Monday, June 8, 2009

"பிரபல" பதிவர் யாராவது இருக்கீங்களா?

அன்பு அத்திரி,

இந்தப்பதிவின் உள்ளீடு புரிந்துகொள்ளாத சிலரால் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தாலும், உங்களிடமிருந்து இது எதிர்பார்க்கப்படவில்லை, வெறும் நகைப்புக்காக என்றும் எடுத்துக்கொள்ளமுடியாது. அந்தத்தொனியில் நீங்கள் எழுதவும் இல்லை.

ஆகவே, சில விளக்கங்கள் சொல்லவிரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் இந்தத்தொடருக்கு அழைத்த அந்த இன்னொரு பதிவர் நான்தான். மாற்றுக்கருத்துகளைக்கூறும் போது பெயர் சொல்லப்பட்டிருக்கவேண்டும். நீங்கள் குறிப்பிடவில்லை. இங்கே (வலையுலகு) யாரும் ‘பிரபலம்’ என்ற சொல்லுக்கு நிஜமான வரையறையை வகுத்துவிடமுடியாது. விருப்பமிருந்தால் ஒரு மாதம் இயங்காமல் இருந்தாலே போதும், இருந்த இடம் தெரியாமல் விலகிப்போய்விடலாம். எழுத்து என்பதைத்தாண்டி நட்பை முக்கியமாக கருதி வலையுலகில் இயங்குபவர்களும் அதிகம், ஒத்த ரசனையுள்ள நட்பு கிடைப்பதால்.

மிகச்சுவாரசியமாக எழுதி வலையுலகில் கோலோச்சி பின்னர் இதை விடுத்துச்சென்றோர் பலர். படைப்புகள், பத்திரிகைகள், சினிமா என்று அடுத்தக்கட்ட நிஜ ‘பிரபலம்’ என்ற வார்த்தைக்கான இடத்தை நோக்கிச்செல்லும் உண்மையான நோக்கமும் சூழலும் இன்று எனக்குத்தெரிந்து மிகச்சிலருக்கே இருக்கிறது. பிறர் சில காலத்தில் சோர்வுற்று விலகிப்போவார்கள். என்னைப்போல குடும்பம், வேலைக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் எதையாவது எழுதி புகழடையமுடியுமா? என்பதே பலரது நோக்கமாகவும் இருக்கிறது. அவர்கள் எழுத்தில் எந்த சாதனையையும் (என்ன பெரிய சாதனை? சாதனை? நாலு கதைகள் பத்திரிகைகளில் வருவது) செய்வது மிகுந்த கடினமான ஒன்றே. எந்தப்பிரிவில் நாம் இருக்கிறோம் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். இப்படி இருக்கையில் சக தோழர்களை/ நட்புகளை புதியவர்கள் மற்றும் பிரபலமில்லாதவர்கள் என்ற காரணங்களுக்காக ஒதுக்கும் துர்மனம் எங்களுக்கு இல்லை என்றே நம்புகிறேன்.

நான் கேபிள் சங்கருக்காகவும், அப்துல்லாவுக்காகவும் சேர்த்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறெந்த புதிய பதிவரைவிடவும் எங்களுடன் அதிகமாக நேரில் நட்பு கொண்டுள்ளீர்கள். குடும்பம் மற்றும் வேலைச்சூழலை நன்கு உணர்ந்தவர். நாங்கள் யாரையும் புதியவர், ஏற்கனவே பிரபலமானவர் என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை எனவும் அறிவீர்கள். அப்துல்லா எனது பதிவுகளுக்கு பின்னூட்டமிடுகிறாரோ இல்லையோ, பல புதியவர்களின் பதிவுகளை வாசித்து நன்றாக இருக்கும் போது பின்னூட்டமிடுகிறார். மெயிலில்/ போனில் அழைத்து பிறரும் அவற்றை படிக்க சிபாரிசு செய்கிறார். இது ஊரறியாதது. நாம் டீம், டீம் என்று சொல்கிறோமே, நமக்கு பின் வந்தவர்கள் யாருமே உருப்படியாக எழுதவில்லையா? என்ன திமிர் நமக்கு? நன்கு எழுதுபவர்களை நம் டீமில் இணைத்துக்கொள்ளவேண்டும். டீம் விரிவு படவேண்டும் என்று நர்சிமும், பரிசலும் ஓர் சந்திப்பில் தெரிவித்தார்கள்.

