Tuesday, June 23, 2009

நீங்கள் எப்போது புத்தகம் படிப்பீர்கள்?

அலுவலகக் கேண்டீனில் கம்ப்ளெயிண்ட் புக் என்று ஒரு வஸ்து இருக்கிறது. இதைப்போல பல இடங்களில் நாம் கேள்விப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் அது பயன்படுத்தப்படாமல் வெறும் ஃபார்மாலிடிக்காகத்தான் இருக்கும். இங்கே அது செவ்வனே கவனிக்கப்படுகிறது என்று சமீபத்தில்தான் அறிந்தேன். ஒருநாள் சாப்பிட்டு ‘முடித்து’விட்டு அந்த புக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல தயிர் புளிப்பு, சாதம் வேகவில்லை, குழம்பில் உப்பில்லை, பழம் பழுக்கவில்லை போன்ற கமெண்டுகளைத்தாண்டி விதவிதமான சுவாரசியமான கமெண்டுகளையும் பார்க்கமுடிந்தது. சிலர் குறைகள் மட்டுமின்றி காரணமும் எழுதியிருந்தனர். ‘உளுந்துமாவு சரியாக அரைக்கவில்லை, ஆகவே இட்லி நன்றாகவே இல்லை’, ‘சாம்பார் என்றால் அதில் பருப்பு போடவேண்டும்’ இப்படியாக செல்கிறது அது. மறக்கமுடியாத இன்னொன்று, ‘பரோட்டா மிகவும் உறுதியாக உள்ளது’

***

பொருட்களின் பெயரை அவசரத்தில் மாற்றிச்சொல்வது என்பது நமது பேக்குத்தனத்தின் ஸ்பெஷல். சமீபத்திய உதாரணங்கள் : வீடு மாற்றும் களேபரத்தில் கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை கழற்ற தம்பியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.. ‘அந்த இன்ஸுலேட்டரை கழற்றி பத்திரமா வைய்யி’ (இன்ஸுலேட்டர் அலுவலகத்தில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை). அடுத்து புதிய வீட்டில் மாட்டிய லைட் எரியாததால் அதை நோண்டிக்கொண்டிருந்த தம்பியிடம் அடுத்த அறிவுரை, ‘முதல்ல லைட்டரை வெச்சு கரண்ட் வருதா செக் பண்ணிக்க..’

***

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில் பெருங்குடி டாஸ்மாக்கில் எதையோ (மளிகைச்சாமான்னு சொன்னா நம்பவா போறீங்க..) வாங்குவதற்காக, அதுவும் மாலை 5.30 பீக் நேரத்தில் நின்றுகொண்டிருந்தபோது கண்ட காட்சி. கிட்டத்தட்ட சாக்கடை போலிருந்த அருகாமை குப்பை மேட்டில் நடுத்தர மதிப்பில் ஒருவர் மல்லாக்கப் படுத்துக்கிடந்தார். கிக் தெளிந்து எழும் நேரம் போலிருக்கிறது. கண்கள் இன்னும் விழிக்காவிட்டாலும் கால் மேல் கால் போடப்பட்டு ஸ்டைலாக கால் ஆடிக்கொண்டிருந்தது. கைவசம் காமிரா இல்லாமல் போய்விட்டது.

அதே நிகழ்ச்சியில் பாட்டிலுக்காக கூவிக்கொண்டிருந்தபோது கூட்டம் நெரித்துத் தள்ளிக்கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து மிக பாவமாக ஒரு குரல், “அண்ணாச்சி, ரொம்ப தாகமா இருக்குது.. ஒரே ஒரு பீர் குடுங்களேன்”. எங்காவது கோயம்புத்தூர் பக்கமிருந்து வந்த குசும்பு பிடிச்சவரா இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

***

புதிய வீட்டில் இன்னும் கேபிள் மற்றும், இன்டெர்நெட் இணைப்பு வராததால் உருப்படியாக புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது ஆரம்பித்திருப்பது 'கால்டுவெல்'லின் திருநெல்வேலி சரித்திரம். முடித்தால் அதுகுறித்து ஒரு பதிவு போடலாம். முடிக்கிறேனா பார்க்கலாம்.

