Monday, June 1, 2009

சிறுகதை எழுதுவது எப்படி?‏

ஏற்கனவே குறும்படம் எடுப்பது எப்படி? ஊறுகாய் போடுவது எப்படி? வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் எடுப்பது எப்படி? போன்ற பல எப்படிகளை நாம் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து திரைக்கதை எழுதுவது எப்படி? என்பதுதான் நமது அடுத்த திட்டமாக இருப்பினும் அதை எழுதினால் கமல்ஹாசன் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் ‘திரைக்கதைப் பட்டறை’க்கு கூட்டம் குறைந்துவிடும் ஆபத்திருப்பதால் அதை பிறிதொரு சமயம் பார்க்கலாம். மேலும், அதற்கும் முன்னதாக சிறுகதையைத் ஒருவழி செய்வதுதான் பொருத்தமாக இருக்கக்கூடும். மேலும் இப்போதுதான் நமக்கும் கொஞ்சம் தகுதி வந்திருக்கிறது. இன்னும் குறிப்பாக ‘உரையாடல்’ சார்பில் நடத்தப்படும் பிரம்மாண்ட சிறுகதைப்போட்டி நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் இந்தப்பதிவு வாசகர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று கண்ணன் நினைவுறுத்தியதால் இது எழுதப்படுகிறது. (இந்த மாதிரி முன்னுரை மற்றும் பில்ட் அப் இல்லாமல் பதிவைத்துவக்குவது எப்படி? என்று யாராவது பதிவு எழுதலாம்).

இனி..

முன்தயாரிப்பு :

சிறுகதை எழுதுவது உண்மையிலேயே கொஞ்சம் சிரமமான வேலைதான் என்பது அனுபவத்தில் தெரியவருவதால் நம்மை கொஞ்சம் தெம்பாக தயார்செய்துகொள்வது அவசியம். நல்ல விடுமுறை நாளாக செலக்ட் செய்துகொள்ளுங்கள். அம்மாக்கள், தங்கமணிகள் தொல்லைகள் இல்லாமலிருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள். காலையிலேயே குளித்து சாமி கும்பிட்டு விபூதி பூசி ஃப்ரெஷ்ஷாக தயாராகிவிடுங்கள். முன்னதாக தம்பிள்ஸ் எடுப்பது, புஷ்அப்ஸ் எடுப்பது போன்ற சின்ன சின்ன பயிற்சிகள் எடுத்துக் கொள்வதும் நல்லது. பின்னர் டிபன் முடித்து (அளவோடு டிபன் பண்ணவும், ஏனெனில் சிறுகதை எழுதுவது தியானம் செய்வதற்கு ஒப்பானது. தூக்கம் வரும் ஆபத்து இருக்கிறது), பிளாஸ்கில் காஃபி, பிஸ்கெட்ஸ், ஸ்னாக்ஸ் மறக்காமல் ரெடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் (நாம் எந்த வேலையைச் செய்வதாக இருந்தாலும் இது மிக அவசியமான ஒன்று என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்). ஒரு அழகான பெரிய டைரியும், ராசியான பேனா என்று ஒன்றை வைத்திருப்பீர்கள்தானே.. அதையும் எடுத்துக் கொள்ளுங்கள். டைரி இல்லையானால் அரைகுயர் பேப்பரும், பரீட்சைக்கு மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கிளிப்புடன் கூடிய பேடும் இருந்தால் இன்னும் சிறப்பு. இப்போது உபகரணங்களும், நீங்களும் தயார். அடுத்து எழுத வேண்டியதுதான் பாக்கி.

