Tuesday, May 26, 2009

பசுமை மாறாத கிருஷ்ணகிரி

திட்டமிடாத வாழ்க்கையின் அத்தனை சங்கடங்களையும், சிற்சில நன்மைகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். திட்டமிட்டிருந்தால் முன்பே டிக்கெட் ரிசர்வ் செய்திருக்கலாம். அழகாக ட்ரெயினில் 5 மணி நேரத்தில் போயிருக்க வேண்டிய தூரத்தை 8 மணி நேரம் நள்ளிரவில் பஸ் மாறும் அவஸ்தையுடன் அனுபவித்திருக்க வேண்டாம். முன்பே துணைக்கு யாரையாவது அழைத்துச்சென்றிருக்கலாம், இப்படி தனியே வங்குல சிக்கின எலி மாதிரி கும்க்கியிடம் சிக்கியிருக்கவேண்டாம்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நள்ளிரவில் பேருந்து நிலையம் வந்து அழைத்துச்சென்றது, முன்னமே வசதியான அறை ஏற்பாடு செய்திருந்தது, இரண்டு நாட்களும் எனக்காக சிரமம் மேற்கொண்டது என அவரது அன்புக்கு முதலில் ஒரு பெரிய நன்றி.!

எதிர்பார்த்தது போலில்லாமல் கிருஷ்ணகிரி மிகச்சிறிய ஊர்தான். ஒரு புறமிருந்து பைக்கில் இரண்டு நிமிடங்கள் பயணித்தால் ஊரின் அடுத்தப்பக்கம் வந்துவிடுகிறது. சொன்னதற்கு அதெல்லாம் இல்லை, டிஸ்ட் தலைநகராக்கும் என்று கும்க்கி பீற்றிக்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை 8 மணிக்கெல்லாம் எல்லாக்கடைகளும் சாத்தி பந்த் நடக்கிறதோ என்ற தோற்றத்தை விளைவிக்கிறார்கள். சரி அதையெல்லாம் விடுங்கள். பசுமை பார்க்கணுமே.. அறுவடை முடிந்த காலத்திலும், பச்சைப்பசேலென்ற சுற்றமும் எங்கு பார்த்தாலும் பெரும் மரங்களும் என பசுமையான சுற்றுப்புறக் கிராமங்கள் கொண்ட மாவட்டம் கிருஷ்ணகிரி என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை நமக்கு. கிருஷ்ணகிரியுடன் முதல் அனுபவம் என்பதால் கண்டிப்பாக ஒகேனகல் செல்லவேண்டும் என்பதே பிரதான திட்டம்.

சனிக்கிழமை காலையிலேயே ஒகேனகல் கிளம்பினோம். இருவர் மட்டுமே, அவரின் புத்தம் புதிய ‘யுனிகார்ன்’ பைக்கில். போக்குவரத்து மிகக்குறைவான, பசுமரங்கள் அடர்ந்த, நல்ல சாலையில் பைக்கில் மணிக்கணக்காக செல்லவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது ஒரு சுகானுபவம். 80 கிலோமீட்டர்கள். கார் என்றால் நமது வழக்கப்படி ஏறியதும் ‘கொர்’ஆகிவிட்டிருப்போம். நல்ல வேளையாக பைக்கில் ரசித்துக்கொண்டே பயணித்தேன். போகும் வழியில் சின்னஞ்சிறு கிராமங்களைக்கடந்து சென்றோம். கிராமங்களின் பெயர்கள் வியப்பூட்டின. அதன் உச்சமாக ‘திகிலோடு’ என்ற கிராமத்தின் பெயர் இருந்தது. வழியெங்கும் கரும்பு, எள் என வயற்புறங்களும், மாந்தோட்டங்களும் நிறைந்திருந்தன. செல்லும் வழியில் பென்னாகரத்துக்கு முன்பே பாப்பாரப்பட்டி கிராமத்தில் பிரதான சாலை அருகிலேயே அமைந்துள்ள தியாகி ‘சுப்ரமண்யம் சிவா’ வின் நினைவிடத்தைக் காணநேர்ந்தது பாக்கியம். ஒரு வழியாக 12 மணியளவில் ஒகேனக்கல் அடைந்தோம்.

