Friday, May 8, 2009

மே 8

கனவுகளில் மிதக்கும் ஒரு நாள்..

அந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது?

அலைபாயும் கூந்தல், யாரிடமும் இல்லாத உன் நிறம், அன்று நீ செய்து தந்த அந்த சிரிப்பு, கூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை இப்படி அடுக்கிக்கொண்டே செல்வான் ஒவ்வொரு காதலனும். இங்கே அழகு முன்னிற்கிறது.

மடிந்திருக்கும் உன் காலரைச் சரி செய்வாள், படுக்கையில் காரணமின்றிப் புரளும் உன்னை எழுப்பிப் பசியறிவாள், ஒரு நிமிடம் ஒரு யுகமாய் காத்திருப்பாள், வலி மிகுந்த ஒரு நாளில் உறங்க மடி தருவாள், அரிதாய் காரணங்களில்லாத ஒரு அணைப்பும் ஒரு முத்தமும் உனக்குக் கிடைக்கலாம். இப்படியாக அன்பு முன்னிற்கும்.

விதம் விதமாய் அழைப்பு வருகிறது, கவிதை சொல்வதெல்லாம் பொய்யாக கண்களிலேயே கனல் தெறிக்கிறது, காற்றிலே மிதக்கும் வித்தையறிகிறேன், நூலாக அல்லது நாணாக தழைவாய் அல்லது முறுக்கேறுவாய். ஒவ்வொரு முறையும் இது புதிது, இது புதிது என அலற விடுவாய். முத்தமிடுதலின் முற்றிய நிலையையும் உன்னால் அறிகிறேன். இங்கே மோகம் முன்னிற்கும்.

இந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது?

என் கனவுகளில் மிதக்கும் இந்நாளில்..

உன்னுடன் வாழ்ந்து மடிந்தான் அவன். உன்னை வாழ்த்தி முடிக்கிறேன் நான்.

 

363763-bloody04

.

64 comments:

Cable Sankar said...

வலிக்கும் காதல்..

jothi said...

சிங்கம் கிளம்பிருச்ச்ச்சு,....(second inningsa ஆதி???? அதான் காதல் பொங்கிவழிகிறது,.. )

ஸ்ரீமதி said...

அண்ணா கலக்கறீங்க.. :))) நான் என் கடைய மூடிடவா?? :((

//அலைபாயும் கூந்தல், யாரிடமும் இல்லாத உன் நிறம், அன்று நீ செய்து தந்த அந்த சிரிப்பு, கூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை//

Ultimate.. :))) Liked it a lot.. :))

எம்.எம்.அப்துல்லா said...

ச்சேய் இந்த வயசான ஆளுங்களே இப்படித்தான்....எப்பப்பாரு ஓரே ஃபீலிங்ஸா காட்டிகினு.

எங்கள மாதிரி யூத்தெல்லாம் இப்ப எதுக்கும் டோண்ட் ஒர்ரி :)

எம்.எம்.அப்துல்லா said...

அருமை ஆதிண்ணே...

வால்பையன் said...

அண்ணே கடைசியில சமாதி படம் எதுக்கு!

காதல் அழிச்சிருச்சுன்னு நீங்களே எப்படி முடிவு பண்ணலாம்!

இரா.சிவக்குமரன் said...

இந்த மாதிரி கவிதை?லாம் மட்டும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கிடைச்சிருந்தா.......... ம்ம்ம்ம் என்னாத்த சொல்றது!!

அனுஜன்யா said...

என்ன ஆச்சு ஆதி? ஆல் ஓகே? நள்ளிரவில் சரவணன்/ஸ்ரீமதி கவிதைகள் படிக்க வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே :)

அனுஜன்யா

அமிர்தவர்ஷினி அம்மா said...

முந்தைய பதிவுல (ரமா தோன்றும்) தாமிரா தெரிஞ்சார்னா, இந்தப் பதிவு மொத்தமும் ஆதி இருக்காரு..

multiple personality...??????????

கூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை இப்படி அடுக்கிக்கொண்டே //

ரசித்துக்கொண்டே...

முடிவு :((

விஜய் ஆனந்த் said...

இது ஒரு பக்கக்கதையா???

Truth said...

ஆதி...
அவனைப் பத்தி அவனோட ஆவி எழுதின கவிதையா? எனக்கு அப்படித்தான் புரிஞ்சிது. நல்லா இருக்கு ஆதி!.

புன்னகை said...

//இந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது?//
காதல் வயப்படும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி!

படித்து முடித்த போது கண்களின் ஓரத்தில் ஏனோ ஈரம் கசிந்தது!

