Thursday, May 14, 2009

தக்காளி ரசம் செய்வது எப்படி?

அடடா.. நம்புங்க, இது நெசமாகவே சமையல் குறிப்புதான். ஏற்கனவே ‘தேன்குழம்பு’ என்ற சமையல் குறிப்புக்கு நீங்க தந்த வரவேற்பு நினைவிருக்கலாம்.

ஆண்கள் விடுதலைக்காக பல்வேறு விதமாக நாம் போராடி வரும் இவ்வேளையில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அவர்களின் பல்வேறு விதமான தாக்குதல்களில் இருந்தும் நம் சிந்தனை மற்றும் தைரியம் இவற்றின் துணைகொண்டு திறம்பட தப்பி வந்தாலும் சமையல் என்ற பிரம்மாஸ்திரம் அவர்கள் கையில் இருப்பதால் நாம் சோர்ந்துவிடக்கூடாது. எப்படியாகிலும் அதையும் நாம் பெற்றாகவேண்டும். முதலில் ‘தேன்குழம்பு’ போன்ற சிறப்புக்குறிப்புகள் மட்டுமே வழங்கத் திட்டமிட்டிருந்தாலும் சங்க உறுப்பினர்கள் மேற்குறித்த காரணங்களைக் காட்டி சில அடிப்படைச் சமையல் குறிப்புகளையும் தந்தாக வேண்டிய சூழல் இருப்பதைத் தலைமைக்கு உணர்த்தினார்கள். திருமணமாகாதவர்கள் மட்டுமின்றி இரக்கமின்றி தங்கமணிகளால் தனித்துவிடப்பட்டு திருமணமாகியும் பிரம்மச்சாரியாக இருக்கும் வாசகர்களை மனதில் கொண்டு இந்தக்காரணத்துக்காகவே அவர்கள் மீண்டும் தங்கமணிகளிடம் சரண்டர் ஆகிவிடுவதைத் தடுக்கவே இந்தச்சேவை. ஆகவே.. இனி இது தொடரலாம்.

இந்த தக்காளி ரசம் மட்டுமின்றி எல்லாவிதமான சமையலிலுமே நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை ஒன்றுண்டு. அது பொருட்களை வாங்கி வருவதோ, சமைப்பதோ இல்லை. அது சமைத்தலுக்குப்பின்னர் பாத்திரங்களை ஒழுக்கமாக கழுவிவைப்பது மட்டுமே. இந்தப் பகுதி மட்டுமே மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். இதில் மட்டும் நாம் வெற்றிபெற்றுவிட்டால் எந்தப்பெண்ணுமே நம்மிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடப்பார்கள் என்பது நிச்சயம். நாம் திரும்பக்கூப்பிடுவது சந்தேகத்துக்குரியதாகும் பட்சத்தில் ‘அம்மா வீட்டிற்கு’ என்ற ஆயுதத்தை பிரயோகிக்கும் வாய்ப்பே இல்லாது போய்விடுவதை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும்.

இடுபொருட்களை செய்முறைகளிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள். நேரே ரசத்துக்குப் போய்விடலாம்.

செய்முறை :

