Friday, May 15, 2009

மையில்லாத கண்கள்


அம்மா கூட இல்லாத
ஒரு மதிய நேரத்தில்
உன்னை வீட்டிற்கு அழைத்து வருகிறேன்
பயம் தெரிந்தது உன் கண்களில்
இங்கே விட்டுச்செல்ல
உன் கூந்தலில் எந்த மலர்களும் இல்லை
சிதறி விழ உன் கரங்களில் கண்ணாடி வளைகளும் இல்லை
நீங்கிச்சென்ற பின்னும் ஒலிக்கும் கொலுசுகளுக்கும்
உனக்கும் சம்பந்தமில்லை
சுவர்களில் தடயமிட்டுச்செல்ல உன் கண்களும்
மை தாங்கியிருக்கவில்லை
விரித்த கூந்தல்
குங்குமம் பாராத நெற்றி
இறுக்கும் ஜீன்ஸ் என மாடர்ன் காதலி நீ...
மறக்காமல்
என் கன்னங்கள் கொண்ட
லிப்ஸ்டிக் கறைகளையும் கூட அழித்துவிட்டேன்
அப்படியும் மாலையில்
வீடு திரும்பிய அம்மா கேட்டாள்
என்னடா மல்லிகை வாசம் வருது...


52 comments:

Cable Sankar said...

பெண் வாசம்..

ஆ.முத்துராமலிங்கம் said...

வந்தது மீராஜாஸ்மினா!! (ஹி..ஹி.. சும்மா)

கவிதை அழகு. ரசித்துப் படித்தேன்.

கார்க்கி said...

:).. ஒரு மாதிரியாத்தான் இருக்கிங்க

வித்யா said...

ரமா கூடவா வீட்ல இல்ல:)

நல்லாருந்தது கவிதை(அதானே??)

வால்பையன் said...

ஜாஸ்மின் செண்ட் அடிச்சிருப்பாங்க!

அதையும் கவனிக்கனும் தலைவா!

(அடிக்கடி மாட்டிக்கிவிங்களோ)

வெங்கிராஜா said...

ஹிஹி... கெத்து!

Raj said...

உங்க அம்மாவும் இப்படித்தானா...எங்க அம்மாவுக்கு நான் சின்ன வயசுல வச்ச பேரு CID. நான் சின்னதா ஒரு தப்பு செஞ்சாலும் கண்டு பிடிச்சிடுவாங்க.

அனுஜன்யா said...

ஜாஸ்மின் சென்ட்டு தான். (வால் முன்னாடியே சொல்லிட்டார்). அப்ப எதுக்கும் இருக்கட்டும்னு மூணு முழம் மல்லிப்பூ வாங்கி பூஜையறையில் வைக்கணும். செய்வன திருந்தச் செய்னு ...யாரோ சொல்லியிருக்காங்கல்ல :)

அனுஜன்யா

"அகநாழிகை" said...

ஆதி,
கவிதையிலிருந்த
பழமைத்தனத்தையும் புதுமையையும்
ரசித்தேன். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
(இனிமேலாவது மாட்டிக்கொள்ளாமல்
தப்பு பண்ணி அதை கவிதையாக எழுதுங்கள்)

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு.முயன்றால் இன்னும்
கூட கவித்துவம் கொண்டு வரலாம்.

//இறுக்கும் ஜீன்ஸ் என மாடர்ன் காதலி நீ...//

ஒரு வேளை ஜீன்ஸ் போட்ட ஹைடெக் பூக்காரியாக இருக்குமோ?

செல்வேந்திரன் said...

இந்தப் பூனையும் பால் குடிக்குமா?!

தமிழன்-கறுப்பி... said...

ஒரு மார்க்கமாதான்யா இருக்காஙய்ங்க.. :)

ஸ்ரீமதி said...

