Sunday, July 5, 2009

ஒரு செடியில் ஒருமுறைதான்..

ஒரு செடியில் ஒருமுறைதான்.. (கண்ணன் கதை 1)

வீடு மாற்றும் களேபரங்களில்தான் சில பழைய பொக்கிஷங்கள் எல்லாம் வெளியாகும். குப்பைக்கூளங்களுக்கு நடுவே உட்கார்ந்துகொண்டு சிக்கிய ஒரு பழைய ஆல்பத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். அதிகமில்லை ஜென்டில்மேன், 95-96 ஆல்பம்தான். பல்லிக்கு கைகால் முளைத்ததைப்போல ஒரு பையனும், பக்கத்தில் பூசனிக்காய்க்கு கைகால் முளைத்ததைப்போல இன்னொருவனும் குற்றாலம் பச்சைப்பசேல் பேக்ரவுண்டில் நின்று கொண்டிருந்தார்கள். உற்றுப்பார்த்தபின்தான் தெரிந்தது. அதில் பல்லி நான், பூசனிக்காய் வேறு யாருமல்ல நம் கண்ணன்தான். ஆனாலும் இவ்வளவு கேவலமாகவா இருந்திருக்கிறோம். இந்த மூஞ்சிகளையா அந்த சமயத்தில் தலா ஒரு பெண்ணும் லவ் பண்ணித்தொலைத்தார்கள்? சரிதான், பெண்களுக்கும் கொஞ்சம் சகிப்புத்தன்மை இருக்கத்தான் செய்கிறது என ஒப்புக்கொள்ளவேண்டியதுதான்.

நாங்கள் யாராரை லவ் பெண்ணிக்கொண்டிருந்தோம்? நான் காற்றிலே மிதந்தவாறே ஒரு கொசுவத்தியை சுழற்றினால் இது கண்ணன் கதையா ஆதியின் கதையா என்று நீங்கள் சண்டைக்கு வருவீர்கள். ஆகவே பேசாமல் அவன் கதையை மட்டும் பார்க்கலாம். ஏற்கனவே கொஞ்சம் ஓவர் பில்ட் அப்புடன் முன்னுரை எழுதிவிட்டாலும் இன்னும் சில முன்குறிப்புகள் சொல்ல வேண்டியுள்ளது, அதை ஆங்காங்கே சொல்லிக்கொள்கிறேன். மீண்டும் முன்குறிப்புகள் சொல்லிக்கொண்டிருந்தால் நீங்கள் தூங்கிப்போகும் ஆபத்திருக்கிறது. 10ம் வகுப்பிலிருந்து இப்போ பிள்ளையைத் தாலாட்டிக்கொண்டிருக்கும் காலம் வரை பல்வேறு சம்பவங்கள் காலவரிசையின்றி முன்பின்னாக கதைகள் என்ற பெயரில் வரும் என்பதை மட்டும் இப்போதைக்கு நினைவில் கொள்க. முதலில் மங்களகரமாக ஒரு காதல் கதையுடன் ஆரம்பிப்போம்.

கிபி 1995

தென்காசி. ஹவுஸிங் போர்ட் H16. மொட்டைமாடி. ஒரு தூரல் விழா சாரல்விழா நாளின் இரவு. இப்படிப்படுப்பதும் சாரலோ, மழையோ வந்ததும் வாரிச்சுருட்டிக்கொண்டு கீழே ஓடுவதும் வழக்கமான ஒன்றுதான். அப்படியும் ஏன் மாடி? அப்புறம் எப்படி புகைத்தபடியே சின்னஞ்சிறுகதைகள் பேசி மகிழ்ந்திருப்பதாம்? அது உச்சத்தில் இருந்த காதல் காலம்.

ஸ்ரீபதி பத்மநாபாவின்

‘வேப்பர் விளக்குகளின்

மஞ்சள் வெளிச்சத்தில் நாம் நடந்துகொண்டிருந்தோம்..

கைகள் கோர்த்து நடந்தால்தானா காதல்?..’ முதலாக

யுகபாரதியின்

‘..இரவு இருக்காது

பகல் இருக்காது

பசியிருக்காது

தூக்கமிருக்காது..

நீயும் நானும் மட்டும்தான்’ போன்ற காதல் கவிதைகள் மனப்பாடமாய் இருந்த ரசனையான காலகட்டம்.

‘இன்னிக்கு என்னடா பண்ணினீங்க?’ இந்த ஒற்றை வரிகளால் ஒரு துவக்கம் போதும், மணிக்கணக்கில் கண்களில் ஆர்வத்தோடு விடியவிடிய கதை பேசிக் களித்திருக்க. எப்படியெல்லாம் அவளைத் தாங்கிப்பிடிப்பேன், வியர்வையறியாது அவளை பொத்திவைப்பேன், முத்தக்கதைகளில் கட்டிவைப்பேன், தூங்கவைத்து விழித்திருப்பேன் என கவிதையாய் பேச ஆரம்பிப்பான்.

