அண்ணன் பினாத்தல் சுரேஷ், அண்ணன் ச்சின்னப்பையன் மற்றும் பல முன்னோர்கள் காட்டிய வழியில் நாம் தொடர்ந்து இயக்கப்பணிகளை செவ்வனே நடாத்திக்கொண்டிருக்கிறோம் என்பதை அறிவீர்கள். இருப்பினும் இடைக்காலத்தில் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதுகாறும் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து, அதில் உள்ள குறைபாடுகளைக் களைந்து இயக்கத்துக்கு மறுமலர்ச்சி ஊட்டவேண்டிய நேரம் இது என்பதை நாம் உணர்கிறோம். சங்க உறுப்பினர்கள் கொள்கைகளை மூச்சாக கொண்டு வெற்றிக்காகவும், விடுதலைக்காகவும் தொடர்ந்து ஓயாது உழைக்கவேண்டும் என்பதையும் இங்கே நாம் நினைவுறுத்துகிறோம்.
இதுகாறும் ஆற்றிய சாதனைகளை நினைவுகூர்வது, இரண்டாம் கட்டத்துக்கு பணிகளை வீச்சு குறையாமல் எடுத்துச்செல்லவே என்பதையும் நாம் அறிவோம். சமூகத்தின் வளர்ச்சிக்கு தூண்களாக இருக்கும் இளைஞர்கள் திருமணம் என்ற மாயையில் சிக்குவதில் இருந்து காக்கும் பொருட்டு 'திருமணமாகாதவர்களுக்கான எச்சரிக்கை' என்ற தலைப்பில் இதுவரை நாம் 28 பதிவுகளை பதிந்திருக்கிறோம். இதுவரை இந்தப்பதிவுகளுக்கு மட்டுமே சுமார் 1200 பின்னூட்டங்களைப் பெற்றிருக்கிறோம்.
முதல் பதிவு ஜூலை12, 2008ல் 'கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! -1' என்ற தலைப்பில் வெளியானது. ஒரு புதிய சகாப்தம் கண்முன்னே உருவாவதை கண்ட இளைஞர்கள் அன்றே சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் தூரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தனர். தொடர்ந்து எச்சரிக்கைகள் தொடர்ந்தன. எச்சரிக்கை 3'ல் இளைஞர்களின் மதுச்சுதந்திரம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தோம். பின்னர் தொடர்ந்து திருமணமாகிவிட்டால் வேறு வழியில்லையாததால் அவர்களை கொஞ்சமேனும் ஒரு குண்டூசி முனையளவாவது திருத்தமுடியுமா என்பதையும் கண்டோம்.
உண்மையைக் கண்முன்னால் கண்ட இளைஞர்கள் 'ஷோகேஸ் மனைவிகள்' படித்து அதிர்ந்து பின் தெளிந்தனர். பின்னர் ஓர் நாள் ஒரு பிரபல எதிர்கட்சி உறுப்பினரின் பதிவுக்கு எதிர்பதிவு எழுதியபோது ('என் ரமாவுக்கு') நாடே கொந்தளித்தது. அது சங்கப்பணிகள் உச்சத்தில் இருந்த பொற்காலம். இதையும் மீறி கல்யாணம் பண்ணித்தான் கொள்வேன் என்று வெறி பிடித்த இளைஞர்களுக்காக நாம் 'பெண் பார்ப்பது எப்படி' என்று வழிகாட்டினோம். பின்னர், நாம் போடும் பட்ஜெட் எப்படி சிதறுகிறது? நமது வீட்டு ஷாப்பிங் லிஸ்ட் எப்படி இருக்கிறது? மூணு கல்லு கிரைண்டர் எப்படி வாங்குவது? என்றேல்லாம் பார்த்தோம். இந்த காலகட்டத்தில்தான் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இளைஞர்கள் திருமனத்துக்குப் பின்னாலிருக்கும் உண்மை நிலையை உணர்ந்து அதிர்ந்து நின்றனர். நாடே ஸ்தம்பித்தது. புரட்சிகள் வெடித்தன.
