Friday, May 22, 2009

காதல் பொங்கல்.!

கொஞ்சம் நீண்ட பிரிவுக்குப்பின்னர் ரமா ஊரிலிருந்து திரும்பியிருப்பதால் எனக்கு ஆஃபீஸில் ஒரு வேலையும் ஓடவில்லை. எப்படா அஞ்சு மணியாகும் என காத்திருந்தேன். வளையம் வளையமாக கொசுவத்திகள் வந்துபோயின, ஓவர் காதலில் பொங்கிக் கொண்டிருந்தேன். யாராவது மாட்டியிருந்தால் கவிதை சொல்லியே சாகடித்திருப்பேன்..

என்ன சமைத்திருப்பாள்? (இதுதான் முதலில்ங்க, ஏன்னா நிலைமை அப்படி.! ஒரு மாசமா தக்காளி ரசமே கதின்னு இருந்த எனக்குல்ல தெரியும் அவளது முட்டைக்குழம்பு சுவை). அறை இப்போது வீடாகியிருக்கும்.

**********

உறங்குவதற்கு முந்தைய நிமிடங்களில் அவள் காதோரம் கொஞ்சலாய் கிசுகிசுத்துக் கொண்டிருந்தேன்.

எப்டிடி இத்தனை நாள் இருந்தே.. கல்லு மனசுடி உனக்கு.! ‘..ம்’ நேத்து ஒரு கவித பாத்தேன்டி.. ‘காதல் என்பது வெறும் வார்த்தைதான், ஒருத்தி அதை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் வரை’ எப்டி? சூப்பராயிருக்குதுல்ல.. எனக்கும்தான், நீயில்லாம ஒண்ணுமே ஓடலைம்மா.! ‘..ம்’ இப்டியே உன்ன பாத்துட்டே இருக்கலாம் போல இருக்குது.! ‘..ம்’ உன்னிய நினச்சு ஒரு கவித எழுதினேன்டி, யூத்ஃபுல் விகடன்ல வந்திருக்குது.. காலையில காமிக்கவா.? ‘..ம்’ ஊட்டிக்கு போலாமா நாம.. நா ஒரு வாரம் லீவு போடறேன்.. ஜாலியா போயிட்டு வரலாமா.? ‘..ம்’ எனக்கு உன்ன ரொம்ப தேடிருச்சுடி.. எப்பப்பாத்தாலும் உன் நினபாவே இருந்துது, ரெண்டு நாளா சாப்பாடே இறங்கல தெரியுமா? ‘..ம்’ கொஞ்சமாச்சும் என்ன தேடினயாம்மா, நீயெங்க தேடியிருக்கப்போற? ‘..ம்’ அப்பிடியே உன்ன கடிச்சு தின்றலாமான்னு வருது எனக்கு.! ‘..ம்’ கல்யாணத்தன்னிக்கு நடந்தது நாபகமிருக்கா உனக்கு, ரிசப்ஷனுக்கு பச்சை சேலை கட்டியிருந்த நீ.! ‘..ம்’

கொஞ்சமே கொஞ்சமாய் சத்தத்தைக்கூட்டி, ‘என்னடி உம், உம்னுகிட்டிருக்க? நா எவ்வளவு சீரியஸா சொல்லிட்டிருக்கேன்.?’

அவள் ஃபுல் வால்யூமில் இறைந்தாள், ‘ஏன் இப்பிடி.. ராத்திரி போல நிம்மதியா தூங்க விடாம காதுல வந்து பெனாத்திக்கிட்டிருக்கீங்க, ஊட்டிக்கு.. ஒரு வாரம் லீவு.. யாரு.. நீங்கதான? வெளங்கிரும். புளுபுளுக்காம தூங்கறீங்களா?’


(பி.கு : தற்செயலாகத்தான் கவனிக்கிறேன்.. ‘ரமாவின் காதோர புலம்பல்கள்’ போலவே இந்தப்பதிவு அமைந்திருப்பதை.! ரெண்டிலயும் விஷயமென்னவோ ஒண்ணுதான்.. எச்சரிக்கை.!)
.

29 comments:

கார்க்கி said...

தலைப்ப பார்த்தவுடனே மிரண்டுட்டேன்.. நீங்க பொங்கள் வைக்கிறத நேர்ல நிறைய தடவ பார்த்தவன் என்பதால்..