நல்லா இருக்கு அண்ணா :)))

// கே.ரவிஷங்கர் said...
//இறுக்கும் ஜீன்ஸ் என மாடர்ன் காதலி நீ...//

ஒரு வேளை ஜீன்ஸ் போட்ட ஹைடெக் பூக்காரியாக இருக்குமோ?//

:)))))))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks Cable.! (U r correct)
Thanks Muthuram.!
Thanks Karki.!
Thanks Vidhya.! (It's my experience with Rama before marriage.)
Thanks Vaal.!
Thanks Venki.!
Thanks Raj.!
Thanks Anujan.! (Anubavamaa?)
Thanks Vasu.! (I'll try..)
Thanks Ravishankar.! (hihi..)
Thanks Selva.! (U like it?)
Thanks Tamilan.!
Thanks Sri.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks Vidhya.! (It's my experience with Rama before marriage.)
//

என்னாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.. பொய் சொல்ற்றதுக்கும் ஒரு அளவு இல்லையா? ஹிஹி.. ரமா ஜீன்ஸ் பேண்ட்லயா? என்ன கொடும சார் இது? அவளுக்கு மட்டும் தெரிஞ்சது நான் சட்னி..

கார்க்கி said...

//அனுஜன்யா said...
ஜாஸ்மின் சென்ட்டு தான். (வால் முன்னாடியே சொல்லிட்டார்). அப்ப எதுக்கும் இருக்கட்டும்னு மூணு முழம் மல்லிப்பூ வாங்கி பூஜையறையில் வைக்கணும். செய்வன திருந்தச் செய்னு ...யாரோ சொல்லியிருக்காங்கல்ல //

இதுக்குப் பேருதான் சொ.செ.சூ..

கார்க்கி said...

/ செல்வேந்திரன் said...
இந்தப் பூனையும் பால் குடிக்குமா?/

இது பக் பக்குன்னு 90யே அடிக்கும் சகா

சென்ஷி said...

:-)) நல்லாயிருக்கு ஆதி!

//ஆ.முத்துராமலிங்கம் said...
வந்தது மீராஜாஸ்மினா!! (ஹி..ஹி.. சும்மா)
//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... :-)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

அய் அண்ணன்
நல்லா கவிதையெல்லாம் எழுதுது, அப்புறம் பின்னூட்டத்துக்கு இங்கிலீபீஷுல பதிலெல்லாம் போடுது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கார்க்கி said...

/ செல்வேந்திரன் said...
இந்தப் பூனையும் பால் குடிக்குமா?/

இது பக் பக்குன்னு 90யே அடிக்கும் சகா

:)-
:(

Anonymous said...

கவிதையில் ஒரு பொருள் பிழை...

//அப்படியும் மாலையில்
வீடு திரும்பிய அம்மா கேட்டாள்
என்னடா மல்லிகை வாசம் வருது...//

அது அம்மா இல்லை... ரமா...எப்படி கண்டுபிடிச்சோம் பாத்திங்களா ...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சென்ஷி.!
நன்றி அமித்து அம்மா.!
நன்றி மயில்.! (அது அம்மா இல்லை... ரமா...எப்படி கண்டுபிடிச்சோம் பாத்திங்களா ..// ஏன் இந்த கொலைவெறி?)

அ.மு.செய்யது said...

//கவிதையில் ஒரு பொருள் பிழை...

//அப்படியும் மாலையில்
வீடு திரும்பிய அம்மா கேட்டாள்
என்னடா மல்லிகை வாசம் வருது...//

அது அம்மா இல்லை... ரமா...எப்படி கண்டுபிடிச்சோம் பாத்திங்களா ...//

ஹா..ஹா..ரசித்து சிரித்தேன்.

கவிதையை முதலில் ரசித்து விட்டேன்.

மங்களூர் சிவா said...

/
ஆ.முத்துராமலிங்கம் said...