Mahesh said...

//என்ன ஆச்சு ஆதி? ஆல் ஓகே? நள்ளிரவில் சரவணன்/ஸ்ரீமதி கவிதைகள் படிக்க வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே :)

அனுஜன்யா
//

அதானே? ரொம்ப ஃபீலிங்க்ஸா இருக்கே? இது மாதிரி நினைவு நாள்னெல்லாம் வெச்சுக்கிட்டு பழசை நெனச்சுக்கிட்டு இருக்காதீங்க... அப்டியே மேல மேல மேல போட்டே இருப்போம்... வாங்க... நானெல்லாம் இல்லை? :)))))))))))))

Mahesh said...

//என்ன ஆச்சு ஆதி? ஆல் ஓகே? நள்ளிரவில் சரவணன்/ஸ்ரீமதி கவிதைகள் படிக்க வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே :)

அனுஜன்யா
//

அதானே? ரொம்ப ஃபீலிங்க்ஸா இருக்கே? இது மாதிரி நினைவு நாள்னெல்லாம் வெச்சுக்கிட்டு பழசை நெனச்சுக்கிட்டு இருக்காதீங்க... அப்டியே மேல மேல மேல போட்டே இருப்போம்... வாங்க... நானெல்லாம் இல்லை? :)))))))))))))

தராசு said...

//@ எம்.எம்.அப்துல்லா said...
ச்சேய் இந்த வயசான ஆளுங்களே இப்படித்தான்....எப்பப்பாரு ஓரே ஃபீலிங்ஸா காட்டிகினு.

எங்கள மாதிரி யூத்தெல்லாம் இப்ப எதுக்கும் டோண்ட் ஒர்ரி :)//

அதான பார்த்தேன், அப்துல்லா அண்ணன் எங்கள மாதிரின்னு சொன்னா அது எங்களை எல்லாம் சேர்த்துத்தான்

தராசு said...

ஆதி தல,

எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் இவ்வளவு ஃபீலிங்ஸ் ஆஃப் தி இண்டியாவை.

வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி இல்லாம கலக்கறீங்க தல.

பல முறை படித்தேன்.

வாழ்த்துக்கள்

ச்சின்னப் பையன் said...

//எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் இவ்வளவு ஃபீலிங்ஸ் ஆஃப் தி இண்டியாவை.//

ரிப்பீட்டே...

வித்யா said...

அருமை:)

மங்களூர் சிவா said...

என்ன இது சின்ன பிள்ள தனமா?

மங்களூர் சிவா said...

இப்பிடி எல்லாம் ஜனவரி 1,2,3 போட்டு எழுதினா 365 நாள் பத்தாதே????

வெங்கிராஜா said...

ரசனைக்காரன்யா நீர்.. செய்யுளின் சுவை உரைநடையில் மிளிர்கிறது!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கேபிள்.!
நன்றி ஜோதி.!
நன்றி ஸ்ரீமதி.! (உங்க கடைக்கு நா போட்டியா.. ஹிஹி சும்மா வெளையாடாதீங்க..)

நன்றி அப்துல்.! (அனுஜன் கூட பாத்துப்பழகுங்க.. அம்புட்டுதான் சொல்வேன்)

நன்றி வால்.! (அது காதலின் சமாதியல்ல, ஒரு காதலனின் சமாதி. ஏன்னா எனக்கு நல்லா தெரியும். அவனுக்கு எப்பயோ சங்கு ஊதியாச்சு..)

நன்றி சிவக்குமரன்.! (நீங்களும் நம்பளமாதிரி பெருசுதானா.. வாங்க..வாங்க..)

நன்றி அனுஜன்யா.! (உங்க கவிதையையே தம்முக்கட்டிக்கொண்டு படிக்கிறவங்களாச்சே நாங்க.. ஹிஹி..)

நன்றி அமித்து.! (பெரும்பாலான விஷயங்களில் முடிவு நம் கைகளில் இல்லை தோழி)

நன்றி விஜய்.! (அடப்பாவிகளா? எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி?)

நன்றி ட்ரூத்.!
நன்றி புன்னகை.!
நன்றி மகேஷ்.! (நானெல்லாமா? உங்களால இந்த மாதிரி காதல புழியமுடியுமா? எப்பிடி மடக்குனேன் பாத்தீங்களா?)

நன்றி கேபிள்.!
நன்றி தராசு.! (நீங்களும் யூத்தா?.. வெளங்கிரும்..)

நன்றி ச்சின்னவர்.!
நன்றி வித்யா.!
நன்றி சிவா.!
நன்றி வெங்கிராஜா.!