ஒகேனக்கல் அருவி அமைந்த இடம் இயற்கையின் மடி. பொதுவாக அருவி என்றால் மேலிருந்து கொட்டும். மக்கள் கீழிருந்து குளிப்பார்கள். இங்கே தலைகீழ். அருவியில் குளிக்கும் வசதியில்லாததால், மேலே அருவியாக விழப்போகும் நீரிலேயே மக்கள் குளித்துவிடுகிறார்கள். போனால் போகிறது என்று பக்கவாட்டில் இறங்கி அருவியின் ஒரு சிறு பகுதியில் குளிக்க செயற்கையாக வசதி செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக மஸாஜ் செய்துகொண்டோம். செய்தவர் தன் மனைவியை மனதில் கொண்டாரோ என்னவோ முதுகுலேயே ‘நங்கு நங்கென’ குத்துகிறார், மண்டையிலேயே வலிக்கும் படி சாத்துகிறார், கையை முறுக்கிப் பிழிகிறார், செவிட்டில் நாலு அறை விழவில்லை, அவ்வளவுதான் குறை. பக்கத்தில் ஒருவர் ஓவென அலறிக்கொண்டிருந்தார். பின்னர் நீண்டநேரம் தண்ணீரில் ஊறிக்கிடந்து விட்டு அருவிக்குச் சென்றால், மஸாஜ்காரர் பரவாயில்லை என்பது போல தண்ணீர் அவ்வளவு ஆத்திரத்தோடு நம்மை அடித்து துவைக்கிறது. அனுபவம் அருமை.! பின்னர் திரும்பினோம்.

ஆனால் இப்போதுதான் ஒரு சின்ன பிரச்சினை. ஷார்ட் கட்டில் அழைத்துச்செல்கிறேன் என்று கூறி அடர்ந்த கானகம் வழியே வண்டியை திருப்பினார் கும்க்கி. 120 கிமீ பயணிக்கவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார். இதோ கொஞ்ச தூரம்தான் என்று கூறியபோது மைல்கல் கிருஷ்ணகிரி 62 கிமீ என்று காட்டியது.

அன்றிரவு கும்க்கியின் நண்பர் பாலனை சந்தித்ததும் மறுநாள் கிருஷ்ணகிரியின் வளமைக்குக் காரணமான கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தைக் கண்டதும், இன்னொரு சிற்றேரியில் படகுச்சவாரி செய்ததும் மறக்க இயலாத அனுபவம். பச்சைத்தண்ணீர் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருக்கிறீர்களா? எந்த தொழிற்சாலைகளின் கைங்கர்யமோ நீர்த்தேக்கம் முழுமையும் பச்சைப்பெயிண்ட் போல காட்சிதருகிறது. பகிர இன்னும் நிறைய இருந்தாலும் பதிவின் நீளம் கருதி பிறிதொரு சமயத்தில் பார்க்கலாம். சில படங்கள் உங்கள் பார்வைக்கு..
1. கிருஷ்ணகிரி அனைக்குச் செல்லும் பாதை..

2. அணையில் பச்சைத்தண்ணீர்..

3. போட்டிங்கின் போது, அஜித் அல்ல ஆதி.!

4. ஒகேனகல் நீர்வீழ்ச்சியின் எதிர்புற மலைமீது கும்க்கி..

5. ஒகேனகல் நீர்வீழ்ச்சி..

6. சுப்ரமணியம் சிவா நினைவிடத்தில்..

7. பசுமரங்கள்.. 8. பழமரங்கள்..

.

42 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

போட்டோக்களுக்கான விளக்கம்..

1. கிருஷ்ணகிரி அனைக்குச் செல்லும் பாதை..

2. அணையில் பச்சைத்தண்ணீர்..

3. போட்டிங்கின் போது, அஜித் அல்ல ஆதி.!

4. ஒகேனகல் நீர்வீழ்ச்சியின் எதிர்புற மலைமீது கும்க்கி..

5. ஒகேனகல் நீர்வீழ்ச்சி..

6. சுப்ரமணியம் சிவா நினைவிடத்தில்..

7. பசுமரங்கள்..

8. பழமரங்கள்..

