Wednesday, June 24, 2009

சாக்லெட் நிற வீடுகள்

நான் இந்த பெரிய சென்னைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அலுவலைப் பொறுத்த வரையில் இதுவரை ஆறு நிறுவனங்கள் மாறியாயிற்று (மொத்தத்தில் நான் இப்போது பார்ப்பது 10வது வேலை). வீடுகளைப் பொறுத்தவரை பாச்சிலராக இருந்தவரை ஒரு நான்கு முறையும், அதன் பின்னர் ஒரு மூன்று முறையும் என ஏழு முறை மாறியாற்று. எனவே மாற்றம் என்பது என‌க்கு ஒன்றும் புதிதல்ல.

நிரந்தரமில்லாத பாச்சிலர் வாழ்க்கையில் மாறும் அறைகள் குறித்து 'மிதக்கும் அறைகள்' என்று எஸ்ரா (தானே?) எழுதியது நினைவுக்கு வருகிறது. அதில் அந்த வாழ்வின் அவலங்கள் மிகச்சிறப்பாக பதியப்பட்டிருக்கும். சரி நமது கதைக்கு வருவோம்.

இந்த முறை வீடு பார்ப்பது என்று முடிவானது சென்ற டிசம்பரில். ஜனவரி 1ல் நிறுவனம் புதிய முகவரியில் இயங்கும் என்று முதல் அறிவிப்பை சென்ற வருடம் துவக்கத்திலேயே அறிவித்துவிட்டார்கள். ஜூலை 1 ஆகியும் இன்னும் முடிவானபாடில்லை. அது சரி, தக்கணூண்டு வீடு மாற்றுவதற்கே நமக்கு நாக்கு தள்ளிவிடுகிறது. இதில் ஒரு பெரிய நிறுவனத்தையே சொன்ன நேரத்தில் ஷிப்ட் செய்வதென்றால் ஆவுற கதையா? எத்தனை மிஷின்ஸ், எவ்வளவு பனையளவு பிரேக்கர்ஸ், உதிரி பாகங்கள்.. போன மாதம் இயக்குனர் கூப்பிட்டு (என்னை மட்டுமாங்கிறீங்களா.. சேசே.. எல்லோரையும்தாங்க. ஹிஹி..) "க‌ர‌ண்ட் இருக்கோ இல்லையோ, உட்கார‌ சேர் இருக்குதோ இல்லையோ அட்ஜ‌ஸ்ட் ப‌ண்ணித்தான் ஆவுணும். ஜூலை 1ந்தேதி போற‌து போற‌துதான். ம‌று பேச்சு கிடையாது மூச்.!" என்று கூறிவிட்டார். மறு பேச்சுமுள‌தோ? அத‌ன்பிற‌குதான் மூட்டை முடிச்சுகளை க‌ட்டும் வேலை தீவிரமாக‌ ந‌ட‌ந்துகொண்டிருக்கிற‌து. என்ன‌ விளையாடுறீங்க‌ளா? நா என்ன‌ க‌ம்பெனி ஷிப்ட் ப‌ண்ற‌தைப் பற்றியா சொல்றேன்னு சொன்னேன். எதைச்சொன்னாலும் கேட்டுக்கொண்டிருப்பீர்க‌ளே. வாங்க, வீடு பார்த்த‌ க‌தையைப் பார்க்க‌லாம்.

ஆக‌வே சென்ற‌ ஏப்ர‌ல் க‌டைசியிலிருந்தே வீடு பார்க்க‌த்துவ‌ங்கிவிட்டேன். முதலில் கண்ணனின் உதவியுடன் நானே ச‌னி ஞாயிறுக‌ளில் களத்தில் இற‌ங்கினேன். ந‌ம‌க்கு இந்த‌ அனுப‌வ‌ம் புதிதில்லை என்றுதான் முன்ன‌மே சொல்லிவிட்டேனே.. புரோக்க‌ர்க‌ளுட‌ன் சில‌ விரும்ப‌த்த‌காத‌ அனுப‌வ‌ங்க‌ள் இருப்ப‌தால் அதை நாம் விரும்புவ‌தில்லை. சிட்டியின் தொல்லைக‌ள் விட்டு வெளியே போக‌ப்போகிறோம் என்ற‌ ம‌கிழ்ச்சியில் கொஞ்ச‌ம் உற்சாக‌த்துட‌னே தேட‌ ஆர‌ம்பித்தேன்.

