Thursday, May 21, 2009

போக்க யோகே (Poka Yoke)

என்னடா இது.? 'சம்பவாமி யுகே யுகே..' மாதிரி ஸ்லோகன் சொல்றேன்னு பார்க்கிறீங்களா? அதெல்லாம் இல்லை, இது இன்னுமொரு டெக்னிகல் ஜல்லி ஃப்ரம் ஜப்பான்.‌

உங்கள் தங்கமணி யாருக்கோ போன் செய்யத்துவங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் அவர் பேசக்கூடும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இதனால் என்னென்ன பின் விளைவுகள் நேரலாம்? நீங்கள் டிவியை ம்யூட் பண்ணவேண்டிருக்கும். காஃபி கிடைக்காது. உங்கள் அடுத்த வேளை உணவு ஹோட்டலில் என்பது உறுதியாகலாம். இதனால் உங்களுக்கு நேர விரயம், உழைப்பு விரயம், தொலைபேசிக் கட்டணம், சாப்பாட்டுக்கான ஹோட்டல் செலவு, போய்வருவதற்கான பெட்ரோல் செலவு இப்படியாக ஒரு பட்டியல் நீண்டு கொண்டே போகும். அவரை விரைந்து போனை வைக்கும்படி செய்தால் இந்த அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் நீங்கள் தப்பிக்கலாம். அவரை எப்படி போனை வைக்கச்செய்வது? உங்களால் அவரை திட்டி வைக்கச்சொல்லமுடியமா? அவ்வளவு வீரமான ஆணாக நீங்கள் இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கானது அல்ல, அப்படியே இருந்தாலும் கூட போன் உடைந்து சிதறுவது, பாத்திரங்கள் நெளிந்துபோவது, உங்கள் மண்டை வீங்கிப்போவது போன்ற சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.

அப்படியானால் என்ன செய்யலாம்? பதில் உள்ளே..

உற்பத்தி மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் இருப்பவர்களை அவர்களது மானேஜர்கள் அடிக்கடி பிராண்டி வைக்கும் பல விஷயங்களில் ஒன்றான இந்த 'போக்க யோகே' என்றால் என்ன? ‌

'போக்க‌ யோகே' என்றால் த‌மிழில் 'ஃபெயில் சேஃபிங்' (Fail safing) ஸாரி.. 'த‌வ‌று நிக‌ழ்வ‌தைத் த‌டுத்த‌ல்' என்று அர்த்த‌மாகிற‌து. ஒரு செய‌லில் த‌வ‌று நிக‌ழ்வ‌தால் ஏராள‌மான‌ அள‌வில் நேர‌ விர‌ய‌ம், ம‌னித‌ உழைப்பு விர‌ய‌ம், இய‌ற்கை வ‌ள‌த்தின் விர‌ய‌ம் ம‌ற்றும் ப‌ண‌ விர‌ய‌ம் ஏற்ப‌டுகிற‌து. அது குண்டூசி த‌யாரிப்ப‌தானாலும் ச‌ரி, கார் த‌யாரிப்பானாலும் ச‌ரி. இந்த‌ விர‌ய‌ங்க‌ளைப் ப‌ற்றி விரிவான‌ ஒரு ப‌குதியை பின்ன‌ர் காண்போம். இந்த‌த்த‌வ‌றுக‌ளை ச‌மாளித்துக் கொண்டும், ச‌ரி செய்து கொண்டும், பொறுத்துக் கொண்டும் தொழிலுல‌க‌ம் இய‌ங்கிக் கொண்டிருக்கிற‌து. இதில் எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிற‌தோ அங்கெல்லாம் த‌வ‌றுக‌ளையே ந‌ட‌க்க‌விடாம‌ல் செய்துவிட்டால் எப்ப‌டியிருக்கும்?

