Wednesday, May 6, 2009

(ரமா தோன்றும்) ‘என்ன.. எங்கே.. எப்படி.?’

இந்த ஞாயிறுக்கிழமை வெளியே எங்கும் செல்லாமல், டிவி பார்க்காமல் நாள் முழுதும் ரமாவின் இஷ்டப்படி இருப்பதாய் வாக்கு தந்திருந்தேன் (கடந்த வெள்ளிக்கிழமை மாலை நடந்த கொலைக்குத்து சண்டையில் சமாதானம் ஆகும் பொருட்டு தரப்பட்ட வாக்கு). எங்கு செல்வது, என்ன செய்வது என எதுவும் முடிவாகியிருக்கவில்லை. ஆனால் இருவரும் கிளம்பியிருந்தோம். (நீங்கள் நினைப்பது சரிதான். நான் 12 மணிக்கே ரெடியாகி ரமாவுக்காக 1.30 மணி வரை வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன் என்பதெல்லாம் மறை பொருள்ங்க.. அதையெல்லாமா ஒரு மனுஷன் எழுதிக்கொண்டிருப்பான்)

‘எந்த ஹோட்டல் போலாம்? என்ன சாப்பிடலாம் ரமாம்மா?’

‘உங்க இஷ்டம்ங்க..’

‘செட்டிநாட்? வெளச்சேரி காரைக்குடி.?’

‘இந்த ஹாட் சம்மர்ல சிக்கன், மட்டன்லாம் சரிப்பட்டுவராது..’

‘நார்த் இன்டியன்? துரைப்பாக்கம் டெல்லி தாபா?’

‘நாண், ரோட்டிலாம் எவ சாப்பிடுவா?’

‘சரி வெஜ்? அடையாறு சஞ்சீவனம்?’

‘ஐய்ய.. இப்ப யாருக்கு உடம்பு சரியில்ல, மெடிசின் சாப்பாடு சாப்பிடுறதுக்கு?’

 

‘சரி அத அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல எங்க போலாம் சொல்லு..’

‘உங்க இஷ்டம்ங்க..’

‘கிண்டி சில்ட்ரன் பார்க்?’

‘எத்தினி வாட்டி போறது அங்க.. வேற இடமே தெரியாதா உங்களுக்கு?’

‘சினிமா? சிட்டி சென்டர் இல்லன்னா, சத்யம்?’

‘சண்டே.. டிக்கெட் கிடைக்குமா? ரொம்ப கூட்டமா வேற இருக்கும்..’

‘பீச்?’

‘இந்த மதிய வெயில்ல யாரவது பீச்சுக்கு போவாங்களா? என்னங்க நீங்க.?’

 

‘சரி போற வழியில பாத்துக்கலாம். முதல்ல கிளம்புவோம். எதுல போலாம்?’

‘உங்க இஷ்டம்ங்க..’

‘பைக்?’

‘பைக்கா.. ம்ஹூம்.. முதுகு வலிக்கும்..’

‘பஸ்ல போலாமா?’

‘ஒவ்வொரு இடத்துலயும் யாரு பஸ்ஸுக்காக வெயிட் பண்றது? அதுக்கு போகாமயே இருக்கலாம்..’

‘டாக்ஸி? இல்லன்னா ஆட்டோ முருகனை கூப்பிடவா?’

‘ரொம்ப காஸ்ட்லி, வேலையிருந்தா பரவாயில்ல.. சும்மா சுத்துறதுக்கு எதுக்கு இவ்ளோ செலவு?’

 

‘இப்பவே ரொம்ப பசிக்குதுடி.. முதல்ல என்ன சாப்பிடலாம் சொல்லுடி..’

‘உங்க இஷ்டம்ங்க..’

 

பி.கு 1: ‘ஜேம்ஸ்பான்ட் தோன்றும்’.. ‘விவேக் துப்பறியும்’ இப்படி போடுற மாதிரி ‘ரமா தோன்றும்’னு தலைப்புலயே போட்டாதான் கூட்டம் வருது.. ஹிஹி.!

பி.கு 2: இது சமீபத்தில் வந்த ஒரு ஃபார்வேர்ட் மெயிலை லேஸாக தழுவி எழுதப்பட்ட ஒரு பதிவாகும். அதற்காக கற்பனை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.

.

61 comments:

கும்க்கி said...

hi..me tha 1st.

கும்க்கி said...

ennaathithu...kalangkaarththla?

Cable Sankar said...

சூப்பர்..

கும்க்கி said...

he..he..3 thdava padichitteen....kalakkal.
appuram kadeesiya engayum povaliya?

வித்யா said...

நம்பிட்டோம். ரைட்டு:)

sayrabala said...

