Friday, May 1, 2009

‘சிக்ஸ் பேக்’ வேண்டுமா?

நாங்கள் உடற்பயிற்சி செய்த லட்சணம்.!

நான் எனது 20 வயது வரை ஒல்லிப்பிச்சானாக இருந்ததேன். (இப்போது எப்படி என்று கேட்கக்கூடாது)  உடற்பயிற்சி செய்தால் மேலும் ஒல்லியாகிவிடுவோம் என்ற‌ ப‌ய‌த்தினால் உடற்பயிற்சி பக்கமே தலைவைத்தும் படுக்கவில்லை. தென்காசி அருகே வ‌னாந்திர‌த்தில் அமைந்திருந்தது எங்க‌ள் க‌ல்லூரி. நல்ல‌ காற்ற‌டி கால‌த்தில் தெம்பான‌ மாண‌வ‌ர்க‌ளே மேல்காற்றில் சாலையிலிருந்து க‌ல்லூரிக்கு 500 மீட்ட‌ர்தான், செல்ல‌ சிர‌ம‌ப்ப‌டுவார்க‌ள். என்னைப்போலுள்ள‌வ‌ர்க‌ள் நான்கைந்து பேராய் கையைப்பிடித்துக்கொண்டுதான் செல்வோம். ஒரு நாள் புளிய‌ம‌ர‌த்தைக் க‌ட்டிப்பிடித்துக்கொண்டு அரைம‌ணி நேர‌ம் கிட‌ந்த‌தெலாம் த‌னிக்க‌தை. ச‌ரி, இந்த‌ க‌ல்லூரிக்க‌தையை பிரிதொரு ச‌ம‌ய‌ம் சுவார‌சிய‌மாக (கள்ளு குடித்த அனுபவத்துடன்) பார்க்க‌லாம். இப்போது விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள்.

மேலும் ப‌டிப்பு ப‌டிப்பு என்று இருந்துவிட்ட‌தாலும் (ஏழு பேப்ப‌ர்ஸ் அரிய‌ர்ஸ்) உட‌ற்ப‌யிற்சி ப‌ற்றிய‌ கவ‌ன‌மே இல்லாது போய்விட்ட‌து. விளையாட்டில் எனது ஆர்வமோ அதைவிட பிரமாதமாக இருந்தது. எறி பந்தோ, கில்லி தாண்டோ, பின்னர் கிரிக்கெட்டோ எனக்கு மிக ஆபத்தான விளையாட்டாக பட்டது. பின்னர்  வேலை வேலை என்று இருந்துவிட்ட‌தாலும் உட‌ற்ப‌யிற்சியைக் க‌வ‌னிக்க‌முடிய‌வில்லை.

ஒருவ‌ழியாக சென்னை வந்து அம்ப‌த்தூரில் கொஞ்ச‌கால‌ம் செட்டிலான‌ போது உட‌லின் மீது க‌வ‌ன‌ம் வ‌ந்த‌து. என்ன‌டா இன்னும் நாப்ப‌து கிலோவை தாண்ட‌வில்லையே.. ஒரு பிக‌ரும் திரும்பிக்கூட‌ பார்க்க‌மாட்டேங்குதே என்ற‌ க‌வ‌லை. ஹார்டை வுடு ம‌ச்சான், பீர்தான் உட‌ம்புக்கு ந‌ல்ல‌து என்ற‌ ந‌ண்ப‌னின் அறிவுரைப்ப‌டி பிய‌ர‌டிக்க‌த்தொட‌ங்கியும் ஒரு முன்னேற்ற‌த்தையும் காண‌வில்லை. அதன் பின்னர்..