ஒரு பங்கு மிளகு, அதே அளவு சீரகம், இரண்டு பங்கு பூண்டுப்பற்கள், இரண்டு பங்கு கொத்தமல்லி விதைகள் (தனியா) இவற்றை ஒரே ஒரு சிறிய காய்ந்த மிளகாயுடன் சேர்த்து மிக்ஸியில் இட்டு மையாக இல்லாமல் கொஞ்சம் அரைகுறையாக அரைத்துக் கொள்ளுங்கள். முன்னதாக பத்து நிமிடங்களுக்கு முன்னரே ஊற வைத்திருந்த புளியை ஒரு கப் தேறுமளவுக்கு கரைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கரைசல் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். தனியே வைத்துக்கொள்ளுங்கள், பின்னர் சர்க்கரை சேர்த்துப் பானகமாக அருந்தலாம். மேலும் இரண்டு பழுத்த தக்காளிகளை வெந்நீரில் போட்டு அதன் தோலை நைஸாக உரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது வாணலியை சுடவைத்து சிறிது எண்ணைவிட்டு காய்ந்தபின் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலையைப் போட்டு தாளிதத்துடன் ஆரம்பித்துவிடுங்கள். இப்போது தீயை சிறிது குறைத்துக்கொண்டு மிளகு அரைசலை போடு வதக்குங்கள். ஜாக்கிரதை இந்தக்காரியங்கள் அனைத்துமே கவனமாக வேகமாக நிகழ வேண்டும். இப்போது உரித்து வைத்த தக்காளிகளை நறுக்கிவிடாமல் கையினாலேயே நசுக்கி வாணலியில் போடுங்கள். உடன் புளிக்கரைசலையும் டப்பென ஊற்றுங்கள். ‘சுரீரென’ புகையுடன் சத்தமெழும்பும். பயம் வேண்டாம். தீயை மிதப்படுத்திவிட்டு சரியான அளவு உப்பையும், காயத்தூளையும், மிக மிக குறைவாக போட்டோம் என்ற பெயருக்கு சிறிது மஞ்சள் தூளையும் போட்டு கலக்கி விடுங்கள். இப்போது சிறிது கொத்தமல்லி இதழ்களை தூவிடுங்கள். காரியமெல்லாம் முடிந்துவிட்டது, இப்போது அடுப்பையே கவனமாக பார்த்துக்கொண்டிருங்கள். ஒரே கொதிதான். கொதி வந்தவுடன் உடனே வாணலியை இறக்கிவைத்து சரியான அளவு தட்டை வைத்து இறுக்கமாக மூடிவைத்து விடுங்கள். சரியாக 5 நிமிடங்கள்தான்..

இனி இரண்டு அப்பளங்களையும், கொஞ்சம் தேங்காய் துகையலையும் வைத்துக்கொண்டு, சாதமிட்டுக்கொண்டு சாப்பிட வேண்டியதுதான் பாக்கி. முன்னதாக ரசத்தில் உப்பெல்லாம் சரி பார்க்க வேண்டாம். அப்படி பார்க்க நேர்ந்தால் சாப்பிடும் முன்னமே இருக்கும் ரசத்தையெல்லாம் நீங்களே உறிஞ்சிக்குடித்துவிட்டு முகம் வேர்க்க சர்வ நிம்மதியாக ஃபேன்க்கு அடியில் போய் உட்கார்ந்து கொள்வீர்கள். அப்புறம் சிறிது நேரத்தில் பசியெடுக்கக்கூடும்.

.

51 comments:

கார்க்கி said...

ஸப்பா... முடியல... டப்பாக்ஞ்சி செய்வது எப்படி? பேட்டரி தண்ணி காய்ச்சுவது எப்படி? டக்கீல்லாவை எப்படி அடிப்பதுன்னு பதிவு போட்டா பரவாயில்லை..

Anonymous said...

அப்பளம் , தேங்காய் துகையல் எப்படி செய்வதுன்னு போட்டா நல்லா இருக்கும்.

Mahesh said...

முதல்ல எல்லாருக்கும் வெந்நீர் போடுவது எப்படின்னு பாடம் எடுங்க.... தக்காளி ரசமெல்லாம் எங்ங்ங்ங்ங்ங்ன்கியோ தூரத்துல இருக்கு :)

Anonymous said...

//சுரீரென’ புகையுடன் சத்தமெழும்பும். //
சுரீரென சத்தம்தான் வரும். சத்தத்துடன் தான் புகையெழும்பும். :)

jothi said...

// இதில் மட்டும் நாம் வெற்றிபெற்றுவிட்டால் எந்தப்பெண்ணுமே நம்மிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடப்பார்கள் என்பது நிச்சயம். //

தக்காளி ரசம் மட்டும் போதுமா?

நீங்கள் சொன்ன தக்காளி ரசம் எப்படி இருக்கும் என தெரியவில்லை, ஆனால் நீங்கள் எழுதியது மட்டும் சுவையாக உள்ளது.

ஸ்ரீமதி said...

ம்ம்ம்ம் நல்ல உபயோகமான பதிவு.. :)) யாருக்கா?? சொல்லமாட்டேனே.. ;)))

ஸ்ரீமதி said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

ம்ம்ம் நல்லா வந்திருக்குது ரசம்!!!
அன்புடன் அருணா

வித்யா said...

