Wednesday, June 3, 2009

மிக்ஸ்டு ஊறுகாய் (03.06.09)

தமிழ்மணத்தை சீண்டியோ, வம்பிழுத்தோ பதிவு போட்டு நாளாகிவிட்டதால் கொஞ்சம் ஹிட்ஸ் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் 'தமிழ்மணமே.. விருதுகள் 2008க்கான பரிசுகள் எங்கே.?' என்று ஒரு பதிவு போடலாம் என எண்ணியிருந்தேன். ('முடிவுகள் என்னாச்சு?' என்று ஒரு பதிவு எழுதியது நினைவிருக்கலாம்). அதைத் தகர்க்கும்படி இன்று தமிழ்மணத்திலிருந்து பரிசுக்கான தகவல் வந்தது. சென்னை 'நியூ புக்லேண்ட்'ஸில் விரும்பிய புத்தகங்களை குறித்த தொகைக்கு தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் மேல்விபரங்களும் வந்துள்ளன. தமிழ்மணத்தின் சேவைகளுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

&&&&&&&&&&

நாம் தொடர்ந்து எழுதும் நாட்களில் ஃபாலோயர்கள் வராமலேயிருப்பதிலும், எழுதாமல் கேப் விடும் நாட்களில் ஒன்றிரண்டு ஃபாலோயர்கள் இணைவதிலும் உள்ள ரகசியம் புரியாமல் மண்டை குழம்பிக்கிடக்கிறேன். தற்போது நிறைய புதிய நண்பர்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அவர்கள் பதிவுகளுக்கு பதில் மரியாதையாக சென்று பார்க்க பல சமயங்களில் நேரமிருப்பதில்லை. இருப்பினும் நல்ல படைப்புகளுக்கான நல்ல்ல்ல வாசகர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள் எனவும் நம்புகிறேன் (எப்பூடி.?). அதோடு நான் ஃபாலோயராக‌ இருந்து இணைப்பு த‌ந்துள்ள‌ ப‌திவ‌ர்க‌ள் என‌க்கு ஏதாவ‌து க‌ட்ட‌ண‌ம் த‌ரலாமா என‌ சிந்திக்க‌லாம். ஏனெனில் என் ப‌திவுக்கு வ‌ரும் ந‌ப‌ர்க‌ளை விட‌வும் இந்த‌ இணைப்புக‌ள் வ‌ழியாக‌ வெளியே செல்லும் ந‌ப‌ர்க‌ள் அதிக‌மாக‌ இருக்கிறார்க‌ள். அதெப்ப‌டி வ‌ருப‌வ‌ர்க‌ளை விட‌ செல்ப‌வ‌ர்க‌ள் அதிக‌மாக‌ இருக்க‌க்கூடும் என்று வெண்ணை மாதிரி கேட்காதீர்க‌ள். ஒரே ந‌ப‌ர் ப‌ல‌ லிங்குக‌ளை கிளிக் ப‌ண்ண‌லாம் அல்ல‌வா? என் ப‌திவுக்கு வ‌ந்த‌வுட‌னே திடுமென‌ வெளியேற‌ வ‌ழி தெரியாம‌ல் இந்த‌ இணைப்புக‌ள் வ‌ழியாக‌ ஓடிவிடுவார்க‌ள் போலிருக்கிற‌து. ந‌ம்ப‌ மாட்டீர்க‌ளா? இதோ ஸ்கிரீன் ஷாட்.