எம்.எம்.அப்துல்லா said...

//அதான பார்த்தேன், அப்துல்லா அண்ணன் எங்கள மாதிரின்னு சொன்னா அது எங்களை எல்லாம் சேர்த்துத்தான் //

தம்பி தராசு...நீங்களும் இல்லாமலா??டபுள் கன்பார்ம்

ஹி..ஹி..ஹி..

ஆ.முத்துராமலிங்கம் said...

கவிதையான கதை, அருமையான வரிகளில்... ரொம்ப நல்லா இருக்கு.

(நீங்கள் எனக்குப் பிண்ணூடம் இட்டு இருந்தீரகள் மிகவும் நன்றி, உங்கள் கருத்தை ஏற்று அடுத்தவைகளில் கட்டுரையை கட்டுப் படுத்த முயற்சிக்கின்றேன். ரொம்ப நன்றிங்க)

ஆயில்யன் said...

சூப்பரூ! :)

//கவிதை சொல்வதெல்லாம் பொய்யாக கண்களிலேயே கனல் தெறிக்கிறது//

அடிக்கடி காதலன் காதலியிடம் அழகாய் இருக்கிறாய் என்று சொன்னால் நிகழும் நிகழ்வோ..! :)

காதலி ஆனபெறவும் கூட பொய் சொல்றதை நிறுத்துறானா பாருன்னு டென்ஷனாய் கனல் தெறிக்கும் கண்கள் :))

அ.மு.செய்யது said...

முத்து முத்தா அச்ச‌டிச்ச‌ மாதிரி ஏதேதொ எழுதியிருக்கீங்க‌..

ஆனா என்ன‌ எழுதியிருக்கீங்க‌ன்னு தான் ஒன்னும் புரிய‌ல‌..

ஒரே மேக‌மூட்டமா இருக்கு !!!

கும்க்கி said...

அ.மு.செய்யது said...

முத்து முத்தா அச்ச‌டிச்ச‌ மாதிரி ஏதேதொ எழுதியிருக்கீங்க‌..

ஆனா என்ன‌ எழுதியிருக்கீங்க‌ன்னு தான் ஒன்னும் புரிய‌ல‌..

ஒரே மேக‌மூட்டமா இருக்கு !!!

ஹி..ஹி..அதேதான்..இங்கயும்.

RAMYA said...

//
இந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது?

என் கனவுகளில் மிதக்கும் இந்நாளில்..

உன்னுடன் வாழ்ந்து மடிந்தான் அவன். உன்னை வாழ்த்தி முடிக்கிறேன் நான்.
//

அருமையா ஆரம்பிச்சு, தங்கு தடை இல்லாமல் வார்த்தைகளைக் கோர்த்து
முடிவில் நல்லா Signoff பண்ணி இருக்கீங்க ஆதி.

வரிக்கு வரி காதல் பொங்கி வழிகின்றது!

RAMYA said...

//
கூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை இப்படி அடுக்கிக்கொண்டே
//

அருமையான நினைவுகளின் தொகுப்பு!

கார்க்கி said...

இன்னைக்கு எம்.பி.ஏ எக்ஸாம்... அத விட்டு இதையே படிச்சிட்டு இருக்கேன் சகா.. அற்புதம்..

பரிசல்காரன் said...

அற்புதம் ஆதி...

வார்த்தைகளில்லை வேறேதும் சொல்ல...

Kathir said...

நல்லா இருக்குண்ணே...

இது நம்ம ஆளு said...

அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

pappu said...

///அலைபாயும் கூந்தல், யாரிடமும் இல்லாத உன் நிறம், அன்று நீ செய்து தந்த அந்த சிரிப்பு, கூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை இப்படி அடுக்கிக்கொண்டே செல்வான் ஒவ்வொரு காதலனும். இங்கே அழகு முன்னிற்கிறது/////

இப்பொழுதுதான் எனது ஞாபகத் தளங்களில் இவற்றை சேர்த்து வைக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு அவளோ சின்ன வயசு. பின்னாடி உங்கள மாதிரி பெர்சுல.....இல்ல...யூத்(அத இப்படித்தான சொல்லிக்கிறீங்க!) ஒருத்தனா ஆனபிறகு இதையெல்லாம் யோசிக்கலாம்.

குசும்பன் said...

ஆதி :)

//அனுஜன்யா said...
என்ன ஆச்சு ஆதி? ஆல் ஓகே? நள்ளிரவில் சரவணன்/ஸ்ரீமதி கவிதைகள் படிக்க வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே :)//

இதுக்கு பேருதான் சாத்தான் வேதம் ஓதுதல்:))))

குசும்பன் said...