வித‌ம்வித‌மான‌ வீடுக‌ள். கொஞ்ச‌ம் அவுட்ட‌ர் என்ப‌தால் புரோக்க‌ர்க‌ளின் திருவிளையாடல் ந‌டைபெறாம‌ல் 'டூ லெட்' போர்டுக‌ளை நிறைய‌ காணமுடிந்த‌து. வீட்டிற்கு எங்காவ‌து சாக்லெட் நிற‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? இது போன்ற‌ அதிசய‌‌ங்க‌ளெல்லாம் ந‌ம‌க்குதான் ஸ்பெஷ‌லாக‌ நேரும் என‌ நினைக்கிறேன். சாக்லெட், பிங்க், ப‌ச்சை, சிவ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் என‌ அனைத்து நிற‌ங்க‌ளிலும் வீடுக‌ள். என்ன ஒரு ர‌ச‌னை.? நான் அப்பாவியாக‌ வெள்ளை நிற‌ வீடுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். வெள்ளை நிறத்தில் இருந்த‌ வீடுக‌ளோ கூடுக‌ள் என்று சொல்ல‌லாம் என்ப‌து போல‌ இருந்த‌ன‌. இந்த‌ முறை தீவிர‌மாக‌ இருந்தேன். கொஞ்ச‌ம் விசால‌மான‌, காற்றோட்ட‌மான‌ வீடு பார்த்தே தீருவ‌து என்று. இத்தனை நாட்கள் வாழ்ந்த ஒதுக்குப்புற‌மான‌, மிக‌ ஒடுக்க‌மான, காற்றில்லாத‌ என்று ம‌ன‌மே ஒடுக்க‌மாகிவிட்ட‌தோ என்ற‌ ப‌ய‌மே வ‌ந்துவிட்ட‌து.

பெரும்பாலான‌ வீடுக‌ள் முத‌லில் காம்ப‌வுண்ட் சுவ‌ருட‌ன் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ வீடாக‌ இருந்து பின்ன‌ர் பணத்தாசையால் வீட்டுச்சுவ‌ர்க‌ள் காம்ப‌வுண்டுட‌ன் இணைக்க‌ப்ப‌ட்டு L ஷேப் போர்ஷ‌ன்க‌ளாக‌ மாறியிருந்த‌ன‌. வித‌ம்வித‌மான‌ விதிமுறைக‌ள், நீங்க‌ள் அறியாத‌தா என்ன‌.? சில‌ வீடுக‌ளில் இருந்த‌து பெட்ரூமா அல்ல‌து பெட்ரூம் ஒன் பை டூவா தெரிய‌வில்லை. ஒரு வீட்டில் கிச்சன் சிறிதாக இருந்தது. 'வருஷம் பூரா ரமாவிடம் பாட்டு வாங்க நீ தயாரா?' என்று கண்ணன் பயமுறுத்தினான். வீடு ஓர‌ள‌வு ந‌ன்றாக‌ இருந்தால் சூழ‌ல் ப‌டு மோச‌மாக‌ இருந்த‌து, ஏதாவ‌து ஒரு ப‌க்க‌ம் அந்த ஏரியாவின் மொத்த‌ குப்பைக்கிட‌ங்கு, அல்ல‌து சாக்க‌டை.. இப்ப‌டி. அல்ல‌து நாம் டிந‌க‌ரில் வீடு பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என்று திகைக்க‌வைக்கும் வாட‌கை.