யோகா

பின்ன‌ர் யோகா ப‌ண்ணினா ந‌ல்ல‌தாம்டா, உடம்பு தேறுமாம் பதஞ்சலி முனிவரே சொல்லிருக்காராம்டா என்று க‌ண்ண‌ன் சொல்ல‌ ந‌ம்பி இருவ‌ருமே பாடியிலுள்ள‌ ஒரு பெரிய‌வ‌ரிட‌ம் யோகா கிளாஸ் சேர்ந்தோம். அவ‌ருடைய‌ பெரிய‌ தொப்பையைப் பார்த்த‌வுட‌னே ச‌ந்தேக‌ப்ப‌ட்டேன், அது போல‌வே ஒரு ஆச‌ன‌த்தையும் அவ‌ர் செய்து காண்பிக்க‌வில்லை. மாறாக‌ புக்கைப்பார்த்து எங்க‌ளை செய்ய‌ச்சொல்லி பார்த்துக்கொண்டார். இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் காலையில் ஆறு ம‌ணிக்கே வ‌ர‌ச்சொல்லி ப‌டுத்திவிட்டார். 15 நாட்க‌ளில் எங்க‌ளின் யோகா முடிவுக்குவ‌ந்த‌து.

ஜிம்

தொட‌ர்ந்து ஜிம் செல்வ‌து என்றும் அங்குள்ள பயிற்சியாளரிடம் நம் தேவையை சொல்லி அதற்கு தகுந்த உடற்பயிற்சியை செய்வது என்றும் தீர்மான‌மாயிற்று. உட‌னே ம‌ண்ணூர்பேட்டையிலுள்ள‌ ஒரு ஜிம்மில் இணைந்தோம். புதிதாக‌ ஷார்ட்ஸ், ஷூக்க‌ள் எல்லாம் வாங்கியாயிற்று. இங்கும் எங்களுக்கு காலை ஆறு மணி ஸ்லாட்டே தந்தார்கள். அல்லது மாலை ஏழு மணிதான் என்றார்கள். மாலையில் உடற்பயிற்சி செய்யலாமா என்ற சந்தேகத்தினை கேட்டுத்தீர்த்துக்கொண்டவுடன் மாலை நேரத்தையே தேர்ந்தெடுத்தோம். ரொம்ப‌ ஆர்வ‌த்துட‌ன் முத‌ல் நாள் சில‌ ப‌யிற்சிக‌ளை செய்தோம். ம‌றுநாள் காலைதான் எழுந்திருக்க‌ முடியாம‌ல் தொடையும் தோள்ப‌ட்டையும் விண் விண்ணென்று தெறித்த‌து. ப‌டிக‌ளில் இற‌ங்க‌முடிய‌வில்லை. முத‌ல் நாள் இப்ப‌டித்தான் இருக்குமாம், இருப்பினும் தொட‌ர‌வேண்டும் என்ற‌ வைராக்கிய‌த்தில் மேலும் மூன்று நாட்க‌ள் சென்றோம். அவ்வ‌ள‌வுதான், நாலே நாள், ஜிம் இனிதே நிறைவ‌டைந்த‌து.