வந்தது மீராஜாஸ்மினா!!
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

ரமா கூட இல்லாத
ஒரு மதிய நேரத்தில்
உன்னை வீட்டிற்கு அழைத்து வருகிறேன்
பயம் தெரிந்தது உன் கண்களில்
இங்கே விட்டுச்செல்ல
உன் கூந்தலில் எந்த மலர்களும் இல்லை
சிதறி விழ உன் கரங்களில் கண்ணாடி வளைகளும் இல்லை
நீங்கிச்சென்ற பின்னும் ஒலிக்கும் கொலுசுகளுக்கும்
உனக்கும் சம்பந்தமில்லை
சுவர்களில் தடயமிட்டுச்செல்ல உன் கண்களும்
மை தாங்கியிருக்கவில்லை
விரித்த கூந்தல்
குங்குமம் பாராத நெற்றி
இறுக்கும் ஜீன்ஸ் என மாடர்ன் காதலி நீ...
மறக்காமல்
என் கன்னங்கள் கொண்ட
லிப்ஸ்டிக் கறைகளையும் கூட அழித்துவிட்டேன்
அப்படியும் மாலையில்
வீடு திரும்பிய ரமா கேட்டாள்
என்னடா மல்லிகை வாசம் வருது...

மங்களூர் சிவா said...

:))

பாசகி said...

நல்லா இருக்கு சாரே! உல்டா அனுபவமுண்டு :)))

எம்.எம்.அப்துல்லா said...

//இது பக் பக்குன்னு 90யே அடிக்கும் சகா //

சிறு திருத்தம்...நைன்ட்டி நைன்ட்டியா அடிக்கும் :)))

கும்க்கி said...

எம்.எம்.அப்துல்லா said...

//இது பக் பக்குன்னு 90யே அடிக்கும் சகா //

சிறு திருத்தம்...நைன்ட்டி நைன்ட்டியா அடிக்கும் :)))

ஆமா...ஆமா.

(ஏதோ நம்மாலானது)

jothi said...

இது கவிதையில் வரக்கூடாது. அனுபவத்தில் வரவேண்டியது. கிரிஷ்ண லீலைகள்????

Mahesh said...

என்னா ரசனை.. என்னா திருட்டுத்தனம்.... இது "ஆதிமூலக்ருஷ்ணா லீலை"யா?

செல்வேந்திரன் said...

என்னாதிது லைக் இட்னு ஒரு கேள்வி?!

"பதுங்கு குழிகளுக்கு அலங்காரம் தேவையில்லை" என 2002ல் நான் எழுதிய கவிதையிலிருந்து அப்பட்டமாக திருடப்பட்ட வரிகள் இவை.

தமிழ்ப்பறவை said...

ஹலோ ஆதி சார்... நீங்க சீரியஸா எழுதுனாக் கூட ஊரே வந்து கும்மியடிச்சிட்டுப் போகுது...
பட் உங்க படைப்போட ஃபீலிங் எனக்குப் பிடிச்சிருந்தது...
//உன் கூந்தலில் எந்த மலர்களும் இல்லை
சிதறி விழ உன் கரங்களில் கண்ணாடி வளைகளும் இல்லை
நீங்கிச்சென்ற பின்னும் ஒலிக்கும் கொலுசுகளுக்கும்
உனக்கும் சம்பந்தமில்லை
சுவர்களில் தடயமிட்டுச்செல்ல உன் கண்களும்
மை தாங்கியிருக்கவில்லை//
எப்படில்லாம் தடயம் இல்லாம தப்புப்(சரி..?) பண்ற்தச் சொல்லிருக்கீங்க...(மீதி ஒண்ணும் பின்னூட்டத்தில வந்துடுச்சு)

செந்தில்குமார் said...

அனுபவம் பேசுதோ ??

ரொம்ப ரசிச்சு படிச்சேன்... ஞாபகம் வருதே....

புதியவன் said...

//அப்படியும் மாலையில்
வீடு திரும்பிய அம்மா கேட்டாள்
என்னடா மல்லிகை வாசம் வருது...//

ஒரு வேளை உண்மையிலேயே பெண்களின் கூந்தலுக்கு வாசனை இருக்கோ என்னவோ...

goma said...

காதல் தடயங்கள் அத்தனையும் அழித்தாலும் மனமெல்லாம் வீசிக்கொன்டிருந்த மல்லிகை மணத்தை கன்டுபிடிப்பவளே அம்மா?
யாரை வேன்டுமென்றாலும் ஏமாற்றி விடலாம்
ஆன்டவனையும் அம்மாவையும் ஏமாற்ற முடியாது ,மகனே!

ச்சின்னப் பையன் said...