கார்க்கி said...
இன்னைக்கு எம்.பி.ஏ எக்ஸாம்... அத விட்டு இதையே படிச்சிட்டு இருக்கேன் சகா.. அற்புதம்..//

கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்
கார்க்கி எம்.பி.ஏ படிக்கிறார்

சகா போதுமா சகா!

குசும்பன் said...

ஆதி உங்கள புரிஞ்சுக்கவே முடியல ஆதி, ஒரு படத்தில் வடிவேலு அம்மாவையும் அப்பாவையும் கற்பூறம் காட்டி கும்பிட்டு ஆட்டோ ஓட்டபோவார், திரும்பி வரும் பொழுது கட்டய எடுத்துவந்து இருவரையும் போட்டு சாத்துவார்.
கேட்டா அது நல்ல வாய் இது நாறவாய் என்பார். அதுபோல்

ஒருசில பதிவு அப்படிவருது ஒரு சில பதிவு இப்படி வருது...எழுத்தாளர் ஆதியின் மனநிலைய புரிஞ்சுக்கவே முடியலையே:))

உங்களின் பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவில் இதுக்கு இரண்டாவது இடம்!
முதல் இடம் உங்களுக்கே தெரியும் எதுக்கு என்று!

No said...

Mike testing 1..2..3

No said...

ஐயா, மேன்மிகு ஆதிமூலத்தாரே,

தங்கள் கவித்திறனை கண்டேன் இன்று,
அண்ணன், திரு சில் வீட்ட்டுக்கு வந்ததால் அறிந்தேன் இந்த அசுர கவியை,

வஞ்சனை இல்லா, கவிதைகளை வாரி வழுங்கும் நண்பா,
உன் நெஞ்சினை தொட்டுசொல், தாங்கள் க விதைகள் எதை கொண்டு செய்ததென்று!

நெல் விதைத்தல், அரிசி அளிக்கும் செயல்!
முள் விதைத்தல், வேலி நிறைக்கும் செயல்!
உன் கவிதை விதைத்தல், வாளி தூக்கவைக்கும் செயலன்றோ!

இருந்தும், தங்கள் கவிதை மழை என்னை கட்டிப்போட்டன
கண்கள் பனிந்தன இதயம் துடித்தன. வரும் என்று தெரிந்தது, ஓட முடியவில்லை
இது மழையன்றோ, வாளியாலும் தாங்க முடியவில்லை!

வலி வந்த வாளிக்கு நான் சொன்னேன் நன்றாக, நீர்சுமக்கும் நண்பா, இதற்கே அழுகிறாயே, நம் தமிழ் தாயை பார், எப்பேர் பெற்ற மகராசி, அவளே இந்த அராஜகத்தை தாங்கும்போது உனக்கேன் கேடு!

கவிதை என்ற பேரில் காய்ந்த ஓடையில் கல்லெறியும் கனவானே, உங்கள் உணர்வுகளை தமிழ்மொழி கொண்டு மட்டும் காட்டாதீர்கள்!

பாவம் தமிழ் தாய்!

நன்றி

கும்க்கி said...

அட ராமா,
இங்கயும் ஆரம்பிச்சிட்டாங்களா?

No said...

நான்தான் ஆதிமூலன் இன்றொரு நாள் மட்டும்,

cable Shankar - ??????????????

Jothi - சிங்கமா???? இது வண்டலூர் இல்ல தாயீ!

Sreemathi - நீங்க யார்ருன்னு தெரியல ஆத்தா. ஆனா ஆதிமூலம் அண்ணன் உங்கள்ளுக்கு போட்டினா, நீங்க யார்ருன்னு கொஞ்சம் புரியுது!

அப்துல்லா அண்ணே - அருமையா??? எது??? கண்ணாடி சரியாய் இருக்கா, இல்ல மாத்தனுமா!

வால்பையன் அண்ணே, சமாதி தமிழுக்கு. அதுமட்டுமில்ல, இன்னொரு சமாதி தயாராகுது, இத படிகிறவன் மூளைக்கு!

இரா சிவக்குமாரன் அண்ணே, அஞ்சு வருஷம் முன்னமே உங்க பேரு பேப்பருல வந்திருக்கும்!

அனுஜன்யா - உண்மைய பேசற மாதிரிதான் இருக்கு!

அமீர் அம்மா - Its called doppelganger - அதை ரசிக்கமுடியது. பயப்படனும்!

விஜய் ஆனந்த் - ஒரு பிடி விஷ விதை

Truth - You have named yourself wrongly. No doubt you see spirits every where!