அந்த‌ அடிப்ப‌டையில் தோற்றுவிக்க‌ப்ப‌ட்ட‌துதான் இந்த‌ Poka yoke எனும் 'Fail safing' வழிமுறை. இதுவே 'Mistake proofing', 'Fool proofing' போன்ற‌ மேலும் சில‌ பெய‌ர்க‌ளிலும் அழைக்க‌ப்ப‌டுகிற‌து. இது 'ஷிஜியோ ஷிங்கோ'(Shigeo shingo) என்ற‌ ஜ‌ப்பானிய‌ 'டொயோட்டா' நிறுவ‌ன‌ வ‌ல்லுன‌ரால் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து.
உல‌க‌ குவாலிடி துறையே த‌வ‌றுக‌ளை ச‌ரி செய்வ‌தை (Correction) விடுத்து த‌டுப்ப‌து (Prevention) எப்ப‌டி என்ப‌தில்தான் ம‌ண்டையை உடைத்துக் கொண்டுள்ள‌‌து இப்போது. அதற்கான சிறு ப‌ங்க‌ளிப்பையே இந்த‌ தொழில்நுட்ப‌ம் வ‌ழ‌ங்குகிற‌து.‌ இந்த‌ வ‌ழிமுறை என்ன‌ சொல்கிற‌து என்றால், ஒரு பொருள் த‌யாரிக்க‌ப்ப‌டும் செய‌லின் போதே த‌வ‌று த‌டுக்க‌ப்ப‌ட்டுவிட‌வேண்டும், த‌ப்பினால் உட‌னே க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டு ஒரு தவறான பொருளுக்காக அடுத்த‌டுத்து நிக‌ழ‌விருக்கும் விர‌ய‌ங்க‌ளை த‌டுத்து நிறுத்திவிட‌வேண்டும்.

பதிவின் துவக்கத்தில் பார்த்த உதாரணத்துக்கு வாருங்கள். அதற்கான விடை Fail safing.. ஒரே நிமிடத்தில் போன் ஆட்டோமேடிக்காக துண்டிக்கப்படும் வசதி. அவர் தொடர்ந்து இரண்டு மூன்று முறைகள் டயல் செய்து பேசிவிட்டு கடுப்பாகி வைத்துவிடுவார். அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை. இதைப்போலத்தான் ஒரு ஃபெயில் சேஃபிங் வழிமுறை இருக்க வேண்டும்.

பைக்கில் சைட் ஸ்டாண்டை எடுக்காமல் மறந்து போய் எத்தனை தடவைகள் வண்டியை ஓட்டிச்சென்றிருக்கிறோம் நாம்? எவ்வளவு ஆபத்தானது இது? சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் ஒரு புதிய மாடல் பைக் சைட் ஸ்டாண்ட் எடுக்கப்படவில்லையெனில் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாதவாறு வடிவமைக்கப்பட்டிருப்பதாக கேள்வியுற்றேன். அது ‘போக்க யோகே’வுக்கு ஒரு ஆகச்சிறந்த உதாரணமாக இருக்கும்.

இதில் மூன்று நிலைகள் (Levels) உண்டு.
ஆளில்லாத, கேட்டில்லாத ரயில்வே கிராசிங். தொடர்ந்து விபத்துகள் நிகழ்கின்றன. அதைத் தடுப்பதற்கான ‘போக்க யோகே’ லெவல்கள்..

Level 1 : சிக்னல்கள் (அதைக்கண்டும் பொறுமையில்லாமல் வண்டியோடு ரயில் முன் போய் விழுவார்கள் நம்மவர்கள்)

Level 2 : உறுதியான இருப்பு கேட் (வண்டி வைத்திருப்பவர்கள் பொறுமைகாத்தாலும், நடந்து செல்பவர்கள் கேட்டை எகிறிக்குதித்து சரியாக ரயில் முன் பாய்வார்கள்)

Level 3 : வேறு வழியில்லை, ஓவர்ஹெட் பாலம். (100% சேஃப்)

இடம், பொருளாதாரம், அவசியம் மற்றும் சூழலுக்கேற்ப தேவையான லெவல்களை தேர்ந்தெடுக்கலாம். தவறுகளைக் களையலாம்.

