த போது மூக்கைப்பொத்திக்கொண்டு முன்வாசலுக்கு ஓடினாள் ரமா. நான் அதிர்ச்சியானேன். அடப்பாவிகளா? ஒரு வெஜிடேரியனை என் தலையில் கட்டிவைத்து பழிவாங்கிவிட்டார்களே என்று எல்லோர் மேலும் ஆத்திரமாகி பின் அமைதியாகி (வேறு வழி?) ரமாவை நெருங்கி, ‘என்னம்மா, இதெல்லாம் பிடிக்காதா.? நான் வெஜ் சாப்பிட மாட்டியா?’ என்றேன் பரிதாபமாக. அதற்கு அவள் வேகமாக,

‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’.

.

71 comments:

Anonymous said...

எதுக்கு இந்த சொந்த கதையெல்லாம்? அதன் சோககதை ஆயிடுச்சே.... விடுங்க இதுக்கெல்லாமா அழுகறது... ( இத கண்டிப்பா கல்யாணத்திருக்கு துடிக்கும் கார்க்கிக்கு மெயில் பண்ணுங்க, எவ்வளவு கஷ்டம்னு தெரியட்டும்)

வித்யா said...

\\‘என்னம்மா ரசம் மட்டும் வெச்சிருக்கீங்க.?’ என்று நான் கேட்க, அம்மா அமைதியாக விலகிப்போய்விட ரமாவைப் பரிதாபமாக பார்த்தேன். ‘இதான்ங்க சாம்பார்.. நான் வச்சேன்.’ என்றாள் அமைதியாக.\\

ROTFL. ஆனா நிறைய ஆண்கள் எனக்கு நல்லா சமைக்கத் தெரியும்ன்னு சொல்லி ஏமாத்தறாங்களே. அதுக்கு நாங்க எங்க போய் புலம்பறதாம்?

Thamizhmaangani said...

அண்ணா, உங்கள நினைச்சா எனக்கு துக்கம் தொண்டைய அடைக்குது:( ரொம்ப பாவம் நீங்க!

//‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’. //

ஆஹா.. எல்லாரும் சேந்து உங்கள கவத்துட்டாங்களே!! அவ்வ்வ்வ்...

ஆமா, இந்த போஸ்ட் போட்டது அண்ணிக்கு தெரியுமோ?:)

எம்.எம்.அப்துல்லா said...

நேத்துதான் முதல் பாகம் படிச்சமாதிரி இருக்கு, அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போச்சா??


ரஜினிக்கு ஒரு சக்சஸ்புல் ஃபார்முலா மாட்டுன மாதிரி உங்களுக்கு இந்த தங்கமணி மேட்டர் மாட்டிக்கிச்சு. இந்த ஒரு பிட்டப் போட்டே ஒரு வருஷம் ஒப்பேத்திட்டீரே!!!!!!

(ஈயத்தப்பார்த்து இளிச்சுச்சாம் பித்தளை....நான் ஒரு கருமாந்திரமும் இல்லாமலேயே இவ்வளவு நாள் ஒப்பேத்திட்டேன்.)

Cable Sankar said...

ரமாவையும், தங்கமணியையும் வலையுலகத்திற்கு அறிமுகபடுத்தி ஒரு வருஷம் ஆயிருச்சா..? வாழ்த்துக்கள்.

VIKNESHWARAN said...

பாதிப்பு பலமா தான் இருக்கு :)

ஸ்ரீமதி said...

அண்ணா பாவம் அண்ணி... :(((

ஆகாய நதி said...

பாவம் தான் நீங்க :(

நான் கணவருக்காக நான்-வெஜ்கு மாறிட்டேன் :)சுவைத்து பார்த்தால் தானே அனுபவித்து சமைக்க முடியும் :)

இப்படியும் இருக்காங்க பலர்! உங்களுக்கு அமைந்த மாதிரி அமைவது சிலருக்கு தான் !

ஆகாய நதி said...

