Tuesday, June 30, 2009

அழுக்கின் அழகு

அழுக்கின் அழகு (விகடனில் வந்த கதை)

ண்ணாடிகளே சுவராகப் பதிக்கப்பட்டு, பிரமாண்டமாக எழுந்து நின்றது அந்தப் பத்து மாடிக் கட்டடம். முகப்பில் இருந்த ஆங்கிலப் பெயர்ப் பலகை, அது ஒரு மென்பொருள் நிறுவனம் என்பதைக் கூறியது. அதன் இடப்புற வாசலில், இன்னும் கட்டட வேலைகள் நிறைவு பெறாமல் தொடர்ந்து கொண்டு இருந்தன. ஆண்களும் பெண்களுமாக செங்கல் லையும், சிமென்ட்டையும் கட்டடமாக உருமாற்றிக்கொண்டு இருந்தனர்.


இந்தப் பக்கம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி நேரம் துவங்கியிருந்தது. பிரதான வாசலில் கார்களும் பைக்குகளுமாகக் கடந்துகொண்டு இருந்தன. அடையாள அட்டைகள் ஊசலாட, காதுகளில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பொருத் திய அழகிய யுவன்களும் யுவதிகளும் பரபரப்பாக நடை பயின்றுகொண்டு இருந்தனர்.


ஸ்வப்னா இறுக்கமான ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அதைக் காட்டிலும் இறுக்கமான வெள்ளை நிற டாப்ஸ் அவளது அழகை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஜீன்சுக்கும் டாப்சுக்கும் இடையே இரண்டு விரற்கடை அகலத்தில் அழகு 'இடை'வெளி. காலில் கறுப்பு நிற ஹைஹீல்ஸ். சுருள் தலைமுடியை பாண்ட் செய்திருந்தது அவளுக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தந்தது. ஸ்லீவ்லெஸ் என்பதால் வழவழப்பான கைகளும், பளபளப்பான முகமும், 'ஒன்ஸ்மோர் பார்க்கலாமா மச்சான்?' என்று இளசுகளைச் சுண்டி இழுத்தன. ஸ்வப்னாவுக்கு எந்தக் குறையும் இல்லாத அழகில், அருகில் ஜீன்ஸ் குர்தா வர்ஷா.


“என்ன ஸ்வப்ஸ், இன்னிக்கு ஜொலிக்கிறே... என்ன விசேஷம். டாப்ஸ் புதுசா?”


“நத்திங் ஸ்பெஷல். டாப்ஸ் ஓ.கே-வா?" சிரித்தாள்.


“கிளாஸ்! நெக் ரொம்ப நெருக்கமா இருக்குது. இன்னும் கொஞ்சம் இறக்கமா இருந்தா, சூபர்ப். பசங்க தெறிச்சு ஓடிடுவாங்க!"


"அப்படியா சொல்ற... பண்ணிடலாம்!" - கண்ணடித்தாள். இருவரும் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந் தனர்.


அதே நேரம் இடதுபுறம் கட்டட வேலை நடந்துகொண்டு இருந்த தலத்தில்... நைந்து அழுக்கான சேலையில் இருந்தாள் சாந்தி. அவள் தலையில் கிழிந்த சாக்குத் துணி சும்மாடும், கைகளில் செங்கல் சட்டியும், கால்களில் பிய்ந்த ரப்பர் செருப்புகளும்... உடம்பு முழுக்க சிமென்ட்டும், செங்கற்தூளும் அப்பியிருந்தன!


"அண்ணே... செங்கல் சட்டியைத் தலைக்கு மேலே வெச்சுக்கிட்டு, ரெண்டு கையாலயும் பிடிச்சுத் தூக்கிட்டுப் போவ ஒரு மாதிரியா இருக்குது. சுத்தியும் ஆம்பளைங்களா இருக்காங்க. நாளைக்கு வீட்லேர்ந்து நானே எடுத்துட்டுவந்தி டுறேன். இன்னிக்கு ஒருநாள் மட்டும் மேல போட்டுக்கிடறதுக்கு ஒங்க பழைய சட்டை எதுனா இருந்தா குடுங்கண்ணே" - மேஸ்திரியிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள் சாந்தி.


********


நன்றி : விகடன், ஓவியத்துக்காக திரு.ஷ்யாம்.