புன்னகை - ஐயயோ சாமி....ஆதிமூலம் அண்ணனுக்கு எதாவது கடன் பாக்கியா?

Mahesh - ஒண்ணும் புரியல அண்ணே!

No said...

ஆதிமூலம் Comedy show - பார்ட் 2

தராசு -
என்னது நீங்க சொன்னது - தலையா!!! மன்னிக்கவும் ஐயா, இந்த one minute temporary மரியாதை குறைப்பிற்கு - " அவனா நீ ?????" டக்லஸ் அண்ணன் கோஷ்டியா! கருப்பு கண்ணாடி, கோட்டு சூட்டு காணோமே! இதுக்கு மேல நான் "பெஸ்" மாட்டேன்!

பலமுறை படிச்சிங்களா?? இத்தையா.....இதுல வேற வார்த்தைக்கு வார்த்த இடைவெளி கொடைவெளி அப்படின்னு! ஐயா உங்களுக்கு பிடித்த தமிழ் காவியம் ராணி காமிக்ஸ், இரும்பு கரம் வீரன கதையா?? நல்ல போட்டிங்க சார்!

சின்ன பையன் - அனபான தலைவா, சான்ஸ் கெடச்சா உங்க site வந்து பார்த்தே தீரனும் சார். ரீபீட் போடும் அன்பு தலைவா, உங்களுக்கு தெரியுமா நம்ம ஜெப்பியாறு ஒரு படம் நடிச்சாரு இருபது வருஷம் முந்தி, அத்த பாக்க ஒருத்தன் கூட வரலியாம். CD அனுப்பட்டா. நீங்கதான் நல்ல ரசிபிங்களே!

இரா.சிவக்குமரன் said...

'No' என்ற பெயரில் கருத்தை தெரிவிக்கும் என் அன்பிற்கினிய தோழா(?), நான் தமிழ் வகுப்பு எடுத்து நீண்ட நாட்களாகின்றன. மீண்டும் வகுப்பு எடுக்க மிக ஆவலாய் உள்ளேன். முதலில் நீங்கள் மிக நன்றாக தமிழ் பயின்று, பிறகு பிறரை குறை சொல்லலாமே. நாங்கள் மிக வெளிப்படையானவர்கள். எங்கள் கருத்தை, என்ன விதமாய் வெளிப்படுத்தினாலும் எங்கள் முகத்தை மறைக்க மாட்டோம்.முடிந்தால் முகமூடியில்லாமல் பேசிப் பழகுங்கள்.

இரா.சிவக்குமரன்

இரா.சிவக்குமரன் said...

'No' என்ற தோழருக்கு:

வீட்ட்டுக்கு -வீட்டுக்கு
வழுங்கும்- வழங்கும்
உனக்கேன- உனக்கென்ன
யார்ருன்னு - யாருன்னு
உங்கள்ளுக்கு - உங்களுக்கு
படிகிறவன் - படிக்கிறவன்

கை வலிக்குது, எல்லா தவறையும் சொல்றதுக்குள்ள எனக்கு வயசாய்டும்.

தாரணி பிரியா said...

எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க. கலக்கறீங்க ஆதி :)

No said...

அன்பான நண்பர் திரு சிவகுமாரன் அவர்களே,

உங்கள் கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி.

ஆதலால் ஒரு சின்ன break! ஆதிமூலம் பார்ட் 3, சிறிது இடைவேளைக்குப்பிறகு :

Now Interval - Trailer Time

அன்பான நண்பர் திரு சிவகுமாரனின் சீரிய சிந்தனைகளை படித்தேன்.
அருமை அருமை. கடற்கறைக்காரன் அடியில் ஒரு வாசகத்தை கண்டேன் :

" எனக்கு பிடிக்காத ஒன்றை நினைக்க தெரியாது : எனக்கு பிடித்த உன்னை என்னால் மறக்க முடியாது...."

இங்கே தொடங்கிய இந்த கொடுமை பல பல பக்கங்கள் பரவியிருந்தன! நான்கு படங்கள் இருந்தன, அதற்கு விளக்கமாக, நாப்பது வாக்கியங்கள் வேறு!

நாட்டு மக்களுக்கு ரொம்ப தேவ போல! ஏதேதோ வார்த்தைகளை ஊற்றிஇருந்தர்! இதுல இவர் நினைத்து நினைத்து பார்த்தாராம்.....ஒண்ணும் ஞாபகத்திற்கு வரலியாம்! நல்ல வேளை, வரல, இல்லாட்டி இன்னும் பத்து பக்கம் மொக்கை போட்டுருப்பார்!