//
\‘என்னம்மா ரசம் மட்டும் வெச்சிருக்கீங்க.?’ என்று நான் கேட்க, அம்மா அமைதியாக விலகிப்போய்விட ரமாவைப் பரிதாபமாக பார்த்தேன். ‘இதான்ங்க சாம்பார்.. நான் வச்சேன்.’ என்றாள் அமைதியாக.\\
//

அதிர்ச்சிய எப்படி தாங்கிக்கிட்டீங்க? :(

மங்களூர் சிவா said...

சரி சரி அழப்பிடாது!

மங்களூர் சிவா said...

வீட்டுக்கு வீடு வாசப்படி.

மங்களூர் சிவா said...

/
‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’.
/

அண்ணி வாழ்க!

sayrabala said...
This comment has been removed by the author.
sayrabala said...

‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’.
/


ahahahaahhahahahahaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaah

கார்க்கி said...

//’வெயில்’ படம் பார்க்கலாம் என்று அழைத்த போது, ‘போக்கிரி’ படத்திற்கு டிக்கெட் எடுக்க வைத்தாள்.//

உங்களுக்கு நல்லது பண்றவங்கள் உங்களுக்கு புடிக்காதே..

இந்த ஒரு பாய்ண்ட் காரணமாக இந்த பதிவை நான் நிராக்கிக்கிறேன். மேலும் தங்கமணிகள் எப்பவாது சரியான முடிவு எடுப்பார்கள் என்பதற்கு இதையே சான்றாக தருகிறேன்

சந்தனமுல்லை said...

இதெல்லாம் சகஜம்மப்பா! :-))

☼ வெயிலான் said...

உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்காங்க.

அதுக்காக சந்தோசப்படுங்க ஆதி!

Truth said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது :-)

Mahesh said...

அப்ப..... வீட்டுல இல்லற வாழ்க்கை ஆனந்தமாப் போயிட்டுருக்குன்னு சொல்லுங்க... சும்மா எச்சரிக்கை அது இதுன்னு பயகளை பயமுறுத்திக்கிட்டு...

//அப்துல்லா said...
(ஈயத்தப்பார்த்து இளிச்சுச்சாம் பித்தளை....நான் ஒரு கருமாந்திரமும் இல்லாமலேயே இவ்வளவு நாள் ஒப்பேத்திட்டேன்.)//

அப்ப நானு?? அவ்வ்வ்வ்வ்வ்.... எங்குட்டாச்சும் அண்டர்க்ரவுண்ட்ல போக வேண்டியதுதானா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மயில்.! (அவனுக்காகத்தானே இந்த பதிவே..)

நன்றி வித்யா.! (அது சரி.!)

நன்றி மாங்கனி.! (ஆமா, இந்த போஸ்ட் போட்டது அண்ணிக்கு தெரியுமோ?// ஏன் இந்த கொலவெறி.!)

நன்றி அப்துல்.! ((வர்ற 24ம்தேதி நம்ப வலைப்பூவுக்கு முதல் பர்த் டே.!)

நன்றி கேபிள்.!
நன்றி விக்கி.!
நன்றி ஸ்ரீமதி.!

நன்றி ஆகாயநதி.! (உங்களுக்கு அமைந்த மாதிரி அமைவது சிலருக்கு தான்// ஏன் இப்படி பச்சப்பொய் சொல்றீங்க?)

நன்றி சிவா.!
நன்றி பாலா.!

நன்றி கார்க்கி.! (வெளங்கிரும்..)

நன்றி முல்லை.!
நன்றி வெயிலான்.!
நன்றி ட்ரூத்.!

முரளிகண்ணன் said...

:-))))

புதுகைத் தென்றல் said...

:))))))))

புதுகைத் தென்றல் said...

நல்லா சமைக்கத் தெரியும்ன்னு சொல்லி ஏமாத்தறாங்களே. அதுக்கு நாங்க எங்க போய் புலம்பறதாம்?//

ayyo thaanga mudiyalye. :)))))))

புதுகைத் தென்றல் said...

