Thursday, June 11, 2009

நன்றி நாஞ்சில் மரியதாஸ்.!

வாடகைக்கான வீடு தேடி இடது புறம் விளம்பரம் கண்டிருப்பீர்கள். இதை வைக்கும் போதே கொஞ்சம் அவநம்பிக்கைதான். பரந்துபட்ட உலகம் பூராவுமே வலைப்பூக்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கையை நீங்கள் அறிவீர்கள். இதில் குட்டியூண்டு சென்னையின் வெளிப்புறப்பகுதியில் வாழ்பவர்களின் உதவி நாடி வைக்கப்பட்ட ஸ்கோப் குறைவான ஒரு விளம்பரம்.

உண்மையில் இன்ப அதிர்ச்சி. இதுவரை ஐந்து ரெஸ்பான்ஸ்கள். அனைவரின் பெயர்களையும் கூறி சங்கோஜப்படுத்தாமல், உதவி வெற்றிகரமாக முடிந்த நாஞ்சில் நாதம்மரியதாஸின் பெயரை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்கிறேன். மெயிலுக்கு வந்து பின்னர் நேரில் சந்தித்த மரியதாஸ் சுட்டிக்காட்டிய அவரது குடும்பநண்பர் ஒருவரது வீடு எனக்கு மிக திருப்தியாக அமைந்தது.

இத்தனை வருட சிட்டி வாழ்க்கையின் இரைச்சல், நெருக்கடி இன்னபிற துன்பங்களிலிருந்து விடுதலை பெற எண்ணியிருந்தேன். பாச்சிலராகவும், குடும்பஸ்தனாகவும் இதுவரை வாழ்ந்த வாழ்வதற்குரிய வீடுகளாக இல்லாமல், கழிப்பதற்கான வீடுகளாக அமைந்த சூழலை எண்ணிப்பார்க்கிறேன். சிட்டியை விட்டு ஒரேயடியாக விலகிடவும் இல்லாமல், அதே நேரம் கிராமங்களுக்குரிய சூழலும் அமையாதா என எண்ணியிருந்தேன். பசுமரங்கள் சூழ, சிட்டி கல்ச்சர் இன்னும் தாக்கியிறாத, வசதியான ஒரு அழகிய வீடு கனவாகவே இருந்தது. இந்த சென்னை வந்து வெற்றிகரமாக 10 ஆண்டுகளைக் கடந்தபின்னர் நான் நினைத்த அத்தனை அம்சங்களுடன் ஒரு அழகிய வீடு அமைய காரணமாக அமைந்த நாஞ்சில் மரியதாஸுக்கு இங்கே என் அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நட்புகளைத் தந்த இந்த வலையுலகம், நாஞ்சிலைப்போன்ற இன்னும் முகம் தெரியாத நல்ல வாசக உறவுகளையும் தந்ததை எண்ணியெண்ணி மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சி உங்களுக்கும் உரியது.

(இதில் வருத்தமான செய்தி ஏதெனில் நாஞ்சில் இவ்வளவு காலம் வலையுலகை கவனித்து வந்ததாகவும், இனி தானும் எழுதவிருப்பதாகவும் கூறியதுதான்.. ஹிஹி..)

புதிய வீடு, புதிய நிறுவனம் (அதாம்ப்பா பிளாண்ட்), புதிய மகிழ்ச்சி எனும் இவ்வேளையில் புதிய டெம்ப்ளேட், புதிய தளம் என வலைப்பூவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. என்ன புதுமை என்றாலும் வற்றாத புலம்பல்களுடன் அடுத்த பதிவு முதல் நீங்கள் சந்திக்கவிருப்பது www.aathi-thamira.com ல் என்ற செய்தியுடன் விடைபெறுகிறேன். நன்றி.

.

56 comments:

வெண்பூ said...

ரெண்டு வீடுகளுக்கும் வாழ்த்துகள் ஆதி.. ட்ரீட் எப்போ..

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள்... புது டெம்ப்ளேட் நல்லாருக்கு.. கலர் ஒரு மெக்கானிக்கல் என்சினியர் ரசனையோடு இருக்கு...

தமிழ்ப்பறவை said...

முகப்புப் படம் மூல அடைப்பலகையின் படத்தினைச் சரியாக மறைக்காமல் துருத்திக் கொண்டிருக்கிறது. சரி செய்யுங்கள்...

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் தாமிரா!

ராமலக்ஷ்மி said...

டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது.

