Tuesday, May 5, 2009

விடுமுறைக்கால விடியோக்கள்

பொங்கல் சமயத்தில் நீண்ட விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது எடுத்த பலவிதமான விடியோக்காட்சிகளை ஒரு 5 நிமிடப் படமாக கோர்த்து வைத்திருந்தேன். திருநெல்வேலி மாவட்ட  கிராமங்களின்  துளி அழகு  இதோ உங்கள் பார்வைக்கு..

*பயப்பட வேண்டாம், இது குறும்படமல்ல..

*இது பாப்பாக்குடி எனும் எனது சொந்த ஊரில் எடுக்கப்பட்ட, சேரன்மகாதேவி மற்றும் பாபநாசம் ஆகிய ஊர்களில் எடுக்கப்பட்ட இயற்கைக்காட்சிகளின் தொகுப்பாகும்.

அலுவலகங்களில் விடியோவைப் பார்க்க இயலாதவர்களுக்கான குறிப்புகள் :

பச்சை வயல்புறங்கள், மணியோசை ஒலிக்க கழனி சென்று திரும்பும் மாடுகள், நீண்டு, அடர்ந்த மரங்கள், தாமிரபரணியின் பல்வேறு நிலைகள், எல்லைச்சாமிகள், கண்மாயில் அயிரை மீன்கள் பிடிக்கும் காட்சி, வாத்து இரைதேடும் காட்சி, குரங்கு ஒன்று என் கையிலிருந்து பொரி வாங்கிக்கொள்ளும் காட்சி, வழக்கமான கொக்கு பறக்கும் காட்சிகள்.. இவற்றோடு மாட்டுப்பொங்கல் விழாவினைக்கொண்டாடும் ஒரு கிராமத்துக்குடும்பம்.

கருத்துகளை மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்.

.

40 comments:

Truth said...

me the first

Truth said...

நான் இன்னும் வீடியோ பாக்கல. ஆனா நீங்க விளக்கினதுல இருந்து ஓரளவுக்கு யூகிக்க முடியுது. இதுக்கு back ground score போட்டீங்களா? ஆனா நான் ரோஜா படத்துல சின்ன சின்ன ஆசை பாட்டுல வர்ற starting music தானா மனசுல வந்து போச்சு.

Cable Sankar said...

வாத்து அந்தர் பல்டி அடித்து இரை தேடும் காட்சி அருமை..

அனுஜன்யா said...

நல்லா வந்திருக்கு ஆதி.

சிறுவன் இலாவகமாக கன்றுக்குட்டியை வலது பக்கம் திருப்புவது; குளத்தில் தலை முழுக்கும் வாத்து, சலசலவென ஓடும் நதி. கரையில் சாய்ந்த மரம். கோயில், குரங்கு என்று எல்லாமே அழகு. கடைசியில் ரஜினி பாணியில் முடியைக் கோதும் ஹீரோ உட்பட. Nice effort.

குறை என்றால், எனக்கு அந்த தபலா இசை அவ்வளவு நேரம் வருவது பிடிக்கவில்லை. வயல், கொக்கு, தூரத்துப் பனை என்று வரும் போதே சும்மா 'சோளம் வெளைக்கியிலே' என்கிற மாதிரி ஒரு அட்டகாச இசை வர வேண்டாமா?

அனுஜன்யா

வித்யா said...

நல்லாருக்கு ஆதி. முக்கியமாக சலசலத்து ஓடும் அந்த தண்ணீர்.

அதே மாதிரி நீங்க குரங்குக்கு பொரி குடுக்கும் காட்சிக்கு ஒரு கவிதை தோணிச்சு. சரி வேணாம் விடுங்க. பெருசுங்கள கிண்டல் பண்ணா சாமி கண்ண குத்துமாமே:)

sayrabala said...

vaazhga PC sriraam

தராசு said...

அது யாருப்பா அது, கடசியில தலைய சிலுப்பி முடிய ஒதுக்கி விட்டுட்டு, தண்ணிய ஒரு லுக் வுடுறாரே, பெரிய சூப்பர் ஸ்டார் கணக்கா இஷ்டைல் பண்ணிகினு,

சூப்பர் தல, இந்த தருணங்கள் தான் இயந்திர வாழ்க்கையில் இயந்திரம் ஆகிப் போனவர்களை மறுபடியும் மனிதர்களாக்குகிறது.

வால்பையன் said...