\\இனி இரண்டு அப்பளங்களையும், கொஞ்சம் தேங்காய் துகையலையும் வைத்துக்கொண்டு, சாதமிட்டுக்கொண்டு\\

சொர்க்கம்:)

கார்க்கி said...

/ம்ம்ம்ம் நல்ல உபயோகமான பதிவு.. :)) யாருக்கா?? சொல்லமாட்டேனே../

கிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிக்கிகிகிகிகிகிகிகிக்கீக்கிகிகிகீக்கிகிகிகி

நர்சிம் said...

ஈகோ பாக்காம சமைக்கிறீங்க போல.. குட்!

Kathir said...

// ஸப்பா... முடியல... டப்பாக்ஞ்சி செய்வது எப்படி? பேட்டரி தண்ணி காய்ச்சுவது எப்படி? டக்கீல்லாவை எப்படி அடிப்பதுன்னு பதிவு போட்டா பரவாயில்லை..//

ட்ட்ரம்ம்ம்பி,
ஒரு தொலைநோக்குப் பார்வையோட பார்த்தா நமக்கு வருங்காலத்துல தக்காளி ரசம் தான் யூஸ் ஆகும்.
அண்ணன் எது சொன்னாலும் நம்ம நல்லதுக்குதான் சொல்லுவாரு...

//ம்ம்ம்ம் நல்ல உபயோகமான பதிவு.. //

இது மாதிரி க்ளூவெல்லாம் புரிஞ்சுகிட்டு நாம கொஞ்சம் விவரமா இதெல்லாம் இப்பவே கத்துக்கிட்டா பின்னாடி சாப்பாட்டுக்கு கஷ்டப்படாம இருக்கலாம்.....


;))

குசும்பன் said...

//சின்ன அம்மிணி said...
அப்பளம் //

அதுக்கு ஜென்டில் மேன் படத்தில் கவுண்டமணிதான் வந்து சொல்லிக்கொடுக்கனும்!

"அகநாழிகை" said...

ஆதி,
உண்மையிலேயே அவசியமான பதிவுதான். கோடை விடுமூறை தினங்களில் மனைவி ஊருக்கு சென்றுவிட்டால் உதவும். எனக்கும் விடுமுறை நாட்களில் சமைக்கும் பழக்கம் உண்டு. சமையல் என்பது உணவு செய்வது மட்டுமே இல்லை. அன்பும் சேர்த்து பரிமாறப்படுவதுதான் உண்மையான உணவு. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதியிருக்கும்
‘ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது‘ என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா ?

SK said...

ஆதி ..

எப்படி இப்படி எல்லாம் :)

juper :)

ச்சின்னப் பையன் said...

ம்ம்ம் நல்லா வந்திருக்குது ரசம்!!!

அப்பாவி முரு said...

அண்ணன் பாணியில பெப்பர் கிராப் செய்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டிட வேண்டியது தான்.

(எலெக்சன் முடிஞ்சி போச்சு, நாட்டை பார்த்தது போதும் இனி வீட்டையும், உடம்பையும் ஒழுங்க பாத்துக்கனும்)

Truth said...

உங்க வீட்டு விலாசம் தர்றீங்களா? :-)

சந்தனமுல்லை said...

:-) சமையல் குறிப்பு போடும்போது, செய்முறையோட, படமும் போடுவாங்களே!!

☼ வெயிலான் said...

இதெல்லாம் யார்ட்ட கேட்டு எழுதினீங்க? ;)

பார்சா குமார‌ன் said...

இதெல்லாம் யார்ட்ட கேட்டு எழுதினீங்க? ;)

repeattuuuuu

நெல்லைத்தமிழ் said...

திருமணமாகாதவர்கள் மட்டுமின்றி இரக்கமின்றி தங்கமணிகளால் தனித்துவிடப்பட்டு திருமணமாகியும் பிரம்மச்சாரியாக இருக்கும் வாசகர்களை மனதில் கொண்டு இந்தக்காரணத்துக்காகவே அவர்கள் மீண்டும் தங்கமணிகளிடம் சரண்டர் ஆகிவிடுவதைத் தடுக்கவே இந்தச்சேவை.
அதிருக்கட்டும், அண்ணாச்சிக்கு ரசம் வைக்க தெரியுமா

ராஜ நடராஜன் said...