அதிகாலை ஓட்ட‌ம்

ஜிம்முக்காக‌ வாங்கிய‌ ஷூக்க‌ளை அவ்வ‌ப்போது பார்த்துக்கொள்வேன். எந்த‌ உட‌ற்ப‌யிற்சியைவிட‌வும் நீச்ச‌லும், ஓட்ட‌மும் மிக‌ச்சிற‌ந்த‌து என‌ ஒருநாள் ம‌ப்பில் க‌ண்ண‌ன் சொற்பொழிவாற்ற‌‌ புல்ல‌ரித்து ம‌றுநாளே காலையில் ஓடுவ‌து என்று தீர்மான‌மாயிற்று. எங்கே ஓடுவ‌து? அம்ப‌த்தூர் எஸ்டேட் குறுக்குச்சாலைக‌ள் சிற‌ப்பான‌வை. ஆனால் நாய்க‌ளுட‌ன் ந‌ம‌க்கு ஏற்க‌ன‌வே அனுப‌வ‌ம் இருக்கிற‌தே. என‌வே MTH சாலையிலேயே லூகாஸ்டிவிஎஸ் வரை ஓடுவ‌தென்று முடிவாயிற்று. ஆனால் ஆறு ம‌ணிக்கு மேல் ஓடினால், ம‌க்க‌ள் ச‌ந்தேக‌த்தில் விர‌ட்டிப்பிடிக்க‌க்கூடும் என்ப‌தாலும், டிராபிக் தொல்லை இருக்குமென்ப‌தாலும், உட‌ல்ந‌ல‌த்துக்காக‌ எந்த‌ தியாக‌த்தையும் செய்ய‌லாம் என்று முடிவு செய்து அதிகாலை 4.30க்கு ஆர‌ம்பித்து 5.30க்குள் வ‌ந்துவிடுவ‌தென்றும் தீர்மானித்தோம். அத‌ன் ப‌டி முத‌ல் இர‌ண்டு நாட்க‌ள் வெற்றிக‌ர‌மாக‌ ஓடிப்போய் வ‌ந்தோம். மூன்றாம் நாள் 4.15 க்கு அலாரம் என்னவோ அடிக்கத்தான் செய்தது. ஆனால் நாங்கள் எழுந்த போது மணி 5.00. இருப்பினும் மனம் தளராமல் தேவர் ஒயின்ஸ் வரை ஓடிவிட்டு வந்தோம். நான்காம் நாள் கண்ணன், லேசா முடியல இன்னிக்கு ஒருநாள் லீவு உட்டுரலாம் என்றான். நானும் அந்த வார்த்தைக்குதான் காத்திருந்தவன் போல சந்தோஷமாக தலையாட்டிவிட்டு மகிழ்ச்சியாக எட்டு மணி வரை தூங்கி மகிழ்ந்தேன். அன்றோடு முடிந்தது அதிகாலை ஓட்டம்.

ஸ்கிப்பிங்

ஓடுவதிலுள்ள அத்தனை லாபங்களும் ஸ்கிப்பிங்கிலும் உள்ளது என்ற அரிய உண்மையை அடுத்து நாங்கள் கண்டுபிடித்தோம். மேலும் இதில் பல பிளஸ் பாயிண்டுகளும் உண்டு. ஜிம்மைப்போல பணம் கட்ட வேண்டாம், ஓட்டத்தைப்போல அதிகாலை எழுந்திருக்கவேண்டாம். பாதியில் வேன்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம் (ஓட்டத்தில் முடியாது, லூகாஸுக்கு போய் விட்டால் திரும்பிவர வேண்டுமே) நேரமும் நம் வசதியைப்பொறுத்தது, முதலில் வெளியே போக‌ வேண்டிய‌தில்லை. மாடியிலேயே வேண்டுமானால் ரூமுக்குள்ளேயே கூட செய்து கொள்ள‌லாம். முத‌லில் இருப‌து, முப்ப‌து என்று ஆர‌ம்பித்து இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்குள் ஆயிர‌ம் வ‌ரை போய்விட‌வேண்டும் என்று தீர்மான‌மான‌து. தேடிப்பிடித்து இர‌ண்டு ஸ்கிப்பிங் க‌யிறுக‌ளையும் வாங்கிவ‌ந்தோம். இந்த‌ உட‌ற்ப‌யிற்சி இடையிடையே லீவு விட்டுக்கொண்டு சு‌மார் ஒரு மாத‌ம் வ‌ரை செய‌ல்ப‌ட்டு பின்ன‌ர் நிறைவு பெற்ற‌து.