எத்தன முறை பட்டாலும் திருந்த
மாடீங்கள பாஸ்

அறிவிலி said...

ஆக மொத்தத்துல எங்கியும் போகாம அவங்கள ஏமாத்திட்டு வீட்ல ஒக்காந்து இந்த வாரத்து பதிவுகளுக்கு மேட்டர் ரெடி பண்ணீங்க. சரியா?

Anonymous said...

ரமா வாழ்க!! நீங்க ரொம்ப பயந்த சுபாவமா?

சித்து said...

ஹா ஹா ஹா.

அனுஜன்யா said...

ஹா ஹா.

ஆனா, உன்னை நம்புவதற்கில்லை ஆதி. பதிவுக்காக உல்டா பண்ணியிருப்ப.

அனுஜன்யா

jothi said...

மனைவியின் குறிப்பறிந்து நடக்கும் பழக்கம் இல்லை போலிருக்கு,..இப்படி எல்லாத்துக்கும் "உங்க இஷ்டங்க உங்க இஷ்டங்க" என்று சொன்னால் நீங்களே சமையுங்கள் என்று அர்த்தம். இது கூட புரியாத அப்பாவியாக இருக்கீர்களே நண்பரே. நீங்கள் எழுதியதை திரும்ப ஒருமுறை படியுங்கள். எப்படிதான் இன்னும் 67 வருஷம் ஓட்டப் போகிறீரோ தெரியவில்லை. நீங்கள் நன்றாக கணக்கு போடுவீர் என தெரியும்.

கார்க்கி said...

1500 வேலை செய்யுதா சகா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கும்க்கி.! (கடைசியா அடையாறு சங்கீதா)

நன்றி கேபிள்.!
நன்றி வித்யா.!
நன்றி சாய்ரா.!
நன்றி அறிவிலி.!
நன்றி மயில்.!
நன்றி சித்து.!

நன்றி அனுஜன்யா.! (நம்ப மாட்டிங்களே)

நன்றி ஜோதி.! (ரொம்ப அனுபவம் போல தெரியுது)

நன்றி கார்க்கி.!

Truth said...

இது நீங்க எழுதினதா இல்ல அண்ணி எழுதினதா? ஆமா, அவங்க இதெல்லாம் படிக்கிறாங்களா இல்லயா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாங்க ட்ரூத்.. என்ன இதெல்லாம் ரமா படிச்சிக்கிட்டிருந்தா நா இப்படி தொப்பை சகிதமா சந்தோஷமா வாழ்க்கையை ஓட்டிக்கிடிருக்க முடியுமா? நல்லா கேக்குறாங்கையா கேள்வி..

சந்தனமுல்லை said...

:-)நல்ல கற்பனை!

டக்ளஸ்....... said...

:))))

ஸ்ரீமதி said...

நிஜமாவே ரொம்ப சூப்பர் பதிவு.. :)) "உங்க இஷ்டம்"ன்னு சொன்னா இதுகூட உனக்கு தெரியாதா?? என்னையே கேள்வி கேட்கறியேன்னு அர்த்தம்.. :)))

ஸ்ரீமதி said...

இப்போ நான் அந்த வேல தான் பண்றேன்.. ;)) "எல்லாம் உங்க இஷ்டம்"ன்னு சொன்னதும் அவர் மண்டைய பிச்சிக்கிற அழக பார்க்க கண் கோடி வேணும்.. ;)))))

ஸ்ரீமதி said...

me the 20 :):)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி முல்லை.!
நன்றி டக்ளஸ்.!
நன்றி ஸ்ரீமதி.! ("எல்லாம் உங்க இஷ்டம்"ன்னு சொன்னதும் அவர் மண்டைய பிச்சிக்கிற அழக பார்க்க கண் கோடி வேணும்.. ;) //
பிளான் பண்ணி செய்வீங்களா இதெல்லாம்?)

தமிழ்ப்பறவை said...

அப்போ அன்னைக்கு நீங்கதான் சமையல் அப்பிடின்னு சொல்லுங்க...

சரவணகுமரன் said...

:-))

மாசற்ற கொடி said...

‘ரமா தோன்றும்’ - சூப்பர்.

இந்த forward மெயில் எல்லாருக்கும் தான் வருது, ஆனா இதை இவ்வளவு அழகாக ரசிக்கும்படி மாத்தி எழுதறது தனி கலை.

அன்புடன்
மாசற்ற கொடி

தராசு said...

//நீங்கள் நினைப்பது சரிதான். நான் 12 மணிக்கே ரெடியாகி ரமாவுக்காக 1.30 மணி வரை வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன் என்பதெல்லாம் மறை பொருள்ங்க..//

நாங்க ஒண்ணும் நினைக்கல, 12 மணிக்கு ரெடியானது உங்க தப்பு.