கரு உருவாக்குதல் :

இது இந்த இறுதி நேரத்தில் செய்யவேண்டிய காரியமில்லை. அதிரசத்துக்கு மாவு தயார் செய்வதைப்போல முன்னதாகவே செய்து முடித்திருக்க வேண்டிய ஒரு காரியம். அதாவது கதை எழுதப்போகிறோம் என்று முடிவானதுமே அது காதலா, கிரைமா, குடும்ப செண்டிமெண்டா, சைன்ஸ் பிக்ஷனா என்பதை முடிவு செய்து விட்டு அதில் இதுவரை யாரும் சொல்லாத எந்த புதுமையான விஷயம் அல்லது ட்விஸ்டை சொல்லப்போகிறோம் என்பதையும் முடிவு செய்திருக்க வேண்டும். உதாரணமாக உங்களுக்குள் ஒரு சைன்ஸ் பிக்ஷன் கதாசிரியர் ஒளிந்து கொண்டிருந்தார் என்று வைத்துக் கொள்வோம். நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே நீங்கள் ஆஃபிஸ் போகும் போதே உங்கள் பைக் டிராபிக்கில் சிக்கிக்கொள்ளாமல் ‘சொய்ங்’கென ஹெலிகாப்டர் (பைக்காப்டர் என்றும் சொல்லலாம்) மாதிரி பறப்பதாக கனவு கொண்டிருந்திருப்பீர்கள். ஆஃபிஸில் உங்கள் மானேஜர் அறைக்குள் போகும் போது உங்கள் பாஸின் வழுக்கை மண்டை மேல் ஒரு குட்டி ஆண்டெனா முளைத்திருப்பதைக் (சிரித்து கிரித்து வைத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்) காண்பீர்கள். சர்வ ரோக நிவாரணியாக உங்கள் பேனா, கடிகாரம், ஐடி கார்டு, பான் கார்டு, மொபைல் போன், 50MP காமிரா, லைட்டர், வீட்டு சாவி எல்லாமே ஒன்றிணைந்த ஒரு வஸ்துவை உங்கள் சட்டைப்பையில் வைத்திருப்பீர்கள். தூங்கும் போது மண்டையில் காதும், முகம் முழுக்க பத்து வாயும் கொண்ட பச்சை நிற வேற்றுகிரகவாசி வந்து எழுப்புவது போல கனவு காண்பீர்கள், எழுந்துபார்த்தால் உங்கள் தங்கமணிதான் எழுப்பியிருப்பார். இப்படியெல்லாம் கதைக்களத்தை முன்பே உங்கள் மனதில் ஊறப்போட்டு வலம்வந்திருக்க வேண்டும். அதிலொரு திகில் டிவிஸ்ட்டை நீங்கள் ஏற்படுத்தியிருப்பீர்கள். கல்யாணம் முடிந்தவர்கள் மனைவிமாரை மனதில் நினைத்துக்கொண்டாலே திகில் தன்னால் வந்துவிடும்.

கதை எழுதுதல் :

ஒரு வழியாக சைன்ஸ் பிக்ஷன் என்று (காதல் கதை என்று முடிவு செய்திருந்தாலும் சரிதான், ரெண்டும் ஒண்ணுதான்) கருவை முடிவு செய்துவிட்டதால் இனி கதையை எழுதிவிடவேண்டியதுதான். இதில் ஒரு சிக்கல், எங்கே ஆரம்பிப்பது என்பதுதான். கதையை படிக்க வருபவர்களை இந்தப்பக்கமே மீண்டும் வராதபடிக்கு அடித்து துரத்திவிடுவது நமது முதல் நான்கு வரிகள்தான். ஆகவே நாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். எப்படியாவது நல்லபடியாக ஆரம்பித்துவிட்டால் நடுவில் கொஞ்சம் ஒப்பேத்திவிட்டு கிளைமாக்ஸில் நாம் வைத்துள்ள டிவிஸ்டில் வாசகர்களை கவுத்திவிடலாம். ஆகவே நடு ராத்திரியில் முகத்தில் காது முளைத்த ரெண்டு வேற்றுகிரகவாசிகள் உங்களை தூக்கிச்செல்வதில் ஆரம்பிக்கப் போகிறீர்களா? நள்ளிரவில் உங்களுக்கு கொம்பு (அல்லது வால்) முளைப்பதில் ஆரம்பிக்கப்போகிறீர்களா? உங்கள் பீரோவுக்குள் பேனா உயரத்தில் நான்கு வேற்று கிரகவாசிகள் ஒளிந்திருப்பதில் ஆரம்பிக்கப்போகிறீர்களா? என்பதையெல்லாம் நன்கு சிந்தித்து முடிவு செய்து கொள்ளுங்கள். அப்புறம் எப்படியாவது நாலு பக்கத்துக்கு எழுதி ஒப்பேத்திவிட்டு கிளைமாக்ஸுக்கு வாருங்கள். எல்லாம் எழுதிவிட்டு கனவு என்று முடித்தீர்களானால் கண்டிப்பாக உதை வாங்கப்போவது நிச்சயம். ஆகவே டுபாக்கூர் கதையை ஓவர் டுபாக்கூர் விடாமலும் டுபாகூர் இலக்கணங்களை மீறாமலும் முடித்துவையுங்கள். கடைசியாக மறக்காமல் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன என்பதை கண்களில் விளக்கெண்ணெய் விட்டு எண்ணிக்கொள்ளுங்கள். சராசரியாக 250 வார்த்தைகள் இருந்தால் ஒரு பக்கக்கதை. 700 லிருந்து 900க்குள் இருந்தால் நார்மல் சிறுகதை. 1000த்தைத்தாண்டினால் ஒருத்தரும் சீண்டமாட்டார்கள்.

