Wednesday, May 27, 2009

கண்ணன் கதைகள் : முன்னுரை

ஏற்கனவே ரமா : ஒரு எச்சரிக்கை, டெக்னிகல் பதிவுகள் என சில தொடர்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த லட்சணத்தில் ‘கண்ணன் கதைகள்’ என்ற புதிய தொடர் பதிவுகளுக்கான அவசியம் என்ன? கண்ணனை நேரில் கண்டவர்கள் ஓரளவு அவனது வியாக்கியானங்களைக் கேட்டிருக்கக்கூடும். நமது செட்டு செய்துகொண்டிருக்கும் அத்தனை மொக்கை வேலைகளையும் அவனாலும் திறம்பட செய்யமுடியும். அவ்வப்போது நமது பதிவுகளைப் படித்துவிட்டு கெக்கேபிக்கேவென சிரித்துவிட்டு ‘ஏண்டா இப்படி கேனை மாதிரி எழுதுறீங்க?’ என்பான். அப்போது கொஞ்சம் கடுப்பாகி ‘நீயும் கொஞ்சம் எழுதுறதுதானே, அப்பதானே தெரியும் முட்டை போடுற கோழியின் வலி’ என்பேன். அதற்கும் நக்கல் பண்ணிவிட்டு இதெல்லாம் என் வேலையில்லை என்று போனை வைத்துவிடுவான். ஏதோ நாமெல்லாம் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கி இந்த வேலையை செய்துகொண்டிருக்கிற மாதிரி. ஏதோ நல்ல மூட்ல இருக்கும்போது மட்டும் எல்லாருமே எழுதவந்துட்டா அப்புறம் படிக்கிறது யாருடா என்று நல்ல பதில் சொல்வான். இந்த வாக்கியத்தை எந்த இடத்திலாவது நாம் பயன்படுத்த முடியுமா யோசித்துப்பாருங்கள். வெறுமே வலைப்பூவை வாசிப்பவர்கள்தான் அலட்சியமாக இதைச்சொல்லமுடியும்.

பிறிதொருநாள் 90 அடித்துக்கொண்டிருந்த போது ஒரு நாட் கொடுத்து இதை எழுது என்றான். ஏன் நீயே எழுதுறதுதானே என்றேன். ‘கூல் மாப்பி, எல்லாத்துக்கும் ஒரு வேளை வரணும்’ என்று பெரிய வித்வான் மாதிரி பதில் சொன்னான். சரி விடுங்க அவனிடம் ஸ்ட்ரைட்டா சிஎம் ஆவுற மாதிரி பிளான் ஏதாவது இருக்கும்.

நான் பாவம் இல்லையா? ஒரு பக்கம் தங்கமணி என்ற பெயரில் ஒரு சோதனை. இது போதாது என்று நண்பன் என்ற பெயரில் இன்னொரு இம்சை. இது பத்தாதுன்னு ஆஃபிஸ் வேற. ஒரு மனுஷனுக்கு இத்தனை சோதனை இருக்கக்கூடாது. என்னா பாடு.? முன்ன வந்தா கடிக்கிறது, பின்ன போனா உதைக்கிறது. ‘எதையும் தாங்கும் இதயம்’னு என்னை நானே அவ்வப்போது சொல்லிக்கொள்வேன். பின்ன இல்லையா? அறிவு இருந்தாலும் சமாளிக்கலாம். இல்லைன்னாலும் சமாளிக்கலாம். இருக்குதா இல்லையான்னே தெரியாம இப்படி ஒரு கூட்டம் என்னைச்சுற்றி. ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் உங்களுக்குச் சொல்லிவைத்தால் நீங்களாவது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பீர்கள் என்ற ஒரு நல்லெண்ணம்தான் இதையெல்லாம் எழுதக் காரணம். ஒரு பொது சேவை மாதிரின்னு வெச்சுக்கங்களேன். அதில் இதுவரை தொடாத சப்ஜெக்ட்தான் இந்த ‘கண்ணன் கதைகள்’.

பள்ளியிறுதிக்காலம், காதல்காலம், கவிதைக்காலம், கல்லூரிக்காலம், சினிமா மற்றும் புத்தகங்கள் என ரசனைக்காலம், மதுக்காலம், வேலைதேடுங்காலம், தேடியவேலைகளைத் தொலைத்தகாலம், ஊர்சுற்றிக்காலம், கல்யாணக்காலம், வெய்யக்காலம், காற்றடிகாலம், மழைக்காலம் என முடிந்த, தொடரும் பலவற்றிலும் இடையறாத வெற்றிகளைக் கொண்டாடவும் தோல்விகளைக் கூத்தாடிக்கொண்டாடவும் இருக்கும் ஒரு நட்பு. இதில் நான் அனுபவித்த இம்சைகள் ஏராளம்.

இப்படி ஒண்ணு எழுதப்போறேண்டா என்று சொன்னப்போ ‘என்ன அப்படியே நல்ல மாதிரி எழுதுடா, ஹீரோ மாதிரி இருக்கணும். இண்ட்ரொடக்ஷன் கதை வேணா நா ஐடியா கொடுக்கட்டுமா?’ என்றான். நான் வேண்டாம் என்றேன்.

‘ஏதாவது லேடிஸ்க்கு உதவுற மாதிரி ஆக்ஷன் ஓபனிங்கா இருக்கணும்’

வெளங்கிரும் என்று நான் சொல்லவில்லை, நினைத்துக் கொண்டேன். வாரம், பத்துநாளுக்கு ஒருதடவை இந்த ‘கண்ணன் கதைகள்’ என்ற இம்சையும் தொடரலாம்.