ஷ‌ட்டில் காக்

பின்ன‌ர் தீவிர‌மாக‌ சிந்தித்த‌ போது, வெறும் உட‌ற்ப‌யிற்சியாக‌ நாம் சிந்திப்ப‌தனால்தான் விரைவில் போர‌டித்துவிடுகிற‌து ப‌திலாக‌ சுவார‌சிய‌மான‌ விளையாட்டாக‌வும் அது இருந்தால் ந‌ன்றாக‌ இருக்கும் என்று சித்த‌ம் தெளிந்தோம். ப‌க்க‌த்து அறை ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் விவாதித்தோம். உட‌ற்ப‌யிற்சியின் அவ‌சிய‌த்தை அவ‌ர்க‌ளுக்கு எடுத்துரைத்து அவ‌ர்க‌ளும் ஈடு ப‌ட்டால் ம‌ட்டுமே இது சாத்திய‌மாகும் என‌வும் கேட்டுக்கொண்டோம். (ஏனெனில் பேட்ஸ், வலை, பந்துகள் என பணம் சம்பந்தப்பட்டிருக்கிறதே.!) ச‌ம்ம‌திக்க‌வில்லை எனில் தண்ணிய‌டிப்ப‌து ச‌ம்ப‌ந்த‌மான‌ எந்த‌ வித‌மான‌ கொடுக்க‌ல் வாங்க‌லும், ஒத்துழைப்பும் நிறுத்த‌ப்ப‌டும் என்றும் எச்ச‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து. இறுதியில் ஒப்ப‌ந்த‌த்தில் கையெழுத்திட்டார்க‌ள். என்ன‌ விளையாட‌லாம் என‌ விவாதித்த‌போது கிரிக்கெட் என்று ஆர‌ம்பித்த‌ ஒருவ‌ன‌து மூக்கிலேயே குத்தி ஷ‌ட்டில் காக் என்று முடிவுசெய்தோம் (ஆப‌த்து குறைவாச்சே, ப‌ந்து மேலே ப‌ட்டாலும் வ‌லிக்காது). பின்ன‌ர் அடுத்த‌ இர‌ண்டு நாட்க‌ளில் ப‌ல‌த்த‌ வேலைப்ப‌ளு. ப‌க்க‌த்து காலிமனையை அனும‌தி வாங்கி (குப்பையும், முள்ளு மரமுமாய் இருப்பதைவிட இடம் சுத்தமாக இருக்கும் என்பதால் அவர்களுடைய குட்டிப்பையனையும் விளையாட சேர்த்துக்கொள்ளவேன்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதித்தார்கள்) முள்ளுவெட்டுதல், சுத்த‌ப்ப‌டுத்துத‌ல், பணம் வசூலிப்பு, உப‌க‌ர‌ணங்கள் ப‌ர்சேஸ் என‌ ப‌ய‌ங்க‌ர‌ பிஸி. மூன்றாம் நாள் விளையாடத்துவங்கினோம், எப்ப‌டி விளையாடுவ‌து என்ற‌ விதிமுறைக‌ள் தெரியாத‌தால் நாங்க‌ளே வ‌குத்துக்கொண்டோம். இதில்‌ ஓர‌ள‌வு வெற்றி பெற்று சுவார‌சிய‌ம் தொற்றிக்கொள்ள‌ ம‌கிழ்ச்சியாய் விளையாட‌த்துவ‌ங்கினோம். ஆனால் சோதனையாக பொங்க‌ல் விடுப்பு வர‌ ஒரு 10 நாள் ஊருக்கு சென்றேன். ப‌ல‌ரும் சென்றார்க‌ள். திரும்பிவ‌ந்த‌போது எங்க‌ள் ஷ‌ட்டில் கோர்ட்டில் பில்டிங் க‌ட்டுவ‌த‌ற்கான‌ வான‌ம் தோடும் ப‌ணி துவ‌ங்கியிருந்த‌து.

அந்த சமயத்தில்தான் அதுவரை நான் சென்னையில் பார்த்திராத கிடைக்காத ஒரு அரிய விஷயமான ‘சுவையான’ உணவை இரண்டு தெரு தள்ளி புளியங்குடிகாரர் ஒருவர் நடத்திக்கொண்டிருந்த ஒரு மெஸ்ஸில் கண்டுபிடித்தோம். அதன் பின்னர் மூணு நேரமும் மூக்குப்பிடிக்க தின்பதே என் ஒரே உடற்பயிற்சியாயிற்று. அதுதான் இப்போதைய எனது சிக்ஸ் பேக் உடலுக்குக் (இப்போ இருப்பதுபோல) காரணம் என நினைக்கிறேன்.