மீண்டும் ஓர் நாள் அதே எதிர்கட்சி பதிவர் எழுப்பிய கேள்விகளுக்கு 'பதில் கேள்விகள்' கேட்டபோது பதிவுலகமே அதிர்ந்தது. அதன் பின்னர் வெளியான 25 வது வெள்ளிவிழா பதிவு பெரும் வெற்றி பெற்றது. அதன் பின்னர்தான் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதோ மீண்டும் வெகுவிரைவில் புதிய புதிய திட்டங்களுடன் இரண்டாம் கட்ட போரை நாம் துவக்க இருக்கிறோம் என்று எதிரிகளுக்கு சூளுரைப்போம். நாம் தோல்விகளில் இருந்து பாடங்கள் கற்போம். மீண்டும் வீறு கொண்டு எழுவோம் என்பதை இந்த உலகுக்கு ஓங்கி ஒலித்துவிட்டு இந்த உரையை நிறைவு செய்கிறேன். ஜெய் ஹனுமான்.!
உஸ்ஸ்ஸ்ஸ்.. சோடா குடுங்கப்பா.!
37 comments:
சும்மாவே இருக்குறதில்லையாப்பா?
பதிவே டேஞ்சர்னா மீள்பார்வை வேற?
ஆனாலும் கலக்கல்..
மீ நாட் தி பர்ஸ்ட்டு :((
ஒன்னும் சரியில்ல! :-)
தல,
மீள்பார்வையா? இனிமே மீள்கண்ணோட்டம், காதோட்டம் தேரோட்டம்.....,
என்னய்யா நடக்குதிங்கே????
இத்தனை நாட்களாக அமைதியாக ஓய்வெடுத்துவிட்டு சங்கத் தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் வந்து தன் சாதனைகளை பட்டியலிடும் இவரைப் பார்த்துக் கேட்கிறேன், இத்தனை நாட்களாக நீ எங்கே இருந்தாய்? பாவப்பட்ட ரங்கமணிகளை தங்கமணிகளிடமிருந்து காக்க நீ செய்தது என்ன?
சிங்கம் கிளம்பிடுச்சு
யோவ் :-)
வெண்பூ said...
\\பாவப்பட்ட ரங்கமணிகளை தங்கமணிகளிடமிருந்து காக்க நீ செய்தது என்ன?\\
இந்த முறை எதாவது செய்வாரு. அதான் புது வீடு பாத்து போறாருல்ல.
தலைவா,
இப்படி பழம்பெருமை பேசி பேசி காலத்தை விரயம் செய்யாமல் புதிய பதிவுடன் போர் காலத்துக்கு வா தலைவா!
எத்தனையோ பதிவுகள் படித்தாலும் உங்களைபோல் உள்ள மிகச்சிலருடைய பதிவுகள் படிக்கும்போது வரும் ஆத்ம திருப்தி வருவது இல்லை.
இதுக்கும் மேல சொம்பு தூக்க முடியாலப்பா :))
எஸ் அங்கிள்...!
கமான்..வெயிட்டிங் ஃபார் யு ஒன்லி....!
கமான் வித் நியூ தங்க மணி போஸ்ட்ஸ்...!
எஸ் அங்கிள்...!
கமான்..வெயிட்டிங் ஃபார் யு ஒன்லி....!
கமான் வித் நியூ தங்க மணி போஸ்ட்ஸ்...!
ஒன்னும் சொல்றதுகில்ல.
kalakkunka.
:)))
புதிய பூரிக்கட்டையுடன் ஊரிலிருந்து ரமாக்கா வர்ராங்கன்னுதானே இந்த ஆவேசம்.......?
சரி சரி... ஏதாவது தேர்தல் வருதா???? எதுக்கு இந்த ஃப்ளாஷ்பேக்?....
ஆனாலும் கலக்கல்....
:-)))))))))))))))))))))))))
ஒரு பயம் இருக்குல்ல.. அது..
அப்பப்ப இப்படி உசுப்பேத்துங்க தல!
அப்ப தான் உடம்புல முறுக்கு அப்படியே நிக்கும்!
//அப்பப்ப இப்படி உசுப்பேத்துங்க தல!
//
:))))
மீள்பார்வைக்கு ஒரு 'ஓ'.
wonderful
wonderful
Thala,
Template color kannula adikuthu.. konjam paathu ethavathu pannunga boss :)
திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதால்
சங்கத்திற்கு நான் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறேன்.
ஆதி,
பக்க வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.