எல்லாம் முடிந்தது. இப்போது மீண்டும் மீண்டும் தைரியமாக நாலு தடவைகள் வாசித்துப் பாருங்கள். தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வருவது போல இருந்தால்.. தயவுசெய்து சோர்ந்து போய்விடாமல் பட்டென வலையில் ஏற்றிவிடுங்கள். மக்களும் அதை அனுபவிக்கட்டும். பின்னே.? நேரில் போய் யாரையாவது மூக்கில் குத்தினால் அவர்கள் நம்மை சும்மா விடுவார்களா என்ன.? இப்படித்தான் எதையாவது செய்து உள்மன ஆசைகளுக்கான வடிகாலை ஏற்படுத்திக் கொல்ல வேண்டும்.

.

46 comments:

குசும்பன் said...

//கரு உருவாக்குதல் ://

கல்யாணம் ஆகாத கார்க்கி எல்லாம் எப்படின்னே கரு உருவாக்க முடியும்.

நாடோடி இலக்கியன் said...

ஹா.. ஹா

//உள்மன ஆசைகளுக்கான வடிகாலை ஏற்படுத்திக் கொல்ல வேண்டும்..//

ரசித்தேன்.

குசும்பரின் கேள்விக்கு உங்களின் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

தராசு said...

தங்கமணி இல்லாம பதிவு போடுவது எப்படின்னு இந்த ஆளுக்கு யாராவது சொல்லிக்குடுங்கப்பா!, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் , முடியல‌

ஆயில்யன் said...

//எந்த புதுமையான விஷயம் அல்லது ட்விஸ்டை சொல்லப்போகிறோம் என்பதையும் முடிவு செய்திருக்க வேண்டும்//

கடைசி வரைக்கும் சொல்லாமலே இருக்கிறதும் ஒரு டிவிஸ்ட்டுன்னு வைச்சுக்கிட்டு ஒரு கதை எழுதலாமா...???? :)))))))

ராஜா | KVR said...

//கல்யாணம் ஆகாத கார்க்கி எல்லாம் எப்படின்னே கரு உருவாக்க முடியும்.//

குசும்பரே, கரு உருவாக்குறதுக்கு கல்யாணம் ஆகுறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? சின்னப்புள்ளையா இருக்கிங்களே!

ஆயில்யன் said...

//எல்லாம் முடிந்தது. இப்போது மீண்டும் மீண்டும் தைரியமாக நாலு தடவைகள் வாசித்துப் பாருங்கள். தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வருவது போல இருந்தால்.. தயவுசெய்து சோர்ந்து போய்விடாமல் பட்டென வலையில் ஏற்றிவிடுங்கள்.//

பாவம் ”பைத்தியக்கார” அண்ணாச்சி என்ன ஆகப்போறாரோ....??
:)))))))

முரளிகண்ணன் said...