செய்முறையை வீட்டுக்கு எடுத்துட்டுப்போக அனுமதி உண்டா?

ராஜ நடராஜன் said...

//உடன் புளிக்கரைசலையும் டப்பென ஊற்றுங்கள். ‘சுரீரென’ புகையுடன் சத்தமெழும்பும். பயம் வேண்டாம்//

சிரித்தேன்.

வால்பையன் said...

அதான் எனக்கு தெரியுமே!


சும்மா சொன்னேன்!
உண்மையிலேயே எனக்கு பயனுள்ள பதிவு!

புதுகைத் தென்றல் said...

அது சமைத்தலுக்குப்பின்னர் பாத்திரங்களை ஒழுக்கமாக கழுவிவைப்பது மட்டுமே. இந்தப் பகுதி மட்டுமே மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். இதில் மட்டும் நாம் வெற்றிபெற்றுவிட்டால் எந்தப்பெண்ணுமே நம்மிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கிக் கிடப்பார்கள் என்பது நிச்சயம். நாம் திரும்பக்கூப்பிடுவது சந்தேகத்துக்குரியதாகும் பட்சத்தில் ‘அம்மா வீட்டிற்கு’ என்ற ஆயுதத்தை பிரயோகிக்கும் வாய்ப்பே இல்லாது போய்விடுவதை நீங்கள் இங்கே கவனிக்க வேண்டும்.//

ஹஸ்பண்டாலஜி பேராசிரியையாக இந்த வாக்கியங்களை வன்மையுடன் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

:)))))))))

புதுகைத் தென்றல் said...

சமையல் குறிப்பு போடும்போது, செய்முறையோட, படமும் போடுவாங்களே!!//

சமையல் குறிப்பா போட்டாரு. தக்காளி ரசம்ங்ற பேர்ல தங்கமணிகளுக்கு எதிரான பதிவுல்ல போட்டிருக்காரு.

(வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி சொல்லாமல் சொல்வது ஆதி டச்)

புதுகைத் தென்றல் said...

http://nellaitamil.com/upcoming.php

இதுல பாருங்க. உங்க பதிவு டாப்ல இருக்கு

அத்திரி said...

//ஆண்கள் விடுதலைக்காக பல்வேறு விதமாக நாம் போராடி வரும் இவ்வேளையில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.//

சங்கத்து தலைவரே வருக

அத்திரி said...

//கார்க்கி said...
ஸப்பா... முடியல... டப்பாக்ஞ்சி செய்வது எப்படி? பேட்டரி தண்ணி காய்ச்சுவது எப்படி? டக்கீல்லாவை எப்படி அடிப்பதுன்னு பதிவு போட்டா பரவாயில்லை..//


டேய் சகா இந்த மெனு உனக்குத்தான் ... பிற்காலத்துக்கு ரொம்ப உதவும்

Anonymous said...

ஐயே!! இதுக்கு பேரு ரசமா?? அப்ப நெஜ ரசத்தை என்னனு சொல்றது..( நெஜமாவே கத்துகிட்டு செஞ்சுடுவங்கனு ஒரு பயம் தான்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கார்க்கி.! (அதெல்லாம் எழுத நீதான் சரியான ஆளு..)

நன்றி அம்மிணி.! (அப்பளம் சுடுவதற்கு செய்முறையா.. வெளங்கிடும்)

நன்றி மகேஷ்.! (யோவ் பொய் சொல்லாதீரும், நீரு சமையல்ல எக்ஸ்பர்ட்டுனு கேள்விப்பட்டேன்..)

நன்றி ஜோதி.!

நன்றி ஸ்ரீமதி.! (இப்பதான் ரசமே வர்றீங்களா..)

நன்றி அருணா.!

நன்றி வித்யா.! (அதான் பார்த்தாவே தெரியுதே..)

நன்றி நர்சிம்.! (நாம என்ன பண்றோமாம்.. வீட்ல.?)

நன்றி கதிர்.! (இது நல்ல புள்ளைக்கு அழகு)

நன்றி வாசுதேவன்.! (இல்ல தல.. படிக்கணும்..)

நன்றி SK.!

நன்றி ச்சின்னவர்.!

