Monday, May 11, 2009

ஆண்களால் உருவாகும் சமூகம் : Dr. ஷாலினி

நேற்று(10.05.09) நண்பர்களின் முயற்சியால் கிழக்கு பதிப்பகத்தின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை' என்ற த‌லைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கம் வெற்றிகரமானதாக அமைந்தது.
டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி ஆகியோர் உரையாற்றினர். ஏராளமான பதிவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பிரபல பெண் பதிவர்களும் கலந்துகொண்டது கருத்தரங்கை முழுமையடையச் செய்தது. நிகழ்ச்சியைக் கருத்தரங்கம் என்பதை விடவும் இளம்பெற்றோருக்கான பயிற்சிப்பட்டறை என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ருத்ரனும் ஷாலினியும் பல கருத்துகளையும், பயிற்சிகளையும் முன்வைத்தனர். மையக்கருத்தை விட்டு விலகாமல் ஷாலினி ஒரு தேர்ந்த பேச்சாளருக்குரிய லாவகங்களுடன் பேசி வியக்க வைத்தார்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் மனநிலை, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் ‘உட‌ல்’ குறித்த‌ விழிப்புண‌ர்வு, பாலிய‌ல் வ‌ன்முறையிலிருந்து காக்க‌ குழ‌ந்தைக‌ளை த‌‌யார் செய்வ‌து என‌ விரிவாக‌ நிக‌ழ்ச்சி அமைந்திருந்த‌து. ஒரே கேள்வி ப‌ல‌ கோண‌ங்க‌ளில் கேட்க‌ப்ப‌ட்ட‌து, நான்கு வார்த்தைக‌ளில் கேட்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ கேள்விகள் நாற்ப‌து வரிக‌ளில் கேட்கப்ப‌ட்ட‌து போன்ற‌வை சிறிது ச‌லிப்ப‌டைய‌ வைத்தாலும் இறுதியில் கேள்வி ப‌தில் ப‌குதியும் சிற‌ப்பாக‌வே நிகழ்ந்த‌து.

ஆண் குழ‌ந்தைக‌ளைப் ப‌ற்றி Dr. ஷாலினி பேசிக்கொண்டிருந்த‌ போது சொன்ன‌ ஒரு க‌ருத்தை இங்கே பதிவு செய்வதை மிக அவசியமாய் கருதுகிறேன். அவரது பேச்சின் அடிநாதமாக ஆரோக்கியமான, வளரும் சமூகம் என்ற கருத்து இருந்தது, இது போன்ற பயிற்சிகளின் அடிப்படை நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதை விளங்கச்செய்தது. ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார். மிகுந்த‌ சிந்த‌‌னைக்குரிய‌ விஷ‌ய‌மாக‌ இது இருந்த‌து.

அப்புற‌ம் மேலும் சில‌ புதிய பதிவர்களை/ந‌ண்ப‌ர்க‌ளையும் ச‌ந்திக்கமுடிந்தது. உமாஷக்தி அக்கா, சந்தனமுல்லை அக்கா, ரம்யா அக்கா, அமித்துஅம்மா அக்கா, வித்யா அக்கா (ஒண்ணுமில்ல.. எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்ற உண்மை தெரிந்துவிட்டது.. ஹிஹி..) போன்ற பெண் ப‌திவ‌ர்க‌ள் சிலரையும் நேரில் பார்த்து அறிமுக‌ம் செய்துகொண்ட‌து ம‌கிழ்ச்சியான‌ அனுப‌வ‌மாக‌ இருந்த‌து. நிக‌ழ்ச்சிக்கான‌ கார‌ண‌மாக‌ அமைந்த‌ அனைத்து தோழ‌ர்க‌ளுக்கும் ம‌ன‌ப்பூர்வ‌மான‌ வாழ்த்துகளும், ந‌ன்றிகளும்.
.

41 comments:

jothi said...

// ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார். //

வித்தியாசமான பார்வை. ஆனால் அதை ஒரு பெண்தான் (தாய்) செய்ய முடியும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

ஸ்ரீமதி said...

அருமையான பதிவு :))

jackiesekar said...

நிங்க சின்ன பையனா? சொல்லவே இல்லை

Kanna said...

// ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார். //

கண்டிப்பாக சிந்திக்க தூண்டும் வரிகள்..
அருமையான தொகுப்பு

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்

Cable Sankar said...

அருமையான தொகுக்கப்பட்ட பகிர்வு ஆதி.. நைஸ்..

Cable Sankar said...

போன பின்னூட்டத்தில் ஆதி அண்ணே என்று போட மறந்துவிட்டேன்.. என்ன இருந்தாலும் உங்கள விட வயசுல சின்னவன்.. மன்னிக்கணும்.. ஆதி அண்ணே..

ஆயில்யன் said...

கேபிள் சங்கர் அண்ணே சொன்னதை திரும்ப சொல்லிக்கிறேன் :))

புதுகைத் தென்றல் said...

எல்லோரையும் அக்கான்னு சொல்லி உங்க டச்சோட பதிவு (அது இல்லாட்டி பதிவு சோபையா இருக்காது பாருங்க):)))

கார்க்கி said...

உங்களுக்கே அக்கான்னா எனக்கு ஆண்ட்டியா ????????

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Mahesh said...

சூப்பர் கவரேஜ் (உங்க வயசைக் கவர் பண்ணீங்களே.. அதைச் சொன்னேன் :)

அருமையான பதிவு...

தண்டோரா said...

very "good touch"

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஜோதி.! (ரொம்ப அழகா சொன்னீங்க..)

நன்றி ஸ்ரீமதி.!
நன்றி ஜாக்கி.!
நன்றி கண்ணா.!
நன்றி கேபிள்தம்பி.!

நன்றி ஆயில்.! (வயசுப்பிரச்சினை ஆண்களானாலும் பெண்களானாலும் என்னா பிரச்சினையா இருக்குதுபா..)

நன்றி தென்றல்.! ((நீங்க எனக்கு அக்காங்கிறதுதான் எப்பவோ தெரியுமே..)

நன்றி கார்க்கி.! ((ரொம்ப ஆடாதயடியேய்.. நீ போனப்புறம் தோழிகள் பிரமிப்பாய் பேசிக்கொண்டிருந்தது உன் தொப்பையைப்பற்றிதான்..)

நன்றி மகேஷ்.!

புதுகைத் தென்றல் said...

((நீங்க எனக்கு அக்காங்கிறதுதான் எப்பவோ தெரியுமே..)//

உண்மையா நீங்கதான் அண்ணன் என்பதை மறைச்சு இப்படி எல்லாம் சொல்லிட்டா நீங்க யூத்துன்னு ஃப்ரூவ் ஆகிடுமா ஃப்ரெண்ட்.

சரி போகட்டும் விடுங்க. ஹைதைக்கு அடிக்கடி வரும் உங்களுக்காக ஒரு பதிவு போட்டிருக்கேன் வந்து பாருங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

what is this grandpa !!!!!!!

Chill-Peer said...

நல்ல தொகுப்பு ஆதி தம்பி, ;)

இன்னும் விரிவாக எதிர்பார்த்தேன்.
ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? கிடைக்குமா?
நானும் ஒரு இளம் தந்தை.

எம்.எம்.அப்துல்லா said...

//உமாஷக்தி அக்கா, சந்தனமுல்லை அக்கா, ரம்யா அக்கா, அமித்துஅம்மா அக்கா, வித்யா அக்கா (ஒண்ணுமில்ல.. எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்ற உண்மை தெரிந்துவிட்டது.. ஹிஹி..)

//


கரெக்ட்டா சொன்னீங்கண்ணே ஹி..ஹி..

குடந்தைஅன்புமணி said...

// ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார். //

//வித்தியாசமான பார்வை. ஆனால் அதை ஒரு பெண்தான் (தாய்) செய்ய முடியும் என்பதுதான் யதார்த்தமான உண்மை.//

உண்மை.உண்மை.உண்மை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

தென்றல் :நாக்கு செத்துப்போய் கிடக்கும் ஒரு மனிதனை இப்படியெல்லாம் விவரித்து பதிவு போட்டு கொடுமை செய்வது நியாயமா ஃபிரெண்ட்?

வாங்க அமித்து பாட்டிம்மா.!

வாங்க சில் அண்ணே.! (இளம் தந்தை என்றால் இளமையான தந்தை என்ற அர்த்தம் கிடையாது என்று எல்லோருக்கும் இங்கே விளக்க கடமைப்பட்டிருக்கிறேன்)

நன்றி அப்துல்.!
நன்றி அன்புமணி.!

அ.மு.செய்யது said...

// எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் //

மெய்யாலுமா ??

வித்யா said...

பெருசு உங்களுக்கு லொள்ளு ஜாஸ்திதான்.

jothi said...
This comment has been removed by the author.
புதுகைத் தென்றல் said...

நாக்கு செத்துப்போய் கிடக்கும் ஒரு மனிதனை இப்படியெல்லாம் விவரித்து பதிவு போட்டு கொடுமை செய்வது நியாயமா ஃபிரெண்ட்?//


ஹைதை வரும்போது ஃப்ரெண்ட் மிஸ் செய்யாம சாப்பிட்டு எஞ்சாய் செய்யணும்னுதான் பதிவு போட்டேன்.

நியாயமா நல்லதுதானே ஃப்ரெண்ட் செஞ்சிருக்கேன்!!!

மணிநரேன் said...

அவசியமானதொரு விவாதம் நடைபெற்றுள்ளது.

ரொம்ப சீரியசான விவாதத்தை பற்றி எழுத ஆரம்பித்து அதிலே காமெடியையும் சேர்த்துட்டீங்கிளே!!!!!!
(பின்னூட்டங்கள் உட்பட...)

வால்பையன் said...

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்!

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

நிகழ்ச்சி சிறப்பாக அமைந்ததற்கு வாழ்த்துகள். ஷாலினியின் தீவிர ரசிகன் நான். :)

நிகழ்ச்சியில் மருத்துவர்கள் இருவரும் பேசியதை ஒலி/ஒளி வடிவில் இருந்தால் வலையேற்றலாமே. வரமுடியாமல் தவித்த எங்களுக்கும் பயன்படுமே.

ராம்.CM said...

நல்ல பதிவு..!

"அகநாழிகை" said...

ஆதி…
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

ச்சின்னப் பையன் said...

அருமையானதொரு முயற்சி.. பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...

அன்புடன் அருணா said...

//எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்ற உண்மை தெரிந்துவிட்டது.. ஹிஹி..) ///

அடடா எவ்வ்ளோ முக்கியமான விஷயம்!!!!
அன்புடன் அருணா

தமிழன்-கறுப்பி... said...

ok...

அத்திரி said...

//Cable Sankar said...
போன பின்னூட்டத்தில் ஆதி அண்ணே என்று போட மறந்துவிட்டேன்.. என்ன இருந்தாலும் உங்கள விட வயசுல சின்னவன்.. மன்னிக்கணும்.. ஆதி அண்ணே..//

இந்த யூத்து தொல்லை தாங்க முடியல ஆதி அண்ணே

அத்திரி said...

//நன்றி கார்க்கி.! ((ரொம்ப ஆடாதயடியேய்.. நீ போனப்புறம் தோழிகள் பிரமிப்பாய் பேசிக்கொண்டிருந்தது உன் தொப்பையைப்பற்றிதான்..)//

சகா கவனம் தேவை

அப்பாவி முரு said...

அடப்பாவிகளா...