தமிழ்மண வாக்களிப்புப் பட்டையை எங்கே காணும்?

ச்சின்னப் பையன் said...

ரெண்டு வீடுகளுக்கும் வாழ்த்துகள் ஆதி.. ட்ரீட் எப்போ..

ஆ.முத்துராமலிங்கம் said...

புது வீடு.. புது டெம்ப்லேட்டு...
கலக்குறீங்க ஆதி!!

ஆனா வீடு மாதிரி அத்தனை அழகாக இல்லை உங்கள் புதிய அடைப்பலகை!
எழுத்தை ஏதோ பெட்டிக்குள் அடைத்து வைத்துது போல் உள்ளது.
படிக்க உறுத்துவதாக தெரிகின்றது.
(எனக்கு கண்ணு கோலாறு என நினைக்கிறேன்) நீங்க பார்த்துக்கோங்க!!

சென்ஷி said...

வாழ்த்துக்(கள்)கள்!!!

டெம்ப்ளேட் கலக்கல்! :)

நாஞ்சிலாரை வரவேற்கின்றோம்..

சென்ஷி said...

வாழ்த்துக்(கள்)கள்!!!

டெம்ப்ளேட் கலக்கல்! :)

நாஞ்சிலாரை வரவேற்கின்றோம்..

டக்ளஸ்....... said...

Wishes FOr two homes...!
:)

Anonymous said...

வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் said...

//சிட்டியை விட்டு ஒரேயடியாக விலகிடவும் இல்லாமல், அதே நேரம் கிராமங்களுக்குரிய சூழலும் அமையாதா என எண்ணியிருந்தேன். பசுமரங்கள் சூழ, சிட்டி கல்ச்சர் இன்னும் தாக்கியிறாத, வசதியான ஒரு அழகிய வீடு //

இதுதான் இதேதான்.......

புது வீடுகளுக்கு வாழ்த்துகள் ஆதி அண்ணே.

வால்பையன் said...

இனி பெருங்குடி இல்லையா

ஒன்லி .......... தானா!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தோழர்களே.. ரிப்பேர் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ரெண்டு நாளாகும். மாற்றங்கள் இருக்கலாம். இந்த டெம்ப் எனக்கு பிடித்திருக்கிறது. கண்டெண்ட் அகலத்தை அதிகப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன். முடிந்தால் இறுதி செய்திடுவேன். இல்லையெனில் வேற டெம்ப்ளேட்தான். இயன்றவர்கள் உதவலாம்.

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் ஆதி !!

T.V.Radhakrishnan said...

புது வீடு..புது டெம்ப்ளேட்..கலக்கறீங்க ஆதி

Cable Sankar said...

புது வீட்டில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்தும் உங்கள் நண்பன்.
சங்கர்.


அப்ப இங்க இருக்கிற சின்ன வீட்டை என்ன பண்ண போறீங்க..? :)

அ.மு.செய்யது said...

ஒரே நேரத்தில் இரண்டு வீடும் புதுசா அமைஞ்சிருக்கு...

வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

புது வீடு.. புது டெம்ப்லேட்டு...
கலக்குறீங்க ஆதி!!

மங்களூர் சிவா said...

/
Cable Sankar said...

அப்ப இங்க இருக்கிற சின்ன வீட்டை என்ன பண்ண போறீங்க..? :)
/

repeateyyy
:))

சின்னக்கவுண்டர் said...

புது வீட்டுல போய் கண்ணன் கதைகள் எழுதுங்க, சொன்ன சொல்ல காப்பத்தனும் சொல்லி ஒரு மாசம் ஆகுது ஒரு கதையும் காணோம்.

என்ன வீடு மாத்தி என்ன பண்ண தங்கமணி கும்முறது குறையவா போகுது. எப்படியோ நல்ல இருந்தா சந்தோசம் தான்.

Vinitha said...

வாழ்த்துக்கள்...

புது டெம்ப்ளேட் நல்லாருக்கு...

Can you please email me? :-)

Mahesh said...

ரசனையான ஆளுக்கு ரசனையான வீடு

புது வீடு, புது ப்ளாண்ட் - ரெண்டு இடத்திலும் ப்ரொமோஷன் பெற வாழ்த்துகள் !!

(அப்பிடிக் கொளுத்திப் போடு :)

கோவி.கண்ணன் said...

சொந்த வூட்டுக்கு வாழ்த்துகள் ஆதி,

'கெரகம்' புதுப் பிரவேசம் ஆகிட்டா ?
:)

Anonymous said...