(பி.கு : சென்ற வார விகடனில் வெளியான இந்தக்கதை இதுவரை படித்திராத நண்பர்களுக்காக இங்கே மீண்டும். அப்புறம் இன்னொரு விஷயம்.. விகடன் நெட் பின்னூட்டங்களில் இந்தக்கதை குறித்து சூடான விவாதம் நிகழ்ந்தது, ஸாஃப்ட்வேர் பெண்களை இந்தக்கதை அவமதிப்பதாக. அதுகுறித்து எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாமலே அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஸாஃப்ட்வேர் பெண்கள் அனைவரும் தவறானவர்கள் என்றோ, சித்தாள் பெண்களனைவரும் சரியானவர்களென்றோ இந்தக்கதையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதையும், அது போன்ற எண்ணம் நமக்கும் இல்லையென்பதையும் இங்கே பதிகிறேன். அதையும் மீறி எதிர்வினையாற்றித்தான் தீருவேன் என்பவர்கள் ஆற்றலாம். அப்படியாவது நானும் ரவுடியாகிக்கொள்கிறேன்.)

29 comments:

அ.மு.செய்யது said...

ஏற்கென‌வே சொல்லிட்டேன்.இருந்தாலும் இன்னொரு முறை.

அந்த‌ வார‌த்தில் வெளிவ‌ந்த‌ ம‌ற்ற‌ ஒரு ப‌க்க‌ க‌தைக‌ள் "அழுக்கின் அழ‌கு" முன் நிக்க‌ கூட‌ முடியாது.

வித்தியாச‌மான‌ க‌ற்ப‌னை.த‌னியா தெரிஞ்ச‌து.

லவ்டேல் மேடி said...

அருமை... அருமை...!!! சிந்திக்கவும் வைத்தது ..!!!!! வாழ்த்துக்கள்...!!!

வால்பையன் said...

அடுத்த குவியலில் எழுதலாம்னு இருந்தேன்!

சென்றவார விகடனில் பதிவர்களின் எந்த படைப்பும் வரவில்லையென்றாலும் நானே கேள்வி நானே பதிலில் அக்னிபார்வையின் ப்ளாக் வந்திருந்தது.
ஒருவரி கூட விடாமல் படிக்கும் என்னிடம் நடக்குமா?

வாசகர் கடிதத்தில் அதே மதுரையிலிருந்து உங்களை ஒரு நண்பர் பாராட்டியிருப்பார் பாருங்கள்!

எப்பூடி!

அக்பர் said...

நல்ல கதை.

நம்ம பக்கமும் வாங்க‌

http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_30.html

அக்பர் said...

உங்கள் டெம்ப்ளேட்டை மாற்றினால் நீங்கள் முன்பு சொன்ன பிரச்சனை தீரும்.

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

வண்ணத்துபூச்சியார் said...

Simple, Short and Sweet..

எவனோ ஒருவன் said...

அப்பவே சொல்லனும்னு நெனச்சேன்... சொல்லிட்டேனோ?

--

ஓக்கே ஒக்கே, ஆனா படிச்சப்போ நீங்கதான் எழுதுனதுனு தெரியாது... ஞாபகம் இருக்கா? அன்னைக்கி ரயில்ல ஊருக்குப் போறேன்னு சொன்னேனே? போகும்போதுதான் படிச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது.

ரொம்ப நல்லா இருக்கு.

--

அப்புறம்... சாப்ட்வேர்தான்னு இல்லை... அந்த இடத்தில் வேற எந்தமாதிரி வேலயாப் போட்டாலும் பொருந்தும். சென்னைல அலையுதுங்க பாருங்க... பாத்துக்கிட்டே இருக்கத் தோனும்... அப்படி ஒரு ஒழிவு மறைவில்லாத அழகு, உடை, நடை, ஓட்டம்... சரி விடுங்க, வேற ஏதாவது சொல்லிறப் போறேன்...
--

பட்டிக்காட்டான்.. said...

ஆ.வி லயே படிச்சுட்டேன்..

அங்கே பின்னூட்டமிட முடியாததால் இங்கே..

நல்ல கதை..

டக்ளஸ்....... said...

நல்ல கதை..
வித்தியாசமான கதைக்களம்..
யாரும் தொடாத சப்ஜெக்ட தொட்டுருக்கீங்க...
கதை நல்லா வந்திருக்கு..வாழ்த்துக்கள்.
ஹாட்ஸ் ஆஃப்...!

ம்ம்ம்.. வேற என்னமோ சொல்லுவாய்ங்களே.!
ம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அங்கிள்.. ( ஸாரி..அது முடிஞ்சுருச்சா...!)

டக்ளஸ்....... said...

அய்யய்யோ..இத மறந்துட்டேன்அங்கிள்..
:) (ஸ்மைலி)

தராசு said...

தல,

வித்தியாசம். அட்டகாசம்.