ஸ்ரீமதி said...

//பிளான் பண்ணி செய்வீங்களா இதெல்லாம்?//

இதெல்லாம் பிளான் பண்ணி செய்யறதில்ல அண்ணா.. அதுவா வரும்.. :)))

Chill-Peer said...

யாரோ என்னை குறு குறுன்னு வாட்ச் பண்றாங்களோன்னு ஒரு டவுட்...

சும்மா... நம்பிடாதீங்க.

Thamizhmaangani said...

அண்ணி பெயருல வர ஒவ்வொரு பதிவும் கலக்கலா இருக்கு. இந்த பதிவ படிச்சு படிச்சு சிரிச்சு சிரிச்சு.. வயிறு வலிக்குது!!

அண்ணிய கேட்டதாக சொல்லவும்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப பாவம்ங்க

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணி உங்கள அடிக்க...உங்கள அண்ணி அடிக்க.... சந்தோஷமாத்தான் இருக்குறீரு..

:))))

புன்னகை said...

உங்க திருமண நாள் என்னைக்கு? வேற ஒன்னும் இல்ல, உங்களோட இந்த "ரமா ஸ்பெஷல்" பதிவுகளை எல்லாம் ஒரு புத்தகமா போட்டு அக்காக்கு குடுக்கலாம்னு தான்! :D

குசும்பன் said...

அப்படியே இதுபோல் ஆசிப் அண்ணாச்சி ஒரு பதிவு எழுதி இருந்தார் லிங் கிடைச்சதும் கொடுக்கிறேன்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குமரன்.!
நன்றி மாசற்றகொடி.!
நன்றி தராசு.!
நன்றி சில்.!
நன்றி மாங்கனி.!
நன்றி அமித்து.! (யாரு?)
நன்றி அப்துல்லா.!

நன்றி புன்னகை.! (சொல்றேன், சொன்னா சிரிக்கக்கூடாது.. நவம்பர் 14)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.! (கண்டிப்பா கொடுங்க)

குசும்பன் said...

http://asifmeeran.blogspot.com/2007/09/blog-post_18.html

//‘ரமா தோன்றும்’னு தலைப்புலயே போட்டாதான் கூட்டம் //

ஏன்னா ரமா உங்களை வறுத்து எடுத்து இருப்பாங்க:) மத்தவங்க அடிவாங்குறதபார்த்து சிரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான்:)))

அப்புறம் உங்களை பத்தி அண்ணாச்சி ஒரு விசயம் சொன்னாரே!!!!

jothi said...

இதில் என்ன அனுபவம் வேண்டிக்கிடக்கு??. sunday காலைல அவுங்களுக்கு டீ போட்டு கொடுத்துடுங்க. கொஞ்ச நேரம் கழித்து மதியம் என்னன்னு கேப்பாங்க, உன் கைய்னால ஒரு பிரியாணின்னு சொல்லிட்டு தூங்கிடுங்க, மதியம் கம கம்க்கும் ப்ரியாணி ரெடி,..இதெல்லாம் ஒரு problemமா,..

jothi said...

November 14ன்னு சொல்லிட்டு சிரிக்காதிங்கன்ன எப்படி? எல்லோரும் சிரித்துதான் இருப்பார்கள்.

நர்சிம் said...

உங்க இஷ்டம்போல எழுதியிருக்கீங்க கலக்கலா.

புதுகைத் தென்றல் said...

நம்பிட்டோம். ரைட்டு:)//

ரிப்பீட்டு......

அ.மு.செய்யது said...

நேற்று தான் முழுமையாக‌ உங்க‌ள் எச்ச‌ரிக்கை ப‌திவுக‌ளை ப‌டித்து முடித்தேன்.

அந்த‌ அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்னே ம‌றுப‌டியும் ஒரு ப‌திவா ?

அ.மு.செய்யது said...

துரைப்பாக்கம் டெல்லி தாபா அவ்வளவு நல்லாவாங்க இருக்குது ??

அதை விட துரைப்பாக்கத்துல சச்சின் கா தாபானு, டெல்லி தாபாலர்ந்து ஒரு கி.மீர்ல..ட்ரை பண்ணி பாருங்க...

ஆயில்யன் said...

//அண்ணி பெயருல வர ஒவ்வொரு பதிவும் கலக்கலா இருக்கு. இந்த பதிவ படிச்சு படிச்சு சிரிச்சு சிரிச்சு.. வயிறு வலிக்குது!!///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்! :)

மணிநரேன் said...

//‘உங்க இஷ்டம்ங்க..’//

ரொம்ப ஆபத்தான வார்த்தைகளாக இருக்கும் போல இருக்கே......