நன்றி முரு.! (நாட்டை பார்த்தது போதும் இனி வீட்டையும், உடம்பையும் ஒழுங்க பாத்துக்கனும்// அது.!)

நன்றி ட்ரூத்.! (எதுக்கு.?)

நன்றி முல்லை.! (மிஸ் பண்ணீட்டனே..)

நன்றி வெயிலான்.! (இப்பிடிலாம் கேட்டா உண்மையை சொல்லிடுவேன்..)

நன்றி குமாரன்.!
நன்றி நெல்லை.!

நன்றி நடராஜன்.! (என்ன கேள்வி? தாராளமா எடுத்துக்கலாம்)

நன்றி வால்.!

நன்றி தென்றல்.! (நீங்க யாரு? கரெக்டா பாயிண்டைப்புடிச்சீங்க..)

நன்றி மாதவ்ராஜ்.! (வர்றீங்களா நம்ப கடைக்கும்?)

நன்றி அத்திரி.! (அப்ப்டித்தான் நல்லா உறைக்கிற மாதிரி சொல்லுங்க...)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மயில்.. (நீங்க நல்லா சமைப்பீங்கன்னு தகவல் வந்ததே.!)

மங்களூர் சிவா said...

Excellent !!

வாழ்க உம் துண்டு ச்ச தொண்டு!!

தாரணி பிரியா said...

சாதம் எப்படி வைக்கிறதுன்னு போடலை. :)

ரசம் நிஜமாவே நல்லா இருக்கும் போல. ரமா கிட்ட சொல்லி இனி தினமும் உங்களையே சமைக்க சொல்லிட வேண்டியதுதான்

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...
:-) சமையல் குறிப்பு போடும்போது, செய்முறையோட, படமும் போடுவாங்களே!!
//

ஆமாம் ஆச்சி சொல்ற மாதிரி படமும் போடுங்க!


லேட்டஸ்ட் நடிகைகள் படமா போடுங்க பாஸ் உங்க காலத்து படமெல்லாம் வேண்டாம் ஒ.கேய்ய்ய் :))

ஆயில்யன் said...

//ஸ்ரீமதி said...
ம்ம்ம்ம் நல்ல உபயோகமான பதிவு.. :)) யாருக்கா?? சொல்லமாட்டேனே.. ;)))//

ஆமாம் தங்கச்சி நீ இத மட்டும்மில்ல உப்புமா கிண்டற மாதிரி எந்த டெக்னிக்குமே யாருக்குமே சொல்லாத அதெல்லாம் மனசுக்குள்ளவே இருக்கட்ட்டும் ! :)

ஆயில்யன் said...

//Mahesh said...
முதல்ல எல்லாருக்கும் வெந்நீர் போடுவது எப்படின்னு பாடம் எடுங்க.... தக்காளி ரசமெல்லாம் எங்ங்ங்ங்ங்ங்ன்கியோ தூரத்துல இருக்கு :)
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

அது எங்கியோ தூத்துக்குடி பக்கமோ ஈரோடு பக்கமோல்ல நிக்கிது :))

ஆயில்யன் said...

/வித்யா said...
\\இனி இரண்டு அப்பளங்களையும், கொஞ்சம் தேங்காய் துகையலையும் வைத்துக்கொண்டு, சாதமிட்டுக்கொண்டு\\

சொர்க்கம்:)
///

ஆமாம் பட் இரண்டு அப்பளம் ஒரு ரவுண்டுக்குத்தான் செகண்ட் ரவுண்டுக்கு இன்னும் ரெண்டு அப்பளம் வேணும் அப்பறம் பினிஷிங்க் ஸ்டேஜ்ல நொறுக்கி போட்டு ரசத்தோட வழிச்சு திங்க ஒண்ணு

அப்பத்தான் அது எனக்கு சொர்க்கம் :))

ஆயில்யன் said...

மீ த நாப்பது !:)

வீணாபோனவன் said...

இது தக்காளி ரசமா இல்லை தக்காளி விஷமா?

-வீணாபோனவன்.

pappu said...

இது தக்காளி ரசமா இல்லை தக்காளி விஷமா?
///////////////
வெளியூரில போய் தனியா தங்கப் போகிற என்ன மாதிரி இளைஞர்களுக்கு கண்டிப்பா யூஸ் ஆவும்.

