Tuesday, June 2, 2009

கண்ணன் ஊதும் குழல்

புராணக்காலங்கள் தொட்டு பின்வந்த காலங்களிலும் தொடர்ந்து இன்று வரை ஆண்கள்தாம் பெண்கள் மீதான தம் காதலைப் போட்டு பிழிந்து சொட்டி வர்ணனைகளையும், ஏக்கங்களையும், புலம்பல்களையும் கவிதைகளாக்கி வைத்துப்போயிருக்கின்றார்கள், வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப்பெண்களுக்கு எழுதுகிற அளவுக்கு சரக்கு அவ்வளவாகப் போறாதா? அல்லது அவர்கள் கொண்ட காதலின் லட்சணமே அவ்வளவுதானா என்பதெல்லாம் பட்டிமன்றம் வைத்து கண்டுபிடிக்கவேண்டிய விஷயம். நாம் இப்போது சொல்லவருவது அதுவல்ல, வேறு.

இப்படியாக உலக சூழல் இருந்தாலும் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சமே கொஞ்சமாக சில பெண்கள் போனால் போகிறது என்பது போல காதலைப் புலம்பி வைத்திருக்கிறார்கள்/புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அரிதான விஷயம்தானே நமக்கு அற்புதமாகப் படுகிறது.. எனக்கும்தான், இந்த ஆண்கள், ‘தேவதைக்கதை கேட்டபோதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை.. நேரில் உன்னையே கண்டபின்னர்தான் நம்பிவிட்டேன்.. மறுக்கவில்லை..’ என்று என்னதான் நாற்பது வரிகளில் போட்டு பிழிந்தாலும் பெண்களின் ‘ரகசிய சிநேகிதனே..’ ஒரே வரி வீழ்த்திவிடுகிறது நம்மை.

தலைவி தலைவனை நினைத்து ஏங்குவதாய் அமைந்த பாடல்கள், கவிதைகள் நான் மிக ரசிக்கும் ஒரு விஷயமாகும். தேடித்தேடி ரசிப்பதுண்டு.

என்னதான் சோகமான பாடலாக இருந்தாலும் ‘என்னப்பாத்து எப்பிடிடா இப்படி கேக்கலாம்.?’ என்ற கோபம் தெறிக்கும் காதல் ‘சொன்னது நீதானா.. சொல்..’ ஒற்றை அன்றிலின் குரலாய் ஒலிக்கும், ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே..’ தூக்கமில்லாத இரவுகளைக் கடந்துகொண்டிருப்பவளின் ‘ஊருசனம் தூங்கிருச்சு..’ தவமாய் தவமிருக்கும் காதலியின் ‘அனல்மேலே பனித்துளி..’ இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் அமுதம் ம்யூசிக்கின் வெளியீடான ‘குழலூதும் கண்ணன்’ என்ற இசைக்குறுந்தகடைக் கேட்க நேர்ந்தது. அழகழகான 11 பாடல்கள்.. கானமழை பொழிந்திருக்கிறார் நித்யஸ்ரீ. அத்தனையும் கண்ணனை நினைந்து உருகும் கோபியரின் கவிதைகள். அற்புதமான இசை. வசீகரிக்கும் நித்யஸ்ரீ. நமக்கும் கர்னாடக சங்கீதத்துக்கும் 13 கிமீ தூரம் எனினும் நித்யஸ்ரீயின் குரலும், இசையும் நம்மையும் தலையாட்டிக்கொண்டே ரசிக்கவைக்கின்றன. குறிப்பிடத்தகுந்த செய்தி யாதெனின் அத்தனை பாடல்களுமே கண்ணன் குழலூதுவதைப்பற்றிய அழகழகான கவிதைகள். அற்புதமான தமிழிசை அனுபவம். கேட்டுப்பாருங்கள்.. கேட்டுப்பருகுங்கள்.!

குழலோசை கேட்க மனம் விழையுதடா..
ஊதும் குழலோசை கேட்க மனம் விழையுதடா..
நீ ஊதும் குழலோசை கேட்க மனம் விழையுதடா..
கோமளவாய் மடுத்து நீ ஊதும் குழலோசை கேட்க மனம் விழையுதடா..

.

30 comments:

வித்யா said...

me the first:)

வெண்பூ said...

நான் கூட உங்க ஃப்ரெண்டு கண்ணன் தம் அடிக்கிற அழகைப் பத்தி பதிவு போட்டிருக்கீங்கன்னு வந்து பாத்தேன்.. :))))

வித்யா said...

\\இந்தப்பெண்களுக்கு எழுதுகிற அளவுக்கு சரக்கு அவ்வளவாகப் போறாதா? அல்லது அவர்கள் கொண்ட காதலின் லட்சணமே அவ்வளவுதானா என்பதெல்லாம் பட்டிமன்றம் வைத்து கண்டுபிடிக்கவேண்டிய விஷயம்\\

:x

மாலையில் யாரோ மனதோடு பேச பாட்டை விட்டுடீங்களே. எனிவேஸ் சிடி வாங்கிடுவோம்.