//ஸ்வப்னாவுக்கு எந்தக் குறையும் இல்லாத அழகில்,//

ஸ்வப்னாவுக்கு சற்றும் குறையாத அளவில், அழகில் னு எழுதியிருக்கணுமோ!!!!!!

jothi said...

விகடனில் இப்போதுதான் எல்லா பின்னூட்டங்களையும் படித்து விட்டு வருகிறேன். மா மரம்தான் கல்லடி படும். வேப்பமரத்திற்கு அது தேவையில்லை (பலமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது). உடைக்கும் உள்ளத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதே கதையின் மெய்ப்பொருள். சித்தாளுக்கும், மென்பொறியாளரக்கும் உதாரணங்கள் மட்டுமே என்பதே உண்மை

நர்சிம் said...

வயித்துல பால வார்த்தீரய்யா டிஸ்கிய போட்டு.. என் பேரு வர்ற கதைகள்ல கதையவே படிக்காம ரெண்டு பேரு கும்மாங்குத்து ஆன்லைன்ல குத்துறது நினைச்சு வருத்தப்பட்டேன்.. ரைட்டு

ஜானி வாக்கர் said...

//மா மரம்தான் கல்லடி படும். //

அண்ணன் ஆதி பட கூடாதுணு தான் வேண்டிகறோம்.

கல்லடி பட்டாலும் தொடர்ந்து பதிவு எழுதுவார் என்று நம்புகிறேன்..

முரளிகண்ணன் said...

அருமை ஆதி

pappu said...

அய்யய்யோ..இத மறந்துட்டேன்அங்கிள்..
:) (ஸ்மைலி) ///


அய்யய்யோ, பிரபல யூத் பதிவர் ஆதிய பாத்து அங்கிள்னு சொல்லிட்டான்டோய்!
இன்னைக்கு பஸ் எரியுதுடா!
சோடா பாட்டில பறக்குதுடா!

pappu said...

உங்க டெம்ப்ளேட் தெலுகு படம் மாதிரி கலர்கலரா பாத்த உடனே அன்னைக்கு யாரு ப்ளாக்கோன்னு நெனச்சுக்கிட்டேன்.

ராம்.CM said...

நான் படிச்சிட்டேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செய்யது.!
நன்றி லவ்டேல்.!
நன்றி வால்.!
நன்றி அக்பர்.!
நன்றி வண்ணத்துப்பூச்சி.!
நன்றி எவனோ ஒருவன்
நன்றி பட்டிக்காட்டான்.!
நன்றி டக்ளஸ்.!
நன்றி தராசு.!
நன்றி ஜோதி.!.!(சரியா சொன்னீங்க..)

நன்றி நர்சிம்.!
நன்றி ஜானி.!
நன்றி முரளி.!
நன்றி பப்பு.!(டக்ளஸ், ஜானிவாக்கர் ரெண்டு பேரு பத்தாதா?? நீங்க வேறயா?)

நன்றி ராம்.!

panaiyeri said...

அருமை ...

Rithu`s Dad said...

அய்யோ.. இது நீங்கள் எழுதினதா ஆதி.. நல்ல கதை.. யார் எழுதினதுனு தெரியாமலயே விகடன் ல படிச்சு செம்ம ஃபீல் பன்னிட்டு இருந்தேன்.. நண்றி இந்த கதைக்களத்திற்க்கு.. வாழ்த்துக்கள்..

தமிழ்ப்பறவை said...

இப்போதான் படிச்சேன். ’நச்’ முந்தைய விகடன் கதையை விட இது சூப்பர்...
ஷ்யாம் அனுபவிச்சு ஓவியம் போட்டிருக்காரு...அந்தளவு உங்க வரிகள்ல இளமை கொந்தளிக்குது போல(:-))
நானும் கதை விட்டிருக்கேன். வா...காத்திருக்க நேரமில்லை...படிச்சிட்டு சொல்லுங்க...

Suresh said...

தலைவா இதை படித்தவுடன் சொல்லிவிட்டேன் உங்களிடம் மிக அருமையான கதை ...

நான் கண்ட வெகு சில பெணகளும் இதை போல் வருவதை பார்த்து இருக்கிறேன்..

சுடிதார் போட்ட எல்லாரும் நல்லவங்களும் இல்லை ..

ஜீன்ஸ் போட்ட எல்லாரும் கெட்டவங்களும் இல்லை என்பது தெரிந்தது நாம் கண்டது..

மிக சரியாக மானத்தை பற்றி நல்லா எழுதி இருந்திங்க ...

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

அது சரி said...