அதுக்கு அப்புறம் ஒரு CBI டியரி குறிப்பு வேற. ஒண்ணும் புரியல! கடைசியாக, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் என்று கேள்வியுடன் ஒரு பதிவு!

பதில் இன்னுமா தெரியல அண்ணே. இந்த மாதிரியெல்லாம் கொடுமை செய்தால் இப்படிதான்! உங்களுக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் தான் பிடிக்கும், பைத்தியம்!

ஆதலால் அன்பு அண்ணன் திரு சிவகுமாரனின் சொல் தொடரை சிறிது சரி செய்கிறேன்:

" எனக்கு புரியாத ஒன்றை புரியாது என்று சொல்லத்தெரியாது : எனக்கு பிடித்த ஒன்றை மற்றவர்க்கெல்லாம் பிடிக்க வைக்காமல் இருக்க முடியாது...."

நன்றி


கடைசியாக ஒன்று - அண்ணனுக்கு Rahul Dravid பிடிக்கும்போல் இருக்கு!
இப்போ கொஞ்சம் connection புரியுது! ரெண்டும் மொக்கை!

No said...

ஆதிமூலம் comedy Show - Part 3

வித்யா : கொடுமை

மங்களூர் சிவா : இவர எங்கேயோ பாத்தா மாதிரி ஞாபகம்! சரியாய் ஞாபகம் இல்லை! ஆனால் அப்பவும் இதே மாதிரிதான் எதோ அழுக்கு துணிய உதறினார்!

வெங்கிராஜா : Dear Mr Monkey Raja .... errrr...சாரி..very sorry..... Venki Raja!
ரசன அது இதுன்னு வேற பேசுகிறீர்களா, அதான் ஒரு நிமிட் confuse ஆயிட்டேன்! தப்பா பேசியிருந்தா மன்னிச்சிக்கோங்க!

ஆதிமூலகிருஷ்ணன் : அட நீங்கதானா, புரியுது புரியுது, அர பக்கத்துக்கு சலாம் போடனுமே, இல்லாட்டி அடுத்தவாட்டி யார் இங்க வருவாங்க!
இதுல ஒருத்தருக்கு சொல்லறீங்க, முடிவு நம் கையில் இல்லை தோழி என்று!
very correct - இதுக்கு முடிவு கடவுள் கிட்ட கூட இருக்கிறமாதிரி தெரியல!

முத்துராமலிங்கம் - புரியுது....புரியுது...ஏன் முதுகை நீ, உன் முதுகை நான்........

ஆயில்யன் : oil in Pen.... வழியுது.

ஆ மூ சையது : அப்பா, cataract operation ஒருத்தராவது பண்ணி இருக்காரு!

கும்மிக்கி : ஏதோ லூசு போல

ரம்யா - பொங்கி வழியுது ஆத்தா! சட்டி பத்தலன்னா சொல்லுங்க! அட்டகாசமா விமர்சனம் எழுதுவிங்க போலிருக்கு! வில்லு படம் காலியானதற்கு கரணம் விமர்சனங்கள் மட்டுமே அப்படின்ன்னு தளபதி நம்பராரம்! வேட்டைகாரனுக்கு நீங்க முதல்ல எழுதிடுங்க. ரெண்டு டிக்கெட் free அக கொடுப்பாரு தளபதி!

கார்கி - பகல்பூரா, ஒர்ரிசாவா, பாட்னாவா - கவலை வேண்டம். எப்படயும் cash தானே ! IIM என்றல் நான் மயங்கி விழ தயார்!

பரிசல்காரன் - உங்களுக்கு ஏதோ நன்றி சொல்லும் போதே நினைத்தேன்! இதுவும் முதுகு கேஸ் போல!

கதிர் - காதல் வைரஸ் எடுத்தாரே, அவுரா நீங்க. நெனச்சேன்!

இது நம்ம ஆளு - நான் allowed ஆ சார்? ஆனால் ஒரு கண்டிஷன்! வந்தவுடன் திட்டக்கூடாது, Chill-Peer அண்ணன் மாதிரி!

பாப்பு - உங்களுக்கு வெக்க ஆசைதான் ஒரு நல்ல ஆப்பு! ஆனா ஒண்ணும் புரியிலையே!

குசும்பன் - இது அன்பு அண்ணன் எழுதி உங்களுக்கு பிடித்த இரண்டாவது பதிவு என்று தெரிந்துகொண்டேன் ! முதல் பதிவு என்னனு எனக்கு தெரியுமே!!!!!!!
வேற என்ன, உங்களை பத்தி ஒரு நாலு பத்தி எழுதிஇருப்பார்!
அது சரி, ஒண்ணும் குசும்பா இருக்கற மாதிரி தெரியிலையே! உங்களாண்ட அப்புறம் தனியா......