வாரம் ஒருமுறை வரும் விகடன் இதழையே படிக்கமுடியாமல் நேரமின்மையால் தவிர்த்துவருகிறேன். அந்தளவுக்கு பதிவுக்கு முக்கியத்துவம் தருகிறேன். ஏன்? புகழ் ஆசைதான். நேரமின்மையால் இங்கு இதுபோன்ற பல குழப்பங்கள் நேரலாம். மேலும் இந்தப்பிரச்சினையை மட்டுமே எடுத்துக் கொண்டாலும் நேரமின்மையால் அப்துலும் கேபிளும் ஒத்திப்போட்டிருக்கலாம். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டபடியால் பெயர் குறிப்பிடுவதில் தவறு நிகழ்ந்திருக்கலாம். முற்றிலும் அவர்கள் தவிர்த்திருந்தாலும் அதில் எந்த தவறும் இருந்திருக்கமுடியாது. நான் இந்தப்பதிவில் விருப்பமில்லை என்பதை உங்களிடம் தெரிவித்துவிட்டுதான் அதை திசைதிருப்பும் வண்ணம் நகைச்சுவையாக மாற்றியெழுதினேன். அதிலும் எனது அழைப்பை கார்க்கி ஏற்கவில்லை. அது எனக்கு என்ன மரியாதைக்குறைவா? மீண்டும் இந்தத்தொடரை எழுதும்போது அவரையேதான் அழைத்திருந்தேன். அதில் பாஸிடிவோ / நெகடிவோ எந்த உள்நோக்கமும் கிடையாது. இன்று அப்துல் வித்தியாசமாக பண்ணுகிறேன் பேர்வழி என்று ‘நான் சாதித்தபின் பதில் சொல்கிறேன்’ என்று சொல்லி வெறும் கேள்விகளை மட்டும் பதிவிட்டு இந்தத்தொடரை எழுதிய அனைவரையும் ‘பேஸ்த்’ அடிக்கச்செய்திருக்கிறார். அவருக்கு கண்டிப்பாக போனில் ‘டோஸ்’ உண்டு.

நான் அழைத்து எழுதாமல் இவ்வளவு நாட்களுக்குப் பின் பிறர் அழைத்து எழுத என்ன காரணம்? நான் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு மீண்டும் எழுத என்ன காரணம்? எங்க ‘ரேஞ்ச்’ பதிவர்கள் அழைத்ததாலா? என்பதுதானே உங்கள் கேள்வி? எல்லோரும் எழுதிக்கொண்டிருப்பதை பார்த்து ஏற்படும் ஒரு ஆர்வம்தான். வேறெந்த உள்நோக்கமும் இல்லை. இந்தப்பதிவு ‘போர்’ என்ற என் சொந்தக்கருத்திலும் மாற்றமில்லை.. இதை நான் இந்தத்தொடரை எழுதும் இரண்டு நாட்களுக்கு முன்னர் பரிசலின் பதிவில் பின்னூட்டமாகவும் தெரிவித்திருக்கிறேன். முதல் தடவையாக நான் பெரிதும் மதிக்கும், ஒரு பதிவைக்கூட தவறவிடாத வடகரை வேலனின் இந்தப்பதிவில் பல கேள்விகளுக்கு ஆவ்வ் என்று கொட்டாவி விட்டு விட்டு ஓடிவிட்டேன்.

மேலும் உங்கள் பதிவில் பின்னூட்டத்தில் நண்பர் கடையம் ஆனந்த் //அதிக நாட்களாக எழுதிக்கொண்டிருக்கின்ற போதும் எல்லோருடன் நட்பு பாராட்டுபவர் என்றைக்கும் சிறந்த பதிவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.// என்றும் // நீ வாங்குற 5 ,10-க்கு இந்த விளம்பரம் தேவையான்னு? அப்படி தான் இருக்கு இந்த பிரபல பதிவர்கள் கூத்து.// என்றும் // இதில முக்கால் வாசி பேர் தங்களின் உண்மையான பெயரை கூட பதிவுகளில் கொடுக்க தெம்பு இல்லாதவர்கள்.// என்றும் கருத்துச்சொல்லியிருக்கிறார்.

