Thursday, June 4, 2009

பரீட்சைப் பேப்பர்

ஒரே தொடர் பதிவை இரண்டு முறை எழுதிய ஆள் நானாகத்தானிருக்கும். முதல் தடவை திசை திருப்புகிறேன் பேர்வழி என்று வழக்கம் போல சொதப்பிவிட்டதால் இதோ மீண்டும் குசும்பனின் அழைப்பை ஏற்று பதில் தருகிறேன். இப்போதான் பரிசலின் பதிவின் இந்த தொடரைப் பற்றி மாற்றுக்கருத்து சொன்னாய். அதற்குள் நீயும் களத்திலா? என்று யாரும் நக்கல் பண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன்.1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ரொம்பப்பிடித்த தாத்தாவின் பெயர்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

+2 படிக்கையில் தந்தை, தேவையற்ற சூழலில் பணத்தை கையாண்டதற்காக திட்டினார். அப்போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

சுவை மிகுந்த எதுவும்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

பெரும்பாலும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவி.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அழகு.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது : கூல் மனது.

பிடிக்காதது : சோம்பல்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது : அன்பு.

பிடிக்காதது : கோபம்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி யாரும் இல்லை.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

நீலநிறக் கைலி.

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

போகாதே.. போகாதே.. (தீபாவளி)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

இளம்கருப்பு.

14.பிடித்த மணம்?

மல்லிகை.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

கார்க்கி : வெளிப்படையான நட்பு.
செல்வேந்திரன் : அன்பு, துணிச்சல், ஒழுக்கம்.
அதிஷா : நேரில் சொம்பை மாதிரி இருந்தாலும்
பல சமயங்களில் கிறங்கச்செய்யும் எழுத்து.

வெண்பூ : சிறுகதை மன்னன், டிவிஸ்டுகளின் திலகம்.
மகேஷ் : ரசனையான பின்னூட்டங்கள்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

குசும்பனின் பதிவில் பிடிக்காதது ஏதாவது இருக்கமுடியுமா என்ன?

17. பிடித்த விளையாட்டு?

விடியோ கேம்ஸ்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை, என்றாலும் கண்ணவிந்து போய்விட்டதால் வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால் கூலர்ஸ்.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

அழகுணர்ச்சியோடுள்ள அனைத்துப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பூ.

21.பிடித்த பருவ காலம் எது?

காற்றடிக்காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

சில மாதங்களாகவே எதுவும் இல்லை. அடுத்து படிக்கவேண்டிய லைனில் இருக்கும் புத்தகங்கள் ‘அம்ருதா வெளியீடான முத்துக்கள் பத்து’ சீரிஸ் அனைத்தும்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

சராசரியாக ஒரு மாதம்.

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : காதலான கிசுகிசுப்பு.

பிடிக்காத சத்தம் : காலிங் பெல்லின் ஓலம்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தில்லி.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இன்னும் வெளிவரலைன்னு நினைக்குறேன்.. ஹிஹி..

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பிறர் நோக்கி எழுதப்படும் சுடுசொற்கள்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கொஞ்சம் விகாரமான உள்மனம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

லட்சத்தீவுகள் (போனதில்லை).

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

ஏதுமில்லை. இல்லாவிட்டால் செய்யவிரும்பும் காரியம் 90.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

ரசனை.

36 comments:

சென்ஷி said...

/அதிஷா : நேரில் சொம்பை மாதிரி இருந்தாலும் பல சமயங்களில் கிறங்கச்செய்யும் எழுத்து.//

:-((

அதிஷாவிடம் எனக்கு மிகப்பிடித்தது இயல்பான அவரது எழுத்தும். துணிச்சலும்தான்!

அவர் சொம்பை என்று நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிகிறது..

Anonymous said...

ஆதி மூல கிருஷ்ணன் என்பது தாத்தா பேரா? இல்ல தாமிரா என்பதா?

கார்க்கி said...

ஆஹா முண்டக்கன்னி ஈஸ்வரி மாதிரியா.. ரைட்டு..

அதிஷா..கிகிகிகி

இன்னைக்கே போட்டுடலாம்..

கோவி.கண்ணன் said...