ரஜினிக்கு ஒரு சக்சஸ்புல் ஃபார்முலா மாட்டுன மாதிரி உங்களுக்கு இந்த தங்கமணி மேட்டர் மாட்டிக்கிச்சு. இந்த ஒரு பிட்டப் போட்டே ஒரு வருஷம் ஒப்பேத்திட்டீரே!!!!!!//

pathivai padikarathai vida pinuutangal romba swarasiyama iruke.

(tanglishuku mannikavum)

புதுகைத் தென்றல் said...

ரஜினிக்கு ஒரு சக்சஸ்புல் ஃபார்முலா மாட்டுன மாதிரி உங்களுக்கு இந்த தங்கமணி மேட்டர் மாட்டிக்கிச்சு. இந்த ஒரு பிட்டப் போட்டே ஒரு வருஷம் ஒப்பேத்திட்டீரே!!!!!!//

pathivai padikarathai vida pinuutangal romba swarasiyama iruke.

(tanglishuku mannikavum)

புதுகைத் தென்றல் said...

me the 25th

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ்.! (எங்குட்டாச்சும் அண்டர்க்ரவுண்ட்ல போக வேண்டியதுதானா?// போகும் போது கூப்புடுங்க நானும் வர்றேன். அப்படியே நம்ப அப்துலை மட்டும் கூப்டுக்கலாம், பாவம்..)

நன்றி முரளி.!
நன்றி தென்றல்.! (என்ன பிரெண்ட், கொஞ்ச நாளா ஆளையே காணோம்.?)

Subash said...

:))))))))))))

இந்த பதிவுகளையும் இதற்கு முன்னர் வந்த பதிவுகளையும் என் தற்பாதுகாப்பிற்காக என் கேர்ள்பிரண்டிற்கு மெயில் பண்ணிவிடுகிறேன்.

சென்ஷி said...

:-))

புன்னகை said...

//‘இதான்ங்க சாம்பார்.. நான் வச்சேன்.’//
இப்படியாச்சும் சொன்னாங்களேனு சந்தோஷப்படுங்க! ;-)

தராசு said...

அதுல பாருங்கோ,

ஈஸ்வரன் ஒரு கதவை அடைச்சா இன்னொரு கதவை திறந்துடறார். சாம்பார் வைக்க தெரியலைன்னா, மீன் திங்கவாவது தெரியறதேன்னு சந்தோஷப் பட்டுக்கோங்கோ.

அப்பாவி முரு said...

முற்பிறவியில் செய்த பாவங்கள், இப்பிறவியில் பிடித்து ஆட்டும்.

இப்பிறவியில் அதை முழுதாய் கழிக்காவிட்டால்,
அடுத்த பிறவிக்கும் அது தொடறும்.

சும்மாதான் ஏதோ தோணிச்சு.

jothi said...

ந்ல்லா எழுதி இருக்கீங்க,..

எல்லாத்துக்கும் ஒரு த்ரில்லிங் வேணாமா? இதுக்காக கல்யாணமே பண்ணலன்னா எப்டி? இருந்தாலும் நிறைய எழுதுங்க,.. படிக்க ஒரே சோக்கா இருக்கு,..

பாபு said...

வீட்டுக்கு வீடு வாசப்படி.
repeattu

அ.மு.செய்யது said...

நான் இப்போ தாங்க‌ ப‌டிக்கிறேன்.

ஹா..ஹா...சான்ஸே இல்ல‌ங்க‌..

ஒவ்வொரு வ‌ரியையும் ர‌சித்து ப‌டித்தேன்...க‌ல‌க்கீட்டீங்க‌ போங்க‌..

( திரும்ப‌வும் ப‌டிக்க‌ணும்...)

Anonymous said...

//பீரோவில் நான் வைத்திருந்த சுஜாதா நாவல்களும், வைரமுத்து கவிதைகளும் சணலால் கட்டப்பட்டு பரணுக்கு இடம்மாற்றப்பட்டன. (அங்கே அவளது புதிய பட்டுப்புடவைகள் இடம்பிடித்தன என்பதை சொல்ல வேண்டுமா?)
//

ரமா சரியாத்தான பண்ணியிருக்காங்க. புக் ஷெல்ஃப்ல தான் புக்ஸ் வைக்கணும். பீரோவில உடைகள், நகைகள் இல்ல வைக்கணும்.