ஒரு வீட்டில் எல்லாம் பேசி முடித்தபிறகு, 'சொந்தக்காரங்க அடிக்கடி வருவாங்களா? வந்தா தங்குவாங்களா?' என்ற கேள்வியும் தொடர்ந்த சில கருத்துகளையும் கேட்டபோது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வந்து இரண்டு நாட்கள் தங்கிச்செல்லும் என் பெற்றோர் நினைவுக்கு வந்தனர். அவர்களை விரட்டிவிடுமளவுக்கு என் மனம் இன்னும் பக்குவமடையவில்லையாதலால் அங்கிருந்து நடையைக்க‌ட்டினேன்.

இவ்வாறான‌ சூழ‌லில் வ‌லைத்தோழ‌ர் மூல‌மாக‌ கிடைத்த‌ ஒரு வீடு ம‌ன‌ம‌கிழ‌ச்செய்த‌து அனைத்து வ‌கைக‌ளிலும். என்ன ஒன்று.. அமைதியான கிராமத்துக்குப் போகப்போகிறோம் என்ற என் எண்ணத்தில்தான் கொஞ்சம் பிசகு. பழைய பெருங்களத்தூர் சிட்டியாக மாறி ரொம்ப நாளாகிறது என எண்ணுகிறேன். பகல் நேரத்தில் சாலையைக் கடக்கமுடியாதபடிக்கு அவ்வளவு டிராபிக். அதுசரி, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனாலும் நமக்கு என்ன நடக்கும் தெரியாதா.?

ஆனால், வீக் என்ட்க‌ளில் என் வீட்டுக்கு வ‌ந்தால் ப‌க்க‌த்தில் கிஷ்கிந்தா போக‌லாம், வ‌ர்றீங்க‌ளா?

.

37 comments:

தராசு said...

//வீக் என்ட்க‌ளில் என் வீட்டுக்கு வ‌ந்தால் ப‌க்க‌த்தில் கிஷ்கிந்தா போக‌லாம், வ‌ர்றீங்க‌ளா?.//

சொல்லீட்டீங்கல்ல, வந்துடறோம்.

jothi said...

//வீக் என்ட்க‌ளில் என் வீட்டுக்கு வ‌ந்தால் ப‌க்க‌த்தில் கிஷ்கிந்தா போக‌லாம், வ‌ர்றீங்க‌ளா?.//

ஐயய்யோ,.. அப்ப உங்க வீட்ல சோறு போட மாட்டீங்களா? சரி பரவாயில்ல போனால போகட்டும்,.. கிஷ்கிந்தா ஸ்பான்ஸர் மட்டும் நீங்க பண்ணிடுங்க. குடும்பதோட வந்து விடுகிறோம். லஞ்ச் மட்டும் கிஷ்கிந்தால ( நீங்கதான் ஏற்கனவே தங்கமணியின் சாம்பார் ரசம் சொல்லி இருக்கிங்களே). OKயா?

Mahesh said...

முடியாது.. .விட மாட்டேன்.. நாந்தான் பஷ்டு..

Mahesh said...

அடங்கொக்க மக்கா... இங்க ஒரு டீமே டேரா போட்டுருக்குது !!

எவனோ ஒருவன் said...

//அவர்களை விரட்டிவிடுமளவுக்கு என் மனம் இன்னும் பக்குவமடையவில்லையாதலால் //
ஜீப்பரு.

//கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனாலும் நமக்கு என்ன நடக்கும் தெரியாதா.?//
எல்லாத்துக்கும் அப்படித்தான் போல இருக்கு.

//வீக் என்ட்க‌ளில் என் வீட்டுக்கு வ‌ந்தால் ப‌க்க‌த்தில் கிஷ்கிந்தா போக‌லாம், வ‌ர்றீங்க‌ளா?.//
வந்துட்டாப் போச்சு. அட்ரஸ்?

வால்பையன் said...

//வீக் என்ட்க‌ளில் என் வீட்டுக்கு வ‌ந்தால் ப‌க்க‌த்தில் கிஷ்கிந்தா போக‌லாம், வ‌ர்றீங்க‌ளா?//

இத முன்னாடியே சொல்றதில்லையா!