இது தொழிற்சாலைகளுக்கு மட்டுமானது என்றில்லை, எங்கெல்லாம் தவறு நிகழ்கிறதோ அங்கெல்லாம் அவற்றைத்தடுக்க ஒரு சிறந்த வழிமுறையை நம்மால் தரமுடியும். என்ன.. கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.! அதுதானே பிரச்சினையேங்கிறீங்களா.? அதுவும் சரிதான்.

.

39 comments:

எம்.எம்.அப்துல்லா said...

mee the first

எம்.எம்.அப்துல்லா said...

iruya appuram varren.

நர்சிம் said...

ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள் ஆதி.. கலக்கல் ரேஸ்..

ஆயில்யன் said...

புதிதாய் ஒரு நுட்பத்தினை தெரிந்துக்கொண்டேன்!

நன்றி!

Anonymous said...

நம்ம கடைக்கு வந்ததுக்கு நன்றி ஆதி..

scooty பெப்+ வண்டியில் இந்த வசதி உள்ளது, ஸ்டாண்ட் எடுகலைன்ன சத்தம் வந்துட்டே இருக்கும். நல்ல துறை சார்ந்த பதிவு.

கே.ரவிஷங்கர் said...

27-05-09
பக்கம் 50
ரேஸ்
ஆதிமூலகிருஷ்ணன்
வாழ்த்துக்கள்.

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு! வாழ்த்துகள்!

வெங்கிராஜா said...

ஆ.வி-ல நீங்களும் வந்துட்டீங்களா தல? வாழ்த்துக்கள். மணிப்பாலில் ஆ.வி கிடைப்பதில்லை. யாராவது ஸ்கேன் காப்பி ஏதாச்சும் இருந்தா போடுங்களேன்..
பை தி வே, ஃபெயில் சேஃப் பற்றி அறிந்திருந்தாலும் பூரிக்கட்டை-தங்கமணி தொலைபேசி முதலியவற்றின் எளிய அணுகுமுறை பிரமிக்க வைக்கிறது. 300 பேர் தினமும் படிக்கிர வலைப்பூன்னா சும்மாவா? சூப்பரப்பு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்.

poka yoke தகவல் பகிர்வுக்கு நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள்.

poka yoke தகவல் பகிர்வுக்கு நன்றி

கார்க்கி said...

அப்படி போடு.. கோத்ரேஜின் நேர்முக்த் தேர்வில் எனக்கு வேலை வாங்கி கொடுத்ததே இதைப் பற்றி நான் கொடுத்த பிலடப்புதான்..

இத விடுங்க, ஆவி மேட்டர சொல்லவேயில்லயே பாவி..

வாழ்த்துகள்..

மாசற்ற கொடி said...

வாழ்த்துக்கள். ரொம்ப எளிமையா நல்லா இருக்கு.

அன்புடன்
மாசற்ற கொடி

அ.மு.செய்யது said...

ஆவியில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்.நீங்க‌ளும் ர‌வுடி தான்னு ப்ரூவ் ப‌ண்ணிட்டேள்.

எக்ஸ்பெக்டட் ஒன்.

//ஆ.வி-ல நீங்களும் வந்துட்டீங்களா தல? வாழ்த்துக்கள். மணிப்பாலில் ஆ.வி கிடைப்பதில்லை. யாராவது ஸ்கேன் காப்பி ஏதாச்சும் இருந்தா போடுங்களேன்..//

என‌க்கும் தாங்க‌...

syedmohamedfirdous@gmail.com

Indian said...

Good one. Keep going.

இராகவன் நைஜிரியா said...

இது வரைக்கும் 12 பேர் சேர்ந்து 14 கமெண்ட் போட்டு இருக்காங்க. அதுல ஒரு 8 பேராவது தமிழிஷ், தமிழ் மணம் இதுல ஓட்டு போடணும் அப்படின்னு தோணல. இதுக்கு ஒரு வழி கண்டு பிடிக்கணும். தல, வாழ்த்துகள் இப்படி நிறைய சொல்லிகிட்டு இருக்கோம். அப்படியே ஒரு ஒட்டும் போட்டா இன்னும் நல்லா இருக்கும்.