‘அவதான் மாப்பி அழகு.. இன்னொருத்தி பொறந்துதான் வரணும், அது என் பொண்ணு’ என்பான்.

‘கண்ணைக் கட்டிவைத்து

ஒரு பூக்காட்டில்

தூக்கியெறிந்ததைப்போல இருந்தது

உன் வரவு என் வாழ்வில்.!’

என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கவிதை வேறு சொல்வான். வயது, வாய்ப்பு, வேலை என பயமுறுத்தி ‘முடியாமல் போய்விட்டால் என்னடா பண்ணுவே?’ என்பேன். ‘நடத்திக் காண்பிப்பேன். அப்படி முடியாது போனால் எழுதி வெச்சுக்க, அவள் முத்தம் தந்த இந்த இதழ்கள் வேறு எவளுக்கும் கிடையாது. ஒரு செடியில் ஒருமுறைதான் பூ பூக்கும். வாழ்க்கை பூரா உன் நட்பு மட்டுமே போதும் எனக்கு’ என்று ரூட் மாறி நட்பு நெஞ்சை நக்க ஆரம்பித்துவிடுவான்.

பின்னர் ஒரு நாள் அவளது அப்பாவுக்கு செய்தி எட்டி அவளுக்கு என்ன மந்திரம் போடப்பட்டதோ தெரியவில்லை, பல வாரங்களாக தொடர்பு அறுந்து போய் விட்டது. கவிதைகள் ICU வில் கிடந்தன. முளைக்காத தாடியுடன் சுற்றிக்கொண்டிருந்த இந்த இடைவெளியில் நான்கு முறை சோகம் தாளாமல் தண்ணிகூட அடித்துப்பார்த்தாயிற்று. ஊஹூம்.. சோகம் தணிவதாயில்லை.‘வீட்டுச்சிறையில் சிக்கியிருக்கும் அவளை மீட்டேயாகவேண்டும்?’ நண்பர் படை திரட்டப்பட்டது. ‘கிட்நாவாடா பண்ணப்போறோம், நீ இன்னும் தேர்டு இயர்தாண்டா படிக்கிற..’ என்றேன் கொஞ்சம் பயத்துடன்.

அப்படியெல்லாம் கிட்நா பண்ணுவதற்கு வாய்ப்பில்லாமல் ஆலங்குளம் பஸ்டாண்ட் டியூஷன் செண்டருக்கு வந்து போய்க்கொண்டுதான் இருந்தாள். வீட்டுச் சிறையென்றெல்லாம் சும்மா நாங்களே கற்பனை செய்துகொண்டிருந்திருக்கிறோம். பஸ்டாண்டில் அவளை ஓர் நாள் மடக்கிய போது, ஒரு பைத்தியக்காரனைப் பார்ப்பது போல ஒரு லுக் இவனைப்பார்த்து விட்டதோடு இல்லாமல் பேச வந்த இவனை நோஸ்கட் பண்ணிவிட்டு சென்றதே போதுமானதாக இருந்தது இவனுக்கு. சிவப்புக்கலரில் காதல் பலூன் வெடித்துச்சிதறியது. அதன் பின்னர் காதல் பற்றிப்பேசினாலே மூக்கைக் கடித்து விடுவதைப்போலவே முறைப்பான். என் காதல் பிரதாபங்களைச் சொல்லி மகிழ ஆள் இல்லாமல் போய்விட்டது எனக்கு.

அன்றிலிருந்து ஒரு மூன்றாவது மாசத்தின் ஓர் நன்னாளில் இவ்வாறு என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான் கண்ணன் :

‘நான் தேர்ட் படிக்கும்போது பர்ஸ்ட் இயர் படிச்சுருக்காடா.. ஒரு வருஷமா என்னைப் பார்த்துக்கிட்டிருகாளாம்டா, நா அவகூட சுத்திக்கிட்டிருந்ததனால சொல்லாமலே மருகிட்டிருந்திருக்கா. இப்பதான் சொன்னா மாப்பி. இவ பேசுறா பாரு, என்னா மெச்சூரிட்டிங்கிற.. இன்னிக்கெல்லாம் கேட்டுக்கிட்டேயிருக்கலாம்டா, நெஜமான காதல்னா என்னன்னு இப்பதான் புரியுது மாப்ள..

.

39 comments:

Anonymous said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா..

டக்ளஸ்....... said...