ஆனா என்ன தான் இருந்தாலும் நம்ம ஈ.சி.ஆர் ரோடு மாதிரி வராது,

தலைய கூட்டிகிட்டு ஒருநாள் போவோமா!

ஆயில்யன் said...

எக்ஸ்பெக்ட் பண்ணினதே இல்ல !

சரி கிஷ்கிந்தா போகறதுக்கு வாரேன்!

ரமேஷ் வைத்யா said...

அடுத்த பதிவின் தலைப்பு:

யாருய்யா இங்கே அப்பச்சன்? கிஷ்கிந்தாவைக் கேரளாவுக்கு ஷிஃப்ட் பண்ணு!

(ஹிஹி, நமக்கு ஒரு டிக்கெட். குளித்துவிட்டு சுத்தபத்தமாக வர்றேன்...)

ஆயில்யன் said...

//வால்பையன் said...

ஆனா என்ன தான் இருந்தாலும் நம்ம ஈ.சி.ஆர் ரோடு மாதிரி வராது,

தலைய கூட்டிகிட்டு ஒருநாள் போவோமா!///

ஐய்ய்ய வாலு வாட் இஸ் திஸ் தலையை கூட்டிக்கிட்டா??????

அன்புடன் அருணா said...

//சாக்லெட், பிங்க், ப‌ச்சை, சிவ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் என‌ அனைத்து நிற‌ங்க‌ளிலும் வீடுக‌ள். என்ன ஒரு ர‌ச‌னை.?//
அட இவ்வ்ளோதானா...இந்த தடவை ஊர்ப்பக்கம் வந்த போது ஆரஞ்சு நிறம்,வையல்ட் நிறங்களில் கூட வீடுகள் பார்த்தேங்க!!! ஏதோ கலர் வாஸ்துவாமே????

வித்யா said...

புது வீடு குடிபோனதுக்கு வாழ்த்துகள்.

பைத்தியக்காரன் said...

ஆதி,

உங்களுக்கு வீடு பார்த்துக் கொடுத்த வலைத்தோழருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். சரியாக உங்களை இனம் கண்டு கிஷ்கிந்தா அருகில் குடி வைத்திருக்கிறாரே :-)

யார் வசிக்கும் இடத்தை கிஷ்கிந்தா என்று அழைப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும்தானே?
:-) :-) :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

துபாய் ராஜா said...

புது வீடு புகுந்ததற்கு வாழ்த்துக்கள்.

சென்னை வரும்போது நிச்சயம் ஒரு வீக் எண்ட் விசிட் உண்டு.

துபாய் ராஜா said...

ஆதி,உங்கள் வலைப்பூ உடனடியாக திறந்தாலும் பதிவுகள் தெரிவதில்லை.
என்ன பிரச்சினை என கண்டறிந்து சீக்கிரம் சரிசெய்யவும்.

டக்ளஸ்....... said...

பெருங்களத்தூர்ன்னா, தாமபரம் பக்கத்துலயா அங்கிள்..?
பெருங்களத்தூர் ஏரிக்கரை ஸ்டாப்..???!
வண்டலூர் சூ எல்லாம் கூட பக்கத்துலதான் போலயே..!
கலக்குங்க அங்கிள். .

Anonymous said...

எங்க தெருவே ரொம்ப நல்ல இருக்கும் ஒரே மாதிரி வெள்ளை கலரில் பார்க்க பளிச் என்று... இப்ப டார்க் பிங்க் வித் டார்க் ப்ளூ, பச்சை கலர் சிங்குச்சா, சேப்பு கலர் சின்குச்சன்னு சகிக்கலை....கலர் வாஸ்து வாம், கண்ணு படாதாம்...

சரி அது இருக்கட்டும், once more கேட்டா கூட்டிட்டு போவிங்கள???

மங்களூர் சிவா said...