//பயப்பட வேண்டாம், இது குறும்படமல்ல..//

குறும்படதுகெல்லாம் பயப்பட மாட்டோம்!
கார்க்கி நடிச்சா தான் லேசா பயம் வரும்!

கார்க்கி said...

/தராசு said...
அது யாருப்பா அது, கடசியில தலைய சிலுப்பி முடிய ஒதுக்கி விட்டுட்டு, தண்ணிய ஒரு லுக் வுடுறா//

என்னக்க நீங்க? இந்த தலைமுறை டீ.ஆர உங்களுக்கு தெரியாதா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ட்ரூத்.! (படத்தைப் பார்த்துட்டு அப்புறமும் பின்னூட்டமிடுங்க)

நன்றி கேபிள்.!

நன்றி அனுஜன்யா.! (மீஜிக் டைரக்டர் சரியில்லபா, அதுக்கு நா இன்னா பண்ண முடியும்?)

நன்றி வித்யா.!

(ஒரு குரங்கே
குரங்குக்கு
பொரி
குடுக்கிறதே..
அடடே..

இதான உங்க கவிதை? நல்லாருங்க..)

நன்றி சாய்ரா.!

நன்றி தராசு.! ((சரியா சொன்னீங்க..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வால்.! (உங்களுக்கு பதில் சொல்றத விட்டுட்டு என்னை கலாய்ச்சுகிட்டு இருக்கான் பாருங்க..)

நன்றி கார்க்கி.! (வேற ஆளே கிடைக்கலியாப்பா உனக்கு?)

அமிர்தவர்ஷினி அம்மா said...

குறிப்புகளை மட்டுமே படிக்கமுடிந்தது...

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்க குறிப்பும், பின்னூட்டங்களையும் வைத்து ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

வித்யா !!! ஸ்பெசல் தேங்க்ஸ், கார்க்கிக்கும்.

வித்யா said...

ஆதி நான் எதுவும் சொல்லல. நீங்களே தான் சூனியம் வச்சிகிட்டீங்க. அப்புறம் அந்தக் கவிதை ஹி ஹி ரைட்டு:)

வால்பையன் said...

கோடை விடுமுறையில எப்படி மாட்டு பொங்கல்!

ஒன்னும் புரியலையே!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமித்து அம்மா.! ((நீங்களும் இந்த கூட்டு சதியில் உள்ளீர்களா? அவ்வ்வ்..)

நன்றி வால்பையன்.! (யோவ் வெண்ணை, அதான் பொங்கல் லீவுலன்னு முதல் வரியிலயே சொல்லிருக்கேன்ல..)

சந்தனமுல்லை said...

அப்புறமா கண்டிப்பா பார்க்கிறேன்..குறும்படம் இல்லைன்னு சொன்னதால..;-)

Rajeswari said...

அழகான இடங்கள். அருமையாய் இருந்தது

☼ வெயிலான் said...

இந்தப் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கேன்.

தருமி said...
This comment has been removed by the author.
ஆதிமூலகிருஷ்ணன் said...

mullai, raji, veyil moovarukkum nandri.!

dharshini said...

வாத்து நீந்தி மகிழ்வது அழகாக இருக்கு..
மேலும் அந்த அனையில் தண்ணீர் ஒடிகுதித்து விளையாடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. டி.ஆர் ஸ்டைலும் சூப்பர் அண்ணா.
:)

Mahesh said...

அட்டாகாசம் ஆதி....

மூவியை யூ-ட்யூப்ல எப்பிடி ஏத்தறதுன்னு ஒரு பதிவு போடுங்களேன்... எனக்கு உபயோகமா இருக்கும். நிறைய படங்கள் இருக்கு... யாரும் பாக்காம :(

அ.மு.செய்யது said...

//பச்சை வயல்புறங்கள், மணியோசை ஒலிக்க கழனி சென்று திரும்பும் மாடுகள், நீண்டு, அடர்ந்த மரங்கள், தாமிரபரணியின் பல்வேறு நிலைகள், எல்லைச்சாமிகள், கண்மாயில் அயிரை மீன்கள் பிடிக்கும் காட்சி, வாத்து இரைதேடும் காட்சி, குரங்கு ஒன்று என் கையிலிருந்து பொரி வாங்கிக்கொள்ளும் காட்சி, வழக்கமான கொக்கு பறக்கும் காட்சிகள்.. இவற்றோடு மாட்டுப்பொங்கல் விழாவினைக்கொண்டாடும் ஒரு கிராமத்துக்குடும்பம்.//

மண்வாசனை புரியுது..ஆனா எங்க அலுவலகத்தில வீடியோக்கல்லாம்

செல்லாது செல்லாது !!!!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

//பயப்பட வேண்டாம், இது குறும்படமல்ல..//

நல்லவேளை.. அப்டின்னு விடியோவை ப்ளே பண்ணா “ The video has been removed by the user" .. :(

தமிழ்ப்பறவை said...

