Friday, June 5, 2009

ரேஸ்..

முன் குறிப்பு :இன்னும் வாசித்திராத தோழர்களுக்காக விகடனில்(27.05.09) வெளியான ஒருபக்கச் சிறுகதை இங்கே..

ரேஸ்..


இந்த இறுதிக்கட்டத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவேயில்லை. முந்தைய தகுதிச்சுற்றுகளில் தொடர்ந்து தோல்விகளை அடைந்ததும் ஒருகட்டத்தில் சலித்துப்போய்விட்டது. ஆனால் ராம் தந்த ஊக்கம் மறுக்கமுடியாதது. ஒரு வழியாக தகுதிச்சுற்றில் நூலிழையில் வெற்றி பெற்ற பரபரப்பான நிமிடங்களை நினைத்துப் பார்த்துக்கொண்டேன். அதில் ஜெயித்தது கனவு மாதிரி இருந்தது. அந்த வெற்றியினாலேயே இந்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கான கதவு திறந்தது.

புத்தம் புதிய நீல நிற ஃபோர்ட் காரை செலக்ட் செய்திருந்தோம். இதன் வேகமும், உறுதியும், கண்ட்ரோலும் இதற்கு முன்னர் வைத்திருந்த B&G காரை விடவும் அதிகபட்சமாக இருந்தது. இந்த GP இறுதிச்சுற்றில் உடன் வரப்போகும் போட்டியாளர்களின் எண்ணிக்கை 6. அவர்களின் காரின் உச்சபட்ச வேகம் மற்றும் திறன்களை அறிந்து கொள்ள நான் ஆசைப்பட்டாலும் அதற்கான வழி இல்லை. களத்தின் இறுதி நிமிடங்களில்தான் பார்க்க முடிந்தது. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களில் பளபளவென மின்னின.

பக்கத்தில் ராம் பரபரப்பானான். ‘ஒரே சான்ஸ்தான் உனக்கு. விட்டிறாதே.. அதிலேயே முடிச்சிரணும் என்ன.?’

ஸ்டியரிங்கை இறுக்கிப்பிடித்தேன். எந்த விநாடிகளிலும் சிக்னலுக்கான கவுண்ட் ஆரம்பிக்கக்கூடும். இந்த் சக்யூடில் ட்ரையல் ரன் வேறு முன்னதாக அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் சாலை எப்படியிருக்குமோ என்ற சிறிய பதற்றம் வேறு இருந்தது. இது 12 கிமீ தூரம் கொண்ட சர்க்யூட், 3 லேப்ஸ், மொத்தம் 36 கிமீ தூரம். இதுவரை இந்த சர்க்யூட்டில் குறைந்த பட்ச சாதனை நேரம் 17நிமிடம், 04.54 செகண்ட்ஸாக இருக்கிறது. முறியடிக்கமுடியுமா? தகுதிச்சுற்றுகளில் இதே தூரத்தைக்கடக்க 17.30யிலிருந்து 18 நிமிடங்கள் ஆகின்றன. ஆனால் இந்த புத்தம் புதிய ஃபோர்ட் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. இதன் உச்ச வேகம் மணிக்கு 184 கிமீ. இடையில் ஏதும் விபத்துகள் நேராமல் பார்த்துக்கொண்டாலே போதும். வெற்றி நமக்கே.

தூரத்தின் பச்சை விளக்கு ஒளிர, அதே விநாடியில் ட்ராக்கின் நடுவே இரண்டு கார்களுக்கு நடுவே நின்றுகொண்டிருந்த இளம்பெண் கைகளை உயர்த்திப்பிடித்து குனிந்து சிக்னல் தரவும் ஏழு கார்களும் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டுகளைப்போல சீறிப்பாய்ந்தன. சிறிது தூரத்திலேயே கார்கள் பிரதான சாலையை அடைந்தன.