&&&&&&&&&&

கே டிவி பல புண்ணியங்களை அவ்வப்போது கட்டிக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்க மாட்டீர்கள். சமீபத்தில் அவர்கள் ஒளிபரப்பிய, சத்யன் ஹீரோவாக நடித்த ‘இனியவளே’ படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு கொடுமையாகவும் படம் எடுக்கமுடியுமா என்று நான் அதிர்ந்தேன். அது சூர்யா நடித்த ‘ஸ்ரீ’, திருநாவுக்கரசு நடித்த ஏதோ ஒரு படம்.. இவைதான் தமிழின் உலகமகா மொக்கை என நினைத்துக் கொண்டிருந்த என் எண்ணத்தில் மண்ணையள்ளிப்போட்டது. வல்லவனுக்கு வல்லவன் உலகத்திலிருக்கிறான். குருவி படத்தின் ஸ்னாப்ஸிஸ் உங்களுக்காக எழுதியது நினைவிருக்கலாம். எனக்கு அந்தளவு தைரியம் இருக்குமானால் சமயம் கிடைக்கும்போது மிச்சமிருப்பவற்றையும் முயற்சிக்கிறேன்.

&&&&&&&&&&

அட சினிமாக்கார இயக்குனர்களே, தயாரிப்பாளர்களே, உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட ரசனையே கிடையாதுங்களாங்க.? ஸ்ரேயா, நமீதா போன்ற சகிக்கவே முடியாத நடிகைகளை எல்லாம் எத்தனை படங்களில் காண்பிக்கிறீர்கள். நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போன்ற இந்த பாவனாவை ஒன்றிரண்டு படங்களோடு ஓரங்கட்டிவிட்டீர்களே.. இந்தப்பாவம் உங்களைச் சும்மாவே விடாது.. பிடியுங்கள், இது என் சாபம்.!


&&&&&&&&&&

கடும் ஆஃபீஸ் டென்ஷன், ரமா ஒரு பக்கம், ஒவ்வொரு நிமிடமும் வாழ்வில் பரபரப்புதான். நிம்மதியாக டிவி பார்த்துக்கொண்டிருந்த சில மணி நேரங்களும் இந்தப்பதிவுலகினால் தொலைந்து போயிற்று. நாளை என்ன எழுதப்போகிறோம்? நண்பர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன மாதிரி பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்? போச்சு.. 24 மணி நேரத்தையும் பிஸியாக்கிவிட்டீர்கள். இப்போதெல்லாம் 12.30க்கு படுக்கையில் விழுந்து மொபைலில் ஒரு அழகான மெலடியை ஆன் செய்துவிட்டு ஒரு வரியைக்கூட கேட்க முடியாமல் அடித்துப் போட்டதுபோல அடுத்த சில விநாடிகளிலேயே உறங்கிப்போகிறேன். இது கூட வரம்தான். நன்றி நண்பர்களே.!

.

45 comments:

நமிதா..! said...

ok ok !!!

அதிஷா said...

மீ த பஸ்ட்டா?

அதிஷா said...

நமீதா செல்லம் முந்திகிச்சே...

சரி வீடு பாக்கறீங்க போலருக்கு..

நமிதா..! said...

கொஞ்சம்கூட ரசனையே கிடையாதுங்களாங்க.? ஸ்ரேயா, நமீதா போன்ற சகிக்கவே முடியாத நடிகைகளை எல்லாம் எத்தனை படங்களில் காண்பிக்கிறீர்கள்
///


இதன் மூலம் உங்க பிளாக்குக்கு வருகிற கொஞ்சம்நஞ்சம் என் ரசிகர்களையும் இழக்கிறீர்கள் :)

நமிதா..! said...

அதிஷா said...

நமீதா செல்லம் முந்திகிச்சே...
///

என்னைய பற்றி எழுதினா கை பறபறக்குது :) அதான் :)


(ஆமா அந்த திரிஷா குளியலை எடுத்தது நீங்கதானா..? ;)

வித்யா said...

ம்ம்ம் பாவனா ரசிகரா. நடத்துங்க.

Anonymous said...

எனக்கும் பாவனா, காவ்யா மாதவன், பிடிக்கும்.

சித்து said...

உங்களோடு சேர்ந்து நானும் சாபம் விடறேன். ஓட்டு போட்டாச்சு தல.

நமிதா..! said...