ஆதி டிரேட் மார்க் பதிவு

ஆயில்யன் said...

//இப்படித்தான் எதையாவது செய்து உள்மன ஆசைகளுக்கான வடிகாலை ஏற்படுத்திக் கொல்ல வேண்டும்..//

ஒ இதுதான் ஆசையா....?


இதுக்கு வேற பேர்ல சொல்லுவாங்க :)

jothi said...

அய்யய்யோ,.. கொஞ்சம் லேட்டா உங்கள் பதிவு வந்துருச்சே,.. இப்பதான் ஒரு சிறுகதை அப்லோடு பண்ணிருக்கேன்,..

வெண்பூ said...

ஆதி,

சான்ஸே இல்லை.. சிரிச்சி சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சி..

எந்த வரிய கோட் பண்ணுறதுன்னு தெரியல.. எல்லாமே சூப்பர்..

பாலா said...

ithukku thalaippai maaththi irukkalaam athi "aappu seevuvathu eppadi " nu

vayiththa valikkuthuppa

Truth said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது தல :-) அருமை.

Anonymous said...

//எல்லாம் முடிந்தது. இப்போது மீண்டும் மீண்டும் தைரியமாக நாலு தடவைகள் வாசித்துப் பாருங்கள். தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வருவது போல இருந்தால்.. தயவுசெய்து சோர்ந்து போய்விடாமல் பட்டென வலையில் ஏற்றிவிடுங்கள்.//

ஹஹா, நானெல்லாம் அப்படித்தான். படிக்கறவங்க பாடுன்னு சும்மா தோணுணதை எழுதிடதுதான்.

புன்னகை said...

கொலை வெறி நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது! யாரும் ஒன்னும் கேட்பதில்ல போல உங்கள???
ஏற்கனவே உடம்பு சரியில்ல, இப்போ சிரிச்சு சிரிச்சு வயிறும் வலிக்கத் தொடங்கிடுச்சு! நஷ்ட ஈடு கேட்கப் போறேனாக்கும்! :-)

தமிழ் பிரியன் said...

சிரிச்சு முடியலீங்க... ;-))

தமிழ் பிரியன் said...

///ராஜா | KVR said...

//கல்யாணம் ஆகாத கார்க்கி எல்லாம் எப்படின்னே கரு உருவாக்க முடியும்.//

குசும்பரே, கரு உருவாக்குறதுக்கு கல்யாணம் ஆகுறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? சின்னப்புள்ளையா இருக்கிங்களே!////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மெய்யாலுமா?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆஹா, ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியிருக்கீங்க போல :)

அன்புடன் அருணா said...

சரிங்க்ணா!!! போட்டிக்கு கதை எழுத ஆரம்பிச்சாச்சு!!!!

வித்யா said...

இது வேறயா??

கடைக்குட்டி said...

அய்யய்யோ... இத நீங்க எழுதுறதுக்கு முன்னாடியே நான் ஒரு சிறு கதை எழுதிட்டேனே... செரி விடுங்க...

ஆ.முத்துராமலிங்கம் said...

இப்படி கதை எழுத சொல்லி தருவதை விட அப்படியே... கதையை எழுதி தந்திட்டா இன்னும் பலனாக இருக்கும் என்பது என் பிராயம்.!!!

சித்து said...

/கல்யாணம் முடிந்தவர்கள் மனைவிமாரை மனதில் நினைத்துக்கொண்டாலே திகில் தன்னால் வந்துவிடும்./

ரொம்ப நல்ல இருக்கு ஆதி சார், ரொம்ப ரசிச்சு சிரிச்சு படிச்சேன். குறிப்பாக மேலே சொன்ன வரி.

Cable Sankar said...

அய்யய்யோ.. அடுத்து நீஙக் எழுதின கதையா..? மக்களே ரெடியா இருங்க.. அடுத்த பதிவா ஆதியோட ஸயின்ஸ் பிக்‌ஷன் கதை வர போவுது.. அதுக்குதான் இத்தனை பில்டப்பு..