ஆன இது வேற போலிருக்கு :))

Kathir said...

:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நீ விடியோவில வெச்சதைத்தான் உலகமே பாத்துச்சே.. அதை விடவுமா எனது பொங்கல் பெருசு.. ஹிஹி..

நன்றி கதிர்.!

கே.ரவிஷங்கர் said...

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ தல?

வசந்த் ஆதிமூலம் said...

புலம்பல்கள்.! !!!!!!!!!!!!
-அருமை.
(நன்றி ரமா அண்ணி.)

வித்யா said...

யாராவது அண்ணிக்கு இவர் வலைப்பூவோட லிங்க் கொடுங்களேன்.

வால்பையன் said...

//யாராவது மாட்டியிருந்தால் கவிதை சொல்லியே சாகடித்திருப்பேன்..//

அதுக்கு ப்ளாக் இருக்குல்ல!
அப்புறம் என்ன கவலை!
கொல்லுங்க ஸாரி சொல்லுங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

வால்பையன் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி!

Anonymous said...

ஆதி, உங்கள் ஈமெயில் பாருங்க.. என் கமெண்ட் அதில் இருக்கு. இந்த பதிவை நான் எதிர்த்து வெளிநடப்பு செய்றேன்..

எம்.எம்.அப்துல்லா said...

//வித்யா said...

யாராவது அண்ணிக்கு இவர் வலைப்பூவோட லிங்க் கொடுங்களேன். //

லிங்க் என்ன லிங்க்கு...என் லேப்டாப்பையே எடுத்துட்டு போய் அண்ணிகிட்ட இந்த பதிவை காட்டிட்டு வந்துடுறேன் :)

அ.மு.செய்யது said...

வாங்க ..

பேக் டூ ஃபார்ம்...ஆ ??

இன்னும் உங்க கிட்ட இருந்து நிறைய எதிர்பாக்குறோம்.

தராசு said...

ஆரம்பிச்சாச்சா,

இப்பத்தானய்யா ஒரு ஜீன்ஸ் போட்ட காதலி வந்துட்டு போனா, மல்லிகைப் பூ வாசம்னெல்லாம் சொன்னீங்க, அதுக்குள்ள அண்ணி வந்துட்டாங்களா????

பாவம் நீங்க குடுத்து வெச்சது அவ்வளவுதான்

நர்சிம் said...

ம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒரு சிறு தன்னிலை விளக்கம் :

பெரும்பாலும் நாகரீகம் தவறி நாம் நடந்துகொள்வதில்லை எனினும் முதல் முறையாக இந்தப்பதிவில் சில வரிகள் நீக்கப்படுகின்றன. நலம் விரும்பும் நண்பர்களுக்கு மனமுவந்த நன்றி.

மேலும் ஒரு செய்தியையும் நான் இங்கே பகிர விரும்புகிறேன். பெரும்பாலான எனது காதல் மற்றும், தங்கமணி பதிவுகள் வெறும் கற்பனையே.. நம்புங்கள்.! குறிப்பாக இந்தக் 'காதல் பொங்கல்' 100% கற்பனை. மேற்குறித்த பதிவுகள் அனைத்துமே புதிதாக திருமணமான ஒரு ஜோடியின் அனுபவங்களாகவே கற்பனை செய்து எழுதுகிறேன். கதை நாயகனாக என்னையே உருவகப்படுத்திக்கொள்வதனால் வரும் சிக்கல்கள் புரிகிறது.

எனக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றன. எனது மனைவியின் பெயர் ரமா அல்ல.. ஒன்றரை வயதில் அழகான ஒரு மகனும் உண்டு. இது குறித்து எந்தப்பதிவுகளிலுமே நான் எழுதியதில்லை. அது பகிர‌ வேண்டிய அவசியமில்லாத பர்சனல் விஷய‌ங்க‌ளாக/உண‌ர்வுக‌ளாக‌ நான் க‌ருதுகிறேன். தோன்றும் போது எழுதுவேன்.

Anonymous said...

அந்த பயம் இருக்கட்டும்..நன்றி. ஆனாலும் இப்படி கைப்புள்ள ஆக்கிட்டீங்களே...ஆஅவ்வ்வ்வ்

Nagendra Bharathi said...

very good.
Whenever you find time, please have a look at my blog http://www.bharathinagendra.blogspot.com and offer your comments there. Thanks

jothi said...