வாவ்.. என்ன மாதிரியான சர்க்யூட் இது.. கொள்ளை அழகு.! இடதுபுறம் பச்சைப்பசேலென மரங்கள், மலைப்பகுதிகள். வலப்புறம் நீலக்கடல். தெளிந்த வானத்தில் மாலை நேர சூரியன். மூன்றாவது இடத்திலிருப்பதாய் மீட்டர் காட்டியது. 24ம் எண் கார் முன்னால் சென்று கொண்டிருப்பதைக் காண முடிந்தது. எப்படியும் இன்னும் சில விநாடிகளில் அவனை டேக் செய்துவிடமுடியும். இந்த பரபரப்பிலும் மனதுக்கு ரம்யமான அந்த சூழல் எனக்குப் பிடித்திருந்தது. அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

முதுகில் டப்பென ஒரு அறை விழவும், ஸ்டியரிங் பிடி நழுவி அந்த வேகத்தில் கார் தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு தாண்டி கடலுக்குள் பாய்ந்தது.

“ஏண்டா லீவு நாளுன்னா இந்த கம்யூட்டர் கேமையே கட்டிக்கிட்டு அழுவுறீங்க.. வெளியப்போயி விளையாடக்கூடாதா? இந்தா இந்தப்பயலுக்கு சைக்கிள் ஓட்டக் குடுக்கலாம்லாடா..”

அம்மா புலம்பிக்கொண்டே சென்றாள்.

.

32 comments:

Truth said...

me the first :-)

Truth said...

ஆரம்பத்துல நீங்க சொன்ன அந்த காரின் specifications எல்லாம் நல்லா இருந்தது. மெக் ஃபீல்டுல இருக்கீங்க தானே நீங்க. நல்லா இருந்தது.
ஆனா,
//வாவ்.. என்ன மாதிரியான சர்க்யூட் இது.. கொள்ளை அழகு.! இடதுபுறம் பச்சைப்பசேலென மரங்கள், மலைப்பகுதிகள்.
மீதி கதையை இந்த வரிகள் காட்டிக் கொடுத்து விட்டது. :(
நீங்க இதை ஒரு முறை படிக்கறீங்களா?

வால்பையன் said...

//முதுகில் டப்பென ஒரு அறை விழவும், //

அப்பவே ஒரு பதிவுல கேட்டேன்!
உண்மையில அந்த அடிய போட்டது அண்ணி தானே!

Vinitha said...

சயிப் அலி கான் நடித்த தார ரம் பம் படத்தை, முதல் பார்ட் நினைவுபடுத்துது...

நல்ல ப்லோ!

Vinitha said...

சயிப் அலி கான் நடித்த தார ரம் பம் படத்தை, முதல் பார்ட் நினைவுபடுத்துது...

நல்ல ப்லோ!

தமிழன்-கறுப்பி... said...

நன்றி பகிர்வுக்கு...

வேத்தியன் said...

very nice...

ஸ்ரீதர் said...

படிச்சிட்டேன் விகடன்லயே.நல்லாருக்கு.

சித்து said...

நன்னா இருக்கு ஓய்

ஆ.முத்துராமலிங்கம் said...

விகட்னிலே படிச்சாச்சிங்க. ரொம்ப நல்லா எழுதியிர்ருந்தீங்க. மிகவும் பிடித்திருந்தது.

|முதுகில் டப்பென ஒரு அறை விழவும், ஸ்டியரிங் பிடி நழுவி அந்த வேகத்தில் கார் தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு தாண்டி கடலுக்குள் பாய்ந்தது.|

இது வரைக்கும் கதையின் மாற்றம் தெரியாமல் கொண்டு சென்று மிக நேர்த்தியாக முட்டித்திருந்தாங்க. வாழ்த்துக்கள்.

(ஆமா இது ஒரு வாரத்துக்கு முன்னாடி கேபில்சங்கர் அவர்ளோட கதையின் பாதிப்பில்லையே)
ஆனாலும் உங்க கதை வெகு பிரமாதம்!!

டக்ளஸ்....... said...

முடிவை யூகிக்க முடியுது ஆதி அங்கிள்...!

அன்புடன் அருணா said...