//எத்தனையோ பதிவுகள் படித்தாலும் உங்களைபோல் உள்ள மிகச்சிலருடைய பதிவுகள் படிக்கும்போது வரும் ஆத்ம திருப்தி வருவது இல்லை.
இதுக்கும் மேல சொம்பு தூக்க முடியாலப்பா :))
//
நானும் சொம்பை கீழ வெச்சுட்டேன் :(
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமா ஆக்கிருவாயிங்க போலிருக்கே...!
தமிழ்மணத்தில் இருந்து வந்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும் பிளீஸ். பின்னூட்டத்திரட்டி இதை திரட்டுகிறதா என்பதை அறியவேண்டும்.
நன்றி நர்சிம்.!
நன்றி மங்களூர்.!
நன்றி புன்னகை.!
நன்றி தராசு.!
நன்றி வெண்பூ.!(பிஸியாக இருப்பதால் அப்பாலிக்கா பதில் சொல்றேன்)
நன்றி நாஞ்சில்.!
நன்றி ட்ரூத்.!
நன்றி கவுண்டர்.! (ரசித்துச்சிரித்தேன். சின்ன வேண்டுகோள். உங்கள் பெயரை மாற்றிக்கொண்டால் நன்றாகயிருக்கும். ஓரளவு அறியவந்தவுடன் சில சங்கடங்கள் நேரலாம்)
நன்றி டக்ள்ஸ்.! (இருக்குடி ஒரு நாள் உனக்கு. என்னைப்பத்தி இப்பவே வெளிய விசாரிச்சுக்கோ..)
நன்றி வித்யா.!
நன்றி ஸ்ரீதர்.!
நன்றி சென்ஷி.!
நன்றி கும்க்கி.!
நன்றி சின்னவர்.!
நன்றி மயில்.!
நன்றி வால்.!
நன்றி ஊர்சுற்றி.!
நன்றி சண்முகம்.!
நன்றி வெட்டிப்பயல்.!
நன்றி செய்யது.!
நன்றி வாசுதேவன்.!
நன்றி மகேஷ்.!
நன்றி வசந்த்.!
நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சி!!!!
தேர்தல் நேரத்துல இப்படி செஞ்சா ? வடகரை அண்ணாச்சியை தலைவர் ஆக எல்லாரும் ஒருமனதாக தேர்ந்தெடுப்பார்கள் என்றே தெரிகிறது. எதற்கும் நல்லா கேன்வாஸ் செஞ்சு பாருங்க
உங்க பதிவுகள் படிக்க வந்த முதல் நாளே ரவுண்டு கட்டி படிச்ச பதிவுகளாச்சே!! படிச்சிட்டு வீட்டுக்குப் போய் என் தங்கமணியிடம் சொன்னது “உன்னை நல்லவ ஆக்கிட்டாங்க ரமா”
இப்படி மீள்பார்வையோட நிற்காம அடிக்கடி தங்கமணி பதிவுகளைப் போடுங்க (புனைவா இருந்தாலும் பரவாயில்லை)
//தமிழ்மணத்தில் இருந்து வந்தவர்கள் ஒரு பின்னூட்டம் போடவும் பிளீஸ். பின்னூட்டத்திரட்டி இதை திரட்டுகிறதா என்பதை அறியவேண்டும்//
அங்கேர்ந்து தான் வர்றோம், சோக்கா தெரட்டுதுபா...
// நன்றி கவுண்டர்.! (ரசித்துச்சிரித்தேன். சின்ன வேண்டுகோள். உங்கள் பெயரை மாற்றிக்கொண்டால் நன்றாகயிருக்கும். ஓரளவு அறியவந்தவுடன் சில சங்கடங்கள் நேரலாம்)//
உங்கள் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளபட்டது.
இன்று முதல் "நீல மலை" என்று பெயருடன் தொடர்கிறேன்.
nadaaathungal..nadaathungal..!
இப்படி போட்ட பதிவுகள அலசிகூட அரசியல் பண்ணலாமா? :)
நாடே கொந்தளிச்சுதாம்ல.......ம்க்கும் சொன்னாய்ங்க :))))))
என்.டி.ராமாராவ் கணக்கா உங்க டெம்ப்ளேட் கலர்கலரா மின்னுதே!
Post a Comment