குசும்பன் said...

//அனுபவம். பச்சைத்தண்ணீர் கேள்விப்பட்டிருப்பீர்கள், //

ஆமாம் தல நேற்று நைட் நண்பர் வாங்கி வந்து தனியே தன்னந்தனியேன்னு குடிச்சதும் பச்சை தண்ணீர் தான் என்று கேள்விபட்டேன்!

ஆமாம் அந்த தாடி கூலிங்கிளாஸ் போட்ட ஹீரோ ஆரு??? என்ன படம் அது?

என்னது அஞ்சரைகுல்ல வண்டியா...ச்சே அது பழயபடம்ப்பா இவரு நடிக்கும் பட வேறயாச்சே!!!தெரிஞ்சவங்க சொல்லுங்க!

Cable Sankar said...

ஒகேனக்கல்லில் பரிசலில் தண்ணியில?? போனீங்களா..? மீன் சாப்டீங்களா..?

தராசு said...

வீட்லயே தங்கறதில்லையா, எங்கயாவது சுத்திட்டேதான் இருப்பீங்களா?

படங்கள் அருமை. ஒகனேகல் பிரச்சனை பூமின்னாங்களே, இப்ப ஒரு பிரச்சனையுமில்லையா?

பரிசல்காரன் said...

விருந்தினர்களை உபசரிப்பதிலும், அளவளாவுவதிலும் கும்க்கி பாராட்டப்பட வேண்டியவர்.

என்ன ஒரு விஷயம்.. அவர் சொல்வதற்கு நீங்கள் ஏதும் மறுப்போ, மாற்றுக்கருத்தோ தெரிவித்தால் ருத்ரனாகி பாய்ண்ட் பாய்ண்டாக போட்டுத் தாக்குவார்.

ஊட்டி ட்ரிப் ஞாபகமிருக்குதானே? நாம அஞ்சு பேர் சேர்ந்து சமாளிக்க முடியல மனுஷன!

புதுகைத் தென்றல் said...

போட்டிங்கின் போது, அஜித் அல்ல ஆதி.//

க்ளோசப்ல உங்க போட்டோ போடாட்டி நிம்மதியா இருக்காதே!! இதுல அஜித்தோன்னு நாங்க நினைச்சிடுவோம்னு நப்பாசை வேற..

Raj said...

//பின்னர் நீண்டநேரம் தண்ணீரில் ஊறிக்கிடந்து விட்டு //

):..????

புதுகைத் தென்றல் said...

செய்தவர் தன் மனைவியை மனதில் கொண்டாரோ என்னவோ முதுகுலேயே ‘நங்கு நங்கென’ குத்துகிறார், //

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நீங்க மனைவியை பத்தி எழுதாட்டி போய்ட்டு வந்த திருப்தி வராதா ஃப்ரெண்ட்.

புதுகைத் தென்றல் said...

நாங்களும் டூர் போறோம்ல(கிருஷ்ணகிரிக்கு இல்ல) போயிட்டு வந்து பதிவு போடுவோம்.

புதுகைத் தென்றல் said...

விகடனில் உங்க கதை படிச்சிட்டேன்.

வித்தியாசமா நல்லா இருந்துச்சு.

மனமார்ந்த பாராட்டுக்கள்

Mahesh said...

ஆஹா... இன்னொரு பயணப்பதிவர் !!

//செவிட்டில் நாலு அறை விழவில்லை, அவ்வளவுதான் குறை. //
உண்மையைச் சொல்லுங்க.... விழுந்துதுதானே?? அவர் கிட்டப் போய் பேரம் பேசுனா அப்பிடித்தான்....

குளிக்கப் போகும்போது கூட கோட்டு சூட்டு போட்டு டை கட்டிக்கிட்டு போவிங்க போல :))))))))))

சின்னக்கவுண்டர் said...

//அஜித் அல்ல ஆதி.!//

எதுக்கு இப்படி உங்களையும் வருத்தி, மற்றவர்களையும் வருத்தி, முடியல...

Marathamizhan said...