எங்கய்யா சென்னைய விட்டுட்டு வண்டலூர் போய்ட்டீங்களா???
:))))))))

நர்சிம் said...

வாழ்த்துக்கள்..ஆதி.

கார்க்கி said...

// சரியாக உங்களை இனம் கண்டு கிஷ்கிந்தா அருகில் குடி வைத்திருக்கிறாரே ://

கிகிகிகிகி

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தராசு.!
நன்றி ஜோதி.!
நன்றி மகேஷ்.!
நன்றி எவனோ ஒருவன்.!
நன்றி வால்பையன்.! (கண்டிப்பா போலாம்)
நன்றி ஆயில்ஸ்.!
நன்றி ரமேஷ்.! (ஆரு இது? புதுசா இருக்கு?)
நன்றி அருணா.! (கலர் வாஸ்துவா? விளங்கிரும்)
நன்றி வித்யா.!
நன்றி பைத்தியக்காரன்.!
நன்றி துபாய் ராஜா.! (மோஸிலா, க்ரோம், எக்ஸ்ப்ளோரர் 8 ஆகியவற்றில் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. எக்ஸ்ப்ளேரர் பழைய வெர்ஷன்களில் பிரச்சினைன்னு நினக்கிறேன். என்ன பண்றதுன்னு தெரியலை. நான் சொல்வது சரியா என பயன்படுத்துபவர்கள் சொன்னால் உதவியாக இருக்கும்.. ப்ளீஸ்.!)
நன்றி டக்ள‌ஸ்.!
நன்றி மயில்.! (கண்டிப்பா.. பைசா நீங்கள்தானே கொடுக்கப்போகிறீர்கள்)
நன்றி சிவா.!
நன்றி நர்சிம்.!
நன்றி கார்க்கி.!

அனுஜன்யா said...

அப்போ 'சென்னை' பதிவர் சந்திப்பில் நீங்க சிறப்பு விருந்தினரா இனிமேல்?

ஆனாலும் புறநகர் சூழல் தனிதான். 'புலம்பல்களுடன்' நிறைய 'முத்தங்களும்' வரும் சூழல். பாத்து ஆவன செய்யவும்.

அனுஜன்யா

வெண்பூ said...

ம்ம்ம்ம்... புதுவீடு செட்டில் ஆயாச்சா? கலக்குங்க...

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவர்களை விரட்டிவிடுமளவுக்கு என் மனம் இன்னும் பக்குவமடையவில்லையாதலால் //

வீடு பார்க்கும் அனுபவமென்றாலும், அதையும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

'வருஷம் பூரா ரமாவிடம் பாட்டு வாங்க நீ தயாரா?' என்று //

வாழ்க்கை முழுதுமே பாட்டு வாங்கப்போறேன், இதுல நாள், கிழமை,வருஷமென்னன்னு சொன்னீங்க தானே நீங்க. :)-

Anonymous said...

வாழ்த்துகள் ஆதி. புது வீடு வந்த நேரம் பொன்னான நேரமாகட்டும்.

Vinitha said...

புது வீடு புகுந்ததற்கு வாழ்த்துக்கள். :-)

தண்ணீர் பிரச்சனை எல்லாம் எப்படி?

போன், இன்டர்நெட் எல்லாம் உண்டா?

சிட்டிக்கும், வெளியூருக்கும் வாடகை வித்தியாசம் எவ்வளவு?

ஈஸ்ட் தாம்பரம் தானே அது? ரோடு கிராஸ் பண்ண ரொம்ப கஷ்டம்! இடத்திற்கு விலை மயிலாப்பூர் அளவு சொல்கிறார்கள்....

பரிசல்காரன் said...

புதுமனைப் புகும்நேரம் பொன்னான நேரமாகட்டும். போய் செட் ஆன உடனே தங்கமணியின் தொந்தரவுகள் என்று பதிவெழுதினா தங்கச்சி சார்பில முதுகுல நாலு போடுவேன்!

T.V.Radhakrishnan said...