***

அன்பு நண்பர்களே.. உங்களில் பலர் உங்கள் வலைப்பூக்களில் எனது வலைக்கான இணைப்பைத் தந்திருக்கிறீர்கள். எனது முகவரியில் மாற்றமிருப்பதால் அவற்றில் கிளிக் செய்யும் போது இணைப்பு கிடைப்பதில்லை. இணைப்பின் முகவரியை சரி செய்து தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிக்க வேண்டுகிறேன். தொடரும் உங்கள் மேலான அன்புக்கு நன்றி. மேலும் நான் தந்துள்ள இணைப்புகளில் நீங்கள் உங்கள் தளத்தில் புதிய இடுகைகள் ஏற்றும் போது விரைந்து அப்டேட் ஆவதில்லை, இதுபோலவே நீங்கள் தந்துள்ள இணைப்புகளில் எனது புதிய இடுகைகளும் விரைந்து அப்டேட் ஆவதில்லை. என்ன பண்ணுவது என தெரியாமல் ‘முழித்துக்’கொண்டிருக்கிறேன்.

***

பி.கு : தொடர்ந்து ஒரே பெயரில் தொடர்பதிவு எழுதுவது போரடிப்பதால் (அவியல், குவியல் என நல்ல பெயர்கள் சிக்காததால் எப்படி போட்டு வாங்குகிறேன் பார்த்தீர்களா?) மிக்ஸ்டு ஊறுகாயும் இந்தப்பதிவிலிருந்து தவிர்க்கப்படுகிறது. இனி லேபிளில் மட்டுமே 'தொகுப்புப்பதிவு' என குறிக்கப்படும் (ரொம்ப முக்கியம்.!).

.

35 comments:

தராசு said...

புது வீட்டுக்கு போயாச்சா தலைவா,
வாழ்த்துக்கள்.
Packing and Moving ஒரு அருமையான அனுபவமா இருந்திருக்குமே, அதப் பத்தி எழுதுங்க.

//எங்காவது கோயம்புத்தூர் பக்கமிருந்து வந்த குசும்பு பிடிச்சவரா இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.//

ஏன், ஏன், ஏன் இப்படி, எங்க ஊரை பாத்தா இப்பிடி எல்லாம் தோணுது!!!!!

ஆயில்யன் said...

அக்கம் பக்கத்து சுவாரஸ்யங்கள் 1மே ஜொள்ளவே இல்லை :(

அமிர்தவர்ஷினி அம்மா said...

‘பரோட்டா மிகவும் உறுதியாக உள்ளது’

:)-

துபாய் ராஜா said...

கேண்டீன் நிர்வாகியின் சுவாரசியமான பதில்களில் இரண்டு.

1.‘சாம்பார் என்றால் அதில் பருப்பு போடவேண்டும்’.

மன்னிக்கவும்.இது என்ன குழம்பு என்று எங்களுக்கே தெரியவில்லை.


2.‘பரோட்டா மிகவும் உறுதியாக உள்ளது’

பாராட்டுக்கு நன்றி.

----------------------------

//“அண்ணாச்சி, ரொம்ப தாகமா இருக்குது.. ஒரே ஒரு பீர் குடுங்களேன்”. எங்காவது கோயம்புத்தூர் பக்கமிருந்து வந்த குசும்பு பிடிச்சவரா இருக்கும்.//

வன்மையாக மறுக்கிறேன்.அண்ணாச்சி
என்பது நம்ம ஊரு பேச்சுவழக்கம் என்பதால்,இந்த குசும்புக்குரல் உங்களுடையதாகவே இருந்திருக்கும் என்பது எனது கணிப்பு.