பனங்காட்டான் said...

என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு! அழுகைய நிப்பாட்டு! கண்ணத்தொட...! சிரி (ஈ..........)..ம்ம்ம்...இப்ப எப்படி இருக்கு? (நல்லாருக்கு)

ஆயில்யன் said...

நல்லா பொலம்பியிருக்கீங்க போங்க :))

டைட்டில பார்த்துட்டு அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போகலாம்ன்னு வந்தா ஒரே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உங்களை நினைச்சு இல்ல...!

//இதான்ங்க சாம்பார்.. நான் வச்சேன்.//


பாவம் அண்ணி!

சாம்பார் கூட சொல்லி தெளி(ரி)யவைக்கவேண்டியிருக்கே...!

Chill-Peer said...

//‘இதான்ங்க சாம்பார்.. நான் வச்சேன்.’ என்றாள் அமைதியாக//

ஊருக்கெல்லாம் ஒரே சூரியன்.

வேற என்னத்தச்சொல்ல???

ச்சின்னப் பையன் said...

வீ.வீ.வா..

அண்ணே, நீங்க வெளிப்படையா சொல்லிட்டீங்க.. நான் மென்னு முழுங்கறேன்.. .அவ்ளோதான் வித்தியாசம்.... அவ்வ்...

Joe said...

//
‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’.
//

ஆஹா!
நம்ம வாழ்க்கையில ஐந்து வருடங்களுக்கு முன்னால கேட்ட வசனம் மாதிரியே இருக்கே?

MayVee said...

ஹ்ம்ம்....
வாழ்க்கை ல ரொம்ப அடிபட்டு இருப்பிங்க போல் இருக்கு ......

பதிவை பதித்த பிறகு ரொம்ப பயமா இருக்கு ............

புதியவன் said...

//‘இதான்ங்க சாம்பார்.. நான் வச்சேன்.’ என்றாள் அமைதியாக.//

ரொம்ப பாவம் தான் நீங்க...

அமிர்தவர்ஷினி அம்மா said...

இது புனைவா இருக்கட்டும்னு வேண்டிக்கறேன்.

..................

அ.மு.செய்யது said...

//*வாங்கி வந்த புதிய விகடனின் நடுப்பக்கத்தில் பஜ்ஜியை வைத்து நசுக்கினாள். (முன்பொருநாள் அட்டையில் கிறுக்கியதற்காக ஒரு நண்பனை செவிட்டிலேயே அடித்தது நினைவுக்கு வந்து தொலைத்தது)//

சோ.. அப்ப‌டின்னா இலக்கிய‌ ர‌ச‌னை கொண்ட ஒரு பொண்ணு நமக்கு மனைவியா வரணும்ன்ற கனவெல்லாம் பலிக்காதா ??

ஐயகோ !!!!! நான் என்ன பண்ணுவேன் ?

அ.மு.செய்யது said...

//MayVee said...


பதிவை பதித்த பிறகு ரொம்ப பயமா இருக்கு ............ //

அட ஆமாங்க..இன்னும் எத்தனை விஷயத்தில் காம்ப்ரமைஸ் பண்ண வேண்டி வருமோனு??

pappu said...

உங்கள பாத்தா எனக்கு பாஆவமா இருக்கு. ரொம அடிபட்டுட்டீங்ளோ?

ஆதிமூலகிருஷ்ணன் said...

இன்னிக்குதான் கடை ஹவுஸ்ஃபுல்.! 1300 ஹிட்ஸ் தாண்டி போய்கொண்டிருக்கிறது.. முதல் முறை, நம்பவே முடியலை.!! நடத்துங்க.. சப்ஜெக்ட் அந்த மாதிரி.!

வால்பையன் said...

அண்ணே ஒன்னும் வருத்தப்படாதிங்க!