ஒன்னும் சொல்லத் தோணலை...!
செமயா எழுதியிருக்கீங்க அங்கிள்...!
Simply Superb.....!

அ.மு.செய்யது said...

ஹா..ஹா...ரசித்து வாசித்தேன்.

உங்கள் கதைகளை தான் கண்ணன் கதைகள்னு எழுதியிருக்கீங்களோ ??

மரியாதையா உண்மைய ஒத்துகிடுங்க..!

எம்.எம்.அப்துல்லா said...

வந்தாச்சு

:)

எம்.எம்.அப்துல்லா said...

// டக்ளஸ்....... said...
ஒன்னும் சொல்லத் தோணலை...!
செமயா எழுதியிருக்கீங்க அங்கிள்...!
Simply Superb.....!

//

ஆமாம் டக்ளஸ் அங்கிள். கரெக்ட்டா சொன்னீங்க

:))

தராசு said...

ரைட்டு, தல அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆயிட்டாரு.

வாழ்த்துக்கள் தல, கண்ணன் வருவான் கதை சொல்லுவான்னு ரொம்ப நாள வெயிட்டிங்.

நாடோடி இலக்கியன் said...

'ஆதி'யே அசத்தல்.அந்தம் வரை இப்படியே ரசனை+ரகளையாக செல்ல வாழ்த்துகள் ஆதி.

கார்க்கி said...

அமர்க்களமாய் தொடங்கி இருக்கு ஆதி.. கலக்குங்க

கும்க்கி said...

அங்கிள் எங்க வச்சுருந்தீங்க இம்புட்டு சமாச்சாரத்த ...நல்லாருக்கு அங்கிள்.

மங்களூர் சிவா said...

/
எம்.எம்.அப்துல்லா said...

// டக்ளஸ்....... said...
ஒன்னும் சொல்லத் தோணலை...!
செமயா எழுதியிருக்கீங்க அங்கிள்...!
Simply Superb.....!

//

ஆமாம் டக்ளஸ் அங்கிள். கரெக்ட்டா சொன்னீங்க

:))
/

ஆமா அப்துல்லா அங்கிள் ஆதி அங்கிள் சூப்பரா எழுதியிருக்கார். நீங்களும் கரெக்டா சொன்னீங்க.

:))

குசும்பன் said...

அங்கிள் உங்க பக்கத்தை ஓப்பன் செஞ்சதும் கொஞ்ச இடம் காலியா விட்டு இருக்கீங்களே அதில் எழுத உங்க பழய காதலிகள் வருவார்களா?

சென்ஷி said...

//மயில் said...
July 6, 2009 9:47 AM

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா..
//

ரிப்பீட்டு :)

நர்சிம் said...

தொடக்கம்..ம்ம்..ம்ம்..ஜம்..

☼ வெயிலான் said...

நல்லாருக்கு ஆதி அங்கிள்!!!!

இப்போ அங்கிளாமே நீங்க :)

ஜானி வாக்கர் said...

//நெஜமான காதல்னா என்னன்னு இப்பதான் புரியுது மாப்ள..//

ரெண்டாவது காதலுக்கே இந்த பில்ட் அப் ஆ?

என் எதிர்பார்ப்பின் படி குறந்தது நான்கு காதலிகள் வருவார்கள் என்று எண்ணுகிறேன்.

பார்க்கலாம் காத்திருப்போம்.

வித்யா said...

நல்லாருக்கு..

அ.மு.செய்யது said...

//வித்யா said...
நல்லாருக்கு..
//

டெம்பிளேட் பின்னூட்டம் அருமை.

என் பதிவிலும் இதயே தான் போட்டிருக்கீங்க. ( Just kidding )

பாலா said...

naan nampeeten ithu unga kathai illainu

அமுதா கிருஷ்ணா said...

எல்லோருக்கும் இப்படி ஒரு ஆட்டோகிராஃப் இருப்பது தான் நிஜம்..

நாஞ்சில் நாதம் said...

\\பல்லிக்கு கைகால் முளைத்ததைப்போல ஒரு பையனும், பக்கத்தில் பூசனிக்காய்க்கு கைகால் முளைத்ததைப்போல இன்னொருவனும் குற்றாலம் பச்சைப்பசேல் பேக்ரவுண்டில் நின்று கொண்டிருந்தார்கள்.//

ஹி ஹி ஹி ஹி ஹி

...நல்லாருக்கு பாஸ்

ஆதிமூலகிருஷ்ணன் said...