ஆதி,

இதை சொல்ல தயக்கமாக இருக்கிறது...இருந்த போதிலும் சொல்ல தோன்றுவதால்...

இரண்டு பொருள் பற்றி பேசி, அதில் ஒன்றை அழகு என்றால், மற்றது அசிங்கம் என்பது சொல்லாப் பொருள்...இங்கே அழகு என்று எதை நீங்கள் சொல்கிறீர்கள்??

தவிர,

நீங்கள் இதை போன்ற கருத்து கொண்ட கதைகள் படித்ததே இல்லையா?? பொருளாதார நிலையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் உடல் அழகை தயக்கமின்றி காட்டுவதாகவும், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் அதை மறைக்க போராடுவதாகவும் கட்டமைக்கப்பட்ட கதைகள் ஏகத்திற்கு இருக்கின்றன..விகடனே இது போன்ற கதைகள் நூற்றுக் கணக்கில் வெளியிட்டு இருக்கும்...இது போன்ற தவறான பார்வைகளை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது...

ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை..எல்லா கதையும் ஏற்கனவே யாரோ எழுதி விட்டார்கள்...எல்லாக் கருத்துக்களும் சொல்லப்பட்டு விட்டன...ஆக புதிதாய் ஒன்றை யாரும் எழுதி விட முடியாது...(அல்லது எனக்கு தெரிந்து இல்லை..)

ஆனால், கதை அமைப்பிலும், சொல்லும் நடையிலும் சில வித்தியாசங்களை காட்ட முடியும்...மன்னித்துக் கொள்ளுங்கள், இந்த கதையில் அதற்கான முயற்சி கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை....ஒரு வேளை எனக்கு தான் எதுவும் புரியவில்லையோ என்னவோ??

உங்கள் பழைய எழுத்துக்களை புரட்டி பார்த்தால்....ஒரு நல்ல எழுத்தாளர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பனையேறி.!
நன்றி ரிது.!
நன்றி சுரேஷ்.!
நன்றி தமிழ்பறவை.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அதுசரி.!

(//இதை சொல்ல தயக்கமாக இருக்கிறது...இருந்த போதிலும் சொல்ல தோன்றுவதால்...
இரண்டு பொருள் பற்றி பேசி, அதில் ஒன்றை அழகு என்றால், மற்றது அசிங்கம் என்பது சொல்லாப் பொருள்...இங்கே அழகு என்று எதை நீங்கள் சொல்கிறீர்கள்?//

என்ன தயக்கம்? நிச்சயமாக இந்தக் கதையில் அந்த சாந்திதான் அழகு.!

//நீங்கள் இதை போன்ற கருத்து கொண்ட கதைகள் படித்ததே இல்லையா??//

எனது அல்லது இதைப்போன்ற கதைகள் மட்டுமல்ல, நண்பர்களாக இருப்பினும் பரிசல், நர்சிம், வேலன் உட்பட பலரது படைப்புகளும் கூட யாரோ எங்கோ ஏற்கனவே எழுதியது போலவேதான் எனக்கும் தோன்றிக்கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்வது போலவே எல்லா கதைகளுமே ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டனவோ? குறைந்தபட்சம் சொல்வதிலாவது வித்தியாசம் காட்டித்தான் ஒப்பேற்றவேண்டும்.. சினிமா, இசை போல.. அந்த வித்தியாசமும் இதில் இல்லை என நீங்கள் கருதினால் தோல்வி என்னுடையது. மேலும் குறைந்தபட்சமாக விகடனே இதை வெளியீட்டிற்காக தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதையும் நீங்கள் கணக்கில் கொள்ளலாம்.

//ஒரு நல்ல எழுத்தாளர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.//

பாருங்க மக்களே.. இவருக்குப்போய் நானும் சீரியஸாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். :-))

நர்சிம் said...

//எனது அல்லது இதைப்போன்ற கதைகள் மட்டுமல்ல, நண்பர்களாக இருப்பினும் பரிசல், நர்சிம், வேலன் உட்பட பலரது படைப்புகளும் //

ஆதி,யோவ், ராங் நம்பர்னா ராங் நம்பர்னு சொல்லு..அது என்னா ராங்ங்கா பேசுறது.. அவருக்கு பதில் சொல்ற சாக்குல ஏன்யா இந்தக் கொலக் குத்து??

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்களும் ரௌடியாகிட்டீங்க
நீங்களும் ரௌடியாகிட்டீங்க
நீங்களும் ரௌடியாகிட்டீங்க

வாழ்த்துக்கள்.

கதை, வித்யாசமாக இருந்தது. விவாதங்களுக்குட்பட்ட கதைதான் :)-