//பெரும்பாலான எனது காதல் மற்றும், தங்கமணி பதிவுகள் வெறும் கற்பனையே..//

நம்பிட்டோம் ரைட்டு,..

ஸ்ரீதர் said...

great comedy.

pappu said...

எங்க அக்கா கிட்ட போய் ஓவரா மொக்க போட்டா திட்டதான செய்வாங்க.


எல்லாரும் உங்கள அண்ணன்னு ஐஸ் வைக்கும் போது, வீடு ஹோம் மினிஸ்டர ஐஸ் வைக்கும் டெரர்.

தமிழ்ப்பறவை said...

அது சரி இன்னும் தமிழ்மணம் சமையல் பகுதில உங்க ‘தக்காளி ரசம்’ இருக்குதே.. அதுக்கு எவ்வளவு செலவழிக்கிறீங்க..
//தற்செயலாகத்தான் கவனிக்கிறேன்.. ‘ரமாவின் காதோர புலம்பல்கள்’ போலவே இந்தப்பதிவு அமைந்திருப்பதை.! ரெண்டிலயும் விஷயமென்னவோ ஒண்ணுதான்.. எச்சரிக்கை.!//
பின்குறிப்பே தேவையில்லை தலை..

வசந்த் ஆதிமூலம் said...

//அந்த பயம் இருக்கட்டும்..நன்றி. ஆனாலும் இப்படி கைப்புள்ள ஆகிட்டீங்களே...ஆஅவ்வ்வ்வ்.//

-repeataaaaaaaaiiiiiiiiiii...

ஆ.முத்துராமலிங்கம் said...

காதல் பொங்கல்..... பொங்கி வழியுதுங்கோ!!

இரா.சிவக்குமரன் said...

ம்....

புதுகைத் தென்றல் said...

ரமாங்கற கற்பனை பெயரில் நீங்க
தங்கமணிகளைத் தாக்கி பதிவு எழுதறீங்கன்னு தெரியும். :))

நான் ஹஸ்பண்டாலஜி எழுதியபொழுது என்னவோ என் சொந்த அனுபவத்தைத்தான் பாடமா நடத்தினேன்னு ரொம்ப பேரு நினைச்சாங்க. இதெல்லாம் சகஜம்.


(ஆனாலும் தங்கமணிகளை எதிர்த்து வந்த இந்தப்பதிவுக்கு வெளி நடப்பு கட்டாயம் உண்டு)

மங்களூர் சிவா said...

/
‘ஏன் இப்பிடி.. ராத்திரி போல நிம்மதியா தூங்க விடாம காதுல வந்து பெனாத்திக்கிட்டிருக்கீங்க,
/
:))))))))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ரவிஷங்கர்.!
நன்றி வசந்த்.!
நன்றி தென்றல்.!
நன்றி வித்யா.!
நன்றி வால்பையன்.!
நன்றி அமித்து.!
நன்றி மயில்.! (திருப்தியா..)
நன்றி அப்துல்.!
நன்றி செய்யது.!
நன்றி தராசு.! (உங்களுக்கு பதில் போட்டேன். முகவரி தப்புன்னு வருது. கொழப்பம்..)
நன்றி நர்சிம்.!
நன்றி நாகேந்திரா.!
நன்றி ஜோதி.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி பப்பு.!
நன்றி தமிழ்பறவை.! (சிம்பிள் லாஜிக். சமயல் என்ற குறிச்சொல்லில் வரும் பதிவுகள் மிகமிக குறைச்சல். நீங்களும் சமையல் குறிப்பு எழுதுங்க.. அங்கயே கிடக்கும்)
நன்றி முத்துராமலிங்கம்.!
நன்றி சிவக்குமரன்.!
நன்றி ஃபிரெண்ட்.!
நன்றி சிவா.!

கும்க்கி said...

இதுல ஒன்னு தெளிவா தெரியுது.தங்கமனிகளை தாக்கி பதிவு போடறதா நீங்க எழுதனாலும், எனக்கென்னமோ ப்ராக்டிகலா அவங்க திங்க்பன்னி பேசறதத்தான் சொல்லவறீங்களோன்னு தோணுது.ரியலி சூபர்ப்.

" உழவன் " " Uzhavan " said...

காதல் பொங்கலயே.. முட்டைக்கொழம்பு வச்சமாதிரியும் தெரியல