நிகழ்ச்சியின் தலைப்பு.,

பதிவின் தலைப்பை விடுத்து

வயதைப்பத்தியே பின்னூட்டமிடுவதிலிருந்து உங்களுக்கெல்லாம் மனதளவில் வயசாயிடுச்சுன்னு தெரியுது.

மறைக்கப் பாருங்க அண்ணன்ஸ் & அக்காஸ்

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆமாம் செய்யது.

டயட்ல இருக்கீங்களா வித்யா? (பெருசுன்னு சொன்னா இப்பிடித்தான் பழிவாங்குவோம்).

இங்கே சென்னையில் ஹோட்டல்ல சாப்பிடறதும் ஒண்ணு, அனுஜன்யா கவிதைகளை படிப்பதும் ஒண்ணுதான்.. அந்த வயித்தெரிச்சல்ல சொன்னேன் தென்றல்.

நானும் எழுதிமுடிச்சதும் நினைச்சேன் நரேன். ஒரு வரிதானே, மன்னிக்கலாமே.!

சரிங்க வால்.

விரைவில் குழுவினர் ஒலிக்கோவையை வெளியிடுவார்கள் சஞ்சய்.

எலெக்ஷன் பிஸியிலேயும் பதிவு பார்க்கிறீங்களா ராம்? மகிழ்ச்சி.

நன்றி அகநாழிகை.

நன்றி ச்சின்னவர்.!

அப்புறம் என்ன இல்லைன்றீங்களா.. அருணா?

நன்றி தமிழன்.

என்னை பாராட்டிக்கொண்டே அடுத்த பின்னூட்டத்தில் சேம்சைட் கோலா? நடக்கட்டும் அத்திரி.

எங்களுக்கு மனதளவில்னா? உங்களுக்கு உடலளவிலா முரு.?

RAMYA said...

ஹல்லோ என்னா ஆச்சு?? சரி சரி, நாங்க எல்லாரும் உங்களுக்கு அக்காதான் பரவா இல்லை ஆதி.

ஆனா நீங்க கூறி இருக்கும் விஷயங்கள் அருமையா இருந்திச்சு.

வித்தியாசமான கோணங்களில் அவர்கள் கூறியதை பதிவேற்றி இருக்கின்றீர்கள். அருமை.

நல்ல பதிவு நன்றி நன்றி!!

ஊர்சுற்றி said...

இதற்காக உழைத்த அனைவருக்கும் நமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களாயும் தெரிவித்துக் கொள்வோம்.

பகிர்ந்துகொண்ட ஆதிமூலகிருஷ்ணனுக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

ஷாலினி சொல்வது 100க்கு 100 உண்மைதான்.

மதம் முதல், நாடு, கொள்கைகள் அனைத்தும் ஆண்களாலேயே கட்டமைக்கப்படுகிறது

சிந்தா மணி said...

தங்களது இந்த பதிவு விடனில் வந்துள்ளது http://youthful.vikatan.com/youth/index.asp

அபி அப்பா said...

ஆதி அண்ணா நல்ல பகிர்வு!

நெல்லைத்தமிழ் said...

ஆண்க‌ளாலேயே இந்த‌ ச‌மூக‌ம் க‌ட்ட‌மைக்க‌ப்ப‌டுகிற‌து, அவர்களாலேயே ச‌மூக‌த்தின் வ‌ள‌ர்ச்சி நிர்மாணிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆக‌வே ஆண்க‌ள் முழு சுய‌ம‌திப்புட‌னும், ஆண் என்ற‌ க‌ர்வ‌த்துட‌னும் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட‌வேண்டிய‌து ச‌மூக‌ வளர்ச்சிக்கான‌ அவசியத்தேவை என்றார்.////
அவரது பேச்சின் முழு சாரத்தையும் ஒரு சில வரிகளில் கொடுத்து விட்டீர்கள்.///

உமாஷக்தி said...

அருமையான பதிவு அன்புத் தம்பி:))