.

25 comments:

jothi said...

me the first???

jothi said...

கிருஷ்ணனும், கண்ணனும் ஒருவனே. ம்ம்ம்,.. நடத்துங்கள்.

கார்க்கி said...

ஆஹா.. வச்சார் பாருங்க எனக்கு ஆப்பு..

Truth said...

waiting :-)

சென்ஷி said...

:))

தராசு said...

பில்டப்பூ ஒவரா இருக்குதப்பு, மேட்டருக்கு வாங்க, இப்பவே அங்க கார்க்கிக்கு வயத்தை கலக்குதாம்

sakthi said...

என்ன அப்படியே நல்ல மாதிரி எழுதுடா, ஹீரோ மாதிரி இருக்கணும். இண்ட்ரொடக்ஷன் கதை வேணா நா ஐடியா கொடுக்கட்டுமா?’ என்றான். நான் வேண்டாம் என்றேன்.

‘ஏதாவது லேடிஸ்க்கு உதவுற மாதிரி ஆக்ஷன் ஓபனிங்கா இருக்கணும்’

ஆஹா ஆஹா நம்பிட்டோம்

மோதிரம் எங்கே வாங்கபோறீங்க ஆதி அண்ணா???

இதுக்கு தான் அறிவிப்பு தருவதற்கு முன்னால் யோசிக்கணும்

சரி சரி போனா போகுது

உங்கள் பதிவு அருமை

Mahesh said...

கண்ணன் வருவான்... கதை சொல்லுவான்...

நடத்துங்க.... நடத்துங்க...

வித்யா said...

ம்ம்ம் நடக்கட்டும்.

புதுகைத் தென்றல் said...

எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு மட்டுமில்ல ஃப்ரெண்ட் எங்களுக்கும் தான்.

நர்சிம் said...

ம்.

புன்னகை said...

ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்! :-)

சின்னக்கவுண்டர் said...

இந்த கதை அறிவிப்பு திரு கண்ணனுடன் 90 அடித்துவிட்டு வெளியிடப்பட்டதா ??

முரளிகண்ணன் said...

எதிர்பார்ப்புடன்

அ.மு.செய்யது said...

வாரத்துக்கு பத்து போஸ்ட்டா ??

அவ்வ்வ்வ்வ்வ் !!!!!!!

அறிவிலி said...

//இருக்குதா இல்லையான்னே தெரியாம இப்படி ஒரு கூட்டம் என்னைச்சுற்றி//

யாருக்கு?

முன்னுரை நல்லா இருக்கு.

அப்பறம்.. 151 யாருன்னு கவனிச்சீங்களா?

தமிழ்ப்பறவை said...

//அறிவு இருந்தாலும் சமாளிக்கலாம். இல்லைன்னாலும் சமாளிக்கலாம். இருக்குதா இல்லையான்னே தெரியாம இப்படி ஒரு கூட்டம் என்னைச்சுற்றி//
இனம் இனத்தோடதான சேரும்...ஹி..ஹி...
அப்போ கண்ணன் கதைகள்ல அடிக்கடி 90,குவார்ட்டர்,பார் அப்பிடி இப்பிடின்னு வாசம் வீசும் அடிக்கடி... ஓ.கே.. ஓ.கே

வெங்கிராஜா said...

//என்னா பாடு?//
வேற மாதிரி இருக்குங்களே! ஹிஹி

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜோதி.!
நன்றி கார்க்கி.! (புட்டிக்கதைகளுக்கு போட்டியாக கருதுகிறாயா? ஹிஹி.. இருக்கலாம், எனக்குத்தெரியாது.!)

நன்றி ட்ரூத்.!
நன்றி சென்ஷி.!நன்றி தராசு.!
நன்றி சக்தி.!நன்றி மகேஷ்.!
நன்றி வித்யா.!நன்றி தென்றல்.!
நன்றி நர்சிம்.!நன்றி புன்னகை.!
நன்றி கவுண்டர்.!நன்றி முரளி.!
நன்றி செய்யது.!நன்றி அறிவிலி.!
நன்றி தமிழ்.!நன்றி வெங்கி.!

Cable Sankar said...

ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்.. ஆனா ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு 90 தரணும்.. என்னா ஆதி.. ரெடியா..?

கும்க்கி said...

கண்ணன் கதையா...
அய்யோ அம்மா......
(சொந்த அனுபவத்தில் பயந்து விட்டேன்)
கர்மா யாரை விட்டது.அடிச்சு தொவைய்ங்க....

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

சூரியன் said...

வெள்ங்கிரும் இந்த மொக்கையே முடியல ,, இன்னுமா ?

//. ‘எதையும் தாங்கும் இதயம்’//
நாங்களும் தான் ,,

//அறிவு இருந்தாலும் சமாளிக்கலாம். இல்லைன்னாலும் சமாளிக்கலாம். இருக்குதா இல்லையான்னே தெரியாம இப்படி ஒரு கூட்டம் என்னைச்சுற்றி//

உங்களுக்கு எப்படி இருக்கா இல்லையா இல்ல தெரியலையா ?

ராம்.CM said...

அதையும்தான் படித்து பார்ப்போம்....

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேபிள், கும்க்கி, சூரியன், ராம்.. அனைவருக்கும் நன்றி. கொஞ்சம் பிஸியாக இருந்ததால் உடனுக்குடன் வந்து லைவ்வாக பதில் சொல்ல முடியவில்லை.. ஜாரி.!