முதல் பகுதிக்கான என் பதில் : எல்லோருடனும் நட்பு பாராட்டுபவர் ஒரு நல்ல நண்பர் மட்டுமே, சிறந்த பதிவராகவும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இரண்டாவது பகுதிக்கான என் பதில் : நீங்கள் பிரபலம் என்று கருதும் அனைவரையும் நோக்கியுமே இந்தக்கமெண்ட்டா? இப்படிப் பொதுவாகச் சொல்லலாமா? சற்று சிந்தியுங்கள். மூன்றாவது பகுதிக்கான என் பதில் : எழுதுவதற்காக பல்வேறு காரணங்களுக்காக புனைப்பெயர் வைத்துக்கொள்வதென்பது உலகவழக்கம். இதில், உண்மையான பெயரைக்கொடுக்க எந்தத் தெம்பு வேண்டும் என்கிறீர்கள்? ரெண்டு முட்டை உடைச்சுக்குடிச்சா அது வருமா?

ஒரு பின்னூட்டம் இவ்வளவு பெரிதாக இருப்பது எவ்வளவு பெரிய அநியாயம்? இன்றைய எனது நேரத்தை இந்தப்பதிவிலேயே செலவழித்துவிட்டேன். அழகிய ஒரு காதல் கதையை எழுத திட்டமிட்டிருந்தேன். எல்லாம் போச்சு உங்களால். ஹிஹி.. ஆகவே இதை தனிப்பதிவாகவே போட இப்போது முடிவு செய்கிறேன்.

அன்புடன் ஆதி.

.

44 comments:

கார்க்கி said...

:))).. அத்திரியா இப்படி?

Cable Sankar said...

டென்ஷன் வேணாம் நம்ம அத்திரிதானே..///

டக்ளஸ்....... said...

அய்யா, இதுல ஆதியும் இணைஞ்சுட்டாப்ல..
கண்டிப்பா ஒரு வாரத்துக்கு பொழுது போயிரும்.
இதுக்கு அத்திரியும் கேபிளும் ஒரு பதிவு போடணுமே....!
அய்யோ...அய்யோ.
:)

Anonymous said...

ஐ!! இந்த வர மேட்டர் ரெடி...

நன்றி ஆதி, அத்திரி..

போங்கப்பா, போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க...

வித்யா said...

:x

Mahesh said...

ஐ... நானும் பிரபல பதிவர் ஆயிட்டேனே :))))))))))))))))))))

சென்ஷி said...

:-))

ஆஹா!

சென்ஷி said...

""பிரபல" பதிவர் யாராவது இருக்கீங்களா?"/////


எனக்குத் தெரிஞ்சு முன்னாடி தாமிரான்னு ஒருத்தர் இருந்தாரு. இப்ப எங்க இருக்காருன்னு தெரியலை.

தராசு said...

//‘பிரபலம்’ என்ற சொல்லுக்கு நிஜமான வரையறையை வகுத்துவிடமுடியாது.//

// அப்துல்லா எனது பதிவுகளுக்கு பின்னூட்டமிடுகிறாரோ இல்லையோ, பல புதியவர்களின் பதிவுகளை வாசித்து நன்றாக இருக்கும் போது பின்னூட்டமிடுகிறார்//

//நேரமின்மையால் இங்கு இதுபோன்ற பல குழப்பங்கள் நேரலாம். //

அனைத்தையும் வழிமொழிகிறேன்.
சரி சரி, கேபிள் அண்ணன் சொன்னதுமாதிரி, //டென்ஷன் வேணாம் நம்ம அத்திரிதானே..///

லூசுல விடுங்கப்பு.

"அந்த" பதிவு,(யோவ், உடனே வேற மாதிரி நினைக்காதீங்கைய்யா) அதாங்க காதல் பதிவை சீக்கிரம் போடுங்க.

குசும்பன் said...