அட, அவ்வளவுதாம்பா.....

இந்த ஊசிப்போன உளுந்து வடையைம பற்றி எவ்வளவு வெலாவாரியாக இவ்வளவு அண்ணன்மார்களும் தாய்மார்களும் அலசி இருக்காங்க! அதுல ஒரு சாம்பராணி MBA பரீட்சை எழுதனுமாம், அத்தோட முக்கியமா இத்தை பாத்தாராம்!

வாழ்க்கை கல்வி இதுதாம்பா!

நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

அன்பின் நோ

//அப்துல்லா அண்ணே - அருமையா??? எது??? கண்ணாடி சரியாய் இருக்கா, இல்ல மாத்தனுமா!

//

அத்தனை பேரின் விமர்சனத்தையும் கண்டு புல்லரித்துப் போய் இருக்கும் உங்களைப் போலவே ஒருவரின் தனிப்பட்ட உடல்குறையைச் சுட்டிக் காட்டி நக்கலடிக்கும் உங்கள் அறிவு கண்டு நானும் புல்லரித்துப்போ்கிறேன்

நன்றி :)

No said...

அன்பான திரு அப்துல்லா,

I am extremely sorry if you feel that way. I did not realise you wore glasses and whatever has been said is not at all related to physical charecteristics of any of the bloggers involved as I do not see any photos but only what they write! Hope you understand!

மன்னிக்கவும்!

நன்றி

மங்களூர் சிவா said...

50

மங்களூர் சிவா said...

@ NO

அழுக்கு துணியோ கோவணத்துணியோ எதையோ நான் உதறீட்டு போறேன் நீங்க பொத்திகிட்டு போகவும்.


பெரும்பாலான பதிவுகளில் பின்னூட்டமிடுவது பதிவையும் தாண்டிய நட்புக்காக.

கும்க்கி said...

சைக்கோவின் உளரல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அப்துல் அண்ணாவுக்கும்,சிவாவிற்க்கும் எனது வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

No said...

அன்பு அண்ணன் திரு கும்க்கி,

Logic இருந்தாதான் உங்களுக்கு பிடிக்கும் என்பதை அறிந்தேன்!
இது நீங்கள் பார்த்து படிப்பதற்கு மட்டுமா இல்லை நீங்கள் பழைய சுண்ணாம்பு தடவிவைத்த தாங்கமுடியாத தலைவலியை பார்பவர்களுக்கும் பொருந்தனுமா?

அய்யா சினிமாவ பத்தி ரெண்டு பக்கம் பரப்பியிருக்காரு! இது இல்லென உங்களுக்கு தூக்கமே வராதே? அண்ணனோட ப்லோக் title ஒரு சினிமாப்பாட்டை பாடுது! வேற என்ன, அத்தான நமக்கு சோறு தண்ணி எல்லாம்!

அப்புறம் வேற எதேதோ இருந்தது, ஒன்னும் செரியா வெளங்கல! பெரிய எழுத்தாளர் போல. எனக்கு ஏன் வம்பு. நான் எதாவது சொல்லப்போயி அவரு எதாவது எழுதி அப்புறம், பலர் அதை படிச்சு ஆசுபத்ரி வேற போவணும்! இதுல என்ன வேற Psycho அப்படின்னு வச!

ஆள வுடு சாமி! நான் இல்லை!

நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முத்துராமலிங்கம்.!

நன்றி ஆயில்யன்.! (தொடரும் அன்புக்கு மிக்க நன்றி ஆயில்யன்.!)

நன்றி செய்யது.! (அதுக்காக என்ன விளக்கமா போடமுடியும், புர்லன்னா போயிக்கினேயிருக்க வேண்டியதுதான்..)

நன்றி கும்க்கி.!

நன்றி ரம்யா.!

நன்றி கார்க்கி.! (ரொம்ப நாள் கழிச்சு பதிவப்பத்தி பின்னூட்டம் போட்டுருக்கான்யா.. மகிழ்ச்சி)

நன்றி பரிசல்.!

நன்றி கதிர்.!

நன்றி நம்ப ஆளு.!

நன்றி பப்பு.! (வயசப்பத்தி யாராச்சும் இனிமே பேசுனா கோவப்படலாம்னு இருக்கேன்)

நன்றி குசும்பன்.! (செம்ம கமென்ட்.. ரசித்தேன்)

நன்றி சிவக்குமரன்.!

நன்றி தாரணிபிரியா.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி NO.!

No said...