சமைப்பது எப்படின்னு எங்கிட்ட ஒரு புக் இருக்கு அனுப்பி வைக்கிறேன்!

அப்புறம் பாருங்க! யாரையும் எதிர்பார்க்காம என்னை மாதிரி நீங்களே சமைக்க ஆரம்பிச்சிருவிங்க!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சுபாஷ்.! (தற்பாதுகாப்பிற்காக என் கேர்ள்பிரண்டிற்கு மெயில் பண்ணிவிடுகிறேன்// அய்யய்யோ கெடுத்தீங்க கதையை.. கொஞ்ச நஞ்ச நல்ல குணமும் மாறிடப்போகுது ஜாக்கிரதை)

நன்றி சென்ஷி.!

நன்றி புன்னகை.! ((வேறெப்படி சொல்லணுங்கறீங்க.? இதுக்கு மேலயும் இருக்குதா?)

நன்றி தராசு.! (சாம்பார் வைக்க தெரியலைன்னா, மீன் திங்கவாவது தெரியறதேன்னு சந்தோஷப் பட்டுக்கோங்கோ// என்னா லாஜிக் தல..)

நன்றி முரு.! (அதுசரி.!)

நன்றி ஜோதி.! (புதுவரவா? வாங்க.. //இருந்தாலும் நிறைய எழுதுங்க,.. படிக்க ஒரே சோக்கா இருக்கு,..// என்னா நல்ல மனசுடா சாமி.!)

நன்றி பாபு.!

நன்றி செய்யது.!

நன்றி அம்மிணி.! (லாஜிக்கா? சரிதான்)

நன்றி பனங்காட்டான்.! (ரசித்தேன்)

நன்றி ஆயில்.! (அந்தப்பக்கம் சப்போர்ட்டா? வெளங்கிரும்)

நன்றி சில்.!

நன்றி குரு.! (நான் மென்னு முழுங்கறேன்.. அவ்ளோதான் வித்தியாசம்..// சாம்பார் சாதத்தைத்தானே.. வேற வழி?)

நன்றி ஜோ.! ((எல்லோரும் கவனிங்கப்பா.. இங்க ஒரு பெருசு சிக்கிக்கிச்சு..)

நன்றி மேவீ.! ((அதுக்குதான் இவ்ளோ சிரமப்பட்டு எழுதிக்கினு இருக்கோம், பாத்து சூதானமா நடந்துக்கணும்ப்பு)

நன்றி புதியவன்.!

நன்றி அமித்து.! (புனைவா? நல்ல கற்பனை உங்களுக்கு)

நன்றி செய்யது.! (இலக்கிய‌ ர‌சனையா? கால் சுளுக்குக்கு தடவுற மருந்துதானே அது?)

நன்றி பப்பு.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஹைய்யா.. நானே 50.!

நன்றி வால்.! (உங்களுக்கு ஏதாச்சும் தேவைப்பட்டுச்சுன்னாலும் சொல்லுங்க..)

நாஞ்சில் பிரதாப் said...

இதான் சொல்றது எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணணும்னு...

அறிவிலி said...

இப்படி எங்க வூட்ல நடக்கறதல்லாம் உங்க வீட்டு விஷயமாட்டம் பேர மாத்தி எழுதறத வன்மையா கணடிக்கிறேன்.

dharshini said...

ரொம்ப பாவமாதான் இருக்கு...(உங்கள் இல்ல ரமாவ)
உங்களுக்கு சமைக்க தெரியதா அண்ணா.

dharshini said...

/
‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’.
/
ha ha ha :)

அத்திரி said...

அண்ணியாவது நான்வெஜ் சாப்பிடுறாங்களே........ எங்க வீட்டுல ஒன்லி வெஜ் தான்.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நாஞ்சில்.!
நன்றி அறிவிலி.!
நன்றி தர்ஷினி.!
நன்றி அத்திரி.!

தாரணி பிரியா said...

இதையெல்லாம் ரமா அவங்க படிச்சா இன்னிக்கு சோறு கிடைக்காது ஞாபகம் இருக்கட்டும்

தாரணி பிரியா said...