நர்சிம் said...

ஆரம்பம் முதல் முடிவு வரை ஓடும் நகைச்சுவை அதகளம். வேற்றுக்‘கிரகவாசி’ அருமை.கலக்கல்

சந்தனமுல்லை said...

:-))))

Anonymous said...

ஆ”தீ”,

ஏ இ கொ வெ??????

J said...

எல்லாம் முடிந்தது. இப்போது மீண்டும் மீண்டும் தைரியமாக நாலு தடவைகள் வாசித்துப் பாருங்கள். தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வருவது போல இருந்தால்..

ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாமா?

ஓ கதை எழுதறதுக்குல்ல சொல்லிதர்றார் ஆதி

J said...

//பிளாஸ்கில் காஃபி, பிஸ்கெட்ஸ், ஸ்னாக்ஸ் மறக்காமல் ரெடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் (நாம் எந்த வேலையைச் செய்வதாக இருந்தாலும் இது மிக அவசியமான ஒன்று என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்//
கதை வருதோ இல்லையோ தொப்பை வரும்
மக்களே உசாரா இருங்க அவருக்கு செட் சேக்குறார்(தொப்பை இருக்குல்ல ஆதி உங்களுக்கு)

J said...

ஒரு லிட்டர் ப்ளாஸ்க் காப்பியை கவுத்துபுட்டு நாலு தடவை சுத்துனா
மயக்கம் தலைசுற்றல் வாந்தி வராம
என்னா செய்யும்

ஸ்ரீதர் said...

எனக்குப் புரிஞ்சிடுச்சு ,உடனே எழுத ஆரம்பிச்சிடுறேன் .

சின்னக்கவுண்டர் said...

அட அட கதை எழுதறது இத்தனை சுலபமா?? இது தெரியாம கதை எழுதுற ஆளுங்க எல்லாம் ஏதோ வானத்துல இருந்து வந்தவங்க மாதிரி ரெம்ப மரியாதையா பாத்தேன், சரி இனி தினமும் ஒரு கதை எழுதிரவேண்டியது தான்.

// கல்யாணம் முடிந்தவர்கள் மனைவிமாரை மனதில் நினைத்துக்கொண்டாலே திகில் தன்னால் வந்துவிடும்// ஹா ஹா என்னைக்கு உங்க வூட்டு அம்மணி இது எல்லாம் படிக்குதோ அன்னிக்கு நாங்க ஒரு தொடர் கதை எதிர் பாக்கலாம்.

அத்திரி said...

இதே பாணியில் கதை எழுதி காண்பிக்கிறேன்......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

thenral_2009 said...

//கல்யாணம் முடிந்தவர்கள் மனைவிமாரை மனதில் நினைத்துக்கொண்டாலே திகில் தன்னால் வந்துவிடும்//

எல்லாரையும் பேய் கதை எழுத சொல்லி சொல்றாரோ?!!!!

அ.மு.செய்யது said...

//அதிரசத்துக்கு மாவு தயார் செய்வதைப்போல முன்னதாகவே செய்து முடித்திருக்க வேண்டிய ஒரு காரியம். //

நான் எழுதுற கதையெல்லாம் அதிரசம் மாதிரியே எப்படி சுட்டாலும் சாரி எழுதுனாலும் நல்லா வரவே மாட்டேங்குது தல..

பதிவு தாறுமாறு..அசால்ட் பண்றீங்க...

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
தமிழ்ப்பறவை said...

அண்ணே.. இதெல்லாம் சீரியஸாப் படிச்சிட்டு கதைஎழுத ஆரம்பிக்கிறதுக்கு மின்னாடி உங்களுக்கு தேங்ஸ் சொல்ல வந்தா , பின்னூட்டத்தில எல்லாரும் கொலைவெறியோடு சிரிச்சிக்கிட்டிருக்காய்ங்க...

இராம்/Raam said...

அட்டகாசம்.... :))

தமிழ்நதி said...