சூப்பர் டயலாக்..
//The video has been removed by the user//
கலக்கல் ஆதி சார்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தர்ஷினி, மகேஷ், செய்யது.!

நன்றி சஞ்சய், தமிழ்பறவை.! (சின்ன டெக்னிகல் பிராப்ளம், இன்னும் அரைமணிநேரத்துல திரும்பவும் கிடைக்கும்)

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தாரணி.! (இப்போ செக் பண்ணுங்க..)

அனுஜன்யா.. கவனிக்க, அப்படியே மீஜிக்கையும் மாத்தியாச்சு.. கிளைமாக்ஸ் கிரெடிட்ஸை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..

தமிழ்ப்பறவை said...

பார்த்தேன் ரசித்தேன்.க்ளைமேக்ஸ் தான் சரியான ட்விஸ்ட்...

தாரணி பிரியா said...

சூப்பரா இருக்குங்க. அதுவும் தலைகீழா முங்கற வாத்து, மாடு ஓட்டிகிட்டு போறது எல்லாம் அருமை.

தாரணி பிரியா said...

நான் திரும்ப வீடியோ வந்துருச்சுதான் முதல் போட்ட கமெண்டை டெலிட் செஞ்சேன் :)

வசந்த் ஆதிமூலம் said...

நம்ம ஏரியா வந்து போயிருக்க.... ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா? அம்மா கையால சொதி கொழம்பு வைச்சு சாப்ட்டு போயிருக்கலாம்ல.?

மணிநரேன் said...

நன்றாக உள்ளது.மறுபடியும் கிராமத்திற்கு எப்போது செல்வோம் என்ற ஏக்கத்தை தூண்டிவிட்டது.

ச்சின்னப் பையன் said...

அருமையா இருக்குப்பா...

வாத்து, மாடு(!!) காலால் தட்றது, குரங்கு மற்றும் பறக்கும் பறவைகள் - ஜிம்ப்ளி ஜூப்பர்.

வாழ்க!

"அகநாழிகை" said...

ஆதி,
காணொளி பதிவு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு மிகவும் பிடித்த காட்சி வாத்து இரை தேடும் காட்சி... பிரமாதம். கலக்கிட்டீங்க..
வாழ்த்துக்கள்.
யூ டியூபில் படம் ஏற்றுவது பற்றி எப்படி எனத் தெரியவில்லை. யாராவது பதிவு போட்டால் கற்றுக் கொள்ளலாம். நேற்று கூட (5.5.09) கூவாகத்தில் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

அனுஜன்யா said...

ஆதி,

இது இது. இப்போ இசையின் 'மொழி' எப்படி இருக்கு? சூப்பர்மா. இசை ஆலோசகர எப்பவும் (நீ பெரிய டைரக்டர் ஆனபின்பும்) கூட வெச்சுக்கோ. பல்துறை வித்தகர் அவர். கதை, வசனம், பாடல், கவிதை (சரி சரி), இசை என்று ......

அனுஜன்யா

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தமிழ்பறவை.!
நன்றி தாரணி.!
நன்றி ஆதிமூலம்.! (நீங்களும் நம்ப பக்கமா? எந்த ஊரு? இப்ப எங்க இருக்கீங்க?)

நன்றி நரேன்.!
நன்றி குரு.!
நன்றி அகநாழிகை.! ((மகேஷும் கேட்டிருக்காரு, போட்டுறலாம் தல..)

நன்றி அனுஜன்யா.!

ராஜா | KVR said...

நல்லா இருக்கு சார். முக்கியமா மாட்டுப்பொங்கல் காட்சிகள் கொஞ்சம் எங்க கிராமத்திற்கு என்னைப் போக வைத்தது.

இனியவன் said...

அருமையா இருக்கு ஆதி,

அப்படியே மலேசியாலேர்ந்து எங்க கிராமத்துக்கு போன திருப்தி எனக்கு.

நன்றி.