ரசமோ குழம்போ எல்லாம் ஒரே போலத்தான். பொடிதானே வேற அட்ஜஸ்ட் செஞ்சுக்க வேண்டியதுதானே. இல்லாட்டி நீங்கதான் சமைக்க வேண்டி இருக்கும் யோசிங்க ஆதி

தாரணி பிரியா said...

//அதற்கு அவள் வேகமாக, ‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’//


கரெக்ட் ரமா சாப்பிட மட்டும்தாம் நமக்கு பிடிக்கணும் :)

மறந்து போய் பாத்திரம் கழுவ எல்லாம் போயிட வேண்டாம்

தமிழன்-கறுப்பி... said...

:)))

தமிழன்-கறுப்பி... said...

இந்தப்பதிவை எனக்கு மூணுமணி நேரத்துக்கு, முன்னமே மெயில்ல அனுப்பிட்டாங்கய்யா ஆனா அதை நான் படிக்கல இப்பதான் படிச்சு பாத்தேன் இதேதான் அது...

தமிழன்-கறுப்பி... said...

\\
மங்களூர் சிவா said...
சரி சரி அழப்பிடாது!
\\

புரியுது மாம்ஸ் புரியுது... :)

jothi said...

நான் உங்கள் blogger-க்கு புதுசுதான். ஆனால் "கல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கை" பற்றி என் பழைய office மெயிலில் சுடசுட வந்துவிடும். எங்கிருந்து வருகிறது என தெரியாது,.. நாங்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு back follow ப்ண்ணி கண்டுபிடித்து இப்பொது படித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் நான் உங்கள் bloggerகுதான் புதிசு. எழுத்துக்களுக்கல்ல,...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தாரணி.! (கரெக்ட் ரமா சாப்பிட மட்டும்தாம் நமக்கு பிடிக்கணும்// ஏற்கனவே ஆம்பிளைங்களே உருப்புடாதவய்ங்க.. இதுல நீங்களும் சேந்துக்கங்க.. ஊரு உருப்புட்டுரும்..:))
)

நன்றி தமிழன்கறுப்பி.!
நன்றி ஜோதி.! (நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீங்கன்னு புரியலை. யாராவது நல்ல நோக்கத்துல இதை கட் பண்ணி மெயிலாக ஃபார்வேர்ட் பண்றாங்களா? அல்லது வேறெதாவது ஃபாலோ பண்றது, டிவிட்டர் மாதிரி விஷயமா? நா கொஞ்சம் டெக்னிகல் வீக்கு. கொஞ்சம் அந்த மெயில எனக்கும் அனுப்பறீங்களா? ப்ளீஸ்..
thaamiraa@gmail.com)

புதுகைத் தென்றல் said...

(என்ன பிரெண்ட், கொஞ்ச நாளா ஆளையே காணோம்.?)//

விடுமுறை விண்ணப்பம் பதிவு போட்டிருந்தேனே!! பாக்கலியா!!

அப்பா அம்மா வந்திருந்தாங்க. நாளை முதல் விடுமுறை முடிந்து வந்து வட்டியும் முதலுமா பதிவு போட்டிடலாம்.

Saravana Kumar MSK said...

உங்கள பார்த்தா எனக்கு பாவமா இருக்கு..

//‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’. .//

உங்களுக்கு heart attack வராதது ஆர்ச்சர்யமே.. :(((((((((

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

கிகிகி.. ;))

அந்த கடைசி பதிலில் தான் ரமாக்கா ஸ்ட்ராங்கா நிக்கிறாங்க. ;))

starjan said...

நீங்க தான் தாமிராவா?

அப்படியெ எங்க ஊருக்கும் வாங்க‌


http://www.ensaaral.blogspot.com

Deepa said...

//‘யார் சொன்னது? அதெல்லாம் நல்லா சாப்புடுவேன். கிளீன் பண்றதும், சமைக்கிறதும்தான் புடிக்காது’.
//

இது சூப்பர்! :-))

livingston baba said...

yannala serechu serechu veru vali vanthu vittathu