இப்படியெல்லாம் சிரமப்படுவதற்கு சின்னதாக ஒரு கதை இருக்கே அதைச் சொல்லலாம்.

ஒரு ஊரில ஒரு நரி
அதோட கதை சரி

எல்லாருக்கும் தெரிஞ்ச கதைதான்:)

தமிழ்நதி said...

பெண்கள் திகில் கதை எழுதுவதென்றால் என்ன செய்வது? தத்தம் கணவர்களை நினைத்துக்கொள்வதா? அதையும் சொல்லியிருக்கலாமல்லவா? நாங்களும் கதை என்ற பெயரில் எதையோ எழுதுகிறோம் தாமிரா:)

அனுஜன்யா said...

அட்டகாசம் ஆதி. வரும் ஞாயிறு டெஸ்ட் பண்ணிட வேண்டியது தான்.

Wodehouse style contrived humour உங்களுக்கு நல்லா வருது.

அனுஜன்யா

வெங்கிராஜா said...

இதுல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்குதே... கடைசி சயின்ஸ் ஃபிக்ஷன் கதை யாருப்பா எழுதுனது? அவருதானே? ;)

Joe said...

பின்றான்யா, பின்றான்யா.

டேய் அஸ்ஸிஸ்டென்ட்-களா, நோட் பண்ணுங்கடா டேய், நோட் பண்ணுங்கடா.

ஆதிமூலகிருஷ்ணன் said...

குசும்பன் (முதல் கமென்டே ஏழரையா.. வெளங்கிரும்)

இலக்கியன்

தராசு (யோவ்.. எல்லா பதிவுக்கும் நடுநிலையா பின்னூட்டம் போடணும்னு கிடையாது.. ஒண்ணு ரெண்டை பாராட்டவும் செய்யலாம்)

ஆயில்யன் (நர்சிம்மோட கதையை பார்த்தீங்களா?)

ராஜா (அதானே..)

முரளி

ஜோதி (ஐயோ பாவம்)

வெண்பூ, பாலா, ட்ரூத்

சின்னஅம்மிணி (அப்படித்தான் கொலைவெறியோடு இயங்கணும்..)

புன்னகை, தமிழ்பிரியன், ஜ்யோவ்ராம்சுந்தர், அருணா, வித்யா, கடைக்குட்டி, முத்து, சித்து, கேபிள், நர்சிம், சந்தனமுல்லை, வேலன், ஜே, ஸ்ரீதர்

சின்னக்கவுண்டர் (நடத்துங்க..)

அத்திரி, தென்றல்,

செய்யது (நீங்க நம்ப கேஸு..அதிரசம் கருகியிருக்குமே)

தமிழ்பறவை, இராம்

தமிழ்நதி (வேணா.. வாயைக்கிளறாதீங்க.. அப்புறம் நான் ஏதாவ்து சொல்வேன்.. அப்புறமா பெண்களெல்லாம் சேர்ந்துகொண்டு உதைக்க வருவீங்க, தேவையா எனக்கு)

அனுஜன்யா (அப்ப நீங்க இன்னும் ஆரம்பிக்கலையா..)

வெங்கிராஜா, ஜோ........

... அனைவருக்கும் நன்றி.

கொஞ்சம் பிஸியாக இருந்ததால் உடனுக்குடன் வந்து லைவ்வாக பதில் சொல்ல முடியவில்லை.. ஜாரி.!

குசும்பன் said...

//கொஞ்சம் பிஸியாக இருந்ததால் உடனுக்குடன் வந்து லைவ்வாக பதில் சொல்ல முடியவில்லை.. ஜாரி.!//

லைவ்வா சொல்லமுடியவில்லை என்றால் ஆவியா வந்து சொல்லுங்க!

பட்டாம்பூச்சி said...

கலக்கல் :)

கோவை மு சரளா said...

கூகிள் கூட்டல் மூலம் உங்கள் தளம் எனக்கு அறிமுகம் ஆள் மனதின் ஆசைகளை ஒரு பதிவு மூலம் வெளியிட்டு வடிகால் தேடிய விதம் அருமை .........