நன்பரே,

ஆ.வி.கதை,ஒரு லட்சம் ஹிட்ஸ்...
மென்மேலும் ப‌ல‌ சிக‌ர‌ங்க‌ளை (எழுத்தில்)தொட‌ வாழ்த்துக்க‌ள் !!!
கிருஷ்ணகிரியைப்பற்றி பார்க்கும் வரை எங்கள் இராமனாதபுரம் போன்ற வறன்ட பகுதி எனத்தான் நினைத்திருந்தேன்.எஙுகும் பசுமை ! எதிலும் பசுமை(தண்ணி உள்பட).குடும்ப‌ஸ்த‌ராக‌ இருந்துகொண்டு தனியாக எப்ப‌டி உங்க‌ளால் டூர் எல்லாம் போக‌ முடிகிற்து ?

முள்ளாக இருந்து மலராக மாறியதற்கும் வாழ்த்துக்கள் !

இறுதியாக குடோஸ் டு கும்க்கி டூ!!!


அன்புடன்
மறத்தமிழன்.

Raju said...

நல்லா ரசித்து எழுதியிருக்கீங்க. ;-)

Raju said...

பெங்களூரிலிருந்து எப்படி ஒகேநக்கல் செல்வது என்று யாரவது வழி சொன்னால் நன்று!

வீகென்ட் திட்டம், ஒரு நண்பரோடு செல்ல வேண்டும்!

நன்றி!

சித்து said...

நான் பல முறை கிருஷ்ணகிரிக்கு சென்னையில் இருந்து என்னுடைய Thunderbird மூலம் சென்றிருக்கிறேன், அந்த வழி முழுவதுமே அருமை தான் (தங்க நாற்கரை சாலை) ஆனால் ஒரு முறை கூட ஹோக்கனேக்கள் நீர்வீழ்ச்சிக்கு சென்றது இல்லை. உங்கள் பதிவை படித்தவுடன் செல்ல ஆவலாக இருக்கிறது.

ஆ.முத்துராமலிங்கம் said...

அனுபவம் அழகானது. ஒகேனகல் பரிசல் இன்னும் புது அனுபவமாக இருந்திருக்குமே.

sakthi said...

அறுவடை முடிந்த காலத்திலும், பச்சைப்பசேலென்ற சுற்றமும் எங்கு பார்த்தாலும் பெரும் மரங்களும் என பசுமையான சுற்றுப்புறக் கிராமங்கள் கொண்ட மாவட்டம் கிருஷ்ணகிரி என்பதில்

விவரித்திருக்கும் விதமே அழகு ஆதி அண்ணா

sakthi said...

போட்டிங்கின் போது, அஜித் அல்ல ஆதி.

ஹ ஹ ஹ

sakthi said...

பம்பர் பரிசு : 150வது ஃபாலோயருக்கு தங்க மோதிரம். ஸ்பான்ஸர் : புதுகை அப்துல்லா. 200வது நபருக்கு சூப்பர் பம்பர் காத்திருக்கிறது. இப்போதைக்கு சஸ்பென்ஸ்.!.

மேற்கண்டது உங்க அறிவிப்பு தான்

எப்போ தங்க மோதிரம் தரப்போறீங்க???

சொன்ன மாதிரியே 150 வது பாலோயரா

வந்திட்டேன் தானே ....

சீக்கிரம் தங்க மோதிரத்தை வாங்கி அனுப்புங்க ஆதி அண்ணா

கும்க்கி said...
This comment has been removed by the author.
கும்க்கி said...

Raju said...

பெங்களூரிலிருந்து எப்படி ஒகேநக்கல் செல்வது என்று யாரவது வழி சொன்னால் நன்று!

வீகென்ட் திட்டம், ஒரு நண்பரோடு செல்ல வேண்டும்..

பன்னார்கட்டா,ஆனேக்கல்,தளி,
தேன்கனிக்கோட்டை,அஞ்செட்டி,
நாட்ராம் பாளையம் அடுத்து ஹொகேனக்கல்தான்.

ஏன் ராஜு பெண்களூர் இளசுங்க பூரா சனி ஞாயிருகள்ல ஹோகேனக்கல்லதான் கும்மாளம் போடுதுங்க....