இராம்/Raam said...

//வெண்பூ said...

நான் கூட உங்க ஃப்ரெண்டு கண்ணன் தம் அடிக்கிற அழகைப் பத்தி பதிவு போட்டிருக்கீங்கன்னு வந்து பாத்தேன்.. :))))//

LOL.... :))

அ.மு.செய்யது said...

//தலைவி தலைவனை நினைத்து ஏங்குவதாய் அமைந்த பாடல்கள், கவிதைகள் நான் மிக ரசிக்கும் ஒரு விஷயமாகும்.//

ந‌ர்சிம் கூட‌ ரொம்ப‌ சேராதீங்க‌...அண்ணே !!

நர்சிம் said...

கலக்கல் ஆதி..

குசும்பன் said...

//படப்பை உள்ளிட்ட பகுதிகளில் நண்பர்கள் யாரும் இருப்பின் அதே பகுதிகளில் அழகான ஒரு சிங்கிள் பெட்ரூம் வீடு வாடகைக்கு கிடைக்குமா என்ற தகவலை எனக்கு தந்து உதவலாம். (ஹிஹி.. கமிஷனெல்லாம் தரமுடியாது)//

பட படப்பா வீடு தேடுறீங்க!

கமிஷன் எல்லாம் தரமாட்டார் ஆனா அண்ணன் தாமிரா கூட ஒருநாள் தங்கிக்கலாம்!

(ஆமான்னே டிவியில் எல்லாம் இப்படிதானே சொல்லுறாங்க உங்க அபிமான நட்சத்திரத்துடன் ஒரு நாள் டின்னர் சாப்பிடலாம், பீடி குடிக்கலாம், கஞ்சா அடிக்கலாம் என்று) நீங்க வேறு ஏதும் தப்பா நினைச்சுடுவீங்கன்னு விளக்கம்!

குசும்பன் said...

//வெண்பூ said...
நான் கூட உங்க ஃப்ரெண்டு கண்ணன் தம் அடிக்கிற அழகைப் பத்தி பதிவு போட்டிருக்கீங்கன்னு வந்து பாத்தேன்.. :))))//

சூப்பர்:)

முரளிகண்ணன் said...

\\அரிதான விஷயம்தானே நமக்கு அற்புதமாகப் படுகிறது.. எனக்கும்தான், இந்த ஆண்கள், ‘தேவதைக்கதை கேட்டபோதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை.. நேரில் உன்னையே கண்டபின்னர்தான் நம்பிவிட்டேன்.. மறுக்கவில்லை..’ என்று என்னதான் நாற்பது வரிகளில் போட்டு பிழிந்தாலும் பெண்களின் ‘ரகசிய சிநேகிதனே..’ ஒரே வரி வீழ்த்திவிடுகிறது நம்மை.\\

super super super

Vinitha said...

:-)

sakthi said...

இந்தப்பெண்களுக்கு எழுதுகிற அளவுக்கு சரக்கு அவ்வளவாகப் போறாதா? அல்லது அவர்கள் கொண்ட காதலின் லட்சணமே அவ்வளவுதானா என்பதெல்லாம் பட்டிமன்றம் வைத்து கண்டுபிடிக்கவேண்டிய விஷயம்.

என்ன இப்படி சொல்லிட்டிங்க
எங்கள் டைரிகளை கேட்டு பாருங்கள்
எங்கள் தளம் வந்து பாருங்கள்

sakthi said...

பெண்களின் ‘ரகசிய சிநேகிதனே..’ ஒரே வரி வீழ்த்திவிடுகிறது நம்மை.

ஹ ஹ ஹ

பின்னே எங்க பவர் அப்படி

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வித்யா.! (மாலையில் யாரோவும் நான் ரசிக்கும் பாடலே)

நன்றி வெண்பூ.! (நான் கூட இது கண்ணன் கதைகளில் ஒன்று அல்ல என்று டிஸ்கி போட நினைத்தேன். மறந்துட்டேன்)

நன்றி இராம்.!
நன்றி செய்யது.!

நன்றி நர்சிம்.! (செய்யதைக் கொஞ்சம் கவனிங்க..)

நன்றி குசும்பன்.! (விளக்கம் ரொம்பத் தேவைதான்)

நன்றி முரளி.!
நன்றி வினிதா.!

நன்றி சக்தி.! (நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஸ்ரீமதியின் காதல்கவிதைகளின் ரசிகன் நான். நீங்களும் காதல் பற்றி எழுதுறீங்களா? கண்டிப்பா வர்றேன்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

Test pinnoottam..

☼ வெயிலான் said...

கண்ணன் கதைகள் தொடர் ஆரம்பிச்சிட்டீங்களோனு நினைச்சேன் ஆதி!

ஸ்ரீதர் said...