:-)))

அத்திரி said...

//கார்க்கி said...
:).. ஒரு மாதிரியாத்தான் இருக்கிங்க//

ரிப்பீட்டேய்..........

அத்திரி said...

இந்த மாதிரி கவித எழுத கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன் அண்ணே

அத்திரி said...

இந்த கவிதையில் இருந்து அண்ணி இன்னும் வரலைனு தெரியுது.........

RAMYA said...

இருந்தும் மாட்டிகிட்டீங்களே பாஸ்

சரி அம்மாதானே ஒன்னும் சொல்ல மாட்டாங்க :-)

அடுத்த முறை வரும்போது அந்த மீராஜாஸ்மினை சாரி உங்களன்பு காதலிக்கு.

எந்த சென்ட் போடலாம்னு ஐடியா கொடுத்து அனுப்புங்கள். (வால்ஸ் சொன்னது சரியாத்தான் இருக்கும் )


ஏன் வீட்டுலே சந்திக்கறீங்க?? பீச், பார்க் போய் சந்திங்க.

முக்கியமான விஷயம்: ரமாவுக்கு விஷயம் தெரிஞ்சி போச்சாம் :-)

RAMYA said...

நேரில் பாக்கும் பொது ரொம்ப சமத்துப் பிள்ளையா இருந்தீங்க
ஆனா ஒன்னும் சரியில்லை :-)

தராசு said...

//நேரில் பாக்கும் பொது ரொம்ப சமத்துப் பிள்ளையா இருந்தீங்க
ஆனா ஒன்னும் சரியில்லை //

கன்னா பின்னாவென்று வழி மொழிகிறேன்

கும்க்கி said...

RAMYA said...

நேரில் பாக்கும் பொது ரொம்ப சமத்துப் பிள்ளையா இருந்தீங்க
ஆனா ஒன்னும் சரியில்லை :-)

ஹி...ஹி.

மணிகண்டன் said...

good one thamira.

ஆதவா said...

:)

ரொம்ப நல்லா இருக்குங்க. அழகாக இருக்கிறது.!!

நர்சிம் said...

கலக்கல்.லக்கல்.க்கல்.கல்.ல்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செய்யது.! (கொலவெறி ஜோக்குன்னாதான் எல்லோருக்கும் புடிக்குதே..)

நன்றி சிவா.! (ரோடு போட்டா கோடே போடுவீங்களே)

நன்றி பாசகி.!

நன்றி அப்துல்லா.! (இப்ப யாராவது இதக்கேட்டாங்களா?)

நன்றி கும்க்கி.! (அதுக்கு பின்பாட்டு வேறயா?)

நன்றி ஜோதி.!
நன்றி மகேஷ்.!

நன்றி செல்வா.! (திருடப்பட்டதா? ஆமா அது ஒண்ணுதான் குறைச்சல், அதையும் ஏன் குறை வைக்கணும்.. நடத்துங்க.. வெளங்கிரும்)

நன்றி தமிழ்பறவை.! (பட் அந்த டீலிங் எனக்குப்புடிச்சிருந்ததுங்கிர மாதிரியே சொல்றீங்களேய்யா..)

நன்றி செந்தில்.!

நன்றி புதியவன்.! (இது வேறயா?)

நன்றி கோமா.!
நன்றி சின்னவர்.!

நன்றி அத்திரி.! (கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா?)

நன்றி ரம்யா.! (நீங்களுமா?)

நன்றி தராசு.!
நன்றி மணிகண்டன்.!
நன்றி ஆதவா.!
நன்றி தல.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸாரிபா.. பதில் சொல்ல கொஞ்சம் லேட்டாயிருச்சு.. வேறென்ன பிஸிதான்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நானே 50.!

வாழவந்தான் said...

ஆவி(புடிச்சதுக்கு)யில் அரங்கேரியதற்கு வாழ்த்துக்கள்!

வாழவந்தான் said...

விடுங்க பாஸ் இவங்க எப்பவும் இப்படித்தான்!
அடுத்த முறை மாட்டிகொள்ளாமலிருக்க வாழ்த்துக்கள்!