Thursday, June 11, 2009

மிக்ஸ்டு ஊறுகாய் (11.06.09)

(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) நான் நடுவில் நின்றுகொண்டிருக்க சுற்றி பரிசல், வெண்பூ, கேபிள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
‘அவ்வ்.. பரிசல், உங்களுக்கு எத்தனாம் பக்கம்?’ “26”
‘.. வெண்பூ, உங்களுக்கு எத்தனாம் பக்கம்?’ “32”
‘.. கேபிள், உங்களுக்கு எத்தனாம் பக்கம்?’ “94”
“ஆக, மொத்தமா சேத்து 152 பக்கமா... ச்ச்சீயேர்ஸ்..!”

ஹேப்பி விகடன் டே.! மேற்குறித்த நண்பர்கள் அனைவரும் குறித்த பக்கங்களை இந்த வார விகடனில் ஆக்ரமித்திருக்கிறார்கள். (யாரும் வாழ்த்துகள்னு பின்னூட்டம் போட்டீங்க.. பிச்சு..பிச்சு.! வாழ்த்து வாழ்த்துன்னு சொல்லி எழுதறவங்களுக்கும், படிக்கிறவங்களுக்கும் ரொம்ப போரடிக்குது. புதுசா ஏதாவது சொல்லுங்க பாக்கலாம்.)

$$$$$$$$$$

அட லூஸே..

ஏந்தான் எனக்கும் லூஸுக்கும் இப்படி ஒரு பொருத்தமோ தெரியவில்லை. ஆபிஸில் எனது போன் கனெக்ஷன் லூஸ். ஒயரை பிடிச்சிக்கிட்டே பேசணும். இருக்கிற சுமார் 60 சிஸ்டம்களில் எனது நெட்வொர்க் கேபிள் மட்டும் லூஸ். என்னடா இன்னிக்கு ஒரு மெயில் கூட வரலியே.. நிம்மதி என நினைத்தால்.. சரசரவென வீட்டுக்கு கிளம்புற நேரத்துல பத்து, பதினஞ்சு மெயில்கள் வந்து தலை கிறுகிறுக்க வைக்கிறது. நான் பிரிண்ட் கொடுத்தா மட்டும் வரவே வராது. பிரிண்டருக்கு பின்னால் கேபிளை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கவேண்டும். வீட்டுக்கு வந்தா போன் சார்ஜ் போட்டா ஏறவே ஏறாது. சார்ஜர் ஒரு லூஸு. படம் பார்க்கலாம்னு பிளேயர்ல ஒரு டிவிடியை போட முயற்சித்தால் ஓபனே ஆகாது. ஒரு வழியா ஓபனாகி போட்டுவிட்டாலோ திரும்ப வெளியே வரவே வராது. நைட்ல பாத்ரூம் லைட்ட போட்டா எரியவே எரியாது. சுச்சு போர்ட்ல குத்துகுத்துனு குத்தணும். காலையில வெளிய கிளம்பினா, இந்த ஆட்டோ லாக் பூட்டியே தொலைக்காது.. சை.!

$$$$$$$$$$

கைக்குழந்தையுடன்
நீ பேசிக்கொண்டிருந்தால் கூட
அது
‘பே..’ வென உன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
என்னை மட்டும் குற்றம் சொன்னால் எப்படி.?

$$$$$$$$$$

புரிதல் என்பதுதான் எத்தனை பெரிய விஷயம் இந்த வாழ்க்கையில்? இந்த மனிதர்களைப் புரிந்துகொள்ளாமல் வேலைகளை இழந்திருக்கிறேன். நட்புகளை இழந்திருக்கிறேன். காதலை இழந்திருக்கிறேன். இன்னும்.. இன்னும்.! உணர்வுகளை.. எண்ணங்களை வெளிப்படுத்த வார்த்தைகளில்லாமல் தேடித்தேடி கண்டு கொண்டு போதாதோ என்ற சந்தேகத்துடனே சேதி சொல்கிறேன். உங்களுக்கு பல சமயங்களில் புரிவதில்லை. புரியும் நேரங்களிலும் என் மீதான நம்பிக்கையில்லை உங்களுக்கு. அவற்றை உதறித்தள்ளுகிறீர்கள். மிகுந்த சோர்வாக உணர்ந்து பேசாமலே இருந்துவிடுகிறேன் பல சமயங்களில்.