நாம் தொடர்ந்து எழுதும் நாட்களில் ஃபாலோயர்கள் வராமலேயிருப்பதிலும், எழுதாமல் கேப் விடும் நாட்களில் ஒன்றிரண்டு ஃபாலோயர்கள் இணைவதிலும் உள்ள ரகசியம் புரியாமல் மண்டை குழம்பிக்கிடக்கிறேன்.
///


சொல்லுறத பாத்தா பின்னுட்டம் வருதானு பார்குறதவிட ஃபாலோயர் வந்துருக்குறாங்களானு பாக்குறதே பெரிய டென்ஷனை ஏற்படுத்தும் !!!குறிப்பு : நமிதாவை புடிக்காதுனு சொன்னதால நான் இன்னும் ஃபலோயர் ஆகவில்லை :)

கார்க்கி said...

//ஸ்ரேயா, நமீதா போன்ற சகிக்கவே முடியாத நடிகைகளை //

இந்த ஞான சூனியத்த வச்சு என்ன செய்றது? நமீதா பிடிக்கலைன்னா பரவாயில்ல.. ஸ்ரேயா?

ஆதி, கண்ணாடி போடறீங்க?

சென்ஷி said...

/ நமிதா..! said...

அதிஷா said...

நமீதா செல்லம் முந்திகிச்சே...
///

என்னைய பற்றி எழுதினா கை பறபறக்குது :) அதான் :)


(ஆமா அந்த திரிஷா குளியலை எடுத்தது நீங்கதானா..? ;)//

அதென்ன நம்மீ.. எல்லா இடத்திலும் இதே கேள்வியை கேட்டிட்டு இருக்க. அடுத்த படத்துக்கு ஒளிப்பதிவாளர் தேடுறியா :))

சென்ஷி said...

//குறிப்பு : நமிதாவை புடிக்காதுனு சொன்னதால நான் இன்னும் ஃபலோயர் ஆகவில்லை :)//

எனக்கு நம்மீத்த்த்தாவை ர்ர்ர்ர்ரொம்ம்ம்ம்ப்ப பிடிக்கும் :))

குசும்பன் said...

//புதிய நண்பர்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.//

புது மனைவி கதை தெரியும் தானே தல!:) காலையில் நீங்க எழும் முன்பே குளிச்சுட்டு காப்பி டம்ளரோட நின்னுக்கிட்டு என்னங்க என்னங்கன்னு... தேன் ஒழுக கூப்பிடுவாங்க. புது பொண்டாட்டிக்கு நீங்க என்ன செய்தாலும் பிடிக்கும்!

ஹி ஹி ஏதோ சும்மா சொல்லனும் என்று தோனுச்சு!

வால்பையன் said...

//நல்ல படைப்புகளுக்கான நல்ல்ல்ல வாசகர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள் எனவும் நம்புகிறேன் //

பல மூட நம்பிக்கையில் இதுவும் ஒன்னு!

நமிதா..! said...

தேன் ஒழுக கூப்பிடுவாங்க. புது பொண்டாட்டிக்கு நீங்க என்ன செய்தாலும் பிடிக்கும்!


///கலக்கல் குசும்பன் டச் !!

வால்பையன் said...

ஸ்கீரீன் ஸாட் கிளிக்கினா பெரிதாகப்படி போட்டிருக்கலாம்!

ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு கண்ணு பவர் இல்ல!

வால்பையன் said...

ஊறுகாய்க்கு தொட்டுக்க சரக்கு இல்லையா!
அம்புட்டு தானா?

"அகநாழிகை" said...

ஆதி,
விரைவில் நல்ல வீடு கிடைக்கும். நானும் முயற்சி செய்கிறேன். உங்களோட பட்ஜட் சொன்னா வசதியா இருக்கும்.
.............
அப்புறம் ஒரு விஷயம்.. சொன்னா தப்பா எடுத்துக்கக்கூடாது.
நல்லா எழுதுறீங்க நடுநடுவில ஏன் இப்படி கிச்சுகிச்சு மூட்டுறீங்க.
.............
உங்க பாணியில சொன்னா
ஏன் இப்பூடி ?
.............