//கண்ணன் கதைகள் தொடர் ஆரம்பிச்சிட்டீங்களோனு நினைச்சேன்//

Repeatu.

jothi said...

// நமக்கும் கர்னாடக சங்கீதத்துக்கும் 13 கிமீ தூரம்//

சங்கீதா இப்ப வீடு மாற்றி 13 கி.மீ தொலைவுள்ள வந்துட்டாங்களா?? நடத்துங்க ஒரே கச்சேரிதான்,..

அப்புறம் உங்களை புகழ்ந்து ஒரு பதிவு போட்டிருக்கேன் பாத்திங்களா??? எதுவாயிருந்தாலும் என்னோட வீட்ல வச்சே திட்டிருங்க,..

Cable Sankar said...

மேல் ஷாவனிஷ்ட் உலகத்தில் பெண்கள் தங்கள் தாகங்களை, வெளியே சொன்னால் தவறாகவே நினைக்க படும் காலத்தில் எப்படி அவர்கள் வெளிவருவார்கள் ஆதி..

$anjaiGandh! said...

நித்யஸ்ரீ குரல் எனக்கும் ரொம்பப் புடிக்கும்.. கேட்ருவோம்..

இரா.சிவக்குமரன் said...

///நமக்கும் கர்னாடக சங்கீதத்துக்கும் 13 கிமீ தூரம் ///

ரொம்ப பக்கத்துலதான் இருக்கீங்க போல!

வாழவந்தான் said...

சார் இந்த சைடு பார் உதவி தேவை எப்ப போட்டீங்க?
இன்னிக்கு காலைல என் நண்பரின் புது பிளாட் பற்றி பேசிய போது, அதன் அடுத்த பிளாட்டில் நீங்கள் குடி வந்தால் எப்படி இருக்கும் என்றும், வீடு காலி செய்யும் கல்யாணமாகாதவர் எச்சரிக்கை பதிவும் ஞாபகம் வந்தது(சத்தியமா ஏன் அப்போ உங்க, பதிவு ஞாபத்திற்கு வந்ததுனும் தெரில). இப்ப இந்த சைடு பார் மேட்டர பாத்தது 'அப்படியே ஷாக் ஆயிட்டேன்'
குறிப்பு: நான் தாம்பரத்தில் இல்லை

Anonymous said...

நித்யஸ்ரீ ஒரு மாதிரி கம்பீர குரல் என்றால் பாம்பே ஜெயஸ்ரீ ஊத்துக்காடு பாட்டு கேளுங்க, ரொம்ப நல்ல இருக்கும்.

Anonymous said...

நினைத்து நினைத்து பார்த்தால் பாட்டை விட்டுவிட்டதால் வெளிநடப்பு செய்றேன்.

ராம்.CM said...

அருமையான பதிவு...!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வெயில்.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி ஜோதி.! (என்னைப்புகழ்ந்து பதிவா.. நீங்க ரொம்ப நல்லவருங்கோ..)

நன்றி கேபிள்.!
நன்றி சஞ்சய்.!
நன்றி குமரன்.!
நன்றி வாழவந்தான்.! (பெருமையாக உணர்கிறேன் தோழர்)

நன்றி மயில்.!
நன்றி ராம்.!

T.V.Radhakrishnan said...

அருமையான பதிவு...!

எம்.எம்.அப்துல்லா said...

”கோகுலத்து பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலைக் கேட்டு “

அப்புறம் அக்னி நட்சத்திரத்தில் வா!வா! அன்பே அன்பே பாடலின் இடையில் வரும்

”கண்ணன் வந்து தங்கும் “ - அந்த வரி.

கண்ணன் பாடல்களில் எனக்கு மிகவும் கவர்ந்தவை இவைகள்.

தமிழ்ப்பறவை said...

நானும் கலக்கல் கண்ணன் பதிவுகள் ஆரம்பிச்சாச்சுன்னு வந்தேன்... என்னடா ரெண்டு பாரா முடிச்சதுக்கப்புறம்கூட ஆதியோட வால் ஆடலன்னு பார்த்தேன்... ஆனா பதிவு முழுக்கவே சுருட்டி வச்சிருக்காருன்னு அப்புறம்தான் தெரிஞ்சது..
மற்றபடி நல்ல விமர்சனப் பதிவு.. இதைப் படித்த பின் நான் எழுதிய இசை விமர்சனங்களை எனக்குள் மறுபடி ஓட்டிப் பார்த்து வெட்கிக்கொண்டேன்...,

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரசனையான மனிதரா இருப்பீங்க போல....

அமிர்தவர்ஷினி அம்மா said...

வெண்பூ said...
நான் கூட உங்க ஃப்ரெண்டு கண்ணன் தம் அடிக்கிற அழகைப் பத்தி பதிவு போட்டிருக்கீங்கன்னு வந்து பாத்தேன்.. :))))


தலைப்ப பார்த்தவுடனே எனக்கும் இதுதான் தோணிச்சுன்னு சொன்னா நம்பவா போறீங்க...:)-