$$$$$$$$$$

திருமணங்களுக்கு செல்கையில் பைத்தியம் பிடிக்காத குறைதான், என்ன கிஃப்ட் வாங்கிச்செல்லலாம் என்று. கொஞ்ச நாள் நைட் லாம்ப், கடிகார வகைகளை வாங்கிச்சென்ற போது, ‘அட பேக்கு, அது ஒண்ணுத்துக்கும் உதவாது. கொஞ்ச நாளில் பரணுக்குப்போய்விடும், அப்புறம் பழைய பிளாஸ்டிக்காரனுக்கு’. அப்புறம் புத்தகங்கள் தரலாம் என்ற ஐடியா. படித்த புத்தகங்களை (பழையது என்பதால்) தரமுடியாது. படிக்காத புத்தகங்களையும் (எப்படிப்பட்ட புத்தகம் என்பதே தெரியாமல்) தரமுடியாது. புதிய புத்தகங்களை படிக்காமல் தரவும் மனமிருக்காது. அப்புறம் ஏற்கனவே படித்த ஆனால் புதிய புத்தகங்கள் என முடிவாகி அதை கொஞ்ச காலம் தரத்துவங்கினேன். அதை வாங்குபவர்கள் படிக்கும் வழக்கம் இல்லாதவர்கள் எனில் என்னவாகும் என்பதை அறிந்து அது நிறுத்தப்பட்டது. அப்புறம் மொய் எழுதப்பட்டது. ‘ஏண்டா பணம் குடுத்து அவங்களை அவமானப்படுத்துறீங்க.?’ என்று மொய் எழுத கையில் காசில்லாத ஓர் நாளில் கண்ணன் தத்துவம் பேச அதுவும் போச்சு. இன்னிக்கு ஒரு திருமண ரிசப்ஷனுக்கு சென்ற நான் வித்தியாசமாக திங்க் பண்ணி (மணமகன் கம்ப்யூட்டர் அதிகமாக புழங்குபவர் என்பதால்) பிளாங்க் டிவிடிக்கள் செட் ஒன்றை வாங்கி பரிசளித்தேன். எப்படி ஐடியா? புதிய ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.

.

46 comments:

Anonymous said...

என்னது இது?

ஹேப்பி விகடன் டே... எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க.

லூசு மேட்டர் தமாசு..ஹேப்பி விகடன் டே.

Anonymous said...

நாம வந்து வாழ்த்தறதே ஒரு பரிசு.. பொருட்க்கள் எல்லாம் தூசுன்னு ஒரு கவுஜ சொல்லிட்டு சாப்பிட்டு வராத விட்டு....(எப்பூடி)

தராசு said...

//வாழ்த்து வாழ்த்துன்னு சொல்லி எழுதறவங்களுக்கும், படிக்கிறவங்களுக்கும் ரொம்ப போரடிக்குது. புதுசா ஏதாவது சொல்லுங்க பாக்கலாம்.//

அட லூஸே,,,,,,,

ஹலோ, நான் நீங்க எழுதுனததான் சொல்றேன், வாழ்த்தறேன்னு நினைக்காதீங்க.

மிக்ஸ்டு ஊறுகாய்ல ஒண்ணுமே மிக்ஸிங் ஆகலயே????

Truth said...

gift vouchers try pannunga. :-)

வித்யா said...

லூசு மேட்டர்:)

டக்ளஸ்....... said...

ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க ஆதி அங்கிள்...!

ஆயில்யன் said...

// டக்ளஸ்....... said...

ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க ஆதி அங்கிள்...!
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

:)))

கார்க்கி said...

லூசு மேட்டர் சூப்பர்..

கிஃப்ட் மேட்டர் டாப்பு..

நடுவுல புரியலன்னு எழுதினது புரியல..

கவிதை மாதிரி அருமை..

இது ஊறுகாயா இல்ல பந்தி சாப்பாடா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க பிச்சு பிச்சுன்னாலும் நாங்க நச்சு பண்ணுவோம்ல.. வாழ்த்துக்கள் ஆதி..:-)))

ராமலக்ஷ்மி said...

அதெப்படி நான் சொல்ல வருவது எல்லாம் ட்ரூத் முதலில் சொல்லி விடுகிறார்:)? கிஃப்ட் வவுச்சர் பெஸ்ட் சாய்ஸ்!

//வாழ்த்து வாழ்த்துன்னு சொல்லி எழுதறவங்களுக்கும், படிக்கிறவங்களுக்கும் ரொம்ப போரடிக்குது. புதுசா ஏதாவது சொல்லுங்க பாக்கலாம்.)//

பாராட்டுக்கள் பாராட்டுக்கள்:)!

Sukumar Swaminathan said...

பதிவர்கள் பரிசல்,வெண்பூ,கேபிள் மற்றும் உங்களுக்கு மனமார்ந்த wishes.....!!!!!

நாடோடி இலக்கியன் said...

இன்னும் கொஞ்சம் சுவையாக இருந்திருக்கலாம் ஊறுகாய்.

அப்புறம் நேற்று "பாப்பாகுடி" வீடியோ பார்த்தேன்.கொஞ்சம்தான் பார்க்க முடிந்தது,அதற்கு மேல் பஃபர் ஆகவில்லை.பார்த்தவரையில் சூப்பர்.எங்க ஊரை பார்த்த மாதிரியே இருந்தது. ஆமா நீங்களே எடுத்ததா? ஊரில் நானும் இதே மாதிரிதான் , ஊருக்கு போனாலே வந்துட்டாண்டா கேமராக்காரன் என்று நக்கலடிப்பானுங்க.

நர்சிம் said...

வாழ்த்துக்கள் நீங்க போட்டீங்களா.. வாழ்த்துக்கள்.. அனைவருக்கும்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மயில்.! (நாம வந்து வாழ்த்தறதே ஒரு பரிசு.. பொருட்க்கள் எல்லாம் தூசுன்னு ஒரு கவுஜ சொல்லிட்டு சாப்பிட்டு வராத விட்டு// இப்படியும் அப்பப்ப பண்றதுண்டு..)

நன்றி தராசு.!
நன்றி ட்ரூத்.!
நன்றி வித்யா.!

நன்றி டக்ளஸ்.! (நேர்ல‌ ஒருநாள் மாட்டாமையா போயிடுவே.. அன்னிக்கு இருக்குடி ஒன‌க்கு.!)

நன்றி ஆயில்யன்.!

நன்றி கார்க்கி.! (யோவ்.. அது க‌விதை மாதிரி இல்ல‌, க‌விதையேதான்..)

நன்றி கார்த்திகை.!
நன்றி ராமலக்ஷ்மி.!
நன்றி சுகுமார்.!
நன்றி தராசு.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இலக்கியன்.! (அடுத்த‌ வாட்டி இன்னும் திங்க் ப‌ண்றேன்)

நன்றி நர்சிம்.! (புரியல பாஸ்..)

Mahesh said...

அல்லாருக்கும் க்ரீட்டிங்ஸ்பா... (வாழ்த்துன்னுதானே சொல்லக்கூடாது?)