விகடனுக்கு வாழ்த்துக்கள்!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப நல்லா இருந்துச்சு கதை


ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே போட்டிருந்தா 15 ரூபா மிச்சம்பிடிச்சி இருந்திருக்கலாம்....... :)-

தராசு said...

//வாவ்.. என்ன மாதிரியான சர்க்யூட் இது.. கொள்ளை அழகு.! இடதுபுறம் பச்சைப்பசேலென மரங்கள், மலைப்பகுதிகள். வலப்புறம் நீலக்கடல். தெளிந்த வானத்தில் மாலை நேர சூரியன்.//

இங்கயே புரிஞ்சுருச்சு வேற எங்கியோ இட்னு போறீங்கன்னு.

நான் விகடனை படிக்கவில்லை,
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத அருமையான புனைவு தலைவரே.

வாழ்த்துக்கள்.

வித்யா said...

இன்னொருமுறை வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

ரேஸ்.. பாதையின் முடிவில் மிக அருமையான திருப்பம் :))!

ட்ரூத் சொன்னது போல அந்த பாரா மட்டும் லேசா நெருடியதென்னவோ உண்மை என்றாலும், பாதையைப் பார்த்து ஓட்டாமல் இதென்ன பராக்கு பார்த்துக்கிட்டு என நினைத்து ‘ஓ அதற்கென ஒரு முடிவு இருக்கும்’ என்றுதான் தொடர்ந்தேன். அந்த வகையில் ஏமாற்றவில்லை நீங்கள்:)!

விகடனிலேயே வாசித்து ரசித்தேன்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ட்ரூத்.! (உங்களோடதையும் படித்தேன் பாஸ்)
நன்றி வால்பையன்.!
நன்றி வினிதா.! (அதென்ன படம்? வித்யாசமா இருக்கும்போலயிருக்கே)
நன்றி தமிழன்.!
நன்றி வேத்தியன்.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி சித்து.!
நன்றி முத்துராமலிங்கம்.!(கேபிள்ஷங்கரின் கதைக்கு முன்பே எழுதப்பட்டது பாஸ்)
நன்றி டக்ளஸ்.! (அப்பிடியா மருமவனே..)
நன்றி அருணா.!
நன்றி அமித்து.!
நன்றி தராசு.!
நன்றி வித்யா.!
நன்றி ராமலக்ஷ்மி.! (நம்மூர்காரங்க நீங்க, அடிக்கடி வரமாட்டிறீங்களே.. ஹிஹி இதே கேள்வியை என்னைப்பார்த்து கேட்டுறாதீங்க.!)

விக்னேஷ்வரி said...

நல்ல கதை.

Marathamizhan said...

ஆதி,
கதய ஆ.வி.லயே படிச்ட்டேன்.பேருக்கேத்தமாதிரி வேகம்...
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !


@வால் ,
நீநீநீநீநீங்ங்ங்ங்கக......ஆதிய அண்னன் கூப்டு உங்கள யூத்னு ப்ரூவ் பன்ன ட்ரை பன்னி கஷ்டப்பட்ரது தெரியுது...
ஆனா நீங்க அனுஜன்யா,சென்ஷி கோஷ்டின்னு "மதுரை" பதிவர் சந்திப்பு
போட்டோ காட்டி கொடுத்து விட்டது(எப்பூடி)

அன்புடன்,
மறத்தமிழன்...

அ.மு.செய்யது said...

நல்லா எழுதியிருக்கீங்க தல..

உங்களுக்கு மட்டும் நல்லா அதிரசம் வந்திருக்கு போல...

நிறைய‌ ஹோம்வொர்க் ப‌ண்ணியிருக்கீங்க‌ன்னு தெரியுது..வாழ்த்துக்க‌ள்.

( ப‌கிர்வுக்கு ந‌ன்றி !!! )

ராமலக்ஷ்மி said...

//(நம்மூர்காரங்க நீங்க, அடிக்கடி வரமாட்டிறீங்களே..//

அடடா ‘புலம்பல்கள்’-ல் இதுவும் ஒன்றா:)? வந்துட்டா போச்சு!