கார்க்கி said...

ஐடியா சிகாமணிண்ணே நீங்க..

Anonymous said...

//எங்காவது கோயம்புத்தூர் பக்கமிருந்து வந்த குசும்பு பிடிச்சவரா இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.//


எங்கனா...ஆட்டோ அனுபனுமா???//

Truth said...

ஹி ஹிஹி... இதெல்லாம் பரவாயில்லை. நான் சொழிங்கநல்லூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் அது. அன்று பொங்கல் என்று நினைக்கிறேன். எனவே எங்கள் கேண்டீனில் 'Karaikudi Special' அப்படின்னு ஆங்கிலத்தில எழுதியிருந்தார்கள், வட நாட்டு மக்கள் நிறைய பேர் இருப்பதினால்.
வத்த குழம்பு ஆங்கிலத்தில் "otha kuzhambu" என்று எழுதியிருக்க, அதை வட நாட்டு மக்கள் படித்த விதம்... :-)

சரி நீங்க mozilla பயன் படுத்துறீங்களா? IE ல உங்க ப்ளாக் சரியா வரலேண்ணா. கீஈஈஈஈஈழ ஸ்க்ரால் பண்ணி பாக்க வேண்டியிருக்கு.

வித்யா said...

:)

டக்ளஸ்....... said...

ஆதி அங்கிள். நீங்க ரொம்ப மோசம்,
உங்கள அழுக்கு கதை போஸ்ட் பண்ண சொன்னேன்ல.
நீங்க பண்ணாததால, நான் 18 ரூவ குடுத்து படிக்க வெண்டியதாப் போச்சு.
அந்த பிகர் படம் சூப்பர்..
:)

கடைக்குட்டி said...

உங்கள் டச்ன்னு சொல்ற மாதிரி காவியம் எழுதல நீங்க..

ஆனா.. சிரிப்பு வந்தது நெசமுங்கோ...

புது ஏரியா பத்தி பதிவுங்க தல:-)

Mahesh said...

புது வீட்டில் குடியேறினதுக்கு வாழ்த்துகள் !!

எங்க காலெஜ் மெஸ்ல ஹாஸ்டல் பசங்க கம்ப்ளைண்ட் புக் பக்கத்துல ஒரு கூரான பென்சிலை வெச்சுட்டு, "இந்த பென்சில் மெஸ் சப்பாத்தியைக் கொண்டு சீவப்பட்டது"ன்னு எழுதி வெச்சாங்க. :)

ஆமா...நீங்க புக்ஸெல்லாம் கூட டாஸ்மாக்குலதான் வாங்கறீங்களா?

நாடோடி இலக்கியன் said...

//எங்காவது கோயம்புத்தூர் பக்கமிருந்து வந்த குசும்பு பிடிச்சவரா இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.//
யாரை குறிவைத்து இந்த பௌன்ஸர்?

ஒரு வழியா டெம்ப்ளேட் பிரச்சனை சால்வ் ஆச்சா?
ரெண்டு நாளா ஒய்ட் ஸ்பேஸ் அதிகமா இருந்ததை கவனிக்காமல் உங்க பதிவை படிக்காமலேயே இருந்திருக்கேன்.

:)

டக்ளஸ்....... said...

தம்பி சும்மாவா விட்டாப்ல..!
அக்காகிட்ட, லைட்டர போட்டுத்தரலயா..?

ங்கொய்யால..! எதுக்கெடுத்தாலும் வாழ்த்துக்கள்தானா..?
சரி..வெற்றி பெற வாழ்த்துக்கள்..சாரி...
வீடு மாறுனதுக்கு வாழ்த்துக்கள்.

ஜானி வாக்கர் said...

//முடித்தால் அதுகுறித்து ஒரு பதிவு போடலாம். முடிக்கிறேனா பார்க்கலாம்//

அய்யா ஆதி, அதன் எங்களுக்கு விடை தெரியும்ல இப்ப்டி ஒரு பதிவு வரதுணு, எப்ப்டினு கேக்குறது கேக்குது, அதன் கடைசில ஒரு "க்" வச்சுட்டீங்களே.