//உங்களுக்கு பல சமயங்களில் புரிவதில்லை. புரியும் நேரங்களிலும் என் மீதான நம்பிக்கையில்லை உங்களுக்கு. அவற்றை உதறித்தள்ளுகிறீர்கள். மிகுந்த சோர்வாக உணர்ந்து பேசாமலே இருந்துவிடுகிறேன் பல சமயங்களில்.
//

எனக்கும் அதுவேன்னாலும்... சோர்ந்து போகறதில்லை. பாரதி சொன்ன மாதிரி "போங்கடா... என்னைப் புரிய உங்களுக்கு வயசும் அறிவும் போதாது"ன்னுட்டு போய்ட்டே இருப்பேன்.

புதுகைத் தென்றல் said...

ஐடியாக்களுக்கு தனிப்பதிவே போடலாம் ஃப்ரெண்ட்.

ஊறுகாய் நல்லா இருந்துச்சு

ஸ்ரீதர் said...

congrats.ithu eppati?

புதியவன் said...

//கைக்குழந்தையுடன்
நீ பேசிக்கொண்டிருந்தால் கூட
அது
‘பே..’ வென உன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
என்னை மட்டும் குற்றம் சொன்னால் எப்படி.?//

கவிதை ரொம்ப நல்லா இருக்கு...

ஹேப்பி விகடன் டே...
இப்படித்தான் வாழ்த்தனுமா...?

சின்னக்கவுண்டர் said...

ஆதி,

அட லூஸே

நல்லா இருக்கு,

அட உன்னை சொல்லலப்பா

வால்பையன் said...

//கைக்குழந்தையுடன்
நீ பேசிக்கொண்டிருந்தால் கூட
அது
‘பே..’ வென உன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
என்னை மட்டும் குற்றம் சொன்னால் எப்படி.?//


“ய்” விட்டு போச்சா!

ஜோசப் பால்ராஜ் said...

என்னைய மாதிரி சொந்த கம்ப்யூட்டர் இல்லாதவங்களுக்கு ஒரு லேட்டஸ்ட் கம்ப்யூட்டரு, வித் எல்சிடி மானிட்டர் வாங்கிக்குடுக்கலாம்.

ஜோசப் பால்ராஜ் said...

விகடனில் கதையெழுதியவர்களுக்கு ள்கக்துத்ழ்வா

பாசகி said...

பரிசல், வெண்பூ மற்றும் கேபிளாருக்கு ச்சியேர்ஸ்!!!

புரிதல் - ஓஷோ-வா???

கொஞ்சம் நெருக்கமான தோழர் தோழிகளா இருந்தா, மணமகன் மணமகள் ஒன்னா இருக்கற புகைப்படத்தை வாங்கி அதை காஃபி மஃக்-ல பிரிண்ட் பண்ணி தரலாம்...

என்னமோ போங்க லூசு மேட்டர் ஹி ஹி....

Truth said...

@ராமலக்ஷ்மி
//அதெப்படி நான் சொல்ல வருவது எல்லாம் ட்ரூத் முதலில் சொல்லி விடுகிறார்:)?

உங்களை பார்த்து வளர்ந்து, உங்களையே ரோல் மாடலாக நினைத்து, உங்கள் எழுத்துக்களே எனது எண்ணங்களாக...

முடியல இல்ல :-) அப்படியே வருது. :-)

புன்னகை said...

பரிசல், வெண்பூ மற்றும் கேபிள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், அட உங்களுக்கும் தான்! ;-)
அட லூசு ரசித்தேன்! புரிதல் அருமை!

ஆ.முத்துராமலிங்கம் said...

முதல்ல பொறாமைபடச் சொல்லி இருக்கீங்க (நன்றி இல்லைன்னா வேரென்ன)
எல்லாமே நல்லாதா இருக்கு ஆனா
கடைசி உங்க ஐடியா நல்லாவே இல்லை... அதுக்கு பதிலா ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி கொடுத்திருக்கலாம்!!!

Deepa said...

ஊறுகாய் சுவையோ சுவை!

விகடனில் இடம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Mahesh said...