யாரும் என்ன அடிக்க வராதீங்கப்பா. எல்லாம் பக்கத்து இலைக்கு பாயசம் வேணும் சொல்வது மாதிரிதான்.

Mahesh said...

ஓகே ஓகே !!!

பஜார்ல புதுசா?

அது எப்பிடிண்ணே டெக்னாலஜிக்கும் சரி டெய்லி லைஃபுக்கும் சரி தங்கமணியை கோத்து விட்டே விளக்கம் குடுக்கறீங்க?

Mahesh said...

விகட(ன்) வாழ்த்துகள் !!

Anonymous said...

நமக்கெல்லாம் ஒரே fail safe என்னன்னா தங்கமணி கோபப்பட ஆரம்பிச்சாச்சுன்னு தெரிஞ்ச உடனே சரண்டர் ஆயிடறதுதான்.

SK said...

வாழ்த்துக்கள் ஹை..

அச்சா ஹை...

கலக்குங்கோ ஹை

jothi said...

// எங்கெல்லாம் தவறு நிகழ்கிறதோ அங்கெல்லாம் அவற்றைத்தடுக்க ஒரு சிறந்த வழிமுறையை நம்மால் தரமுடியும் //


தவறு நடந்தால்தாலதான் அதன் மூலகாரணத்தை (root) அறிந்து அடுத்த முறை தடுக்கமுடியும். உதாரணமாக நீங்கள் தங்கமணியிடம் ரெண்டு முறை அடி (cause) வாங்கினால்தான், கோபத்தின் காரணத்தை (root) அறிந்து அடுத்தமுறை அதே காரணத்திற்கு அடி வாங்காமல் தப்பிக்கலாம். கோபத்தின் காரணத்தை முன்பே தெரியும் அளவிற்கு இருந்தால் நாம் ஏன் கல்யாணம் செய்கிறோம்?

எல்லா கண்டுபிடிப்புகளும் ஒரு தவறிலிருந்து பிறந்தவையே. preventive, preventive என்று எல்லவற்றிற்கும் மாத்திரை போடுவதால்தான் நம்மில் பலருக்கு நோய் எதிர்ப்புதன்மையே இல்லாமல் போய்விட்டது.

Good Topic

வால்பையன் said...

ரேஸ் ஓட்டியதற்கு வாழ்த்துக்கள் தல!

அப்ப முதுகுல அடிச்சது அண்ணி ரமா தானே!

jothi said...

// முதல் சிறுகதை விகடனில் வெளியாவது என்பது பெரும்பெயரும், பெரும்பேறும் கொண்ட தமிழ் இலக்கிய உலகின் சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் போய் அமர்வதற்கு ஒப்பானது //

உட்கார்ந்ததிற்கு வாழ்த்துக்கள். (எங்களுக்கு சிம்மாசனை ஆசையெல்லாம் இல்லப்பா)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அப்துல்.!நன்றி நர்சிம்.! (யோவ் புண்ணாக்கு, ரெண்டு பின்னூட்டம் போட நேரமிருக்குது, பதிவ படிக்க நேரமில்லையா?)

நன்றி ஆயில்.!நன்றி மயில்.! (உங்களுக்கு இதுமாதிரி பதிவுகள்னா ரொம்ப பிடிக்குமாமே)

நன்றி ரவிஷங்கர்.!நன்றி முல்லை.! (பெரியவரின் (அதாவது சீனியர்) வாழ்த்து கிடைத்தமைக்கு மகிழ்ச்சி)

நன்றி வெங்கி.!நன்றி அமித்து.! (கொஞ்சம் பொறுங்க.. ரெண்டு நாள் கழிச்சுப் போட்டுடலாம்)

நன்றி கார்க்கி.!நன்றி மாசற்றகொடி.! (நமக்கே வந்தப்புறம்தான் தெரியுதுபா..)