இப்படிக்கு அனைத்துலக ஆதி விசிறிகள் சங்கம்.

புதுகைத் தென்றல் said...

வந்து படிச்சிட்டேன்

ராமலக்ஷ்மி said...

கான்டீன் கமெண்ட் புக்..
:))!

வால்பையன் said...

அப்போ இனிமே ஊறுகாய் கிடையாதா!

அதை வச்சு தானே இந்தனை நாளா எனக்கு வண்டி ஓடுச்சு, இனிமே சைடிஷ்க்கு எங்கே போவேன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆதிமூலகிருஷ்ணன் said...

தராசு, ஆயில்ஸ் (ஜொள்றேன், வெயிட்டீஸ்), அமித்து, துபாய் ராஜா (உண்மையெல்லாம் இப்பிடி பப்பிளிக்கா சொல்லப்புடாது), கார்க்கி, மயில், ட்ரூத் (நிறைய பேர் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க, யாராவது கணினி எக்ஸ்பர்ட் உதவுங்க பிளீஸ்), வித்யா, டக்ளஸ் (மாப்ள, அதான் அடுத்த வாரம் போடுறேன்னு சொன்னேன்ல..), கடைக்குட்டி, மகேஷ், இலக்கியன் (எத்தனை பேர் இப்படி ஹவுஸ்ஃபுல் மாதிரி நினைச்சுக்கிட்டு போனாங்கன்னு தெரிலயே..), ஜானி (இதுக்காவது எழுதிப்புடணும்யா..), தென்றல்...

அனைவருக்கும் அன்பார்ந்த என நன்றிகள்..!

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாங்க ராமலக்ஷ்மியக்கா.!
வாங்க வால்பையனண்ணே.!

கே.ரவிஷங்கர் said...

நல்ல இருக்குங்க.ரசித்தேன்.எங்கள் அலுவலக கேண்டீனில் எழுதப்பட்ட ஒரு
கம்பளைண்ட்:-

“எல்லா உணவுகளிலும் டேட் ஆப்
மேனுபாக்சர்(date of manufacture) போடவும்"

நர்சிம் said...

//முதல்ல லைட்டரை வெச்சு கரண்ட் வருதா செக் பண்ணிக்க..’***
//

ரசித்தேன் தல..நடத்துங்க..

jothi said...

//ங்கொய்யால..! எதுக்கெடுத்தாலும் வாழ்த்துக்கள்தானா..?
சரி..வெற்றி பெற வாழ்த்துக்கள்..சாரி...
வீடு மாறுனதுக்கு வாழ்த்துக்கள். //

//நீங்க பண்ணாததால, நான் 18 ரூவ குடுத்து படிக்க வெண்டியதாப் போச்சு.
அந்த பிகர் படம் சூப்பர்..//

//ஆமா...நீங்க புக்ஸெல்லாம் கூட டாஸ்மாக்குலதான் வாங்கறீங்களா//

பின்னூட்டங்களையும் ரசித்தேன்,.. பதிவு நல்லாயிருக்கு

அன்புடன் அருணா said...

பதிவை விட short and sweet ஆன நன்றி கமென்ட் சூப்பர்!!!!

Marathamizhan said...

ஆதி,

லைட்ட‌ர் மேட்ட‌ர் ...ர‌சித்தேன்..
கால்டுவெலின் "திருநெல்வேலி ச‌ரித்திர‌ம்"
குறித்த‌ ப‌திவை எதிர்ப்பார்க்கிறேன்.ஆனால் ஒரு ப‌திவுல‌ எழுத‌ முடியாது.
தொட‌ர் ப‌திவா பொடுங்க‌...


அன்புட‌ன்

முரளிகண்ணன் said...

கேண்டீன் மேட்டர் சூப்பர்.