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

நர்சிம் said...

மிக நல்ல ஊறுகாய்..ஊறியகாய்..

லக்கிலுக் said...

தோழர்!

இனியவனை விட ‘சிறந்த’ படங்கள் ஏராளமானவை இருக்கின்றன. ‘சர்வம்’ பார்க்கவும்.

Raj said...

//நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போன்ற இந்த பாவனாவை//

தலைவியோட அந்த தெத்துப்பல் சிரிப்பு...அதுக்கே நம்ம சொத்த எழுதி வக்கலாமே.

பாபு said...

//பாவனாவை ஒன்றிரண்டு படங்களோடு ஓரங்கட்டிவிட்டீர்களே.. இந்தப்பாவம் உங்களைச் சும்மாவே விடாது.. பிடியுங்கள், இது என் சாபம்.!//

repeattu

jothi said...

//ஸ்கீரீன் ஸாட் கிளிக்கினா பெரிதாகப்படி போட்டிருக்கலாம்!

ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு கண்ணு பவர் இல்ல!//

//அதென்ன நம்மீ.. எல்லா இடத்திலும் இதே கேள்வியை கேட்டிட்டு இருக்க. அடுத்த படத்துக்கு ஒளிப்பதிவாளர் தேடுறியா :))//

//தலைவியோட அந்த தெத்துப்பல் சிரிப்பு...அதுக்கே நம்ம சொத்த எழுதி வக்கலாமே.//

பதிவுகளுக்கு இணையாக உங்களுக்கு வரும் பின்னுட்டங்கள் ரசிக்கும்படி இருப்பது உங்களின் அதிர்ஷ்டம்.

ஸ்ரீதர் said...

:-))))))

நமிதா..! said...

ஸ்ரேயா, நமீதா போன்ற சகிக்கவே முடியாத நடிகை
///


இதுக்கு ஒரு மைனஸ் குத்து(த்திட்டேன்)


:)


சும்மா டெஸ்டுக்காக குத்திபார்த்தேன்:)

ராஜா | KVR said...

//ஸ்ரேயா, நமீதா போன்ற சகிக்கவே முடியாத நடிகைகளை எல்லாம் எத்தனை படங்களில் காண்பிக்கிறீர்கள்//

கூடவே நயன்தாராவையும் சேர்த்துக்கோங்க :-) [நயன் ரசிகர்கள் எல்லாம் வந்து என்னை மொத்திட்டுப் போங்கப்பா]

வெண்பூ said...

ஊறுகாய்ல காரமே இல்லை.. இருந்தாலும் பாவனா ஃபோட்டோ போட்டதுக்காக மன்னிச்சுடுறேன்.. :)))

மணிநரேன் said...

//இப்போதெல்லாம் 12.30க்கு படுக்கையில் விழுந்து மொபைலில் ஒரு அழகான மெலடியை ஆன் செய்துவிட்டு ஒரு வரியைக்கூட கேட்க முடியாமல் அடித்துப் போட்டதுபோல அடுத்த சில விநாடிகளிலேயே உறங்கிப்போகிறேன். இது கூட வரம்தான்.//

உண்மையிலேயே இது மிகபெரிய வரம் ஆதி .. சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்.

அ.மு.செய்யது said...

//ஒரே ந‌ப‌ர் ப‌ல‌ லிங்குக‌ளை கிளிக் ப‌ண்ண‌லாம் அல்ல‌வா? என் ப‌திவுக்கு வ‌ந்த‌வுட‌னே திடுமென‌ வெளியேற‌ வ‌ழி தெரியாம‌ல் இந்த‌ இணைப்புக‌ள் வ‌ழியாக‌ ஓடிவிடுவார்க‌ள் போலிருக்கிற‌து. ந‌ம்ப‌ மாட்டீர்க‌ளா? இதோ ஸ்கிரீன் ஷாட்.
//

ராஜ‌ த‌ந்திர‌ங்க‌ளை க‌ரைத்து குடித்திருக்கிறீர்க‌ள் போல‌..க‌ க‌ க‌ போ..!