நச்சின்னு இருக்கு !

தராசு said...

//முதல் தடவை திசை திருப்புகிறேன் பேர்வழி என்று வழக்கம் போல சொதப்பிவிட்டதால் இதோ மீண்டும் குசும்பனின் அழைப்பை ஏற்று பதில் தருகிறேன். இப்போதான் பரிசலின் பதிவின் இந்த தொடரைப் பற்றி மாற்றுக்கருத்து சொன்னாய். அதற்குள் நீயும் களத்திலா? என்று யாரும் நக்கல் பண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன்.//

என்ன ஃபீலிங்க்ஸா, இல்ல ஃபீலிங்க்ஸான்னு கேக்கரேன், சும்மா ஒவ்வொருத்தரோட 32 ஐட்டத்தையும் படிக்கற எங்களுக்குத்தான்யா ஃபீலிங்க்ஸு, உனக்கு எதுக்கு????

டக்ளஸ்....... said...

You Too...!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சென்ஷி.! (அலோ அவர் சொம்பை என்று சொல்லவில்லை, பார்க்க மட்டும்தான் அப்படி என்று சொன்னேன். மூக்குல குத்து வாங்க வெச்சிருவீங்க போலயிருக்கே.. அப்பூறம் நீங்களும் அனுஜன்யா செட்டுதானா? நா ஏதோ பேரப்பார்த்து யூத்துன்னுல்லா நினைச்சிட்டேன்.. அவ்வ்.. )

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மயில்.! (ஆதிமூலகிருஷ்ணன்தான் தாத்தா பெயர்)

நன்றி கார்க்.!
நன்றி கோவிஜி.!
நன்றி தராசு.! ((ரசித்துச்சிரித்தேன்..)

நன்றி டக்ளஸ்.! (நானே கொஞ்சம் பயந்துகினுருக்கேன், நீங்க வேற இப்பிடிலாம் கேக்குறீங்களே..)

ஆயில்யன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சென்ஷி.! (அலோ அவர் சொம்பை என்று சொல்லவில்லை, பார்க்க மட்டும்தான் அப்படி என்று சொன்னேன். மூக்குல குத்து வாங்க வெச்சிருவீங்க போலயிருக்கே.. அப்பூறம் நீங்களும் அனுஜன்யா செட்டுதானா? நா ஏதோ பேரப்பார்த்து யூத்துன்னுல்லா நினைச்சிட்டேன்.. அவ்வ்.. )
///


சென்ஷியண்ணே டோட்டல் டேமேஜ் :(

அமிர்தவர்ஷினி அம்மா said...

cool

பெரும்பாலும் ஒரு வரி பதில்களாகவே சொல்லி கலக்கியிருக்கீங்க.

வாழ்க்கையைப் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் சொன்னது அழகு + அர்த்தம்

அன்புடன் அருணா said...

Short and Smart answers!!!

நர்சிம் said...

கலக்கல் ஆதி

jothi said...

பரிட்சைப் பேப்பருக்கெல்லாம் பாவனா படம் இல்லயா??

வித்யா said...

நைஸ்:)

Cable Sankar said...

அருமையான ஒன்லைனர்ஸ்.. ஆதி..

புதுகைத் தென்றல் said...

present friend

ஆ.முத்துராமலிங்கம் said...

எல்லாத்துக்கும் ஒரு வரில பதில் எழுதிட்டீங்க.
|30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்படியே.|

ரொம்ப நல்ல ஆசைதா உங்கள்ளுக்கு!!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆயில்யன்.! (போட்டுக்குடுக்குறதுன்னா உங்களுக்கு நெம்ப பிடிக்குமாமே..)

நன்றி அமித்துஅம்மா.! (கொஞ்சநாளா ஆளைக்காணோமே.. பிஸியா..)

நன்றி அருணா.!
நன்றி நர்சிம்.!
நன்றி ஜோதி.!
நன்றி வித்யா.!
நன்றி கேபிள்.!

நன்றி தென்றல்.! (ஊருக்கெல்லாம் போயிட்டு வந்தாச்சா ஃபிரென்ட்.?)