MayVee said...

"‘ஜேம்ஸ்பான்ட் தோன்றும்’.. ‘விவேக் துப்பறியும்’ இப்படி போடுற மாதிரி ‘ரமா தோன்றும்’னு தலைப்புலயே போட்டாதான் கூட்டம் வருது.. ஹிஹி.!"


yen intha kola veri

அன்புடன் அருணா said...

பின்னுறீங்க ஆதி!!!
அன்புடன் அருணா

ச்சின்னப் பையன் said...

hahaha

:-)))))))))))))))))))))

VIKNESHWARAN said...

நெம்ப கஷ்டப்படுறிங்க போல...

அத்திரி said...

அண்ணியை கிண்டல் அடித்து பதிவை ஹிட் ஆக்கும் அண்ணா........... உங்கள் முதுகு அண்ணியிடம் அடி வாங்காமல் ஜாக்கிரதையாக இருக்கட்டும்

அத்திரி said...

//தமிழ்ப்பறவை said...
அப்போ அன்னைக்கு நீங்கதான் சமையல் அப்பிடின்னு சொல்லுங்க...//


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.

அத்திரி said...

50 போட்டாச்சி

தாரணி பிரியா said...

எல்லாம் உங்க இஷ்டமுன்னு எத்தனை பணிவா சொல்லி இருக்காங்க.

ரமா பாவம் ஆதி :)

தாரணி பிரியா said...

அப்புறம் அவங்களையும் பதிவு எழுத சொல்லுங்களே. அவங்க இங்க கத்து குடுக்க வேண்டியது நிறைய இருக்கு :)

Anonymous said...

//அதற்காக கற்பனை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்//

Typical Aathi touch!!!

Saravana Kumar MSK said...

//உங்க இஷ்டம்ங்க.//

இந்த வார்த்தை இவ்வளவு பயங்கரமானதா.. :(

பட்டாம்பூச்சி said...

//‘ஜேம்ஸ்பான்ட் தோன்றும்’.. ‘விவேக் துப்பறியும்’ இப்படி போடுற மாதிரி ‘ரமா தோன்றும்’னு தலைப்புலயே போட்டாதான் கூட்டம் வருது//

இத பாத்துட்டுதான் நான் வந்தேன்னு இந்த லக்குல சொல்லிக்க விரும்பறேன் ;-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.! (அண்ணாச்சியும் மெயிலில் இன்ஸ்பைர் ஆகியிருப்பாரா அல்லது அண்ணாச்சியிடமிருந்து சுடப்பட்டு என்னை வந்து சேர ரெண்டு வருஷமாயிடுச்சா?)

நன்றி ஜோதி.! (தூங்கியெழுந்தா பிரியாணி கிடைக்குமா? அடடே..)

நன்றி நர்சிம்.!
நன்றி தென்றல்.!

நன்றி செய்யது.! (சச்சின் கா தாபாவா? அதெங்கருக்குது? அந்தப்பக்கமா? இந்தப்பக்கமா?)

நன்றி ஆயில்.!
நன்றி நரேன்.!
நன்றி மேவீ.!
நன்றி அருணா.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி விக்கி.!
நன்றி அத்திரி.!
நன்றி தாரணி.!
நன்றி சதானந்த்.!
நன்றி சரவணா.!
நன்றி பட்டாம்பூச்சி.!

வால்பையன் said...

‘உங்க இஷ்டம்ங்க..’ என்றால் என்னதாங்க அர்த்தம்!

மங்களூர் சிவா said...

/
பி.கு 2: இது சமீபத்தில் வந்த ஒரு ஃபார்வேர்ட் மெயிலை லேஸாக தழுவி எழுதப்பட்ட ஒரு பதிவாகும். அதற்காக கற்பனை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.
/

avvvvvvvvvvvvvvv

மங்களூர் சிவா said...

/
எம்.எம்.அப்துல்லா said...

அண்ணி உங்கள அடிக்க...உங்கள அண்ணி அடிக்க.... சந்தோஷமாத்தான் இருக்குறீரு..

:))))
/

:))))))))
கலக்கறீங்க போங்க!!

jothi said...

mathi said,..
// "எல்லாம் உங்க இஷ்டம்"ன்னு சொன்னதும் அவர் மண்டைய பிச்சிக்கிற அழக பார்க்க கண் கோடி வேணும்.. ;))))) //


இப்ப தெரியுதா கல்யாணத்துக்கு பின்னால ஏன் ஆம்பளைக்கு எல்லாம் வழுக்கை விழுதுனு????

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஹாஹாஹா.. :))

பின்றிங்க போங்க.. :)