எம்.எம்.அப்துல்லா said...

//ஊறுகாய்ல காரமே இல்லை.. இருந்தாலும் பாவனா ஃபோட்டோ போட்டதுக்காக மன்னிச்சுடுறேன்.. :)))

//

என்ன எழுதுறதுன்னு தெரியல.... அதுனால வெண்பூ சொன்னதுக்கு ரிப்பிட்டு போட்டுக்குறேன் ஹி..ஹி..ஹி..

Kathir said...

ennanne.... baavana mela thideer paasam...

:))

வாழவந்தான் said...

//
இந்த பாவனாவை ஒன்றிரண்டு படங்களோடு ஓரங்கட்டிவிட்டீர்களே..
//
ரசனை கெட்ட உலகம் :(

//
நல்ல படைப்புகளுக்கான நல்ல்ல்ல வாசகர்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள் எனவும் நம்புகிறேன்
//
இதெல்லாம் டூ மச் பா.
என்னா வில்லத்தனம்

ஸ்க்ரீன்ஷாட் பெரிதாக போடலாமே(என்னை போன்ற சோடாபுட்டிகளுக்கு சரியாக தெரிய வாய்ப்பில்லை)
குறிப்பு: பாவனா படத்திற்கு இது பொருந்தாது(எனக்கு செலக்டிவ் சோடாபுட்டி)

தமிழ்ப்பறவை said...

1. வாழ்த்துக்கள்.
2.புலம்பல் ஓ.கே... படம் தெளிவாக இல்லை..
4.பாவனாவைப் படத்துடன் நினைவூட்டியதற்கு நன்றி...(கள்ள ஓட்டுப் போட்டது நினைவுக்கு வருது)
5.நல்ல மேட்டர்...
மொத்தத்தில் சற்றுக் காரம் கம்மிதான்...(தமிழ்மணம் பரிசைக் கொடுத்திருக்காட்டி காரம் இருந்திருக்குமோ..?!)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நமிதா.!
நன்றி அதிஷா.! (எல்லா இடத்துலயும் ஒண்ணாவே சுத்துறீங்களே ரெண்டு பேரும்.. என்ன கணக்கு.?)

நன்றி வித்யா.!
நன்றி மயில்.!
நன்றி சித்து.!
நன்றி கார்க்கி.! (ஸ்ரேயா பிரிய‌னா நீ.. என்னா ர‌ச‌னைப்பா உன‌க்கு?)

நன்றி சென்ஷி.!
நன்றி குசும்பன்.! (யோவ்.. ஏன் இப்ப‌டி?)

நன்றி வால்பையன்.! (எப்பிடி போட‌ற‌துன்னு இன்னும் விள‌ங்க‌லை.. ப‌திவுக்கு வ‌ந்து ஒரு வ‌ருஷ‌ம் ஆயிப்போச்சுது..)

நன்றி வாசுதேவன்.! (ரொம்ப‌ எதிர்பார்க்காதீங்க‌, ச‌ட்டியில் இருந்தா வ‌ந்துட்டுப்போகுது)

நன்றி நர்சிம்.!

நன்றி ல‌க்கிலுக்.! (அப்பிடியா சொல்றீங்க, பாத்துடலாம். நான் குறிப்பிட்ட‌ திருநாவுக்க‌ர‌சு ப‌ட‌ம் எதுன்னு தெரியுமா? பேரு ம‌ற‌ந்துடுச்சு)

நன்றி ராஜ்.!
நன்றி பாபு.! (என்ன ஊர்லதான் இருக்கீங்க‌ளா?)

நன்றி ஜோதி.! (பின்னூட்ட‌ம் ப‌டிக்குற‌துக்குன்னே நாலு பேரு வ‌ந்தாலும் ந‌ம‌க்குதானே லாப‌ம் இல்லையா?)