கொஞ்ச‌ நாள் க‌ழித்து கேர‌ம் போர்ட் வாங்க‌லாம்டா, டைம் பாஸாகும், கேர‌ம் விளை‌யாண்டா விர‌லுக்கு ந‌ல்ல‌தாம் என்ற‌ க‌ண்ண‌னை நான் கொலைவெறிப்பார்வை பார்த்தேன். ‌

டிஸ்கி : தொடர்ந்து லீவு நாட்கள் வந்தா இப்படித்தான் மீள்பதிவெல்லாம் வரும்.. கண்டுக்காதீங்க..

.

29 comments:

hassan said...

மீள் பதிவு சூப்பர்..

ஹஸன் ராஜா

KADUVETTI said...

OK OK

Mahesh said...

கடைசில ஆறு பேக் நிறைய ஷூ, சாக்ஸ், பனியன்னு எல்லா அழுக்கும் நிறைஞ்சுதா?

அறிவிலி said...

:))

வெங்கிராஜா said...

அண்மையில் தான் வலைப்பதிவுலகத்திற்குள் வந்தேன். சில வாரங்களாக உங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். நல்ல சுவாரஸ்யம் குறையாத பதிவுகள். உங்களுக்கு எப்படி பின்னூட்டம் போடுறதுன்னு சரியா தெரியல, பேசாம ஒரு லெட்டரை கேபிகேகே-வுக்கு மெயில் அனுப்பிச்சிரவா?

ச்சின்னப் பையன் said...

ஹாஹா.... மீள் பதிவா இருந்தாலும் தூள் பதிவு...

ஆயில்யன் said...

நிறைய நிறைய ஐடியாக்கள்

நிறைய நிறைய டிரைப்பண்ணியிருக்கீங்க

சூப்பரூ! :))

அத்திரி said...

//ஒரு நாள் புளிய‌ம‌ர‌த்தைக் க‌ட்டிப்பிடித்துக்கொண்டு அரைம‌ணி நேர‌ம் கிட‌ந்த‌தெலாம் த‌னிக்க‌தை.//

இந்த கதையைத் தான் ரொம்ப நாளா கேட்டுக்கிட்டு இருக்கேன்........ம்ம்ம்ம்ம்ம்ம்

டக்ளஸ்....... said...

ஆனாலும்..உங்களுக்கு இவ்வளவு...இவ்வளவு...இவ்வளவு...இவ்வளவு...இவ்வளவு...இவ்வளவு... ஆகாது..!
ஏதாவது சொல்லீறப் போறேன்..!

அத்திரி said...

// இப்போதைய எனது சிக்ஸ் பேக் உடலுக்குக் (இப்போ இருப்பதுபோல) காரணம் என நினைக்கிறேன்.//


இப்ப இருக்குற சிக்ஸ் பேக் உடம்புக்கு அண்ணியோட சமையல் தான காரணம்.........

amutha krishna said...

சுவையான உணவு கொஞ்ச நாளாக தான் சாப்பிடறீங்களா அப்படி தெரியலையே...

வால்பையன் said...

லீவு நாள்ல யாராவது மீள் பதிவு போடுவாங்களா?

எம்.எம்.அப்துல்லா said...

//வால்பையன் said...
லீவு நாள்ல யாராவது மீள் பதிவு போடுவாங்களா?

//

குட் கொஸ்டீன். இதை அப்பிடியே மனுவா எழுதி கலெக்ட்டர்ட குடுங்க

:))

வித்யா said...

\\எம்.எம்.அப்துல்லா said...
//வால்பையன் said...
லீவு நாள்ல யாராவது மீள் பதிவு போடுவாங்களா?

//

குட் கொஸ்டீன். இதை அப்பிடியே மனுவா எழுதி கலெக்ட்டர்ட குடுங்க

:))\\
ROTFL

Anonymous said...

இது மீள் பதிவா இருந்தாலும் பரவாயில்லை, ஆதி, பாத்து சாப்பிடுங்க, சிக்ஸ் பேக் லஞ்ச் பேக் ஆயிட போகுது.

மங்களூர் சிவா said...

:)))

Subash said...