////ஸப்பா... முடியல... டப்பாக்ஞ்சி செய்வது எப்படி? பேட்டரி தண்ணி காய்ச்சுவது எப்படி? டக்கீல்லாவை எப்படி அடிப்பதுன்னு பதிவு போட்டா பரவாயில்லை../////////

இது கூட ந்ல்லாதான இருக்கு ட்ரை பண்ணீ பாக்கலாமே?

Muthukumar said...

ரசத்துல உளுத்தம்பருப்பா ? எந்த ஊருபா நீங்க ?

இப்போதான் ரசத்துக்கே வந்துருக்கீங்களா ? சரிதான்.

Anonymous said...

ஏதோ ஒரு அளவுக்கு.. கோயமுத்தூர் வந்த சொல்லுங்க.. ஒரு பரிசோதனை பண்ணிடுவோம்...

பரிசல்காரன் said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனி இரண்டு அப்பளங்களையும், கொஞ்சம் தேங்காய் துகையலையும் வைத்துக்கொண்டு, சாதமிட்டுக்கொண்டு சாப்பிட வேண்டியதுதான் பாக்கி.

=இதெல்லாம் செஞ்சதாருன்னு சொல்லவேயில்லய பதிவுல......

BEST FUNDS ARUN said...

உமது குறிப்பில் பிழை உள்ளது
தக்காளி
நாட்டு thakkalaiya? அல்லது பெங்கலோறு தக்காளியா?

நம்ம ஊரு பக்கம் கிடைக்கும் நாட்டு தக்காளி என்றல் புளி மிக குறைவாக ச்செர்க்க வேண்டும். அப்புறம் அந்த புளி கரிப்பது அரிசி கலைந்த நீர் endraal ரசம் அருமையைஇ இருக்கும்


ஆமா
இப்படி ரசம் செய்யும்போது புளிப்பு அதிமாகி விட்டால் சிறுது சீனி சேர்த்து அதை பெங்களூர் ரசம் ஆகணும்?

இதையும் சேர்த்து எழுதனும்.

பாவம் உங்க தங்கமணி.
ரசமா சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துபோய் இருக்கும்>( உங்க வேட்டிலா மதுரை ஆட்சி தான)

செல்வேந்திரன் said...

ப்ச்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மங்களூர்.! (நீங்க அப்படியே ஒரு பக்கத்துல அனுபவங்களை கொஞ்சம் எடுத்துவுட ஆரம்பிக்கறதுதானே..)

நன்றி தாரணி.! (சாதம் வைக்கிறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்ங்க.. உங்களுக்கு.!)

நன்றி ஆயில்யன்.! (பாஸ் உங்க காலத்து படமெல்லாம் வேண்டாம்// உங்களுக்கு அனுஜன்யாவைவிட நாலு வயசு அதிகம்னு யாரோ சொன்னாங்களே..)

நன்றி வீணா.! (இப்ப ஏன் இந்த கொலவெறி சந்தேகம்?)

நன்றி பப்பு.! (அதுக்குதான் கார்க்கி இருக்கானே?)

நன்றி முத்துகுமார்.! (தாளிதத்திற்கு கடுகு போடுகையில் அதனுடன் மிகச்சிறிய அளவில் (5%) உளுத்தம்பருப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனக்குத் தெரிந்து தமிழகமெங்கும் இந்தப்பழக்கம் இருக்கிறது. இல்லாவிட்டாலும் கூட இது நெல்லை மாவட்ட சமையலில் உள்ள முக்கிய விசயமாகும். ஆமா நீங்க எந்த ஊறுன்னு சொல்லவேயில்லையே..)

நன்றி மயில்.!

நன்றி பரிசல்.!

நன்றி அமித்து.! (இதெல்லாம் செஞ்சதாருன்னு சொல்லவேயில்லய பதிவுல..// ஆங்.. பக்கத்து ஊட்ல செஞ்சு தருவாங்க..)

நன்றி அருண்.! (நீங்க சொல்றதையும் நெனப்புல வெச்சுக்கிறேன். மதுரைன்னு சொல்ல வேர செய்யணுமா?)

நன்றி செல்வா.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நானே 50.!

Unknown said...

நெஜமாவே நல்லா இருக்குமா ?