என்ன ஒரு 160கி மீ இருக்கும் அங்கிருந்து.அவ்வளவுதான்.பாரெஸ்ட் ரூட் ரொம்ப நல்லாருக்கும்.யானை ஏதாவது மறித்தால் மட்டும் என் பேர் சொல்லுங்க போதும்.

கும்க்கி said...

தாமிரானந்த ஆதிசாமி :ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நள்ளிரவில் பேருந்து நிலையம் வந்து அழைத்துச்சென்றது..

பேருந்து நிலையம் அமைக்கும்போது எனக்கும் நகர சேர்மனுக்கும் மனஸ்தாபம் இருந்ததென்னவோ உண்மைதான்..ஆனா அதுக்காக பேருந்து நிலையம் போகாமலேயிருக்க முடியுமா?

கும்க்கி said...

குசும்பன் said...

//அனுபவம். பச்சைத்தண்ணீர் கேள்விப்பட்டிருப்பீர்கள், //

ஆமாம் தல நேற்று நைட் நண்பர் வாங்கி வந்து தனியே தன்னந்தனியேன்னு குடிச்சதும் பச்சை தண்ணீர் தான் என்று கேள்விபட்டேன்!

எவ்ளோ தூர திருஷ்டி பார்வை..
கையெழுத்து ஆங்கிலம் இப்போ பச்சை கலரில்தான் வருகிறதென்பதும், ஆதிசாமி படையலுக்கு அதான் கேட்டதென்பதும் சரியா சொல்லிட்டிங்க.

அ.மு.செய்யது said...

மண்வாசனையுடன் கூடிய பயணப்பதிவு ரம்மியமாக இருந்தது.

தாமஸ் குக் மாதிரி வருவீங்க..

கும்க்கி said...

அ.மு.செய்யது said...

தாமஸ் குக் மாதிரி வருவீங்க....

ஹி..ஹி..பாதி உண்மை.
தக்காளி ரசப்பதிவு பார்த்தீங்கள்ள...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.! (அது ஆறரைமணி வண்டியாயிருக்கும்னு நெனைக்குறேன்)

நன்றி கேபிள்.! (பரிசல் வராததால் பரிசலில் போக இயலவில்லை, ஆனால் மீன் சாப்பிட்டோம்)

நன்றி தராசு.! (நாங்கெல்லாம் ரத்த பூமியிலேயே டூர் போவோம்)

நன்றி பரிசல்.! (மறக்கக்கூடியதா அது?)

நன்றி தென்றல்.! (இருந்தாலும் யராவது தப்பா நினைச்சுடக்கூடாது இல்லையா?)

நன்றி ராஜ்.!

நன்றி மகேஷ்.! (நாங்களும் பயணம் போவோமில்ல.. எப்பூடி?)

நன்றி சின்னக்கவுண்டர்.! (புச்சா நீங்க.. வாங்க வாங்க..)

நன்றி மறத்தமிழன்.! (தங்கமணியை ஊருக்கு பார்சல் செய்து கொரியர் அனுப்பிவிட்டுதான், இந்த வேலையெல்லாம் செய்யமுடியும். நீங்களும் நம்ம வலைப்பூவுக்கு புதுசா? இந்த மேட்டர் கூட தெரியலையே அதான் கேட்டேன்)

நன்றி ராஜு.! (வழி கீழே சொல்லப்பட்டுள்ளது, அதுபடி போகாதீங்க.. வேற யார்கிட்டயாவது கேட்டுக்கங்க.. ஹிஹி..)

நன்றி சித்து.! (ஆஹா.. சென்னையில் இன்னொரு தண்டர்பேர்ட் பார்ட்டி.!)

நன்றி முத்துராமலிங்கம்.!

நன்றி சக்தி.! (மோதிரமா? அப்துல்லா அண்ணே.. உங்களை யாரோ கூப்புடுறாங்க பாருங்க..)

நன்றி கும்க்கி.!
நன்றி செய்யது.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

தமிலிஷ் ஓட்டு ஒண்ணு கூட விழலியே.. படுபாவிங்களா.. கிருஷ்ணகிரியிலயிருந்து ஒரு பதிவர், வாசகர் கூடவா இல்லை.. அவுங்க ஊரை இவ்வளவு புகழ்ந்து எழுதியிருக்கேனே..

தமிழ்ப்பறவை said...