அன்பான அண்ணன் திரு மங்களூர் சிவா,

பல விஷயம் பத்தி தாக்கி இருக்கிறீங்க! அதுவும் மூணு நாலு blog வேற!
ஒரு கட்டயால அடிச்சாலே ஒரு சராசிரி மனுஷன் செத்துருவாங்க, எதுக்கு மூணு நாலு???? It seems you want to close all exits and use all methods at disposal!

செம்பை பாகவதர் போட்டோவா அது, மேன்மிகு இயேசு தாஸ் அண்ணனுடன்? அவ்வளவு க்க்லீயராக தெரியல்ல!

உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், உதித் நாராயண் என்ற தமிழ் நாவிலா ஒரு நாதாரி நம் மொழியயை நாறடித்து கொன்றிருக்கிறது! அவரு முதல் இல்லை! புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

பில்லை நிலா இரண்டும் வெல்லை நிலா.........

நல்ல பாட்டு ..........

Next round - சிறிய இடைவெளிக்கு பின்! (NIFTY, economics, blah ..blah....Have lots of things to read buddy..will be back)

நன்றி

கர்நாடக சங்கீத பேரொளியே, துஜாவந்தி இராகத்தில், கடந்த இருபது வருடத்தில் ஒரே ஒரு தமிழ் சினிமா பாட்டு மட்டுமே இயற்றப்பட்டது , உங்களுக்கு தெரியுமா அது என்னவென்று????

ஆதிமூலகிருஷ்ணன் said...

மன்னிக்கவும் நோ.. என்னைப்பற்றி உங்கள் கருத்துகளைத் தேவையான அளவு தெரியப்படுத்திவிட்டீர்கள் என நம்புகிறேன். ஆனால் நண்பர்கள் மீது சேறு இறைப்பதை இங்கு அனுமதிக்கமுடியாது.. பின்னூட்டங்கள் அழிக்கப்படலாம். அவர்களைக்குறித்து கருத்துகூற விரும்பினால் அவர்களின் தளத்திற்கே செல்லலாம். அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். நன்றி.

No said...

Dear Thiru Aaadhi,

I understand!
Migrating.....

Thanks for the temporary lease!

Nandri

எம்.எம்.அப்துல்லா said...

// sorry //

இது இங்லீஸ்ல எனக்குப் பிடிக்காத ஓரே வார்த்தை


// மன்னிக்கவும்! //

அய்யய்யோ...இது எனக்கு தமிழ்ல பிடிக்காத ஓரே வார்த்தைபொய் சொல்லக் கூடாது காதலி :)))

குசும்பன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அவர்களைக்குறித்து கருத்துகூற விரும்பினால் அவர்களின் தளத்திற்கே செல்லலாம். //

ஆதி நீங்க நல்லவரா கெட்டவரா?:))


//அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.//

நான் எப்ப சொன்னேன் அப்படி:)

குசும்பன் said...

குசும்பன் - இது அன்பு அண்ணன் உங்களை பத்தி ஒரு நாலு பத்தி எழுதிஇருப்பார்!//

நாலுபத்தியா நாலு வார்த்தை கூட தாண்டாது நம்மை பற்றி எழுத:) இருந்தாலும் நீங்க அறிவு கொழுந்து என்னமா கண்டுபிடிக்கிறீங்க:)

//அது சரி, ஒண்ணும் குசும்பா இருக்கற மாதிரி தெரியிலையே! உங்களாண்ட அப்புறம் தனியா......//

தனியா கவனிக்கிற அளவுக்கு நான் எல்லாம் ஒர்த் இல்லீங்க, நம்ம ஆதி செமயா தாங்குவாரு அவருதான் ரொம்ப நல்லவரு:)

No said...

அன்பு நண்பர் திரு குசும்பன்,

அது வந்து............ ம்ம்ம்ம்ம்ம்......வேண்டம்....அண்ணன் திரு ஆதி கோவிக்கராரு.......
வீட்டுக்கு அப்புறம் வாரேன்!

நன்றி மீண்டும் வரமாட்டேன்!

ஊர்சுற்றி said...

அப்பப்போ, இது கவிதையா கதையான்னு சந்தேகம் வந்திடுது.

கவிதையான உணர்வு. :)

அ.மு.செய்யது said...

உங்கள் எழுத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு என் மண்டையில் மசாலா இல்லை என்பதற்காகவே நான் அவ்வாறு எழுதியிருந்தேன்.

உங்கள் பதிலில் ஏனோ அதிருப்தி இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

நோ மேல இருக்க கோவத்துல என்ன தப்பா எடுத்துக்காதீங்க தல...