ஆ.முத்துராமலிங்கம் said...

தொகுப்புபதிவு மட்டும் போடலாமே 'மொக்கை' ஏன்!! (எவனடா அது அட்வைஸ் பண்ணுறது..!! சரி விடுங்க)

மிக்ஸ்டு ஊறுகாய்... மாற்றமும் நல்ல தொகுப்பு ஊறுகாயும் நல்லாதா இருக்கு!!

பைத்தியக்காரன் said...

ஆதி, பதிவுக்கு,

:-)

அப்புறம், முதல்ல பேரை மாத்தினீங்க. அப்புறம் டெம்ப்ளேட். நேத்து வீடு, இன்னிக்கி லேபிள். நாளை?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ச்சின்னப் பையன் said...

‘பரோட்டா மிகவும் உறுதியாக உள்ளது’

:)-

எம்.எம்.அப்துல்லா said...

பைத்தியக்காரன் said...
அப்புறம், முதல்ல பேரை மாத்தினீங்க. அப்புறம் டெம்ப்ளேட். நேத்து வீடு, இன்னிக்கி லேபிள். நாளை?

//

ஆமா!ஆமா! சி.எம். ஆகப் போறாரு

:)))

செல்வேந்திரன் said...

'ங'

மணிநரேன் said...

//பரோட்டா மிகவும் உறுதியாக உள்ளது//

ஹா ஹா ஹா....

//முதல்ல லைட்டரை வெச்சு கரண்ட் வருதா செக் பண்ணிக்க//

ம்..:)

அ.மு.செய்யது said...

//‘பரோட்டா மிகவும் உறுதியாக உள்ளது’ //

ஹா..ஹா..இந்த மாதிரி சிரத்தை எடுத்து கேஃப்டேரியா ஃபீட் பேக்
நோட்ல எழுதுற ஆசாமிகளில் நானுமொருவன் என்பதால் ரசித்து
சிரித்தேன்.

( "அழுக்கின் அழகு" சான்ஸே இல்ல....மற்ற 1page கதைகளை காட்டிலும்
இது தனித்து நிற்கிறது.)

MayVee said...

அப்ப இனிமேல் ஊறுகாய் இல்லையா ????

அதும் அந்த மிக்ஸ்டு சுவை நல்ல இருந்துச்சு ....
இப்படி ஏமாற்றி விட்டுடிங்க....

ஹ்ம்ம் ....
பிறகு புது டைட்டில் எதாவது வைங்குங்க .....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ரவிஷங்கர்.!
நன்றி நர்சிம்.!
நன்றி ஜோதி.!
நன்றி அருணா.!
நன்றி மறத்தமிழன்.!
நன்றி முரளி.!
நன்றி முத்துராமலிங்கம்.! (எவண்டா அவன் அறிவுரை சொல்றது? என்னை அப்படியே நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க.. ரசித்தேன்)
நன்றி பைத்தியக்காரன்.!
நன்றி ச்சின்னவர்.!
நன்றி அப்துல்.!
நன்றி செல்வா.!
நன்றி நரேன்.!
நன்றி செய்யது.!
நன்றி மேவீ.!

தமிழ்ப்பறவை said...

//ஒருநாள் சாப்பிட்டு ‘முடித்து’விட்டு அந்த புக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்//
அடடே.. இது நல்ல டைம்பாஸ்ங்கா இருக்கே....
//கைவசம் காமிரா இல்லாமல் போய்விட்டது.//
காமிரா இல்லா தாமிரான்னு சொல்லமுடியாதபடி பேர் மாத்தியாச்சே...

அதுசரி... வரிகளைக் காப்பி பண்ணுனா, பின்னாடி பேக்ரவுண்ட் கலர் இல்லாம எழுத்துக்கள் கலர் மட்டும் நீல நிறத்துல வருதே.. எப்படி..? ஆனா நல்லா, புதுசா இருக்கு...