//ஹிஹி இதே கேள்வியை என்னைப்பார்த்து கேட்டுறாதீங்க.!)//

இப்படிச் சொன்னதுக்காகவே கேட்கணும்ல. அதுதானே நம்மூர்காரங்களுக்கு அழகு. அடிக்கடி இல்லாட்டாலும் எப்பவாவது வந்துட்டுப் போகலாமே:)?

வாழவந்தான் said...

//
வாவ்.. என்ன மாதிரியான சர்க்யூட் இது.. கொள்ளை அழகு.! இடதுபுறம் பச்சைப்பசேலென மரங்கள், மலைப்பகுதிகள். வலப்புறம் நீலக்கடல். தெளிந்த வானத்தில் மாலை நேர சூரியன்.
//
இந்த வரிகள் முடிவ சொல்லிடிச்சு..
ஆனாலும் நல்லாயிருக்கு

அறிவிலி said...

3 நாள் முன்னாடிதான் இந்தியா வந்தேன். விகடன தேடி படிக்கலாம்னு நெனச்சேன்.நீங்களே போட்டுட்டீங்களே. தேங்க்ஸ்.

கதை நல்லா இருந்தது. ட்விஸ்ட் என்னால கெஸ் பண்ண முடியல.

வெங்கிராஜா said...

ஹிஹி... கைண்ட் ஆஃப் கெஸ்ட் இட்...

ஒரு சின்ன நொட்டை--- அது சர்க்யூட் இல்லங்க, சர்க்கிட். தென்னெந்திய ஆங்கிலப்பிழை! :-P (தப்பா எடுத்துக்காதீங்க அண்ணே!)

தமிழ்ப்பறவை said...

//இன்னும் வாசித்திராத தோழர்களுக்காக விகடனில்(27.05.09) வெளியான ஒருபக்கச் சிறுகதை இங்கே..//
நன்றி ஆதி...யூகிக்கும் படி இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு..(விகடனே பிரசுரம் பண்ணிருச்சு உனக்கென்னடான்னு கேட்கிறீங்களா..)..
ஏதேதோ டெக்னிக்கலா சொல்லிருக்கீங்க...ம்ம்ம்ம்

கும்க்கி said...

எந்த பத்திரிக்கையும் வாங்கவியலாத என்னை போன்ற நண்பர்களுக்காக பதிவு செய்தமைக்கு நன்றி.ஆனா தோஸ்த் ஆரம்பத்துலயே பொறி தட்டுச்சி.
உங்க பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்கள் மட்டும் சுலபமாக (உங்களுக்கு வீடியோ கேமிலுள்ள ஆர்வத்தை வைத்து) கண்டுபிடித்திருக்கலாம்.ஆனால் அச்சுக்கேற்ற சிறுகதை.
மீண்டும் வாழ்த்துக்களுடன்.

ராஜா | KVR said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் :-)

ஒரு ஸ்லோ ஸ்டார்ட் - தடதட வேகம் - ட்விஸ்ட் இன் த டெய்ல். பக்கா ஒரு பக்க சிறுகதை ஃபார்முலா.

ஒரு பக்கச் சிறுகதைகளோடு நிற்காமல் சிறந்த சிறுகதைகளையும், நாவல்களையும் படைத்து பெரிய எழுத்தாளராக வாழ்த்துகள்

rathnapeters said...
This comment has been removed by the author.
சதங்கா (Sathanga) said...

க்ரேட். வாழ்த்துக்கள்.

kartin said...
This comment has been removed by the author.
kartin said...

podium finish!!

standing ovation :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி விக்னேஷ்வரி.!
நன்றி மறத்தமிழன்.!
நன்றி செய்யது.!
நன்றி வாழவந்தான்.!
நன்றி வெங்கிராஜா.!
நன்றி அறிவிலி.!
நன்றி தமிழ்பறவை.!
நன்றி கும்க்கி.!
நன்றி ராஜா.!
நன்றி ரத்னாபீட்டர்ஸ்.!
நன்றி சதங்கா.!
நன்றி கர்டின்.!

அனைவருக்கும் மனமுவந்த நன்றிகள்.!