என்ன ஆதி
நம்ம அத்திரி சொன்ன இன்னொரு ஆள் நீங்கதான் என்றால் அப்ப உங்களை அழைத்த நான் பிரபலபதிவர் என்று அர்த்தம் வருகிறதே! அது பொருக்கவில்லையா உங்களுக்கு?(நீங்க எழுதிய தொடர்பதிவில் உங்களை கூப்பிட்டது யாருன்னு பார்க்கும் பொழுது என் பேர் இருக்கும் அப்ப எல்லோரும் குசும்பன் பிரபலபதிவர் என்று தெரிஞ்சுப்பாங்க) ச்சே எல்லாம் போச்சே போச்சே இந்த பதிவால் எல்லாம் போச்சே!
என்ன உலமகம் இது
:((((((((((

Anonymous said...

//என்னைப்போல குடும்பம், வேலைக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் எதையாவது எழுதி புகழடையமுடியுமா? //

சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க எழுதிட்டுதான் இருக்கிங்க. இது மாதிரி பல கோணங்கள்ல பலரும் சொல்லறது சகஜம்தான், விட்டுத்தள்ளுங்க.

நர்சிம் said...

ம்ம்ம்ம்.. ம்ம்.ஊஹும்..ம்.என்னப்பா நடக்குது?

நையாண்டி நைனா said...

இன்னிக்குதான் உங்க பதிவும் வலைத்தளத்தின் பெயரும் "மேட்ச்" ஆகுது...

கே.ரவிஷங்கர் said...

சம்பந்தப்பட்ட எல்லாப் பதிவுகளையும் படித்தேன்.

ஒன்று நிச்சியம்.மறுத்தாலும் மறுக்காவிட்டாலும் அத்திரி சொல்லும்
“வைரஸ்’ பதிவுலகத்தில் இருக்கிறது.

அடி மனத்தின் குறை வெடித்து வருகிறது.

அந்த கால அரசர்,மந்திரி மாதிரி இருக்குக்கூடாது.

”மாதம் மும்மாரி பொழிகிறதா?” பெய்கிறது.
“மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்களா?”
இருக்கிறார்கள்.

மன்னர் மாறுவேஷம் போட்டு சாம்பிள் செக் செய்யவேண்டும்.மந்திரியை நம்பக்கூடாது.

கடைக்குட்டி said...

அய்யோ எம்பேரு இல்லியே :-)...

நானெல்லாம் பிரபலம் இல்லியா???

எம்.எம்.அப்துல்லா said...

வக்கீல் ஆதி வாழ்க!

எம்.எம்.அப்துல்லா said...

வக்கீல் ஆதி வாழ்க!

ஸ்ரீதர் said...

சரி சரி டென்ஷன் வேணாம் ,விட்டுத் தள்ளுங்க பாஸு.

சின்னக்கவுண்டர் said...

ஆதி, என்னாத சொல்ல உங்களுக்கு கோபப்பட தெரியல!!

நட்புடன் ஜமால் said...

ஒன்று நிச்சியம்.மறுத்தாலும் மறுக்காவிட்டாலும் அத்திரி சொல்லும்
“வைரஸ்’ பதிவுலகத்தில் இருக்கிறது.\\

ஆம்!

Karthik said...

:)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks to..
Karki,
Cable (டென்ஷனா? எனக்கா? கெக்கெக்கே..),
Dacklas,
Mayil (புள்ளைக்கு ஒரு வயசுதான் ஆவுது, பள்ளிக்குடத்துக்கு அனுப்பமுடியாது),
Vidya,
Mahesh,
Senshi (தாமிராவா? அது ஆரு?),
Tharasu,
Kusumban,
Ammini,
Narsim,
Naina,
Ravishankar (செய்யலாம் தோழர்),
Kadaikutty,
Abdulla......

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks to..

Sridhar,
Goundar,
Jamal,
Karthik.!

Anonymous said...

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.

Top Tamil Blogs

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்கள்

நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.

லக்கிலுக் said...

பிரபலம் என்பது பலூன் மாதிரியானது. சின்ன ஊசி போதும் புஸ் ஆக்கிட :-)

அத்திரி said...

ஹலோ மைக் டெஸ்டிங்....1,2,3 யாராவது இருக்கீங்களா?

அத்திரி said...

அண்ணே என்னையும் ஒரு ஆளா மதிச்சு ஒரு பதிவா????............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் காதல் கதையே எழுதியிருக்கலாம்.போங்கண்ணே

அத்திரி said...