அப்ப இங்க இருக்கிற சின்ன வீட்டை என்ன பண்ண போறீங்க..? :)

எம்.எம்.அப்துல்லா said...

//ரெண்டு வீடுகளுக்கும் வாழ்த்துகள் ஆதி.. //

சொல்லவேயில்லை. ஆமா எங்களால ஒரு வீடே சமாளிக்க முடியலையே....

எம்.எம்.அப்துல்லா said...

புது டெம்ப்ளேட் ம்ம்ம்ம்ம்.... ஓ.கே.

எம்.எம்.அப்துல்லா said...

புது டெம்ப்ளேட் ம்ம்ம்ம்ம்.... ஓ.கே.

வித்யா said...

வாழ்த்துகள்:)

கார்க்கி said...

கலக்கறீங்க ஆதி-தாமிரா...

மரியதாசுக்கு நன்றி...

அனுஜன்யா said...

புது வீடுகளுக்கு வாழ்த்துகள். புறநகரின் அழகே தனிதான்.

Make the most of it Athi.

அனுஜன்யா

நர்சிம் said...

வாழ்த்துக்கள்

எவனோ ஒருவன் said...

நானும் தற்போது வீடு தேடிக்கொண்டு இருக்கிறேன் (3வது முறையாக). உண்மையிலேயே நீங்கள் அதிஷ்டக்காரர்தான்; இவ்வளவு எளிதாக, புரோக்கர் தொல்லை இல்லாமல் வீடு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். அதுவும் சென்னையில் மனதுக்குப் பிடித்த வீடு கிடைப்பது என்னைப் பொறுத்தவரை நடக்காத காரியம். மீண்டும் வாழ்த்துக்கள்.

---

//இந்த டெம்ப் எனக்கு பிடித்திருக்கிறது. கண்டெண்ட் அகலத்தை அதிகப்படுத்த முயன்று கொண்டிருக்கிறேன். முடிந்தால் இறுதி செய்திடுவேன். இல்லையெனில் வேற டெம்ப்ளேட்தான். இயன்றவர்கள் உதவலாம்.//
உதவலாமே.... இந்த டெம்ப்லேட் எடுத்த இடத்தை (Link) தரவும்.

---

ஓபனா சொல்லனும்னா.... இந்த டெம்ப்லேட் நல்லா இல்ல... மாற்றினால் நலம்.

---

புதுகைத் தென்றல் said...

நானும் டெம்ப்ள்ட் மாத்திட்டேன் ஃப்ரெண்ட். வீட்டுக்கு வாழ்த்துக்கள்

நாஞ்சில் நாதம் said...

நாங்களும் பேமசு ஆயாச்சுல.

(இதில் வருத்தமான செய்தி ஏதெனில் ‘நாஞ்சில்’ இவ்வளவு காலம் வலையுலகை கவனித்து வந்ததாகவும், இனி தானும் எழுதவிருப்பதாகவும் கூறியதுதான்.. ஹிஹி..)

ஆதி கமிசன் கேட்டதுக்கு இப்படியா?

சென்ஷி said...

நாஞ்சிலாரை வரவேற்கின்றோம்.

வரவேற்பிற்கு நன்றி சென்ஷி

நன்றி கார்க்கி

புதுகைத் தென்றல் said...

thanks for lemon tea

தராசு said...

வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும்.

புன்னகை said...

புது ப்ளாண்ட், புது வீடு, புது டெம்ப்ளேட்!!! கலக்குங்க ஆதி! வாழ்த்துக்கள் :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

புதுசா கெடைச்ச எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்

☼ வெயிலான் said...

புது வலைக்கும், வளைக்கும் வாழ்த்துக்கள் ஆதி-தாமிரா.

தராசு said...

தல,

போட்டோ வேற போடுங்க தல, இந்த போட்டோ இன்னும் 10 அல்லது 15 வருஷங்கழிச்சு போட்டுக்கலாம்.

டெம்பிளேர் சூப்பர்.

வீடு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். பால் காய்ச்ச கூப்பிடுவீங்களா?

ஸ்ரீதர் said...

வாழ்த்துகள் தாமிரா.இந்த டெம்ப்ளேட் நல்லாருக்கு.மாத்தாதீங்க,அட் லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு.

பாசகி said...

ரெண்டு வீட்டுக்கும் வாழ்த்துகள்-ஜி!!! background color கண்ணை உறுத்தறமாதிரி இல்ல, இதுதான் final design-ஆ?