ஹாஹா
உங்க ஐடியாவில முதல் 3ம் நாங்கம் செய்து பார்த்து நீங்க சொன்ன காரணத்துக்காகவே வின்னு போச்சு.

இப்பதான் தெரியுது இன்னும் ஐடியா இருக்குனு.
இப்பவே 4ம் ஐடியாலருந்து நண்பருகணுடன் விவாதிக்கப்போகிறேன்

!!!!!
நன்றிங்கோ

pappu said...

///அந்த சமயத்தில்தான் அதுவரை நான் சென்னையில் பார்த்திராத கிடைக்காத ஒரு அரிய விஷயமான ‘சுவையான’ உணவை இரண்டு தெரு தள்ளி புளியங்குடிகாரர் ஒருவர் நடத்திக்கொண்டிருந்த ஒரு மெஸ்ஸில் கண்டுபிடித்தோம்./////

அந்த அரிய உணவு என்னவோ? கூறினால் நாங்களும் அருந்தி மகிழ்வோம்.

கடைக்குட்டி said...

சிற(ரி)ப்புப் பதிவு :-)

தமிழ்ப்பறவை said...

தாமி... சாரி... அந்தக்கால தாமிராவை நினைவு படுத்திவிட்டது பதிவு.
உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தது இப்பதிவிற்குப் பின் தான்.

அ.மு.செய்யது said...

மூன்று வேளை சரிவிகித உணவை விட சிறந்த உடற்பயிற்சி வேறொன்றில்லை

என்னே ஒரு அரிய உண்மை.

நீங்க சொன்ன இந்த தத்துவத்த உத்திரமேரூர் கல்வெட்டுல..

ஏன்னா பின்னாடி வர்ற சந்ததிகள்...

தராசு said...

வேணாம், எனக்கு கோபம் வராது.

அந்த டிஸ்கி மாத்திரம் இல்லாம் இருந்திருந்தா கண்டிப்பா ஆட்டோ அனுப்பி இருப்போம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஹஸன்.!
நன்றி காடுவெட்டி.!
நன்றி மகேஷ்.!
நன்றி அறிவிலி.!
நன்றி வெங்கி.! (இப்ப எப்படி போட்டீங்க.? சரி, அதுக்கு எதுக்கு பரிசலுக்கு மெயில்? என்ன பிரச்சினைன்னாலும் நமக்குள்ள பாத்துக்கலாம். thaamiraa@gmail.com க்கு வாங்க..)

நன்றி சின்னவர்.!
நன்றி ஆயில்யன்.!
நன்றி அத்திரி.! (கூடிய சீக்கிரம்..)

நன்றி டக்ளஸ்.!
நன்றி அமுதா.!
நன்றி வால்.!
நன்றி அப்துல்.! (ஹிஹி..)

நன்றி வித்யா.!
நன்றி மயில்.!
நன்றி சிவா.!
நன்றி சுபாஷ்.!
நன்றி பப்பு.! (ஏதும் தனிப்பட்ட வகையை நான் குறிப்பிடவில்லை. எந்த உணவாயினும் ‘சுவையான’ என்ற ஒரு விஷயம் இல்லாமலேதான் கிடைக்கிறது என்று சொல்ல வந்தேன்)

நன்றி கடைக்குட்டி.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி செய்யது.!
நன்றி தராசு.!

dharshini said...

இவ்வளவு ஐடியா இருக்கா? ட்ரை பண்ணிடவேண்டியதுதான்.
thanks anna.

Erode Nagaraj... said...

கண்ணா, நாலு எழுத்து படிச்சா...
A B C D...

நாலு வேளை சாப்பிட்டா?
O B C T...

கதிர் - ஈரோடு said...

அருமையான பதிவுங்க ஆதி

Anonymous said...

தண்டால் எடுங்க பாஸ் சிக்ஸ்பேக் வரும்

Anonymous said...

தண்டால் எடுங்க பாஸ்

ShivA said...

பாஸ் pain இருக்க தான் செயும் but neenga continuous sa palagiteenga naa onnum theriyadhu ... palagidum neraya achieve pannalam GYM la ...