//வெறும் நகைப்புக்காக என்றும் எடுத்துக்கொள்ளமுடியாது. அந்தத்தொனியில் நீங்கள் எழுதவும் இல்லை.//

முழுக்க முழுக்க நையாண்டிக்காக எழுதினேன்......... என் பதிவில் நான் கேபிளுக்கு சொன்ன பதிலை படித்தாலே அது புரிந்திருக்கும்.........

அந்த தொனியில் எப்படி எழுதுவது என சொல்லிக்கொடுங்கள்

அத்திரி said...

நான் பெயரை குறிப்பிட்ட கேபிள் சங்கரே அமைதியா இருக்கார்......நீங்க ஏம்ணே டென்சன் ஆகுறீங்க.......

அத்திரி said...

//கே.ரவிஷங்கர் said...
சம்பந்தப்பட்ட எல்லாப் பதிவுகளையும் படித்தேன்.

ஒன்று நிச்சியம்.மறுத்தாலும் மறுக்காவிட்டாலும் அத்திரி சொல்லும்
“வைரஸ்’ பதிவுலகத்தில் இருக்கிறது//

நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களே..thanks ரவிஷங்கர்

நண்பன் ஆனந்த் குறிப்பிட்டது அந்த "வைரஸ்கள்" பற்றிதான்........உங்களையோ அப்துல்லா அண்ணனையோ.கேபிளையோ குறிப்பிடவில்லை என்பதே என் கருத்து

மணிகண்டன் said...

யோவ் ஆதி ! தாமிரானு புனை பெயருள்ள எழுதிக்கிட்டு இருந்தபோது என்னைய மதிச்சு சினிமா சினிமான்னு ஒரு தொடர்பதிவுக்கு கூப்பிட்டீங்க. அதுவரைக்கும் மரியாதையா கமெண்ட் மட்டும் எழுதிக்கிட்டு இருந்த என்னைய பதிவு எழுத வச்சீங்க. . ஆனா அந்த பதிவுக்கு கூட விசிட் பண்ணல. (பலமுறை கூவி கூப்பிட்டும் )

உங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் !!!! ஹா ஹா ஹா

பிரபலப் பதிவர் said...

உங்களுக்குள்ள சண்டைண்ணா ஏன்யா என் தலைய உருட்டுறீங்க?

என்னையா நடக்குது இங்க?

பிரபலப் பதிவர் நான் தான்யா. சொல்லுங்க எதுக்கு என்னைய தேடுறீங்க?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தமிழர்ஸ்.!
நன்றி லக்கி.!
நன்றி அத்திரி.!
நன்றி மணிகண்டன்.! (உங்களை மாதிரி யாரும் நினைக்கக்கூடாதுன்னுதான்யா இப்படி புலம்பியிருக்கேன்)
நன்றி பிரபல பதிவர்.! (நீங்கதானா அது? எங்கேய்யா போனீங்க இவ்வளவு நாளா?)

T.V.Radhakrishnan said...

ஒழுங்கா படைப்பை கிட்டே வீட்டைத் தேடுங்க...அதை விட்டுட்டு ஏன் வம்பு சண்டை போடறீங்க..!!!! :-)))

அ.மு.செய்யது said...

பதிவ படிச்சேன்ங்க..

கருத்து சொல்லும் அளவுக்கு நான் இன்னும் 'பிரபல'மாக வில்லையாதலால் மீத எஸ்கேப்பு.

பாசகி said...

ஆதிண்ணே, அத்திரிண்ணே (என்ன ஒரு பேர் பொருத்தம்) இன்னும் ஒரு ரெண்டு நாளைக்காவது சுவாரசியமா இருக்கும்னு பாத்தேன்...ஆனா இல்லை(வரும் வராது டிரெண்ட்ல படிக்கணும்)

உங்க ரெண்டு பேரோட ஸ்டார்டிங்கெல்லாம் நல்லாதான் இருந்துச்சு ஆனா ஃபினிஷிங் சரியில்லையேப்பா :)))

கும்க்கி said...

எல்லாஞ்செரி சாமி, கடேசில அன்புடன் ஆதின்னு போட்டுட்டீங்களே...........

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி டிவிஆர்.!
நன்றி செய்யது.!
நன்றி பாசகி.!
நன்றி கும்க்கி.!

Anonymous said...