முரளிகண்ணன் said...

ஏம்பா ஆதி. இந்த விளம்பர ஐடியாவ
கொடுத்த அப்பாவிக்கு ஏதும் டீ காபி
கிடையாதா?

வெண்பூ said...

//
முரளிகண்ணன் said...
ஏம்பா ஆதி. இந்த விளம்பர ஐடியாவ
கொடுத்த அப்பாவிக்கு ஏதும் டீ காபி
கிடையாதா?
//

இந்த ஐடியா குடுத்த பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணுனவணுக்கு எதுனா டீ, காபி, பொற கிடைக்குமா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நண்பர்களே.. டெம்பிளேட்டில் மாற்றங்கள் இருக்கலாம். அதற்குள் பாராட்டிவைத்தவர்களுக்கு நன்றி.. நன்றி.!


நன்றி வெண்பூ.!

நன்றி தமிழ்பறவை.!

நன்றி ராமலக்ஷ்மி.! (முதலில் டெம்ளேட் முடிவாக‌ட்டும்)

நன்றி ச்சின்னவர்.!

நன்றி முத்து.! (ச‌ரிப‌ண்ணிட‌லாம்)

நன்றி சென்ஷி.!

நன்றி டக்ளஸ்.!

நன்றி ஆனந்த்.!

நன்றி இலக்கியன்.!

நன்றி வால்பையன்.! (ஆமா, வால்.. இனி பெருமையா சொல்லிக்க‌முடியாது)

நன்றி தமிழர்ஸ்.! (உங்க‌ள் சேவை சிற‌க்க‌ட்டும், வாழ்த்துக‌ள்)

நன்றி செந்தில்குமார்.!

நன்றி டிவிஆர்.!

நன்றி கேபிள்.! (ஆமா, இங்க‌ ஒண்ணுக்கே வ‌ழியில்லையாம்..)

நன்றி செய்யது.!

நன்றி சிவா.!

நன்றி சின்னக்கவுன்டர்.! (விரைவில் வ‌ரும் தோழ‌ர். //என்ன வீடு மாத்தி என்ன பண்ண தங்கமணி கும்முறது குறையவா போகுது// அதுச‌ரி.!)

நன்றி வினிதா.!

நன்றி மகேஷ்.!

நன்றி கோவிஜி.!

நன்றி மயில்.!

நன்றி அப்துல்லா.!

நன்றி வித்யா.!

நன்றி கார்க்கி.!

நன்றி அனுஜன்யா.!

நன்றி நர்சிம்.!

நன்றி எவனோ ஒருவன்.!

நன்றி தென்றல்.!

நன்றி நாஞ்சில்.!

நன்றி தராசு.!

நன்றி புன்னகை.!

நன்றி அமித்து.!

நன்றி வெயிலான்.!

நன்றி ஸ்ரீதர்.!

நன்றி பாசகி.!

நன்றி முரளி.! (உண்டு.. உண்டு.!)

வசந்த் ஆதிமூலம் said...

வா வா வா வா வாழ்த்துகள் தோழரே.

RAMYA said...

வாழ்த்துக்கள் ஆதி!

RAMYA said...

டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது.
Super selection......

RAMYA said...

ஆமா மொதல்லே என்னவெல்லாமோ வச்சிருக்கீங்களே அது எங்களுக்கா?

அதான் லெமன் டீ, ஒ அது உங்களுக்கா?

Anonymous said...

வாழ்த்துக்கள் ஆதி

செல்வேந்திரன் said...

மூன்றாவது வீடமைக்கும் முயற்சியில் முனைப்போடு இருக்கும் அண்ணன், ஆன்மீகச் செம்மல் ஆமுகியைக் கிழி, கிழியென்று கிழிக்க இருக்கிறேன்...

உடனே அழைத்து 'கிழி'-யைப் பெற்றுக்கொள்ளவும்.

கும்க்கி said...

இனிமேட்டு சென்னை வந்தால் படப்பையிலிருந்து சென்னை வரை உங்கள நான் பத்திரமா பைக்கில் கூட்டிபோவேனாம்....

கும்க்கி said...

எப்படியோ கேமராவிற்க்கு நல்ல தீனி கிடைக்கும்...என்ஜாய் தோஸ்த்.

பாபு said...

வாழ்த்துக்கள்
நம்ம blog delete செய்யப்பட்டுவிட்டது, திரும்ப மீட்க முடியுமா?