நன்றி முத்துராமலிங்கம்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன கூட்டம் கம்மியா இருக்குது? அடுத்த பதிவப் போட்டுரலாமா?

அதிஷா said...

யோவ் ஆதிமூலம் வெளிய வாயா.. அல்லைலயே குத்துறேன்..

என்ன தகிரியம் இருந்தா என்ன பாத்து சொம்பைனு சொன்னது மட்டுமில்லாம என் பேர கிளிக்பண்ணா செல்வேந்திரன் பதிவுக்கு போற மாதிரி செட் பண்ணுவீங்க..

இது ஆவறதில்ல விஷம் வச்சிர வேண்டியதுதான்..

டேய்... நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்....

அத்திரி said...

//முதல் தடவை திசை திருப்புகிறேன் பேர்வழி என்று வழக்கம் போல சொதப்பிவிட்டதால் இதோ மீண்டும் //

ம்ம்ம்ம்................

மணிநரேன் said...

;)

செல்வேந்திரன் said...

அண்ணே, நீங்க சொன்ன எதையுமே உருப்படியா செஞ்சதில்லை. இதையாவது செய்யலாம்னு இருக்கேன்.

மங்களூர் சிவா said...

ம்ம்ம்ம்ம்ம்................

T.V.Radhakrishnan said...

நச்

Saravana Kumar MSK said...

கலக்கல் பதில்கள்.. ஆனாலும் அதிஷாவை இப்படி கலாய்க்க கூடாது..

Saravana Kumar MSK said...

//21.பிடித்த பருவ காலம் எது? காற்றடிக்காலம்//

எதிர்பாராத பதில். ரசித்தேன்.. :)

அது சரி said...

//
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

ஏதுமில்லை. இல்லாவிட்டால் செய்யவிரும்பும் காரியம் 90.
//

அது என்ன எப்பவும் 90? ஒரு குவாட்டரு, ஆஃப்புன்னு முன்னேறுங்க தல :0))

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

இப்படி இருக்கிறவங்களைத்தான் சொம்பைங்கிறதா....

:))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அதிஷா.! (வெளிய வந்தாதானே குத்துவ? அஸ்குபுஸ்கு)
நன்றி அத்திரி.!
நன்றி மணிநரேன்.!
நன்றி செல்வா.! (ரசனையான பதில்கள். உள்ளிருக்கும் சாத்தான் பதிலுக்கான உங்கள் பதில்தான் என்னோடதும். ஆனால் சொல்லப்பட்ட விதத்தில்தான் உங்கள் வெளிப்படைத்தன்மை தெரிகிறது)
நன்றி சிவா.!
நன்றி டிவிஆர்.!
நன்றி சரவணா.!
நன்றி அதுசரி.!
நன்றி தமிழன்கறுப்பி.!

குசும்பன் said...

அருமை! (கூப்பிட்டதுக்கு திட்டுவிழும் என்று நினைச்சேன்:)

அந்த 90யை மிகவும் ரசித்தேன்!

குசும்பன் said...

யோவ் அதிஷா நீ எதிர்பார்த்த மாதிரி ஒரு ஆள் சிக்கிட்டார் அது மட்டும் இல்லாம உன்னை சொம்பைன்னு வேற சொல்லிட்டார்! ஹா ஹா அதிஷா நாம போட்ட பிளான் சக்சஸ்!

Mahesh said...

நாங்களும் பரிட்சை எழுதிட்டோம்ணே. ஆனா அர்ரியர்ஸ்தான்னு எழுதும்போதே தெரிஞ்சு போச்சு !!

$anjaiGandh! said...

//.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அழகு.//

ஆக, என்னை பார்க்கும் போது ஒன்னும் கவனிக்க மாட்டிங்க.. மூஞ்சியத் திருப்பிட்டு போய்டுவிங்க..

$anjaiGandh! said...

//டேய்... நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்....//

இந்த சவுண்டெல்லாம் நாங்க எவ்ளோ பார்த்திருக்கோம்.. தில்லிருந்தா ஆதி மேல கையை வச்சி பாருய்யா.. ரத்த ஆறு ஓடும்.. குசும்பன் தலைமைல 1000 பேர் உன் செலவுல டீ குடிப்பாங்க..