நன்றி செய்யது.!நன்றி இன்டியன்.! (நாமதான் ஊருக்குள்ள பெரிய ரவுடின்னு அல்ரெடி ஃபார்மாயிட்டமே..)

நன்றி ராகவன்.!நன்றி மகேஷ்.! (நாயமான கேள்வி ராகவன். பஜாரில் புதுசா/ சிரிச்சேன் தல..)

நன்றி வேலன்.!நன்றி SK.! (அதான் தெரியுமே..)

நன்றி ஜோதி.!நன்றி வால்பையன்.! (என் பிட்ட‌ என‌க்கே ஓட்டுறீங்க‌ளா.. ச‌ரிதான்..)

MayVee said...

ithu enakku PG la specialisation la vanthathu boss....

app sariya padikkala ....

ipp athai patri therinthu konden..

வாழவந்தான் said...

போன பதிவில்..
//
.. எப்படி CAPA எழுதலாம் இல்லை., எப்படி CAPA எடுக்கலாம்.?
//
இப்படி கேள்வி கேட்டு விட்டுடீங்களே எப்படித்தான் எழுதுவது/எடுப்பது?

வித்யா said...

வாழ்த்துகள் ஆதி. விகடன் இன்னும் படிக்கவில்லை:(

நல்ல பதிவும் கூட:)

SUBBU said...

enkayo aarambichi enkayo konduvanthu mudichitingale :))))))))))))))))

Kanna said...

ஆவியில் ஆதி...!!

வாழ்த்துக்கள்..

கயல்விழி said...

வாழ்த்துக்கள்..

மங்களூர் சிவா said...

/
வடகரை வேலன் said...

நமக்கெல்லாம் ஒரே fail safe என்னன்னா தங்கமணி கோபப்பட ஆரம்பிச்சாச்சுன்னு தெரிஞ்ச உடனே சரண்டர் ஆயிடறதுதான்.
/

இல்லைனா ஆல்வேஸ் சரண்டர்
:))))))))))))

அறிவிலி said...

போக்க யோகே.. பிரமாதம்.
நீங்கள் விளக்கும் விதம் அருமை.

விகடனுக்கு வாழ்த்துகள்.

Saravana Kumar MSK said...

நல்ல பதிவு.. :)

ஆ.முத்துராமலிங்கம் said...

உங்க கதையை ஆ.வியில் பார்தேன் இன்னும் படிக்கல ஆனாலும் இப்பவே வாழ்த்திகிறேன்.

" உழவன் " " Uzhavan " said...

முதலில் ஆ.வி யில் கதை வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

ஒரு செயலை முட்டாள்கள் கூட சரியாகச் செய்யவேண்டும் என்பதற்காக உருவாக்கும் முறைக்கு, அதாவது Fool proofing முறையைப் பகிர்ந்த விதம் அருமை.

பட்டாம்பூச்சி said...

போக்க யோகே தகவல் பகிர்வுக்கு நன்றி.

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் ஆதி....
இன்னும் படிக்கலை ரேஸ். படிச்சுட்டு சொல்றேன்...
‘போக்கே யோக்கே’ அறிமுகம் நல்ல சுவாரஸ்யம். நல்லா ஜூஸ் கொடுத்துட்டீங்க உங்க பாணியில...சூப்பர்.

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

தராசு said...

கொஞ்சம் தாமதமாயிடுச்சு தல,

Fail Safe - அருமையான விளக்கம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மேவீ.!
நன்றி வாழவந்தான்.! (பிறிதொரு சமயம் தொடர்வோம் தோழர்)
நன்றி வித்யா.!
நன்றி சுப்பு.!
நன்றி கண்ணா.!
நன்றி கயல்விழி.!
நன்றி சிவா.!
நன்றி அறிவிலி.!
நன்றி சரவணா.!
நன்றி முத்துராமலிங்கம்.!
நன்றி உழவன்.!
நன்றி பட்டாம்பூச்சி.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி கிருபா.!
நன்றி தராசு.!