நன்றி ஸ்ரீதர்.!
நன்றி ராஜா.! (ர‌சித்தேன்)

நன்றி வெண்பூ.!
நன்றி நரேன்.! (க‌ரெக்டா சொன்னீங்க‌..)

நன்றி செய்யது.!
நன்றி அப்துல்லா.!
நன்றி கதிர்.!
நன்றி வாழவந்தான்.! (செல‌க்டிவ் சோடாபுட்டியை ர‌சித்தேன்)

நன்றி தமிழ்பறவை.! (அடுத்த‌ வாட்டி மொள‌காயை தூவிடுறேன்)

yathra said...

உங்கள் ஊறுகாய் மிகவும் சுவையாக இருக்கிறது.

T.V.Radhakrishnan said...

ஊறுகாயில் காரம் சற்று குறைவு.

ஆ.முத்துராமலிங்கம் said...

நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போன்ற இந்த பாவனாவை ஒன்றிரண்டு படங்களோடு ஓரங்கட்டிவிட்டீர்களே.. இந்தப்பாவம் உங்களைச் சும்மாவே விடாது//

ஆமாம்... ஆமாம், என் சாபத்தையும் சேர்த்துகங்க.

'ஊறுகாயில இனிப்பு கொஞ்சம் குறைவா இருக்கு'

(மேல ஒருத்தரு காரம் குறையா இருக்குன்னிருக்கார் நான் இனிப்பு.. நீங்க என்ன பண்றீங்கனு பார்ப்போம்)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பதிவு மாங்கா ஊறுகா மாதிரி இருக்குது..!

வூட்டுக்காரம்மா இல்லாம ஒரு பதிவும் எழுத மாட்டீங்க போலிருக்கே..!

லக்கிலுக் said...

//நன்றி ல‌க்கிலுக்.! (அப்பிடியா சொல்றீங்க, பாத்துடலாம். நான் குறிப்பிட்ட‌ திருநாவுக்க‌ர‌சு ப‌ட‌ம் எதுன்னு தெரியுமா? பேரு ம‌ற‌ந்துடுச்சு)//

அந்தப் படத்துக்கு பேரு அக்னித்தீர்ப்பு என்பதாக நினைக்கிறேன். போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார் இல்லையா?

ஆனால் அவர் தயாரித்த மருதுப்பாண்டி மற்றும் இன்னொரு ராம்கி படம் பார்க்கிறமாதிரி இருக்கும் :-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

மீண்டும் வந்து பதில் தந்தமைக்கு நன்றி லக்கி.! போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாராவா? வாழ்ந்திருந்தார் என்று சொல்லுங்கள்..

லக்கிலுக் said...

//மீண்டும் வந்து பதில் தந்தமைக்கு நன்றி லக்கி.! போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாராவா? வாழ்ந்திருந்தார் என்று சொல்லுங்கள்..
//

அவருக்குப் பிறகு மிகச்சிறந்த போலிஸ் அதிகாரியாக வாழ்ந்தவர் நமது மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் கே.சிவக்குமார் என்கிற ஜே.கே.ரித்தீஷ் தான் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

வெங்கிராஜா said...

நீங்களும் பாவனா ரசிகரா தல? பாவம் தல அவிங்க... தீபாவளி படம் மொக்கைன்னாலும் இவிங்களுக்காக பார்க்கலாம்!
இப்போ ட்ரெண்ட்ல அனுஷ்கா எப்புடி?

Cable Sankar said...

எனக்கும் பாவனா ரொம்ப பிடிக்கும்.

வண்ணத்துபூச்சியார் said...

விரைவில் நல்ல வீடு கிடைக்கும். நானும் முயற்சி செய்கிறேன். உங்களோட பட்ஜட் சொன்னா வசதியா இருக்கும்.

Check your Gmail.