வளமான நடை ஊரைப் போலவே...
அது சரி உங்க ஃபோட்டோ போடுறதுக்காகவே பதிவு போடுவீங்களா என்ன..?! நீங்கள் எடுத்த புகைப்படங்கள் அருமை... நீங்கள் எடுத்தது மட்டும்தான்...

RAMYA said...

கிரிஷ்ணகிரிக்கு ரொம்ப கஷ்டப்பட்டு போயி இருக்கீங்க. நல்லாவும் சுத்தி இருக்கீங்க.

ஆனா அது அஜீத் இல்லையா நீங்களோ?? நம்பவே முடியலை :)

ரெண்டு பேருக்கும் அவ்வளவு ஒற்றுமையா?

சரி உங்கள் விகடன் கதைக்கு வாழ்த்துக்கள். வாங்கி படிச்சுட்டோமில்லே! நல்லா இருந்தது.

போட்டோ அனைத்தும் மிக அருமை. மாங்கா எண்ணிக்கை எல்லாம் சொல்லி இருக்கீங்க :)

ஆதி, நான் ஓட்டு போட்டுட்டேன். அதுக்கு உண்டான சன்மானத்தை வீட்டுக்கு அனுப்பி வையுங்க சீக்கிரமா :)

வசந்த் ஆதிமூலம் said...

விகடன் ல சோக்கா சொல்லிக்கிற கத... நல்லாயிருப்பா... அப்பால போட்டோஸ் அல்லாம் நல்லாகீது.
போய்கினு வந்தியே பாப்பாரபட்டி... அன்னாண்டதான் தலீவரு வீரப்பன் சமாதி கீதாம்மே... மெய்யாலுமா ?

sakthi said...

நன்றி சக்தி.! (மோதிரமா? அப்துல்லா அண்ணே.. உங்களை யாரோ கூப்புடுறாங்க பாருங்க..)

இதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்

நீங்க தான் வாங்கி தரணும்

இல்லாவிட்டால் ரம்யா டீச்சரிடம்

புகார் அளிக்கப்படும்

மங்களூர் சிவா said...

/
பரிசல்காரன் said...

விருந்தினர்களை உபசரிப்பதிலும், அளவளாவுவதிலும் கும்க்கி பாராட்டப்பட வேண்டியவர்.
/

அவரது உபசரிப்பு மழையில் நனைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைப்படுகிறேன்

/
என்ன ஒரு விஷயம்.. அவர் சொல்வதற்கு நீங்கள் ஏதும் மறுப்போ, மாற்றுக்கருத்தோ தெரிவித்தால் ருத்ரனாகி பாய்ண்ட் பாய்ண்டாக போட்டுத் தாக்குவார்.
/

ஹி ஹி அந்தமாதிரி அசம்பாவிதம் எதும் ஏற்ப்படலை
:))

மங்களூர் சிவா said...

என்னது யுனிகார்னா??? பல்சர் இல்லையா????

$anjaiGandh! said...

அதென்னவோ போங்க.. நம்மூரப் பத்தி அடுத்தவங்க பெருமையா எழுதும் போது ஒரு பெரிய கர்வம் ஏற்படுது.. நாங்க இதெல்லாம் ஒரு மேட்டரான்னு நினைக்கிறதை எல்லாம் நீங்க பெரிய மேட்டரா சொல்லும் போது தான் அதோட அருமையே புரியுது. கும்கி ஒரு அற்புதமான கைட் என்பதை நிரூபித்திருக்கிறார். பார்க்க வேண்டிய அனைத்து இடங்களையும் 2 நாட்களில் கவர் பண்ணி இருக்கிறார்.

$anjaiGandh! said...