/ஜோசப் பால்ராஜ் said...
என்னைய மாதிரி சொந்த கம்ப்யூட்டர் இல்லாதவங்களுக்கு ஒரு லேட்டஸ்ட் கம்ப்யூட்டரு, வித் எல்சிடி மானிட்டர் வாங்கிக்குடுக்கலாம்.
//

ஏன்... மடிக்கு ஒரு லேப்டாப், கைக்கு ஒன்ணுன்னு ரெண்டு பாம்டாப் எல்லாம் கேளுங்களேன் :))))

$anjaiGandh! said...

//திருமணங்களுக்கு செல்கையில் பைத்தியம் பிடிக்காத குறைதான், என்ன கிஃப்ட் வாங்கிச்செல்லலாம் என்று.//
பேசாம எங்க சங்கத்துல சேர்ந்துடுங்க..

இவண்
ஓசில சோறு மட்டும் துண்ணுவோர் சங்கம்.
கோவை.
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. :)

கடைக்குட்டி said...

உங்க எழுத்துக்கு வெறித்தனமான ஃபாலோயர்ஸ் லிஸ்ட்ல என் பேர சேத்துக்கங்க...

சிரிச்சுக்கிட்டே எழுதுவீகளோ என்னவோ தெரியாது.. யப்பா... கண்டிப்பா சிரிப்பு வருதுங்கோவ் உங்க எழுத்த படிச்சா... :-)

***
வாழ்த்துக்கள்

(விகடனுக்கு .அவங்களுக்கு இல்ல)

***

லூஸ் மேட்டர் சூப்பர்...

(என்ன மேட்சிங் உங்களுக்கும் அதுங்களுக்கும்..)

****

அப்புறம் பரிசு...

போகாம இருந்துடுங்க...

(அவிங்க சந்தோசமா இருப்பாய்ங்க... :-)

******

கவிதையெல்லாம் புரியல....

*********

தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள் :-)

எவனோ ஒருவன் said...

//வாழ்த்து வாழ்த்துன்னு சொல்லி எழுதறவங்களுக்கும், படிக்கிறவங்களுக்கும் ரொம்ப போரடிக்குது. புதுசா ஏதாவது சொல்லுங்க பாக்கலாம்.)//

போங்க சார்.. உங்களுக்கெல்லாம் இதே பொழப்பாப் போச்சி...

எவனோ ஒருவன் said...

//கைக்குழந்தையுடன்
நீ பேசிக்கொண்டிருந்தால் கூட
அது
‘பே..’ வென உன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
என்னை மட்டும் குற்றம் சொன்னால் எப்படி.?//

நானும் இத ரொம்ப நேரமா பே.......னு பாத்துட்டே இருந்தேன். நல்லவேளை, கடைசில புரிஞ்சுட்டு.
இதுக்குத்தான் ஒரு காதலி இருக்கனும்கிறது...

எவனோ ஒருவன் said...

//‘ஏண்டா பணம் குடுத்து அவங்களை அவமானப்படுத்துறீங்க.?’ //

அதான...

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் ஆதி சார்...
லூஸாப்பா நீ.. நல்ல மேட்டர்...

T.V.Radhakrishnan said...

லூஸாப்பா நீ

:-)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ்.! (ஆங்.. அப்பிடித்தான் இருக்குணும்.!)
நன்றி தென்றல்.! (நீங்கதான் ஒரு ஐடியா பேங்க் ஆச்சுதே.)
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி புதியவன்.! (நம்ப கடையிலயும் கவிதையை ரசிக்கிறாங்கப்போவ்..)
நன்றி சின்னகவுண்டர்.!
நன்றி வால்பையன்.!
நன்றி ஜோஸப்.! (எல்சிடி..? தேவைதான்)
நன்றி பாசகி.!
நன்றி புன்னகை.!
நன்றி முத்து!
நன்றி தீபா.!
நன்றி மகேஷ்.! (ஆமா.. வெளங்கிரும்.!)
நன்றி சஞ்சய்.! (சங்கத்துல ஆயுள் உறுப்பினரா சேத்துக்குங்க.. ஐயா.!)
நன்றி கடைக்குட்டி.! (புதியவர்களின் நிஜமான பாராட்டுகள் தொடர்ந்து இயங்க உதவியாக உள்ளன தோழர், நன்றி)
நன்றி எவனோ ஒருவன்.! (இன்னும் காதலி இல்லையா.. யூ..லக்கி Guy.!)
நன்றி thamizpaRavai.!.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி டிவிஆர்.!