மயில், மாப்பி, செய்யது, அப்துல்லா (ஒரு ரெண்டு பேரு ரொம்ப கலாய்ச்சுக்கிட்டிருக்கங்க தல, நீங்கதான் வந்து காப்பாத்தணும்), தராசு, இலக்கியன், கார்க்கி (யப்பாடி இப்பதான் கொஞ்சம் திருப்தி), கும்க்கி, சிவா, குசும்பன், சென்ஷி, நர்சிம், வெயிலான் (ஆமா சித்தப்பா), ஜானி, வித்யா, பாலா, அமுதா, நாஞ்சில்...

அனைவருக்கும் நன்றி.!

அமிர்தவர்ஷினி அம்மா said...

லேபில்ஸில் இருக்கும் “மொக்கை” என்ற வார்த்தைய எடுத்துவிடுங்கள்.

பதிவு நல்லா சிரிக்க வெச்சுடுச்சு.

. என் காதல் பிரதாபங்களைச் சொல்லி மகிழ ஆள் இல்லாமல் போய்விட்டது எனக்கு. //

:))))))))))))))))))))))))))

Cable Sankar said...

நாமெல்லாம் ஆட்டோகிராப் எழுத ஆரம்பிச்ச்ம்னா.. குறைஞ்சது ஒரு அஞ்சு வால்யூம் வராது..?

அறிவிலி said...

ஆதிமூலகிருஷ்ணலீலா.....வா?

நல்ல ஆரம்பம்.

ramesh said...

மிகவும் ரசித்து லயித்து படிக்க முடிஞ்சது......வாசிக்கும் போதே FLASH BACK லாம் நியாபகம் வர வெச்சிட்டீங்க..!

RR said...

//இது கண்ணன் கதையா ஆதியின் கதையா என்று நீங்கள் சண்டைக்கு வருவீர்கள். ஆகவே பேசாமல் அவன் கதையை மட்டும் பார்க்கலாம். //

நம்பிட்டோம் தல :-)

வால்பையன் said...

கிட்நா என்ற வார்த்தையை தவிர வேறெங்கும் நகைச்சுவை இல்லையே!
அப்போ இது நகைச்சுவை பதிவு இல்லையா!

கண்ணன் ரொம்ப சீரியஸ் பார்ட்டி போல!
லீலைகள் தொடரட்டும்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

அமித்து, கேபிள், அறிவிலி, ரமேஷ், RR, வால்.. அனைவருக்கும் நன்றி.!

pappu said...

நெஜமான காதல்னா என்னன்னு இப்பதான் புரியுது மாப்ள..’/////

இவய்ங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்!

ஏய், என்னப்பா இது டக்ளஸு, வார்னிங் விட்ட பிறகும் இவர அங்கிள் கூப்பிடுற!
இன்னைக்கி பஸ்ஸு உடையுதுப்பா!
:-)

தமிழ்ப்பறவை said...

ஆதி சார்....
ஆரம்பம் ஓ.கே...வாழ்த்துக்கள். அடுத்த பதிவில களைகட்டும்ன்னு நினைக்கிறேன்.
இது சீரியஸா இல்லை கலாய்த்தல் பதிவான்னு தெரியாத அளவுக்கு இருக்கு...
95ல தேர்ட் இயர்... அப்போ 96ல ஃபைனல் இயர்.அப்போ 92ல +2,90ல 10த்...ஓ.க்கே...ஓ.கே...

Mahesh said...

ம்ம்ம்.. உங்க களம்... நீனு ஆடியிருக்கீங்க !!! தலைப்பே கவிதை !

சுரேகா.. said...

கலக்கலா சொல்லியிருக்கீங்க!

ஆமா..தென்காசியிலா?..எந்த வருஷம்?
முனிசபல் ஆபீஸ் பின்புறம் (அணைக்கரை தெருவில்) யாரையாவது தெரியுமா?

Joe said...

கண்ணன், பெயருக்கு ஏற்றபடியே ....

கலக்குங்க ஆதி.

$anjaiGandh! said...

அதிரடிமூலகிருஷ்ணன்.

விக்னேஷ்வரி said...

வாசிக்கிறவங்களுக்கு போர் அடிக்காத அளவுக்கு எழுதுற கலை உங்க கிட்ட இருக்கு. கலக்குங்க ஆதி.

புன்னகை said...

கண்ணன் கதைகள் துவங்கியதற்கு வாழ்த்துக்கள். :-)

தாரணி பிரியா said...

நல்லாயிருக்கே உங்க சாரி கண்ணன் கதை :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

பப்பு, தமிழ்பறவை, மகேஷ், சுரேகா (கண்ணனுக்கு தெரிஞ்சிருக்கும், நம்ப ஊரு தென்காசி இல்ல சார்), ஜோ, சஞ்சய், விக்னேஷ்வரி, புன்னகை, தாரணி..

அனைவருக்கும் நன்றி..

வாழவந்தான் said...

Hmmm... Love is like a Small pox...
(Courtesy: Some blogger)