//எதிர்பார்த்தது போலில்லாமல் கிருஷ்ணகிரி மிகச்சிறிய ஊர்தான். ஒரு புறமிருந்து பைக்கில் இரண்டு நிமிடங்கள் பயணித்தால் ஊரின் அடுத்தப்பக்கம் வந்துவிடுகிறது. சொன்னதற்கு அதெல்லாம் இல்லை, டிஸ்ட் தலைநகராக்கும் என்று கும்க்கி பீற்றிக்கொண்டார்.//

சும்மா தல, அது திக்குனூண்டு ஊரு தான். ஒசூர் இல்லைனா நாங்க இவங்கள தனியா விட்டிருக்க மாட்டோம். போனாப் போகுதுன்னு பிரிச்சி விட்டிருக்கிறோம். :)) பஸ் ஸ்டேண்ட் கூட இல்லாம் ஏரியில பஸ் நிறுத்தர ஊரெல்லாம் டிஸ்ட் தலைநகராம்... கொடுமைடா சாமி.. :))

$anjaiGandh! said...

//போகும் வழியில் சின்னஞ்சிறு கிராமங்களைக்கடந்து சென்றோம். கிராமங்களின் பெயர்கள் வியப்பூட்டின.//

”ஹள்ளி” வார்த்தையோடு என்று முடிந்திருக்குமே..

//ஒரு வழியாக 12 மணியளவில் ஒகேனக்கல் அடைந்தோம்.//

சரியான நேரத்திர்கு தான் சென்றிருக்கிறீர்கள். மசாஜ் செய்து, குளித்துவிட்டு படியேறினால் அகோரப் பசி எடுக்கும். முன்பே சொல்லி விட்டு சென்றிருந்தால் விரும்பிய மீன் வகைகள் சமைத்து வைத்திருப்பார்கள். வந்து செம்ம கட்டு கட்ட வேண்டியது தான். :)

$anjaiGandh! said...

//முன்னதாக மஸாஜ் செய்துகொண்டோம். செய்தவர் தன் மனைவியை மனதில் கொண்டாரோ என்னவோ முதுகுலேயே ‘நங்கு நங்கென’ குத்துகிறார், மண்டையிலேயே வலிக்கும் படி சாத்துகிறார், கையை முறுக்கிப் பிழிகிறார், செவிட்டில் நாலு அறை விழவில்லை, அவ்வளவுதான் குறை.//

உங்களுக்கு மசாஜ் செய்தவர் ஒரு பொண்டாட்டிக்காரர் போல. தப்பித்தீர்கள். சிலர் 4,5 பொண்டாட்டிக்காரங்க மாதிரி மசாஜ் செய்வாங்க. 10 சேர் சுத்தி நின்னு உருட்டுக் கட்டையால அடிச்ச மாதிரி இருக்கும். :)

கும்க்கி said...

பரிசல்காரன் said...

விருந்தினர்களை உபசரிப்பதிலும், அளவளாவுவதிலும் கும்க்கி பாராட்டப்பட வேண்டியவர்.

இப்படி அலேக்கா தூக்கி.,

என்ன ஒரு விஷயம்.. அவர் சொல்வதற்கு நீங்கள் ஏதும் மறுப்போ, மாற்றுக்கருத்தோ தெரிவித்தால் ருத்ரனாகி பாய்ண்ட் பாய்ண்டாக போட்டுத் தாக்குவார்.

இப்படி அதள பாதாளத்துல வீசிட்டீங்களே.....

ஊட்டி ட்ரிப் ஞாபகமிருக்குதானே? நாம அஞ்சு பேர் சேர்ந்து சமாளிக்க முடியல மனுஷன!

நல்லாருங்க சாமிகளா...

வால்பையன் said...

பச்சை தண்ணினவுடனே எதோ தமாஷ் பண்றீங்கன்னு நினைச்சேன்!

போட்டோவ பார்த்தா நம் சந்ததியினர் வாழ நாம விட்டு செல்வதை விஷத்தை தான்னு தெரியுது!

" உழவன் " " Uzhavan " said...

ஆமா ஆதி அண்ணே.. ஒகேனக்கல் யாருக்குணே சொந்தமானது?

ஆதிமூலகிருஷ்ணன் said...

தமிழ்பறவை, ரம்யா, வசந்த் ஆதிமூலம், சக்தி, மங்களூர் சிவா, சஞ்சய்காந்தி, கும்க்கி, வால்பையன், உழவன்.. அனைவருக்கும் நன்றி. கொஞ்சம் பிஸியாக இருந்ததால் உடனுக்குடன் வந்து லைவ்வாக பதில் சொல்ல முடியவில்லை.. ஜாரி.!