ஒரு நாள் குடும்ப சகிதம் வந்துடறேன்..

கும்க்கி said...

கிஷ்கிந்தா கிட்டயா..?
நாலு எட்டு வச்சிருந்தா செங்கல்பட்டிலோ அல்லது காஞ்சீவரத்திலயோ காற்றோட்டமான வயல்வெளிகளினிடையே நல்ல வீடு கிடைத்திருக்குமே ஆமூகி.
கி.கி எல்லாம் துருப்பிடிச்சுபோச்சு...போய் ஏமாற வேண்டாம்.

ஜீவன் said...

புது வீடு சரி தண்ணி வசதி எப்படி? பக்கத்துல ''கடை'' இருக்கா ?

RR said...

I am having problem in IE 8. Most of the times its loading the headers and later throwing an error ("Operation aborted") before painting the content. Very rarely I am getting the content that too after 10 or 15 seconds.

வசந்த் ஆதிமூலம் said...

ஏம்ப்பா யாராவது எங்கயாவது கூட்டிட்டு போங்கலேன்பா.... ரொம்ப போர் அடிக்குது.

பாபு said...

அந்த பக்கம் இருந்த ஒரு பிளாட் ஐ விலையேற்றத்திற்கு சற்று முன்னால் மிக குறைந்த விலையில் விற்று ,அதனால் பாதிக்கப்பட்ட ஆள் நான்.
கோவில் பிடிக்கும் என்றால் அருகில் முடிச்சூரில் ஒரு அருமையான சிவன் கோயில் இருக்கிறது ,சென்று வாருங்கள்.
வரலாறு பிடிக்கும் என்றால் அருகில் மனிமங்கலத்தில் இரு பழமையான கோவில்கள் இருக்கின்றன சென்று vaarungal.
நானும் கொஞ்சம் பக்கமாக பல்லாவரத்தில் இருக்கிறேன்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அனுஜன்யா.! (முத்தங்கள் தொலைந்துவிட்டன.. அவ்வ்..)
நன்றி வெண்பூ.!
நன்றி அமித்து.! (அதெல்லாம் கரெக்டா புடிச்சுருவீங்களே)
நன்றி வேலன்.!
நன்றி வினிதா.! (தண்ணி பிரச்சினை இல்லை. நெட்தான் இன்னும் இல்லை)
நன்றி பரிசல்.!
நன்றி டிவிஆர்.!
நன்றி கும்க்கி.!
நன்றி ஜீவன்.! (அந்த தண்ணி பிரச்சினையும் இல்லை. பக்கத்துலதான் கடை)
நன்றி RR.! (அந்தப்பிரச்சினையை தனியா பேசுவோம்)
நன்றி வசந்த்.! (நானும் இப்பிடிதான் கொஞ்ச நாளா கூவிக்கினுருக்கேன். ஒருத்தனும் கண்டுக்கிற மாட்டிங்கிறானுவோ..)
நன்றி பாபு.! (தகவல்களுக்கு நன்றி. ஃபிரீயா இருக்கச்சொல்லோ ஒரு நாள் வாங்கோ)

Rajeswari said...

வீக் என்ட்க‌ளில் என் வீட்டுக்கு வ‌ந்தால் ப‌க்க‌த்தில் கிஷ்கிந்தா போக‌லாம், வ‌ர்றீங்க‌ளா?.//

வந்துடுறோம்..

நட்புடன் ஜமால் said...

\\வீக் என்ட்க‌ளில் என் வீட்டுக்கு வ‌ந்தால் ப‌க்க‌த்தில் கிஷ்கிந்தா போக‌லாம், வ‌ர்றீங்க‌ளா?\\

வந்துடரோமுங்கோ ...

கடைக்குட்டி said...

நல்ல விவரிப்பு..

கம்பெனியின் புது எடம் பற்றி மாறியதும் சொல்லுங்க...

:-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராஜேஸ்வரி, ஜமால், கடைக்குட்டி.!