வெண்பூ said...

கவிதை சூப்பர்...

அது ஏன் எல்லாமே லூஸா இருக்குன்னா நீங்க அடிக்கடி டைட் ஆகிடுறீங்களே. அதனால இருக்குமோ :))))

அ.மு.செய்யது said...

ஹேப்பி விகடன் டே டூ யூ பாஸ்..

கவுஜ ரொம்ப பிடிச்சிருந்தது...உங்க டெம்பிளேட் நல்லா இருக்கு....

கிஃப் ஐடியா ரூம் போட்டு யோசிச்சிருக்கீங்க போல...என்னோட கல்யாணத்துக்கு
இப்படியெல்லாம் பண்ணீராதீங்க ப்ளீஸ்.

மணிநரேன் said...

அனைத்தும் நன்றாக இருந்தது.
மனமார்ந்த பாராட்டுக்கள்...

மங்களூர் சிவா said...

/
கைக்குழந்தையுடன்
நீ பேசிக்கொண்டிருந்தால் கூட
அது
‘பே..’ வென உன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
என்னை மட்டும் குற்றம் சொன்னால் எப்படி.?
/

wow excellent. mind blowing. roof blowing. floor blowing. wall blowing.

மங்களூர் சிவா said...

ஹேப்பி விகடன் டே... எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க.

Seemachu said...

திருமணப் பரிசாக நான் செஞ்ச விஷயத்தைப் பாருங்க.. முடிஞ்சா இப்படி செய்யுங்களேன்.. மனசுக்கு நிறைவா இருக்கும்...

தம்பதிகளும் எப்பவும் மறக்க மாட்டாங்க.. அப்புறம் ஒவ்வொரு திருமண நாளுக்கும் அவங்களுக்கு அப்படி செய்யணும்னு ஆசை வந்தால் ரொம்ப நல்லாருக்கும்..

http://seemachu.blogspot.com/2007/03/41.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

புரிதல் என்பதுதான் எத்தனை பெரிய விஷயம் இந்த வாழ்க்கையில்? இந்த மனிதர்களைப் புரிந்துகொள்ளாமல் வேலைகளை இழந்திருக்கிறேன். நட்புகளை இழந்திருக்கிறேன். காதலை இழந்திருக்கிறேன். இன்னும்.. இன்னும்.! உணர்வுகளை.. எண்ணங்களை வெளிப்படுத்த வார்த்தைகளில்லாமல் தேடித்தேடி கண்டு கொண்டு போதாதோ என்ற சந்தேகத்துடனே சேதி சொல்கிறேன். உங்களுக்கு பல சமயங்களில் புரிவதில்லை. புரியும் நேரங்களிலும் என் மீதான நம்பிக்கையில்லை உங்களுக்கு. அவற்றை உதறித்தள்ளுகிறீர்கள். மிகுந்த சோர்வாக உணர்ந்து பேசாமலே இருந்துவிடுகிறேன் பல சமயங்களில்.

nice one.

அன்புடன் அருணா said...

அடிக்கடி மிக்ஸ்டு ஊறுகாய் ...அப்படீன்னு தமிழ்மணத்துலெ பார்த்து ஒரே ஊறுகாயை எத்தனை தடவைதான் சொல்லித்தருவாங்கன்னு...படிக்கவேயில்லை!!!...அட நிறைய மிக்ஸ்...sorry மிஸ் பண்ணீட்டேன் போல!!!
லூஸ் என் விஷயத்திலும் ரொம்ப விளையாடி இருக்குப்பா!!!