கடையம் ஆனந்த் said...
ஆதிமூலகிருஷ்ணன் said...
எல்லோருடனும் நட்பு பாராட்டுபவர் ஒரு நல்ல நண்பர், சிறந்த பதிவராகவும் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.
//

இல்லை நண்பா. பதிவர்கள் சிறந்த நண்பராகவும் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். புகழ் வரும் போது இது போன்ற பண்புகளும் அவசியம். எல்லோம் சேர்ந்தால் தானே தலைமை பண்பு.
//
இரண்டாவது பகுதிக்கான கருத்து ் நீங்கள் பிரபலம் என்று கருதும் அனைவரையும் நோக்கியுமே இந்தக்கமெண்ட்டா? இப்படிப் பொதுவாகச் சொல்லலாமா? சற்று சிந்தியுங்கள்.
//

ஒரு சிலரை தவிர என்று வைத்துக்கொள்ளலாம்.
//

மூன்றாவது பகுதிக்கான கருத்து ் எழுதுவதற்காக பல்வேறு காரணங்களுக்காக புனைப்பெயர் வைத்துக்கொள்வதென்பது உலகவழக்கம். இதில், உண்மையான பெயரைக்கொடுக்க எந்தத் தெம்பு வேண்டும் என்கிறீர்கள்? ரெண்டு முட்டை உடைச்சுக்குடித்தா அது வருமா?
//
சின்ன திருத்தம் நண்பா. புனைப்பெயர் வைத்துக்கொள்வது தவறியல்லை. இன்னும் சொல்ல போனால் இந்த பெயர் நம்முடைய பெயராக இருக்க கூடாதா என்று நினைக்கும் பலர் அது போன்ற பெயர்களில் எழுதுகிறhர்கள். பெயரின் உள்ள காதலால். அதை நான் விமர்ச்சிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

சிலர் புனைப்பெயரில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டும் என்று எண்ணத்தில் பதிவிடும் அந்த அனானி போன்றவர்களை தான் நான் குறிப்பிட்டேன்.

அனானி என்பது யார் என்பதை நீங்கள் விளக்க முடியுமா? இதில் முக்கால்வாசி பிரபலங்கள் அனானி போர்வையில் வந்து தானே கமாண்டு போடுகிறhர்கள். அந்த புனை நாயகர்களை பற்றி தான் குறிப்பிட்டேன்.

முட்டை குடித்தால் தெம்பு வருமா என்று எனக்கு தெரியாது. கலைஞர் இப்போது 3 முட்டை போடுகிறரே தாமிரா?

Anonymous said...

இதுக்காக தனிப்பதிவு போட்ட தாமிரா என்ற ஆதி அண்ணனே நான் என்னவென்று சொல்வது? அண்ணே நீங்க ஐகோர்ட்டுக்கு போய் வாதட வேண்டிய ஆளு. கோவிச்சுக்காதீங்க...சும்மா டமாசு...ஹி..ஹி.

$anjaiGandh! said...

//இன்றைய எனது நேரத்தை இந்தப்பதிவிலேயே செலவழித்துவிட்டேன். அழகிய ஒரு காதல் கதையை எழுத திட்டமிட்டிருந்தேன். எல்லாம் போச்சு உங்களால்.//

அப்போ அத்திரி எங்களை காப்பாத்திட்டாரா? :))

( அண்ணே... சும்மா ஜாலிக்கு தான் இந்த கொமெண்ட்.. திட்டிப்புடாதிங்க.. அவ்வ்வ்வ்வ் :(( )

$anjaiGandh! said...

விஐபிக்கள் கேள்வி பதில்னா சுவாரஸ்யமா இருக்கும்னு பரிசல் பதிவில் அண்ணன் ஆதியார் சொன்னார்.. அதனால அவாளோட ராவுகள்... ச்சா.. அவாளோட கேள்வி பதில்கள் படிச்சிட்டு வாரேன்.. :))

மங்களூர் சிவா said...

இதுக்குதான் நான் ஃபாலோ அப் செய்யற பதிவர்களை மட்டும்தான் படிப்பேன். நோ ரென்சன்.

மங்களூர் சிவா said...

/
மயில் said...

போங்கப்பா, போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க...
/

ரிப்பீட்டேய்